ஒளிவீசுக சூரியனே! யுகம் மாறுது வாலிபனே!
ஒரு தோல்வியிலாப் புது வேள்வியினால் இங்கு சோதனை தீர்ந்துவிடும்!
சில ஆயிரமாயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றிவிடும்!
அட சாமரம் வீசிய பாமர சாதிகள் சாதனை கண்டுவிடும்!
Printable View
ஒளிவீசுக சூரியனே! யுகம் மாறுது வாலிபனே!
ஒரு தோல்வியிலாப் புது வேள்வியினால் இங்கு சோதனை தீர்ந்துவிடும்!
சில ஆயிரமாயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றிவிடும்!
அட சாமரம் வீசிய பாமர சாதிகள் சாதனை கண்டுவிடும்!
உடல் எழுத்து!
அதிகாலை ஏழு
ஆகாயம் தொழு
இருதயம் துடிக்கவிடு
ஈரழுந்தப் பல் தேய்
உடல் வேர்வை கழி
ஊளைச்சதை ஒழி
எருது போல உழை
ஏழை போல உண்
ஐம்புலன் புதுக்கு
ஒழித்துவிடு புகைமதுவை
ஓட்டம் போல நட
ஔடதம் பசி
அஃ தாற்றின் எஃகாவாய்.
பெற்ற இடத்தை விட முடியாமலும்
பிறிதோர் இடத்தைத் தொட முடியாமலும்
பதவி வேட்டையில் பண்பு தொலைந்து
காசு வேட்டையில் காதல் இழந்து
இலட்சியத்திற்கு எதிராக திசையில்
நுரைக்க நுரைக்க நூறுமைல் ஓடி
ரத்த அழுத்தம் சர்க்கரையோடு
நரைத்து முடிந்தது நடுத்தர வயது
மனித உள்ளம் காலிக் கிண்ணம்
இலட்சியங்களை ஊற்றி நிரப்பு
28 ஆண்டுகள் கவிஞர் வைரமுத்து படைத்த கவிதைகளின் தொகுப்பு.
Attachment 380
released sometime during 2000 .
You can't put it down.
Captivating, you go through so much emotions while reading the gorgeous work.
I cherish it. :musicsmile:
மழைக்காலப் பூக்கள்
அது ஒரு
காலம் கண்ணே
கார்காலம்
நனைந்து கொண்டே
நடக்கிறோம்
ஒரு மரம்
அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது
இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின் கீழ்
ஒதுங்கினோம்
அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்ப்புக் கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது
இலைகள்
தண்ணீர்க் காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன
சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப் பாதையில்
ஓடிக் கொண்டிருந்தன
அந்தி மழைக்கு நன்றி
ஈரச் சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.
ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்
நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரீகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது
எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள்
ஊர்வலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடை விட்டிருந்தது
உன் முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
லட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்திகள்
பட்டுத் தெறித்தன
உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை எடுத்து நீட்டினேன்
அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்
நான் கேட்டேன்
"இந்தக் கைக்குட்டை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக் கூடாதா?"
நீ சிரித்தாய்
அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது
அது ஒரு
காலம் கண்ணே
கார்காலம்
* 1982
romantic heart of நமது கவிஞர் வைரமுத்து.:musicsmile:
குளக்கரை
முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின
இந்தக் குளக்கரையில் நான் நடந்து
இன்றுதான் மீண்டும்
நடைபயில்கிறேன்
காலில் பரவசம்
நெஞ்சில் வலி
அன்று கூவிய பறவைகளில்
ஒன்றையும் காணோம்
எந்த மழையில்
எந்தக் கோடையில்
மாண்டிருக்குமோ?
அன்று குடைபிடித்த மரங்களில்
ஏதுமில்லை இப்போது
கதவாய் - சாம்பலாய்
எவ்வடிவம் பூண்டனவோ?
உள்ளிருந்த அல்லிகள்
பூண்டற்று அழிந்தன
இலங்கைத் தமிழராய்
இடம்பெயர்ந்து போயினவோ?
அன்று
சேலையைக் கல்லிலும்
மார்பால் மனசையும்
துவைத்துப் பிழிந்த பெண்கள்
முத்து முதிர்ந்தாரோ
செத்தழிந்து போனாரோ?
அன்று
தத்திஎறிந்த தவளைக்கல்
தூர்வாராக் குளத்தாழத்தில்
கிடக்குமோ? கிடக்காதோ?
இப்போதென் நுரையீரல் நிறைப்பது
சேற்றுமணம் சுமந்த பழைய காற்றோ?
புழுதிசுமந்த புதிய காற்றோ?
அதோ
ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப்போல்
வளைந்து நாற்றுநடும் மூதாட்டிகள்
நான் அன்றுகண்ட மங்கையரோ
இல்லை
முப்பது வயதில் முதுமைக்கு வந்தவரோ?
அன்று
குளத்தில் தொலைந்த மஞ்சள் ஓரணா
இன்று முக்குளித்தால்
கிட்டுமோ? கிட்டதோ?
பூமியின் முகத்தில்
காலத்தின் கீறல்கள்
எல்லாம் எல்லாம்
மாறித் தேய்ந்தன
ஆனாலும்
நம்பிக்கையோடு தேடுகிறேன்
குளக்கரையில் பதித்த என்
பிஞ்சுக்கால் தடங்களை
* 1997
Private works எல்லாம் பிரமாதம்.:thumbsup:
தங்க நாணயம்
ஆற்று மணற்பரப்பில் - நாம்
அன்புற்ற ஞாபகங்கள்
நேற்று நிகழ்ந்தவைபோல் - என்
நெஞ்சை அழுத்துமடி
முதிராத சிறுவயது - நமக்கு
முற்றாத இளமனது
பதின்மூன்று வயதிருக்கும் - இல்லை
பத்துநாள் குறைந்திருக்கும்
புதுமொட்டாய் இருந்தாயோ - இல்லை
பூப்பெய்திக் கிடந்தாயோ
அதுஎந்தன் நினைவிலில்லை - ஆனால்
அதுஇன்று விஷயமில்லை
இதமான வெள்ளைநிலா - வெள்ளி
இழைகளாய் ஒழுகிநிற்க
பதறாமல் நதிப்பரப்பை - அது
பால்கொண்டு மெழுகிநிற்க
கண்ணிலே கவிஊறியே - நாம்
காற்றுக்குச் சிறகாகினோம்
விண்ணிலே தலைஇடிக்க - நாம்
வெறிகொண்டு கூத்தாடினோம்
பூக்களில் பள்ளிக்கொண்ட - சிறு
பொறிவண்டின் துயில்கலைத்தோம்
தூக்கணாங் குருவிகளின் - குறுந்
தூக்கத்தைத் திருடிக் கொண்டோம்
பாவாடை நீசுருட்டி - என்
பக்கத்தில் உட்கார்ந்ததும்
மோவாயில் கையூன்றியே நான் -
முழங்காலை ரசித்திருந்தேன்
விதியிட்ட சிறுகோட்டிலே - அன்று
விளையாடித் திரிந்தவர்கள்
நதியிட்ட மணல்மேட்டிலே - தங்க
நாணயம் கண்டெடுத்தோம்
மாணிக்கக் கல்லின்விலை - மேயும்
மணிப்புறா அறிவதில்லை
ஆணிப்பொன் நாணயத்தின் - மதிப்பு
அப்போது தெரியவில்லை
நாணயம் நான்புதைப்பேன் - அதை
நலுங்காமல் நீஎடுப்பாய்
நாணத்தால் நீபுதைப்பை - அதை
நச்சென்று நானெடுப்பேன்
சூழ்நிலை மறந்துவிட்டோம் - காலம்
சொட்டுதல் மறந்துவிட்டோம்
வாழ்வதை மறந்துவிட்டோம் - பத்து
வயதை இழந்துவிட்டோம்
விளையாட்டு முடியுமுன்னே - வானில்
விடிவெள்ளி முளைத்ததடி
விளையாடித் திளைத்திருந்த - காசு
வீழ்ந்தெங்கோ தொலைந்ததடி
அழுதபடி நீதேடினாய் - கையில்
அதுவந்து சிக்கவில்லை
உழுதபடி மணல் தேடினேன் - எனக்கு
ஒருதுப்பும் கிடைக்கவில்லை
இருவரும் வீடேகினோம் - பின்னர்
இருவேறு காடாகினோம்
நறுமணல் பரப்பினிலே - தொலைந்த
நாணயம் நாம் மறந்தோம்!
நாணயம் பறிகொடுத்தோர் - இன்று
நடுத்தர வயதாகினோம்
நாணயம் நரைப்பதில்லை - அதற்கு
நம்போல் மூப்பில்லை
பொன்னூரு நாணயமோ - எங்கோ
புதைந்தாலும் புதைந்திருக்கும்
இன்னொரு ஜோடி அங்கே - அதை
எடுத்தாளப் பிறந்திருக்கும்
----கவிஞர் வைரமுத்து.
புத்தகம் - கொஞ்சம் தேநீர் நிறைய வானம்.
Attachment 379
Thanks for arriving during 80s.:ty:
We are very fond of you.
Vinatha.
யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்
must watch....
http://www.youtube.com/watch?v=XiOmk...eature=related
:rotfl:
மூன்றாம் உலகப் போர்- வைரமுத்து
http://www.youtube.com/watch?v=krCzPOYTmV0
வாழ்த்துக்கள் கவிஞரே! எடுத்துக்கொண்ட களன் சிறப்பானது. தங்களது கவிநடை எப்போதும்போல வெற்றி நடை போடட்டும்!
Thanks Nov for the program Youtube . enjoyable :-D
************************************************** *****
Indeed very interesting topic.
Earlier , கவிஞர் has written a கவிதை on a different problem of the farmers .
topic is
water scarcity - no rain and /or heavy rains , followed by flooding destroys the stored seed for the planting season - Farmer's problems at the initial stage of crops
நாட்டுப்புறப் பாடல் from the book பெய்யென பெய்யும் மழை.
Attachment 423
ஆடி முடிஞ்சிருச்சு
ஆவணியும் கழிஞ்சிருச்சு
சொக்கிகொளம் கோடாங்கி
சொன்னகெடு கடந்திருச்சு
காடு காஞ்சிருச்சு
கத்தாழை கருகிருச்சு
எலந்த முள்ளெல்லாம்
எலையோட உதிந்திருச்சு
வெக்க போருக்காம்
ரெக்க வெந்த குருவியெல்லாம்
வெங்காடு விட்டு
வெகுதூரம் போயிருச்சு
போட்டு மழை பெய்யலையே
புழுதி அடங்கலையே
உச்சி நனையலையே
உள்காடு உழுகலையே
வெதப்புக்கு விதியிருக்கோ
வெறகாக விதியிருக்கோ
கட்டிவெச்ச வெங்கலப்ப
கண்ணீர் வடிச்சிருச்சே
காத்துல ஈரமில்லா
கள்ளியில பாலுமில்ல
எறும்பு குளிச்சேற
இருசொட்டுத் தண்ணீ இல்லை
மேகம் எறங்கலையே
மின்னல் ஒண்ணுங் காங்கலையே
மேற்க கருக்கலையே
மேகாத்து வீசலையே
தெய்வமெல்லாம் கும்பிட்டுத்
தெசையெல்லாம் தெண்டனிட்டு
நீட்டிப் படுக்கையில்
நெத்தியில ஒத்தமழை
துட்டுள்ள ஆள் தேடித்
சொந்தமெல்லாம் வாரதுபோல்
சீமைக்குப் போயிருந்த
மேகமெல்லாம் திரும்புதய்யா
வாருமய்யா வாருமய்யா
வருண பகவானே
தீருமய்யா தீருமய்யா
தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்
ஒத்தஏரு நான்உழுகத்
தொத்தப்பசு வச்சிருக்கேன்
இன்னும் ஒரு மாட்டுக்கு
எவனப் போய் நான் கேட்பேன்?
ஊரெல்லாம் தேடி
ஏர்மாடு இல்லாட்டி
இருக்கவே இருக்கா
இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி
காசு பெருத்தவளே
காரவீட்டுக் கருப்பாயி
தண்ணிவிட்டு எண்ணேயின்னு
தாளிக்கத் தெரிஞ்சவளே
சலவைக்குப் போட்டாச்
சாயம் குலையுமின்னு
சீல தொவைக்காத
சிக்கனத்து மாதரசி
கால்மூட்ட வெதச்சோளம்
கடனாகத் தா தாயி!
கால்மூட்ட கடனுக்கு
முழுமூட்ட அளக்குறண்டி
ஊத்துதடி ஊத்துதடி
ஊசிமழை ஊத்துதடி
சாத்துதடி சாத்துதடி
சடைசடையாச் சாத்துதடி
பாழும் மழைக்குப்
பைத்தியமா புடிச்சிருச்சு?
மேகத்தைக் கிழிச்சு
மின்னல் கொண்டு தைக்குதடி
முந்தாநாள் வந்தமழை
மூச்சுமுட்டப் பெய்யுதடி
தெசைஏதும் தெரியாம
தெரபோட்டுக் கொட்டுதடி
கூர ஒழுகுதடி
குச்சுவீடு நனையுதடி
ஈரம் பரவுதடி
ஈரக்கொல நடுங்குதடி
வெள்ளம் சுத்திநின்னு
வீட்ட இழுக்குதடி
ஆஸ்தியில் சரிபாதி
அடிச்சிக்கிட்டுப் போகுதடி
குடி கெடுத்த காத்து
கூர பிரிக்குதடி
மழைத்தண்ணி ஊறி
மஞ்சுவரு கரையுதடி
நாடு நடுங்குதையா
நச்சுமழை போதுமய்யா
வெதவெதைக்க வேணும்
வெயில்கொண்டு வாருமய்யா
மழையும் வெறிக்க
மசமசன்னு வச்சிருந்த
மூட்டையைப் போய் நான் பிரிக்க
வெதச்சோளம் நனைஞ்சிருச்சே
வெட்டியாப் பூத்திருச்சே
மொளைக்காத படிக்கு
மொளைகட்டிப் போயிருச்சே
எர்புடிக்கும் சாதிக்கு
இதுவேதான் தலையெழுத்தா?
விதிமுடிஞ்ச ஆளுக்கே
வெவசாயம் எழுதிருக்கா?
காஞ்சு கெடக்குதுன்னு
கடவுளுக்கு மனுச்செஞ்சா
பேஞ்சு கெடுத்திருச்சே
பெருமாளே என்னபண்ண?
வைரமுத்து
_________________
பெய்யெனப்
பெய்யும்
மழை
Attachment 424
love,
vinatha.
//Kumudham Reporter reports that VM's printing company got the tenders with some rules bent during the Muka reign. And as a result, he may be arrested anytime.//