http://i46.tinypic.com/2a9xw7o.jpg
Printable View
மக்கள் திலகத்தின் நம் நாடு மாபெரும் வெற்றி கண்டிருக்க வேண்டும் . உண்மையே .
நம்நாடு திரையிட்ட 10 வது வாரத்தில் மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் வெளியாகி வெள்ளி விழா ஓடியதால் நம்நாடு ஓட்டம் சற்று தடை பட்டது . எனினும் நம்நாடு சென்னை - மதுரை - திருச்சி - சேலம் -குடந்தை நகரங்களில் நூறு நாட்கள் ஓடியது .
மதுரை - மீனாக்ஷி அரங்கில் 21 வாரங்கள் ஓடியது .
tfmlover சார்
தங்களின் கடந்த கால சஞ்சிகை விளம்பரங்கள் அருமை .
நட்புடன் esvee
courtesy - kumudham - Reporter about MGR.
தலைமைப்பண்பு என்று அண்ணாதுரை சொல்வது: முகத்தில் புன்னகை; அகத்தில் நம்பிக்கை; செய்கையில் சுத்தம்; சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மை.
அத்தனை பண்புகளும், எம்.ஜி.இராமச்சந்திரனிடம் இருந்தது. முகத்தில் புன்னகை; எம்.ஜி.இராமச்சந்திரன் முகம், அழகு, வசீகரம்; கவர்ந்து தன்வசப்படுத்தும் தன்மை.
அக நம்பிக்கை. எம்.ஜி.இராமச்சந்திரன், மற்றவர்களது அகத்திலும் நம்பிக்கை ஏற்படும் வழியில் செயலாற்றினார். தன்னைப்போல் பிறரும், அக நம்பிக்கையோடு வாழ்வை வாழ வழி செய்து கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.
செய்கையில் சுத்தம். அகத்தில் தூய்மை; புறத்தில் தூய்மை. தூய்மைதானே கற்பு.
சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மை. இந்த குணம் இருப்பவர்கள், இயற்கையாகவே, மனித குல சேவையில் ஈடுபடுவார்கள்.
Courtesy; makkal thilagam - vaththiyaar book - review by SATYA SEELAN
வாத்யார்
http://i47.tinypic.com/htep2w.jpg
கிழக்கு பதிப்பகம் வெளியீடான "வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை" புத்தகத்தை படித்தேன். ஆர். முத்துக்குமார் அவர்கள் எழுதிய, இந்த புத்தகத்தை பற்றிய என் கருத்துக்களை இங்கு பதிகின்றேன்.
"நான் ஆணையிட்டால்,
அது நடந்துவிட்டால்,
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்"
என்ற புகழ்பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் எம். ஜி. ஆர். கிட்டதட்ட அவர் ஆட்சி காலத்தில் இதுதான நடந்தது. அவரது கடும் உழைப்பு, திறமைகளை தாண்டியும், ஏதோ ஒரு வசீகரம் அவரிடம் இருந்துள்ளது, எனவே தான் இன்றும் எம். ஜி. ஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும் ரசிகர்கள் அதிகம்.
இந்த புத்தகத்தை படிக்கும் முன்பு வரை எம். ஜி. ஆர் ஒரு சிறந்த மனிதன், அவர் மக்களுக்கு நிறைய நன்மை செய்திருக்கிறார் என்று தான் என் மனதில் பதிந்திருந்தது. ஆனால் இவைகளை தாண்டியும் எம். ஜி. ஆர் ஒரு சிறந்த நடிகன், சிறு வயதில் இருந்தே அவர் நிறைய பயிற்சி எடுத்திருக்கிறார் என்பதை ஆர். முத்துக்குமார் இப்புத்தகத்தின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைய புதிய தலைமுறை நடிகர்களை போல் இல்லாமல், நாடகத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு வந்தவர்களே, மக்கள் மனதில் நிங்காத இடம் பிடிப்பர் என்பதை எம். ஜி. ஆரின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும், இதற்கு ஆதாரமான அத்தனை சான்றுகளையும் இந்த புத்தகத்தில் காணலாம்.
இன்று எத்தனையோ நிகழ்ச்சிகளில் எம். ஜி. ஆர் என்றாலே, கையையும், காலையும் தூக்கிக் கொண்டு ஏதோ கோமாளியைப் போல் சித்தரிப்பதை பார்க்கிறோம், இப்படி இளைய சமுதாயத்தின் மனதில் தப்பான எண்ணத்தை பரப்பும் அனைவரும், எம். ஜி. ஆரின் வாழ்க்கையை படித்த பின்பு, இந்த மாபெரும் மனிதனை அவ்வளவு சாதாரணமாக இழிவு படுத்துவது தவறு என்று நிச்சயம் சிந்திப்பார்கள். தனது முகத்தை மட்டும் காட்டி, தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டி போட்ட பெருமை எம். ஜி. ஆருக்கு உண்டு. அவர் செயல்களில் சுயநலம் இருந்தாலும், அதன் இறுதி நோக்கு பொது நலத்திற்காகவே பயன்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. வருமான வரி பற்றி எம். ஜி. ஆரின் கருத்துக்கள் இதற்கான சான்று. தன்னலமற்ற தலைவர்களின் பட்டியலில் அழுத்தமான இடத்தை என்றும் எம். ஜி. ஆர் வசப்படுத்திவிட்டார்.
இவர் வாழ்ந்த நாட்களில் ஒரு புரியாத புதிராக, மக்கள் மனதில் அதீத ஆளுமை கொண்டவராக இருந்திருக்கிறார். சினிமா, அரசியல் என்ற இரு பெரும் கடலில் ஆளுமை செலுத்திய மனிதனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வது மிகுந்த சிரமமான ஒன்று, அதனை திறம்பட இந்த புத்தகத்தில் ஆர். முத்துக்குமார் பதிவு செய்திருக்கிறார். எம். ஜி. ஆர் பிறப்பு முதல், இறப்பு வரை நடந்ததை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, சுவாரஸ்யமாக தேவையான அளவு விவரித்துள்ளார்.
Esvee sir - Please add MGR to the title for the search engines to pick up this thread. It was in the old thread title too.