கவி புனையும் மரபறியா சிறு பேதை நான் - பரிமாறிய தேனை பருக வருவேன் நிச்சயமாய்!
Printable View
கவி புனையும் மரபறியா சிறு பேதை நான் - பரிமாறிய தேனை பருக வருவேன் நிச்சயமாய்!
நீங்கள்
என்னென்ன சொன்னாலும் கவிதை --அதை
எங்கெங்கு சொன்னலும் இனிமை! --- இதன்
பின்னென்ன இலக்கண அருமை -- அதைப்
பின்னாமல் பெற்றீரே பெருமை!
யாதும் எழுச்சியாய்ப் புனைந்தீர் --- பொருள்
யாவினும் உணர்வோடு இணைந்தீர் -- ஏன்
பேதைஎன் றோர்கரை அணைந்தீர் -- தற்
பெருமை இலாக்கலன் வனைந்தீர்!
Welcome Madam.
:D
Quote:
Originally Posted by Sudhaama
Quote:
Originally Posted by bis_mala
எளிய நடை சந்தக்-கவிப் புலமை மிகு அன்பர்காள்,
வருக.! தமிழ்ச்-சுவை கனி-ரச விருந்து பருக விவாதம் தொடர்க.!!!
.அன்புடன்... சுதாமா.
.
.
..Quote:
-
உயர்-பிறவி, மனிதா.!
புவி-சொர்க்கம் உன் கையில்.!!!
- தொடர்: 2.
ஆக்கம்: சுதாமா.
[html:48f949590d]
http://i129.photobucket.com/albums/p...008/Globe7.gif
http://i129.photobucket.com/albums/p...Evolution5.jpg
http://i129.photobucket.com/albums/p...ct08/God14.jpg
[/html:48f949590d]
(யாப்பு-இலக்கண வரம்புக்கு உட்பட்டது அன்று)
ஏற்றம்-மிகு வாழ்நலம் புவி சொர்க்கம் இம்மை இன்பம் இங்கே மாந்தி ஓங்க
தோற்றம் பெற்ற உயர் பிறவி மானிட வாழ்-நெறி மட்டுமே காண வந்தோம்
கூற்றுவன் நினைவூட்டமோ, புவி-விடுத்து அடுத்த வீடு பேரின்ப நாட்டமோ
சேற்றுக்குழி புவி விதி-வாழ்க்கை எனத் தாழ்-சுட்டு இவண் நோக்கம் அன்றே.
அன்று மாந்தர் மண்-மாண்டு தற்கால மானிட மாண்-பிறவி மாய்ந்து செத்த-பின்
சென்று-சேர் வேறு-உலகம் எது வேண்டும் வீடு-மோக்கமா, நரகமா, சொர்க்கமா?
இன்றே சிந்தித்து முடிவு-எடுத்து உன்-பாதை நீயே வகுத்துக்கொள் மறுமையுமே
என்றே காட்டி விரித்து-உரைக்கும் வேதாந்தம் இங்கு நம் கருத்து-ஆய்வு அன்றே
அன்றே அன்றன்றே உய்வுற தத்தமக்கு தலை-நிமிர் மன்னனாய் புவி-மாந்தர்
நின்று-வாழ வழி எது.? இறைவா உயர் பிறவி பெரு வாய்ப்பு நாங்கள் இங்கே
இன்றைக்கே இப்போது முதலேயும் கொள்ள இயலுமா எவ்வாறு.? இயம்புவயே
என்றைக்கும் எங்கும் ஏற்றம்-மிகு உயர் கடைப்பிடிக்கத்-தக்க கொள்கைகளை.
களை-கட்டும் கலை-நயம் மிக்க கனித்தோட்டம் எத்தனை கோடி இன்பப்-புவி.?
களை-பதர் நீக்க நற்பயிர் தழைக்கும் கழனி விளையாட்டு நெறியோ வாழ்க்கை.?
தளை முன்வினை நீக்கவோ இரு-வகை ஏழ்மை குடிசையிலும் மாடியிலும் எம்
விளை-விதி.? இம்மை-இன்பம் விடுத்த பேரின்ப-வீடா.? வேண்டோம் என்றோ.!
என்றைக்கோ எதிர்காலத்தே பாரின்பத்தினும்-மேல் பேரின்ப தேவ-லோகம் சேர,
இன்றைக்கு-உன் மடியில் கட்டிக்கொள் தேள் கொட்டுக்கொட்டே தரணி வாய்ப்பு
என்றால் தேளும் வேண்டாம் தேவலோகமுமே உயர் பிறவி காகித-மகுடமே.!
தின்று திரியும் மனித உரு மிருகமாய் தாழாதே விஞ்ஞான ஞானம் நன்றே.!
நன்றே வாழ வேண்டின் நானிலத்தீர், கற்பீரே பாரத-நாடு சுட்டும் வேத-நெறி
என்றே அறை-பறைந்தார் ஜெர்மானியர் மாக்ஸ் முல்லர் பாரத நாட்டை
சென்று-எட்டாது, தூரத்து-இருந்து எட்டிப்-பார்த்தே வேத-நன்னெறி மாண்பு
வென்றே வாழ்க்கை, வைய- சொர்க்கம் எப்படி எளிதே கிட்டும் எனக் காட்டும்
காட்டு-மிராண்டி என மாக்களாய் வாழ்ந்த வையத்தோர் பிற நாட்டு மக்கள்
காட்டு மிருக-நெறி தமக்குள் ஓயா வெறுப்பு பகை, வேட்டை, போராட்டம்
நாட்டு வாழ்-நெறி மாந்தன் தாம் புவி ஆள வந்த மாண்பிறவி என அறியாதே
ஆட்டு-மந்தையாய் மிருகம் பின்பற்றி தம்மைத்தாமே இழி தரணி நரகம் ஆக்கி
ஆக்கினர் மானிட-நெறி ஆன்றோர் ஆதி-முதல் மானிட-இனப் பாரதத்தோர்
நோக்கம் புவி-சொர்க்கம் இம்மை-இன்பத்தொடு மறுமை உய்வும் துறவாதே
ஆக்கமே பற்பல செல்வம் குணமே பணமாய் புவி ஆள்வீரே மாந்தர்காள்.!
ஏக்கம் ஏன், வான் நோக்கி.? வாய்ப்பே பாழ் தற்கொலையால்.! இறை பழியாதீர்.
பழி-சுமர்த்த இடம்-இன்றி, சொல்லால் சொன்னதையே செயலாலும் வேத-நெறி
வழி-காட்டினரே வையத்தே வேத-இறைவர் திருமால், சிவன், அம்மன், முருகன்
குழி-பறித்து தாழும் தாழ்த்தும் இரு-வகை மாந்தரையும் சுட்டிக்காட்டி கண்காண
இழிவுறா-நெறி கண்ணன் தெளிவு-ஊட்ட இறை-பங்கு, சிவன்-காட்ட மானிடமே.!
மானிடப்-பங்கு உள்ளுவது-எல்லாம் உயர்வே நந்தனாரை நடராஜர் காட்டினார்
தேனினும் இனி-பண்பர் பாணரை தூக்கிக் காட்டினன் அரங்கன் இறைவன்-பங்கு
வானினும் மேல் வையத்து உனை உயர்த்துவான் இறைவன் நீ நம்பும் யாரோ.!
கானிது கனி-வாய்ப்பை சொர்க்கம் ஆக்குவது உன்-கையில் தானே மனிதா அறி.!
நந்தன் சரித்திரம் : பாடல் (கோபாலகிருஷ்ண பாரதி)
- வழி மறைத்திருக்குது - பாட்டு (Video: RANJANI-GAYATHRI)
http://www.youtube.com/watch?v=76aQwBJhmm8
.
.
DELETED.
WILL POST WHEN A NEW POEM IS READY.
.
திசை-விலகா உரையாடல்-விருந்தே தருவோம்.
எளிய நடை சந்தக்-கவிதை
(யாப்பு-இலக்கண வரம்புக்கு-உட்பட்டது அல்ல)
பிறழ்தல் இலதாய் ஒரு நதி-ஒன்றி அதன் நடை திசை மாறா உறுதகு வழியே
அற-நெறி நமது புவி வாழ் முறை எது என உறு இம்மை உயர் நனி மனிதத்
தரம் தகு குணமே வழுவா நிலையில் பெறு-உறு உரை-ஆடல் நம்மிடை
சிரமேற்கொண்டோம் அலவா அன்பரே பிஸ்மாலாரே தலை சுத்துது எனக்கு.!
எனது உளப்- பட்ட அரி அறி பிதற்றல், கவி எனும் பெயரால் ஏதோ இங்கே
இனம் உயர் மனிதப் பிறவியே பெற்றும் தகு-திறன் ஆளும் தலைமா நாமே
சனம் இன்று-எங்கும் புவி-வாழ்வே நரகம், பகை, எதிர்-நிலையே கொடுமை ஏனோ?
எனவொரு முதன் முதல் எழும் கேள்வியின் விடையாய் ஆய்வு இங்கு அலவா.?
அலகிடக் கலி தற்காலம் பொருந்தும் ஞான-விஞ்ஞானக் கரு பெரு விருந்து
உலகோர்-கூடி நல-வாழ் வழியது சிந்தித்திடவே பொறி-காண் திசையே
விலகி எங்கெங்கோ நதி கதி விடுத்துப் பிரி ஓடை திசை மாறியோ நுமது.?
நல-மிகு அழகு நும் முந்தைய விருந்து, இது ஏன் தனிப்பிரி திரி யார் குரலோ.?
குரல்-என் மறு-புற எதிரொலி தருக, எழு வினவின் விடை சிந்தனை உமது?
திறம் உடை வலரே, கருத்து எனது அனைத்தும் தொட்டுக் காட்டியே, புவியில்
சிரம்-தகு பிறவியோம் நிகழ் நிலை என்ன.? நாம் மக்களோ வீண் மாக்களோ?
தர மனிதர்-எனத் தகுமோ? இன்றைய வாழ்வோ? என்-குரல் மறுமொழி யாதோ.?
.
காரணம் ??
========
நரக மிந்தப் வாழ்க்கை
உறவிற் பகையும் கொடுமைகளும்!
சிரமேல் வைத்தார் கரங்களையே
சீர்கே டெல்லாம் ஏனெனவே.
மக்கள் நாமே எனலாமோ
மாக்கள் நாமெனல் சரியாமோ?
தக்கோர் பல்லோர் அறிவியலால்
தாரணி எங்கும் உறுபயனென்?
மனிதத் தரத்தில் வாழ்வுடையோம்,
மாநில மேலெனக் கூறிடவும்
இனிஎத் தகுதி நமக்குடைமை
எனவும் கணைகள் விடுத்திடுவார்!
காரணங்கள்:
ஆண்டவன் கட்டளை மீறியதால்!
ஆதாம் ஏவாள் மாறியதால்!
கூண்டொடு மானிடம் சீரியதாம்
கோன்மை இழந்த தென்பதொன்று.
துன்ப மென்பதன் காரணமும்
தோன்றிய அதன்நி வாரணமும்
அன்புயர் புத்தரும் ஆர்த்ததுண்டே
அதுவும் பலரை ஈர்த்ததுண்டு.
நாளும் கோளும் நலிவிடத்தில்
நசிவுடன் உச்சம் பகையாட்சி
மேலும் பற்பல காரணங்கள்
மிரட்டிச் சொல்வார் சோதிடரும்
மக்களை ஆய்வு செய்தவர்கள்
மற்றவை நீட்டிச் சொல்வதுண்டே!
பக்கலில் பற்பல பகர்ந்துளராம்
படித்திடும் நூலில் பொதிந்தவையே.
யுகங்களில் இதுவே கலிகாலம்
யோகம் உதறுவோர் மலிகாலம்
முகம் நக நட்பாய் மோடிசெய்து
முன்செலப் பின்கொலும் இழிகாலம்.
இந்தக் காலத்து நடப்புகளை
அந்தக் காலத்து நிக்கோடெமஸ்
சொந்த முன்னுணர் வுரைத்ததுண்டு
சொல்லவும் பின்னினி வேண்டுவதோ?
துன்பம் இன்பம் என்பவற்றில்
தோயா தொதுக்கிப் பண்படுவார்
துன்பம் இன்பம் வென்றவராம்
துணிந்தவர் எதற்கும் பணிந்திலராம்.
கடைப்பிடித் திடநற் கொள்கைகளை,
கண்டு விரித்துரை செய்திடுவீர்,
இடைப்படும் சொர்க்கம் கைகளிலே
என்பதன் விரிவதிற் பெய்திடுவீர்.
நந்தன் சரித்திரம் இங்கெதற்கு?
நம்மிடை அதற்கொரு பங்கெதற்கு?
நந்தன் கதையோ புதிதெனக்கு
நலம்புகல் வீரதன் மதிகணக்கு.
.
Kindly address as Sivamaalaa, B.I. Sivamaalaa, or B.I.S. Maalaa.
Not bismala, since B.I.S are initials. Thanks to all my friends. (I am told bismala is a muslim name. I am not Muslim.)
Note: bis_mala which is my username is different from bismala. The"__" is to denote that the first three letters are initials.
.
.
மதி-கணக்கோ வாழ்வு மாந்தர் தமக்குத் தாமே விதி-செய் மதி கொட்டம்.?
விதி-கணக்கோ வாழ்க்கை மாந்தர்-மேலான் நம் மீது திணித்து ஆள்- திட்டம்.?
கதி கணக்கோ புரியாத தலையெழுத்து தலைமேல் கைவைத்து ஏங்க கஷ்டம்?
நிதி-கணக்கோ வாழ்-வள செல்வங்களின் வரவு செலவு விவர லாப-நஷ்டம்.?
நதி கணக்கோ புவி-சொர்க்க வழி? வெள்ளியில் காண்க நம் சுய-நெறி சட்டம்
மதியோர் என்-கோரிக்கையை, பிறரதும் அறிய ஆவலே.! அன்பர்காள் இஷ்டம்!
.
.
மொத்தத்தில் பரவாயில்லை இந்தச் சுதி கனக்க வந்த அதிகணக்கு!