http://i501.photobucket.com/albums/e...ps28e11d9e.jpg
Printable View
நடிகர் திலகம் அவர்களை மட்டுமே பெரியார் அவர்கள் ஒரு நல்ல கலைஞனாக ஒத்துக்கொண்டு பல சந்தர்பங்களில் பாராட்டியுள்ளார் !
தன்னுடைய கொள்கையிலிருந்து வேறுபட்டு எப்போது தங்களுடைய சொந்த நலனுக்காக தனியாக அண்ணா தலைமையில் திமுக உருவானதோ, அப்போதிலிருந்தே தந்தை பெரியார் அவர்கள் திமுகவின் தவறான போக்கை பலமுறை சாடியுள்ளார். உதாரணம் திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு ..!
நடிகர் திலகத்தின் நடிப்பு திறமை என்பது இந்த தந்தை பெரியாரையே அசைத்துபார்த்ததால் தானே இன்று முதல் நீ வெறும் கணேசன் அல்ல ...சிவாஜி கணேசன் என்று கூறி வாழ்த்தி அன்றுமுதல் கூத்தாடி என்று கூறுவதையே வெகுவாக தவிர்த்துவந்தார் ! உண்மையான புரட்சி என்பது இதுதான் !
பெரியார் நடிகர் திலகத்தை எவ்வாறு பாராட்டினார் என்று மையம் திரிக்கு வருகை தரும் மக்களுக்கும், நடிகர் திலகத்தை பற்றி பொறாமை கொண்ட கயவர்களால் தவறாக சித்தரிக்கப்பட்டு அதை உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் அனைத்து கால நண்பர்களும் இதை நிச்சயம் படித்து பார்த்தால் உண்மை விளங்கும்.
எது அசல் எது போலி என்று !
http://i501.photobucket.com/albums/e...psfdb01a0e.jpg
நடிகர் திலகத்தை "நடிப்பு களஞ்சியம்" என்று மனதார பாராட்டும் பெரியார் !
http://i501.photobucket.com/albums/e...psa68c5a29.jpg
முரளி சார்,
இப்போது நடந்து கொண்டிருக்கும் நீயா நானாவில் "தீவிர சிவாஜி ரசிகரா? நீயா நானாவில் கலந்து கொள்ள விருப்பமா? " என விளம்பரம் இட்டு ஒரு தொடர்பு எண் போட்டிருக்கிறார்கள் .. நம் நடிகர் திலகம் ரசிகர்களை வைத்து ஒரு நீயா நானா நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிகிறது .. நீங்கள் உட்பட தமிழகத்தில் இருக்கும் நம் உறுப்பினர்கள் நிச்சயம் இதில் கலந்து கொண்டு நம்மை பிரதிநிதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Attachment 3423
மண்ணுலகில் சிவன் வேடம் பூண்ட சிவாஜி அவர்களை பற்றி விண்ணுலகில் சிவகணங்கள் பேசிக்கொண்டபோது அதனை கேட்டபடி அங்கு வந்த விண்ணுலக சிவன், தனது சிவகனங்களையே இந்தளவிற்கு பேசவைத்த அந்த அரிய மனிதனை பார்க்க ஆவல் கொண்ட நாள் - 20 ஜூலை 2001.
http://i501.photobucket.com/albums/e...ps83147538.jpg
http://i501.photobucket.com/albums/e...ps2e79d1aa.jpg
ஆவல் அதிகரித்து உறக்கம் கொள்ளாது உடனயே அந்த அரிய பிறவியை எம்மிடம் கொண்டுவாருங்கள் என்று அவசர கட்டளை பிறப்பித்த நாள் 21 ஜூலை 2001.
சிவலோகதிலிருந்து சிவகணங்கள் காலை புறப்பட்டு மாலை அப்போலோ என்ற மருத்துவமனையில் உறக்கம் கொள்ள முயன்றுகொண்டிருந்த நமது கலை உலக அவதாரத்தை அவர் அறியாமல் அவர் ஆன்மாவை கவர்ந்து சென்று தங்களுடைய முதலாளியை சண்டோஷபடவைக்க ...இந்த பூவுலகயே துக்கப்பட வைத்தனர்..! என்ன ஒரு சுயநலம். !
கட்டளையிட்ட சிவனே ஒருகணம் இந்த அரிய பிறவியை பார்த்து அதிர்ந்து போய் பிறகு சுதாகரித்து என்ன காரியம் செய்தோம் நாம் ! இந்த தூய ஆன்மாவா நான் இப்போதே பார்க்கவேண்டும் என்ற சுயநலத்தால் பூவுலகை பூரா துயற்படவைத்தேன் என்று எண்ணியிருப்பர்போலும் !
நடித்தது போதும் தலைவா !
ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது !
இனியும் எழுந்து எங்களை சந்தோஷபடுத்த கூடாதா ?
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 8 : சாமான்ய மனிதர்களின் கனவுத்தொழிற்சாலை உருவகப்படுத்தும் கனவுக்காட்சிகள் !
கனவுகளில் விளையும் கருத்துக்கள் நனவில் விதைக்கப்பட்டால் அதுவே கவிதை இல்லையெனில் அது வெறும் கதையே! கனவுக்காட்சிகள் இல்லாத தமிழ்படம் சண்டையில் கிழியாத சட்டைக்குச் சமம். ஆசைக் கனவுகளுக்கு ஆகாசமே எல்லை! நடிகர்திலகத்தின் கனவுக்காட்சிகள் வித்தியாசமானவை! காசும் பணமும் செடியில் கொடியில் மரத்தில் காய்த்துக் குலுங்கினால்.......பொன்மகள் தன்வசப்பட்டால்.... இதுவரை தமிழ்த்திரை கண்டிராத அழகான அருமையான செழிப்பான கனவுப்பாடல்.... நடிகர்திலகத்தின் அசத்தலான ஆனால் மிக நேர்த்தியான உடை வடிவமைப்பும் பொன்மகளின் கலக்கலான நடனமும்.....காணக்கண் கோடிவேண்டுமே!
சொர்க்கத்திலோ மதனமாளிகையிலோ இருப்பதுபோல் உணர்ந்தால் மனிதனும் தெய்வமாகலாம் ! கனவுகளே...கனவுகளே!!
https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo
https://www.youtube.com/watch?v=kzNpKiXhM9A
https://www.youtube.com/watch?v=yFx5fn7wfik
https://www.youtube.com/watch?v=cXg0nhzg07k
தமிழ் திரை உலகு மட்டுமல்ல ....4 கண்டங்களிலும் திரை உலக நடிகர்களாலும் விற்பன்னர்களாலும் பாராட்டும் பட்டமும் பரிசும் பெற்ற உண்மையான நடிக சக்ரவர்த்தியே ! திரை உலகில் போட்டியில்லாத ஒரே உலக புகழ் கொண்ட நாயகன் நீயே !
மற்றவர்கள் தான் உன்னை போட்டியாக நினைத்து தம்மை போணியாக்க முயன்றாலும் அதிலும் அவர்களால் உன் நிழலை கூட நெருங்க முடியவில்லையே ?
இன்று வரை அந்த வயிதேரிச்ச்சலும் பொறாமையும் அவர்களின் ஒவொரு சிந்தையிலும், செயலிலும் உள்ளதை பார்க்கும்போது உன் புகழ் மட்டும் தான் கலையுலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும் !
அரசியலில் நீ போணியாகவில்லை என்று ஏளனம் பேசுவோர் திரையுலகில் உன் அளவிற்கு போணியாகாதவர்களே !
திரையில் மட்டுமே நடிக்க தெரிந்ததால் அரசியலில் நீ போணியாகவில்லை ! அரசியலில் யார் வேண்டுமானாலும்....இவ்வளவு ஏன் நேரமும் காலமும் கூடிவந்தால் நான் கூட போணியாகலாம் ! போணியாவேன் !
அரசியலுக்கு திறமை சிறிதளவும் தேவை இல்லை ! நடிகர் அல்லாத எத்துணையோ பெயர் போணியாகியுள்ளார்கள் அரசியலில் ! அவர்கள் மக்கள் மனதை படிக்கதெரிந்தவர்களா ? நிச்சயம் இல்லை !
திறமை இல்லாத பல நடிகர்கள் கூட அரசியலில் வெற்றிகண்டுள்ளார்கள் உதாரணம் : ராமராஜன், ராஜேந்தர், சரத்குமார், அருண்பாண்டியன் - வெற்றியடைந்த இவர்கள் மக்கள் மனம் படிக்க தெரிந்தவர்களா ? மக்களிடத்தில் உன் அளவிற்கு இவர்களுக்கு செல்வாக்கு உண்டா ? நிச்சயம் இல்லை !
மக்கள் உன்னை நிராகரித்தது உன் மீது உள்ள நல்ல எண்ணத்தினால் ! இந்த சாக்கடையில் சாக்கடையாக ஒரு கங்கை கலக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தினால் !
மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லையே ! மக்கள் அவர்களுக்கு கொடுத்த தண்டனை - பதவிகள் !
மக்கள் முடிவு அது ! உன்னைப்போல ஒரு நேர்மையாளன் அரசியலில் வரகூடாது என்று மக்கள் எடுத்த முடிவு அது !
ஒரு அண்ணனாக, ஒரு தந்தையாக, ஒரு தமயனாக, ஒரு சித்தப்பாவாக,, ஒரு பெரியப்பாவாக , ஒரு மைத்துனனாக, ஒரு கட்டபொம்மனாக, ஒரு செக்கிழுத்த செம்மலாக, ஒரு நல்ல கடமை வீரனாக, ஒரு மெய்காபாளனாக, ஒரு வக்கீலாக, ஒரு டாக்டராக, ஒரு விவசாயியாக, ஒரு சிவனாக, ஒரு சிவனடியாராக, இப்படி தம்மோடு, தம் குடும்பத்தில் ஒருவனாக உன்னை பார்த்து பழகியவர்களுக்கு தம் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அரசியலுக்கு வந்து அந்த சாக்கடையில் கலக்க விட எப்படி மனது வரும் ? அதனால் தான் உன்னை மட்டுமல்ல..உன் நிழலில் நின்றவர்களை கூட வெற்றிபெரசெய்யவில்லை இந்த தமிழக மக்கள் !
அவர்களுக்கு நாங்கள் அல்லவா நன்றி கூறவேண்டும் !
அதே சமயத்தில் திரை உலகை பொறுத்தவரையில் உன் படத்திற்கு மட்டும் அவர்கள் அவ்வளவு வரவேற்ப்பு கொடுக்க காரணம் ? எந்த ஒரு நடிகரை காட்டிலும் உன் படங்களை மட்டும் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த குடும்பமும் சாரை சாரையாக வந்து பார்க்க காரணம் ? அவர்களுக்கு தெரியும் உன் படங்களை பார்த்தால் பயன் உண்மையாக உண்டு என்று ! அதனால் தான் உனது காலத்தில் உனது படம் பார்க்க மட்டும் எல்லா குடும்பத்திலும் உள்ள குடும்ப தலைவன் அவர் பிள்ளைகளுக்கு சலுகை கொடுப்பதுண்டு ! இந்த பெருமை எந்த நடிகனுக்கு கிடைத்தது ? அல்லது இனி கிடைக்கும் ?
வருத்தமில்லை எங்களுக்கு நீ ஜெயிக்காததில் !
சந்தோஷம் தான் நீ தோற்றதில் !
காரணம், திரையில் ஒரு உருவம் ஒரு கொள்கை ...அரசியல்வாதியானால் ஒரு உருவம் பல கொள்கை என்று ஆகியிருப்பாய் !
ஆனால் திரையுலகம் - திறமை உள்ளவன் மட்டுமே உலகபுகழ் அடைவான் !
அகில உலகமும் திரை உலகம் அல்லாத விற்பன்னர்கள் இப்படி பல மாமனிதர்கள், அவதார புருஷர்கள் இப்படி எதுனயோபெயர் பாராட்டிய ஒரே நடிகன் நீ !
உன்னை பார்த்து பொறாமையால் வெதும்பியவர்கள் எத்துனைபேர் என்பதை உத்தமர்கள் அறிவார்கள் !
திரை உலகம் என்ற காட்டில் பல புலிகளும், பூனைகளும், நரிகளும் உலவிய காலகட்டதிலயே, முதல்படதிலயே அந்த காட்டுக்கே ராஜா என "சிம்மமாக" ராஜநடை போட்டவன் நீ !
வாழ்க உனது கலை தொண்டு !
SIVAJIGANESAN REMEMBRANCE DAY 21.07.2014
http://i1170.photobucket.com/albums/...psb9f454b4.png
THANKS FOR PARTICIPATING OUR GRIEVANCE !
https://www.youtube.com/watch?v=0UhUoTdvqO4
https://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk
NT = நேரம் தவறாமை, தொழில் பக்தி உழைப்பால் மட்டுமே உயர்வு, வெள்ளைமனம்.............தங்கள் நினைவுநாளில் உங்கள் பாதையில்..... நீங்கள் எங்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்தவர். கர்ணனின் தந்தையாம் சூரிய தேவனின் கிரணங்களில், எம் மூச்சுக்காற்று மண்டலத்தில், நீராதாரங்களில் இரண்டறக்கலந்து எம்மை வழிநடத்த வணங்குகிறோம்!
senthilvel
THALAIVAR WISHES TO SIVAJI GETTING PADMASHREE AWARD
http://i1170.photobucket.com/albums/...psb98f3eb2.jpg
ADVANCE WISHES TO RKS SIR TO REACH 1000 VALUABLE POSTS IN YOUR THREAD
http://i1170.photobucket.com/albums/...ps3ab330f2.jpg
சந்திப்பு - மூன்றாம் நாள்.
இன்றும் சென்ட்ரல் திரையரங்கம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. காலை மதியம் மாலைக் காட்சிகளுக்கு மக்கள் திரண்டு வந்து அமோக வரவேற்பளித்துள்ளனர். மாலைக் காட்சிக்கு பெரும் திரளான மக்கள் வந்திருக்கிறார்கள். முதல் இரண்டு தினங்களில் குறிப்பிட்டது போல் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தனர் என செய்தி. டவுன் ஹால் ரோடு இன்று மாலை ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்தை கண்டு வியந்திருக்கிறது. முதல் மூன்று நாட்களில் மொத்த வசூல் 2014-ல் சென்ட்ரலில் புதிய ரிகார்ட் ஏற்படுத்தியிருக்கிறது.
சந்தோஷ செய்திகள் தொடரும்.
அன்புடன்
நீ இருக்கும் போது உன்னை நேசித்தோம்
நீ மறைந்த பிறகு உன்னை சுவாசித்தோம்
நீ மீண்டும் எங்களிடையே வர வேண்டும் என
நித்தம் நித்தம் பிரார்த்தித்தோம்
உன்னை மட்டும் பார்த்த கண்கள்
உன்னை மட்டும் ரசித்த உள்ளம்
உனக்காக மட்டும் தட்டிய கைகள்
உனக்காக மட்டும் முழங்கிய கண்டம்
உன்னை காண தேடி ஓடிய கால்கள்
அல்லும் பகலும்
வாக்கிலும் நாக்கிலும்
நெஞ்சிலும் நினைவிலும்
எங்கும் நீ எதிலும் நீ
எல்லாம் நீ எல்லாவற்றிலும் நீ
இப்படியே எப்போதும் இருந்திட
இறைவனிடம் யாசிக்கிறோம்
நாங்கள் மட்டுமல்ல
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எத்தனை நூற்றாண்டுகள் முடிந்தாலும்
பூமிப் பந்து சுழலும் வரை
உன் புகழ் வாழும்!வளரும்! வெல்லும்!
அன்புடன்
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 9 :
இசைக்கலைஞர்களின் உடல்மொழி முகபாவங்கள் மற்றும் இசைக்கருவியை வாசிக்கும் நடிப்புப்பாவனை நேர்த்தி; அதில் நடிகர்திலகத்தின் கீர்த்தி!
வசன உச்சரிப்புக்கும் பாடல் வாயசைப்புக்கும் நடிப்பு நிபுணத்துவம் நிரூபித்த நடிகர்திலகம் பல்வேறு இசைக்கருவிகளைக் கையாள்வது போன்ற சிக்கலான காட்சிகளிலும் தன்னை மிஞ்ச அவனியில் யாருமில்லை என்று வாசித்து வாழ்ந்து காட்டுவதை கண்டு மெய்மறப்போமே! நினைவஞ்சலிக்கும் இசையில் துவங்குவதே மங்கலம்!
https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw
https://www.youtube.com/watch?v=42PEV3ojPss
https://www.youtube.com/watch?v=YoJBZYCZThg
https://www.youtube.com/watch?v=i19LmDSp5f0
https://www.youtube.com/watch?v=G2B97RTcB3E
https://www.youtube.com/watch?v=3pQyUoo-wwA
https://www.youtube.com/watch?v=KPM20P7HDLs
https://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw
https://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0
https://www.youtube.com/watch?v=FnvSiVhqrZs
https://www.youtube.com/watch?v=XjZP2reKBlU
https://www.youtube.com/watch?v=y0khGzjDhNQ
https://www.youtube.com/watch?v=o17JQ6TWP30
அன்பின் செந்தில்
நடிகர்திலகம் பற்றிய உங்கள்
வித்தியாசமான பதிவுகள் ரசிக்கக்கூடியது
பாராட்டுக்கள் செந்தில்
தொடருங்கள்...
பாராட்டியமைக்கு நன்றிகள் சிவா. இது நம் நாயகனுக்கு நான் செலுத்தும் எளியதொரு நினைவஞ்சலி காணிக்கை
இன்று நடிகர்திலகம் அவர்களின் 13 -வது நினைவுநாள் -( 21 -07 -2014)
என்றென்றும் கலையின்மூலமும் நற்பண்புகள்மூலமும்
தேவை அறிந்து கொடுத்த கொடையின்மூலமும்
நம் மனதிலும் மக்கள் மனதிலும்
நீங்கா இடம் பிடித்துள்ள நடிகர்திலகத்தின் புகழ் என்றென்றும் வாழும்.
http://files.prokerala.com/movies/pi...pers-15442.jpg
அன்னை இல்லத்தின் தவப்புதல்வனே
உன் நினைவுநாளில் நீ செய்த
கொடைகளை எண்ணிப்பார்க்கிறேன்
http://i157.photobucket.com/albums/t...ps8d76dc1c.jpg