http://i46.tinypic.com/wcnzug.jpg
Printable View
Thanks for all who have posted information about MGR's first hero movie Rajakumari. I watched this movie in CD years back and the scene of introducing MGR was like movies of 70s. Can anyone upload the intro scene were our MGR's character been praised.
The movie has lot of magic like flying carpet etc. But MGR never use this magic trick to outwit the villain. That was great I don't know how this happened to him naturally.
In this movie MGR character has be hanged if you have watched this movie you will be tensed, MGR in his autobiography has written a detailed account of that scene from Rajakumari. No double was used for that hanging scene MGR did it, took the risk. The body has to be hanging for 2 seconds then it should break and MGR should escape. But it took 3 seconds to break that one second he explained in detailed manner.
If something bad happened during that shot there is no MGR and no makkal thilagam thread and we may not be writing anything about MGR. It is a greatest moment in MGR's life.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
A post from MGR blog from 2008
http://www.mgrroop.blogspot.in/2008/...from-past.html
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
மக்கள் திலகத்தின் ராஜகுமாரி பட வீடியோ மிகவும் அருமை ஜெய் சார்.
ராஜகுமாரி பட தகவல்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி
ராஜகுமாரி
மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த முதல் படம். மந்திர தந்திர காட்சிகள் நிறைந்த படம். இப்படிப்பட்ட தொழில் செய்தா சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதே சமயத்தில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் நிலையானதொரு ஊதியத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணமும் மனதில் ஊசலாட நீண்ட ஆலோசனைக்குப் பின் எம்.ஜி.,ஆர். ஏற்றுக் கொண்ட படம். அதே சமயத்தில் அந்த வாய்ப்பும் உறுதி செய்யப்படாமலே காலங்கள் உருண்டோடின. தான் தான் கதாநாயகன் என்று சொல்லப்படுவதை நம்பி அதற்காகத் தன்னை தயார் செய்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் வேறு யார் யாரோ வந்ததாகவும் தனக்குப் பதிலாக அவர்கள் தான் காதாநாயகனாக நடிக்க இருக்கிறார்கள் என்ற சந்தேகம் தோன்று விதத்தில் பல சூழ்நிலைகள் அமைந்ததாகவும் மக்கள் திலகம் அவர்களே தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்காக அவருக்குப் பேசப்பட்ட மொத்த ஊதியம் ரூ.2500.படப்பிடிப்பு 18 மாதங்கள் நடைபெற்றது. மாதம் 200 வீதம் பெற்றுக் கொண்டு நடிக்கும் போது 12 மாதங்களிலேயே பேசிய தொகை முடிந்து விட கடைசி 6 மாதங்கள் தனது சொந்த செலவில் வந்து நடித்து சென்றதாக மக்கள் திலகம் குறிப்பிட்டுள்ளார். தன்னை கதாநாயகனாக்கி பல காட்சிகள் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரே தனது வாய்ப்பு உறுதியானதாக குறிப்பிடுகிறார். மேலும் ஒரு காட்சியில் தற்கொலைக்கு முயல்வது போன்ற சூழ்நிலையில் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிறு அவரது உடல் எடை தாங்காமல் அறுந்து விழுவது போன்ற காட்சியில் எதிர்பாரா விதமாக கயிறு அறுந்து விழுவது தாமதமாகவே உயிர்ப்போராட்டத்தை அனுபவித்ததையும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் மக்கள் திலகம். ஏற்கனவே ரூப் குமார் அவர்களும் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். எந்த ஒரு காட்சியிலும் எவ்வளவு ரிஸ்க்காக இருந்தாலும் எப்படியாவது அதைச் சாதித்திட வேண்டும் என்ற விடாமுயற்சியோடு அவர் செய்த சாகசங்கள் அவரை வெற்றிப் படிகளில் ஏற வைத்தது. அனேகமாக இதற்குப் பின் வெளிவந்த அபிமன்யு போன்ற அவர் கதாநாயகனாக நடிக்காத படங்கள் முன்னதாகவே அவர் ஒப்புக் கொண்டு தாமதமாக வெளிவந்ததாகவே இருக்க வேண்டும். ராஜகுமாரிக்குப் பின் தனது கடைசி படம் வரை கதாநாயகனாகவே அவர் நடித்தார். உலக சரித்திரத்தில் இப்படி வேறு ஒருவரும் செய்ததில்லை.http://youtu.be/ES3C3XRx9CY
முதல் படத்திலேயே இடது கை கத்திச் சண்டை. அதிலும் புதுமை. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முதல் படத்திலேயே மக்கள் திலகம் எவ்வளவு தூரம் சிரமப்பட்டிருக்கிறார் என்பது இதனைப் பார்க்கும் போது உணர முடிகிறது.
http://youtu.be/QHg0wt3-X8Q
மக்கள் திலகம் அவர்களின் ராஜகுமாரி படத்தின் வீடியோ பதிவுகள் மிகவும் அருமை .
நான் இதுவரை பார்த்ததில்லை . முதல் முறையாக ராஜகுமாரி படத்தின் வீடியோ காட்சிகளை இன்றுதான் பார்க்க முடிந்தது .
ராஜகுமாரி படத்தின் கதை சுருக்கம் - பாடல்கள் என்று மிகவும் விரிவான முறையில் வழங்கிய திரு செல்வகுமார் அவர்களுக்கும் , வீடியோ பதிவிட்ட திரு ஜெய்ஷங்கர் அவர்களுக்கும் எனது நன்றி .
https://www.youtube.com/watch?v=OLkQMh9c2Gw
RAJAKUMARI - 1
https://www.youtube.com/watch?v=qJ1Kw0t5kgc
RAJAKUMARI - 2
http://www.youtube.com/watch?v=eRzVqDSVYSs&feature=youtu.be
RAJAKUMARI - 3
Thank you Sailesh Sir for the punch dialogs.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://www.youtube.com/watch?v=3y-w1cygQt8&feature=youtu.be
RAJAKUMARI - 4
Congratulations to all contributors to this thread for getting 5 Star Status
பொன்மனச்செம்மல் mgr - filimography news & events- திரி
http://i48.tinypic.com/2h3r6hd.png
5 ஸ்டார் அந்தஸ்து - என்ற பெருமை கிடைத்த தகவலை பதிவிட்ட இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நமது நன்றி .
திரு ராகவேந்திரன் அவர்கள் நமது திரியில் கலந்து கொண்டு பல அருமையான மக்கள் திலகத்தின் பட செய்திகளை பதிவிட்டு வருவது பெருமைக்குரியதாகும் .
பொன்மனச்செம்மல் - திரி இந்த அளவிற்கு வெற்றி பெற காரணம் நம் இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் அயராத உழைப்பும் , மக்கள் திலகத்தின் படங்களின் பாடல் புத்தகத்தின் கதை சுருக்கம் - பாடல்கள் எல்லாவற்றையும் டைப் செய்து வரிசை படி பதிவிட்டு வருவதும் சாதனையாகும் .
1936 சதிலீலாவதி துவங்கி இன்று ராஜகுமாரி -1947 வரை வந்து விட்டோம் .
தொடர்ந்து நமது நண்பர்களின் பதிவுகளுடன் பொன்மனச்செம்மல் திரி மேன் மேலும் வெற்றி பெற விரும்பும்
வினோத்
எல்லா புகழும் எங்கள் குல தெய்வம் எம் ஜி ஆர் அவர்களுக்கே.
இந்த திரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து கிடைக்க, முக்கிய காரணமாய் விளங்கி, தங்களது பங்களிப்புகளை வழங்கிய அனைத்து பதிவாளர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.
இந்த திரியினை பார்வையிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்த பார்வையாளர்களுக்கும் எனது நன்றி.
http://i45.tinypic.com/334pzya.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
நமது மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இரண்டு திரிகளுக்கும் 5 ஸ்டார் அந்தஸ்து கிடைக்க உழைத்த அனைத்து நல உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------
மக்கள்திலகம் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து வெளிவந்த ராஜகுமாரி படத்தின் தொகுப்பு மற்றும் கதை சுருக்கம் வீடியோ பதிவுகள் அனைத்தும் அருமை தொகுப்பு மற்றும் கதை சுருக்கம் வழங்கிய செவகுமார் சார் வினோத் சார் இருவருக்கும் எனது நன்றிகள் அதேபோல் வீடியோ பதிவுகள் வழங்கிய ஜெய் சார் சைலேஷ் சார் ரூப் சார் உங்களுக்கும் எனது நன்றிகள் போட்டோ பதிவு வழங்கிய ரவி சார் அவர்களுக்கும் நன்றிகள்
தலைவன் தன்னுடைய இளம் வயதில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு எப்படி போராடி நடித்திருப்பார் என்பதனை நினைக்கும் போது என்னால் தாங்கமுடியவில்லை நண்பர்களே காரணம் மிகப்பெரிய நடிகர்களுக்கு மத்தியில் அதுவும் பாடி நடித்தால்தான் நடிக்க வாய்ப்பு என்ற நிலைமையில் நம் தலைவன் எப்படி போராடி நடித்திருப்பார் என்னும்போதுகண்கள் குளமாகிறது
.திரையுலகில் நம் தலைவன் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் பின்னாளில் வந்த நடிகர்களுக்கு மிகவும் சுலபமாக மாறிவிட்டது ஏனென்றால் கதாநாயகன் பாடினால்தான் நடிக்கமுடியும் என்ற நிலைமையை மாற்றியவன் நம் தலைவன் இன்னும் எவ்வளவோ கூறலாம் நம் குலதெய்வத்தை பற்றி
அன்புடன் வேலூர்
இராமமூர்த்தி
It is a pleasure to hear that this thread has received 5 star status.
நமது திரிக்கு 5Star அந்தஸ்து கிடைக்கக் காரணமான அத்துணை பேரின் உழைப்பிற்கும் வணக்கம்.
திரு.செல்வகுமார் சார்
சென்ற வாரம் சனி அன்று ராஜகுமாரி படத்தகவல்களை பதிவு செய்தீர்கள். அதன் பின்பு அடுத்த படமான பைத்தியக்காரன் படத்தகவல்களை எதிர் பார்த்தேன்.தாங்கள் பதிவிடவில்லை. ஏன் இந்த கால தாமதம். இன்றாவது பதிவிடுங்கள். ஆர்வத்தோடு எதிர்பார்க்கும்.
உங்கள் அன்பு நண்பர்
எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------------------
[b]திரு. ரவிச்சந்திரன் சார் அவர்கள் அறிவது :
தங்களின் ஆர்வத்துக்கு நன்றிகள் பல. பல்வேறு அலுவல்கள் காரணமாக, பொன்மனசெம்மலின் 16வது படமான "பைத்தியக்காரன்" பற்றிய தகவல்களை உடன் பதிவிட முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.
இன்று அப்படத்தினை பற்றிய தொகுப்பினை அளிக்கிறேன்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன் [/b]
[b[size=4]]பொன்மனசெம்மலின் 16 வது திரைப்படமாகீய "பைத்தியக்காரன்" பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. இத்திரைப்படம் வெளியான தேதி : 26-09-1947
2. தயாரிப்பு : கலைவாணரின் "என்.எஸ்.கே. பிலிம்ஸ்" நிறுவனம்
3. இயக்குனர்கள் . : கிருஷ்ணன் - பஞ்சு
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : மூர்த்தி
5. பாடல்கள் : கே.பி. காமாக்ஷிசுந்தரன், உடுமலை நாராயணகவி,
டி.ஏ. சம்பந்தமூர்த்தி ஆச்சாரி மற்றும்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
6. திரைக்கதை, வசனம் : சஹஸ்ரநாமம்
7. இசை : சி. ஆர். சுப்பராமன் & பார்ட்டி
8. கதாநாயகன் மற்றும் நாயகி : எஸ். வி. சஹஸ்ரநாமம் - எஸ்.ஜெ. காந்தா
குறிப்பு : கலைவாணர் என்.எஸ். கே. அவர்கள் மனைவி டி.ஏ. மதுரம், தனது கணவர் என்.எஸ். கே. தவிர வேறு எவருடன் ஜோடியாக நடிப்பதில்லை என்று உறுதி பூண்டிருந்தார். ஆனால் அந்த உறுதியினை சற்று தளர்த்தி, அவர் ஜோடியாக நடித்தது
நமது மக்கள் திலகத்துடன் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. அந்த படம் தான் "பைத்தியக்காரன்". நமது இதய தெய்வத்துடன் ஒரு டூயட் பாடலும் உண்டு. காந்தா - வள்ளி என இரட்டை வேடங்களில் டி..ஏ. மதுரம், அவர்கள் நடித்து அசத்தினார்
இயக்குனர்கள் கிருஷ்ணன் மற்றும் பஞ்சு ஆகிய இருவரையும் கவுரவப்படுத்தி, அவர்களின் புகைப்படத்துடன் இந்த திரைப்படத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன் [/b][/size]
பொன்மனசெம்மலின் 16 வது திரைப்படமாகீய "பைத்தியக்காரன்" கதைச்சுருக்கம் :
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்யாணம் ஆன சில மாதங்களில் விதவையாகி விட்ட நளினாவுக்கு மறுபடியும் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று அவள் தமையன் சேகர் வாதாடுவதை தந்தை ஆறுமுக முதலியார் பிடிவாதமாக ஆட்சேபிக்கிறார். ஆனால்,அவர் மட்டும் மனைவியை இழந்தவுடன் ஓர் பெண்ணை இரண்டாந்தாரமாக கொள்கிறார். மணப்பெண் காந்தா முற்போக்கான கொள்கை உடையவள். படித்தவள். தற்போது அவள் காதலன் மூர்த்தி அபாண்டமாக திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறான்
காந்தா ஆறுமுக முதலியாருக்கு மனைவியாக வாழ மறுக்கிறாள். அவரை தாலி கட்டிய "தகப்பனார்" என்றே மதிக்கிறாள். நளினாவின் ஏக்கமாகவே இருந்து வரும் சேகருக்கு வேளையில் சாப்பிடுவது, தூங்குவது கூட முடிவதில்லை. ஆறுமுக முதலியாரின் நிம்மதி அடியோடு குலைகிறது
மூர்த்தி விடுதலை அடைகிறான் காந்தா ஆறுமுக முதலியாரிடம் தான் அவர் வீட்டிலிருந்து வெளியேற அனுமதி கேட்கிறாள். அவரும் வேறு வழியில்லாமல் அவள் விருப்பத்துக்கு, தலை வணங்குகிறார் இதுவரை பட்டுத் தெளிந்ததின் பலனாக நளினாவுக்கு கல்யாணம் செய்வது என்று நிச்சயிக்கிறார்.
ஆனால் நளினாவின் பால்ய நண்பன் சோமு அவளைக் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி அவளைக் கெடுத்து விடுகிறான். பிறகு அவளை மணக்க மறுக்கிறான். நளினா தற்கொலை செய்து கொள்கிறான்.
சேகர் ஆத்திரத்துடன் சோமுவைக் கழுத்தைப் பிடித்து விசாரித்துக் கொண்டிருக்கையில், அவன் (சோமு) சுவற்றிலிருந்த ஆணியில் மோதுண்டு உயிர் துறக்கிறான். சேகர் "பைத்தியக்காரனைப்" போல், "பெண்களே ! நீங்களெல்லாம் கல்யாணம் செய்து கொள்ளாதீர்கள்: கல்யாணம் செய்து கொண்டால் விதவையாகி விடுவீர்கள்" என்று கதறுகிறான்.
------ கதை சுருக்கம் முற்றியது. ------------
இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
"பைத்தியக்காரன்" திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் :
நமது மக்கள் திலகத்துடன் நடிகை டி.ஏ. மதுரம் அவர்கள்
http://i48.tinypic.com/21lpsfn.jpg
http://i47.tinypic.com/24b2cuo.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த பைத்தியக்காரன்? திரைப்படத்தின் நிழற்படங்களின் ஒரு கலவை
http://i1146.photobucket.com/albums/...psb1490fc4.jpg
பைத்தியக் காரன் படப் பெயரை பதியும் பொழுது முடிவில் ஒரு கேள்விக் குறியினையும் இடவும்.