-
நேற்று இன்று நாளை
திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.
மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.
ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!
நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.
கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?
“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!
“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.
ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.
கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்
…
‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.
-
சுவாமி விவேகானந்தரைத் தவிர, இந்தியர் வேறு எவருக்கும் மலேசியாவில் சிலை கிடையாது. இப்போது மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மலேசியா நாட்டின் தைப்பிங் நகராண்மை மண்டபத்தில் சிலை நிறுவப்பட்டு உள்ளது. ‘இதயக்கனி’ விஜயன் ஏற்பாடு செய்ய, மலேசிய நாட்டு மத்திய அமைச்சர் டான்ஸ்ரீ கோசூசன், நடிகர் சத்யராஜ் இருவரும், எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்துவைத்தனர்.
‘எம்.ஜி.ஆருக்கும் வில்லன் நடிகர் அசோகனுக்கும் பகை உண்டு’ என்று சினிமா உலகில் இருந்து வரும் பேச்சுக்கு, இந்த விழாவில் பதில் சொன்னார் மறைந்த நடிகர் அசோகனின் புதல்வர் வின்சென்ட்.
”1972-ல் எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது, அவரது ‘உலகம் சுற்றும் வாலிபன்’, என் அப்பா தயாரித்த ‘நேற்று இன்று நாளை’ ஆகிய படங்கள் பாதியில் நின்றன. அந்த நேரத்தில் ஏற்பட்ட கடன் சுமையால், எங்கள் அப்பா எம்.ஜி.ஆரைத் திட்டியது உண்மைதான்.
அந்த மனஸ்தாபத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அப்போதைய அரசு எங்கள் அப்பாவை அழைத்து, ”இதுவரை நீங்கள் எடுத்த படத்தை அப்படியே வாங்கிக்கொள்கிறோம். செலவு செய்த பணத்தை இரண்டு மடங்காகத் தருகிறோம். ஆனால், படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம்…” என்று கேட்டது. இதைக் கேட்டு கோபம் அடைந்த அப்பா, ”எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் உள்ள நட்புபற்றி உங்களுக்குத் தெரியாது ‘நேற்று இன்று நாளை’ படத்தை தயாரிச்சு ரிலீஸ் பண்றது என்னோட சொந்த விஷயம்.
அதில் யாரும் தலை யிட வேண்டாம்!’ என்று சொல்லிவிட்டு வந்தார். அதன் பிறகு வெளியான ‘நேற்று இன்று நாளை’ படம், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லாபமும் கிடைத்தது.
-
அதி விரைவில் பாகம் 9ஐ முடித்து பாகம் 10 திரியைத் தொடங்கியிருக்கும் நண்பர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் பணி சிறந்து தொடரட்டும்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய செல்வகுமார் மற்றும் ஜெய்சங்கர் இருவருக்கும் வாழ்த்துக்கள். இறைவன் அருளால் தங்கள் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
யுகேஷ் பாபு சார்
தங்களுடைய பாலச்சந்தர் பதிவிற்கும் குறுகிய காலத்தில் 2000 பதிவுகளை எட்டியதற்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
http://youtu.be/41t6DNDIo50
ENDRUM ENGAL KULADEIVAM MGR
-
http://youtu.be/hy1_5aHKgOQ
ENDRUM ENGAL KULADEIVAM MGR
-
http://youtu.be/cH8qSRQP9zI
ENDRUM ENGAL KULADEIVAM MGR
-
http://youtu.be/8HvkbF_aLlc
ENDRUM ENGAL KULADEIVAM MGR
-
http://youtu.be/JtVnzjypTiE
ENDRUM ENGAL KULADEIVAM MGR
-
http://youtu.be/8jGGA3k7mhM
ENDRUM ENGAL KULADEIVAM MGR