enakku ezhuda theriyaadhu. PP amma ezhuduvaanga :)
Printable View
enakku ezhuda theriyaadhu. PP amma ezhuduvaanga :)
அத்தியாயம் # 7.
ஏற்கனவே சொன்னதைப்போல இன்றும் இது இரண்டாவது முறை,கனெக்டிவிட்டி லேது என்பதால்.ஐயோ பகவானே.
வியாபாரம் என்பது சாகரம் போல,மிகப்பெரிது.வெரூஉம் உள்ளங்கை முதலீடிட்டு திரவியந்தேடியவர்களை நாம் அறிவோம்.அவர்களது வெற்றிகளின் வாசல்முகடாக இருந்திருக்கக்கூடிய தளம் அல்லது தலம் மார்க்கெட்.என் மார்க்கெட் பயணங்கள் பின்வாசல் மார்க்கமாக இருக்கும்,காரணம் போரூரின் ஏனைய மூன்று வீதிகளிளும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் புகையால் முக்கால் பாகமும் வண்டிகளால் கால் பாகமும்.எலி பொறிக்குள்ளிருப்பதைப்போல.சென்னையின் தெருக்கள் அனைத்தும் அதன் மனிதர்களைப்போல குறுகலாகவே இருப்பது மாண்பு!போரூர் மார்க்கெட் மட்டுமின்றி பிறவையும்-எங்க ஏரியா... (புதுப்பேட்டை) பாடலில் வருவதைப்போன்று டியூப்லட்,அஸ்பெஸ்டாஸ்,பாலிதீன் சகிதம் இருப்பது கண்கூடு.மார்கெட் தன் கொல்லைவழி செல்கையில் வீட்டின் கொல்லையைப்போல செம்மணம் வீசும்.எனில் அசைவப்பகுதி:கோழியில் ஆடிருக்கும்,ஆட்டில் மாடிருக்கும்,தரையில் ரத்தமிருக்கும்,மூக்கில் விரலிருக்கும்.என் பயணங்கள் அங்கிருந்த வாழைமட்டைகளை தரதரவென தேய்த்துக்கொண்டு சுகமாக நடக்கவே தொடங்கியது என்றாலும் சிறிது காலத்திலேயே அந்த மார்க்கெட் மிகவும் பழக்கப்பட்டுவிட ஒன்று.மீண்டும் மீண்டும் வரையப்பட்ட இந்திய வரைபடம் போல மாநிலங்களாக அதன் அங்கங்கள் எனக்குள் பதிவாகியிருக்கின்றன.கரத்தினின்று பிரியும் விரல்கள் போல ஐந்து பாதைகள்.மளிகை சாமான்களுக்கு,காய்கறி வகையறாவிற்கு,கொசுறுச்சாமான்களான மஞ்சள்,இஞ்சி,மிளகாய்,தேங்காய் போன்றவற்றிற்கு,பிளாஸ்டிக் சாமான்கள்,ஊறுகாய்,வற்றல் ஆகியவற்றிற்குவற்றிற்கு என தலைக்கொரு தொழில்.ஒரேயொரு வளைவில் மட்டும் நான் சென்றதில்லை.சிரித்துக்கொண்டேயிருக்கும் அங்குள்ளவர்கள் கள்ளங்கபடற்று இருக்கிறார்கள்,ஆனால் அசுத்தத்தில் உழல்கிறார்கள்.நாம் ஆரோக்யச்சூழலில் புரண்டாலும் மனதில் எத்தனையோ அழுக்காறவாக்களை கைகொள்கிறோம்.அவை உபதேசங்களாகவும்,கவி-கதை-உரைகளாகவும் வெளிவருகின்றன.மூச்சை அடக்கமுடியாது,உண்மையை மறைக்கமுடியாது!டியூஷன் முடித்துவிட்டு வாரத்தேவைகளை பூர்த்தி பண்ணி நகர்ந்தால் கொசு மொட்டுகள் இரட்டை ஏரியில் ஊர்வலம் மேற்கொள்ளும்,தாரண ஆண்டில் மழைத்துளிகள் பூ போல் பூத்தது.எப்போதும் மார்க்கெட்டுக்குள் நுழைகையில் ஒரு திரையரங்கினுள் நுழையும் வாசமும் நேசமும் எனக்குள் இப்போதெல்லாம் பரவுகிறது,கையில் ஒரு பத்திரிக்கையோடு நான் விற்பன்னர் முன் செருமுவேன்.கொஞ்ச காலம் என்னுடன் தம்பி என்றபடி உறவாடுவார்,கொசுறு தந்து உரவான உறவை துண்டித்துக்கொள்வார்,எப்படியாயினும் ஈ.பி.கார கொள்ளிவாயன் போல அவ்வப்போது அவர் அன்பை ஏற்றியேற்றி இறக்கிக்கொள்வதில்லை.இம்முறை பயணக்கட்டுரை சற்றே வியாக்கியானம் ஆகிவிட்டது,அருள்க.நான் அவ்வப்போது மழை பற்றி சொல்கிறேன் என்று நண்பண் ஒருவன் சொல்வதால் இப்போதைக்கு ஒரு கவி,அப்புறம் விவரமாக வெயிலில் காய்வோம்.
"பிளாஸ்டிக் குடம் பூக்கும்
தார் செடிகளில்
நித்தம் பறிக்கிறார்கள் மக்கள்
தண்ணீருக்கு பதிலாக
தவிப்பை"
(யுகபாரதி)
:) :thumbsup:
அத்தியாயம் # 8.
"ஆறிலொன்றை
தொலைத்துவிட்டு ஐந்தாய்
அலைகிறான் தள்ளுபடி தேடி."
(கவிஞர் சேகர்)
மற்றுமோர் மேற்கோளை இந்த அத்தியாயத்திற்காக தத்தெடுத்துக்கொள்கிறேன்.
இன்று ஒரு அரிய சந்திப்பு நிகழ்ந்தது,இப்போதைக்கு பாதசாரி அமர்கிறான் ஒரு கட்டாயத்தால்.எங்கள் மூர்த்தி நகர் "திருவள்ளுவர் அமைப்பு" என்ற குழுவின் கீழ் சீரமைக்கப்படுகிறது.அது தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதொட்டி ஓர் விழா எடுக்கப்பெற்றது.நான் கொஞ்சம் சின்னப்பையன் என்பதால் இருக்கையில் அமர்த்தப்பட்டேன்.விருந்தினராக வந்திருந்தவர்கள் இருவேறு பெருங்கட்சி அமைச்சர்கள்.மேலும் சென்னையின் இணை ஆணையர்,அப்புறம் மேலெழுதிய கவியின் சொந்தக்காரர்.கூடவே குமுதம் இதழின் தலைமை நிருபர் திருவேங்கிமலை சரவணன்.அந்த பெயரை நேற்று கட்டிய பேனரில் பார்த்த மாத்திரத்திலேயே அந்த விழாவிற்கு சென்று நாம் ஏதாவது செய்வோம் என்று மனதிற்குள் ஒரு கோட்டைச்சுவர் எழுப்பினேன்.கோட்டை அகழி தாண்டி பாதசாரித்ததில் ஓரளவிற்கு கோட்டையில் கொடி நாட்டியாகிவிட்டது.ஆம்,கூடிய விரைவில் இந்த புண்ணாக்கு காளமேகத்தின் எழுத்து லட்சக்கணக்காண குமுதம் பிரதிகளில் விழும் என்று எதிர்பார்க்கலாம்,ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களில்!ஆம் அவருடன் ஒரு இருபது நிமிட உரையாடல் மேற்கொண்டேன்.என் ஊர் அடைவது நீண்ட வழி தாண்ட வேண்டியிருக்கிறது,சிந்துபாத் ஆகிவிடுகிறேன் நான் என்றார் ஆரம்பிக்கையில்.நானோ அப்படியில்லை,இது ஒரு மதுக்கிண்ணி போல:நீண்ட கைப்பிடி தாண்டினால் நீங்கள் அடைவது மது போல இன்பம் பயக்குவோர்,என.அப்புறம் நான் உளறிய சில பக்கங்களை காட்ட அவர் பூரித்தார்.நல்லா இருக்கு தம்பி என்றார்.
சார் நீங்க எழுதின தலை நிமிர்ந்த தமிழர்கள் புத்தகம் கிடைக்குமா?
தர்ரேன் தம்பி,விஜயராகவன்(தமிழ் முனைவர்,அண்டை வீட்டுக்காரர்,அவருடைய தோழர்)கிட்ட குடுத்தனுப்புறேன்.
ரொம்ப பிடிக்கும் சார்,குமுதம் வாராவாரம் படிப்பேன்!
யார் ராகவன் சொல்லிக்குடுத்தானா?தெரியும் இந்த பயல்களைப் பத்தி,எத்தனை வருஷ பழக்கம்!என்ன?
அய்யய்யோ இல்ல சார் நான் படிப்பேன் சார்,அப்பா மூலமா..
என் 'சன்னல்',வெற்றிக்கு பத்து வழிகள்,"பதில் கடிதம்" ஆகியவற்றை படித்துவிட்டு....
பரவாயில்ல,நல்லா எழுதுற தம்பி,இன்னும் நிரைய படி.ரெண்டு நாள் பெங்களூர் கிரிக்கட் கவரேஜ் போக வேண்டியிருக்கு.அதனால் செவ்வா இல்ல அடுத்த வாரம் பார்த்து ராகவன் கிட்ட அனுப்பு,பார்த்துக்கலாம்.ஆனா ஒரு தரம் எழுதி அப்படியே விட்டுடாதே,அதயே நூறு முறை கேப் விட்டு விட்டு படி,ஏகப்பட்ட திருத்தம் தோணும்,அப்புறம் உன் கவிதை தான் எல்லாருக்கும் முணுமுணுப்பு,உனக்கு திறமை இருக்கு,பெருசா வருவ பாரு.நிறைய படி:மேத்தா,அப்துல் ரகுமான்,வைரமுத்துன்னு,அப்ப கற்பனை விரியும் நல்லா எழுதுறே,உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.
நன்றி சார்.உங்களை சந்திததில் சந்தோஷம்.
ராகவன் கிட்ட போன் நம்பர் வாங்கிப்பேசு,அப்புறம் பார்க்கலாம்.வர்ரேன்.
இந்த சந்திப்பின் தாக்கம் இன்னும் என்னுள் இருக்கிறது,அட ஒரு பிரபல எழுத்தாளர்,ஐம்பது இலட்சம் பிரதிகளின் பிரதிநிதி,contemporary,அவருடன் ஒன்றாக,அட வியப்பாகத்தான் இருக்கிறது.அடுத்த வாரம் கலைஞர் கருணாநிதியுடன் சந்திப்பு இருக்கிறதாம்.நிறைவு.உங்களுடன் பகிர்தலைப்போல வேறு மகிழ்வில்லை.மேலும் கொஞ்ச நேரம் அளவளாவுவதற்குள் கனெக்டிவிட்டி போய்விடுமோ என்று பட்சி அலறிக்கொண்டிருக்கிறது,அதனால் போய் வருகிறேன்.
venki :) vaazhthukkal :D
நன்றி,நல்லுறங்க வாழ்த்துக்கள்.
அக்கா,நீங்கள் அந்த வரலாறுகூறுதலை முயலுங்களேன்,எனக்காக..
ennadhu venki kanna?Quote:
Originally Posted by VENKIRAJA
Glad for you, Venkiraja :clap: . May your philosophical musings continue. Just a small request. Reread before you post. Spelling mistakes tend to escape attention in unicode.
அத்தியாயம் # 9.
கிரணகணங்கள்.
கண்ணணுக்கு நன்றி.
மழை வெளியே பெய்துகொண்டிருக்கிறது.எனினும், இப்போது வெயிலைப்பற்றி பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.சம்மந்தமில்லாமல் பேசுவதும் ஒரு கலை தெரியுமா?அதற்கு ஒரு உதாரணம்:நான் மேற்கோள் காட்டும் கவிதைகள்.எனக்கு பிடித்தவற்றை எழுதி உங்களை கண்டிப்பாக படித்தாக வேண்டி வற்புறுத்துவது.இந்தமுறை இது.
" தமிழ் இணைக்கிறது
தம்ளர் பிரிக்கிறது! "
(anonymous:இதன் தமிழாக்கம்?)
வெயில் என்பது மெல்ல சூரியன் மலையிலிருந்து எழுவது,அதுதான் அழகியல் என்று சிலாகிப்பவர்கள் எனக்கு பாவப்பட்டவர்களாய்த் தெரிவார்கள்,அதுவும் மதிய வெயிலை தூற்றுபவர்கள்.நான் கூட முதலில் வெயில் என்பதை விரும்பியதற்கு காரணம்,வெயில் வாழும் வரையே கிரிக்கெட் மாட்ச் விளையாட முடியும் என்பதும்,மழை பெய்தால் கிரிக்கெட் டி.வி யில் ஒளிபரப்பப்படாது என்றும் மனம் கற்பித்த ஐதீகம்.இன்று மாலை ஐந்தரை மணியளவில் அற்புதமான ஓர் காட்சியை கண்டேன்.உதயசூரியன் குன்றுகளிலிருந்து பூப்பதை ஒத்து,இரண்டு தெருவிளக்கு கம்பிகளுக்கிடையிலிருந்து நிலா உடையவிழ்த்தது.அட்டகாசமான தருணமது,ஆனால் அத்தோடு நான் உயிரிழக்க வாய்ப்பிருந்தது.வேகமான லாரி மோதி,நல்லவேளை விசையீர்த்தது,பிழைத்தேன்.வெயில் என்பது ந்ம் அடையாளங்களுள் ஒன்று.நம் கறுப்பு வர்ணத்தின் அன்னை.விஞ்ஞானப்பூர்வமாக சூரியன் வெரூஉம் நெருப்புக்கொளங்களின் புகலிடம்,வாயுக்களின் சரணாலயம்.வெண்ணிலவை கவிஞர்கள் புகழும் ,செஞ்சூரியனை ஏன் பாடமறுக்கின்றனர் என்பது புதிர்.நிலவு கூடவே வருகிறது என்போர்க்கு சூரியன் தெரியவில்லையா?வெயிலில்,அஃதாவது நடுப்பகல் பன்னிரண்டிற்கு தொலைவு நடந்து வந்து,அமர்கையில் ஒரு சுகம் வருமே,அதுவும் தாய்மடியில் என்றால்,அவ்வளவு செல்வம் போதுமானது இக்குபேரனுக்கு.மெதுவாக மின்விசிறி வியர்வை முத்துக்களை சரும சிப்பிக்குள் மறுபடியிழுத்து தெர்மோடைனமிக்ஸால் சற்று உஷ்ணம் வெளியிடுகிறதே,இது மழையை விட உயர்ந்த சுகானுபவம்.ரோமமெல்லாம் வியர்வை மெல்ல கர்ப்பஸ்திரி போல பாதசாரித்து சொட்டுவதை ரசிக்கத்தெரியாதவர்கள் கண்ணிருந்தும் காணாதோர்.வெயிலில் தான் சேறு மறையும்.இதே போல மழைக்கட்டுரையில் வெயிலை திட்டியதை மறந்துவிடக் கடவது.நான் முன்பே மொழிந்தாற்போல வெயில் வைகறைகளில்(நகரத்து இளைஞனுக்கு வைகறை எட்டு மணி),வேனை தவறவிட்டு நடந்துசெல்கையில் புத்தக சுமை மட்டும் இல்லையென்றால் நான் நிச்சயம் நடந்தே ஏழு கிலோமீட்டர் தினந்தினம் பயணித்திருப்பேன்.வெயிலுக்கு மற்றொரு அவதாரமும் உண்டு.மாலைப்பொழுதில்.மதியமெலாம் சுட்டெரித்த சூரியனே கார்னென்டோ ஐஸ்கிரீம் சாப்பிட்டு இளைப்பாறிக்கொண்டிருக்கும் போது வாசலில் கோலம் தெளிக்கையில் சைக்கிள்சாரியான என் நாசி துளைக்கும் மண்வாசணை மிளகாய் பஜ்ஜியை தோற்கடிக்கும்.சில சமயம் அந்த தண்ணீர் என் மீது படும்,ஆனால் சில நொடிகளிலேயே காய்ந்துவிடும்,அந்த அம்மாவின் மீது பழித்துரைத்த சொற்களைப்போல.வெயில் கனவில் மழையும் மழைக்கனவில் வெயிலும்,என்று நான் ஒருமுறை எங்கோ எழுதிய நினைவு.அஃதாவது ஒன்றிருக்கும் போது மற்றொன்றிற்கு அலைபாயும் மனிதமனம்.வெயிலா?மழையா என்றால்....மழை வெயில் இரண்டுமே இல்லாத ஒரு வித மப்பான வானிலை இது இரண்டையும் விட எனக்கு பிடித்தது!