டியர் ரவி சார்,
எல்லோரும் ஞான ஒளியை அக்குவேறு, ஆணி வேறாக அலசி ஆராய்ந்தபிறகும், பிடிவாதமாக தாங்கள் அதனை மீண்டும் தொடருவதன் காரணம் புரிகிறது. கண்டிப்பாக வாசுதேவன் சாரின் 4000-வது பதிவு விரைவில் வரும். தொடருங்கள்.
Printable View
டியர் ரவி சார்,
எல்லோரும் ஞான ஒளியை அக்குவேறு, ஆணி வேறாக அலசி ஆராய்ந்தபிறகும், பிடிவாதமாக தாங்கள் அதனை மீண்டும் தொடருவதன் காரணம் புரிகிறது. கண்டிப்பாக வாசுதேவன் சாரின் 4000-வது பதிவு விரைவில் வரும். தொடருங்கள்.
யாரு மாத்து முகாமு வினோத்து சாரா.
யப்பா நீயாச்சும் வெல்கம் குடுத்திகினியே.இன்னாபா கேட்டுகின எனக்கு வயசு இன்னான்னா.65 அ மூனால பெருக்கிகினு அத்த நாளால வகுத்துக்குனு அத்தோட பன்னெண்ட கூட்டிக்கோ.அப்பால அத்தோட இன்னும் நுப்பத சேத்துக்கோ.அதுல தொன்னூறக் கழிச்சுடு கழிச்சிகினியா.அய்ய கணக்குல இன்னா இவ்வளவு வீக்கா கெடக்குற. கூட்டிகழிச்சியாந்தா வருது பாரு ஆன்சரு.அதான்பா நம்ப வயசு. அப்புறம் இன்னா கேப்ப.சைசயா. ஊரு இன்னான்னு கேட்ட இல்ல.ஊரு கோவேரு.
ஒத்த ஆளாப் போராடிக்குனு நைசா எம்சியாரு திரிய ஆறுக்குக் கொண்டாந்தது வுட்டுபுட்டியே. நெசமாவே ஒழைப்பாளிதான் கண்ணு நீயி.விடிகாத்தால காப்பி குடிக்கிறியோ இல்லியோ மறக்காம போஸ்ட்டு போட்டுடுற பாத்தியா.அதான் கண்ணு இன்வால்வ்மேன்ட்டு.இங்க இருக்கவங்க நெறையா உன்கிட்ட கத்துக்கணும் கண்ணு.அய்ய என்னையயும் சேத்துத்தான் சொல்லிக்கினேன்.அக்காங்.
எங்க ஊர்ல ஒரு தபா காங்கிரஸ் கொடிஏத்த சிவாஜி வந்தாரு.ஒரே கூட்டம்.நானும் என்னோட பிரண்டும் பாக்க போயி இருந்தோம்.சிவாஜி சொம்மா லட்டுகணக்கா ஷோக்கா சந்தனக்க்கலரு ஜிப்பா போட்டுகினு சம்முன்னு இருந்தாரு என் பிரண்டு செம வெறிப்பய.சிவாஜின்னா உசுர விட்ருவான்.சிவாஜி கொடிய ஏத்திபுட்டு அல்லாரையும் பாத்து கைஆட்டினாரு.அப்புறம் அவுரு கையிலே ஆப்பிள் குடுத்தாங்க.அவுரு ஒவ்வொன்னா ஜனங்களப் பாத்து தூக்கிப் போட்டாரு.அத்தப் புடிக்க நீனான்னு போட்டி.என் பிரண்டு கொரங்கு மாறிதாவி எப்பிடியோ ஒரு ஆப்பிள லபக்குன்னு புடிச்சிட்டன்.அவன் மூஞ்சியில அப்பிடிஒரு சந்தோசம்.கொஞ்சநாலு அந்த ஆப்பிள பாத்துபாத்து வச்சிருந்தான்.அந்த ஆப்பிள்அப்புறம் கெட்டுபோச்சு.அன்னைக்கு முச்சூடும் கொழந்தமாறி அழுதான் பாருக.எனக்கே ரொம்ப கஸ்டமாபோச்சு.தேத்தறதுக்குள்ள போறும் போறும்நு ஆயிடுச்சுபா.
Kiruba sir -
கிருபா சார் - உங்கள் அவதாரம் " எல்லாமும் நானாக இருப்பது" - டக்கர் - என்னத்த எழுதுவதென்றே புரியலே சார் - குந்திக்கொண்டு எழுதினாலும் , நடந்துகொண்டே எழுதினாலும் , மெய்யாலுமே உங்களை மிஞ்ச முடியாது - இங்கே மற்றவர்கள் பாராட்டுகளுக்காக பதிவுகளை போடுவதை விட , நம் மன நிம்மதிக்காக போடுவதே நல்லது - நடு நடுவே சிலர் பாராட்டினால் சரி , இல்லையென்றாலும் , நம் பனி தொடரட்டும் - உங்கள் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் - போட்டுகிட்டே போ கண்ணா - பேஜாரு பண்ணாமல் - .அக்காங்.
Ravi
:smile2::smokesmile:
எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது
யாரும் இதுவரை திட்டாததால் , என் பதிவு ஓர் அளவுக்கு சுமாராக உள்ளது என்ற அற்ப சந்தோஷத்தில் பதிவை தொடர்கிறேன் - இதன் நடுவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் , பகவத் கீதையின் குரல் ... இதன் நடுவே யும் அந்தோணி அடிக்கும் மாதா கோயிலின் மணியும் சத்தமாக கேகட்டுமே !!
Nadippu :
நடிப்பை முன்று விதமாக பிரிக்கலாம் - 1. இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று ஒரு வகை , 2. இப்படியும் நடிக்கலாம் என்று ஒரு வகை 3. எப்படியும் நடிக்கலாம் என்று ஒரு வகை. இரண்டாவது , முன்றாவது பிரிவை சார்தவர்களை உலகம் என்றோ மறந்து விட்டது , மறந்தும் விடுகின்றது . இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நடத்தி காண்பித ஒருவனை உலகம் இன்றும் , என்றும் பாராட்டுமே அதுதான் இந்த படத்தில் நாம் பார்ப்பது - பல நூறு ஆண்டுகள் ஆனாலும் , இந்த படம் பேசப்படும் , வாசு , முரளி சாரை போன்றவர்கள் வருவர் - அவர் மேன்மையை மேலும் நிலை நாட்டுவர் .
காதலனாக ஒரு கலக்கு கலுக்குவார் - இன்னும் காதலிக்க மாட்டாரா என்று இருக்கும் - அப்பா பொறுப்பு ஏற்றபின் , ஒரு கடமை உணர்ச்சி தென்படும் - மகளின் மீது வைத்த பாசம் , படம் பார்க்கும் எல்லோரையும் கட்டி போட்டுவிடும் - தாத்தாவாக நடிக்கும்போது - ஒரு மனிதனின் பலவீனம் , கோபம் , இயலாமை வெளிப்படும் - ஒரே படம் , ஒரே மனிதன் , பல பல கூடுகளில் --- முள்ளை முள்ளால் எடுக்கும் பாண்பு - நண்பனை விரோதியாக எடுத்துகொள்ளவேண்டிய நிர்பந்தம் --- இறைவனையே திட்ட வேண்டிய நிலை - "கேட்கிறேன் பலமுறை தரவில்லை " ---- சான்ஸ் ஏ இல்லை
தொடரும்
எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது
ஒரு மதத்தை சான்றிய கதை : இருந்தாலும் , யார் மனதையும் நோக வைக்காமல் வெற்றி கண்ட கதை - முருகனும் உண்டு , ஏசுவும் உண்டு , மாரியும் உண்டு , மேரியும் உண்டு - எல்லா நாடகங்களும் படம் ஆனபின் வெற்றி கண்டதில்லை - ஆனால் இந்த படம் கண்ட வெற்றி இனிமேலும் ஒரு படம் பெருமா என்றால் கண்டிப்பாக முடியாது என்று தான் சொல்லவேண்டும்
There is a saying : " One good thing about STONES ! : They come in our way as hurdles ; once we pass them , they automatically become our MILESTONES !!
பல படங்கள் போட்டி இட்ட நேரம் - எல்லா கற்களையும் கடந்து வெற்றி கண்ட படம்
Padalgal :
எல்லா பாடல்களும் தேனிலும் இனியவை - தமிழை போல தித்திப்பவை - நான் மிகவும் விரும்பி கேட்பவைகள் : " அம்மா கண்ணு " ; "தேவனே"
Selection of Co Stars - brilliant -
மாதவன் சாரை எவளவு புகழ்தாலும் தகும் - எலந்த பலம் , எலந்த பலம் - ஆங் --- , சந்திபோமா , சந்திபோமா என்று பாடிய நடிகையை -" அம்மா கண்ணு" வில் பட வைத்து நடிக்கவும் வைத்து , இந்த ஜோடி என்னும் பல படத்தில் நடிக்க மாட்டார்களா என்று ஏங்க வைத்து விட்டார் எல்லாம் இன்ப மயம் என்று சொல்ல வைத்த படம் - சொல்லிகொண்டே போகலாம் -
ஆனால் வாசு சார் வரும் நேரம் ஆகி விட்டதால் , நான் சற்றே ஒதுங்கி கொள்கிறேன் - பதிவை படித்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி - நன்றாக அலசின ஒரு படத்தை மீண்டும் அலசுவது என்பது சுலபமான காரியம் அல்ல - ஒரு சிறு முயற்சி - இந்த பதிவு மூலம் பிரிந்தவர்கள் எல்லோரும் மீண்டும் வருகை தந்து இந்த திரியை ஒரு MILESTONE ஆக்குவார்கள் என்ற திடமான நம்பிக்கை
முற்றும்
அன்புடன் என்றும் உங்கள்
:):smokesmile:
ரவி
நினைவுகள் அழிவதில்லை Article in Tamil - Hindu
http://tamil.thehindu.com/opinion/co...cle5360574.ece
//எல்லா பாடல்களும் தேனிலும் இனியவை - தமிழை போல தித்திப்பவை - நான் மிகவும் விரும்பி கேட்பவைகள் : " அம்மா கண்ணு " ; "தேவனே" // இன்னும் ஒரே ஒரு பாட்டு தானே இருக்கு ரவி..அதை விட்டுப்புட்டீரே..ம்ம் நீர் யூத் இல்லை போல..(சாரதா பாட்டு)
*
ஞான ஒளி- நாடகமாக வந்து திரையில் மலர்ந்த படங்களில் ஒன்று..அதன் நாடகக் கதை வசனம் கல்கியில் வந்து யாரிடமிருந்தோ பைண்ட் பண்ணப்பட்ட புத்தகமாகப் படித்திருக்கிறேன்.. நாடகத்தில் அந்தோணியாக மேஜர் சுந்தர்ராஜன்..! ப்ளாக் அண்ட் ஒய்ட் புகைப்படங்களில் பார்த்தால் அசப்பில் ந.தி போலவே இருக்கும்..
*
ஸ்வாட் அனலிஸிஸ்னுல்லாம் எழுதிட்டு டபக்குன்னு ஞான ஒளிக்குப் போய்விட்டீர்..எழுதுங்க எழுதுங்க..:)
சந்திப்போமா பாடினது விஜய நிர்மலா இல்லை..எல்.விஜயலட்சுமி என நினைவு..:) நடத்துங்க..
*
பாவம் வாசு சாருக்கு என்ன ப்ரச்னையோ..
கலக்கும் புயலால் கலங்கிய மேகம்
வழக்கமாய் வானில் கலங்கி- பலமுடன்
பெய்தே நனைப்பதுபோல் போடுவார் வாசுவும்
நெய்த பதிவினைத் தான்
[QUOTE=chinnakkannan;1091358]//எல்லா பாடல்களும் தேனிலும் இனியவை - தமிழை போல தித்திப்பவை - நான் மிகவும் விரும்பி கேட்பவைகள் : " அம்மா கண்ணு " ; "தேவனே" // இன்னும் ஒரே ஒரு பாட்டு தானே இருக்கு ரவி..அதை விட்டுப்புட்டீரே..ம்ம் நீர் யூத் இல்லை போல..(சாரதா பாட்டு)
*
- Saar
*
ஸ்வாட் அனலிஸிஸ்னுல்லாம் எழுதிட்டு டபக்குன்னு ஞான ஒளிக்குப் போய்விட்டீர்..எழுதுங்க எழுதுங்க..:)
சந்திப்போமா பாடினது விஜய நிர்மலா இல்லை..எல்.விஜயலட்சுமி என நினைவு..:) நடத்துங்க..
*
====
சார்
- அம்மா கண்ணுவிடம் இல்லாத காதல் ரசமா அந்த நீங்கள் சொன்ன இன்னமொரு பாட்டில் இருக்கும் ?? இதை வைத்து நீங்கள் இப்படி முடிவு எடுக்கலாம் நான் யூத் இல்லை என்று ? - உங்கள் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள்
SWOT க்கு response இல்லாததினால் தான் இந்த திரியில் ஞான ஒளி வரவேண்டும் என்று இப்படத்தை தேர்தெடுத்தேன் - எப்பதான் சார் நானும் உங்களை போல , கிருபா சாரை போல நன்றாக எழுதுவது ? அந்த வாயிப்பை நானேதான் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் ..
சந்திப்போமா பாடினது -எல் ஆர் ஈஸ்வரி - நடித்து விஜய்நிர்மலாவேதான் - 100 % Sure
Ravi
:smile2::smokesmile:
//அம்மா கண்ணுவிடம் இல்லாத காதல் ரசமா அந்த நீங்கள் சொன்ன இன்னமொரு பாட்டில் இருக்கும் ?? இதை வைத்து நீங்கள் இப்படி முடிவு எடுக்கலாம் நான் யூத் இல்லை என்று ? - உங்கள் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள் // நான் எங்கே காதல் ரசத்தைப் பத்திச் சொன்னேன்.. பாட்டு விட்டுட்டீங்கன்னு தானே சொன்னேன் :) சரி சரி நீர் யூத் தான்
ஸாரி ஓய்.. விஜய நிர்மலாவை எல்.வின்னு சொல்லிட்டேன்..தப்பு தேன்.. :)
//நானும் உங்களை போல , கிருபா சாரை போல // ஒங்களுக்குக் குறும்பு ஜாஸ்தி :) நான் சாதாரணக் குட்டியானை.. :)
ரவி சார்
தங்களுடைய பதிவு மிகவும் அருமை !
இந்த காட்சியை எழுதினீர்கள ? "இன்ஸ்பெக்டர் ! மத்தவங்க செஞ்ச அதுக்கு பேர் திருட்டு ! அதையே ஒரு போலீஸ் செஞ்ச ?
இன்ஸ்பெக்டர் : வாட் டூ யு மீன் ?
அந்தோனி : ஐ மீன் த சில்வர் டம்ளர் !
இன்ஸ்பெக்டர் : ஹ..ஹ.ஹ..
அந்தோனி : ஹ......ஹ......ஹ.....(கை உறையை கழட்டியபடி)
இன்ஸ்பெக்டர் : ஹ..ஹ..ஹ..ஹ...
அந்தோனி : ஹ....ஹ.....ஹ....ஹ...!
வாசுதேவனே !
எம்மை பாருங்கள் ....எம் பாவங்கள் தம்மை தாங்கிகொள்ளுங்கள் ! ஆயிரம் லொள்ளு தொல்லைகள் நாங்கள் செய்கின்றோம் ...!
நீங்கள் அறிவீர் ! மனித்தருள்வீர் !
ஓஹ் வாசு சார் !
பாலுடன் நீர் !
நமது மையத்திரியிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன ! இரெண்டும் பதிவிட்டபோது...நமக்கு தீனியிலயே !
தந்தையின் திரியிலே மழலைகள் ஊமையோ ! திரியின் அழகிலே கருமையே படர்ந்ததோ....! நோய் மனதில எழுத்தில தேவனே ! நாம் அழுவாத சிரிப்பத தேவரே ! ஒ...ஒ...ஒ...!
மையம் நண்பர்கள் இங்கே சொல்லவே .....எந்த மேகமும் விலகி செல்லுமே ...
காலமே பதில் சொல்லுமே ...இந்த வாசுவும் மௌனம் காப்பதென்பதேன் ?
https://www.youtube.com/watch?v=2VyResf6y0o
தேடினேன்...தேவ ...தேவ.....! தாமரை பாதமே ...!
https://www.youtube.com/watch?v=8bS54svzkzs
கோபாலனை எப்படி அழைக்கவேண்டுமோ அப்படி அழைத்தால்தான் வருவான் ! இதிகாசத்திலும் சரி புவிகாசத்திலும் சரி !
https://www.youtube.com/watch?v=W0jMfUCgWY4
Belated birthday wishes to Ganpat !!!
பார்த்ததில் பிடித்தது
அத்தியாயம் -3
கடந்த பதிவில் பிரம்மாண்ட படத்தை பற்றி அசை போட்டதால் இந்த தடவை கொஞ்சம் கதை அம்சம் அதிகம் உள்ள படம் எடுத்து கொண்டு உள்ளேன் , அதுவும் இது வரை அதிகம் விவாதத்துக்கு எடுத்து கொல்லாத படம் பற்றி எண்ணிய பொழுது கிடைத்தது தான் இந்த
குரு தட்சணை
சென்ற பதிவில் குறிப்பிட்டதை போலே 1969 ல் நடிகர் திலகம் வித விதமான கதாபாத்திரத்தில் நடித்து கல்கி கொண்டு இருந்தார்
தங்கசுரங்கம் என்ற அதிரடி படத்தை அடுத்து காவல் தெய்வம் படத்தில் குருவ வேடத்தில் நடித்தார் , அதை தொடர்ந்து வந்தது தான் இந்த குரு தட்சணை
தங்கசுரங்கம் படத்தை பற்றி எழுதும் பொது நடு நடுவே படத்தில் சிவாஜி அணிந்த உடையை பற்றி குறிப்பிட்டேன் , இதில் அந்த தேவை இல்லை , வெறும் வேஷ்டி , பனியன் தான் அவர் உடை
ஒரு படத்தில் வித விதமான உடையில் வந்து சண்டை , காதல் , ஸ்டைல் என்று நடித்து விட்டு அதின் சாயல் துளி கூட இல்லாமல் அடுத்த படத்தில் நடிக்க நம்மவர்க்கு கை வந்த கலை
தில்லானா மோகனாம்பாள் என்ற மாபெரும் காவியத்துக்கு பிறகு அதே டீம் உடன் நடிகர் திலகம் பணியாற்றிய படம்
இதில் ஜெயலலலிதா, மேஜர் புது வரவு (தில்லானா மோகனாம்பாள் கூட்டணியில் )
இந்த படத்தின் பெயர் போடும் பொது நடிகர்களின் பெயர் போடாமல் அவர்களின் புகை படத்தை காட்டுவார்கள் . இதுவே புதுசு . படத்தின் கதையை எழுதியவர் திரு பழனியப்பன் , இசை புகழ்மணி , இசை மேற்பார்வை : KV மகாதேவன்
இயக்கம் : APN
Video courtesy: I have uploaded the videos for first time
கதை, மிகவும் இயல்பான துளி கூட சினிமா என்ற வணிகத்துக்காக சமரசம் செய்து கொல்லாத கதை , தங்கசுரங்கம் (நடிகர் திலகத்தின் முந்திய படம் , காவல் தெய்வம் guest appearance என்றதினால் விட்டு விட்டேன்) தில்லானா மோகனாம்பாள் என்ற மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கூட்டணியில் இருந்து வந்த படமா இது என்று என்னை ஆச்சர்யப்பட வைத்தது
சிவாஜி ஓவர் அக்டிங் செய்வார் என்று சொல்லும் நபர்கள் , இந்த படத்தை பார்த்து விட்டு தங்கள் கருத்தை சொல்லலாம்
சரி நாம் படத்துக்கு வருவோம்
படத்தின் opening ஷட்டில் ஒரே கூடம் , அங்கே ஒருவர் bioscope காட்டி கொண்டு இருக்கிறார் (தங்கவேலு ) முஸ்லிம் அன்பராக என்னமா பிச்சு உதறிருகார் மனிதர் அந்த bioscope பாடல் இன்றும் பிரபலம்
அங்கே bioscope பார்த்து விட்டு ஜோசியம் பார்க்கும் ஜெயலலிதாவை வம்புக்கு இழுக்கும் குண்டு மணியை அடிக்கும் காட்சியில் அறிமுகம் நாம் நாயகர் நடிகர் திலகம்
முதலில் அவனிடம் உதை வங்கி மீண்டும் எழுந்து அடிக்கும் நடிகர் திலகம் அவன் கையை முறுக்கி முறுக்கி அடிக்கிறார் , என்ன த இது சும்மா எமதுற சண்டை என்று என்னும் பொது , நல்ல எடை உள்ள குண்டு மணியை தூக்கி போடுகிறார் தொடர்ந்து அவர் நடிகர்திலகத்தின் கையை திருப்பி முறுகுகிறார் , அங்கே இருக்கும் மாட்டுவண்டியில் கால் பதித்து குண்டு மணி பின்னாடி வந்து உதைப்பார் பாருங்கள் , அதிர்ச்சியடைந்து விட்டேன் . அதே சமயம் இந்த சண்டை , அதுவும் நடிகர் திலகத்துக்கு சண்டை போட வராது என்று எப்படி பேச்சு வந்தது என்பது இன்று வரை புரியாத புதிர்
http://www.youtube.com/watch?v=XxkngwNWHDs
கண்ணனின் நண்பர்கள் என்று பார்த்தல் குறி சொல்லும் பெண் (மனோரமா), டீ கடை நாயர் , சைக்கிள் கடை ஜேம்ஸ் மற்றும் ஒரு அய்யர் குடும்பம் (பாலையா அவர் மனைவி), இவர்கள் தான் கண்ணனின் மேல் அன்பும் , மரியாதையும் வைத்து இருபவர்கள் . அந்த கிராமமே அவனை முரடன் என்று ஒதுக்குகிறது .
தன்னை ரவுடியிடம் இருந்து காப்பாற்றிய கண்ணனை காதலிக்கிறார் கன்னி ,
கண்ணன் வீட்டுக்கு அடிகடி போகும் கன்னியை கண்டிக்கிறார் அவர் தந்தை , கன்னி தன மானத்தை காப்பாற்றிய கண்ணனின் வீட்டுக்கு செல்வது தப்பு இல்லை என்று வாதாடுகிறார் , தன் அப்பாவிடம் நான் வெளி போறேன் நீ தான் கஷ்ட படுவ என்று சொல்லிவிட்டு கண்ணனின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் . கண்ணன் முதலில் கன்னியை அனுமதிக்க மறுக்கிறார் , பிறகு இறக்கம் கொண்டு கன்னியை அனுமதிக்கிறார்
அந்த காட்சியில் சிவாஜியின் முகத்தில் கோபம் ,ஆத்திரம் , கருணை , இயலாமை , அப்பாவித்தனம் என்று சகலமும் பிரதிபலிக்க காட்சி முடிகிறது
அந்த காட்சி இதோ
http://www.youtube.com/watch?v=GPMMynkzcyI
அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளிகூடத்துக்கு ஒரே ஒரு டீச்சர் மல்லிகா (ரமாப்ரபா) கொஞ்சம் பொறமை, அகம்பாவம் பிடித்த பெண் ,
இப்படி பட்ட பள்ளிக்கு வருகிறார் முதல்வர் தேவகி (பத்மினி ) மற்றும் அவர் தந்தை மேஜர் (கண் தெரியாதவர் )
பத்மினி தான் பள்ளியின் முதல்வர் என்று அறிந்து கொண்டு சிவாஜி அவரிடத்தில் காடும் மரியாதையை என்ன என்று சொல்லுவது
தன் நண்பர்களின் பாதுகாப்பில் அவர்களை விட்டு விட்டு வண்டி கொண்டு வருவது , வீட்டை சுத்த படுத்துவது , அளவுகடந்த மரியாதை செலுத்துவது என்று அசல் கிராமதன்னகவே காட்சியளிக்கிறார்
http://www.youtube.com/watch?v=lHH2eGWF458
தேவகியின் அணுகுமுறையால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது , அதனால் அவரை விரோதியாக பாவிக்கிறார் மல்லிகா
ஒரு நாள் தன் வகுப்பு அறைக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாக எண்ணுகிறார் மல்லிகா
கண்ணன் தான் ராத்திரியில் பாடம் படிக்கச் வந்ததை கண்டுபிடிக்கும் தேவகி அவருக்கு ஆசாரியராக இருந்தது பாடம் சொல்லி தருகிறார்
அந்த காட்சியில் நடிகர் திலகம் முதல் முதலில் பள்ளிகூடத்துக்கு பாடம் படிக்க செல்லும் மாணவனை போலே செல்லுவதும் ,
பத்மினி யிடம் கையை கட்டி பாடம் படிப்பதும் , அ முதல் அக்கு வரை சொல்லுவதும் என்று கலக்கி இருப்பார்
எந்த நடிகர் ஒரு கதாநாயகி காலில் விழுவார் எங்கள் நடிகர் திலகத்தை தவிர , இமேஜ் என்ற வட்டத்தில் சிக்காமல் கதை நாயகனாகவே வாழ்ந்து இருக்கார் , இந்த காட்சியை பார்த்த பொழுது , இப்படி ஒரு நடிகரா என்று ஆச்சர்யம் அடைந்தேன்
http://www.youtube.com/watch?v=I7PXprEyCKw
அடுத்த காட்சியில் பாலாஜி தன் குரு மேஜர் யை சந்திக்க வருகிறார் வந்த இடத்தில தன் கல்யாண செய்தியை சொல்லுகிறார்
அப்போது தான் தெரியவருகிறது பத்மினியும் பாலாஜியும் காதலர்கள் என்று , மஜோர்யின் கண்கள் போனதால் கல்யாணம் தள்ளி போய் விட்டது
அந்த கல்யாண செய்தியை மேஜர் சிவாஜியிடம் ஒரு கதை போல் சொல்லுவதும் சிவாஜி அதை ஒரு குழந்தை போலே தலையை ஆட்டி கேட்பதும் என்று நல்ல உயிரோட்டமான காட்சி
அதை தொடர்ந்து வரும் பாடலில் தான் எப்படி தன் குருவுக்கு கல்யாணம் செய்து வைக்க போகிறேன் என்று அழகாக , நாகரிகமாக விவரிக்கிறார் நடிகர் திலகம்
http://www.youtube.com/watch?v=vLXz0ocDAVw
இந்நிலையில் கல்வி உயரதிகாரிக்கு தேவகியை பற்றி தவறாக கடிதம் வந்து விடுகிறது , விஷயம் தேவகியின் நடத்தை பற்றி எழுதியதோ மல்லிகாவும் அவர் கணவர் (M N நம்பியார்)
கல்வி உயரதிகாரியோ தேவகியின் வருங்கால மாமனார் இதனால் தேவகியின் திருமணத்துக்கு சிக்கல் வருகிறது . தேவகி கண்ணன் தன் வீட்டுக்கு படிக்க மட்டுமே வருவதாக உண்மையை எவ்வளவு எடுத்து சொல்லியும் ஊர் நம்ப மறுகிறது
தேவகியின் ஆணைக்கு இணங்க கண்ணன் கன்னியை திருமணம் செய்து வைக்கிறார் . கண்ணனை தேவகி திருமணத்துக்கு வர்புறதும் காட்சி தான் குரு தட்சணை படத்தின் pre கிளைமாக்ஸ் .
http://www.youtube.com/watch?v=QttcBN87SwI
ஒரு படிக்காத பாமரன் , மற்றும் அவரை காதலிக்கும் பெண் தங்கள் நடத்தையை அதுவும் தான் குருவாக மதிக்கும் ஒரு நபர் உடன் தன்னை இணைத்து பேசிய நபர்களை பழி வாங்க நினைப்பார் , அதில் சிவாஜியின் நடிப்பில் அனல், அதே மாதிரி ஜெயலலிதாவும் அதை ஆதரிப்பது விந்தை ஒரு மாறுபட்ட characterisation ,
(இது மட்டுமா ஜெயலலிதா படம் முழுவதும் sleeveless blouse அணிந்து , கையில் tatoo குத்தி கொண்டு தோற்றத்தில் கிராமத்து பெண்ணாக தோன்றுகிறார்
பொதுவாக ஒரு பெண்ணை தகப்பன் வெளியே போக சொன்னால் அந்த பெண் மன்னிப்பு கோரி வீட்டில் இருப்பார் , இதில் தன் தந்தையை எடுத்து எரிந்து பேசி தன் முடிவில் உறுதியாக இருக்கிறார்
கதையே சிவாஜிக்கும் ,பத்மினிக்கும் இடையில் இருக்கும் ஆன் பெண் பேதம் இல்லாத குரு சிஷ்யன் உறவு தான் இதில் கண்ணனின் வாழ்க்கையில் (சிவாஜி) காதல் என்பது துளி கூட கிடையாது , இந்த மாதிரி ஒரு கதையில் ஜெயலலிதா தன் பாத்திரத்துக்கு உட்பட்டு நன்றாக நடித்து இருக்கிறார் )
முதலில் தேவகியின் வீட்டுக்கு செல்லும் கண்ணனும் கண்ணியம் கோபத்தில் அனைவரையும் பழி வாங்க போவதாக சொல்லுகிறார்கள் , தேவகி மற்றும் அவர் தந்தையின் பேச்சை கேட்டு கன்னியை திருமணம் செய்து கொளுகிறார் கண்ணன்
இந்த கண்ணனுக்கு காதல் இரண்டாம் பட்சம் தான் குரு பக்தி தான் முதலில்
தனக்கு ஒரு வாழ்கையை ஏற்படுத்தி கொடுத்த குருவுக்கு , தன்னை எழுத படிக்க வைத்த குருவின் வாழ்கையை சீர் படுத்த எண்ணி முதல் முறையாக ஒரு கடிதம் எழுதுகிறார் கண்ணன் , யாருக்கு மாப்பிளையின் தந்தைக்கு
அதில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் , தன் மரண வாக்குமூலமாக தேவகின் நல்ல உள்ளதை பற்றி எழுதி , அதில் தான் தேவகியின் மேல் வைத்து இருக்கும் குரு பக்தியை வெளி படுத்தி , தேவகியை தன் மகனுக்கு (பாலாஜி) திருமணம் செய்து வைக்க கோருகிறார்
சாக போகும் கண்ணனை காப்பற்றி தன்னுடன் அழைத்து வருகிறார் பாலாஜி
முடிவில் பத்மினி பாலாஜியின் கல்யாணத்துடன்
சுபம்
http://www.youtube.com/watch?v=U79tJRr_xkg
இந்த படத்தில் நடித்த , என்னக்கு பிடித்த மற்றும் ஒரு கதாப்பாத்திரம் பாலாஜி
அந்த காலத்தில் என் இந்தகாலத்திலும் தன் கல்யாணம் செய்து கொள்ளபோகும் பெண் ஒரு ஆன் உடன் சககமாக பேசி கொண்டு இருப்பதை யாரும் சாதரணமாக எடுத்து கொள்ள மாட்டார்கள் , பாலாஜி தான் கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்ணின் மேல் இப்படி பட்ட character assassination செய்ய பட்டும் கூட துளி கூட அன்பு மாறாமல் இருபது , சந்தேக படாமல் இருபது
hats off டு story writer and டைரக்டர்
பாலயாவை இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் உபயோக படுத்தி கொண்டு இருக்கலாம்
பத்மினி : சிவாஜியின் ultimate pair என்று சொல்லபடும் நடிகைகளில் ஒருவர் ,
இந்த படத்தில் சிவாஜியுடன் ஜோடி கிடையாது என்றாலும் சிவாஜி - பத்மினி combination காட்சிகள் ஏராளம் .ஒரு டீச்சர் எப்படி கணியதுடன் இருக்க வேண்டும் , எப்படி கண்ணை உறுத்தாமல் உடை அணிய வேண்டும் , எப்படி பேச வேண்டும் , மனிதர்களை அணுகும் முறை
இந்த ஏக பட்ட எப்படிகள் க்கு இப்படி தான் என்று தன் பாத்திரத்தின் முலம் விடை அளிக்கிறார் பத்மினி
மொத்தத்தில் நடிகர் திலகத்தின் under rated படத்தில் இதுவும் ஒரு படம்
Wish you many more Happy returns of the day Neyveli Vasudevan Sir
Seeking your guidance & blessings
Awaiting your 4000th post and many more
முரளி சாரின் தமிழை படிக்க
மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் - கோபால் சாரின் கலாய்ப்பு இல்லாத பதிவை படிக்கலாம் - ராகவேந்திர சாரின் ஆவணகள் போடும் வேகத்தை
பார்க்கலாம் - கார்த்திக் சாரின் சபாஷ்யை வாங்கிகொள்ளலாம் - சின்ன கண்ணன் சாரின் அர்த்தம் புதைந்த குரும்பை ரசிக்கலாம் - கிருபா சாரிடம்
இருந்து அன்புடன் சில திட்டுக்களை வாங்கலாம்
Ravi sir,
Hope your dreams come true soon
Many Many Happy Returns of the Day Vasu.
ராகுல் ராம்..வெகு சின்ன வயதில் பார்த்த படம் குரு தட்சணை..மதுரை தேவி தியேட்டரில்.. அதன் பிறகு பார்த்ததில்லை.. ஒன்றே ஒன்று உலகம் ஒன்று பாடலும் பசுபதி எஸ்டீச்சர் என பையன் பதிலிறுப்பதாக வருவதும் மட்டும் நினைவில்..
*
அழகாக எழுதியிருக்கிறீர்கள்..ம்ம் படக் காட்சிகளை சற்று நேரம் கழித்துப் பார்ப்பேன்..
*
தொடர்ந்து எழுதுங்கள்...
//சின்ன கண்ணன் சாரின் அர்த்தம் புதைந்த குரும்பை ரசிக்கலாம் // நன்றி ராகுல்ராம் :) அப்புறம் அது குறும்பு :) (குரும்பு என்பது ஒரு பயிர் வகை என நினைக்கிறேன்)
எல்லாரும் நல்லா எழுதிக் கலக்கறச்சே நான் எந்தப் படத்தை எழுதறது?!
நெய்வேலி வாசுதேவனார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..:)
வாசு சார் - வினோத் சாரின் அழகிய வாழ்த்து பதிவு மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்த தூண்டுகிறது - ஆனால் வாழ்த்த வயது இல்லை அதனால் வணங்குகிறேன் ----
Ravi
:):smokesmile:
[QUOTE=chinnakkannan;1091462]//சின்ன கண்ணன் சாரின் அர்த்தம் புதைந்த குரும்பை ரசிக்கலாம் // நன்றி ராகுல்ராம் :) அப்புறம் அது குறும்பு :) (குரும்பு என்பது ஒரு பயிர் வகை என நினைக்கிறேன்)
சின்ன கண்ணன் சார் - திருத்திகொள்ள வேண்டிய தவறுதான் - ஆனால் தமிழில் எழுதுவது என்பது மிகவும் கடினமான ஒன்று - அதிலும் உங்களை போல் அழகாக எழுதவது மிகவும் கடினம் - அர்த்தம் கிடைத்தால் அதனுடன் விட்டுவிடுவோமே சார் - ஏன் அதை திருத்தி ஒரு பதிவு இடவேண்டும் - பயிற்சியில் சரியாகிவிடும் காலபோக்கில் -- அன்புடன் ரவி :):smokesmile:
டியர் ராகுல்ராம் - நீங்கள் பிறக்கும் முன் வந்த படம் இது - பத்மினியின் காலில் நம் தலைவர் விழுவதை அந்த சமயத்தில் இருந்த ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை , படத்தையும் சேர்த்துதான் .. படம் சுமாரான வெற்றியை அடைந்தாலும் , நல்ல படிப்பினையை சொன்ன படம் - ஒரு மாணவன் தன குருவிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இன்றும் எடுத்துரைக்கும் படம் . உங்கள் எழுத்தினால் இந்த படம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது - நல் வாழ்த்துக்கள்
Ravi
:):smokesmile:
ரவி
ஞான ஒளி திரைப்படத்தின் தங்கள் பார்வை.. வித்தியாசமான தங்களுக்கென உள்ள தனி பாணியில் மிகவும் புதுமையாக உள்ளது. பாராட்டுக்கள். பாத்திரப் படைப்பு, கதையமைப்பு, இசையமைப்பு, கலைஞர் தேர்வு என எதையும் விட்டு வைக்காமல் அலசியுள்ளீர்கள். தொடருங்கள். இது போல் மேலும் பல படங்களில் தங்களுடைய பார்வை பரவட்டும்.
கிருபா
தங்களுடைய நடை மிகவும் சிரமமாக அவ்வளவு எளிதில் யாராலும் கடைப்பிடிக்க முடியாத நடை. சற்றே பிசகினாலும் தூய தமிழ் வந்து விடும். அந்த அளவிற்கு பேச்சு வழக்கினை மிக அழகாக எழுத்து வடிவில் கொண்டு வந்து தங்களுடைய உள்ளத்தை பளிச்சென சொல்லி வருகிறீர்கள்.
தங்களுடைய எழுத்திற்கென தனி ரசிகர் உலகமே உருவாகிக் கொண்டிருக்கிறது, அதில் அடியேனும் அடக்கம்.
பாராட்டுக்கள்.
தொடருங்கள்.
ராகுல் ராம்,
தங்களுடைய பதிவுகளனைத்துமே வித்தியாசமான கோணங்களில் வருவது மட்டுமின்றி, இந்தத் தலைமுறையை நடிகர் திலகம் எந்த அளவிற்கு ஆட்கொண்டுள்ளார், அதை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், அவருடைய நடிப்பை அவர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
பாராட்டுக்கள்.
தொடருங்கள்.
உத்தம புத்திரன்
எடுத்த எடுப்பிலேயே திரியின் பயணத்தை அதி வேகமாக துவக்கி வைத்துள்ளீர்கள்.
நடிகர் திலகத்தின் பல படங்களைத் தங்கள் பார்வையில் அலசுங்கள்.
பாராட்டுக்கள்.
தொடருங்கள்.
Vasudevan sir !
I wish you many more happy returns of the day !
Idhai paarthaal pasi theerum ?
Attachment 2736
Oh...Saathi Rae.....There bhi naabi kya Jeenah....! There bhi naabi kya Jeenah...!
Selvamae...........Ore Mugam Paarkiraen eppodhum...! Ore Kural kaetkiraen eppodhum...!
http://www.youtube.com/watch?v=BYBP71Hpccg
Namakedhu Periyadhu..Nam kalachara perumai...Valiyuruththum paadal....CID RAJAN ...coming soon !
http://www.youtube.com/watch?v=tdzOv-qOQkI