http://i66.tinypic.com/9teud2.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறு பிறவி கண்ட நாள் . 12.1.1967.
அரசகட்டளை முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை [ 1967-1978] மக்கள் திலகத்தின் 44 படங்களை காணும் வாய்ப்பை பெற்றோம் .மக்கள் திலகத்தின் குரல் பாதிக்கப்பட்டாலும் ரசிகர்களும் மக்களும் அதை குறையாக கருதாமல் எங்க வீட்டு பிள்ளை மக்கள் திலகம் என்று ஏற்று கொண்டார்கள் .11 ஆண்டுகளில் மக்கள் திலகம் படைத்த திரை உலக சாதனைகள் , பெற்ற விருதுகள் , ரசிகர்களுக்கு கிடைத்த விருந்துகள் மறக்க முடியாதவை .
மக்கள் திலகம் மிகவும் இளமையாகவும் ,பேரழகனாகவும் பல புதுமையான காட்சிகள் , சண்டை காட்சிகள் , என்று ரசிகர்களின் எதிரபார்ப்புகளை நிறைவேற்றி பல பிரமாண்ட வெற்றி படங்களையும் தந்து வெற்றி மேல் வெற்றி கண்டார் .
மக்கள் திலத்தின் ''தாய்க்கு தலை மகன் '' இன்று 49 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த குடும்ப காவியம் . இனிய பாடல்கள் . சண்டைகாட்சிகள் என்று ரசிகர்களை மகிழ்வித்த படம் .
BEST SCENES FROM THAIKKU THALAIMAGAN .
https://youtu.be/d4xrVQM-_EY
திரைப்படங்களில் மக்கள் திலகம் எம்ஜியார் பாடும் போது அந்த பாடல் காட்சிக்கு ஏற்ப அவர் உச்சரிக்கும் வலிமையான வார்த்தைகள் எத்தனை உன்னதமானது ?.
நாடோடி மன்னனில் ''நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்''.
'''எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே''
''கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்''
''
நம் நாடு
நினைத்ததை நடத்தியே .....
நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் !''
''எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்''
''காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ.''
பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து சரித்திரம் படைத்த மக்கள் திலகம் ஒரு தனிப்பிறவி .
மக்கள் திலகத்தின் பாடல் காட்சிகளை கூர்ந்து கவனித்தால் நாம் பல வியக்கத்தக்க மக்கள் திலகத்தின் ஆளுமைகளை தெரிந்து கொள்ளலாம் .
காட்சிக்கு ஏற்ப பாடல் துவங்கும் முன் அவருடைய குளோஸ் அப் ஷாட் மிகவும் அழகாக காண்பித்து
பின்னர் அவருடைய ஸ்டைல் , உடை அலங்காரம் , புதுமையான நடனகாட்சிக்கு ஏற்றவாறு அவர் ஆடும் ஆட்டம் , சிரித்த முகத்துடன் , இளமை துள்ளலுடன் அவர் காட்டும் வேகம் எல்லாமே பாடலை காணும் போது மனதில் உற்சாகம் ஏற்படுகிறது .எத்தனை முறை பார்த்தாலும் பரவசமாக உள்ளது .உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத மாபெரும் தனிப் புகழாகும் .
இந்த ஒரு பாடல் காட்சி .....எல்லா அம்சமும் நிறைந்த இனிய பாடல் .....
https://youtu.be/XObyqQ50I1c
ACTRESS B. SAROJA DEVI ABOUT OUR MAKKAL THILAGAM MGR.
நான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் எனக்கு புகுந்த வீடு சென்னை தான். என்னுடைய உயிர் பிரிந்தால் கூட சென்னையில் தான் பிரியவேண்டும் என்று நான் இறைவனை பிராத்திப்பது உண்டு. என்னுடைய கணவர் கூறியது போல் அனைத்தும் நடந்து வருகிறது. இன்று நானும் உண்டு மற்றவர்களுக்கும் அளிக்கும் அளவுக்கு இறைவன் என்னை நல்ல இடத்தில் வைத்துள்ளான். என்னுடைய வாழ்க்கையில் என்னால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை மட்டும் மறக்கவே இயலாது.
அவரும் நானும் இணைந்து நடித்த நாடோடி மன்னன் படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து படத்தை கலர் படமாக மாற்றினார். அதற்க்கு காரணம் யாதெனில் நான் அந்த படத்தில் அறிமுக நடிகை, என்னை ரசிகர்கள் ஏற்று கொள்வதற்காக, படத்தில் நான் வரும் பகுதியில் இருந்து படத்தை கலர் படமாக மாற்றி இருக்கிறார். அதே நேரத்தில் எதிர்பார்த்தது போல் அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் பிறகு நானும் அவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தோம். எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தந்தவர் அவர், நான் எப்படி பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது முதல் பல நல்ல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார். என்னால்நிச்சயம் அவரை ஒருபோதும் மறக்கவே முடியாது. அவருடைய ராமாபுரம் தோட்டத்தை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எல்லோரும் அவரை தெய்வம் என்று சொல்லுவது உண்டு. நானும் அவருடைய ராமாபுரம் இல்லத்துக்கு சென்று பல முறை உணவு உண்டுள்ளேன் , பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன்.
அதனால் நீங்கள் அவர் அவரை தெய்வம் என்று கூறுவதோடு நிறுத்திவிடாமல் அவருடைய இருப்பிடம் என்பது தெய்வம் வாழும் இடம் போல் புனிதமாக கோவில் போல் இருக்க வேண்டும். அவரால் வந்தவர் இந்த சரோஜா தேவி , அவர் இல்லை என்றால் இந்த சரோஜா தேவியே இல்லை.
courtesy - nakkeeran
http://i65.tinypic.com/11jvsdf.jpg
Courtesy : Facebook - by A.R. Hussain
http://i67.tinypic.com/24wvkgn.jpg
A lovely pose of our Makkal Thilagam - from one of the 25 Un-released Movies - VELLIKKIZHAMAI
http://i67.tinypic.com/2l8ahsl.jpg
Courtesy : Facebook - by Mr. A.R. Hussain
http://i68.tinypic.com/6iz3oo.jpg
ADVANCED WISHES FOR HAPPY PONGAL
தின இதழ் -12/01/2016
http://i64.tinypic.com/xn7vq1.jpg
மாலை மலர் -12/01/2016
http://i66.tinypic.com/2yuipo9.jpg
இன்று (12/01/2016) ராஜ் டிவியில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் "குடியிருந்த கோயில் " பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/343pttv.jpg
http://i63.tinypic.com/2coh6h4.jpg
ராணி வார இதழ் -பொங்கல் மலர் 2016
-------------------------------------------------------------
ரசிகர்களை கவர்ந்த இசை மேதை திரு.ஜி.ராமநாதன்
-----------------------------------------------------------------------------------
இசைக்காக இசைந்து ஒப்படைத்து வரலாறு படைத்தவர்களில் முதன்மையானவர்
திரு. ஜி.ராமநாதன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் மதுரை வீரன், சக்கரவர்த்தி திருமகள் , ராஜாதேசிங்கு , அரசிளங்குமரி ஆகிய படங்களுக்கு சிறப்பாக இசை அமைத்திருந்தார் .
திரு. ஜி.ராமநாதன் , தனது மகள் சாயாதேவிக்கு , சென்னை ஆபட்ஸ்பரியில்
ஆரவாரமாக திருமணத்தை நடத்தினார் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திருமணத்தில்
பங்கேற்று சிறப்பித்தார் . திருமணத்தை மிகவும் தடபுடலாக நடத்தியதால்
செலவு எக்கச்சக்கமாக ஆகி இருந்தது .
இதைக் கேள்விப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
கூறி விடை பெறும்போது திரு. ஜி.ராமநாதனிடம் கணிசமான தொகைக்கு ஒரு
காசோலையை எழுதிக் கொடுத்து விட்டு போனார்.
மக்கள் திலகத்தின் பொங்கல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கும் , திரை உலக சாதனைகளுக்கும் உலகளவில் பாராட்டுக்களை பெற்று தந்தது .
1964 பொங்கல் அன்று வெளிவந்த வேட்டைக்காரன் உருவாக்கிய தாக்கம் - படத்தின் வெற்றி மற்றும் மக்கள் திலகத்தின் கவ் பாய் வேடத்தில் வெளுத்து கட்டிய சுறுசுறுப்பான நடிப்பு எல்லாமே வியக்கத்தக்க அளவிற்கு பெரும் புரட்சி உண்டாக்கிய படம் .
1965 பொங்கல் அன்று வெளிவந்த எங்க வீட்டு பிள்ளை -திரை உலக வரலாற்றில் மாபெரும் புரட்சியை , புகழை , சாதனைகளை உருவாக்கி 1977 வரை தக்க வைத்து கொண்ட காவியம் .
1966 பொங்கல் அன்று வந்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் ,
அன்பே வா - இனிய பொழுது போக்கு வெற்றி சித்திரமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்தது .
1970- பொங்கல் விருந்து மாட்டுக்கார வேலன் - வெள்ளிவிழா காவியம் , மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரு வேட நடிப்பில் கலக்கிய படம் .
[COLOR="#800080"]பானுமதிக்கு கலைமாமணி பட்டமும் இசை கல்லூரி முதல்வர் பதவியும் கொடுத்த கள்ளமில்லா பிள்ளை மனம் கொண்ட தலைவன்
[/COLOR]
dinamani 2-1-2016
http://www.dinamani.com/junction/kan...cle3204908.ece
எம்.ஜி.ஆர். முதல் அமைச்சரான பிறகும் பழசை மறக்கவில்லை. சினிமா கலைஞர்கள் மீது முன்பு வைத்திருந்த அதே பிரியத்தைக் காட்டினார். என் மீது மிகுந்த அன்புள்ளவர்.
‘உங்களுக்கு என்னம்மா... மகாலட்சுமி மாதிரி! ’ என்று அடிக்கடி சொல்லுவார் எம்.ஜி.ஆர்.
1958ல எனக்குக் ‘கலைமாமணி’ பட்டம் கொடுக்கணும்னு வந்தாங்க. அப்ப நான் அதனோட மதிப்பு தெரியாம, அதெல்லாம் வயசானவங்களுக்குத்தான் தருவாங்கன்னு சொல்லி, அந்த விழாவுக்குப் போகலை. நான் அப்படி செஞ்சது தப்பு. அதுக்கு இப்போ கூட ஃபீல் பண்றேன்.
‘அந்தம்மாவுக்கு இன்னும் கலைமாமணி பட்டம் கொடுக்கலையான்னு...? ’ எம்.ஜி.ஆர். இப்போ கேட்டாராம். உடனே, ஒரு டைரக்டரா எனக்குக் ‘கலைமாமணி’ கொடுத்துட்டாங்க.
1985 முதல் 1988 வரை ‘சென்னை இசைக் கல்லூரி’க்கு என்னை முதல்வராக்கி மகிழ்ந்தார்.