-
பாடல்: தவிக்குது தயங்குது ஒரு மனது
திரைப்படம்: நதியை தேடி வந்த கடல்
நடித்தவர்கள்: சரத் பாபு, ஜெயலலிதா
பாடியவர்கள் : எஸ் பி சைலஜா , பி ஜெயச்சந்திரன்
வருடம்: 1980
பாடல் வரிகள்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=468838
திரை வடிவம் கிடைக்கவில்லை.
-
அன்பு நண்பர் இசை ரசிகன்,
"தவிக்குது தயங்குது" சந்தேகமின்றி அருமையான பாடல். இந்த பாடலை இந்த இழையில் நான் கொடுக்க எண்ணிக்கொண்டிருந்தேன். நீங்கள் முந்தி விட்டீர்கள். யார் கொடுத்தால் என்ன? ரசிகர்களுக்கு பாடல் போய் சேர்ந்தால் போதும். இனிமையான பாடலுக்கு நன்றிகள் கோடி.
அன்புடன்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
இனிமையை தன்னுள் இணைத்து உங்கள் செவிகளில் பாயவரும் அருமையான பாடல்.
படம்: அந்தரங்கம் ஊமையானது
பாடல்: காதல் ரதியே..கண்ணின்மணியே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: கே.ஜே.ஜாய்
http://www.mediafire.com/?hgmtggnj1tsgg84
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
மற்றுமொரு இனிமையான பாடல் உங்களை மகிழ்விக்க இங்கே.
படம்: ஆடுகள் நனைகின்றன
பாடல்: இதுவரை சிவராத்திரி
பாடியவர்கள்: வாணிஜெயராம் குழுவினர்
இசை: சந்திரபோஸ்
http://www.mediafire.com/?y7ew7132w4uqde2
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
டியர் ஜாக்,
நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஆடுகள் நனைகின்றன பாடலைக் கேட்கிறேன். நன்றி.
இதே போல் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் இளையராஜா இசையில் கிருஷ்ண சந்தர் சுசீலா குரல்களில் மிகவும் இனிமையான சூப்பர் ஹிட் பாடல்.
படம் - இனிமை இதோ இதோ
பாடல் - அள்ளி வெச்ச மல்லிகையே
பாடலின் காணொளி கிட்டத் தட்ட 1 நிமிடம் கழித்துத் துவங்கும். பொறுமையாகப் பாருங்கள்.
http://youtu.be/obImx-Cqw0s
-
இளையராஜா இசையில் மற்றொரு சூப்பர் ஹிட் பாடல்
காவிரியே காவிரியே காதலி போல் விளையாடுறியே...
குரல்கள் - எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி
படம் - அர்ச்சனைப் பூக்கள்
http://youtu.be/RBvfVrAIsd4
-
பலர் இந்தப் பாடலைக் கேட்டிருக்க மாட்டார்கள் அல்லது பார்த்திருக்க மாட்டார்கள். இளையராஜாவின் குரலில் மிகவும் அபூர்வமான பாடல். அற்புதமான பாடல். உடன் பாடுபவர் ஜென்சி. படம் ஈரவிழிக் காவியங்கள். இசை இளையராஜா
http://youtu.be/oK8way6JhVs
-
உயிரே உயிரே ... ஒன்று நான் சொல்லவா...
மிக அற்புதமான பாடல். இசை இளைய ராஜா. குரல்கள் எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி. படம் அன்பின் முகவரி
http://youtu.be/6OaKAsfod1A
-
எஸ்.ஜானகியின் குரல் உயிருக்குள் ஊடுருவிச் சென்று நரம்புகளை வருடி விடும் பாடல்
படம் இரவுப் பூக்கள்
இசை இளையராஜா
பாடல் - இனிமேல் நானும்
http://youtu.be/LMMq-770zRU
-
நன்றி ராகவ்ஜி
இனிமேல் நாளும் இளங்காலைதான் எஸ்.ஜானகிக்கு கிடைத்த ஒரு அற்புதமான பாடல். சின்னச் சின்ன ஜாலங்கள் செய்து மனதை மயக்கி விடும் பாடல்.
ஒரு விண்ணப்பம். வேலும் மயிலும் துணை படத்தில் வாணி ஜெயராம் பாடிய "பாண்டிய மன்னனின் ராஜகுமாரி" கிடைக்குமா ?