-
இன்று 17/10/2019 இரவு 11.00 மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம்நடித்த .............................
" திருடன் " படத்தை கண்டுகளியுங்கள்.............................. .....
இதில் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்துள்ளனர்....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a0&oe=5E21E8AE
Thanks Jeyavelu Kandaswami
-
-
-
-
-
-
-
-
1952 அக்டோபர்17
தீபாவளி திருநாள்
பராசக்தி திரைவானில் முதல் முழக்கம்
உங்கள் புகழ் என்றும் வான் முழக்கம்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...5d&oe=5E26357C
Thanks Sivaji Vettivel
-
-
திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படம் 67 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் போது அந்தத் திரைப்படம் 66 ஆண்டுகளுக்கு பிறகும் திரையரங்கில் திரையிடப்பட்டதும் அதனை கொ...ண்டாட ரசிகர்கள் குவிந்ததும் என்ற சிறப்புகள் "பராசக்தி" மட்டுமே பெற்று இருக்கிறது,
சென்ற ஆண்டு பராசக்தியை கொண்டாடிய கோவை ரசிகர்கள்,
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...09&oe=5E167DFF
Thanks Sekar
-
-
-
-
''பராசக்தி' மைந்தன் திரையில் அவதரித்த தினம் இன்று.
பராசக்தியைப் பற்றி சில தகவல்கள்.
1. பராசக்தி படத்தில்தான் முதன் முதலாக டைட்டிலின் போது பின்னால் பாடல் ஒலிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.
2. சிவாஜி ஒல்லியாக இருந்ததினால் நேஷனல் பிக்சர்ஸ் கம்பெனி மேக்கப் மேனிடம் நிர்வாகத்தால் பணம் வழங்கப்பட்டு சிவாஜிக்கு 'தயார்த் தீனி' அளிக்கப்பட்டது. அதாவது இறைச்சி வகைகள், முட்டை, மீன் இதர மாமிச வகைகள் சிவாஜிக்கு ஒரு கிராமத்தில் இரண்டுமாத காலம் கொடுக்கப்பட்டு அவருடைய உடம்பு கதாநாயகனுக்குத் தக்கபடி ஓரளவிற்கு உருமாற்றப்பட்டது.
3. 1951-இல் 'பராசக்தி' ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னால் சிவாஜியை வைத்து ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஆக்டிங் டெஸ்ட் எடுக்கப்பட்டது. சிவாஜி நடித்த 'என் தங்கை' என்ற நாடகத்தில் அவர் குடிகாரனாக அதகளம் செய்வாராம். அந்த குடிகாரன் பாத்திரத்தையே சோதனை நடிப்பாக சினிமா காமெரா முன்னால் சிவாஜியை செய்ய வைத்தார்களாம். சிவாஜி பிரமாதமாக நடித்துக் காட்ட அனைவருக்கும் பரம திருப்தி ஏற்பட்டதாம்.
4. பின் பராசக்தி ஷூட்டிங்கின் முதல் நாளில் கையில் இரண்டு சிகரெட்டுகளைப் பிடித்தபடி சிவாஜி பேசி நடித்த முதல் வசனம் என்ன தெரியுமா. 'சக்சஸ்' அந்தக் காட்சியின் புகைப்படத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.
5. அந்தக் காலத்தில் ஒரே படத்தில் ஒரு நடிகரே வெவ்வேறு இரண்டு அல்லது மூன்று வேடங்கள் போடுவதுண்டு. 'அய்யா தெரியாதய்யா' புகழ் ராமாராவ் பராசக்தியில் கல்யாணியின் பக்கத்து வீட்டுக்காரராகவும், கல்யாணிக்கு கடன் கொடுத்து அதை வசூல் செய்யும் சேட்டாகவும் இரண்டு வேடங்கள் செய்திருப்பார். அந்தக் காலங்களில் கம்பெனி ஒப்பந்தங்களின்படி ஒருவரே நாடகத்திலும் சரி, திரைப்படங்களிலும் சரி இரண்டு மூன்று வேடங்கள் போடுவதுண்டு. ஆனால் எளிதில் கண்டுபிடிக்க இயலாது. மேக்கப்பும், நடிப்பும் அவ்வளவு தத்ருபமாக இருக்கும்.
6. படம் இரண்டாயிரம் அடி எடுக்கப்பட்டு சிவாஜி பராசக்தியின் கதாநாயகனா இல்லையா என்ற இழுநிலை நீடித்தபோது சிவாஜி அவர்களின் மனநிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தான் பராசக்தியின் கதாநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுவோமா இல்லையா என்று அந்த மனிதர் எப்படியெல்லாம் துடித்திருப்பார். இதோ அவர் சொல்வதைக் கேளுங்கள்.
"பராசக்தியில் என்னை கதாநாயகனாக ஆக்குவார்களா இல்லையா என்று நான் துடித்துப் போனேன். அழுது அழுது என் கண்ணீர் வற்றியது. இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் வானுயர வளர்ந்த வேப்ப மரங்கள் அனைத்தும் அன்று என் கண்ணீரால் வளர்ந்தவை"
அதே ஏ.வி.எம் ஸ்டுடியோவில் தற்சமயம் உலகப்பெரு நடிகர் சிவாஜி கணேசனுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் புகைப்படத்தைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.('பராசக்தி' பட வடிவில்)
7. முதன் முதல் ஒரு திரைப்படத்தின் வசனங்கள் இசைத்தட்டாக வெளிவந்து தமிழ்நாடு முழுதும் எதிரொலித்ததே அவ்வளவு ஏன்? இன்றளவும் கூட மார்கழி மாத அதிகாலைகளில் கோவில்களில் குணசேகரன் கல்யாணித் தங்கைக்காக நீதிமன்றத்தில் கோர்ட்டாருடன் வாதிடுவது நமது ஆழ்ந்த உறக்கத்தையும் மீறி நம் காதுகளுக்குக் கேட்டு நம்மில் உணர்ச்சிப் பிரவாகத்தை உண்டு பண்ணுகிறதே!
8. முதன்முதலில் வெளிநாட்டில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் பராசக்திக்கு உண்டு.
9. அதுவரை தமிழில் கதாநாயகர்களாகக் கோலோச்சிய நடிகர்கள் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், கே.ஆர்.ராமசாமி, எம்.கே.ராதா, ரஞ்சன், இன்னும் நிறைய பேர் பராசக்தி சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். தெலுங்கு நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி ஆர் கூட தமிழில் நிறைய நடித்துக் கொண்டிருந்த நேரம்.அவர்களும் நடிகர் திலகம் என்ற நடிப்புப் புயலில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆந்திராவில் சென்று கரையேறினர். நாகேஸ்வரராவ் இதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
10. அதுவரை திரைப்பட விநியோகஸ்தராக இருந்த பி.ஏ.பெருமாள் முதலியார் அவர்கள் தயாரித்த முதல் படம் 'பராசக்தி'.
11. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அறிமுகமும் பராசக்தியில்தான் என்று நினைக்கிறேன்.
12. .கலைஞரும், சிவாஜியும் இணைந்த முதல் படம் என்பதை பட்டி தொட்டியும் அறியும்.
13. கவிஞர் கண்ணதாசன் நீதிபதியாக பராசக்தியில் சில காட்சிகள் விருப்பத்துடன் ஏற்று நடித்தாராம். இறுதிவரை நடிகர் திலகத்துக்கு உறுதுணையாய் இருந்த சிவாஜி நாடக மன்ற இயக்குனர் எஸ். ஏ. கண்ணன் இறுதி நீதிமன்றக் காட்சிகளில் வக்கீலாக நடித்திருப்பார்.
14. 'பராசக்தி'யில் சிவாஜி நடிப்பதைப் பார்க்க அப்போதே பெரிய நடிக நடிகைகள் மற்றும் இதர கலைத்துறையினர் ஏ.வி.எம்.ஸ்டுடியோ வளாகத்திற்கு வந்து விடுவார்களாம். 'யார் இந்தப் புதுப் பையன்? போடு போடு என்று போடுகிறானே!' என்று சத்தமில்லாமல் தங்களுக்குள் பேசிக் கொள்வார்களாம்.
15. தனக்கு வாழ்வளித்த பெருமாள் முதலியார் அவர்களை தன் வாழ்நாள் முழுதும் நன்றி மறக்காமல் ஒவ்வொரு பொங்கலன்றும் முதலியாரின் சொந்த ஊரான வேலூருக்கு குடும்பத்துடன் சென்று, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, அவருக்கு மரியாதைகள் செய்து விட்டு வருவது நடிகர் திலகத்தின் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது. இப்போதும் அவர் பிள்ளைகள் மூலம் தொடர்கிறது.
15 .பராசக்தி படத்தில் தலைவரின் அற்புதமான நடிப்பை நேரில் பார்த்த்துவிட்டுதான் அஞ்சலிதேவி பரதேசி பூங்கோதை என்று தன்னுடைய இரு சொந்தப் படங்களிலும் தலைவரை நடிக்க வைத்தார்
'பேசும்படம்' சினிமா இதழ் 'இம்மாத நட்சத்திரம்' என்ற தலைப்பில் 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிவாஜி அவர்களைப் பற்றி வெளியிட்ட பெருமைமிகு கட்டுரை. இக்கட்டுரை ஆவணத்தை நமக்குத் தந்த திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3a&oe=5E2614F1https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...cf&oe=5E61552F
நன்றி Vasu Devan
-
-
சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன் நடித்து 1961 ஆம் ஆண்டு வெளிவந்து வெள்ளிவிழா கண்டு
வசூலில் மாபெரும் சாதனை படைத்ததிரைப்படம் பாவமன்னிப்பு .
சென்னை நகரில் முதல்முதலாக வசூலில் பத்து லட்சம் தாண்டி
சாதனை நிலைநாட்டிய படம் பாவமன்னிப்பு திரைப்படம்தான்.
இதனை பொறுத்துக்கொள்ளமுடியாத திராவிட நடிகரின் ரசிகர்கள்
தற்பொழுது திரித்து கதைவிடுகிறார்கள் .
முன்னரே நான் சொன்னதுதான்
தங்கள் நடிகரைவிட ஏனைய எந்த நடிகரது படங்களும்
சாதனை செய்யவில்லை ,சாதனை செய்யாது , சாதனை செய்யக்கூடாது
என்ற மனோவியாதி பிடித்து அன்று தொட்டு இன்றுவரை அதே நிலைப்பாட்டில்
உலாவும் திராவிட நடிகரின் ரசிகர்கள்.
-
31. சிங்காரச் சென்னை மாநகரின் வரலாற்றில், முதன்முதலில், ஒரு தமிழ்த் திரைப்படம், அதன் முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக ரூ.10,00,000/- ஈட்டியது இந்தப்படத்தில் தான். சாந்தி(177), ஸ்ரீகிருஷ்ணா(127), ராக்ஸி(107) என வெளியான மூன்று திரையரங்குகளிலும் மொத்தம் ஓடிய 411 நாட்களில் இக்காவியம் அள்ளி அளித்த மொத்த வசூல் ரூ.10,51,697-10பை. [இன்றைய பொருளாதார நிலையில் இத்தொகை பற்பல கோடிகளுக்குச் சமம்.]
32. 1961-ம் ஆண்டின் தலைசிறந்த, ஈடு இணையற்ற வசூல் சாதனைப் படமாக - Box-Office Himalayan Record படமாக - ஒரு புதிய வசூல் புரட்சியை ஏற்படுத்திய படம் "பாவமன்னிப்பு".
நன்றி பம்மலார்
பாவமன்னிப்பு திரைப்படம்பற்றிய பம்மலார் அவர்களது பதிவு
-
மராட்டிய மன்னன் வீர சிவாஜியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட இந்த நாடகம் இந்தியாவின் அனைத்து மொழிகளின் சப்டைட்டிலுடன் தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பப்பட்டது.....இந்த நாடகத்திற்காக நடிகர் திலகம் எந்த ஒரு ஊதியமும் பெறவில்லை......
படப்பிடிப்பிற்கான செலவுகளையும் ஏற்றுக் கொண்டார்.......... இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நாடகத்தின் பிரதிகள் தூர்தஷனிடம் இல்லை என்பது ஒரு வேதனையான செய்தி.......
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f9&oe=5E252091
Thanks Venkat Vpt
-
"சொலல்வல்லன் சோர்விலன்
அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது "
- தமிழ்மறை 647
கலைக்கதிரோன் நடிகர்திலகத்தின் அடியொற்றி இரண்டாம் ஆண்டாக குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும்...
108 தொடர் அன்னதானத்தின்
ஏழாம் நாள் நிகழ்ச்சி...
#வாருங்கள்தோழர்களே!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a7&oe=5E295E79
Thanks nilaa
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-