இன்று இரவு 10.30 மணிக்கு திரையுலக மன்மதன் ஜொலிக்கும் என்னை போல் ஒருவன் ராஜ் டிவி யில் கண்டு மகிழுங்கள்
https://scontent-mxp1-1.xx.fbcdn.net...7d&oe=565C9AD3
Printable View
இன்று இரவு 10.30 மணிக்கு திரையுலக மன்மதன் ஜொலிக்கும் என்னை போல் ஒருவன் ராஜ் டிவி யில் கண்டு மகிழுங்கள்
https://scontent-mxp1-1.xx.fbcdn.net...7d&oe=565C9AD3
வணக்கத்திற்குரிய டாக்டர் திரு.சிவாஜி செந்தில் சார் அவர்களுக்கு தாங்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பாகம் 16 துவக்கி வைத்து திரிக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். வலைதள வேலைபாடுகளில் ஈடுபட்டிருந்ததால் காலம் கடந்து வாழ்த்து சொல்வதற்கு முதலில் என்னை மன்னியுங்கள். அதற்குள் பக்கங்கள் 7ஐ கடந்துவிட்டது எனது பார்வையில் 16வது திரி உங்கள் கைவண்ணத்தில் வெகுவிரைவில் இலக்கை எட்டிவிடும் என்பதில் ஐயமில்லை.
15வது திரி துவக்கி வைத்த திரு.சந்திரசேகரன் அவர்களும் தனக்கு பிடித்த படத்தில் இருந்து துவக்குகிறேன் என்று கூறி தில்லானா மோகனாம்பாள் படத்திலிருந்து தான் துவக்கினார், அதேபோல் தாங்களும் தில்லானா மோகனாம்பாள் படத்திலிருந்து மங்கள இசையுடன் துவக்கியுள்ளீர்கள்.
தாங்கள துவக்கி வைத்துள்ள 16வது திரியில் இன்னும் பல புதிய பங்களிப்பாளர்கள் வந்து தங்கள் பதிவுகளை பதிவிட்டு மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பல அரிய தகவல்களை அளித்து உலகமறிய வேண்டுமென நான் வணங்கும் தெய்வம் சிவாஜி அவர்களை வேண்டுகிறேன்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...36d35498305397
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...1c&oe=563E85B0
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...73&oe=565365DC
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
தங்களுடைய புதிய வலைத்தளம் சீரும் சிறப்புமாக நடிகர்திலகத்தின் புகழ் மகுடத்தில் வைரமாக ஜொலிக்கட்டும்..வாழ்த்துக்கள் சுந்தராஜன் சார்!
senthil
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...92363380_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...39007752_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...a47c675f13eecb
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
இதை விட பெரிய சந்தோஷம் உண்டோ ?
நேற்று மதியம் தொலைபேசி மணி அழைக்க, எடுத்து பேசினால் மறுமுனையில் இருந்து ஒரு குரல் ....இன்று வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்பட முன்னோட்டம் மாலை நடைபெறுகிறது. வரவேண்டும் என்று !
கரும்பு தின்ன கூலியா? என்ற கேள்வியோடு மதிய உணவு முடிந்தபிறகு சற்றே சிறிது தூக்கம் போட்டு உற்சாகத்துடன் கிளம்பி இயக்குனர் ப்ரியதர்ஷன் அவர்களுடைய four frames என்ற திரைகூடத்திற்கு எனது நண்பருடன் சென்றேன்.
திரை அரங்கு செல்வதற்குள் முதல் பாடல் முடிந்தது..இருப்பினும் தெய்வ தரிசனம் எப்போதும் உண்டே...என்று சமாதானபடுத்திகொண்டு இரூகயில் அமர்ந்து திரைப்படத்துடன் ஐக்கியமாக தொடங்கினேன்...
முன்னோட்டம் என்பதையம் மறந்து பல இடங்களில் நமது நடிக தெய்வம் வசனம் பேசும் காட்சியில் பலர் கைதட்டி ஆர்பரித்தனர்...
சமீப காலத்தில் வந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வந்த கலர் படங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் மிக சிறந்த வடிவில் வந்துள்ளது என்பது திண்ணம். இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டும் மூன்று அல்லது நான்கு வினாடி பழைய கலர் தென்பட்டாலும் ஓவரால் 95% மதிப்பெண் எந்தவித சந்தேகமும் இல்லாமல் கொடுக்கலாம்.
படத்தின் பிரம்மாண்டம்....போர்களகாட்சிகள் அரசவை காட்சிகள் !
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த நிலையில் வெளிவந்துள்ள பாகுபலி திரைப்படத்தை பாராட்டும் அனைவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் இந்த கிராபிக்ஸ் இல்லாத பிரம்மாண்ட போர்கள காட்சிகளை நிச்சயம் பாராட்டதான் வேண்டும்...பாராட்டுவார்கள் !
கிட்டத்தட்ட ஒரு 22 நிமிடம் எடிட்டிங் செய்துள்ளார்கள் ...ஆனால் கண்டுபிடிக்க முடியாதவண்ணம்...திரைக்கதை பாதிக்காத வண்ணம் செய்துள்ளது பாராட்ட வேண்டிய விஷயம்...
திரைபடம் இப்போது முன்னைக்காட்டிலும் படுவேகம் ! இடைவேளை வந்ததும் தெரியவில்லை...திரைப்படம் முடிந்ததும் தெரியவில்லை...அப்படி ஒரு நேர்த்தியான ஒரு எடிட்டிங் ! வாழ்த்துக்கள் !
நடிகர் திலகத்தை அந்த அகன்ற திரையில் பார்க்கும்பொழுது.....அடேயப்பா...மனிதர் சுமார் 6 அடி 2 அங்குலம் இருப்பது போல ஒரு எழுச்சி...!
கிஸ்தி திரை வரி வட்டியாகட்டும்.....அல்லது...
மந்திரி தானாபதி அவர்களிடம் பேசும் காட்சியாகட்டும்...
குழந்தையுடன் கொஞ்சும் காட்சியாகட்டும்....
போர் அறிவிப்பு காட்சியாகட்டும்...
அல்லது....பாநேர்மான் உடன் அனல் பறக்கும் வசனம் கொண்ட கிளைமாக்ஸ் காட்சி ஆகுட்டும்.......
.......நடிப்பு ஒரு 60,000 அடிக்கு மேல் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது !
சிறு வயதில் நாம் பார்த்து ரசித்த விதம் வேறு....ஆனால் சற்றே நமக்கு MATURITY வந்துள்ள நிலையில் இப்போது நடிப்பு என்கின்ற ஒரு பரிமாணம் தவிர....இதர பரிமாணங்கள் அவருடைய உடல்மொழி, அவருடைய ஆதிக்கம், கதாபாதிரத்துடன் உள்ள ஆலிங்கனம்..இப்படி பல விஷயங்கள் படம் பார்க்கும்போது நமக்கு நிச்சயம் பளிச்சிடும் !
நாயகர்கள் ஆயிரம் இனி வந்தாலும் ......நம்முடைய நாயகர் மட்டுமே என்றென்றும் உண்மையான கதாபாத்திர நாயகர் !
"உலக நாயகர் விருது" நடிக்க வந்த ஏழே வருடத்தில் எப்படி முடிந்தது என்பதை இந்த படத்தை பார்த்தால் விளங்கும் !
தமிழக மக்களுக்கு, இந்த கால இளைய தலைமுறையினருக்கு நிச்சயம் ஒரு விருந்தளிக்கும் என்பது நேற்று படம் பார்த்து முடிக்கையில் உணர்ந்த உள்ளங்கை நெளிக்கனி !
நிச்சயம் வீரபாண்டிய கட்டபொம்மன் உண்மையான ஒரு வெள்ளிவிழா மீண்டும் கொண்டாடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்...!
திரைப்படம் அவ்வளவு பிரமாதமாக வந்துள்ளது...!
Rks