Oh my God! How can I err like this? I am really sorry Shri. Raghavendar.
You will certainly surpass 30,000 or even 3 lacs. Advance congratulations!
Regret for the error once again.
Regards,
R. Parthasarathy
டியர் சாரதி,
தங்களுடைய அன்பான பாராட்டுக்களுக்கு என் பணிவான நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்
எம்.பானுமதி மறைந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. நமது ntfans அமைப்பின் சார்பாக எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம் திரையிடப் பட்ட போது, நடிகர் திலகத்தைப் பற்றி மிகவும் உணர்வு பூர்வமாக பேசியது இன்னும் கண்ணில் நிழலாடுகிறது. சிவாஜி நாடக மன்ற நடிகையான எம்.பானுமதி, எந்தப் பாத்திரமானாலும் சோபிக்கக் கூடியவர். அவரது மறைவு திரைத்துறைக்கு மட்டுமின்றி நாடகத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கர்ணன் - அதனுடைய வீரியம் இன்னும் தொடர்கிறது என்பதற்கு மற்றொரு சான்று
இந்தோநேஷிய நாட்டில் இந்தோநேஷிய மொழியில் மொழிமாற்றம் செய்து கர்ணன் திரைப்படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற உள்ளன. முதற்கட்ட முயற்சிகள் துவங்கியுள்ளன.
இத்தகவலை நமக்குத் தந்த திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றி.
திலகப் புதிர் 2
http://i1146.photobucket.com/albums/...ps9ff3ad5b.jpg
இந்த நிழற் படம் இடம் பெற்ற திரைப்படம் எது, அதில் நடிகர் திலகம் ஏற்று நடித்த கதா பாத்திரத்தின் பெயர் என்ன
சாரதி,
தாங்கள் சுலபமாக சொல்லி விடுவீர்கள் எனத் தெரியும். இருந்தாலும் செம வேகம் .
சூப்பர்...
A suggestion to all friends,
Thiru Raghavendar sir has started this thread (third one) purely for Nadigarthilagam's Filmography, News and Events.
When we are discussing about his filmography one by one, it will be very nice to be a record of future generation.
But nowadays this thread is becoming like a 'chatting thread' with much conversations and all.
We have already two other threads by name
NADIGAR THILAGAM SIVAJI GANESAN - PART 10 (started by Neyveli Vasudevan) and
NADIGARTHILAGAM - THE GREATEST ACTOR IN UNIVERSE & BOX OFFICE EMPEROR (started by Pammalar)
So we can continue the discussions, even 'En Viruppam' and 'puthir' etc in those two threads, leaving this thread purely for filmography, movie details, castings, stills of those movies, movie advertisements etc.
If any counter thoughts, feel free to mention.
Well said Adiram sir. I agree with you 1000%
Dear Adhiram
Thank you for the regard you have in this thread.
"En Viruppam" and 'Pudhir" both were started by me only. En Viruppam is oriented more towards a personal anecdotes on a selected song instead of analytical approach. In other words, it is intended to bring out the personal feel, experiences or any other nostalgia connected to a particular song. தங்களுக்கு விருப்பமான பாடலை ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்ல வரும் போது அப்பாடல் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பு, அல்லது அதனுடன் இணைந்துள்ள சுவையான சம்பவங்கள், என்று அந்தப் பாடலுக்கும் அந்த மனதுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம். சில பாடல்கள் சோகத்தை நினைவூட்டலாம், சில பாடல்கள் இளம் வயதில் ஏதாவது சம்பவங்களை நினைவூட்டலாம். இவ்வாறு பல விதமான கோணங்களில் ஒருவருடைய வாழ்க்கையில் இப்பாடல் ஏற்படுத்தியிருக்கக் கூடிய பாதிப்பை, தாக்கத்தை பகிர்ந்து கொள்வதே இதன் பலம்.
புதிர் தொடங்கப் பட்டதன் நோக்கம் பல படங்களைப் பற்றிய தகவல்கள் வெளிக் கொணரலாமே என்கிற அடிப்படையில் தான்.
இவையிரண்டும் இங்கல்லாமல் வேறு திரியிலும் தொடரப் படலாம் அதில் எனக்கும் ஆட்சேபணை இல்லை. மற்ற நண்பர்களின் கருத்துக்களையும் பார்ப்போமே.
அன்பு இராகவேந்திரர்,
திரி தொடங்கியவர் - தங்களின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.
------------------------
'' பார்த்த'' சாரதியின் சடுதிவேகம் அசத்துகிறது.
ஆதிராம் அவர்கள், பிரபுராம் (p-r)) போன்ற முன்னோடிகளின் பதிவுகள் கண்டால் உற்சாகம் கூடுகிறது..
டியர் கண்ணன்,
தங்கள் ஆதரவிற்கு என் உளமார்ந்த நன்றி.
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
14. MANOHARA (TELUGU) மனோஹரா (தெலுங்கு)
15. MANOHAR (HINDI) மனோஹர் (ஹிந்தி)
http://v020o.popscreen.com/eGp1MXNuM...lugu-movie.jpg
RELEASED ON 03.06.1954
VIDEO FOR MANOHARA TELUGU MOVIE
http://youtu.be/ilqaPDbGBnw
நாங்களே கவனிக்கத் தவறிய காரியத்தை கவனித்து ரசிக வேந்தருக்கு மரியாதை செலுத்திய வினோத் சாருக்கு நன்றி!
நான் ரசித்த காட்சி. (தொடர்) 1
'மனோகரா'
http://i1087.photobucket.com/albums/...c1a4db2740.jpg
தாயின் ஆணைப்படி பாண்டியன் முத்துவிஜயன் மேல் போர் தொடுத்து, பகை முடித்து, களம் வென்று, பாண்டியனைக் கொன்று திரும்புகிறான் மனோகரன். இரவில் கூடாரத்தில் உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் அவனை பழிதீர்க்க வருகிறாள் பாண்டியன் பெற்ற பைங்கிளி விஜயாள். அதுவும் ஆண்வேடம் தரித்து போர் வீரனாக. மஞ்சத்தில் துயில் கொண்டிருக்கும் காந்தர்வன் மனோகரனின் சுந்தர வதனத்தைக் காணுகிறாள். கொல்ல கத்தியை ஓங்கியவள் மனோகரனின் மனோகரமான ஒளி வீசும் அழகை கண்டு ஒருகணம் ஸ்தம்பித்து நிலைதடுமாறுகிறாள். பின் சுதாரித்து மறுபடியும் அவனைக் கொல்ல எத்தனிக்கையில், ஏதோ அரவம் கேட்க சட்டென அங்கு ஒளிந்து கொள்கிறாள். வஞ்சகி வசந்த சேனை மனோகரனைக் கொல்ல ஒரு கைக்கூலியை அதே இடத்திற்கு அனுப்ப அதைக் கவனித்து விடுகிறாள் விஜயாள். அந்த கைக்கூலி மனோகரனைக் கொல்ல முயல்கையில் தன்னையுமறியாமல் வீறிட்டு அலறுகிறாள் விஜயாள். கொல்ல வந்த கொடியவனோ விஜயாளின் அலறல் கேட்டு ஓடிவிடுகிறான். அலறல் கேட்டு கண் விழிக்கும் மனோகரனிடம் கத்தியுடன் கையும் களவுமாகப் பிடிபடுகிறாள் விஜயாள். அவளை ஆண் என்று முதலில் நினைக்கும் மனோகரன் "நீ யார்?" என்று வினவ அதற்கு விஜயாள்.தான் பாண்டிய நாட்டுபோர் வீரன் என்று பதிலுரைக்க அதற்கு மனோகரன்,
"பாதி ராத்திரியிலே பதுங்கிப் பாயும் பட்டாளப் பயிற்சிக்கு முத்து விஜய ஆட்சியிலே முதலிடம் போலும்"
என்று கேலி பேசுகிறான். விஜயாள் கோபமுற்று கத்தியை எடுக்க கத்தியின் கைப்பிடி விஜயாள் தலையில் உள்ள தலைப்பாகையில் பட்டு தலைப்பாகை கீழே விழ, கூந்தல் அதனால் அவிழ்ந்துவி(ழ)ட, அவள் பெண்ணென தெரிந்து விட மனோகரன் முகத்தில் காட்டும் அதிர்ச்சி!
"அற்புதமான காட்சி! வளையலேந்தும் கைகளிலே வாள்" என்று அதிர்கிறான் மனோகரன்.
"நீர் வீரரானால் என்னை ஜெயித்த பிறகு பேசும்" என்று பரிதாபமாக சவால் விடுகிறாள் விஜயாள்.
அதற்கு நம் மனோகரன் பதிலுரைப்பதைப் பாருங்கள்.
"வேல்விழி மாதரிடம் வீரர்கள் ஜெயித்தார்கள் என்பதற்கு சரித்திரமே கிடையாது இளவரசி!"
ஆஹா! அற்புதமான வசனம். அதைவிட அற்புதமான நடிப்பு. வீரத்தில் காதல் விளைந்த காட்சி. சோகத்திலும் காதல் மலர்ந்த காட்சி. பெண் என்றால் பேயும் இரங்கும்போது மனோகரன் எம்மாத்திரம்! பகைவனின் பெண்ணானாலும் பச்சாதாபம் கொள்கிறான். பச்சாதாபம் பாசமாக மாறுகிறது. அதுவே காதலாகிக் கனிகிறது.
மனோகரனாக நம் மனத்தைக் கவர்ந்தவர். கேட்கணுமா ஆர்ப்பாட்டத்திற்கு!
'மனோகரா' வில் நான் ரசித்த மகோன்னதமான காட்சி.
உங்களுக்கும் பிடிக்கும்தானே!
Mr Raghavendra Sir,
It is a really a Pokkisham in uploading the telegu version of Manohara
Mr Vasudevan Sir,
Not only this entire movie is a watchabale one.
வாசுதேவன் சார், சூப்பர், உண்மையிலே அதி அற்புதமான காட்சி. அதுவும் அவள் தலைப்பாகை விலகி பெண்ணென்று தெரிந்தவுடன் சட்டென்று பின்சென்று முகத்தில் காட்டும் வியப்பு,
nt ... You are really great ...
'நான் ரசித்த காட்சி' என்ற தலைப்பில் நடிகர் திலகத்தின் காவியங்களிலிருந்து தங்களுக்குப் பிடித்த காட்சியை நண்பர்கள் எழுதலாம். அதன் தொடக்கமாக முதல் பதிவாக மேற்கண்ட தலைப்பில் தொடர் தொடங்கியுள்ளேன். திரியின் நாயகர் அனுமதியையும், மற்ற நல்லுலங்களின் கருத்தினையும் நாடுகிறேன். நன்றி! நான் ரசித்த காட்சி என்று அவரவர்களும் தங்களுடைய பதிவுகளில் 1,2,3 என்று நெம்பர் போட்டுக் கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நம் உறுப்பினர்கள் ரசித்த காட்சிகளை பின்னாளில் ஒன்றாகத் தொகுத்து அதை புத்தகமாகக் கூட வெளியிடலாம்.
நன்றி ராகவேந்திரன் சார்!
இந்த அதிர்ச்சிதானே நீங்கள் சொன்னது. இன்ப அதிர்ச்சியும் கூட.
http://i1087.photobucket.com/albums/...b1ca69832f.jpg
மூவாயிரம் பதிவுகள் காணுமுன்பே முத்தான வாழ்த்துக்கள் அளித்த சித்தூர் வாசுதேவனுக்கு என் அன்பு நன்றி!
'பலே பாண்டியா' ஆனந்த விகடன் விமர்சனம்
http://i1087.photobucket.com/albums/...570541eb8e.jpg
குருவை படமெடுக்கும் சிஷ்யர்.
http://i1087.photobucket.com/albums/...4b02c3c165.jpg
டியர் வாசுதேவன் சார்,
பாடல் காட்சிகள் ஒரு புறம் என்றாலும் நடிகர் திலகத்தின் நடிப்பில் கொடி கட்டிப் பறக்கும் காட்சிகள் என்றைக்குமே ஆழ் மனதில் ஒரு தனி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். திடீர் திடீரென்று அவை நம் நெஞ்சில் தோன்றி ஒரு சில நாட்களுக்கு அந்தக் காட்சியைச் சுற்றியே மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அப்படிப் பட்ட காட்சிகளில் ஒன்று தான் மனோகரா படத்தில் இக்காட்சி. கிரிஜாவும் தன் பங்கிற்கு மிக அற்புதமாக நடித்திருப்பார். ஏனோ அவருடைய படங்கள் அதிகம் காண முடியவில்லை.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் முக பாவத்தைப் பற்றி என் கருத்தை சொன்னவுடன் அந்த நிழற்படத்தை இங்கே பகிர்ந்து கொண்டு மன மகிழ்வூட்டியுள்ளீர்கள்.
உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
தாங்கள் கூறியது போல் நான் ரசித்த காட்சியை அனைவரும் தொடரலாம். வரிசையாக 1, 2 என்று எண்களுடன் அளித்தால் பயனுள்ளதாய் இருக்கும்.
நாயகர் என்பதெல்லாம் .... வேண்டாமே சார் ...
நாம் எல்லோருமே அந்த நாயகரின் சிஷ்யர்கள் தானே ..
அன்புடன்
ராகவேந்திரன்
டியர் வாசுதேவன் சார்,
பலே பாண்டியா விமர்சனம் மற்றும் கமல் நடிகர் திலகத்தை புகைப் படம் எடுக்கும் காட்சி இரண்டுமே மிக அரிய பொக்கிஷங்கள் ...
பகிர்ந்து கொண்டமைக்கு உளமார்ந்த நன்றி.
அன்புடன்
news and events நிகழ்வுகள்
சிவாஜி மன்ற இலக்கிய அணி சார்பில் நடிகர் திலகம் திரைத்துறை வைர விழா மார்ச் 31ம் தேதி பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. விவரங்கள் விரைவில்.
Rare Images அபூர்வ நிழற்படங்கள்
பேசும் படம் அட்டையில் வீர பாண்டிய கட்ட பொம்மன் விளம்பரம்
http://sphotos-g.ak.fbcdn.net/hphoto...22023695_n.jpg
நமது ஆவணத் திலகம் பம்மலார் தரவேற்றிய நிழற்படம் முகநூலில் பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளது.
[http://www.facebook.com/photo.php?fb...ount=1&ref=nf]
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
16. THULI VISHAM [ONE DROP OF POISON] துளி விஷம்
http://i1146.photobucket.com/albums/...ps36e7e24c.jpg
வெளியான நாள் - 30.07.1954
http://i1146.photobucket.com/albums/...pscc2e585c.jpg
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி, டி.வி. நாராயணசாமி, டி.வி.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.ரங்காராவ், முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி, கொட்டாப்புளி ஜெயராமன், டி. கிருஷ்ணகுமாரி, பி.கே. சரஸ்வதி, எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, டி.பி.முத்துலக்ஷ்மி இன்னும் பலர்
திரைக்கதை வசனம் – ஏ.எஸ்.ஏ. சாமி
மூலக்கதை – சாண்டில்யன்
கதை வசன உதவி – ச.அய்யாப்பிள்ளை
சங்கீத டைரக்ஷன்- கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை
பாடல்கள் கே.பி.காமாட்சிசுந்தரன்
குரல் கொடுத்தவர்கள் – எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, டி.வி.ரத்னம், ரத்னமாலா, வி.ஜே.வர்மா
நடன அமைப்பு – கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை
நடனம் – கேரள சகோதரிகள்
ஆர்ட் டைரக்ஷன் – கே.மாதவன்
செட்டிங்ஸ் – எம்.எஸ்.சுப்பிரமணியன்
உடைகள் – எஸ்.நடராஜன்
மேக்கப் – எம்.ராமசாமி
ஆர். ரங்கசாமி
கத்திச் சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சோமு
ஸ்டில் போட்டோகிராபி – வி.குடும்ப ராவ்
எடிட்டிங் – ஆர்.ராம்மூர்த்தி
படப் பிடிப்பு – எம்.மஸ்த்தான்
ஒலிப்பதிவு – கே.ராமச்சந்திரன்
புரடக்ஷன் மேனேஜர் – பி.வி. ராமஸ்வாமி
ஸ்டூடியோ – நரசு ஸ்டூடி.யோ, நரசு நகர், சென்னை 15.
ஒலிப்பதிவு முறை – வெஸ்டர்ன் மின் ஒலிப்பதிவு
பிராசஸிங் – விக்ரம் ஸ்டூடியோஸ் அண்ட் லேபரட்டரீஸ் லிட். மற்றும் மாடர்ன் சினி லேபரட்டரி
தயாரிப்பு – வி.எல்.நரசு
டைரக்ஷன் – ஏ.எஸ்.ஏ.சாமி
துளி விஷம் திரைப்படத்தைப் பார்க்காதவர்களின் தகவலுக்காக நெடுந்தகட்டு முகப்புகள்
http://i1146.photobucket.com/albums/...ps83d04796.jpg
http://i1146.photobucket.com/albums/...psc360a9e7.jpg
துளி விஷம் திரைப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை
LINK FOR THE HINDU PAGEQuote:
http://www.hindu.com/thehindu/cp/hindux.gif
Cinema Plus
Friday, Dec 18, 2009
Blast from the past
Thuli Visham (1954)
K. R. Ramasami, Sivaji Ganesan, S. V. Ranga Rao, Mukkamala Krishnamurthi, D. V. Narayanasami, Krishnakumari, S. D. Subbulakshmi, P. K. Saraswathi, ‘Kaka' Radhakrishnan, T. P. Muthulakshmi, ‘Kottapuli' Jayaraman, ‘ Pottai' Krishnamurthi, ‘Jayakodi' K. Natarajan, Rita, K. Balajee (uncredited).
http://www.hindu.com/cp/2009/12/18/i...1850451601.jpg
After his stunning debut in Parasakthi (1952), Sivaji Ganesan played the villain or anti-hero in quite a few films such as Thirumbi Paar, Andha Naal, Rangoon Radha and Goondukili. In Thuli Visham too, he played the villain, pitted against Ramasami, who was then a noted hero, especially after the watershed movie Velaikkari (1949).
Based on a play by well known Tamil writer Chandilyan, who specialised in the historical genre, the film was written and directed by A. S. A. Sami, a successful filmmaker of that day. Produced by V. L. Narasu of Narasu Studios, it was a story of kings, queens and manipulating rajagurus. A greedy king (Ranga Rao) usurps the country of another king (Krishnamurthi), who manages to escape. But before fleeing, he leaves his queen (Subbulakshmi) and son in the custody of the kind hearted rajaguru (Narayanasami) who brings up the prince (KRR) without anybody's knowledge. Wanting to get back his kingdom, the wandering king organises a secret army. Meanwhile, the rajaguru takes the young man to the greedy king and with his influence secures him the job of army commander. The princess (Krishnakumari) falls in love with him. The greedy king sends the commander on a mission to find the deposed king and kill him. The commander sets out on the mission, completely unaware that he is on his father's trail.
Enters another king (Sivaji Ganesan) who seeks the princess' love but is rejected. A court dancer (Saraswathi) also falls in love with the hero. After many twists and turns, the villain's plans are foiled.
Meanwhile, the two women consume a small dose of poison (hence the title) given by the rajaguru. The king excuses everybody's follies and gives the deposed king his crown back. The two women wake up, (shades of Romeo and Juliet!) The poison was only a ruse used by the rajaguru to restore happiness in the kingdom.
A well-woven story, it was tautly narrated by Sami with impressive cinematography by Mastan, one of the finest in south Indian cinema. The music was composed by K. N. Dhandayudhapani Pillai, who also choreographed the dance sequences of Saraswathi and Kerala Sisters. The film was edited by R. Ramamurthi, who later became a successful producer-director in Kannada cinema.
One of the highlights of the film is a sequence where Ramasami and Sivaji Ganesan indulge in a wordy duel which runs for nearly 20 minutes.
Narayanasami (S. S. Rajendran's brother-in-law), a popular figure in Tamil theatre, gives a beautiful, understated performance.
There were many songs in the movie but none of them became popular.
In spite of the presence of Ramasami and Sivaji Ganesan and in spite of the movie having been written by Sami and produced by coffee magnate-turned-film producer V. L. Narasu at his Narasu Studios in Guindy, it did not do well.
The later day star-producer Balajee appears in a single scene un-credited, while his name appears in the credits as ‘Production Assistant'.
Remembered for: the well-woven storyline, fine performances by Ramasami, Sivaji Ganesan and Narayanasami and well-choreographed dance sequences.
RANDOR GUY
மனோகரா தகவல்கள்
பலே பாண்டியா விமர்சனம்
கமல் நிழற்படம்
வீரபாண்டிய கட்டபொம்மன் ''பேசும்'' படம்
-- சுவையான பதிவுகள் தந்த இராகவேந்திரர், பம்மலார், அன்பு வாசு - அனைவருக்கும் நன்றி..
----------------------------------------
நான் பார்க்காத சில நடிகர்திலகம் படங்களில் துளிவிஷமும் ஒன்று..
சாண்டில்யன் கதை என்பதை இன்றுதான் அறிந்தேன்.
20 நிமிட வசன யுத்தம் - பார்க்கும் ஆவலை அதிகரிக்கிறது.
பதிவுக்கு நன்றியும் பாராட்டும் - அன்பு இராகவேந்திரருக்கு
கல்கி 08.08.1954 இதழில் வெளிவந்த விமர்சனம்
http://i872.photobucket.com/albums/a...reviewp1fw.jpg
http://i872.photobucket.com/albums/a...reviewp2fw.jpg
தினமணி கதிர் இதழில் வெளிவந்த விமர்சனம்
http://i872.photobucket.com/albums/a...reviewp1fw.jpg
கல்கியில் கதாநாயகனுக்கு முன்னமே நடிகர்திலகம் பற்றிய பார்வை..
கதிரில் வெளிப்படையாகவே எழுதிவிட்டார்கள் -- சூரியன் வந்தபின் மற்ற நட்சத்திரங்கள் கதி?
அழகான புதையல்களைக் காட்சிக்குத் தந்த இராகவேந்திரருக்கு நன்றி..
மதுரை சிலை நிழற்படம் அருமை சதீஷ் அவர்களே. அது எங்கே உள்ளது போன்ற விவரங்கள் உள்ளனவா
தங்களுடைய பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி காவிரிக்கண்ணன் அவர்களே
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
17. KOONDUKKILI கூண்டுக்கிளி - 26.08.1954
http://i1146.photobucket.com/albums/...ps3adeb9f2.jpg
நடிக நடிகையர்Quote:
விளம்பர நிழற்படங்கள் உபயம் - ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 28.7.1954
http://i1094.photobucket.com/albums/...EDC4419a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்(சென்னை) : தினமணி : 9.9.1954
http://i1094.photobucket.com/albums/...EDC4420a-1.jpg
தென்னகமெங்கும் ஆகஸ்ட் 26 அன்று வெளியான இக்காவியம் சென்னையில் மட்டும் செப்டம்பர் 9 அன்று வெளியானது.
சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்தர், பி.எஸ்.சரோஜா, கே.சாரங்கபாணி, பிரண்ட் ராமசாமி, ஏழுமலை, ஈ.ஆர்.சகாதேவன், யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, டி.கே. கல்யாணம், கொட்டாப்புளி ஜெயராம், லூஸ் ஆறுமுகம், கள்ள பார்ட் நடராஜன், மாஸ்டர் மோஹன், குசலகுமாரி, முத்துலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, அங்கமுத்து, மற்றும் பலர்.
திரைக்கதை வசனம் – விந்தன்
சங்கீதம் – கே.வி.மஹாதேவன்
பாடல்கள் – மகாகவி பாரதியார், தஞ்சை ராமய்யா தாஸ், விந்தன், கா.மு.ஷெரீப், மருதகாசி
பின்னணி – பி.ஏ. பெரியநாயகி, டி.எம்.சௌந்தர்ராஜன், டி.வி.ரத்னம், வி.என்.சுந்தரம், ராதா-ஜெயலக்ஷ்மி, ராணி
ஒளிப்பதிவு டைரக்டர் – எம்.ஏ.ரஹ்மான்
ஒளிப்பதிவு – டி.கே.ராஜா பாதர்
ஒலிப்பதிவு – ரங்கசாமி – ரேவதி ஸ்டூடியோஸ், ஜீவா, ராமச்சந்திர ராவ்
ஆர்ட் – கங்கா
உடையலங்காரம் – கண்ணன்
மேக்கப் – ஹரிபாபு, கஜபதி
எடிட்டிங் – எம்,.எஸ்.மணி
நடன அமைப்பு – பி.சோகன்லால், பி. ஹீராலால்
நடனம் – ராகினி
புரொடக்ஷன் எக்ஸியூடிவ் – கே.ஜி.விஜயரங்கம்
புரொடக்ஷன் மேனேஜர் – டி.ஆர்.மாணிக்க வாசகம்
விளம்பர நிர்வாகம் – டி.ஆர்.மாணிக்க வாசகம்
ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்
விளம்பர டிசைன்கள் – வேந்தன்
புராஸ்ஸிங் – விஜயா லேபரட்டரி சுந்தரம்
ஸ்டூடியோ – ரேவதி, பிரகாஷ், நெப்ட்யூன்
டைரக்ஷன் – ராமண்ணா
இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காக கூண்டுக்கிளி நெடுந்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...ps9d3701e0.jpg
யூட்யூப் இணைய தளத்தில் கூண்டுக்கிளி திரைப்படம் தரவேற்றப் பட்டுள்ளது.
http://youtu.be/WFtEEx0f3wo
Mr Raghavendra Sir,
Your NT Series is simply superb. It shows your untiring effort in
propagating the glory of our NT.
NOTICE: This thread will be allowed to continue PROVIDED only the filmography of Nadigar Thilagam is posted here.
Please use the main thread for other discussions.
கூண்டுக்கிளியை இங்கே பறக்கவைத்தமைக்கு நன்றி இராகவேந்திரர் அவர்களே!
இந்தப்படமும் நான் இதுவரை பார்க்காத படம்.
நீங்கள் கொடுத்துள்ள யுடியூப் சுட்டி அக்குறையை விரைவில் தீர்க்கும்!
ஃபில்மோஃகிராஃபி இனிதே தொடரட்டும்!