நன்றி.
Printable View
ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு பக்கம் நடந்தால் கூட, மக்கள் திலகம் பிறந்த நாள் கோலகாலகமாக தமிழ்நாடு முழுதும் கொ்ண்டாடப்பட்டது. ஆனால், ஒரு நடிகரின் ரசிகர்கள் நம் தலைவரின் பிறந்த நாளை மக்கள் ஒதுக்கிவிட்டார்கள் என்று கூறிகிறார்கள்.
அந்த நடிகரின் மகனே நடிகர் சங்க விழாவில் கலந்து கொண்டு புரட்சித் தலைவரின் படத்துக்கு மரியாதை செய்தார். சமாதியிலும் மரியாதை செய்தார். ஒரு வருடம் முழுது்ம் விழா கொண்டாட வேண்டும் என்றார். அப்பிடி இருக்கும்போது இவர்கள் உளறுகிறார்கள்.
ஏன்? இந்த நடிகரின் பிறந்தநாள், நினைவுநாளை யார் கொண்டாடுகிறார்கள். மறந்தே போய்விட்டார்கள். சென்னையில் இரக்கும் சிலையும் சில மாதங்களில் தூக்கப்பட்டு யாருமே போகாத மண்டபத்துக்குள் வைக்கப்போகிறார்ள். அந்த விரக்தியில் உளறுகிறார்கள். அந்த நடிகரின் சிலைக்கு கவுன்ட் டவன் ஸ்டார்ட்.... நல்லா பாட்டு பாடறவன், நல்லா வண்டி ஓட்டறவனுக்கெல்லாம் சிலை வைக்க முடியுமா?
எம்ஜிஆர் பெயரில் மாமனிதர் விருது!- சித்ரா லட்சுமணன் கோரிக்கை
Read more at: http://tamil.filmibeat.com/news/chit...rd-044314.html
ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று அவரது பெயராலே மா மனிதர் விருது வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வருக்கு சித்ரா லட்சுமணன் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
புரட்சி நடிகர் என்றும் புரட்சித் தலைவர் என்றும் தமிழக மக்களால் பாசத்தோடு அழைக்கப்படுகின்ற எம் ஜி ஆர் அளவிற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த நடிகர்-தலைவர் எவரும் இல்லை. மக்களால் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதால்தான் தமிழ் சினிமாவை முப்பதாண்டு காலமும் தமிழ் நாட்டை பதினொரு ஆண்டு காலமும் அவரால் ஆள முடிந்தது. காலம் அவரது உயிரைப் பறிக்காமல் இருந்திருந்தால் எக்காலத்திலும், எவராலும் எம்ஜிஆரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கியிருக்கவே முடியாது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இன்றும் தமிழக மக்களில் பலர் தங்களை வாழவைக்க அவதரித்த கடவுளாகவே எம் ஜி ஆர் அவர்களைப் பார்ப்பதால்தான் பூஜை அறையில் அவரது படத்தை வைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். நான் தயாரித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவிலே கலந்து கொண்டு சிறப்பித்த புரட்சித் தலைவரோடு பல சந்தர்ப்பங்களில் மிகவும் நெருக்கமாக பழகுகின்ற வாய்ப்பை இறைவன் எனக்கு அளித்ததை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
இன, மத, கட்சி வேறுபாடின்றி எல்லோராலும் மதிக்கப்படுகின்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சேவை மனப்பான்மையுள்ள ஒரு நல்ல மனிதரைத் தேர்ந்தெடுத்து 'எம்ஜிஆர் மா மனிதர் விருது' என்று பெயரிலே ஒரு விருது தர வேண்டும் என்றும் அந்த விருது வழங்கும் விழாவை ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் அவர்களின் அவரது பிறந்த நாளான ஜனவரி பதினேழாம் தேதி மிகப்பெரிய விழாவாக தமிழக அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்றும் தங்களை அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்," என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
காமராஜர் கொண்டு வந்த மத்திய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக விரிவுப்படுத்தி ஏழை குழந்தைகளின் பசியை எம்ஜிஆர் போக்கினார். கலைத் துறையில் உச்சம் தொட்டு, அரசியல் துறையிலும் சிகரம் தொட்டவர்.
நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உறுதுணையாகச் செயல்பட்ட தேசியத் தலைவர். எம்ஜிஆரும் மூப்பனாரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருங்கிப் பழகியவர்கள்.
பன்முகத் திறன் கொண்ட எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் உற்சாகக் கொண்டாட்டம் - சிறப்பு தபால் தலை வெளியீடு
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 100வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் உள்பட பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தபால்தலை, சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும்கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாள் விழா என்பதால், இதனை சிறப்பாக கொண்டாட அக்கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத்தினர், கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கும், திருவுருவ படத்திற்கும் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அதிமுகவினர் மட்டும்மல்லாது திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிறப்பு தபால் தலையை, தலைமை அலுவலர் மூர்த்தி வெளியிட ஓ.பன்னீர் செல்வம் பெற்று கொண்டார்.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.
தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிறப்பு தபால் தலையை பொதுச்செயலாளர் சசிகலாவிடம் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி அரசு செய்தி, விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாசம், நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி உள்ளிட்டோர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தித்துறை இயக்குநர் உதயகுமார் மறறும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், அவர் குறித்த அபூர்வ புகைப்படங்கள், தகவல்களை ஆவணப்படுத்தி வருகிறார் தூத்துக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர்.
தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் வே.குப்புசாமி (69), வரலாற்று ஆசிரியர். தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகளும், தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆண்டுகளும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பழங்கால பொருட்கள் சேகரிப்பு
வரலாற்று ஆசிரியர் என்பதாலோ என்னவோ அரிய வரலாற்று பொக்கிஷங்களை சேகரித்து பாதுகாப்பதில் குப்புசாமிக்கு அலாதி பிரியம். ஏராளமான பண்டைய கால பொருட்களை சேகரித்து தனது இல்லத்தையே வரலாற்று களஞ்சியமாக மாற்றியுள்ளார்.
இது மட்டுமின்றி மகாத்மா காந்தி தொடங்கி அப்துல்கலாம் வரை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த தலைவர்களின் அரிய புகைப்படங்கள், அவர்களை பற்றிய முக்கிய தகவல்கள், ஆவணங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.
அபூர்வ புகைப்படங்கள்
தனது மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவராகவும், தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவருமான எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தியுள்ளதுடன், அவரது அபூர்வ புகைப்படங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.
எம்ஜிஆர் பங்கேற்ற சினிமா நிகழ்ச்சிகள், விருது பெறும் விழாக்கள், பாராட்டு விழாக்கள், அரசியல் கூட்டங்கள், உலக மற்றும் தேசியத் தலைவர்களுடன் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த படங்கள், அமெரிக்காவுக்கு அவர் சிகிச்சைக்கு சென்ற போதும், சிகிச்சை முடிந்து அங்கிருந்து திரும்பிய போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி போன்ற பல முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வைத்துள்ளார்.
மேலும், எம்ஜிஆர் தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள், கட்டுரைகள், பேட்டிகள், புத்தகங்கள், பத்திரிகைகளில் அவர் எழுதிய, ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘எனது வாழ்க்கை பாதையிலே’ உள்ளிட்ட தொடர்கள், சினிமா இதழ்களில் அவரைப்பற்றி வெளிவந்த தகவல்கள், அவரது சினிமா குறித்த விமர்சனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளார். ‘தி இந்து’ நாளிதழில் 100 நாட்கள் தொடராக வந்த ‘எம்ஜிஆர்-100’ என்ற கட்டுரைகளும் இதில் அடங்கும்.
எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் குறுந்தகடுகள், பாடல்கள் மற்றும் வசனம் அடங்கிய சுமார் 700 இசைத்தட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார். இசைத்தட்டுகளை இயக்க பழைய கிராமபோன் கருவி ஒன்றையும் வைத்துள்ளார்.
தூய்மையானது
எம்ஜிஆர் மீது தனக்கு மிகுந்த பற்று ஏற்படுவதற்கான காரணம் குறித்து குப்புசாமி கூறும்போது, ‘‘எம்ஜிஆரின் சினிமா வாழ்க்கையும் சரி, அரசியல் வாழ்க்கையும் சரி தூய்மையானதாவே இருந்தது. எந்தப் படங்களிலும் அவர் மோசமான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. சிகரெட், மது பழக்கங்களை சினிமாவில் கூட அவர் தொடவில்லை.
மேலும், அரசியலுக்கு வந்த பிறகு அவர் கொண்டுவந்த சத்துணவு திட்டம் இன்றும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. இதுபோன்ற அவரது நல்ல திட்டங்கள் என்னை கவர்ந்ததன் காரணமாகவே அவர் மீது எனக்கு பற்று ஏற்பட்டது.
எம்ஜிஆர் தொடர்பான தகவல் எந்த பத்திரிகைகளில் வெளிவந்தாலும் அவற்றை உடனடியாக சேகரிப்பேன். எம்ஜிஆர் குறித்த ஆயிரம் புகைப்படங்கள், 25 புத்தகங்கள், ஏராளமான இசைத்தட்டுகளை சேகரித்து வைத்துள்ளேன். எம்ஜிஆர் 130 படங்களில் நடித்துள்ளார். இதில் 100 படங்களின் குறுந்தகடுகள் என்னிடம் உள்ளன. இவற்றை சேகரிக்க எம்ஜிஆரின் தொண்டர் செல்வம் என்பவர் எனக்கு உதவினார்.
நகைகளை விற்று உதவினார்
மேலும், என்னோடு பணியாற்றிய அருட்சகோதரர்கள் லூர்து, லாரன்ஸ் ஆகியோரும் பெரிதும் உதவி புரிந்தனர். எனது மனைவி முத்துலெட்சுமி இதற்காக அவரது நகைகளை விற்றும் கூட பணம் தந்துள்ளார்.
சென்னை, மதுரை, திருச்சி என தமிழகம் முழுவதும் சென்று சுமார் 25 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு இவற்றை சேகரித்து வரலாற்று பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.
வருங்கால சந்ததிகளான மாணவர்களுக்கு இவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
100 பள்ளிகளில் கண்காட்சி
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பள்ளிகளில் எம்ஜிஆர் குறித்த கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளேன். இது தொடர்பாக பள்ளிகளிடம் பேசி வருகிறேன். முதல் கட்டமாக தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கண்காட்சி நடத்த முடிவு செய்துள்ளேன்.
இன்று அறிவியலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வரலாற்றுக்கு கொடுப்பதில்லை. நமது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை பாதுகாக்க வரலாறு முக்கியம். எனவே, வரலாற்றுக்கும் இன்றைய மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
அதிமுக-வினர் மட்டும்மல்லாது திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சத்தியமூர்த்தி பவனில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 100-ஆவது பிறந்த நாள் விழா, காங்கிரஸ் அலுவலத்தில் கொண்டாடப்பட்டது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
தேசியத் தலைவராகவும் விளங்கியவர் எம்ஜிஆர். தமிழக மக்களின் நெஞ்சம் நிறைந்தவர். உலகம் போற்றும் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இறந்த பிறகு வழிபடுவது இயல்பு. அந்த வகையில்தான் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறோம். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டவன் நான் (திருநாவுக்கரசர்) என்பது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் தெரியும். ஜல்லிக்கட்டை அடுத்த ஆண்டாவது நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றார். காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் குமரி அனந்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விஸ்வநாதன், மாநிலப் பொதுச்செயலர் கே.சிரஞ்சீவி, மாமன்ற முன்னாள் உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில், திருச்சி ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரெங்கநாத பெருமாள் ஆலய அன்னதான கூடத்தில், கடந்த 17-ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சங்க நிர்வாகி கள் வெங்கடேச பெருமாள், செல்வகுமார், பாபு, ஹயாத், நாகராஜன் மற்றும் உறுப்பினர்கள் நாகராஜன், ராமச்சந்திரன், திருப் பூர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் மலரவன், மதுரை மா.சோ.நாராய ணன், சரவணன், தாராபுரம் குருநா தன் முதலானோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஒத்துழைத்த டைமண்ட் திருப்பதி, முத்துகிருஷ்ணன், சிந்தாமணி கிருஷ்ணன், ஆட்டோ சரவணன் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சென்னையிலும் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் விழாவில், எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா ஆரூர் தாஸ் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. விழாவில் ஏழுமலை மற்றும் சங்க துணைத்தலைவர் எஸ்.எம்.மனோ கரன், வி. ஆர். செல்வகுமார், சர வணன், கணபதி, மற்றும் உறுப் பினர்கள் சுரேந்திர பாபு, வெங்க டேசன், ரவிசங்கர், கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் வகையில் தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சினிமாவில் நடித்தபோதும், தீவிர அரசியலில் ஈடுபட்டபோதும் மக்களை சந்திப்பதற்காக தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தை எம்ஜிஆர் பயன்படுத்தினார்.
எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்து மந்திர சொல்லுக்கு தமிழக மக்கள் கட்டுண்டு கிடந்தார்கள் என்பது கடந்த கால வரலாறு என்று முடித்து விடமுடியாது. எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனாலும் அவரது பெயரை உச்சரிக்கும் போது இளைய சந்ததியினரும் உற்சாகம் அடைகின்றனர்.
அதற்கு காரணம் சினிமாவில் அவரது துடிப்பான நடிப்பும் மட்டுமல்ல. அரசியலில் ஏழை மக்களுக்கு அவர் ஆற்றிய பணியும் தான். 1970ம் ஆண்டுகளிலிருந்து தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் தான் சினிமா தொடர்பான முடிவுகளையும் அரசியலில் முக்கிய முடிவுகளையும் எடுத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள் அத்தனையும் இந்த இல்லத்தில் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மனதிடத்துடன் உடல் திடத்துடன் இருக்க வேண்டும், தீய பழக்கங்களை ஒரு போதும் அண்ட விடக் கூடாது என்று உறுதியுடன் வாழ்ந்த எம்.ஜி.ஆர், தமது படங்களில் அது போன்ற காட்சியில் ஒருபோதும் நடித்தது இல்லை..தம்மை பின்பற்றும் ரசிகர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார். அவர் தினமும் உடற்பயிற்சிக்கு பயன்படுத்திய கருளா கட்டை, தம்ப்ல்ஸ் என அனைத்தும் அப்படியே இந்த இல்லத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
கொடி நாள் நிதிக்காக 25,000 ரூபாய் அளித்ததற்கு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம், ராஜீவ்காந்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் எழுதிய கடிதத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெகிழ்ச்சியுடன் ராஜீவ்காந்தி எழுதிய கடிதம், எம்.ஜி.ஆர் வாங்கிய பல்வேறு பட்டங்கள், பாரத ரத்னா விருதுகள் என அனைத்தும் இந்த இல்லத்தில் கால பெட்டகங்களாக இருக்கின்றது என்கின்றனர் பார்வையாளர்கள்.
கால சக்கரங்கள் சுழன்றாலும் கால தேவனை விஞ்சி நிற்கும் எம்.ஜி.ஆரின் புகழ் நூற்றாண்டு கடந்தாலும் நிலைத்து நிற்கும் என்பதே அவரது அபிமானிகளின் திடமான நம்பிக்கையாகும்.
ஜனவரி 17. புரட்சித் தலை வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது பிறந்த நாள். இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன. எம்.ஜி.ஆர் அவர்கள் ‘சதிலீலாவதி’ படத்தில் துணை நடிகராக நடிக்க ஆரம் பித்து பட்டினியோடும், வறுமையோடும் வளர்ந்து புரட்சித் தலைவராக, தமிழக முதலமைச்சராக, சிறந்த அரசியல் வாதியாக, மக்கள் தொண்டராக, வள்ளலாக மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்தவர்.
அவர் இறந்து 29 ஆண்டுகள் ஆன பிறகும், அவர் பெயரை பயன் படுத்தித்தான் ஓட்டு கேட்க வேண்டிய நிலை சிலருக்கு. அவர் நடித்து ஏவி.எம். தயாரித்த ‘அன்பே வா’ படத்தை இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள் இயக் கும்போது, அதில் நான் உதவி இயக்கு நர். அந்நினைவுகள் என்றும் மறக்கவே முடியாதவை. ஏவி.எம்.சரவணன் சாருக்கு இரண்டு முறை ‘செரீஃப்’ பதவி கொடுத்து பெருமைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். எனக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு. அது, புரட்சித் தலைவரை வைத்து என்னால் படம் இயக்க முடிய வில்லை என்பதுதான். அதற்குக் காரணம், நான் இயக்குநராக ஆனபோது அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார்.
கவியரசு கண்ணதாசன் அவர்கள், ‘‘நான் நிரந்தரமானவன்; எந்த நிலையிலும் அழிவில்லை!’’ என்று சொல்லியதைப் போல், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என் றைக்கும் மரணமில்லை. அவரது 100-வது பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அவரைப் பின்பற்றுவோம்!
‘தி இந்து’ செய்தி எதிரொலியாக தாம்பரத்தில் 22 ஆண்டுகளாக மூடிக்கிடந்த எம்.ஜி.ஆர் சிலை, அவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று திறக்கப்பட்டது.
சென்னை அடுத்த தாம்பரத்தில் சண்முகம் சாலை - ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கலச் சிலை கடந்த 1995-ம் ஆண்டு நிறுவப்பட்டது. தாம்பரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான மறைந்த எல்ல.ராஜமாணிக்கம் முயற்சியால் இந்த சிலை அமைக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்கு காரணமாக சிலை திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டிருந்தது. பிறகு நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வந்தும் கோஷ்டிப் பூசல் காரண மாக சிலை திறக்கப்படவில்லை.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் அவரது சிலை திறக்கப்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள், ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இதுகுறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.
இந்நிலையில், தாம்பரம் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் சிலை வர்ணம் பூசி சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, நகர செயலாளர் கூத்தன் தலைமையில் நேற்று சிலை திறப்பு விழா நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் சிலையை எல்ல.ராஜமாணிக்கத்தின் மகனும், காஞ்சி கிழக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளருமான எல்.ஆர். செழியன் திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
பிறகு காஞ்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லப் பாக்கம் ச.ராஜேந்திரன் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி னார். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மகிழ்ந்து வரவேற்றனர்.
காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு நேற்று செவ்வாய்க்கிழமைதமிழகத்தில் உள்ள சில திரைஅரங்குகளில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது.
மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்புபடத்தின் காப்புரிமைPADMINI PICTURES
Image caption
மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு
எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாள் தொடக்க விழாவையொட்டி, சென்னையில் சில திரையரங்களிலும் மற்றும் கோவையில் சில திரையரங்குகளிலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது மறு பதிப்பு செவ்வாயன்று வெளியாகியுள்ளது.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில், 1965-இல், பிஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான மிகப் பெரிய வெற்றித் திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன் னிட்டு அவரது படத்துக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணனின் தம்பி என். எஸ்.திரவியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
ஒருதாய் மக்கள்
மறைந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனை நாடகத்திலும் திரையுலகிலும் எம்.ஜி.ஆர். தனது வழிகாட்டியாகக் கொண்டிருந் தார். என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் என்.எஸ்.திரவியம்(96). எம்.ஜி.ஆர். நடித்த ‘ஒரு தாய் மக்கள்’ திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் எம். ஜி. ஆருடன் ஜெயலலிதா, முத்துராமன், அசோகன், பண்டரிபாய், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை என். எஸ். திரவியம் மற்றும் அவரது மைத்துனர் டி. ஏ. துரைராஜ் ஆகியோர் தயாரித்தனர்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட என். எஸ். திரவியம் (96) எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அனகாபுத்தூர் நகராட்சி முன் னாள் தலைவர் பாரதிகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மறக்க முடியாத மனிதர்
எம்.ஜி.ஆரை வைத்து ‘ஒருதாய் மக்கள்’ படம் தயாரித்தது குறித்து ‘தி இந்து’விடம் என். எஸ். திரவியம் நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது, “படம் தயாரிக்க இருப்பதாக எம்.ஜி.ஆரிடம் விருப்பத்தை தெரிவித்தேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த சமயங்களில் ஏராளமான படங்களில் நடித்தாலும் எங் களுக்கு கால்ஷீட் ஒதுக்கினார். படத்தை சரியான காலத்துக்குள் முடித்து கொடுத்தார். படம் முடிந்த பிறகே சம்பளத்தை பெற்றுக்கொண்டார். எனது அண்ணன் என்.எஸ்.கிருஷ்ணன் மீது எம்.ஜி.ஆர். மிகவும் பாசமாக இருந்தார். எனது அண்ணன் மீது அவருக்கு இருந்த பாசத்தால் எம்.ஜி.ஆர். படத்தை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு, எங்கள் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். என்னால் மறக்கமுடியாத மனிதர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர்’’ என்றார்.
-பெரு துளசிபழனிவேல்
தமிழ்த் திரையுலகில் துணை நடிகராக நுழைந்து 'சதிலீலாவதி' (1936) முதல் ஸ்ரீமுருகன், சுலோச்சனாவரை சுமார் 15 படங்களில் சிறிய வேடங்களில் தோன்றி வளர்ந்து வந்த எம்.ஜி.ஆர், 'ராஜகுமாரி' (1947) படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் புரட்சி நடிகரானார்... மக்கள் திலகமானார். அவர் புரட்சித் தலைவராக புகழ்பெற்று, கடைசியாக நடித்த படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)'. அந்தப் படம் வெளியாவதற்குள் தமிழகத்தின் முதல்வராகிவிட்டார் (1977).
115 படங்கள்வரை கதாநாயகனாக நடித்து தமிழ்த் திரையுலகில் வெற்றி நாயகனாக உலாவந்தவர் எம்.ஜி.ஆர். அவர் கதாநாயகனாக நடித்த பெரும்பாலான படங்களும் வெற்றிப் படங்களாகவும், வசூலை வாரிக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன. 100 நாட்கள் ஓடாத அவரது சில படங்களும் கூட தோல்விப் பட லிஸ்டில் சேர்ந்ததில்லை. வசூலில் பெரிய குறை வைக்காத படங்கள். எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகில் 42 ஆண்டுகள் வெற்றிகரமாக உலாவந்தாலும் அதற்கு இடைப்பட்ட காலங்களில் பலசோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தார். அப்படிப்பட்ட சோதனைகளும், வேதனைகளும் எம்.ஜி.ஆரை நெருங்கி நிலைகுலைய வைத்த போது திரையுலகைச் சேர்ந்தவர்களில் சிலர் 'எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் இத்தோடு முடிந்தது இனி அவரால் கதாநாயகனாக வெற்றி பெற முடியாது. மக்களும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்று அவரது காதுபடவே கேலியும், கிண்டலுமாக பேசினார்கள்.
ஆனால் அதையெல்லாம் மீறி அவர் நடித்த சிலப டங்கள் அவருக்கு சோதனையான காலகட்டத்திலும் மக்களைக் கவரும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து அவரது திரையுலக வாழ்க்கைகே திருப்பு முனையாகத் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரை நம்பி படம் எடுக்கவந்தவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தன. சோதனையான வேதனையான காலகட்டத்தில் அவரது சினிமா மார்க்கெட் வீழ்ந்து விடாமல் தூக்கி நிறுத்தி வெற்றி நாயகனாக அவரை வலம் வர வைத்த சில படங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
ராஜகுமாரி (1947) எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடங்களில் நடிப்பதற்கு மட்டும் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்த காலம் அது. கதாநாயனாக நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவை, இலட்சியத்தை 1947ஆம் ஆண்டு வெளிவந்த ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ராஜகுமாரி' படம் தான் நிறைவேற்றிக் கொடுத்தது. மாலதி என்ற நடிகை ஜோடியாக நடித்தார். ஏ.எஸ்.ஏ.சாமி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் உதவி வசனம் என்று மு.கருணாநிதி பெயர் போடப்பட்டது. துணை நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்தார். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்த ‘ராஜகுமாரி' படம்தான்.
மருதநாட்டு இளவரசி (1950) கோவிந்தன் கம்பெனி மூலம் தயாரிக்கபட்ட படம் ‘மருதநாட்டு இளவரசி'. ஏ.காசிலிங்கம் இயக்கிய இந்தப் படத்திற்கு வசனம் மு.கருணாநிதி என்று முதல் முதலில் டைட்டிலில் பெயர் வந்தது. கதாநாயகியாக எம்.ஜி.ஆருடன் முதன்முறையாக இணைந்து நடித்தார் வி.என். ஜானகி. 133 நாட்கள் ஓடி அதிக வசூலை கொடுத்ததால் இந்தப்படத்திற்கு பிறகு எம்.ஜி.அரை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க வைத்து படங்களை தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது ‘மருதநாட்டு இளவரசி' படம். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இல்வாழ்க்கையிலும் திருப்பத்தைத் தந்த படம் இது.
மர்மயோகி (1951) ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் கே.ராம்நாத் இயக்கத்தில் தயாரித்த படம் ‘மர்மயோகி' 151 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மாதுரி தேவி நடித்தார். வசனத்தை ஏ.எஸ்.ஏ. சாமி எழுதினார். எம்.ஜி.ஆரை அன்றிருந்த கதாநாயகர்களின் வரிசையில் முதல் வரிசையில் கொண்டுபொய் உட்கார வைத்த படம் ‘மர்மயோகி'. ஏழை எளியவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக போராடுகின்ற நாயகன் எம்.ஜி.ஆர்தான் நல்ல என்ற நல்ல பெயரை மக்களிடம் பெறுகின்ற அளவிற்கு அமைந்தது ‘மர்மயோகி'.
மலைக் கள்ளன் (1954) ஸ்ரீராமுலு நாயுடு பக்ஷிராஜா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கிய படம் ‘மலைக்கள்ளன்'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என்று பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஜோடியாக நடித்தவர் பி.பானுமதி. ஸ்ரீராமுலு நாயுடு நாமக்கல் கவிஞரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். 150 நாட்கள் ஓடி எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளிக் கொடுத்து முதல்வரிசையில் இருந்த எம்.ஜி.ஆரை திரையுலக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சக்கரவர்த்தியாக மாற்றிய படம் ‘மலைக் கள்ளன்'.
l
நாடோடி மன்னன் (1958) எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்து தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கிய முதல் படம் ‘நாடோடி மன்னன்'. இவருக்கு ஜோடியாக பி.பானுமதி, சரோஜா தேவி நடித்திருந்தார்கள். கவியரசர் கண்ணதாசன் படத்திற்கான வசனத்தை எழுதியிருந்தார். படம் வெளியாவதற்கு முன் 'இந்தப் படம் ஓடினால் நான் மன்னன் இல்லை என்றால் நாடோடி' என்று பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர். பேட்டிக் கொடுத்திருந்தார். வசூலை வாரிக்குவித்து நல்ல தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் மட்டுமில்லாமல் இரட்டை வேடத்தை ஏற்று சிறப்பாக நடிக்க கூடிய நடிகராகவும் மக்கள் ஏற்றுக் கொண்டாடிய படம். மக்கள் மனதில் இன்று வரை மன்னனாக எம்.ஜி.ஆர் அமர்ந்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த படம் ‘நாடோடி மன்னன்'.
திருடாதே (1961) ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எல். சீனிவாசன் ப.நீலகண்டன் இயக்கத்தில் தயாரித்த படம் ‘திருடாதே'. வசனத்தை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்து முதல் முதலில் ‘திருடாதே' படம் எடுக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு தாமதமானதால் படம் தாமதமாக வந்தது. ‘நாடோடி மன்னன்' சீக்கிரமாக வெளிவந்துவிட்டது. அதுவரையில் சரித்திர படங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரால் சமூகப் படங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்த படம் ‘திருடாதே'. 161 நாள் ஓடி வெற்றி விழா கொண்டாடியதால் தொடர்ந்து பல சமூகப் படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதற்கான திருப்பு முனையை ஏற்படுத்தித் தந்த படம் ‘திருடாதே'.
தாய் சொல்லைத் தட்டாதே (1961) ‘திருடாதே' படத்தை எடுத்து முடிக்க சந்தர்ப்ப சூழ்நிலையால் பல மாதங்கள் ஆனதால் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால் வெளிவருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்ற ஒரு அவப்பெயர் எம்.ஜி.ர் மீது சுமத்தப்பட்டது. அந்தப் அவப் பெயரை நீக்கிய படம் ‘தாய் சொல்லைத் தட்டாதே' சாண்டோ சின்னப்ப வேரின் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தால் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டு விரைவாக வெளிவந்த படம். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜா தேவி ஜோடியாக நடித்தார். 133 நாட்கள் ஓடி வசூலை வாரித் தந்தது.
எங்க வீட்டுப் பிள்ளை (1965) எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படங்களில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டை நீக்கிய படம் ‘எங்க வீட்டுப்பிள்ளை'. 236 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக விழா கொண்டாடிய படம். 1965, ஜனவரியில் வெளியானது. பி.நாகிரெட்டியாரின் விஜயா வாஹினி நிறுவனம் தயாரிப்பில், சாணக்கியா இயக்கத்தில் வெளி வந்து தமிழ்த்திரையுலகிற்கே திருப்புமுனையை தந்தபடம். இதில் சரோஜாதேவியும், புதுமுக நடிகை ரத்னாவும் ஜோடியாக நடித்தார்கள். வசனத்தை சக்தி கிருஷ்ணாசாமி எழுதியிருந்தார். 13 தியேட்டர்களில் 100 நாட்கள், 7 அரங்குகளில் 175 நாட்கள், 3 அரங்குகளில் 236 நாட்கள் ஓடிய படம் இது.
l
ஆயிரத்தில் ஒருவன் (1965) எம்ஜிஆர் கிட்டத்தட்ட சரித்திரப் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த நேரத்தில், ஒப்புக் கொண்ட சரித்திரப் படம் ஆயிரத்தில் ஒருவன். . எம்ஜிஆரும் நடித்துக் கொடுத்தார். எங்க வீட்டுப் பிள்ளை என்ற ப்ளாக்பஸ்டர் வெளியான அதே 1965-ம் ஆண்டு, ஜூலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படி ஒரு வெற்றி வேறு எந்த நடிகருக்கும் அமையாது எனும் அளவுக்கு பிரமாண்ட வெற்றிப் பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன். இனி எம்ஜிஆரை மிஞ்ச ஒரு நடிகர் திரையுலகில் இல்லை என்று அழுத்தமாக உணர வைத்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
l
காவல்காரன் (1967) ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘காவல்காரன்'. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக செல்லி ஜெயலலிதா நடித்திருந்தார். ப.நீலகண்டன் படத்தை இயக்கியிருந்தார். வித்வான் வே.லட்சுமணன் வசனத்தை எழுதியிருந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு எம்.ஜி.ஆர். தனது சொந்தக் குரலில் பேசி நடித்தப் படம் ‘காவல்காரன்'. குண்டடிப்பட்டு பாதிக்கப்பட்டு பேசிய எம்.ஜி.ஆரின் சொந்தக் குரலை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று அனைவரும் சந்தேகத்தை கிளப்பிய போது, ஏற்றுக் கொள்வோம் என்று மக்கள் ‘காவல்காரன்' படத்தையே மாபெரும் வெற்றிப் படமாக்கி 160 நாள் வெற்றிகரமாக ஓடவைத்து வசூலிலும் சாதயைப் படைக்க வைத்தார்கள். எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையே காவல்காரனுக்கு முன், காவல்காரனுக்குப் பின் என்றாகிவிட்டது.
குடியிருந்த கோயில் (1968) ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘குடியிருந்த கோயில்.' இதிலும் மாறுபட்ட இரு வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக செல்வி ஜெயலலிதா, ராஜஸ்ரீ நடித்திருந்தனர். கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார். வசனம் கே.சொர்ணம், சிறந்த நடிருக்கான விருதை தமிழ்நாடு அரசிடமிருந்து முதன் முதலில் எம்.ஜி.ஆருக்கு பெற்றுத் தந்தபடம். 146 நாட்கள் ஓடி பெரிய வசூலைத் தந்தது.
ஒளிவிளக்கு (1968) எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆரை மாறுபட்ட கதாபாத்திரத்தில் துனிச்சலாக நடிக்க வைத்து எடுத்த படம் ‘ஒளிவிளக்கு'. இது எம்.ஜி.ஆருக்கு 100வது படம். படத்தை சாணக்யா இயக்கியிருந்தார். கே.சொர்ணம் வசனம் எழுதியிருந்தார். செல்வி ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை நடித்திராத முரட்டுத்தனம், திருட்டுத்தனம் கொண்ட குடிகாரன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இப்படிப்பட்ட படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகத்தைப் போக்கி கொண்டாடியப் படம் ‘ஒளி விளக்கு'.
அடிமைப் பெண் (1969) எம்.ஜி.ஆர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து, தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் உருவாக்கிய படம் ‘அடிமைப் பெண்'. செல்வி ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சொந்தக் குரலில் ‘அம்மா என்ற அன்பு....' என்று ஒரு பாடலையும் பாடியிருந்தார். வசனத்தை கே.சொர்ணம் எழுதியிருந்தார். இந்தப் படத்தின் கதை வரலாற்று கதையுமல்லாமல், சமூக கதையுமல்லாமல், மந்திர ஜாலங்களைக் கொண்ட கதையுமில்லாமல், ஆனால் எல்லாம் கலந்த கதையாக இருந்தது. இப்படி ஒரு கதையை வெற்றிப் பெற வைப்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. அப்படிப்பட்ட படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு 176 நாட்கள் ஓட வைத்து வெற்றி விழா கொண்டாட வைத்தார்கள்.
மாட்டுக்கார வேலன் (1970) எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம். செல்லி ஜெயலலிதா, லட்சுமி ஜோடியாக நடித்திருந்தார்கள். ப.நீலகண்டன் இயக்கத்தில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்தது. ஏ.எல். நாராயணன் வசனம் எழுதியிருந்தார். முதலில் இந்தப் படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்குவதாக இருந்தது பிறகு அவருக்கு அதிக வேலைகள் இருந்ததால், ப.நீலகண்டன் படத்தை இயக்கினார். இந்த டைரக்டர் படத்தை இயக்குவார் என்று சொல்லிவிட்டு வேறொரு டைரக்டரை வைத்துப் படத்தை எடுக்கும் போது படம் சரியாக வருமா, வெற்றி பெறுமா? என்று விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள் சந்தேகத்தை எழுப்பியதால் படத்திற்கு சிக்கல் வந்தது. ஆனால் எல்லா சிக்கலையும் மீறி இந்தப் படத்தை சிறப்பாக தயாரித்தார் தயாரிப்பாளர் கனகசபை. மக்களும் ஏற்றுக் கொண்டு 177 நாட்கள் ஒட வைத்தார்கள். வசூலிலும் சாதனைப் படைத்தது.
ரிக்ஷாக்காரன் (1971) எம்.ஜி.ஆர். ரிக்ஷா தொழிலாளியாக நடித்த படம் ‘ரிக்ஷாக்காரன்' ஆர். எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. எம்.கிருஷ்ணன் படத்தை இயக்கியிருந்தார். ஆர்.கே.சண்முகம் வசனத்தை எழுதியிருந்தார். புதுமுக நடிகையான மஞ்சுளா எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இந்தப் படம் எடுக்கும்போது சிலர் ஒடாது, வெற்றி பெறாது என்று ஆரூடம் சொன்னார்கள். ஆனால் படம் வெளிவந்து 167 நாட்கள் ஓடி வசூலில் மாபெரும் சாதனைப் புரிந்தது. ‘ரிக்ஷாக்காரன்' எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருதினைக் கொடுத்து கௌரவித்தது இந்திய அரசு. ரிக்ஷாவில் இருந்துக் கொண்டே எம்.ஜி.ஆர் சிலம்பு சண்டைப் பேட்டது அனைவராலும் பேசப்பட்டது, பாராட்டப்பட்டது.
உலகம் சுற்றும் வாலிபன் (1973) எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்து தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய படம். ‘உலகம் சுற்றும் வாலிபன்'. லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை ரூங்ரேட்டா கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். கே.சொர்ணம் வசனம் எழுதினார். இந்தப்படம் வெளிவருவதற்கு பல தடைகள் ஏற்பட்டன. அதை எல்லாம் முறியடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்றது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அதிக வசூலை அள்ளிக் குவித்து சாதனைப் புரிந்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்' அன்றைய காலகட்டத்தில் 3 கோடிக்கு ‘இன்றைய கால கட்டத்தில் (300 கோடி) மேல் வசூலை தந்து அரசாங்கத்திற்கு 1.25 கோடிக்கு வரியைக் கட்ட வைத்த முதல் தென்னகப் படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்'. (எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி இன்னும் சில கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகும்)
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா செய்திகளையும் , விழா படங்களையும் பார்க்கும் போது மலைப்பாகவும் வியப்பாகவும் உள்ளது . சில கருத்து குருடர்களின் அடி மனத்தில் கொந்தளித்து கொண்டிருக்கும் தீராத வெறுப்பு நோய் என்றுமே தீராது என்பதை அறிய முடிகிறது . நடக்காத , நடக்க முடியாத ஒன்றை நினைத்து 42 ஆண்டுகளாக ஏங்கி தவித்து என்ன பயன் ?
தான் ஏற்று கொண்ட அபிமான நடிகரின் சினிமா , அரசியல் வெற்றிக்கு உணமையாக உழைக்காதவர்கள் இன மொழி பேதத்தை ஒன்றை மட்டும் தோல்விக்கு காரணம் காட்டும் கோழைகளின் வீரம் கண்டு மெய் சிலிர்க்கிறது .
நாங்கள் உண்மையாக , விசுவாசியாக உழைத்தோம் . எங்கள் தலைவர் வாழ்ந்த காலத்தில் தொட்டதெல்லாம் வெற்றி . 1987க்கு பிறகு 30 ஆண்டுகளாக எங்கள் வெற்றி தொடர்கிறது .
நூற்றாண்டு விழா நாயகனை பாராட்ட மனமில்லை . உயர்குணமில்லை . ஆனாலும் நடிகர்திலகத்தின் வாரிசு பிரபு மக்கள் திலகத்தை புகழ்ந்து பாராட்டி பேசியதை பாராட்டப்பட வேண்டும் . அந்த நாகரீகம் இல்லாதவர்களை பற்றி என்ன சொல்வது ?
இன்று (19/01/2017) ராஜ் டிவியில் பிற்பகல் 1.30 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடது பெண் " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/30tt4jm.jpg
INDIAN EXPRESS -17/01/2017
http://i63.tinypic.com/97msjo.jpg