Vicky's rendition - Oh Butterfly - Meera
https://www.youtube.com/watch?v=jWEwO0L6beM
Quote:
Originally Posted by Vicky
Printable View
Vicky's rendition - Oh Butterfly - Meera
https://www.youtube.com/watch?v=jWEwO0L6beM
Quote:
Originally Posted by Vicky
Vicky's rendition -Pani vizhum iravu - Mouna ragam
https://www.youtube.com/watch?v=7v8t...h-j_OS-VfGt1dw
Quote:
Originally Posted by Vicky
Vicky's rendition -Nee Pournami - Oruvar Vaazhum Aalayam
https://www.youtube.com/watch?v=Td71...h-j_OS-VfGt1dw
Quote:
Originally Posted by Vicky
Hi Venkkiram
One of the earlier observations you made in this topic caught my attention. It is about the ability to handle rhythm patterns and taking time to create music with creative forms of rhythm arrangements. Your dismay that this may very well end with Raja is very well placed.
The fundamental driver for this is the fact that rhythm arrangement is something you can be creative, only if creating the main tune means no effort to a composer. Unfortunately, as most newer composers spend most of their energy in creating the main tune, they settle down with whatever is the easiest rhythm arrangement for their music. It is like water taking the easiest path.
Until you get another composer who has an infinite supply of melodies that he needs to focus on other aspects of orchestration, you are out of luck :-(
The word composer Bhaskar Chandravarkar, who watched Ilayaraja in action in the studio and interviewed him, used to describe the way Ilayaraja worked was "facile". He does everything effortlessly, as if it is his second nature, and does it all by himself. It is saddening in a way to see that some people still think this is about one composer v/s the other and about one group of fans trying to talk up their favourite ( I can speak for myself that my list of favourite music artists would comfortably exceed, numerically, that of a good majority of participants in this thread....just to puncture the gross frog-in-the-well generalisation). I think one should be able to spot genius dancing in front of their eyes (slightly modified the more politically incorrect English idiom for this forum). What such discussions show is people still have no idea what they are going to lose when his time is over. It's ok now when he is active and still doing well but largely relegated to smaller, less commercially viable productions. Once the dreaded d-day comes and goes, we will perhaps then realise what a profound void he is going to leave in his wake. It is a very curious phenomenon which I have rarely encountered (and, without meaning to toot my own horn, I have followed a lot of Indian as well as Western artists). Artists are typically either popular and overrated (RD Burman) or obscure and underrated (Madan Mohan, Chitragupt, Jaidev). Ilayaraja was incredibly popular at one time and is still a very, very widely recognised name and yet the feeling persists that the full import of his work has not sunk in. Perhaps because he lamentably chose film music as his medium, one which purists tend to sneer at. Neither the purists do justice to his musical contributions while the audience, as is their wont, only sings the flavours of the season so Ilayaraja is not in vogue for them anymore.
சரியாகச் சொன்னீர்கள் ரவி. இதுவரையிலான பாடலாக்கங்களில் எத்தனை எத்தனை விதத்தில் லயக் கட்டமைப்பு! எப்போது கேட்டாலும் அத்தனையும் புதுமையாகவே நிலைத்து நிற்கிறது. ப்ரோக்ராமிங் முறைகள் வருவதற்கு முன்பும் சரி, ப்ரோக்ராமிங் முறைகள் வந்தபின்னும் சரி.. பலவித தாளச் சேர்ப்புகளை கோர்க்கும் முயற்சியை வெற்றிகரமாக செழுமைபடுத்திக் கொண்டெ வந்தார்.
மேலும் ஃபுயுஷன் என்ற பதத்திற்கு ராசைய்யாவின் இசை என்பதே சரியான அருஞ்சொற்பொருளாக இருக்கமுடியும். சமீபத்தில் கேட்டு கேட்டு வியந்துபோவது.. சத்யா படத்தில் "இங்கேயும் அங்கேயும்" பாடல் முடிவுறும் தருவாயில் மெலடிக்கு இணையாக செண்டை(?) வாத்தியகருவியை தொடர்ந்து வாசிக்கச் செய்திருப்பார். கேட்கும் நமக்கு செண்டையின் ஒலி ஒருபோதும் தனியாக துருத்திக் கொண்டு தெரியாது. அப்படி ஒரு ரசவாதம். இவரால் மட்டுமே செயல்படுத்தப்படும் முயற்சி இது.
https://soundcloud.com/maestroilaiya...rare_ilayaraja
நேற்று ட்விட்டரில் பதிவு செய்தது..
பதினென்வயது பருவத்தை கடந்து ஊருக்குச் செல்கையில் தனத்தை நெருக்கத்தில் பார்க்கிறான் சண்முகம். குலவை சத்தத்தோடு துவங்குகிறது. "ஏழு ஜென்மம் தொடர்ந்து வரும் எங்களம்மா தாயே!" - துண்டுப் பாடல்களின் பிரம்மா நீ!
http://www.youtube.com/watch?v=W8T9C...ailpage#t=2465
போறபோக்குல வெறும் கருவிகளைக் கொண்டெ பின்னணி இசைக் கோர்ப்பினை அமைத்துவிட முடியாதா? ஏன் இதற்கு இப்படியொரு மெட்டு, குரல் சேர்ப்பு, கோரஸ் இசை, அதற்கு ஒரு தாளம் மற்றும் ப்ரத்யேக பின்னணி இசை? ஏனெனில் அதுதான் ராசைய்யா. அதுதான் ஜீனியஸ் thinking process.
இசையெனும் ராஜ வெள்ளம் -
இளையராஜா, மொட்டை, ராக தேவன், இசைஞானி என ஆயிரம் பேர்களின் அவரை அழைப்பதற்கான காரணம் அவரின் இசை. ராஜாவின் ஒவ்வொரு இசையையும் கேட்டுக் களித்தவர்கள் அனைவருக்கும் என்றாவது ஒரு முறை தூரத்திலிருந்தாவது அவரை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் இல்லாமல் இருக்காது. நண்பர் ஒருவருக்கு ராஜா என்றால் பைத்தியம். ஒவ்வொரு முறை என்னைப்பார்க்கும் போதெல்லாம், என்னைக்காவது ஒரு நாள் என்னை ராஜாவை பார்க்க வைக்கிறியா? என்று கேட்டுக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் காலையில் ஏதோ ஒரு படத் தயாரிப்பாளரை பார்க்க சென்றிருந்த போது நண்பர் போன் செய்ய, உடனே வாய்யா.. நான் ப்ரசாத்துலதான் இருக்கேன் என்றவுடன் அயனாவரத்திலிருந்து பத்து நிமிடத்தில் புயல் வேகத்தில் வந்தார். ராஜா ஏதோ ஒரு ரிக்கார்டிங்கிற்காக காரிலிருந்து வெண்ணுடையில் இறங்க, “வாங்க போய் பேசுவோம்” என்று நண்பரைக் கூப்பிட்டேன். அவரின் கண்கள் எல்லாம் மின்ன, “வேணாம் சார்.. ஏதோ வேலையாப் போவாரு அவரை ஏன் டிஸ்ட்ரப் பண்ணனும்” என்று பதில் மட்டுமே என்னிடம் வந்ததே தவிர பார்வை கேமரா பேனிங் போல அவர் போகும் திசையில் பயணித்துக் கொண்டேயிருந்தது. “அட வாய்யா. இவ்வளவு தூரம் வந்திட்டு ஒரு போட்டோ எடுத்துக்க என்றேன். இல்லை நண்பா இது போது என் ஜென்மத்துக்கு என்று கரகரவென அழ ஆரம்பித்தார்.
இப்படியான ரசிகர்கள் நிறைய பேர் இருக்க, அவரிடம் மூன்று முறை நேரில் சந்தித்து பேச வாய்ப்பிருந்தும் எதுவும் பேசாமல் வெறும் வணக்கம் மட்டுமே சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். சில பேரை அவர்களின் ப்ரம்மிப்பிலிருந்து விலக மனமே வருவதில்லை. முதல் முறை என் அப்பாவுடன் அப்போது அவர் ஏவிஎம்மில் இருந்தார். பீக் பீரியட். அவர் வரும் முன்னமே அல்லக்கைகள் அவர் விரும்பினாரோ இல்லையோ, ராஜாவுக்கு கட்டியம் கூறுவதைப் போல வழி விடுங்க என்று சொல்லிக் கொண்டே ஓடுவார்கள். அதையும் மீறி நான் என் அப்பாவை விட்டு விலகி, அவரிடம் வணக்கம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அவர் பதில் வணக்கம் சொன்னதைக் கூட கவனிக்கவில்லை. ராஜாவுக்கு வணக்கம் சொல்லணும் அம்புட்டுதேன்.
அடுத்த முறை ஏவிஎம் சி என்று நினைக்கிறேன். என் அப்பாவின் படத்திற்கான ஒலி நாடாவை கொடுக்க போயிருந்தோம். ஏதோ ஒரு தெலுங்கு படத்தின் பின்னணியிசை கோர்ப்பு வேலை. சும்மா வேடிக்கை பார்க்க போக, அது ராஜாவின் படம் என் அப்பாவிடம் கேட்டு சவுண்ட் இன்ஜினியரிடம் பர்மிஷன் வாங்கி ஒரு ஓரமா சத்தம் போடாம இருக்கணும் என்ற கட்டளையோடு நிறுத்தி வைக்கப்பட்டேன். உடலெல்லாம் ஜிவ்வென இருந்தது. ராஜா வந்தார். எல்லாரையும் ஒரு முறை சுற்றி பார்த்தார். நாற்பது ஐம்பது வயலின், கிட்டார், ட்ரம்ஸ் என நூறு பேருக்கு மேல் இருந்தார்கள். கண் மூடி ப்ரார்த்தனை போல ஏதோ செய்துவிட்டு, ரீலைப் போடுங்க என்றார். திரையில் காட்சி ஓடியது. வரலாற்று படம். குதிரையில் வீரர்கள் ஓடுகிறார்கள். பின்னால் வில்லன் கும்பல் குதிரையில் துறத்துகிறது. அவர்களின் பின்னால் ஹீரோ ஒர் குதிரையில் வில்லனை துறத்துகிறான். நடுவில் ஹீரோவை தடுக்க வரும் வில்லன் ஆட்களை கத்தியால் சண்டைப் போட்டுக் கொண்டே வில்லனை விரட்ட, இன்னொரு ரதத்தில் வரும் ஹீரோயினை வில்லன் ஓவர்டேக் செய்து அலேக்காக தூக்கி தன் குதிரையில் வைத்துக் கொண்டு பறக்க, இதை பார்த்த ஹீரோ, கோபத்தில் இன்னும் நான்கைந்து பேரை சரக் சரகென வெட்டிவிட்டு, வில்லனை துறத்தி, அவனுடன் சண்டைப் போட்டு, ஹீரோயினை சட்டென தன் குதிரையின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு, வில்லனின் குதிரையை தவறி விழச் செய்து அவனிடமிருந்து ஹீரோயினை காப்பாற்றி கொண்டு போகிறான். அக்காட்சியில் ஹீரோயினை காப்பாற்ற செய்யும் முயற்சியில் தன்னை காப்பாற்ற ஹீரோ எவ்வளவு முயற்சிக்கிறான் என்பதை ஹீரோயின் உணரும் ஒர் காட்சியும், அவனின் மேல் அன்பு அதிகமாக காரணமான காட்சியும் வேறு இருந்தது. ஒரே மூச்சில் காட்சியை பார்த்தவர் ராஜா.. கண் மூடி யோசித்துவிட்டு, சட சடவென இசை குறிப்பு எழுதும் பேப்பரில் எழுத ஆரம்பித்தார். நோட்ஸுகள் எழுதப்பட்ட பேப்பர்களை சரிபார்த்தபடி, பக்கத்தில் இருந்த ஆர்கெஸ்ட்ரா ஆர்கனைசரிடம் கொடுத்து, அங்கிருந்த இசைக் கலைஞர்களிடம் கொடுக்க சொன்னார். அரை மணி நேரத்தில் இவையனைத்தும் நடந்தது. நான் பார்க்கும் முதல் பின்னணியிசை கோர்ப்பு இது. வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தேன். எத்தனை சீனு, எவ்வளவு ரியாக்*ஷன், எவ்வளவு எமோஷன் இத்தனை எப்படி, எத்தனை நாள் பண்ணுவாங்களோன்னு யோசனை வேற ஓடிட்டிருந்த போதே வயலின் க்ரூப்பிலிருந்து சத்தம் வர திரும்பினேன்.
ராஜா கொடுத்த நோட்சை எல்லோரும் ஒரு முறை வாசிக்க, இரண்டாம் முறை வாசிக்க, மூன்றாம் முறை எல்லோரும் ஒழுங்காய் வாசித்ததாய் எனக்கு புரிந்த போது ராஜா யாரோ ஒருவரின் பெயரைக் கூப்பிட்டார், ஐம்பது பேர் இருந்த கும்பலில் அவர் எழுந்து நிற்க, ஏன் நீ மட்டும் உச்சஸ்தாயில வாசிக்கிறே என்று சொல்ல, அவரை மட்டும் தனியே வாசிக்க வைத்து சரி செய்து விட்டு, அடுத்த அடுத்த இசை கலைஞர்களிடம் நோட்சுகளை வாசிக்க சொல்லி, கேட்டு கரெக்*ஷன் செய்துவிட்டு, “ஓகே.. எல்லாரும் சேர்ந்து பார்த்துருவோம்” என்றார். சொன்ன விநாடியிலிருந்து 1..2..3..4.. என்று கண்டக்டர் சொல்ல, வயலினும், ட்ரம்ஸும், பேங்கோசும், செல்லோவும் அதிர கேட்கும் போதே மனக்கண்களில் திரையில் ஒடிய காட்சிக்கு சிங் சேர்க்க, சின்னச் சின்ன கரெக்*ஷனைகளை செய்து முடித்த பின் திரையில் காட்சி ஓட, டேக் என்றார்கள். வாவ்.. வாவ்.. என்னா சேஸிங், என்னா ஒர்வீரம், எத்தனை எமோஷனலான காதல் பார்வை, அதற்கான பின்னணியிசை சேர்ந்ததும் காதல் அவ்வளவு களேபரத்திலும் அருவியாய் பொழிய.. வாவ்வ்.. வாவ்.. கிட்டத்தட்ட ஒரு ரீல்.20 நிமிட பின்னணியிசை கோர்ப்பு வெறும் ஒன்னரை மணி நேரத்தில் எழுதி, ரிகர்சல் பார்த்து, பதிவாகிவிட்டது. இசையெனும் ராஜ வெள்ளம்.
கேபிள் சங்கர்
முகநூலில் நெப்போலியனின் (அருண்மொழி புல்லாங்குழல்/பாடகர்) கருத்துக்கள் ஒவ்வொன்றுமே முத்துதான். கவிஞர் மகுடேஸ்வரனின் பதிவுக்கான பின்னூட்டம் ஒன்று.
https://www.facebook.com/magudeswara...55871494451342
:notworthy:Quote:
உண்மையில் ராஜா சாரின் ஆழத்தை நீங்கள் சரிவரப் புரிந்துகொள்ள வில்லையென்றே நினைக்கிறேன். அனேகமாக எல்லா இசையமைப்பாளர்களிடமும் (MSV, KVM, VK தொடங்கி.....ரஹ்மான், தேவா.....இன்றைய யுவன் வரையில் பணியாற்றியிருக்கிறேன்). நான் அறிந்த வரையில் ராஜா சாரின் பாடல்களில் உள்ள இயல்பான இயற்கைத்தன்மை மற்றவர்களின் இசையில் குறைவு என்பது என்னுடைய தனிப்பட்டக் கருத்து. மாற்றெண்ணம் கொண்டோர் மன்னிக்க! (தயவு செய்து மற்றவர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒவ்வொருவருடைய இசைக்கும் குறிப்பிடத்தக்க தனித்தன்மை உள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்) ஆனால் வித்தியாசம் என்று நான் இங்கு குறிப்பிட விரும்புவது, ராஜா சார் கம்போசிங் என்று உட்கார்ந்துவிட்டால் முழு பாடலும் அதிக பட்ச வார்த்தைகளோடு அருவி போல் ஒரே வீச்சில் வந்து விழும். நிறைய இயக்குனர்களே இதைச் சொல்லக் கேட்டிருப்பீர்கள். முதல் பல்லவிக்கும் சரணத்துக்கும் திரும்பப் பல்லவிக்கும் நளினமாய் பயணிக்கும் அந்த இயல்பான connectivity மற்றவர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்துகிறது. அடுத்து,
Orchestration. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து. மாற்றுக்கருத்து உள்ளோர் தயவு கூர்ந்து பொறுத்தருள்க!
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்!
https://www.youtube.com/watch?v=w-l5vYDIh8U
https://www.youtube.com/watch?v=S9nI...h-j_OS-VfGt1dw
:notworthy: விக்கி!Quote:
Originally Posted by விக்கி