http://i66.tinypic.com/30t42t0.jpg
Printable View
சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு " -வெள்ளி முதல் (20/05/2016) தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
சரவணாவில் இந்த ஆண்டின் இணைந்த 7 வது எம்.ஜி.ஆர். வாரம் .
http://i65.tinypic.com/2n0q440.jpg
சென்னை பாட்சாவில் (மினர்வா) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " வெள்ளி முதல் (20/05/2016) தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2eyc8z8.jpg
நேற்று (20/05/2016) அதிகாலை 4 மணிக்கு ஜெயா மூவிஸில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நல்லவன் வாழ்வான் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/14sjdoi.jpg
http://i66.tinypic.com/2m2yt5j.jpg
இன்று (21/05/2016) அதிகாலை 4 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"ராஜா தேசிங்கு " ஜெயா மூவிஸில் ஒளிபரப்பாகியது.
நாளை (22/05/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த " குடியிருந்த கோயில் " ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/2z7exck.jpg
என்றும் திரையிலும், அரசியலிலும் ஏக சக்கரவர்த்தி ஆக திகழும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் வெற்றி பிரகாசம் என்றேண்டும் சுடர் விட்டு பிரகாசிக்கும் ...
மக்கள் திலகம் எம்ஜிஆரின் மகத்தான மக்கள் சக்தி .
1989 முதல் 2016 வரை நடைப்பெற்ற 7 சட்ட சபை தேர்தல்களில் 4 முறை அதிமுக ஆட்சியில் அமர்ந்தது . 1989 முதல் 2014 வரை நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் 1991 மற்றும் 2004 நீங்கலாக 6 முறை மகத்தான வெற்றிகளை கண்டுள்ளது . 2014 பாராளுமன்ற தேர்தலில் 37/40 வெற்றி பெற்றது
இந்திய அரசியலிலும் , தமிழக சட்ட சபை வரலாற்றிலும் பலம் பொருந்திய கட்சியாக விளங்கும்
புரட்சிதலைவர் எம்ஜிஆர் நிறுவிய '' அண்ணா திமுக '' மீண்டும் 2016 சட்ட மன்ற தேர்தலில் தனது பலத்தை நிருபித்துள்ளது .
2016 தேர்தலில் ஆளும் கட்சியின் மீது எதிர்ப்புகள் ஏராளம் இருந்தாலும் ,அதை எல்லாம் மீறி மக்கள் மனங்களில் நிலைத்து விட்ட புரட்சிதலைவர் எம்ஜிஆர் மற்றும் அவர் உருவாக்கிய வோட்டு வங்கி , இரட்டை இலை சின்னம் ஏற்படுத்திய தாக்கம் - இம்முறை அதிமுக வெற்றிக்கு காரணமாக இருந்தது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் எல்லா துறைகளிலும் பல சாதனைகள் புரிந்து மக்கள் உள்ளங்களில் நிர்ந்தரமாக் குடி புகுந்தார் .தலைமுறைகள் மாறினாலும் மக்கள் எம்ஜிஆரை மறக்கவில்லை. மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கும் நேரத்தில் அவருடைய இயக்கம் ஆட்சியில் தொடர்வது உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு வாழ்நாள் சாதனை ,பெருமை , மன நிறைவு , இது ஒன்று போதுமே .
http://s32.postimg.org/6ri7f6jph/FB_...ed_Picture.jpg
Courtesy - facebook
http://s32.postimg.org/xbrse5yyt/FB_...ed_Picture.jpg
Courtesy - facebook
DAILY THANTHI DT NEXT -21/05/2016
http://i66.tinypic.com/301kdcn.jpg
அந்திமழை -மே 2016
http://i65.tinypic.com/2s9ccyc.jpg
http://i67.tinypic.com/2vhy9w5.jpg
ஜனனம் வார இதழ் -20/05/2016
http://i66.tinypic.com/xm1zqt.jpg
http://i67.tinypic.com/28ciqlz.jpg
http://i67.tinypic.com/ouqw4o.jpg
தினத்தந்தி -21/05/2016
http://i64.tinypic.com/sxf0nn.jpg
தினசெய்தி -21/05/2016
http://i68.tinypic.com/2mo78zk.jpg
இன்று அதிகாலை 4 மணிக்கு ஜெயா மூவிஸில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"ராஜராஜன் " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/3148ois.jpg
தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் நடித்த " நீரும் நெருப்பும் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/3516dyh.jpg
இன்று (22/05/2016) மாலை 6 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
" நல்ல நேரம் " 7 ஸ்டார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/npmo9e.jpg
அனைத்திந்திய அண்ணா தி.மு.க. வின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் பொருட்டு , மதுரை சென்ட்ரல் சினிமாவில் 27/05/2016 வெள்ளி முதல்
புரட்சி நடிகர் / மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய
"குடியிருந்த கோயில் " வெள்ளித்திரைக்கு வருகிறது
http://i67.tinypic.com/98gkfq.jpg
தகவல் உதவி ; மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா தொலைகாட்சியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "ராமன் தேடிய சீதை" ஒளிபரப்பாகிறது.
http://i65.tinypic.com/2mmzvr9.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் வாழ்க்கையில் இந்த நாள் ..இனிய பொன்னான திரு நாள் .
மக்கள் திலகத்தின் இயக்கம் அதிமுக மீண்டும் 7 வது முறையாக ஆட்சியில் பொறுப்பேற்கும் இனிய திரு நாள.
1973 - மே 2016 -மே
உலகம் சுற்றும் வாலிபன் பிரமாண்ட வெற்றி
திண்டுக்கல் இடைதேர்தல் அமோக வெற்றி
அகில இந்தியாவின் பத்திரிகைகள் நமது மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு - குறித்து அருமையான தலையங்கம் எழுதினார்கள்
மக்கள் திலகத்தின் வெற்றியினை ஜீரணிக்க முடியாதவர்கள்
வழக்கம் போல குறை கூறினார்கள் .
தயாரிப்பாளர்கள் பலர் மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்க
போட்டி போட்டனர்
அரசியல் பிரமுகர்கள் அண்ணா திமுகவில் தினமும் இணைந்த வண்ணம் இருந்தனர் .
அதே நேரத்தில் ஆளும் கட்சியினர் மறைமுக தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தி தோல்வி கண்டே தோய்ந்து போனார்கள்
மக்கள் திலகம் ஒரே நேரத்தில் 10 படங்கள் மேல் ஒப்பந்தம் ஆனார் .
1973 - திண்டுக்கல் விதை ......
1974 - புதுவை - கோவை மேற்கு வளர்ந்து
1977 - நாடாளுமன்ற தேர்தலில் பூத்துக்குலுங்கி செடியாகி
1977 - சட்டசபை தேர்தலில் கனி தரும் மரமாக வளர்ந்து
2016 - இன்று ஆலமரமாக விருத்தி அடைந்தது என்றால்
அது
நமது தெய்வம்
மக்கள் திலகம் அவர்களின் உழைப்பு -
புரட்சித்தலைவரின் நேர்மை
செல்வாக்கு
புகழ்
இரட்டை இலை சின்னம்
தமிழ் நாட்டுக்கு அவர் செய்த எண்ணிலடங்கா சேவை
ஏழைகளின் நன்றி
கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு
என்றால் அது - உண்மை - உண்மை .
UZHAIKKUM KARANGAL - 41ST ANNIVERSARY
http://i1170.photobucket.com/albums/...ps9f092e05.jpg
அது கண்ணதாசன் இறுதி ஊர்வலம்...!
பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்தார்கள்..!
அதன் பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது...!
அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு ..!
கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
கீழே நின்ற மக்களுக்கு கண்ணதாசனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை..!
கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர் !
“ஐயா...கவிஞர் முகம் எங்களுக்கு தெரியலையே ஐயா ..”
அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர் , யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் , மின்னல் வேகத்தில் கண்ணதாசன் உடல் இருந்த அந்த வாகனத்தில் தாவி ஏறினார்...!
கண்ணதாசன் உடலை சற்றே உயர்த்தி , ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு அந்த மனிதர் , சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்...!
திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது...!
ஆம்.. இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது..!
திருப்தியோடு அந்த இறுதி வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர்...
அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்..!
அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே காரியம் நடந்திருக்கும் ...!
ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை..!
காரணம்....
கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை...
மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு...!
# கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான் , 1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். ! அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக , ‘‘ நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும்... இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்...!
எப்படித் தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..?
1981 இல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்..!
இறுதி நேரத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்த அந்த அரசு மரியாதைக்கு நன்றி சொல்ல இயலாத நிலையில் கண்ணதாசன்...!
ஆம்.... கவிஞன் வாக்கு பலித்தது..!
# எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
“சங்கே முழங்கு” பாடல் வரிகள் :
“ வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி ”
courtesy john durai in fb
சென்னை மகாலட்சுமியில் தற்போது வெற்றிநடை போடுகிறது.
ஞாயிறு மாலை காட்சிக்கு விஜயம் செய்தவர்கள் சுமார் 750 நபர்கள்.
http://i67.tinypic.com/24m6e15.jpg