rangan, in this thread bis_mala posts her kavithaikaL. There is another thread for
what 'sharing what you enjoyed reading' where I have already posted the kavithai you have quoted! :)
Printable View
rangan, in this thread bis_mala posts her kavithaikaL. There is another thread for
what 'sharing what you enjoyed reading' where I have already posted the kavithai you have quoted! :)
Oh! very sorry.Quote:
Originally Posted by pavalamani pragasam
BTW, where can I find that thread ? Link pls.
:ty:Quote:
Originally Posted by pavalamani pragasam
காகிதத்தால் ஆனதொரு நூலென் றாலோ
கைதவழும் கண்படிக்கும் போதில் ஓடிப்
போகுமென அஞ்சிடவே வேண்டா நாமும்
பொழுதெல்லாம் வாசிப்போம் நெஞ்சம் துள்ளும்;
ஆகுமொரு நல்லிணையம் தன்னில் ஒன்றை
ஆர்வமுடன் நாம்படித்துக் கொண்டி ருக்க,
நோகவது போய்மறைந்தே மாய மாகி
நுகர்வழியும் போக்கதனை நோக்கு வீரே!
மிக்க சரியாய் சொன்னீர்கள்! சேமிக்க மறந்து பட்ட துயர் கொஞ்சமல்ல! அகராதியின் பக்கங்கள் நைந்து போன நிலையிலே-கிட்டதட்ட 40 வருட பயன்பாட்டில்- அத்தனையும் நோகாமல் நொடியில் கிடைக்குது கணிணியிலே! நவீன தொழில் நுட்பம் வாழ்க!
ஈரா யிரத்தின் ஒன்பான் ஆண்டே வருக!
சீராய் இரக்கம் அன்போ டெல்லாம் தருக!
போரும் வெடியும் என்றும் எங்கும் விலகி,
யாரும் உயர்வும் இன்பம் யாவும் அடைக!!
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Happy NY 2009 to Madam P.P and all our forum staff and friends..
அவ்வண்ணமே ஆகுக!
புத்தாண்டே வருக!
புத்துணர்ச்சி தருக!
மன்றம் மகிழ்வாகுக!
உலகத்தின் போர்கள் எல்லாம்
ஒபாமா ஓயச் செய்வார்;
சிலகத்தி தாம்போய்ச் சேரும்
செம்மையாய் உறைக்குள் என்று
பலபத்தி ரிகைகள், மேலோர்
பகர்ந்தனர் பதவி கொள்ள
நலமொத்து வருமுன் பேஇந்
நானில மெங்கும் வெம்போர்.
புகலப்போர் மட்டும் என்றால்
போகட்டும் என்போம் ஆங்கே
அகலப்பார் எங்கும் கெட்ட
ஆழ்பொரு ளியலால் வாடும்!
இகலுப்பி எதிரில் நின்ற
இன்னலை வென்றே விண்மீன்
மிகலொப்ப ஓபா மாவும்
மேலெழக் காண்போம் நன்றே.
நம்பிக்கையுடன் காத்திருப்போம்Quote:
Originally Posted by bis_mala