சாரதா மேடம்,
சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் மட்டுமே பார்க்க முடிகிறது ..எந்த தொடரையும் முழுமையாக பார்க்க முயல்வதில்லை என்றாலும் சில தொடர்களை அவ்வப்போது பார்ப்பதுண்டு ..கனாக்காணும் காலங்கள் மற்றும் மதுரை என்னை கவர்ந்தது ..ஆனால் இயக்குநர் என்று வரும் போது கண்டிப்பாக திருச்செல்வம் குறிப்பிடத்தக்கவர் என நானும் கருதுகிறேன் .கோலங்கள் தொடரில் பல குறைகள் இருக்கலாம் .ஆனால் ஆங்காங்கே வெளிப்படும் திருச்செல்வத்தின் புத்திசாலித்தனம் அளவுக்கு மற்ற தொடர்களில் நான் பார்க்கவில்லை (பாலுமகேந்திராவின் கதை நேரன் தவிர).
