Good Morning
http://i818.photobucket.com/albums/z...psi4ztbxxb.jpg
http://i1021.photobucket.com/albums/.../Cute-Baby.jpg
Printable View
கருவின் கரு - பதிவு 20 :(:(
உண்மை சம்பவம் -2
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன . இந்த சம்பவம் என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த ஒன்று .
உமா, என் மனைவி அவசர அவசரமாக என்னை எழுப்பினாள் - " என்னங்க ? எழுந்திருங்க - நேற்று எவ்வளவோ சொல்லியும் இப்படி தூங்கினால் என்ன அர்த்தம் ? "
உமா citibank இல் director ஆக இருக்கிறாள் - நானும் தனியார் அலுவகத்தில் vice chairman ஆக இருக்கிறேன் - குழந்தைகள் இருவர் - இருவரும் MS படித்துக்கொண்டுருக்கிண்டார்கள் USA வில் . என்னுடன் 80 வயதை கடந்த அம்மா -. அப்பா தவறி இரண்டு வருடங்கள் ஆகின்றது - ஒரே மகனாக இருப்பதால் அம்மாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் எனக்கே கிடைத்தது . நாங்கள் இருவரும் வேலை செய்வதாலும் , இரவு நீண்ட நேரம் கடந்து இல்லத்திற்கு வருவதாலும் அம்மாவை சரியாக கவனித்துக்கொள்ள முடியவில்லை - அந்த வயதில் அவர்களுக்கு வரும் மிக கொடுமையான வியாதி என்ன தெரியுமா ?
"The feeling of being unwanted ; being ignored " . இதை அப்பொழுது நான் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை . முழு நேர வேலைக்காரி அம்மாவை விட அதிகமான தேவைகளுடன் வருவதால் எங்களுக்கு ஒத்து வரவில்லை .
மீண்டும் உமாவின் அதட்டல் - எழுந்தாச்சா ? சீக்கிரம் கிளம்புங்கள் - இன்று எனக்கு போர்டு மீட்டிங் - சாயிந்தரம் கம்பெனியில் நம் இருவருக்கும் பாராட்டு விழா - மறக்காமல் அம்மாவை பவானி முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு ஆபீஸ் செல்லுங்கள் - இதோ அம்மாவிற்கு தேவையான உடுப்புகள் , மருந்துகள் , அவள் விரும்பி படிக்கும் திருவாசகம் ,.....
"உமா ! அம்மாவை கண்டிப்பாக முதியோர் இல்லத்தில் சேர்த்து தான் ஆக வேண்டுமா ? பாவம் நிமிடத்திற்கு ஆயிரம் முறை விசு என்று கூப்பிடுவாளே , என்னை விட்டு தனியாக எப்படி அங்கு வசிப்பாள் ?"
" முருங்கை மரம் ஏறியாகி விட்டதா ? படித்து படித்து சொன்னேன் - மீண்டும் மீண்டும் அதே கேள்வி ? கம்பெனியில் vice chairman ஆக இருந்து என்ன குப்பை கொட்டுகிறீர்கள் ? இந்த சின்ன விஷயத்தைகூட சமாளிக்கத்தெரியாமல் ? "
இல்லை உமா - அம்மா பாவம் - எனக்காக ------" உமா கிளம்பி சென்று 5 நிமிடங்கள் ஆகி விட்டன . உள்ளே அம்மாவின் அழகிய குரலில் திருவாசகம் தன்னை உயிர்ப்பித்துக்கொண்டிருந்தது .
" திகைத்தால் தேற்றி அருள வேண்டும் " என்ற தலைப்பின் கீழ் வரும் பாடலை கணீரெண்டு பாடிக்கொண்டிருந்தாள்
" கூறும் நாவே முதலாகக்
கூறும் கரணம் எல்லாம் நீ !
தேறும் வகை நீ ! திகைப்பும் நீ !
தீமை , நன்மை , முழுதும் நீ !
வேறு ஓர் பரிசு , இங்கு ஒன்று இல்லை ;
மெய்ம்மை , உன்னை விரித்து உரைக்கின் ,
தேறும் , வகை என் ? சிவலோகா !
திகைத்தால் , தேற்ற வேண்டாவோ !
வேண்டத்தக்கது அறிவோய் நீ !
வேண்ட , முழுதும் தருவோய் நீ !
வேண்டும் அயன் மாற்கு , அரிவோய் நீ !
வேண்டி என்னைப்பணி கொண்டாய் ;
வேண்டி , நீ யாது அருள் செய்தாய் ?
யானும் அதுவே வேண்டின் அல்லால் ,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் ,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே !
மெதுவாக அம்மா என்று அழைத்தேன் - அதில் உயிர் இல்லை .
" என்ன விசு , ஆபீஸ் போகல்ல ? உடம்புக்கு என்ன ? எதோ மாதிரி இருக்கிறாய் - உமா எங்கே ஆபீஸ் சீக்கிரம் போகவேண்டும் என்றாளே ?" அம்மாவின் அக்கறை தோயிந்த வார்த்தைகள் -----
" அம்மா உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் - உன்னை ஒரு புது இடத்திற்கு கூட்டி செல்லபோகிறேன் - அங்கு எல்லா வசதிகளும் உண்டு - மருத்துவர் எப்பொழுதும் இருப்பார் - உன் வயதை எட்டியவர்கள் பலர் அங்கு இருக்கிறார்கள் --- மேலே வார்த்தைகள் வர மறுத்தன ...
" விசு , எல்லாம் சரி நீ அங்கு இருப்பாயா ? உமா இருப்பாளா ? - அது என்ன மாதிரியான இடம் ?. அப்பா வாழ்ந்த இந்த வீட்டை விட்டு ஏன் அங்கு அழைத்துச்செல்கிறாய் ? - நான் இங்கு இருப்பதில் உனக்கு ஏதாவது கஷ்ட்டமா ? அப்படியானால் போகிறேன் !"
வாசலில் யாரோ அழைக்க விரைந்து சென்றேன் . சிறிது நேரம் கழித்து அம்மாவிடம் மீண்டும் பேச அவளிடம் சென்றேன் - உறங்கி விட்டாள் --- அம்மா , நான் சொல்ல வந்தது என்ன வென்றால் --------
அம்மாவின் கைகள் chill ஆக இருந்தது - மூச்சுக்காற்று நின்று 5 நிமிடமாவது ஆகியிருக்கும் .. யாரோ என்னை முதுகில் ஓங்கி அடித்ததைப்போன்று இருந்தது .
என் மொபைல் , என் மனவியைப்போலவே அலறியது - மறுப்பக்கம் உமாதான் " என்ன அம்மாவை சேர்த்து விட்டீர்களா ? என்ன சொன்னாள் ? "
என் உள்ளம் கதற , உதடுகள் மட்டுமே அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தது " ம்ம் அம்மாவை சேர்த்துவிட்டேன் ( இறைவன் காலடியில் ) , அவள் ஒன்றுமே சொல்லவில்லை "
என்னை விட்டு ஒரு நிமிடம் பிரிந்து இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவளின் உயிர் பிரிந்தது - பிரிந்து தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவன் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டுருக்கிறேன் -------
கடல் என்ற அவள் கருணையில் , நான் பயணிக்க நினைத்தது ஒரு காகித கப்பலில் - மணலால் வீடு செய்து அவளின் கண்ணீரில் அதை கரைய வைத்தேன் - அவள் முகத்தைப்பார்க்காமல் யாருடைய முகத்தையோ பார்த்துக்கொண்டுருக்கிறேன் - அவள் கொடுத்த நிழலை விட்டு காண நீரில் இளைப்பாருகின்றேன் .........வாழ்க்கை கடிகாரத்தை யாரவது திருப்பி வையுங்களேன் - அவளிடத்தில் நான் நாள் முழுவதும் , ஏன் என் ஜென்மம் முழுவதும் மன்னிப்பு கேட்க்கவேண்டும் , அவள் மடியில் விழுந்து அழ வேண்டும் !!
https://youtu.be/3ZOAMaT3ZnE
கருவின் கரு - பதிவு 21
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் - அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னை சேரும் ---- அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா? அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா......
என் சின்ன சின்ன வெற்றியையும் ரசிப்பாயே - உன்னை ரசிக்காமல் வேலை வேலை என்றிருந்தேனே !
என் காலில் சிறியதாக அடிபட்டதற்கு - கண்களில் இருந்து இரத்தத்தை அல்லவோ அன்று சிந்தினாய் !!
உனக்கு இரத்தம் கொடுக்க நானோ காசை அல்லவா எண்ணினேன் !!
நல்ல மனைவி எனக்கு வேண்டும் என்று - நீ சுற்றாத கோயில் இல்லை !
நீ நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு நாளும் கோயிலை நான் நினைத்ததே இல்லை !!
நீ எனக்காக வாழ்ந்தாய் - நான் எனக்காகவே வாழ்ந்தேன் !!
நீ சாப்பிட்டதை விட விரதம் ( பட்டினி ) இருந்த நாட்கள் அதிகம் - நானோ பட்டினியை புத்தகத்தில் தான் படித்திருக்கிறேன் ---
எங்கேயோ சென்று விட்டாய் -- இன்னுமொரு பிறவி என்று ஒன்றிருந்தால் நான் உனக்கு தாயாக பிறக்கவேண்டும் - உன்னை என் மடியில் வைத்து சீராட்ட வேண்டும் - இது தான் என் கடைசி ஆசை ---- இறைவன் என்று ஒருவன் இருந்தால் , எனக்கு செவி சாய்க்கட்டும் .........
தெய்வம் மனிதனாக வந்து வாழ்வதை படித்திருக்கிறோம் - ஒரு மனித பிறவி தெய்வமாக வாழ்வதை தாயின் மூலமாகத்தான் பார்க்கமுடியும் , படிக்க முடியும் .
https://youtu.be/Z9rjDWeGfQM
கருவின் கரு - பதிவு 22
அவன் முகம் அழகு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க்கும் - அவன் இதயமோ கருணை என்றால் - buy one get two free என்று சொல்லும் - அவன் அழகில்லை என்பதால் அவன் தந்தை அவனை தூக்கி எறிந்தான் , வீட்டிலிருந்தும் , மனதிலிருந்தும் --- தாயின் மடி கனத்தது - கருவறையில் இரத்தம் கசிந்தது - வெளி அழகினால் என்ன பயன் - அழியக்கூடியது ! உள் மனம் மன்மதனாக இருக்கின்றதே - அதுவல்லவோ நிரந்தரம் .... கண்கள் பார்த்திருக்காத மகனை தேடுகின்றது - பத்து மாதங்கள் குடியிருந்த அந்த கருவறையை பார்க்க மகனும் துடிக்கிறான் - கருவாகவே மீண்டும் உள்ளே சென்று விட்டால் , அவளின் நிழலில் மீண்டும் இருக்கலாமே -- மனம் ஏங்குகிறது - யாரோ பாடும் பாடல் அவர்களின் எண்ணங்களை இணைக்கிறது ..
https://youtu.be/mU-GlbPlong
கருவின் கரு - பதிவு 23
தாயை மதித்தால் ( மிதிக்காமல்) வெற்றி மீது வெற்றி வருவதுடன் புவியரசோடு நமக்கும் ஒரு சரியாசனம் கிடைக்குமே ---- அந்த உலக மாதாவிற்கும் , நம்முடைய மாதாவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை - அவள் கோவில்களில் கல்லாக இருக்கிறாள் - நாம் நம் மனதை கல்லாக்கி நம் தாயை அதில் அமரவைத்து அழகு பார்க்கிறோம் !!:(
https://youtu.be/Fm7QOXpd3jU
ஒரு ரசிகரின் அலசல் இந்த பாட்டைப்பற்றி
ஒரு அதிகாலையில் உறக்கம் விழித்த போது, என்னவோ தெரியவில்லை.. அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையில் இந்த பாட்டைக்கேட்க வேண்டுமென்று எண்ணம் வந்தது - இணையதளம் சென்று யூட்யூப் சென்றேன்.. முதல் பாட்டே இது தான் இருந்தது ! குறைந்தது ஐந்து முறை அணு அணுவாக ரசித்தேன் - முதல் முறை டி எம் எஸ்ஸின் அருமையான தமிழ் உச்சரிப்புக்கு - இரண்டாம் முறை நடிகர் திலகத்தின் முக பாவம் அற்புதமான நடிப்பு மூன்றாம் முறை காளியாக நடித்த நடிகையின் அற்புதமான நடனம் - நான்காம் முறை திரை இசை திலகம் மகாதேவனின் அருமையான இசை ஐந்தாம் முறை கண்ணதாசன் வரிகளுக்காக அவர் உட்பட டைரக்டர் தயாரிப்பாளர் மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களின் அருமையான ஒருங்கிணைப்பு ! ஐந்து நிமிடத்தில் இயல் இசை நாடக முத்தமிழின் அனைத்து அம்சங்கங்களும் சாரமாக அமைந்த பாடல்..... அருமை அருமை அருமை...
கரு தொடரும்
CK - உங்கள் " என்னமோ போங்க " அருமை - என்னிடம் இருக்கும் பல குறைகளில் முக்கியமான ஒன்று , multitasking ability இல்லாதது - ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால் மனம் அதை சரியாக முடிக்கும் வரை வேறு இடத்தில் கவனம் செலுத்துவதில்லை - இதனால் பலர் போடும் நல்ல பதிவுகளை ரசித்து உடனுக்குடன் பாராட்டுக்களை தெரிவிக்க மறந்து விடுகிறேன் . என்ன செய்வது -- இப்படியே வளர்ந்து விட்டேன் - மிகவும் ரசிக்கும் படியாக இருக்கின்றது - பாராட்டுக்கள்
வணக்கம்.
திரு நெளஷாத் அவர்களுடன் இசையரசி மற்றும் அவர் கணவர், உடன் லதா மங்கேஷ்கர், சீர்காழியார்
https://scontent-dfw1-1.xx.fbcdn.net...30&oe=55F7C664
இரு திலகங்களின் பாடல்களுடன் இனிதே துவங்குவோம்
நடிகர் திலகம்... இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
கவியரசரின் வார்த்தை ஜாலமா, இசையரசியும் ஏழிசை வேந்தரும் பாடிய விதமா
அபிநய சரஸ்வதி அழகு பொம்மையாக குறிப்பாக வலது கை கடிகாரம் என fashionஆக இருக்க
அடிபட்ட காலுடன் நடிகர் திலகம் நடக்கும் அழகே அழகு.. நடிப்பெல்லாம் institute'ல் படித்து கற்று கொள்ள முடியாது என்பது பலருக்கு தெரியவில்லை
அதெல்லாம் தானே உள்ளே இருக்கனும்..
ஆம் கொடியசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா
https://www.youtube.com/watch?v=4rvNInoT6Sc
மக்கள் திகலம் பாடல்
நாயகியையும் தாண்டி ஒரு நாயகன் ஸ்க்ரீன் ப்ரஸன்ஸ் எப்பொழுதுமே இருக்கக்கூடியவர் நடிகர் திலகம்.
அதுவும் சரோவுடம் இவர் சேர்ந்தாலே துள்ளலான காதல் (எனக்கு ஜெ-யுடன் மக்கள் திலகத்தை விட சரோவுடன் தான் மிகவும் பிடிக்கும்)
அப்படி ஒரு துள்ளல் இங்கே
வாலி ஐயாவை புகழுச்சிக்கு இழுத்து சென்ற பாடல்
திருக்குறள் போல் இரண்டு அடிகளாக வரும் பாடல்
இவர் தொட்டால் பூ என்ன செடியே மலருமே
ஆம் தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
https://www.youtube.com/watch?v=QUmytxOMkHo
நண்பர் gkrishnaa அவர்களே,
உங்கள் கோபாலா தலைப்பிலான பாடல்களுக்கு அனைவருமே வழிமொழிந்து விட்டோம். பலர் பாடல்களையும் எடுத்துக் கொடுத்து விட்டனர். நீங்கள் கோபாலனோடு நிறுத்திக் கொள்ளாமல் க்ருஷ்ணாவிலும் தொடரவேண்டும்.
கிரிதர கோபாலா பாலா
கிரிதர கோபாலா பாலா
கிரிதர கோபாலா
எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் கானக்குயில் எம் எஸ் சுப்புலட்சுமியின் 'மீரா' திரைபடத்தில்
http://www.youtube.com/watch?v=UllBnLtWEDE
நடிகர் திலகம் திரியில் நண்பர் முத்தையன் அம்மு வெளியிட்ட நிழல் படங்கள் மற்றும் முரளி சார்/ராகவேந்தர் சார் பதிவிட்ட அவன்தான் மனிதன் பாடல்
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்தில் உள்ளது தான் உலகம் …இது அறிவிற்கு புரிகிறது…ஆனால் மனதிற்கு புரியவில்லையே…… ஆட்டுவிப்பவனும் நீயே …அரவணைப்பவனும் நீயே……உன்னால் முடிகிறது
என்னால் முடியவில்லயே கண்ணா (சின்ன) ! கல்நாயக் மன்னா ! ரவி அண்ணா ! கோபாலா திண்ணா :)
சில தத்துவ பாடல்கள் மனதை சுமை ஆக்கும் அல்லது போரடிக்கும் ஆனால் இந்த பாடல்
மனதில் ஒரு குறுகுறுப்பு கேட்கும்போது ஒரு இனிமை, எதார்த்தம் நிறைந்து ஆறுதல் அறிவுரை
http://4.bp.blogspot.com/_AWdXXZHnAN...aji1145210.jpg
பாடலின் வரிகள் அனைத்தும் மனதில் கல்வெட்டாக பதித்து வைக்க வேண்டியவை…..கவியரசர் வரிகளுக்கு MSV இசை உயிராக இருக்க TMS குரல் இதய துடிப்பாக மாற கேட்கும் நமக்கோ வாழும் நொடியின் நிதர்சனத்தை சொல்லிவிட்டு போகிறது ……
https://m.ak.fbcdn.net/external.ak/s...fs=1&upscale=1
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..
ரவி, கல் நாயக் கிருஷ்ணா இனிய மதிய வணக்கம்..
உள்ளே வந்து படித்தாலும் கூட பின்னூட்டம் இட இயலவில்லை..
ரவி, காகிதத்தில் கப்பல் செய்து, யார் தருவார் இந்த அரியாசனத்திற்கும் அன்னைக்கும் லிங்க் பண்ண உஙக்ளால் மட்டுமே முடியும்..
கிருஷ்ணா.. என்னா பாட்டு தெரியுமா அது..
ஸிச்சுவேஷன் இதானாம்.. ந.தி வீட்டுக்குப் போறச்சே ஒரு கொயந்தை வருது கிஷ்ணா வேஷம் போட்டுக்கிட்டு.. அதுக்கு எழுதணுமாம்.. சொன்னாங்க.. எழுதிட்டேன்..இந்தா ட்யூன் போட்டுக்கறது உன்னோட பாடு..
வாட்.. எம்.எஸ்.வி கவிதையை வாங்கி ப்படிக்க..வாவ் வரிகள்..
தலையைக் கலைத்து எண்ணங்களை முன்னிலைப் படுத்தி ட்யூன் போட்டுப் பார்த்தால் ம்ஹூம் சிக்கவேயில்லை..நிறைய ட்யூன் போட்டுப் பார்த்தாலும் வார்த்தைகள் அமர மறுக்க ஒரு சொர்ண கணப் பொழுதில்..யுரேகா..ட்யூச் சிக்கி வார்த்தைகள் அமர வந்த பாடல் தான் ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா.. (இப்படி எம் . எஸ்.வி யே சொல்லவில்லை..கொஞ்சம் ட்யூன் போட சிரமப்பட்ட பாடல் என்று சொல்லியிருக்கிறார்..
http://www.adrasaka.com/2013/02/10_14.html )
படம் (சின்ன வயதில்) பார்க்கையில் கண்கள் கலங்க வைத்து உணர்ச்சி வசப்படவைத்த (பக்கத்திலிருந்த கேர்ள்ப்ரண்ட்டை அணைக்கப் பார்க்க அவள் விலக்..ச்ச் டூப்புங்க.. அப்ப நான் ரொம்பச் சின்னப் பையன்..) பாடல் இது
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.. எனக்குப் பிடித்த ப்ளாட்டின வரிகள் இவை..
ம்ம் கிருஷ்ணா கிருஷ்ணா ஜி..:)
ரவி, ராஜேஷ் ரசித்தமைக்கு நன்றி
ராஜேஷ்.. கொடிஅசைந்ததும் காற்று வந்ததா வும் தொட்டால் பூ மலரும் பாடலும் அன்று படைக்கப் பட்ட தேன்கள்.. இட்டமைக்கு நன்றி..
பூவின் பாடல் 12: "நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலயராசாதான் பாடி கிறாரு. அப்ப அவருதானே மியூசிக் போட்டு கீறனும். என்னமோ போங்க இரண்டில் ஒன்றா படம் பார்த்தேனா இல்லையான்னே தெரியல. நம்ப ராம்கி ஆக்ட் கொடுத்து கிறாரு. நதியா கீறாங்க. ராசாவோட சித்ரா பாடி கீறாங்க. பாட்டு ஆரம்பத்துல கீரோயின் தலையிலேந்து விலர பூவை எடுத்து வச்சிகினு இன்னாத்துக்கு 'நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்'-னு கீரோ பாடணும். அடுத்தது சொல்றாரு கேட்டுக்குங்க - காதலின் கோயில் வாழும் தேவிக்காகன்னு. இன்னாத்த சொல்றது? நீங்களே கேட்டுக்குங்க.
https://www.youtube.com/watch?v=urJuVL-iH9A
நான் ஒரு சந்தர்ப்பத்தில் - சில நாள் சென்று போடலாம் என இருந்தபாட் கல் நாயக்.. ம்ம் ஓ.கே ஓகே :) அண்ட் தாங்க்ஸ்..
கண்ணா பாட் போட்டாரா கிருஷ்ணா. சடுதியில் ஐந்து நிமிடத்திலெழுதிப் பார்த்தேனா..இதோ..
இன்னுமென்ன வேண்டுமென்று கண்ணா என்னை
..இயற்கையான சிரிப்புடனே கேட்டே விட்டாய்
வண்ணமென வாலிபந்தான் போச்சே பின்னர்
..வாட்டமுற வைக்கின்ற முதுமை கூட
கண்சிமிட்டிப் பார்த்துத்தான் சொல்லும் நன்றாய்
..காலனவன் எண்ணுகின்றான் நாட்க ளென்று
எண்ணங்கள் மயங்குகையில் கண்ணா கண்ணா
..ஏற்றமுற உன்நினைவே வேண்டும் கண்ணா..
நண்பர் gkrishna அவர்களே,
அருமை. அருமை. எம். எஸ். எஸ். அவர்களின் பாடலுடன் பிரமாதமாக துவங்கிவிட்டீர்கள். கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கிறது. நன்றி. தொடருங்கள்.
நன்றி ராஜேஷ் ஜி,
நீங்கள் பதிவிட்ட இரண்டு பாடல்களும் எனக்கும் மிக பிடித்தமானவை. கொடி அசைந்ததும் பாடலில் நடிகர் திலகத்தின் நடையும், தொட்டால் பூ மலரும் பாடலில் மக்கள் திலகத்தின் ரசனையும் ரசிக்கத் தகுந்தவை. முதல் பாடல் கவியரசர் அல்லவா. இரண்டாம் பாடல் வாலிபக் கவிஞர். அற்புதமான கவிதைகள். இரண்டிற்கும் இசை அமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள். இரண்டிலும் உடன் நடித்தவர் கன்னடத்துப் பைங்கிளி. காட்சி அமைப்பிலும் சிறந்தொங்கிய பாடல்கள். வழங்கியமைக்கு மீண்டும் நன்றி.
chi.ka.,
அவன்தான் மனிதன் படம் பற்றி நடிகர் திலகம் திரியில் முரளி அவர்கள் பதிவிட்ட பின்பு அங்கும் இங்கும் அதிகமாக விவாதிக்கப்படும் பாடலாக 'ஆட்டுவித்தால் யாரொருவர்' பாடல் விளங்குகிறது. நான் மிகச் சிறிய வயதில் மதுரையில் (எந்த திரை அரங்கம் என்று கூட தெரியவில்லை) என் அம்மாவுடன் போய் பார்த்து என்றும் என் நினைவில் வாழும் திரைப் படமாகவும், என் நெஞ்சில் கலந்த பாடலாகவும் இதை நினைக்கிறேன். மிகச் சிறிய வயதில் மதுரைக்கு வந்த போது பார்த்ததால் என் அம்மா அடிக்கடி அங்கே படம் பார்த்தோம் என்று சொல்லி நினைவு படுத்துவார்கள். கடைசிப் பாடலான 'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று' பாடலும் வாழ்வியல் தத்துவத்தை விளக்குவதாகவே படுகிறது. இதில் கவியரசரை வெல்ல இன்னும் ஒரு கவிஞர் வர முடியாது என்றே தோன்றுகிறது. பாடிய பாடகர் திலகத்தைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது. நாமெல்லாம் பார்த்து, கேட்டு ரசிக்க கொடுத்து வைத்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக 'விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால், மதியும் மயங்குதடா' - என் காதில் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருக்கிறது. விவரம் புரியாத வயதில் பார்த்து மனதில் ஏற்றி வைத்து கால ஓட்டத்தை கணக்கிட வைத்துக் கொண்டு இருக்கிறது இந்த திரைப் படமும் இதன் பாடல்களும். என்னமோ போங்க.
திரு கல்நாயக் - இன்னொமொரு விஷயம் - எங்கோ படித்தது - பொதுவாக ந.தி பாடலை கேட்டப்பிறகு, அதை தன்னுள் வாங்கிக்கொண்டு பிறகுதான் அந்த பாடலுக்கு நடிக்க வருவாராம் - ஆனால் இந்த பாடல் ஒரு விதிவிலக்கு - அந்த situation யை மட்டும் மனதில் வாங்கிக்கொண்டு நடிக்க ஆரம்பித்தாராம் - TMS இப்படித்தான் பாடியிருப்பார் என்று சொல்லி விட்டாராம் - என்ன நடிப்பு ஞானம் பாருங்கள் - ம்ம் எல்லாம் அவருடைய அன்னையின் கருணை , ஆசிர்வாதங்கள் --------
நண்பர் கல்நாயக்
'அவர் தான் மனிதர்' மலரும் நினைவுகள் அருமை.
ராகவேந்தர் சொன்ன மாதிரி இரண்டாம் பாதியில் சோகத்தை சற்று குறைத்து இருந்தால் படம் ரேஞ்சே வேறே . ACT யின் problem இது . 'அன்புள்ள அப்பா' வை கொஞ்சம் டிங்கரிங் பண்ணி பிரகாஷ் ராஜ் 'அபியும் நானும்' ஹிட் ஆக்கிட்டார்.
(எந்த திரை அரங்கம் என்று கூட தெரியவில்லை)//ஓய்..கல் நாயக்..அது சென் ட்ரல் சினிமா..அங்கு தான் நானும் பார்த்தேன்..
அன்னெஸஸரியாக ந.தியை அழவிடுவது, அவர் சொத்துக்கள் இழப்பதுபோல் காட்டுவதெல்லாம் அந்தக்காலப் படங்களில் தொடர்ந்ததாக நினைவு..அந்த மேட்ச் பாக்ஸ் சீன் ஆரம்பத்தில் அவரது ஃபேக்டரி பின் முத்துராமனுடையதாக மாறியவுடன் அவருடைய ப்ராண்ட் தெரிவது..
கொடுத்துக் கொடுத்து சிவந்த கைகள்னு காட்டவேண்டியது தான்..அதற்காக கடைசிவரை இழப்பதாக - உயிர் வரைக்கும் என்று காட்டவேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயம்..எனக்கு அன்றும் கோபம் இன்றும் கோபம்..ம்ம்
நன்னா ஊறின த.வ போல ஜெயலலிதா.. சரி காதல் தியாகம் (ஹப்பா ந.தி எஸ்கேப்னு பெருமூச்சு விட்டேன்) நு வச்சுண்டாலும் கூட ரொம்ப ஏழையா ஆகி அந்தக் குழந்தையும் சாகடிச்சு.. என்னமோ போங்க..
பா.பொ.பா.போ - 1
(பாட்டுக்குப் பொருத்தமா (சினிமா) பாட்டுப் போடுங்க..
கண்ணனைத் தேடித் தேடி
..கண்களும் பூத்த தேடி
சின்னதாய்க் குமிழ்சி ரிப்பு
..சீருடன் நடையுங் கொண்டே
பண்ணினைக் குழலி சைக்க
...பாங்குடன் வருவேன் என்றே
சொன்னவன் காணோ மேடீ
...சொல்லுவாய் வரமாட் டானா..
கொஞ்சம் ஓரிரு பாரா ரைட் அப்பும் வேணும்..(போடலைன்னா நானே எழுதிடுவேன் உஷார்)
*
கிருஷ்ணாஜி..எனி கோபம்..
அஞ்சு நாளில் ஸ்டார் கொடுத்த மாடரேட்டர்ஸிற்கும் ஆக்கிய நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி..:)
சி.க.,
இது பொருத்தமாக இருக்குமா என்று பாருங்களேன்.
https://www.youtube.com/watch?v=Tmft-OHXOIo
படத்தோட பேரு? அட. மதுர கீதம் தானுங்க.
kal nayak ji. Thanks ... paattu pugaiya ninaivil..veet pOi kEt paakkaraen okyaa. :)
கண்ணா உங்கள் மீது கோபமா ? எனக்கா ? எதற்கு
புரியவில்லையே ! .
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
http://4.bp.blogspot.com/-3JUxfSpzHG...40/ranggan.jpg
பூவின் பாடல் 13: "பாடுவோம் பூ மாலை சூடுவோம் ஆடும் மயில் வண்ணமே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~
செங்கமலத் தீவின்(?) புதிய ராணிக்கு தோழிகள் பாடி வாழ்த்தும் பாடல். பூவில்லாமல் காயுமில்லை. "பொறுமையில்லாமல் வெற்றியுமில்லை. பாவையரின் மானம் காக்க நடந்து வர" அழைக்கிறார்கள். நடித்திருப்பவர் எவரென்று கேட்டால் பக்கெட் பக்கெட்டாக எடுத்துத் தருபவர் இருக்கையில் நமக்கென்ன கவலை. வேறு என்ன கவலையென்றால், கூப்பிட்டுப் போவதைப் பார்த்தல், கவுண்டமணியை பூமிதிக்க அழைத்துச் செல்வது போல் இருக்கிறதே. பாவம் என்றுதான். பாடலின் மேற் விவரங்கள் தந்து ஆதரிக்க வேண்டும்.
https://www.youtube.com/watch?v=D6aIyGqXf-A
பூவின் பாடல் 14: "பூமாலைப் போட்டுப்போன மாமா வருவதற்குள்"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இங்க பாருங்க ஒரு லேடி என்னமா புலம்புதுன்னு.... ஓ!!! இது அந்த காலத்து லேகியம் விற்கும் முறையா? பிதாமகன் சூர்யாவிற்கு முன்னோடி!!! குறும்பாடல். நானே பாடலைப் பற்றி அவ்வளவாக எழுதுவதில்லை. இது எனக்கே போட்டியாக மிக சிறியதாக இருக்கிறதே!!! சரி பரவாயில்லை. தங்கப் பதுமையின் பாடலை கேட்டு மகிழுங்கள். குலதெய்வமும், டி.பி. முத்துலக்ஷ்மியும் பாடலுக்கு வருகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=spCnIOxbxyg
பூமாலை பாடல்கள் முற்றிற்று. தெரிந்தவர் தொடரலாம். பூவின் பாடலில் பூமழை பாடல்கள் வருகின்றன.
கவிஞனும் கண்ணனும்
குழந்தை ஆண் தான். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை. இருந்தும் செல்லம் கொஞ்சும் போது நாம் ஆணைப்
பெண்ணாக்கி பெண்ணை ஆணாக்கி அழைத்து மகிழ்கிறோம்.
(முரளி சார் சொன்னது போல் பாலும் பழமும் திரை படத்தில் மனைவியை சிவாஜி டா போட்டு பேசுவது போல்)
இதையும் மீறி குழந்தையை செல்ல நாய்க்குட்டி, கிளி, என்றும் சில பேர் அக்றிணைப் பொருளாகக் கூட கொஞ்சுவது அதீத ப்ரேமையால். இது இயற்கையாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் உண்மை அல்லவா?
எனக்கு தெரிந்த ஒருவர் ஸ்ரீ குருவாயூரப்பனை தனது செல்லக் குழந்தையாக ஏற்றுக்கொண்டு வீடெங்கும் எங்கு நோக்கினும் குட்டி கிருஷ்ணனின் பல வித ரூப தரிசனம்.
அவர் படுக்கையில் அருகே ஒரு சிறு குட்டிக் கட்டில் (தொட்டில்) , அதில் மெத்தை, போர்வை, தலையணை, அதில் குட்டி கிருஷ்ணன் படுத்துக்கொண்டிருப்பான். அவனுக்கென்று தனி உடைகள், ஆபரணங்கள். பார்த்து பார்த்து ஊர் ஊராக சென்று வாங்கி சேர்த்து வைத்திருக்கிறார் அந்த கிருஷ்ண ப்ரேமி.
அவரோடு அவனும் சாப்பிடுவான். இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
வீட்டில் ரேஷன் கார்டில் இல்லாத வாக்காளர் பட்டியலில் இல்லாத ஒரு குடும்ப நபர் அந்த குட்டி கிருஷ்ணன். வெளியே எங்கு போனாலும் அவனிடம் சொல்லிக்கொண்டு போவது. அவனுக்கும் ஏதாவது வாங்கி வருவது.... இதுபோன்று
வேறு சில நண்பர்களையும் நான் அறிவேன். அவர்கள் தெய்வங்களையே தம்மோடு இணைத்துக்கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் அனைவருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
நம்மில் பலரோ, கோவிலுக்கே செல்லாதவர்கள், கோவிலுக்கு போனாலும் மனதை வெளியே உள்ள செருப்பில் நிலைத்து நிறுத்தி, வெங்கடேசன் முன் நின்று கொண்டு அடுத்த கணமே ஜருகண்டி என்று பிடித்து தள்ளப்படுவதற்கு முன் அவனைப் பார்க்கக் கிடைத்த சில நிமிஷங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு இயந்திரமாக கை கூப்புபவர்கள்.
ஒருவருக்கு கண்ணன் குழந்தையாக அதுவும்
பெண் குழந்தையாக தோன்றினான்
.அவர் அவனைக் கொஞ்சுவதைப் பார்ப்போமா ?
''என் கண்ணம்மா, குழந்தை, நீ சின்னஞ் சிறு கிளியடி, , எனது செல்வக்களஞ்சியம். அம்மம்மா. எத்தனை கஷ்டங்களடி துன்பங்கள், அவை எல்லாவற்றிலிருந்தும் நான் தேறி, விடு பட்டு, வாழ்வில் அடுத்த கட்டம் முன்னேற வைத்தவளே நீ தான்.
கண்ணம்மா, உன்னை நான் எப்படிப்பார்க்கிறேன் தெரியுமோ? என் கனி அமுதாக. என்னுடன் பேசுகின்ற தங்கப் பதுமையாக. அழகான ஓவியமாக. நான் ''வாடி, வாடி என்னருகே என்று உன்னைத் தேடி தேடி வருவேன். உன்னை அள்ளி அப்படியே மார்புற அணைத்துக் கொள்ள நெஞ்செல்லாம் ஆசையோடு வருவேன். நீ என்ன செய்வாய் தெரியுமா? ஆடிக்கொண்டே என்னருகே வருவாய்.
என் தேனினும் இனிமையான சுவையே கண்ணம்மா என்று கூப்பிடுவேனே, நீ ஓடி வருவாயே, அதைப் பார்த்து என் உள்ளம் எப்படியெல்லாம் பனிமலை மேல் இருப்பதுபோல் குளிரும் தெரியுமா?
எங்காவது வெளியே சென்று வீடு திரும்புவேன். என் கண் உன்னைத் தான் முதலில் தேடும். நீ விளையாடிக் கொண்டிருப்பாய் எங்காவது. நான் உன்னை நெருங்குவதற்கு முன்னரே, என் மனம் ஆவி எல்லாம் அங்கே ஓடிப் போய் உன்னைக் கட்டித் தழுவுமே.''
உச்சி முகர்தல் ஒரு சிறந்த அனுபவம். எத்தனை பெற்றோர்கள் அதனை அனுபவித்திருக்கிறார்கள்
அது கொடுக்கும் இன்பம் ஷாம்பூ வாசனைக்கும் அப்பாற்பட்டது . என் பேரன், என் பேத்தி, என்று பாட்டி தாத்தா ஒரு புறம் உரிமை கொண்டாடட்டும். தந்தை தாய்க்கு கிடைக்கும் இன்பம் எவ்வளவு அவர்களை பெருமிதத்திலும் யாருக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்திருக்கிறதே என்ற கர்வத்திலும் உயர்த்திக் காட்டும்.
''சார் உங்க பையன், ரொம்ப ஸ்மார்ட் பெல்லோ, படு கெட்டிக்காரன். ஒரு கணக்கு கொடுத்தேன். பளிச்சுன்னு பதில் சொன்னான் சார். அசந்து போய்ட்டேன். ஐ க்யூ ஜாஸ்தி அவனுக்கு. எப்படி சார் உங்க பையனை இப்படி வளர்த்தீர்கள்?'' ரொம்ப அறிவாளி உங்க பையன், ரொம்ப வினயமானவன், அழகன், ஆள் மயக்கி, படிப்பு விளையாட்டு எல்லாத்திலேயும் உங்க பையன் தான் சார் முதல்'' என்று ஊரில் பலர் மெச்சும்போது நான் இந்த உலகத்தில் இல்லை. வானுலகில் மிதந்தேன்.
(சமீபத்தில் நண்பர் கோபாலுக்கு கூட இப்படி நடந்ததாக தன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் '.ஈன்ற மகனை பெரிதுவக்க சான்றோர் என்று கேட்ட தாய்')
''கண்ணம்மா உன் பட்டுக் கன்னத்தில் முத்தமிடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒரு ரகசியம். இழுத்து பிடித்து அணைத்து இச் சென்று ஒரு கன்னத்தில் முத்தம் பதிக்கும்போது காசு கொடுக்காமலேயே, டாஸ்மாக் போகாமலேயே நிறைய கள் வெறி என் நெஞ்சில் ஏற்பட்டு விடுமே. அப்படி ஒவ்வொரு தரமும் உன்னை இருக்கிப் பிடித்து அணைத்துக் கொள்ளும் போதேல்லாம் என் கண்ணம்மா, எனக்கு நினைவே அழிந்து விடும். நான் யார், என்ன பெயர், எந்த ஊர், என்ன உலகம் என்றே தெரியாத ஒரு உன்மத்தத்தின் உச்சியில் ஒரு இன்ப போதை எனக்கு தானாகவே லயித்துவிடும். எனக்கு அதிலேயே இருக்க ரொம்ப ரொம்ப ஆசை கண்ணம்மா.
யாராவது ஏதாவது உன்னைச் சொன்னாலோ, உனக்கு எங்காவது அடிபட்டாலோ, உனக்குப் பிடிக்காதது ஏதாவது நடந்து விட்டாலோ, நீ விசனத்தோடு பொங்கி வரும் அழுகையோடு, முகம் சிவப்பாக நிற்பதைக் கண்டால் எனக்கு உலகமே சுற்றுமடி கண்ணம்மா. என்னன்னவோ பயங்கரமான எண்ணங்கள் நெஞ்சில் தோன்றி என்னை அடியோடு குலைத்து விடும். உன் ஒரு நெற்றிச் சுருக்கத்தில் என் நெஞ்சு பதினாயிரம் சுக்கலாக வெடித்து விடுமே. பித்தம் பிடித்தவனாகி விடுவேனே. வேண்டாம், அந்த அனுபவம், வேண்டவே வேண்டாம் கண்ணம்மா அந்த துன்பம் .
அந்த மாதிரி ஒரு கணம் நீ துன்பத்தில் ஆழ்ந்து உன் கண்ணிலிருந்து முத்துக் களாக கண்ணீர் வந்தது என்றால் நான் தொலைந்தேன். அங்கே சொட்டுவது உன் கண்ணீராக இருக்காது கண்ணம்மா, அங்கே என் உதிரம், என் ரத்தம் கொதித்து ஆறாக நெஞ்சிலிருந்து பொங்கி எழுந்து வெள்ளமென பெருகி ஓடும்.
உன்னைப் பொத்தி பொத்தி வளர்க்கிறேன் கண்ணம்மா. என் கண்ணின் பாவை மட்டுமல்ல பார்வையும் கூட நீ தானடி தெய்வமே.
எனக்கு என்று தனியாக ஒரு உயிர் இருக்கிறது என்று யாரேனும் நினைத்தால் அவர்களைப் போல் விஷயம் அறியாதவர்கள் உலகத்திலேயே கிடையாது. எனக்கு உயிர் இருக்கிறது ஆனால் அது என்னிடம் இல்லையே. அதைத் தான் உன் உயிர் என்று நான் உன்னுள் வைத்திருக்கிறேனே.
நீ மழலையில் பேசும் போதெல்லாம் நான் மயங்கிப்போய் விடுவேனே. எத்தனையோ கஷ்டங்கள், துன்பங்கள் என்னை வாட்டும். தூக்கமின்றி தவிப்பேன். அப்போதெல்லாம் உன் ஒரு பேச்சு, மழலை மொழி, என் அத்தனை துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் தூக்கி வெளியே எறிந்துவிடுமே.
விடியற்காலையில் பூக்கள் மலிந்த தோட்டத்தில் உலாவிய அனுபவம் உண்டா?. பூக்களைப் பிடித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?. உங்களுக்குத் தெரியுமே நேற்றில்லாமல், சிறு மொட்டாக நேற்றுப் பார்த்து, காத்திருந்து, அது இன்று காலை கண்கள் தேடும்போது அழகாக விரிந்து ''என்னைப் பார்த்தாயா, நான் அழகா இல்லையா?'' என்று கேட்டிருக்குமே?
அப்போது இருக்கும் மன நிலை தான் உனது முல்லைச் சிரிப்பில் கண்ணம்மா. நெஞ்சில் ஈவு இரக்கம் இல்லாதவனையும் அந்த முல்லை மலர் முன் கொண்டு நிறுத்துங்கள். அவன் மூர்க்கம் அனைத்தும் தொலைந்து அவன் சன் மார்க்கம் பெறுவானே. நான் சந்தோஷப்படுவதில் என்ன ஆச்சர்யம்.
[color=red]
ஒரு குழந்தையை அதன் தந்தை தனது நண்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ''அம்பி! அம்பி மாமாவுக்கு இந்தி பேசி காட்டு.''
ஆறு வயது அம்பி அம்பி மாமாவை பார்த்தான்.(நன்னா கவனிச்சேளா கோந்தையும் அம்பி ,மாமாவும் அம்பி ) சிரித்தான்.
"அம்பி மாமாவுக்கு இந்தி பேசி காட்டுடா. சீக்கிரம் ''.
''அம்பி பேசுடா பயலே நான் கேட்க காத்திருக்கிறேன்'' என்றார் அந்த மாமாவும்
அம்பி பேசினான். '' மாமா மர்கயா''
அம்பியின் அப்பாவுக்குஇந்தி தெரியாது. சந்தோஷமாக மாமா பக்கம் திரும்பும்போது மாமா வெளியே சென்று வெகு நேரமாயிருந்தது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
கண்ணம்மா, உன் பேச்சுக்கள் எனக்கு இன்பக் கதைகள். எத்தனை பெரிய பெரிய ஆசிரியர்களின் புத்தகம் படித்தாலும் உன் வார்த்தை போல் அவை எனக்கு இனிக்கவில்லையடி.
புத்தகம் அறிவைத் தந்தது. அன்பைத் தரவில்லை. நீ அன்பையே புத்தகமாக தருகிறாயே கண்ணம்மா. அன்பே தெய்வம் என்பது உன்னில் நான் அறிந்த பாடம்.
நான் நகைகள் நிறைய வாங்கி நெஞ்சில் மார்பு மறைக்க அணிவதில் விருப்பமில்லாதவன். விருப்பமிருந்தாலும் அதை ஆசை நிறைவேற வசதி இல்லாதவன். எனக்கு இப்படிப்பட்ட நகைகள் தரக்கூடிய பெருமை, இன்பம், சுகம், எல்லாமே, உன்னை மார்புறத் தழுவும்போது கிடைக்கும் போது நான் அனுபவிக்கிறேனே அதற்கு கால் தூசியாகுமா? எனக்கு வாழ்வில் பெருமிதம் உறுவதற்கு, சுகமடைய, ஈடிணை அற்ற நான் பெற்ற சங்க நிதி பத்ம நிதி எது தெரியுமா, நீ, நீ, நீயே கண்ணம்மா. என் செல்வமே.
இது வரை நீங்கள் படித்தது என் கற்பனையல்ல. நான் ரசித்து மகிழ்ந்த மகாகாவி சுப்ரமணிய பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை என்று கண்ணனை குழந்தையாக பாவித்து அனுபவித்த மகா காவியம். இதோ அது:
கண்ணம்மா - என் குழந்தை
சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! ... 1
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே! . ... 2
ஓடி வருகையிலே - கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! ... 3
உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ! ... 4
கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ! ... 5
சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ! ... 6
உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? ... 7
சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய். ... 8
இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ? ... 9
மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ? ... 10
http://www.youtube.com/watch?v=O0VNOCKk7UI
http://static.paadalvarigal.com/pvt100/1364.jpg
க்ருஷ்ணா.. என்னோடு பேசாமல் இருந்த மாதிரி பிரமை..அதான் கேட்டேன்..அது சரீஈஈ.. நீங்க்ள் போட்டிருந்த புகைப்படத்தில் நான் ந.தி யா அவர் எங்கே நான் எங்கே ....ஆனால் உங்களை வயதான ரங்காராவாக ஒத்துக்கொள்ளவே மாட்டேன் :)
அதுக்குள்ள ஒரு நீள போஸ்ட் படித் விட் வரூ..
எல்லோருடைய குட்டி கண்ணன் செல்ல கண்ணன் நீங்க சி கே
உங்களுக்காக ஒரு பாட்டு
அரும்பு விழி குறும்பு மொழி
எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும்
எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும்
பிரிந்த போதிலும் உன் நினைவு வாழட்டும்
தாய்க்கு ஒரு பிள்ளை
பாடல்: சின்ன கண்ணனே.. நான் தந்தை
பின்னணி: ஏ.எம்.ராஜா
---------------------------------------------------------------
Song: Chinna Kannane..Naan Thanthai
Singer: A.M.Raja
http://www.mediafire.com/?4r9019am8un296z
http://www.youtube.com/embed/D23veiafaDs?
வாசுவின் இன்றைய ஸ்பெஷல் (91)
//விடியற்காலையில் பூக்கள் மலிந்த தோட்டத்தில் உலாவிய அனுபவம் உண்டா?. பூக்களைப் பிடித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?. உங்களுக்குத் தெரியுமே நேற்றில்லாமல், சிறு மொட்டாக நேற்றுப் பார்த்து, காத்திருந்து, அது இன்று காலை கண்கள் தேடும்போது அழகாக விரிந்து ''என்னைப் பார்த்தாயா, நான் அழகா இல்லையா?'' என்று கேட்டிருக்குமே?//அம்பி பேசினான். '' மாமா மர்கயா'' //
க்ருஷ்ணா ஜி.. க்ருஷ்ணா க்ருஷ்ணா.. அழகாக எழுதியிருக்கிறீர்கள்.. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா அனுபவித்து..( ம்ம் கண்ணா நாளுக்கு நாள் உனக்கு போட்டி ஜாஸ்தியாகிட்டே வருதேடா ரவி, கிருஷ்ணா, கல்நாயக்னு...- மன்ச்சு சந்தோஷமா இருக்கு..ஆனாக்க எதுக்கும் நித்தி கிட்ட அப்ளைபண்ணிப்பாக்கட்டா சன்யாசியாய்டறேனே..:) )
பூவின் பாடல் 15: "பூமழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மக்கள் திலகத்தின் மிகப் புகழ் பெற்ற பாடல். வண்ணத்தில் தோய்த்தெடுத்திருக்கிரார்கள். மணமகன், மணமகளை பார்க்க பாடல் ஆரம்பம். என்ன மக்கள் திலகம் உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து ஆட தங்கை சாரதா தன் அண்ணனை பார்த்து நேரில் சந்திக்க வரும்போது அந்த கட்டையுடன் போராடி வருவதைப் பார்ப்பதற்கு நமக்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது. கண்ணீர் விட்டு அழுவதைப் பார்பதற்கும் சிரமமாய் உள்ளதே. காரில் வந்து இடித்தவர்களாவது 'எதற்கம்மா இப்படி' என்று கேட்டு உதவக்கூடாதா? மக்கள் திலகம் கிரீன் சட்டை, பேன்ட் அணிந்து பாடலுக்கு நடித்தது பாடலை எவர்க்ரீன் ஆக்கி விட்டது.
https://www.youtube.com/watch?v=csBahBsXvaA
சி கே
நான் உங்களுக்கு போட்டியா ? சான்சே இல்லை .
நீங்க NT ன்னா நான் NS (நடிப்பு சுடர்)
நீங்க S ன்னா நான் ES (எவர்சில்வர்)
அண்ணன் கல்நாயக்கை பாருங்க பின்னி பெடல் எடுக்கிறார்
கிரீன் - எவர் கிரீன்
https://i.ytimg.com/vi/csBahBsXvaA/hqdefault.jpg
பூவின் பாடல் 16: "மங்கலப் பூமழை பொங்கிடும் திருமேனி மணவறை நாடுகிறாள்"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~
அப்பாடி ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த படத்து பேர பார்க்கிறேன். சின்ன வயசுல பாத்தது. கே. ஆர். விஜயாவிற்கு வாணி ஜெயராம் அம்மா பாடி இருக்காங்க. முதன் முதலாக அமெரிக்காவில் எடுத்த படம் என்று வெளி வந்தது. அதற்காகவே அழைத்துச் செல்லப்பட்டேன். நயாகரா நீர்வீழ்ச்சி ஞாபகம் இருக்கிறது. ஜெய் சங்கர் கதாநாயகனாக நடித்திருந்தார். மெல்லிசை மன்னர் மியூசிக் போட்டுருக்காரு. பாத்துக்கோங்க பாட்டை.
https://www.youtube.com/watch?v=gcH15LovIz4
ஒரே வானம் ஒரே பூமிக்கே இம்மாம் சண்டை வந்துனு கீது. இதுக்கு மேல இருந்திருந்தா இன்னா ஆவறது?
ரவி,
கருவின் கரு பிரமாதமாக செல்கிறது.நிறைய விஷயங்கள் உபரி தகவல்கள் என்று. பாடல்களும் பொருத்தம். உங்கள் விஸ்வரூபம் தொடரட்டும்.
சி.க,
கோபாலனோடு நீங்கள் ஆடிய பாடலுக்கு நன்றி! கொஞ்சம் ஜாக்கிரதையாகவே ஆடவும். புலி பதுங்கி இருக்கிறது.:-d கூட ராகவேந்திரன் சார் வேறு.
'என்னமோ போங்க 11' ஐ எனக்காகவே போட்டீரோ? ராட்சஸி ஊஞ்சலில் நம்மை இழுத்து அமர வைத்து விடுவார்.
//அந்த பிள்ளை வயசுவில் எல்.ஆர் ஈ கொடுக்கற அழுத்தம் இருக்கே..ஆஹா..//
பெரிய மனசு. என் பிரிய செல்லத்தை பாராட்டியதற்கு நன்றி! இந்த பதிவுதான் தங்களின் பதிவுகளிலேயே மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.:-d