-
அரிதாரம் பூசியவனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?
அரைக்கால் ட்ரொசர்களை நம்பி ஆட்சி நடத்த முடியாது தம்பி...
இது என்ன எம்ஜியார் நடித்த படமா 100 நாட்கள் ஓட.
விசில் அடிச்சான் குஞ்சுகளா...விரைவில் வெம்பி பழுத்த பிஞ்சுகளா.
இவை எல்லாம் ரசிகர்கள் மன்றம் கண்ட தோழர்களுக்கு வழங்க பட்ட சர்டிபிகேட்கள்.
அந்த பொன்மன செம்மல் ஆட்சியில்.
1.முதன் முதலாக வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2....விவசாய விளைநிலங்கள் பரப்பளவு 17 லட்சம் ஹெக்டேரில் இருந்து 70 லட்சம் ஹெக்டேர் ஆக 10 ஆண்டுகளில் உயர்ந்தது.
3....கரும்பு விளைச்சலில் இந்தியாவில் 10 ஆண்டுகள் முதல் இடம்.
4...நெல் உற்பத்தியில் 2 ஆம் இடம்.
5....மின் உற்பத்தியில் 3 ஆம் இடம்.
6....ஆலயங்கள் தோறும் விளக்கேற்றி வைக்கும் திட்டம் இந்தியாவில் முதன் முதலாக இங்கே தமிழகத்தில்.
7....விளைச்சல் இல்லாத நேரங்களில் விவசாயிகளின் சொத்துக்கள், வீடுகள் ஆகியவற்றை கடனுக்கு பதில் பறிமுதல் செய்யக்கூடாது என்ற சட்டம் முதலில் இந்தியாவில் இங்கே.
8....குடிசை வீடுகளுக்கு குண்டு பல்பு இப்ப இருந்தா எல்.ஈ.டி.. போட்டு இலவச மின்சாரம்.
9....முதன் முதலாக விவசாய பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம்.
10....அரசு சார் ஓட்டுனர்களுக்கு உணவு படி.
11....முதன் முதலில் குடும்ப ரேஷன் அட்டைகள் வழங்க பட்டது தலைவர் ஆட்சியில்.
12..காவலர் உடை சீர்திருத்தம், மகளிர் காவல் துறை....கொண்டு வந்தார்.
13....அறநிலையத்துறை மூலம் சிறப்பு திருமணம்..வசதி இல்லா ஜோடிகளுக்கு சீரவேட்டி, புடவை, தாலி மற்ற சீர்பொருள்கள் வழங்க பட்டு திருமணம்
இன்னும் இருக்கு ஏராளம்....தொடரும்...
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...உங்களில் ஒருவன்..
இந்திய அளவில் எந்த லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்காத ஒரு சில முதல்வர்களில் ஒருவர் நம் தலைவர்...
-
#நெஞ்சமுண்டு #நேர்மையுண்டு
1969 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் மூன்றாம் நாளில்அமரராகிவிட்ட அந்த அண்ணாவை நினைத்து,சிலையைப் பார்த்து, குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டே வணக்கம் செய்து, எம்.ஜி.ஆர்.பாடிவரும் பாடல் காட்சிக்கான பாடலாக அப்பாடல் திகழ்ந்தது.
எம்.ஜி.ஆருக்காக, கண்ணதாசன் வீரநடை போட்டு எழுதிய விவேகம் செறிந்தவேகப்பாடலே அது…! எது என்பீர்! கேளுங்களேன்!
“நெஞ்சம் உண்டு! நேர்மை உண்டு!
ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா! – நீ
ஆற்றுவெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா!”
எப்படி இருக்கிறது. தொடக்கமே? கேட்டீர்களா?
‘நெஞ்சம் இருக்கிறது! அதிலே நேர்மையும்இருக்கிறது! வெற்றிக்கு உரிய நேரமோகாத்திருக்கிறது! அப்புறம் ஏன் பிறர் பால் அஞ்சி அஞ்சி,கெஞ்சி கெஞ்சி வாழ வேண்டும்? அஞ்சி வாழ்ந்ததும்போதும்! ராஜா! நீ காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டுஓடுவதுபோல் எழுந்து ஓடு!’
என்றல்லவா எம்ஜிஆர் வீர முழக்கமிடுகிறார்.
அற்புதமான புரட்சிப் பாடலின் அடுத்த வரிகள்!….இதோ!
“அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? – தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டுகண்டு பயம் எதற்கு? – நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு….
எப்படிப்பட்ட வினாக்கள்? எம்.ஜி.ஆர்.. எழுப்புவன?நியாயந்தானே!
‘அடிமைப்பட்டு உயிர் சுமக்கும் உடம்பிற்கு இரத்தமும்;நாளும் அச்சப்பட்டு வாழும் கோழைக்குக் குடும்பவாழ்க்கையும் எதற்காம்? கொடுஞ்செயல்களைக்கண்டு கண்டு பயப்படுதலும் எதற்காம்?'
மனிதா! நீ பிறக்கும்போது கொண்டு வந்ததுதான்என்ன? தொலைந்து போவதற்கு என்ன இருக்கிறது? நீ தைரியமாக மீசையை முறுக்கு!’ இத்தகு புரட்சிவினாக்களை எழுப்பி,வீரம் விளைவிக்கும்விதைகளை யாரால் தூவ முடியும்? எம்.ஜி.ஆரால் தான்முடியும்! அதைப் பார்வையிட்டுப் பக்குவமாய்ப் பாடல் எழுதித்தரக் கண்ணதாசனால்தான் முடியும்!அப்படித்தானே!
இன்னும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேளீர்!
“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி – அதன்அருகினில் ஓலை குடிசை கட்டி,
பொன்னான உலகென்று பெயருமிட்டால் – இந்தபூமி சிரிக்கும்! அந்த சாமி சிரிக்கும்!”
அதிரும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேட்டீர்களா?
‘உயர்ந்து நிற்கும் வானளாவிய மாளிகைகள்! அதன்ஓரங்களில் ஓசை குடிசைகள்! இப்படி இருப்பதுதானாபொன்னான உலகம்? இப்படிப் பெயரிட்டு அழைத்தால்இந்த பூமி மக்கள் சிரிக்க மாட்டார்களா? பூமியைப்படைத்த அந்த ஆண்டவனாம் சாமி சிரிக்கமாட்டானா?’
இவற்றிற்கெல்லாம் விடைகள்! யார் தருவது?
விடைகள் தரப் புறப்பட்டு வரும் கண்ணதாசன்வரிகள்இதோ!
எம்.ஜி.ஆர். என்ற புரட்சித் தலைவர் மூலம் புவிவாழ் மக்களுக்குப் புலப்படுத்தப் படுவதைக்காணீர்!
“உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு! – இங்கு
உன்னைவிட்டால் பூமி ஏது? கவலை விடு!
ரெண்டில் ஒன்று பார்ப்பதற்குத் தோளை நிமிர்த்து! –அதில்
நீதி உன்னைத் தேடிவரும் மாலை தொடுத்து!
விடைகளைக் கண்டீர்களா?
‘உறுதிகொண்ட நெஞ்சம் உள்ள இளைஞனே!
உன்நாட்டில் எல்லாம் உண்டு என்ற நம்பிக்கையில் உன்காலை முன்வைத்து முன்னேறு! நீதானே இந்தபூமியின் ராஜா!
உன்னைப் போன்ற இளைஞர்களைவிட்டு விட்டு இந்த பூமி இயங்க முடியுமா?
எனவேகவலையை விட்டுவிடு!
வெற்றியா? தோல்வியா? இந்த இரண்டில் ஒன்றைப்பார்ப்பதற்கு நீ தோளை நிமிர்த்து! நீதியே உன்னைத்தேடி வந்து வெற்றி மாலையைச்சூட்டும்!’
எல்லாம் சரிதான்! கண்ணதாசன், புரட்சித்தலைவர் இருவரும்கூடி, இறுதியில் சொல்லும் விடை எங்கோஇடிப்பதுபோல் உள்ளதே? என்பீர்கள்!
ஆமாம்! கண்ணதாசன் ஆவேசமுடன் தீட்டிய வரி, சென்சாரில்மாட்டி, படத்தில் எம்.ஜி.ஆரால் எடுத்துச் சொல்லமுடியாமல் மாற்றம் பெற்றுவிட்டதுதான் உண்மை.
அந்த ஈற்றடி இதுதான்….!
“நீதி வரவில்லை எனில் வாளை உயர்த்து! ” என்பதே.
இப்போது சரிதானே! உண்மை உழைப்பு! உயர்தியாகம்! இவற்றிற்கெல்லாம் நீதி கிட்டாவிடில் வாளைஉயர்த்த வேண்டியது தானே! வெட்ட வேண்டியதீமைகளை வேரறுக்க வேண்டியது தானே! இப்போது விடை சரிதானே!
#மக்கள்திலகம் #மந்திரச்சொற்களுக்குக் #கட்டுப்பட்டமக்கள் #தானே, #பலரது #மனக்கோட்டைகளுயும் #தகர்த்தெறிந்து #விட்டு #அவரை #செயின்ட்ஜார்ஜ் #கோட்டையிலே #முதல்வர் #ஆசனத்தில் #அமரவைத்தனர்....
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில் வின் டிவியில்*திரு.துரை பாரதி*15/06/20* அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------
*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில்* நடித்து, இயக்கி, தயாரித்த*உலகம் சுற்றும் வாலிபன் 1973 மே மாதம் வெளியாகி 25 அரங்குகளில் 100 நாட்கள் ,சென்னையில் 2 அரங்குகள், மதுரை, திருச்சி, கொழும்பு நகரங்களில்**வெள்ளிவிழா கண்டது .அதிகபட்சமாக மதுரையில் 217 நாட்களும், திருச்சியில் 203 நாட்களும் கொழும்புவில் 201 நாட்களும் ஓடியது . தமிழ் திரையுலகில் ,தமிழ்நாட்டில் எங்கும் சுவரொட்டி விளம்பரம் இல்லாமல், அன்றைய ஆளும் கட்சியின் எதிர்ப்புகளை முறியடித்து ,சுவரொட்டிக்காக அதிக வரி விதிக்கப்பட்ட மாநகராட்சிகள் முடிவை பொருட்படுத்தாது* 1973 வரை வெளியான அனைத்து தமிழ் படங்களின் சாதனையை முறியடித்து முதலிடம் பெற்றது .எப்போது வெளியிட்டாலும் மறுவெளியீடுகளில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவிக்கிறது . விரைவில் டிஜிட்டல் வெளியீடாக வெள்ளித்திரைக்கு*வர உள்ளது .
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை பல சிரமங்களுக்கு இடையே , மிக உன்னதமாக தயாரித்தார் .படத்தில் நடித்த கலைஞர்களுக்கு கதை பற்றி ஒன்றும் தெரியாது இயக்குனர் எம்.ஜி.ஆர். அமைக்கும் காட்சிகளின்படி அவர்கள் நடிக்க வேண்டும்*.ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து [போன்ற நாடுகளில் படப்பிடிப்பு* நடத்திவிட்டு ,அதை சத்யா ஸ்டுடியோவில் படத்தொகுப்பாளர் உமாநாத் உதவியுடன்* அதை படமாக தொகுத்தார் வெள்ளித்திரையில் முழு படத்தையும் படத்தில் நடித்த கலைஞர்கள் பார்த்து பிரமித்து விட்டார்கள் . படம் வெளியான பின்புதான் இயக்குனர் எம்.ஜி.ஆரின் திறமை வெகுவாக பேசப்பட்டது இந்த திரைப்படத்தை தயாரித்தது பற்றி பொம்மை சினிமா மாத இதழில் , திரைகடலோடி திரைப்படம் எடுத்தோம் என்ற தொடரை எம்.ஜி.ஆர். வெளியிட்டு இருந்தார் ... சிங்கப்பூரில் டைகர் பாம் பூங்காவில் சிரித்து வாழ வேண்டும் என்கிற* பாடல் படப்பிடிப்பு நடந்தது . உள்ளூர் குழந்தைகள் கணிசமான அளவில்*காட்சியில் பங்கேற்றனர் . அந்த குழந்தைகளின் முகவரியை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்டு , படப்பிடிப்பு முடிந்து ஒய்வு நேரத்தில், ஒவ்வொரு குழந்தை வீட்டிற்கும் தன்* உதவியாளருடன்* சென்று* *விலையுர்ந்த பொம்மைகளை பரிசாக வழங்கி அவர்களின் அன்பை பெற்றார் .இதுதான் எம்.ஜி.ஆரின் சிறந்த குணம் .
ஜப்பானில் எக்ஸ்போ 70 பொருட்காட்சியானது பல மைல் தூரம் விரிவாக்கம் உடையது .அந்த பொருட்காட்சியில் ,யாரவது தவறி போனால், யார் எங்கே இருப்பார்கள், எப்படி சந்திப்பது என்பது அந்த ஜனக்கடலில் தெரியாது* *அந்த சூழ்நிலையில் படத்தின் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர் ராவ் ஒரு இடத்தில போய் கொண்டிருக்கிறார் . அங்கே பள்ளி குழந்தைகள் வரிசையாக சென்று கொண்டிருக்கிறார்கள் . அதே இடத்தில நடிகர் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு ,உறவினர் மனோகர் ஆகிய மூவரும் ஒரே சீருடையில்* எதிரே தென்பட்டார்கள் . அவர்களை சங்கர் ராவ் சந்தித்து நலம் விசாரிக்கிறார் . அவர்கள் பதிலுக்கு, எங்கள் பள்ளி மூலமாக* எக்ஸ்போ 70 பார்க்க வந்துள்ளோம் .மற்ற மாணவர்கள் வேறு இடத்தில உள்ளார்கள் ., நாங்கள் பொருட்காட்சியை சுற்றி பார்ப்பதுடன் , பெரியப்பா படம் படப்பிடிப்பு சிறிது நேரம் பார்க்க ஆசைப்படுகிறோம் என்று* சொன்னார்கள் , உடனே அவர்களை சங்கர் ராவ், அருகில் இருந்த எம்.ஜி.ஆரிடம் அழைத்து செல்கிறார் . எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்ததும் ,உற்சாகம் அடைந்து , நலம் விசாரித்து, எப்படி, யாருடன் வந்தீர்கள் .என்னென்ன பார்த்தீர்கள் . உணவருந்தாகி விட்டதா ,என்று கேட்டுவிட்டு, அவர்களை அருகில் உள்ள உணவகத்திற்கு அழைத்து சென்று சாப்பிட வைத்து,*பின்னர் படப்பிடிப்பு குழுவினரிடம் மேற்கொண்டு பணிகளை கவனிக்கும்படி சொல்லிவிட்டு,அவர்கள் மூவரையும்* பள்ளி ஆசிரியர் மற்றும் மற்ற மாணவர்கள் இருக்குமிடம் அறிந்து அவர்களை பத்திரமாக கொண்டு போய்* சேர்த்துவிட்டு வந்தார் . இந்த செய்கைக்கு காரணம், நடிகர் சிவாஜி கணேசனுடன் தொழில் ரீதியாக நட்பும், நல்லுறவும் ,பொதுவாக குழந்தைகளின் மீது உள்ள அபரிமிதமான அன்பும் ,** ஆரம்ப காலங்களில் நல்ல நண்பராகவும் பழகியதே .*
பொதுவாக எம்.ஜி.ஆர்.* படப்பிடிப்புகளில் . நான்* குறிப்பிட்ட ஸ்டெப்புகளில் இடது புறத்தில் இருந்து வலது புறம் திரும்பி* *கையை தொட்டு* சிலம்பத்தில்*எட்டாவது அடி உனக்கு விழும் என்று ஸ்டண்ட் மாஸ்டருக்கு சொன்னார் என்றால் சரியாக எட்டாவது அடியில் அந்த ஸ்டண்ட்* மாஸ்டருக்கு அடி விழும்இது எம்.ஜி.ஆரின் கணித கணக்கு . இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் என்னவாகும் என்றால்உதாரணத்திற்கு ,ஒருமுறை அன்னமிட்டகை படத்தில் சிலம்பம் சுற்றும்போது பத்தாவது ஸ்டெப்பில் உனக்கு ஆடி விழும் என்று ஸ்டண்ட் நடிகருக்கு சொன்னதில்* பத்தாவது அடிதானே என்று அலட்சியமாக நடித்தபோது , பத்தாவது அடியில் ஸ்டண்ட் நடிகரின் சுண்டு விரல் அடிபட்டு ரத்தம் கொட்டியது . உடனே படப்பிடிப்பை எம்.ஜி.ஆர்.நிறுத்திவிட்டு, சிகிச்சைக்கான ஏற்பாடுகளை தன் சொந்த செலவில் செய்து**, எந்த தொழிலாக இருந்தாலும் அதில் கவனம் தவறினால் இப்படித்தான் காயப்பட்டு அவதிப்பட நேரிடும் , எனவே இனிமேல் சண்டை காட்சிகளில் மிகவும் எச்சரிக்கையாக நடிக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுருத்தினார் எம்.ஜி.ஆர்.*.
ஒருமுறை சத்யா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பில் இருக்கும்போது ,சத்யா ஸ்டூடியோ மேலாளர் பத்மநாபன் எம்.ஜி.ஆர். காதில் ஏதோ விஷயம் ஒன்றை சொல்ல, எம்.ஜி.ஆர். படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஒப்பனை அறைக்கு செல்கிறார் . ஸ்டூடியோ வாசலில் எண்ணற்ற மக்கள் கூட்டமாக கூடியுள்ளனர் .அவருக்கு தி.மு.க. விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட செய்தி சொல்லப்படுகிறது .உடனடியாக எம்.ஜி.ஆர். கருணாநிதியின் உறவினர்களான ஒளிப்பதிவாளர் அமிர்தம் , வசன ஆசிரியர் சொர்ணம் ஆகிய இருவரையும் படப்பிடிப்பு குழுவில் இருந்து விலகி தங்கள் வீட்டிற்கு அவசரமாக திரும்பும்படி, தன் உதவியாளர்கள் மூலம் சொல்லி அனுப்புவதோடு , அவர்களை பாதுகாப்பாக காரில் அனுப்பி வையுங்கள் என்று உதவியாளர்களிடம் கேட்டுக்கொண்டார் .**.தனக்கு எந்த பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, தன்னை நம்பி வந்தவர்களுக்கு எந்த ஆபத்தும், எந்த பிரச்னையும் நேரக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த அக்கறை எடுத்துக்* கொண்டார் என்பதே எம்.ஜி.ஆரின் உயர்ந்த குணத்திற்கு சான்று .
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான காட்சிகள் / பாடல்கள் விவரம்*
-----------------------------------------------------------------------------------------
1.பச்சைக்கிளி முத்துச்சரம் - உலகம் சுற்றும் வாலிபன்*
2.சிரித்து வாழ வேண்டும்* - உலகம் சுற்றும் வாலிபன்*
3.நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நாடு*
4.சண்டை காட்சிகள் - நினைத்ததை முடிப்பவன்*
5. இரண்டு* எம்.ஜி.ஆர்.கள்* சந்திப்பு - குடியிருந்த கோயில்*
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*16/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
பெங்களுருவில் ஒரு படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரும், வெண்ணிற ஆடை நிர்மலாவும் கலந்து கொள்ளும் பாடல் காட்சி. காட்சியை காண வந்த கன்னட ரசிகர்கள் சிலர் நிர்மலாவை சீண்டுவதும், கிண்டல் அடிப்பதுமாக இருந்தனர் .* எம்.ஜி.ஆர். தன்* கருப்பு கண்ணாடியால் அதை கவனித்து விடுகிறார் .பாடல் காட்சி முடிந்ததும் அந்த இளைஞர்களை அழைத்து தன் காரில் ஏற்றிக்* கொள்கிறார் .* கார் மெதுவாக செல்லும்போது ஓரிடத்தில் தன் புறங்கையால் இளைஞர்களை அடித்து விடுகிறார் .அதில் மூவருக்கு முகத்தில் சரியான அடி. சிறிய ரத்த காயங்கள் . அடிபட்டதும் ,அந்த இளைஞர்கள் எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள் . உடனே அவர்களுக்கு தலா ரூ.500/- கொடுத்து* தனது*டாக்டரின்*உதவியால் முதலுதவி பெற செய்து ,*இது உங்கள் ஊர் , நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்வீர்கள் என்று* நம்பித்தான்**படப்பிடிப்பை நாங்கள் இங்கு நடத்துகிறோம் .குறிப்பாக ஒரு பெண்ணிடம் நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா , இதுபோன்று இனி எந்த படப்பிடிப்பிலும் நடந்து கொள்ளாதீர்கள் என்று எச்சரித்து அனுப்பி வைத்தாராம் .
நவரத்தினம் என்கிற படத்தில் ஒரு சண்டை காட்சியில் எம்.ஜி.ஆரும், மும்பையில் இருந்து வந்திருந்த ஸ்டண்ட் நடிகர் ஷெட்டி என்பவரும் மோதும் காட்சி அமைப்பு . *ஸ்டண்ட் மாஸ்டராக சியாம் சுந்தர் அருகில் இருந்தார் . எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டு, இவர் பெரிய ஸ்டண்ட் நடிகர், மாஸ்டர், வீரர், சூரர் என்று சொல்கிறார்களே ஆனால் தோற்றத்தில் அப்படி ஒன்றும் தெரியவில்லையே, சண்டை காட்சியை வேடிக்கை பார்ப்பவர் போல் உள்ளாரே* என்று ஷெட்டி சொல்லிக் கொண்டிருந்தாராம் .அதை கேட்டு,பெரிதாக* காட்டிக் கொள்ளாத எம்.ஜி.ஆர். காட்சி ஆரம்பிக்கும்போது , ஷெட்டியை அழைத்து ,காட்சியில் நான் இரண்டு முறை என் கைகளால்**உங்களை தூக்குவேன் . மூன்றாவது முறை உயர* தூக்கி கீழே வீசும்போது நீங்கள் உங்கள் உடம்பை பேலன்ஸ் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான்** உங்களுக்கு காயம் ஏற்படாது .கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் எம்.ஜி.ஆர். பதிலுக்கு ஷெட்டி, நான் பார்க்காத , செய்யாத சண்டை காட்சிகளா .பரவாயில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் அலட்சியமாக , ஸ்டண்ட் மாஸ்டர் சியாம் சுந்தரும் ஷெட்டியிடம் காட்சியை பற்றி விளக்கினார் . பிறகு*நடிக்கும்போது ஷெட்டியின் அலட்சியத்தால் எம்.ஜி.ஆர். உயர தூக்கி கீழே போடும்போது விழுந்து ஷெட்டியின் விழா எலும்புகள் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் ஆறு மாத காலம் சிகிச்சையில் இருந்தார் .சிகிச்சைக்கான செலவு முழுவதையும் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்இனிமேலும் சண்டை காட்சியில் நடிக்கும்போது அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அறிவுரையும் சொன்னார் . .
அன்பே வா திரைப்படத்தில் ,நெல்லூர் காந்தாராவ் என்று ஒரு ஸ்டண்ட் நடிகர் எம்.ஜி.ஆருடன் மோதும் சண்டை காட்சி . காட்சியின் முடிவில் எம்.ஜி.ஆர். அவரை அலாக்காக தூக்கி, தன் தோளில் சில வினாடிகள் சுமத்தி , பிறகு கீழே போட வைக்கும் காட்சி .* 1959ல் ஒரு நாடக காட்சியில் குண்டுமணி என்கிற ஸ்டண்ட் நடிகரை இதே போல உயர தூக்கி கீழே போடும்போது , அவர் தவறி எம்.ஜி.ஆர். காலின் மீது விழுந்து* எலும்பு முறிவு ஏற்பட்டு** சில மாதங்கள் எம்.ஜி.ஆர். சிகிச்சையில் இருந்தார் . அவர் குணமானதும் முன்போல் சண்டை காட்சிகளில் வழக்கமாக நடிக்க முடியாது , ஸ்டண்ட் நடிகர்களை உயர தூக்கி கீழே போட முடியாது என்று சிலர்* சினிமா உலகில் பேசிக் கொண்டிருந்தனர் .இந்த கிசுகிசு, வதந்தி, கருத்துக்களை எல்லாம் முறியடிப்பது போல தன்* உடல் வலிமையையும் மற்றவர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு அன்பே வா படத்தில்*நெல்லூர் காந்தாராவை* இலகுவாக தூக்கி ,கீழே போடுவார் எம்.ஜி.ஆர்.*இந்த காட்சியை கண்டதும் ,எதிர்மாறாக பேசியவர்கள் அனைவரும் வாயடைத்து போனார்கள் என்று பேசப்பட்டது .இதற்கு பின்னால் வந்த படங்களிலும் பல்வேறு விதமான சண்டை காட்சிகளில் புதுமையை புகுத்தி, முன்பை விட, வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடித்து ரசிகர்களிடம்*நல்ல வரவேற்பை பெற்றார் .
பொதுவாக எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு தளமாக இருந்தாலும் சரி , அல்லது வெளிப்புற படப்பிடிப்பு நடந்தாலும் சரி, சக கலைஞர்கள் கண்ணியம், பாதுக்காப்பு ஆகியவற்றிற்கு எந்த பிரச்னையும் நேராமல் காப்பதில் வல்லவர்* ஒரு முறை உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே, எக்ஸ்போ 70ல்* சுற்றி வந்தபோது*,எம்.ஜி.ஆரும், சந்திரகலாவும் மஞ்சுளாவும்**சுமார்*10 அடி**தூரத்தில் இருக்கிறார்கள் .நடிகர் நாகேஷும்* சற்று அருகில் இருக்கிறார் . அந்த நேரத்தில் சுற்றுலா வேன்* அருகில் வந்து நிற்கிறது . அந்த வேனில் இருந்து இறங்கிய ஒருவர் நன்றாக குடித்து இருக்கிறார் . அவர் மஞ்சுளா*, சந்திரகலா இருவர் இருக்குமிடத்திற்கு* நெருங்கி**வந்து ஏதோ பேசுகிறார் . திடீரென்று சந்திரகலா தோளின் மீது கை வைக்கிறார் . இதை* கவனித்த எம்.ஜி.ஆர். மின்னலென பாய்ந்து வந்து அந்த நபரை*ஓங்கி அடித்து கீழே தள்ளி விடுகிறார் . இதை*எதிர்பாராமல் பார்த்த நாகேஷ,வியந்து** இதனால் என்ன விளைவுகள் வருமோ என்று பதறி போகிறார் .* அடிபட்ட நபர் தன் தவறை உணர்ந்து*ஜப்பானிய மொழியில் தலை குனிந்து*மன்னிப்பு கேட்டுக் கொண்டு விலகி செல்கிறார் .* தன்னை நம்பி* நடிக்க வந்திருந்த கலைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு தருவது, அவர்களுக்கு எந்த ஆபத்தும், துன்பங்களும் நேராமல்*தானே தலையிட்டு பிரச்னைகளை தீர்த்து வைப்பது* என்பதில்**எம்.ஜி.ஆருக்கு நிகர் ஒருவருமில்லை .இதுபோல*பல சம்பவங்களில் தன் திரையுலக*வாழ்க்கையில்*பலருக்கு எம்.ஜி.ஆர். உதவியதுண்டு .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில், திரையுலகில் பல ஏற்றங்களையும், சரிவுகளையும் சந்தித்த அனுபவம் வாய்ந்த , பல பாடங்களை*கற்பிக்க கூடிய ஆசான் .* வாழ்வில்*பிடிப்பு இழந்தவர்களை ,எதிர்காலம் உங்கள் கையில்*இருக்கிறது. நம்பிக்கையோடு முன்னேறுங்கள், வெற்றி நிச்சயம் என்று அறிவுரை கூறும் ஒரு பல்கலை கழகம்*,* இந்த பல்கலை கழகத்தை பற்றி , பல அறிஞர்கள், ஆசிரியர்கள்* எழுதிய*சுமார்*470* நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் இதுவரை வெளிவந்துள்ளது என்றால் தமிழக தலைவர்களில் எம்.ஜி.ஆர். ஒருவருக்குத்தான் .* அவரை பற்றிய பல நூல்களும் , பல அரிய*தகவல்களும்* இன்னும்**வெளிவந்த வண்ணம் உள்ளன . இந்த அரிய தகவல்கள்*நாம் அர்த்தம் உள்ளதாக* வாழ்வதற்கான பாடங்களாக உள்ளன .
தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------------------
1.கண்ணில் தெரிகின்ற வானம் - ரகசிய போலீஸ் 115
2.உலகம் அழகு கலைகளின் சுரங்கம்*-உலகம் சுற்றும் வாலிபன்*
3. எம்.ஜி.ஆர். -நெல்லூர் காந்தாராவ்*சண்டை காட்சி*- அன்பே வா*
4.தங்க தோணியிலே*தவழும் பெண்ணழகே*-உலகம் சுற்றும் வாலிபன்*
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்* *17/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் சிலர் அவரது படம் பார்ப்பதற்கு பணம் இல்லாத காரணத்தால், ரத்தம் கொடுத்து பணம் வாங்கி பார்ப்பதாக எம்.ஜி.ஆருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன . இதை அறிந்த எம். ஜி.ஆர். எனது ரசிகர்கள் எனது படத்தை பார்ப்பது மகிழ்ச்சிதான் .ஆனால் ரத்தம் கொடுத்து என் படம் பார்ப்பதை நான் எப்போதும் விரும்ப மாட்டேன் . ஏனென்றால் அவர்களது உடல்நலம் முக்கியம் . அவர்களை நம்பி குடும்பம் இருக்கிறது . அப்படி எனது படம் அவசியம் பார்த்துதான் ஆகவேண்டும் என்கிற முடிவில் இருந்தால் அவர்கள் என்னிடம் தங்கள்* முகவரியை அனுப்பி வைக்கலாம்* . நான் மாதா மாதம் பணம் அனுப்புகிறேன் எனவே , அவர்கள் தங்களின் உடல்நலம், குடும்ப நலம் கருதி அந்த தவறை இனியும் செய்யாமல், மேற்கொண்டு இதுபற்றி எந்தவித புகாரும் எனக்கு வராத அளவில் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டார் .தான் அறிவித்தபடி சிலருக்கு பணம் அனுப்பியதாக வெளிவந்த தகவல்கள் உறுதி செய்தன .
எம்.ஜி.ஆர். படப்பிடிப்பில் இருந்தாலும், கலந்து கொள்ளாவிட்டாலும் அரசியலில் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற விஷயங்களை**,நுட்பமாகவும் ,உன்னிப்பாகவும் கவனித்து* செயல்பட்டு**வந்தார் . அதனால்தான் திராவிட முன்னேற்ற கழகத்தில் , பொருளாளர், சிறுசேமிப்பு துணை தலைவர் போன்ற பதவிகளில்* எல்லாம் அவர்* சிறப்பாக செயல்பட முடிந்தது .தி.மு.க. சார்பில்*பொதுக்கூட்டங்களில், தேர்தல் பிரச்சாரங்களில் துரிதமாகவும், நடப்பு விஷயங்களை கருத்தில் கொண்டு மக்களிடம் , கட்சியின் கொள்கைகளை, அரசின் திட்டங்களை எளிதில் சேர்க்க முனைப்புடன் செயல்பட முடிந்தது .இந்த செயல்கள்தான்* தி.மு.க.விற்கு* வெற்றியை தேடித்தர உதவியது .எம்.ஜி.ஆரால்தான் தி.மு.கவின் கட்சி, கொடி, சின்னம் ஆகியவை பட்டி, தொட்டியெல்லாம்* சினிமா மூலம் பரவியது .
எம்.ஜி.ஆர். தன்னை திட்டியவர்கள், எதிர்த்தவர்களை எல்லாம் அவர்கள் சொல்லாமலேயே வெற்றியடைய செய்தவர் . தேர்தல் பிரச்சாரங்களில் நடிகர் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்யும்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு,சிரித்துக் கொண்டே* தம்பி, சிவாஜி கணேசனுக்கு அரசியலில் போதிய அனுபவம் இல்லை .அரசியல் அவ்வளவாக தெரியாது என்று கருத்து தெரிவித்தார் .பதிலுக்கு சிவாஜி கணேசன் நான் காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக உள்ளேன் . எனக்கும் ஓரளவு அரசியல் தெரியும் என்றார் . ஆனால், எம்.ஜி.ஆருக்கு அரசியலில் இருந்த ஈடுபாடு, செயல்படும் விதம் , நடப்பு விஷயங்கள் பற்றி கருத்து கூறுவது , பொது காரியங்களில்*உதவுவது, காய் நகர்த்தும் திறமை போன்றவற்றில் சிவாஜி கணேசனுக்கு*அந்த அளவில் ஈடுபாடோ, அனுபவமோ கிடையாது என்பது உலகறிந்த விஷயம்அதனால்தான் சிவாஜி கணேசனால் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பதவியை கூட* .பெற முடியாமல் போனது .
எம்.ஜி.ஆர். தனது வாழ்நாளில் குடிப்பது என்பதை அனுபவிக்கவில்லை* . திரைப்படங்களில் குடிப்பது போல் நடித்ததுமில்லை .குடித்துவிட்டு வருபவர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்வதில்லை . அவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்வதுமில்லை .எம்.ஜி.ஆர். தனது 100 வது படமான ஒளிவிளக்கு*படத்தில் குடிப்பது போல ஒரு காட்சி இருந்தது . ஒளி விளக்கு படம் இந்தியில் தர்மேந்திரா நடித்த பூல் அவுர் பத்தர் என்கிற படத்தின் தழுவல் . ஜெமினி அதிபர் வாசன் கதைப்படி அந்த காட்சி அமைய வேண்டும் என்று விருப்பப்பட்டார் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு அதில் விருப்பமில்லை . குடிப்பது போல்* நடிப்பதை என் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . எனக்கு தர்மசங்கடமாக உள்ளது* என்று*கவிஞர் வாலியிடம் ஆலோசனை கேட்டாராம் .* கவிஞர் வாலி, அந்த காலத்தில் நடிகர் பி.யு. சின்னப்பா ஒரு வேடத்தில் குடிப்பது போல நடிப்பார் . இன்னொரு வேடத்தில் குடிப்பதை விமர்சனம் செய்து பாடல் காட்சியில் நடித்துள்ளார் . அதுபோல நீங்கள் குடிப்பது போல ஒரு வேடத்தில் நடியுங்கள் . இன்னொரு வேடத்தில் குடிப்பதனால் விளையும் தீமைகள் குறித்து ஒரு பாடல் காட்சி அமைத்து முடிக்கலாம் .என்று யோசனை சொன்னார் . அதை பலமுறை யோசித்து அரை மனதுடன் சம்மதித்து எம்.ஜி.ஆர். அந்த பாடல் காட்சியில்*ஒரு வேடத்தில் குடிப்பதுபோல் நடித்து , மற்ற நான்கு வேடங்களில் குடிப்பதன்*தீமைகளை விமர்சிக்கும் பாடல் பாடி, அசத்தியிருப்பார் . அந்த பாடல் வெள்ளித்திரையில் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது . தனது இமேஜ்*பற்றி மிகவும் கவலை கொண்டிருந்த எம்.ஜி.ஆர். படம் வெளியானதற்கு* பிறகு*எதிர்மறை கருத்துக்களோ, எந்த பிரச்சனைகளோ வராததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து கவிஞர் வாலிக்கு நன்றி தெரிவித்தார் .
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------------
1.ஒரு தாய் மக்கள் நாமென்போம்* - ஆனந்த ஜோதி*
2.நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை*
3.புதிய வானம் புதிய பூமி* - அன்பே வா*
4.ஏன் என்ற கேள்வி* - ஆயிரத்தில் ஒருவன்*
5.தைரியமாக சொல் நீ மனிதன்தானா - ஒளி விளக்கு*
-
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*18/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி* சரித்திர சாதனை படைக்கும் வகையில் இன்றைக்கு ஆண்டு கொண்டிருக்கிற**செயலாளர்கள் , அமைச்சர்கள் ,கல்வி வள்ளல்கள், கல்வி தந்தைகள் பலரையும் கவர்ந்துள்ளது . இவர்கள்* எல்லாம்* எம்.ஜி.ஆர். எனும்* ஒரு இமயமலை, மாமலையின் ஈகை தன்மையால் விளைந்த பயிர்கள் என்பதை தமிழகம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது .. இன்றைக்கு இந்த மாமலையின் சிறப்புகளை பற்றி அறிந்து கொள்வோம்*
திரையுலகிலும்,அரசியல் உலகிலும் ,பல ஜாம்பவான்கள், சாதனையாளர்கள் உருவாகி இருந்தார்கள் . ஆனால் எம்.ஜி.ஆர். ஒரு சாமான்ய மனிதராக இருந்து*சரித்திரம், சாதனை, சகாப்தம் படைத்த ,மாமனிதராக* உருவானது ஒரு வரலாறு .ராமச்சந்திரன் எனும் இந்த சந்திரன் ஒரே நாளில் உச்சத்திற்கு சென்று வானில் ஜொலிக்கவில்லை .அந்த சிகரத்தை அடைய அவருக்கு ஏற்பட்ட இன்னல்கள், துன்பங்கள், சரிவுகள் , அனைத்தையும் வெற்றிபடிக்கட்டுகளாக மாற்றி, படிப்படியாக உயர்ந்து உச்சாணி கொம்பில் ஏறினார் .உலக அளவில் ஒரு நடிகர் அரசியல், சினிமா என்கிற இரண்டு குதிரைகளை ஒரே சமயத்தில் சவாரி செய்து*வெற்றி எனும் சிகரத்தை அடைந்ததாக சரித்திரம் இல்லை . இவருக்கு பின்னால் அரசியலில் ஈடுபட்டு ஆட்சியை பிடித்த ரொனால்டு ரீகன், என்.டி.ராமராவ்*போன்றவர்களுக்கு எம்.ஜி.ஆர். தான் முன்னோடி .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி அறிஞர் பெருமக்கள் எழுதிய சுமார்*160க்கு மேற்பட்ட புத்தகங்கள் தமிழிலும், சுமார் 10 புத்தகங்கள் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளன , இன்னும் வெளிவந்த வண்ணம் உள்ளன . எம்.ஜி.ஆரின்*புகழ் பாடும் புத்தகங்கள் மாதந்தோறும் , உரிமைக்குரல், இதயக்கனி* ஆகிய*பெயர்களில் வெளியாகி வருகின்றன .* கடந்த காலத்தில் மன்னாதி மன்னன், ஒளி விளக்கு என்கிற பெயரிலும் புத்தகங்கள் மாதந்தோறும் வெளியாகி வந்தன .எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தபோது, திரை உலகம், திரை செய்தி போன்ற இதழ்களில் சினிமா செய்திகள் படங்களுடன் வெளியாகி இருந்தன .எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளில் பிறந்த நாளை கொண்டாடியதில்லை . ஆனால் அவர் மறைந்த பிறகு, அவரது ரசிகர்கள் /பக்தர்கள் கடந்த 33 ஆண்டுகளாக நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடி, பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் மூலம் அன்னதானம் , சமூக நல திட்டங்கள் செயல்படுத்தி எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமை சேர்த்து,அவரது மங்கா புகழை, மாண்பை**போற்றி வருகின்றனர் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெளிநாடுகளில் சுற்று பயணம் செய்யும்போதும், வெளிப்புற படப்பிடிப்பில் இருந்தபோதும்,பல்வேறு வகையான* விலையுர்ந்த காமிராக்கள் வாங்குவது வழக்கம். பல சமயங்களில் தானே* இயற்கை காட்சிகள், சுற்றுலா தளங்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுப்பது வாடிக்கை . உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு* * பல**வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோதும்* ஏராளமான காமிராக்கள் வாங்கினார் .* பயண முடிவில் தன் அண்ணன் சக்கரபாணி, நடிகர்கள் நாகேஷ், அசோகன், ஸ்டில்ஸ் போட்டோகிராபர் சங்கர் ராவ் ஆகியோருக்கு விலை உயர்ந்த காமிராக்களை பரிசளித்தார் . தான்* முதல்வரான பிறகு , சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாததால், தன்னிடம் இருப்பில் இருந்த பலவகையான காமிராக்களை , தன் வீட்டிற்கு விஜயம் செய்த பல புகைப்பட வல்லுனர்களுக்கு பரிசாக அளித்துள்ளார் .**
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தான் சொந்தமாக தயாரித்து, நடித்து , இயக்கிய நாடோடி மன்னன் காலத்திலேயே, காமிரா கோணங்கள் வைப்பது பற்றி அறிந்து வைத்திருந்தார் . சில முக்கிய காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர்களுக்கு காமிரா கோணங்கள்* பற்றி* விளக்கி சொல்வதோடு, சில சமயங்களில் அவரே* காமிராக்களை இயக்கவும் செய்தார் .* பொதுவாக எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன்*படத்திற்கு பிறகு , தான் நினைத்தபடி பாடல்கள் அமையவேண்டும் என்பதில் முனைப்பு காட்டினார் .* அதன்படி பாடலாசிரியர்கள் எழுதும் பாடலை தனக்கு*திருப்தி வரும் வரை* தொடர்ந்து திருத்தங்கள் செய்து* தனது இமேஜ், கொள்கைகள் ,பாதிக்காத வகையில்,மக்களுக்கான சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் அவர்கள் மனதில் எளிதில் படியும்படி** எழுத வைத்தார் . இப்படி பல* பாடல்கள் சில நாட்களிலும் , சில பாடல்கள்* பல வாரங்களும் ஆகியுள்ளன ,*இப்படி பாடல்கள்மீது தனி அக்கறை கொண்டு பாடலாசிரியர்களை வேலை வாங்கியதன் பலன் திரைப்படம் வெளியான பின் தெரிந்துவிடும் . கவிஞர்களுக்கும் பேரும்* புகழும் கிடைத்துவிடும் . தொடர்ந்து பல படங்கள்*பாடல் எழுத வாய்ப்பும்* கிடைக்கும் . எம்.ஜி.ஆரின் . ஒரு படத்திற்கு பாடல் எழுதுவது மற்ற 10 படங்களுக்கு பாடல் எழுதுவதற்கு சமம் . இதே போலத்தான்*எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல .காமிரா கோணம், லைட்டிங் , இடம் , போன்றவை அவருக்கு திருப்தியாக இருக்க வேண்டும் .*எம்.ஜி. ஆரே ஒரு புகைப்பட வல்லுனர் .* ஆகவே, ஒழுங்காக, நல்லவிதமாக புகைப்படம் எடுப்பவர்க்கே, தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் .*அதனால்தான் சில ஒளிப்பதிவாளர்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் பணிபுரிய வாய்ப்பு கிட்டியது .* ஒளிப்பதிவாளர்களுக்கும்,பாடலாசிரியர்களுக்கும்*எம்.ஜ ி.ஆர். வேலை வாங்கும் விதம் சற்று கடினமாகத்தான் ஆரம்பத்தில் தோன்றும் . ஆனால் அந்த பணி, முழுமை பெறும்போது அதன் பலன் இரட்டிப்பு ஆகும் . அதனால்தான் எம்.ஜி.ஆர். பாடல்கள் காலத்தை வென்று ரசிக்கப்படுகின்றன . படங்களின் காமிரா கோணங்கள் ,ஒளிப்பதிவு* இன்றும் பாராட்டப்படுகிறது .
பொதுவாக பொன்மன செம்மல் எம்.ஜி.ஆருக்கு குடிப்பவர்களை கண்டால் பிடிக்காது .எம்.ஜி.ஆருக்கு எதிராக ஆக்கபூர்வமான விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதி வந்தவர் இடதுசாரி சிந்தனையாளரான கார்த்தி என்பவர் .அவர் இயல்பிலேயே தொழிற்சங்க நிர்வாகி. காலப்போக்கில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்படுகிறது . ஒருநாள் எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோவிற்கு செல்லும்போது அருகில் உள்ள நடைமேடையில் வேட்டி சட்டையுடன் அலங்கோலமாக குடித்துவிட்டு ,படுத்துக் கிடக்கிறார் . அதை கவனித்த* எம்.ஜி.ஆர். காரை நிறுத்தி, தன்* உதவியாளரை அனுப்பி, தன சந்தேகத்தை உறுதி செய்கிறார் .* அது கார்த்திதான் என தெரிந்ததும் ,அவரை தன்* காரிலேயே ஏற்றி, கல்யாணி மருத்துவமனையில் அனுமதித்து , அங்குள்ள மருத்துவரிடம் இவர் என்னுடைய நண்பர் ,இவரை நல்லமுறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துங்கள். அதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னார் . அவரது வீட்டிற்கும் தகவல் அளிக்க சொன்னார் . அவர் சிகிச்சையில் உள்ள காலம் வரை சில மாதங்களுக்கு , குடும்ப* செலவிற்கான*மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கி தருவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து தரும்படி தன் அண்ணன் சக்கரபாணி அவர்களை கேட்டுக்*கொண்டார் . இந்த கார்த்தி குணமாகி வந்த பிறகு பத்திரிகையாளர் சோலையிடம் சேர்ந்து பணி புரிந்து வந்தார் . கார்த்தி* தோற்றத்தில் எடுப்பானவர் .பெரிய மீசை வைத்திருப்பார் . எப்போதும் முழுக்கை சட்டை அணிவார் . இடதுகை சட்டையை மடித்து பார்த்தால், இந்த உயிர் எனக்கு எம்.ஜி.ஆர். அளித்தது என்று பச்சை குத்தி இருக்கும் .தொடர்ந்து ஜர்னலிஸம் படித்த அவர், எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக*விமர்சனங்கள் எழுத ஆரம்பித்தார் .* தன்னை எதிர்த்தவர்களையம் விமர்சனம் செய்பவர்களையும்* தனது ஆதரவாளர்களாக மாற்றும் திறமை, வல்லமை படைத்தவர்தான் எம்.ஜி.ஆர். அதனால்தான் காலம்கடந்து மக்கள் மனதில் வாழ்கிறார் எம்.ஜி.ஆர்.*
மேலும் தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------------
1.பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த -நினைத்ததை முடிப்பவன்*
2.எம்.ஜி.ஆர்.- அசோகன் உரையாடல் - ரிக்ஷாக்காரன்*
3.காஷ்மீர் பியுட்டிபுல்* காஷ்மீர் - இதய வீணை*
4.நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற - இதயக்கனி*
5.எம்.ஜி.ஆர். - நாகேஷ் உரையாடல் - அன்பே வா*
6.எங்கே, என் இன்பம் எங்கே - நாடோடி மன்னன்*
7.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா-லதா -உரையாடல் -உலகம் சுற்றும் வாலிபன்*
8.ஜவ்வாது மேடையிட்டு - பணத்தோட்டம்*
9.சிலர் குடிப்பது போலெ நடிப்பார் -சங்கே முழங்கு*
10.கடவுள் செய்த பாவம்* - நாடோடி*
*
*
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின்*டிவியில்* 19/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான திருமதி கே.பி.சுந்தராம்பாள் அவர்களை தனது தாயை போல மதித்து வந்தார் . ஒருமுறை கே.பி.எஸ்.அவர்கள்* தொலைபேசியில் எம்.ஜி.ஆரிடம்* தொடர்பு கொண்டு உனக்கு உடல்நலம் இல்லை என்று கேள்விப்பட்டேன் என்று நலம் விசாரித்தார் . அதன் பிறகு எம்.ஜி.ஆர். திருமதி கே.பி.எஸ்.அவர்களை நேரில் சென்று பார்த்தார் . அப்போது தி.மு.க. ஆட்சியில் கோவை அருகில்,திருமதி கே.பி.எஸ்.அவர்களின் சொந்த ஊரான* கொடுமுடி அருகில் ஒரு கல்லூரி திறப்பதற்கு ,அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்திருந்தார் . அதே சமயத்தில் கொடுமுடியில் ,திருமதி கே.பி.எஸ்.அவர்கள் ஒரு திரையரங்கை கட்டி முடித்திருந்தார் . அந்த திரை அரங்கை அப்போதைய முதல்வர் கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., நடிகை ஜெயலலிதா மூவரும் ஒரே ஜீப்பில் தங்குமிடத்தில் இருந்து* **பயணம் செய்து** விழாவில் கலந்து கொண்டனர் .ஆக, மூன்று முதல்வர்கள் சேர்ந்து கலந்து கொண்ட நிகழ்ச்சியாக அந்த சம்பவம் பதிவானது .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முன்கூட்டியே திருமதி கே.பி.எஸ். அவர்களிடம் அவரது பெயரில் கல்லூரி திறப்பதற்கான யோசனையை தெரிவித்திருந்தார் . அதன்படி* கொடுமுடியில் அவரது திரை அரங்க திறப்பு விழா நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி திருமதி கே.பி.எஸ். அவர்களிடம் நீங்கள் சேமித்து வைத்துள்ள பணத்துடன்* அரசு சார்பாக ஒரு நிதியளித்து உங்கள் பெயரிலேயே கல்லூரி ஒன்று திறப்பதற்கு நண்பர் எம்.ஜி.ஆரும் ஆலோசனை கூறியபடி ஒரு திட்டம் இருக்கிறது என்று அறிவித்தார் .அதற்கு திருமதி கே.பி.எஸ்.உறுதி அளித்தார் .கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய மூவரையும் ஒரு சேர நிகழ்ச்சிக்கு ஒன்று கூட்டி**வரவழைத்தவர்**வசியக் குரலுக்கு சொந்தமான , நாம் வாழும் காலத்தில் அவ்வையாராக திரைப்படங்களில் வாழ்ந்த திருமதி கே.பி.எஸ். அவர்கள் பாராட்டுக்குரியவர்*திருமதி கே.பி.எஸ்.அவர்களுக்கும், மூன்று முதல்வர்களுக்கும் இந்த நிகழ்ச்சி* ஒரு மறக்க முடியாத பசுமையான நிகழ்வு .
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1969ல் வெள்ளிவிழா படமாக தன் சொந்த தயாரிப்பில் அடிமைப்பெண் படத்தை ராஜஸ்தான் பாலைவனம், ஜெய்ப்பூர் அரண்மனை* போன்ற முக்கிய இடங்களில் படமாக்கி ,தொழில்நுட்ப* வளர்ச்சி ,*நவீன வசதிகள் இல்லாத காலத்தில் ஒருவித பிரமிப்பை படம் பார்க்கும்போது உண்டாக்கி இருந்தார் . அடிமைப்பெண் சிறந்த படமாக, மும்பையில்* பிலிம்பேர் விருது பெற்றது .இந்த படம் வெளியான காலத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடல் நடிகர் சிவாஜி கணேசன் காரில் அடிக்கடி ஒலித்ததாக அப்போது பேசப்பட்டது .அடிமைப்பெண் படத்தை பார்த்திருந்த நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகம் மட்டுமல்ல, இந்தியாவில்* எந்த திரையுலகிலும்*எந்த ஒரு தனி மனிதருக்கும்,நடிகருக்கும் இதுபோல காட்சிகள் அமைத்து, ரிஸ்க் எடுத்து நடிக்கும் தைரியம் கிடையாது என்று கருத்து தெரிவித்தாராம் .பாலைவன காட்சிகள், அரண்மனை காட்சிகள் , நீர்வீழ்ச்சி காட்சிகள்* படமாக்கம்**சிங்கத்தை தானே சுயமாக வளர்த்து ,திரைப்படத்தில் அதனுடன் சண்டை போடுவது , இவையெல்லாம் அண்ணன் எம்.ஜி.ஆரால்தான் முடியும். அதற்கு தனித்திறமை தேவை. வேறு யாராலும் இது* சாத்தியம் இல்லை என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார் .
அடிமைப்பெண் படம் பூஜையுடன் 1966ல் ஆரம்பிக்கப்பட்டது . ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருடன், சரோஜாதேவி, கே.ஆர். விஜயா இருவரும் நடிப்பதாக இருந்தது .1967ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டதும், ஒய்வு பெற்று* படத்தை மீண்டும் துவங்கியபோது* இருவரும் மாற்றப்பட்டனர் . அவர்களுக்கு பதிலாக ஜெயலலிதா இரட்டை வேடம் ஏற்று நடித்தார் .1966ல் வெளியான நான் ஆணையிட்டால் படத்தில் வரும் நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்கிற பாடலில் விரைவில் வருகிறது அடிமைப்பெண் என்று விளம்பரப்படுத்தி இருந்தார்கள் .எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டதும் 1967க்க பிறகு சில மாற்றங்களுடன் படத்தை துவக்கி 1969* மே மாதம் முதல் தேதியில் எம்.ஜி.ஆர். வெளியிட்டார் .தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் 4 அரங்குகளில்*கொளுத்தும் வெயிலில் 400* கொட்டகை நிறைந்த காட்சிகள் என்று தினத்தந்தியில் முழுப்பக்கம்* .விளம்பரம் வந்தது* தமிழகத்தில் 14 அரங்குகளில்*100 நாட்களும் , மதுரையில் வெள்ளிவிழாவும் கண்டது .1969ம்* ஆண்டில் வசூலில் சாதனை புரிந்ததில் முதல் படமாகவும், 1965ல் வெளியான எங்க வீட்டு பிள்ளை படத்தின் வசூலை முறியடித்தும்* சாதனை புரிந்தது .
பெங்களுருவில் எம்.ஜி.ஆர். கன்னட நடிகர் ராஜ்குமாருடன் பார்வையற்றோர் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார் . விழாவில் நடிகர் ராஜ்குமார் பேசியபின் எம்.ஜி.ஆர். பேசுகிறார். எம்.ஜி.ஆர். பேசும்போது, இந்த பார்வையற்றோர்* பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.50,000/- நிதி அளிப்பதாக அறிவித்தார் .* . மாணவ மாணவியர் , பள்ளி ஆசிரியர்கள் அனைவரும்,கண்ணீர் மல்க* கைதட்டி எம்.ஜி.ஆருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கின்றனர் .நடிகர் ராஜ்குமார் அசந்து போகிறார் . ஏனென்றால் அந்த காலத்தில் இந்த பள்ளிக்கு இப்படிப்பட்ட ஒரு தொகையை யாரும் அளித்ததில்லை .நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ராஜ்குமார் ,எம்.ஜி.ஆரிடம் எப்படி இவ்வளவு பெரிய தொகையை இந்த பள்ளிக்கு*அளிக்க முன்வந்தீர்கள் .என்று கேட்டார் .அதற்கு பதில் சொன்ன எம்.ஜி.ஆர்., நான் குண்டடிபட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது , பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் இருந்து இரண்டு மாணவர்கள் என்னை பார்க்க முற்பட்டனர் . ஆனால் அவர்களுக்கு முறையான அனுமதி கிடைக்கவில்லை .எப்படியோ, தட்டுத்தடுமாறி, யாரையோ பிடித்து,அவர்களின் சிபாரிசின் பேரில் அனுமதி கிடைத்து என்னை பார்க்க வந்தார்கள் .அவர்களை உள்ளே அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டேன் .அவர்கள் என்னை பார்த்துவிட்டு, என் கைகளை தொட்டு வணக்கம் தெரிவித்தார்கள்,கண் கலங்கினார்கள்* .உங்களால் என்னை பார்க்க முடியாது . நீங்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு , பூந்தமல்லியில் இருந்து வந்தீர்கள் என கேட்டேன் . நீங்கள் இருக்கும் நிலையில் எதற்கு இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்றேன் பதிலுக்கு அவர்கள் நாங்கள் உங்களை பார்த்ததில்லை. வானொலி மூலம் உங்கள் குரலை கேட்டிருக்கிறோம் .*.திரைப்படங்களில் உங்கள் நடிப்பில் நீங்கள் பேசும் வசனங்களை நாங்கள் கேட்டு மகிழ்ந்துள்ளோம் .எங்கள் மனங்களில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று சொன்னதும் எம்.ஜி.ஆர். மெய் சிலிர்த்து போனாராம் .இந்த நிகழ்வு, எம்.ஜி.ஆர். மனதை நெகிழ செய்தது* மட்டுமல்லாமல் , நீங்காத நினைவாக* மனதில் பதிந்தது . அந்த பார்வையற்றோர் நினைவாகத்தான் இந்த பள்ளிக்கு உதவ என்மனம் முன்வந்தது .என்று எம்.ஜி.ஆர். நடிகர் ராஜ்குமாரிடம் சொன்னதும் ராஜ்குமார் கண் கலங்க நன்றி சொன்னாராம் .
தி.நகர் ,ஆற்காடு சாலையில் தனி அலுவலகம் ஒன்று இருக்கிறது . அங்குதான்*கட்சி பிரமுகர்கள், திரையுலகை சார்ந்தவர்கள் எல்லாம் சந்திப்பது* எம்.ஜி.ஆருக்கு* வழக்கம் . அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். புறப்படும்போது, போக் ரோட்டில் உள்ள பள்ளி ஒன்றின் மாணவர்கள் அங்குள்ள ஒரு பள்ளத்தில்*உணவருந்திய தட்டுக்களை கழுவுவது, அதிலேயே தண்ணீர் பிடித்து குடிப்பது*என்று செய்வார்கள் .எம்.ஜி.ஆர். கார் வரும்போது சில மாணவர்கள்* காரை மறித்து எம்.ஜி.ஆரை பார்க்க வருவார்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்க, ஒன்றுமில்லை* உங்களை பார்க்க ஆசைப்பட்டோம் என்று கூறுவார்கள் .சில நொடிகளில் கார் அங்கிருந்து புறப்பட்டுவிடும் , இந்த செய்கை சில நாட்கள் தொடர்ந்தது . இந்த பிரச்னையில் இருந்து விடுபட, எம்.ஜி.ஆரின் கார் டிரைவர் எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ,உள்ளூர் தி.மு.க. கவுன்சிலரிடம் இதுபற்றி முறையிட்டார் .உடனே அந்த கவுன்சிலர் , பள்ளி தலைமை ஆசிரியரிடம் , தலைவர் காரில் செல்லும்போது, உங்கள் பள்ளி மாணவர்கள் காரை மறிக்கிறார்கள் .கூச்சலிடுகிறார்கள் . என்று புகார் தெரிவிக்கிறார் .ஆசிரியர் அந்த மாணவர்களை அழைத்து, கண்டித்து ,பிரம்பால் அடித்துவிடுகிறார் . அதன்பின் எம்.ஜி.ஆர். கார் செல்லும்போது சாலையில் காரை மறிக்க மாணவர்கள் வருவதில்லை என்பதை அறிந்த எம்.ஜி.ஆர். என்ன ஆயிற்று மாணவர்களுக்கு, யாரையும் காணோமே என்று சொல்லியபடி, காரை நிறுத்தச்சொல்லி , மாணவர்கள் கூடுமிடத்திற்கு* கார் வந்து நிற்கிறது .மாணவர்கள் உணவருந்திய தட்டிலேயே* தண்ணீர் பிடித்து குடிப்பதை எம்.ஜி.ஆர். கவனித்து விடுகிறார் .அவர்களில் ஒரு சிலரை அழைத்து, உங்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு டம்ளர் இல்லையா .ஏன் தட்டிலே பிடித்து குடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ,எங்களிடம் டம்ளர் இல்லை என்று சொன்னார்கள் .சரி, ஏன் என்னை பார்க்க வருவதில்லை .என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு ,நீங்கள்தான் எங்கள் ஆசிரியரிடம் புகார் சொல்லி எங்களை அடிக்கவைத்து விட்டீர்களே* என்று சொன்னார்கள் .அப்போது எம்.ஜி.ஆர். சொன்னதாவது,நீங்கள் எப்போதும் என்னை பார்க்க அலுவலகத்திற்கு* வரலாம்*ஆனால் வகுப்பு நேரத்தில் அல்ல* உணவு இடைவேளையின்போது ,அல்லது*.வகுப்புகள்* முடிந்தபின் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் . மறுநாள்*.அந்த பள்ளி மாணவர்களுக்காக சுமார் 50 எவர்சில்வர் தட்டுகள், 50 சில்வர் டம்ளர்கள் ,ஒரு எவர்சில்வர் டிரம் ஆகியன எம்.ஜி.ஆரால்* கவுன்சிலர் மூலம் பள்ளி தலைமை ஆசிரியரிடம்* வழங்கப்பட்டது .* பள்ளி மாணவர்களும், ஆசிரியரும் கவுன்சிலர் மூலம் எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர் .
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை*
2.இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி -நீதிக்கு தலைவணங்கு*
3.எம்.ஜி.ஆர். சிங்கத்துடன் மோதவுள்ள காட்சி** *எம்.ஜி.ஆர்.-சந்திரபாபு உரையாடல்* * - அடிமைப்பெண்*
4.நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் -நான் ஆணையிட்டால்*
5.ஏமாற்றாதே ஏமாற்றாதே - அடிமைப்பெண்*
6.நாடு அதை நாடு - நாடோடி*
7.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*
8.ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்*
-
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான விவரம்*
---------------------------------------------------------------------------------------------------------------------
01/07/20 - சன் லைப்* - காலை 11 மணி - உழைக்கும் கரங்கள்*
* * * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - தாய் சொல்லை தட்டாதே*
02/07/20* - சன் லைப் - மாலை 4 மணி - புதிய பூமி*
03/07/20 - வசந்த் டிவி - காலை 10 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - நான் ஆணையிட்டால்*
* * * * * * * *புது யுகம் டிவி -இரவு 7 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * *மெகா 24 டிவி - இரவு 9 மணி - தாயை காத்த தனயன்*
04/07/20 முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி--அலிபாபாவும்* 40திருடர்களும்**
06/07/20 - சன் லைப் - காலை 11 மணி - தெய்வத்தாய்*
* * * * * * * * *ராஜ் டிவி* - பிற்பகல் 1.30 மணி - ரகசிய போலீஸ் 115
* * * * * * * * வசந்த் டிவி -பிற்பகல் 1.30 மணி -தாய் சொல்லை தட்டாதே*
07/07/20* முரசு டிவி - மதியம் 12மணி /இரவு 7மணி - நல்ல நேரம்*
* * * * * * * *கே டிவி* * -பிற்பகல் 1 மணி - அவசர போலீஸ் 100
* * * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - அடிமைப்பெண்*
* * * * * * * வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி -கலங்கரை விளக்கம்*
* * * * * * *சன் லைப்* - மாலை 4 மணி - மன்னாதி மன்னன்*
* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - தாயின் மடியில்*
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின் டிவியில்*20/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
பிரபல இயக்குனர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்த திரு.கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்தார் . வீட்டு வாடகை சில மாதங்கள் தர முடியவில்லை .பலரிடம் உதவி கேட்டு பலனில்லை .ஒரு நாள் வீட்டு உரிமையாளர் வீட்டில் உள்ள பாத்திரங்கள் பொருட்களை எல்லாம் தனது ஆட்கள் மூலமாக வெளியே வீசி எறிகிறார்*அவருடைய மனைவி, குழந்தைகளை வீட்டை விட்டு விரட்டுகிறார் . என்ன செய்வது என்று தெரியாமல் , வாகினி ஸ்டுடியோவில் பட்டிக்காட்டு பொன்னையா படத்திற்காக படப்பிடிப்பில் இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை சந்திக்க வருகிறார் .படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். அவரை பார்த்துவிட்டு என்ன விஷயம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் என்று கேட்க ,கோபாலகிருஷ்ணன் அழுது விடுகிறார் . அவரை சமாதானப்படுத்திய எம்.ஜி.ஆர். ,உங்களுக்கு என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள் என்கிறார் . வீட்டு வாடகை பணம் ரூ.3,000/- தரவில்லை என்பதற்காக உரிமையாளர் என்னை* அவமானப்படுத்தி விட்டார் . மனைவி, குழந்தைகள் எல்லாம் தெருவில் நிற்கிறார்கள் என்று சொல்கிறார் .* அதை கேட்ட எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் உணவருந்தி விட்டு வீட்டிற்கு செல்லுங்கள்*. மற்றவைகளை* நான் பார்த்துக் கொள்கிறேன்* என்று கூறி* அனுப்பிவிட்டார் . அவர் வீட்டுக்கு திரும்பியதும் ,வீட்டு உரிமையாளர் உங்கள் பணம் வந்து சேர்ந்துவிட்டது என்று கூறி, வீட்டில் அவர்களை தங்க வைக்கிறார் . பின்னர் இரவு 9 மணியளவில் எம்.ஜி.ஆர். தனது உதவியாளர் மூலம் ரூ.10,000,-* இதர செலவுகளுக்காக கொடுத்தனுப்புகிறார் .கோபாலகிருஷ்ணனுக்கு இன்ப அதிர்ச்சி .,ஆனந்த கண்ணீர் சிந்துகிறார் .அந்த உதவியாளர் கோபாலகிருஷ்ணனுக்கு பணம் கொடுத்துவிட்டு** எம்.ஜி.ஆரிடம்* திரும்பி வந்து சொன்ன*பிறகுதான் எம்.ஜி.ஆர். இரவு உணவருந்த சென்றார் . அதாவது தான் செய்த உதவி ,அந்த நபரை சென்று அடைந்துவிட்டது என்று உறுதி செய்த பின்னர்தான் சாப்பிட சென்றார் ..இப்படி பசியோடு காத்திருந்து மற்றவர்களுக்கு உதவுகிற செய்கைகளால்தான் எம்.ஜி.ஆர். மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்*.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய திறமைசாலி என்பதற்கு திண்டுக்கல் தேர்தல் ஒரு உதாரணம் .* திண்டுக்கல்லில் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும் கட்சி ஆரம்பித்த 7 மாதங்களில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது மாயத்தேவர் வேட்பாளராக அறிமுகமாகிறார் .* ஆளும் கட்சியான தி.மு.க. அதிகாரம், பணம், படை பலத்துடன் போட்டியிடுகிறது . இந்திரா காங்கிரஸ், பழைய காங்கிரஸ் காமராஜர் தலைமையில் களம் காண்கிறது .* பார்வார்டு பிளாக் கட்சி தனித்து நிற்கிறது .* எம்.ஜி.ஆருக்கு பலத்த எதிர்ப்புகள், நான்குமுனை போட்டி ..இந்த சூழலில்* முதல் முறையாக எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க.தேர்தலில் போட்டி . தேர்தல் பிரச்சாரத்தின்போது*நள்ளிரவில் பொதுக்கூட்டம் முடிந்ததும் , நடுக்காட்டில் வேனை நிறுத்தி,*ஒரு துண்டை விரித்து படுத்து இளைப்பாறுவாராம் . அருகில் துணைக்கு பாதுகாவலர்கள் இருப்பார்கள் . சற்று நேரம் கழித்து எழுந்ததும் ,தனது துண்டை இரு கைகளால் மார்புக்கு நேராக இறுக்கி பிடித்தவண்ணம் ஏதாவது தாக்குதல்கள் வந்தால் எதிர்த்து தாக்குவதற்காகவு, தடுப்பதற்காகவும்* விறுவிறுப்புடன் நடந்து செல்வாராம் .* இப்படி ஒரு புது வியூகத்தை எம்.ஜி.ஆர்.வகுத்தார் .
ஒரு நாள் எம்.ஜி.ஆர். பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் மூக்கையா தேவர் வீட்டுக்கு விஜயம் செய்கிறார் . அவரை வரவேற்ற மூக்கையா தேவரின் மனைவி பதற்றத்துடன், தேவர் ஐயா வெளியில் சென்றுள்ளார் .முன்கூட்டி தகவல் சொல்லாமல் வந்து விட்டீர்களே ..பரவாயில்லை. அமருங்கள். அவருக்கு தகவல் அனுப்பி விடுகிறேன் . விரைவில் வந்துவிடுவார்என்று சொல்கிறார். ஒன்றும் அவசரமில்லை .நான் காத்திருக்கிறேன் . இந்த பக்கமாக பிரச்சாரத்திற்கு வந்தேன் . அப்படியே தேவர் ஐயாவை பார்த்துவிட்டு செல்லலாம் என்று முடிவு .என்று சொன்னார் . தேவரின் மனைவி எம்.ஜி.ஆரிடம்* .கொஞ்சம் கஞ்சி சாப்பிடுங்கள் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார் . அதற்குள் தகவல் கிடைத்து மூக்கையா தேவர் வீட்டுக்கு திரும்புகிறார் .* வீட்டு வாசலில் கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்துவிட்டு பதற்றத்துடன் உள்ள நுழைந்தவர் ,எம்.ஜி.ஆரை பார்த்ததும் கட்டி தழுவி வரவேற்கிறார் . பின்னர் எம்.ஜி.ஆர். தேவரிடம் பேசும்போது,உங்கள் வேட்பாளரை நீங்கள் இங்கு நிறுத்தி இருந்தாலும்* அ.தி.மு.க. முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது .அதற்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க ஆசைப்படுகிறேன் என்று* எம்.ஜி.ஆர். கூறி தேர்தல் களத்தில் இறங்கினார் .
எம்.ஜி.ஆர். என்ற பெயர் தமிழா, ஆங்கிலமா ,எந்த மொழி என்றே தெரியாமல் மக்கள் மனதில் இன்றைக்கும் ஆழ பதிந்துள்ளது .சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள், முதியவர்கள்* நெஞ்சில் உள்ளே இருக்கும் இன்னொரு பெயர் , சொல்லும் எம்.ஜி.ஆர். தான் . அந்த பெயரின் வீரியமும், சக்தியும் எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை* தொடர்ந்து பல ஆண்டுகளாக கேள்விப்பட்டிருக்கிறேன் .பல்வேறு தரப்பினரின்* எம்.ஜி.ஆர். பற்றிய ஆலோசனைகள், அருமை பெருமைகள் கூறுபவர்கள், சம்பந்தப்பட்டவர்களின்* தொடர்புகள்* இருந்து கொண்டே இருக்கின்றன . எம்.ஜி.ஆர். பலரது வாழ்க்கையில் பல்வேறு விதமான* எழுச்சியை உருவாக்கி இருக்கிறார் . உண்மையிலேயே, பலரது வாழ்க்கையில் நம்பிக்கை பெறுவதற்கு எம்.ஜி.ஆர். என்கிற சொல் ஒரு வித்தாகும் ,வேராகும், கிளைகள் நிறைந்த ஒரு பெரிய மரமாகும் என்கிற வகையில் தமிழகத்தின் பெருமைகளாக திகழ்கின்றன .என்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாது .
தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா -தாய்க்கு பின் தாரம்*
2.அச்சம் என்பது மடமையடா*- மன்னாதி மன்னன்*
3.பிறந்த இடம் தேடி நடந்த*தென்றலே -நான் ஆணையிட்டால்*
4.உலகம் பிறந்தது எனக்காக - பாசம்*
-
"ஆயிரத்தில் ஒருவன்" பிறந்த நாள் ஜூலை 9 . இந்த படத்தின் பெருமைகளை ஒரு பக்கத்தில் எழுதிவிட முடியாமா என்றால் எப்படி முடியும்.தமிழ் படத்தை ஹாலிவுட் உயரத்துக்கு எடுத்து சென்ற படம்.
நமது தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு எல்லையில்லா திறமை இருப்பதை அறிந்த எம்ஜிஆர் அவர்களின் சீரிய உழைப்பால் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த படம்.
பத்மினி பிக்சர்ஸ் எம்ஜிஆரை வைத்து எடுத்த முதல் படம். சில நாடக சினிமாக்களை நிறைய செலவு செய்து எடுத்து நொந்து போன நிலையில் முதல் முதலாக நல்லதொரு சினிமாவை எடுக்க தலைவர் மூலம் கற்றுக்கொண்டு
அதில் வெற்றியும் பெற்று சூழ்ந்த கடனில் இருந்து மீண்டு வந்த படம்.
அதன்பிறகு தலைவர் கால்ஷீட் கிடைத்தால் போதும் எத்தனை படம் வேண்டுமானாலும் எடுப்பேன் என்று தலைவருடன் பணியாற்றுவதில் பெரு மகிழ்ச்சி கொண்டார் பந்துலு.
"மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்". "வெற்றி தேவதையே உன் வீட்டு வேலைக்காரிதானே". "உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா?
என்றென்றும் நிலைத்து நிற்க!"
என்பது போன்ற இந்தக்கால இளைஞர்களையும் கவர்ந்த r k சண்முகத்தின் வசனம் படத்தின் கூடுதல் சிறப்பு. அதனால்தான் 2014 ல் மீண்டும் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடி ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது.
நம்பியாரிடம் ஒருசிலர் ஹாலிவுட் படங்களை பார்ப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் "ஆயிரத்தில் ஒருவனை" பாருங்கள். ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு ஏற்படும்.
"ஆயிரத்தில் ஒருவன்" வந்த பிறகு வந்த "கரீபியன் சீ" படம் கடல் கொள்ளை சம்பந்தப்பட்ட படம்தான்
சக்கை போடு போட்டது.
அந்தக் காலத்திலே எவ்வித வசதியும் இல்லாத காலத்தில் இப்படி ஒரு படம் வந்ததென்றால் அது நிச்சயம் ஆச்சர்யத்துக்குரியது. அந்த படம் சற்று தாமதித்து வந்திருந்தால் இன்னும் நிகரற்ற வெற்றியை பதிவு செய்திருக்கும் என்பது என் கணிப்பு. ரீ மாஸ்டர் செய்து 2014 ல் வெளியிட்ட போது வெள்ளிவிழாவையும் தாண்டி 190
நாட்கள் ஓடி பெரிய வெற்றியை பதிவு செய்தது நினைவிருக்கலாம். படம் வெளியான 1965 ல் இருந்து நிற்காமல் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் படம்
"ஆயிரத்தில் ஒருவன்" மட்டும்தான்.
பந்துலுவுக்கு "ஆயிரத்தில் ஒருவன்" ஒரு பொன் முட்டையிடும் வாத்து என்றே சொல்லலாம்.
1965 ல் வெளியான போது சென்னையில் மூன்று திரையரங்கம், கோவை,திருச்சி மற்றும் சேலத்தில் 100 நாட்கள் ஓடியது.
மதுரையில் ஷிப்டிங் முறையில் 100
நாட்களை பதிவு செய்தது.இலங்கையில் இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.
தூத்துக்குடி துறைமுகம் சார்ந்த பகுதி என்பதால் முதல் 10 தினங்கள் 4 காட்சிகள் நடைபெற்று பாலகிருஷ்ணாவில் புதிய சாதனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து 63 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. படகோட்டியும், ஆயிரத்தில் ஒருவனும் எத்தனை முறை திரையிட்டாலும் 10 தினங்களுக்கு மேல் ஓடி வெற்றியை பதிவு செய்ய தவறுவதில்லை.
-
"உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்" என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் அற்புதமானது. இந்த வரிகளை போல நாம் வாழ வேண்டும் என்றால் உண்மையை தெரிந்து கொண்டு
பொய்களை சொல்லி பிழைக்க வேண்டும் என்ற பொருள் கொள்ளலாம். மீடியா என்று சொல்லக்கூடிய செய்தி ஸ்தாபனங்கள் அதைதான் செய்து கொண்டிருக்கின்றன. செய்தி ஒன்றுதான். ஆனால் அதை ஆளும் கட்சி செய்தி ஸ்தாபனங்கள் அந்த செய்திக்கு கட்சியின் கலர் அடித்து அவர்கள் மக்களுக்கு விநியோகம் செய்வார்கள்.
அதே செய்தியை எதிர்க்கட்சி அவர்கள் கட்சியின் வர்ணம் பூசி மக்களுக்கு விநியோகிப்பார்கள். ஆக மக்கள்தான் உண்மை எது? பொய் எது?ன்னு ஒண்ணும் புரியலை நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலை,
என்ற பாடலுக்கு ஏற்ப குழப்ப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
காரணம் சுய நலம்.
ஆளுங்கட்சி
தங்கள் நாற்காலியை கெட்டியாக பிடித்து கொள்ள அந்த செய்தியை
அவர்களுக்கேற்ற மாதிரி வாசிப்பார்கள். எதிர்க்கட்சி அதே நாற்காலியை குறி வைத்து அந்த செய்தியை வேற கலரில் வாசிப்பது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. நான்தான் மக்களுக்கு சேவை செய்வேன் என்று அவர்கள் அடம் பிடிப்பது உண்மையான மக்கள் சேவைக்காகவா?
இல்லை அந்த நாற்காலி தரும் எல்லையில்லா செல்வமும் புகழுமா?
என்று யோசிப்போமானால் நம் அறிவுக்கு தட்டுப்படுவது என்ன என்று நமக்கே நன்றாகவே தெரிகிறது.
பலமுறை அனுபவித்த கட்சி அந்த
பதவியின் ருசி அறிந்தவர்கள். தேனை எடுப்பவன் கைகளை வாயில் வைக்காமல் கழுவி விடுவானா? அதே நேரம் மக்களில் சுமார் 60 சதவீதத்தினர் செய்திகளை உண்மை நிலையில் படிக்க விரும்புகின்றனர். மீதம் உள்ளவர்கள்தான் உண்மை எது பொய்மை எது என்ற தடுமாற்றத்தில் இருப்பவர்கள்.
ஒரு காலத்தில் மக்களுக்கு உண்மையான செய்திதான் விநியோகிக்கப்பட்டது.
ஆனால் இப்போது அது சாத்யமில்லை. இந்த ரெண்டும் கெட்டான் நடுநிலை செய்தி நிறுவனங்கள் உண்மையை சொல்ல
தைரியமின்றி அதே நேரம் மக்களுக்கு எப்படியாவது உண்மை செய்தியை சேர்ப்பதற்காக "கிசுகிசு"வை பயன்படுத்தினார்கள்.
உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஏனென்றால் நேரடியாக உண்மையை சொல்லி விட்டால் அந்த செய்தி நிறுவனத்துக்கே கலர் பூசி விடுவார்கள். அதுமட்டுமல்ல அடுத்தாற்போல் இவர் உண்மையை
சொல்லி விடுகிறார், எனவே இவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
எனவே உண்மை அவர்களுக்கு மறைக்கப்படுகிறது.
"நாம்தான் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க உண்மை தன்மையை கண்டுபிடிக்க வேண்டும்.
அந்த நேரத்தில் வந்த ஒரு கிசுகிசு.
புராண பிரமாண்ட படங்களை எடுக்கும் ஒரு தயாரிப்பாளர் பல இடங்களில் கடன்பெற்று கிளைமாக்ஸ் காட்சிக்காக போடப்பட்ட 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள
செட் அடித்த சமீபத்தில் அடித்த சூறைக்காற்றில் சிதைந்து போனதை கண்டு செய்யவதறியாது திகைத்து கை பிசைந்து நிற்கிறார். குறிப்பிட்ட காலத்தில் படத்தை வெளியிட முடியாமலும்
வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமலும் தவித்து வருகிறார்.
சம்பந்த பட்டவர்கள் கை கொடுப்பார்களா?. என்று தெரியவில்லை
என்று முடித்திருப்பார்கள்.
என்ன இப்படி எழுதிட்டீங்க! இனிமே உங்களுக்கு செய்தி தரமாட்டோம் என்று சொல்லி விட்டால் அடுத்த வாரம் அதை திரித்து தெலுங்கில் புராணப் படத்தை எடுப்பவர்கள் என்று மாற்றி சொல்லுவார்கள். 70 களில் நிறைய சினிமா பத்திரிக்கைகள் சினிமா வில் எம்ஜிஆர் ஆதரவு சிவாஜி ஆதரவு என்று கணக்கற்ற பத்திரிக்கைகள் வெளிவந்தது. அதில் சிவாஜிக்கு ஆதரவாக முழு பொய்களை மட்டுமே. எழுதிக்கொண்டிருந்த 'திரை மன்னன்" மற்றும் "மதிஒளி" போன்ற பத்திரிகைகள் சிவாஜி ரசிகர்களின் சந்தோஷத்துக்காக அவர்களுக்கு கற்பனையில் உதிக்கின்ற அத்தனையையும் அவரின் ரசிகர்களுக்கு விற்பனை செய்வார்கள்.
1968 ல் சிவாஜிக்கு மொத்தம் 8 படங்களும் எம்ஜிஆருக்கு 8 படங்களும் வந்தது. எம்ஜிஆரின் 8 படங்களுக்கும் நாயகி ஜெயலலிதா தான். மதிஒளி எழுதுகிறது "ரகசிய போலீஸ் 115." தோல்வி அடைந்து விட்டது. "குடியிருந்த கோயில்" இடி விழுந்த கோயில் ஆனது. "ஒளிவிளக்கு" ப்யூஸ் ஆன பல்பாகி விட்டது என்று கூசாமல் பொய்களை கட்டவிழ்த்து விட்டது. அதனால் எம்ஜிஆர் "அடிமைப்பெண்ணை" மட்டும்தான் நம்பியிருக்கிறார் என்று.
இது அந்த பத்திரிகையின் தவறாக இருந்தாலும் அப்படி அவர்கள் எழுதாவிட்டால் அதே மாதிரி எழுத. இன்னெரு பத்திரிக்கையை சிவாஜி ரசிகர்கள் உருவாக்கி அதை எழுத வைப்பார்கள் என்பதே உண்மை.ஆனால் எம்ஜிஆர் ஆதரவு பத்திரிக்கைகளுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
எம்ஜிஆர் படங்கள் இயல்பாகவே சாதனைகள் செய்வதால் அதை பொய் என்று சொல்லி சிவாஜி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுவதுதான் இந்த பத்திரிகைகளின் வேலை. இந்த பத்திரிகை ரிக்ஷாக்காரன் வசூலை ராஜா முறியடித்ததாக போட்டிருக்கிறார்கள்.
அதற்கு காரணம் "ரிக்ஷாக்காரன்" திரையிட்ட பின் தேவிபாரடைஸில் டிக்கெட் கட்டணங்களை கூட்டினார்கள். 1 ஷோ ஹவுஸ்புல்லுக்கு 2722 ரு இருந்ததை ஏறக்குறைய 3600 ரு ஆக்கி விட்டார்கள்.. அப்படியானால் முதல் 10 நாளும் ஹவுஸ்புல் காட்சிகளாக நடைபெறும் போது கட்டணம் உயரத்தானே செய்யும். அதன்பின் வந்த "ரிக்ஷாக்காரன்" வசூலை முறியடிக்க முடிந்ததா?
இல்லையே, கிருஷ்ணா வசூலையாவது நெருங்கினார்களா? என்றால் இல்லை.
அதேபோல் "சொர்க்கம்" படத்தின் இரண்டு வார. திருச்சி ஏரியா வசூலை வெளியிட்டிருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியான படங்களல்லவா, ஒரளவு கூட்டம் வந்தவுடன் குதிப்பார்கள்.
ஆனால் அதற்குமேல் வசூலை வெளியிட மாட்டார்கள். அதற்கு மேல் தியேட்டருக்கு ஆள் வந்தால்தானே வெளியிடுவார்கள். இப்படி முட்டாள்தனமாக ரசிகர்களை ஏமாற்றி குறுகிய காலத்துக்கு மனம்
குதூகலிக்க வைப்பதில் அவர்களுக்கு ஆத்ம திருப்தி.
சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆரை எதிரியாகத்தான் பார்த்தார்கள். திமுக விரும்பிகள் கூட எம்ஜிஆரின் படத்தை ரசிப்பார்கள். ஆனால் ஐயனின் பிள்ளைகள் சிவாஜியே அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் ஐயனை மதிக்காமல் எதிரியான திமுகவுக்கு வாக்களித்து தங்கள் பழியுணர்ச்சியை தீர்த்து கொள்வதுடன் தங்கள் ஐயனை படுகுழியில் தள்ளி விட்டு இந்த பையன்கள் திமுகவின் வெற்றியில்
புளகாங்கிதம் அடைவார்கள்... நடிப்பில் நேரடி எதிரியான எம்ஜிஆரை எதிர்ப்பது ஒன்றுதான் தங்களது உறுதியான
கொள்கையாய் வைத்திருக்கிறார்கள்.
எம்ஜிஆரை எந்தவிதத்திலும் தோற்கடிக்க முடியாத அவர்களது வெறி ரத்தத்தில் கலந்து விட்டது. ஐயனை நம்பி கூட போகலாம் இந்த பையன்களை நம்பி போக முடியவில்லை, இல்லை, இல்லை.
இதை முன்கூட்டியே உணர்ந்த "ஞானப்பறவை" சிவாஜி "ஜீலியஸ் சீசர்" வேடத்தில் திரைநாடகத்தில் தோன்றி "you too brutus" என்று யாரை பார்த்து கேட்கிறார் என்று நினைக்கிறீர்கள். ஐயனின் பேச்சை கேட்டு அவர் கட்சி கூட்டணிக்கு வாக்களித்த எங்களையா? ஐயனுக்கு துரோகம் செய்து விட்டு திமுக வுக்கு வாக்களித்த புள்ளைங்களையா?
இவ்வளவுக்கும் 1968 ல் அந்த ஆண்டின் "பிளாக்பஸ்டர்" படமே
"குடியிருந்த கோயில்தா"ன். சிவாஜிக்கு. B,C யை தவிர A சென்ட்டரில் ஓரளவு நன்றாக ஓடிய படம்தான் "தில்லானா மோகனாம்பாள்". ஆனால் வசூலில் முதன்மை பெற்றது 'குடியிருந்த கோயில்" 2வது "ஒளிவிளக்கு" 3வது "ரகசிய போலீஸ் 115" அதன்பின் தான் மற்ற படங்கள். இது சிவாஜி ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும் அதனால் அவர்கள் வசூலை விட்டு சிவாஜியின் நடிப்பை பிடித்து கொண்டு சிலாகித்து பேசுவார்கள்.
-
திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாக அதிமுக போட்டியிட்டது. கட்சி தோன்றி 7 மாதங்களுக்குள் நடைபெற்ற முதல் தேர்தல். இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிமுகவின் எதிர்காலம் அந்த தேர்தல் முடிவை பொருத்துதான் அமையும் என்பதால் எம்ஜிஆர் ரசிகர்கள் பரபரப்புடனும் பதைபதைப்புடனும் காணப்பட்டார்கள். முதலில் தலைவர் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியிடுவதில் பிசியாக இருந்தார் படம் மே 11 ல் வெளியான பின்பு தேர்தல் களத்தில் இறங்கினார்.
படம் வெளியாகி 10 நாட்களில் இடைத்தேர்தல். கருணாநிதியோ தேர்தலுக்கு பல மாதங்கள் முன்னாடியே தேர்தல் வேலையை தொடங்கி விட்டார். அவரின் மந்திரிகள் அத்தனை பேரும் திண்டுக்கல்லில் டேரா போட்டிருந்தனர். எதற்கு! தர்மதேவனை தோற்கடிப்பதற்கு. பல தேர்தலை கண்டவர் கருணாநிதி. சகல யுக்திகளையும் அறிந்தவர். மாநில ஆட்சி அதிகாரம் அத்தனையும் கையில் வைத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் மத்தியில் ஆட்சி அதிகாரத்துடன் இ.காங்கிரஸ் மூணாவது அணியாக காமராஜ் தலைமையில் இயங்கும் ஸ்தாபன காங்கிரஸ் என்று மூன்று அணியாக
தேர்தல் களத்தில் மோதியது.அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை எம்ஜிஆர் அறிமுகப் படுத்தினார் திமுக சார்பில் பொன்முத்துராமலிங்கமும் இ.காங்கிரஸ் சார்பில் n s v சித்தனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்கள்.
புரட்சி தலைவரின் அதிமுகவுக்கு முதல் தேர்தல். ரசிகர்களுக்கு அரசியல் அனுபவம் எதுவும் கிடையாது. திமுகவின் பொன்முத்துராமலிங்கம் பழுத்த அரசியல்வாதி.
தேர்தல் பிரசாரத்தின் போதே திண்டுக்கல் அருகே ஒரு பாலத்தை கடக்கும் போது எம்ஜிஆர் பிரசார வாகனத்தை எதிர்பார்த்து குண்டு வைத்து விட்டனர். எம்ஜிஆர் சமயோசிதமாக வேறு வாகனத்தில் வந்ததால் உயிர் தப்பினார். உடனேஅவர் கலந்து கொண்ட தேர்தல் பிரசார மேடையில் மைக்கை கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் நடந்த படியே சிங்கத்தின் சீற்றத்துடன் இந்த காரியத்தை செய்தவர்கள் தைரியமிருந்தால் மேடைக்கு வாருங்கள் நேருக்கு நேராக மோதலாம், கோழைத்தனமாக மறைந்து கொண்டு தாக்குவதை விட்டு விட்டு நேரடியாக வாருங்கள் இங்கேயே வைத்துக் கொள்ளலாம் நான் தயார் என்று அறைகூவல் விடுத்தார்.
கூட்டம் ஆவேசத்துடன் கொந்தளித்தது. காமராஜர் ஒரு பக்கம் திமுக,அதிமுக இரண்டுமே
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தாக்கி பேசினார்.
தேர்தலில் திமுக ஜெயிப்பது கடினம்
என்று தெரிந்தவுடன் பெண்கள் ஓட்டை செல்லாத ஓட்டாக மாற்றும் நோக்கத்தில் இரட்டை இலையில் இரண்டு இலைகளிலும் முத்திரை குத்துங்கள் என்று தவறான பிரசாரம் செய்தார்கள்.
ஆனால் பெண்களோ மிகத்தெளிவாக ஓட்டு போடும் நாளான 20-5-1973 அன்று காலையிலேயே
வாசலிலே இரட்டை இலை கோலம் போட்டது மட்டுமின்றி அவர்கள் இரட்டை இலை சின்னத்தையும் தலையிலே சூடி கூட்டம் கூட்டமாக
வாக்களித்து விட்டு வந்தனர்.மறுநாள் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்குகள் எண்ணும் நாளன்று ஆங்காங்கே வதந்திகள் தலைவிரித்தாடின.
ரேடியோவை சுற்றி கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முதல் அறிவிப்பில் அதிமுக முன்னணி நிலவரம் வெளியான உடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புரட்சி தலைவர் வாழ்க கோஷம் ஆங்காங்கே காணப்பட்டது. வெடிச்சத்தம் தொடர்ந்து ஒலித்து கொண்டே. இருந்தது. அன்று நாங்கள் கொண்ட மகழ்ச்சி விவரிக்க முடியாதது. வெற்றி வித்தியாசம் கிட்டத்தட்ட 142000 வாக்குகள். தேர்தலில் இரண்டாவதாக வந்தது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்.
அதுவும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.
கள்ள ஓட்டுகளை மட்டும் கட்டுப்படுத்தியிருந்தால் பிரதான கட்சி தனது டெப்பாசிட்டை இழந்திருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதுவரை திமுக பெற்ற வெற்றிக்கு புரட்சி தலைவர் தான் காரணம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.
செல்லாத வாக்குகள் அளவுக்கு அதிகமாக சுமார் 8000க்கும் அதிகமாக காணப்பட்டது அவர்கள் முயற்சி ஓரளவு பயனளித்தது என்றே சொல்லலாம்.ராஜதந்திரி என்று அழைத்துக் கொண்டவர்களின் ராஜதந்திரம் தர்மத்தின் முன்னே வெட்கித் தலை குனிந்ததை மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தார்கள்.
எங்கள் காதுகளில் "நம்நாடு" படப்பாடல் "பொய்யும்,புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவரெல்லாம் போனாங்க மூலைக்கு மூலை தூக்கி எறிந்தோம் தலைகுனிவாக ஆனாங்க" பாடலும் "நீதிக்கு இது ஒரு போராட்டம் நிச்சயம் உலகம் பாராட்டும்" என்ற "உலகம் சுற்றும் வாலிபனி"ன் டைட்டில் பாடலும் ஒலித்து கொண்டிருந்தது.
"நம்மை ஏய்ப்பவர் கைகளில் இருந்து
அதிகாரம்" நழுவும் காட்சி நம் மனக்கண்ணுக்குள் தெரிய ஆரம்பித்தது. ஆண்டவன் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை மென்மேலும் வளர ஆரம்பித்தது. இருண்டிருந்த தமிழகத்தின் வானில் ஒரு விடிவெள்ளி தோன்றி விடியலை நோக்கி சென்று கொண்டிருந்தது.
-
சிவாஜி ரசிகர்கள் "சிவந்த மண்" ஒரு லாபகரமான படமாகவும் கூட வந்த சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்த "தர்த்தி" இந்தி படம் தான் தோல்வி படம் என்று வாதாடுகிறார்கள். அதனால் ஒன்றிரண்டு கேள்விகளை மட்டும் முன் வைக்கிறேன். "சிவந்த மண்ணி"ன் பட்ஜெட் அத்தனையும் இந்தி படத்தின் மீது போட்டு விட்டு எங்கள் படம் லாபம் வந்தது என்று
கூறுகிறார்கள்.
படத்தின் பட்ஜெட் சுமார் 85 லட்சம் என்பது பத்திரிகையில் வந்த செய்தி. அந்த படத்திக்கு செய்த அதீதமான செலவை பட்டியல் போட்டு அவர்களே பதிவிட்டிருக்கிறார்கள். அதையே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
ஆனால் நடிகர் நடிகைகள், டெக்னீசியன்ஸ் சம்பளம் இதில் சேர்க்கப்படவில்லை. ஸ்ரீதர் உற்ற நண்பராக இருந்தும் என்னுடைய வியாபார விஸ்தீரணம்
இவ்வளவுதான். இதற்கு மேல் நீ செலவு செய்தால் உன் முதலுக்கு மோசமாகி விடும் என்று எச்சரிக்கை செய்ய வேண்டாமா?
ஸ்ரீதர் வட்டிக்கு வாங்கிய பணத்தில் நன்றாக பிரமாண்ட படம் எடுத்து அனுபவித்தார்கள். படம் மொத்தம் 38 தியேட்டரில் 50 நாட்கள்
ஓடியதாக விளம்பரத்தை சாட்சியாக காட்டுகிறார்கள். ஒரு படம் 50 நாட்கள் ஓடினாலே லாபம் வந்து விடுமா? அதுவும் மிகுந்த செலவு செய்து வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம். சரி அதை விடுவோம்.
100 நாட்கள் எத்தனை தியேட்டர்களில் ஓடியது. விளம்பரத்தில் 9 தியேட்டர் என்று போட்டிருந்தார்கள். அப்படியானால் படம் 50 நாளிலே" பணால்" ஆகிவிட்டதென்ற அர்த்தமா?
அதுவும் தூத்துக்குடியை கழித்து விட்டு பார்த்தால் 8 தியேட்டர் தான் வருகிறது. தூத்துக்குடியில் சிவாஜி படங்கள் 3 வாரமே ஓடாது. அதை 100
நாட்கள் ஓட்டிய திறமை ஹாலிவுட் நடிகர் ரசிகர்களுக்கு கூட கிடையாது.
சிவாஜி ரசிகர்கள் பிரமாண்ட வெற்றி எனக்கூறும் "தங்கப்பதக்கம்" தங்களுடைய 51 வது நாள் விளம்பரத்தில் 35 தியேட்டர்களை கொடுத்திருக்கிறார்கள். அதில் ரிலீஸ் தேதிக்கு பின்னாடி ஒரு தியேட்டரிலிருந்து எடுத்து அடுத்த தியேட்டரில் 3 வாரம், 4 வாரம் ஓடிக்கொண்டிருந்த படங்களையும் இணைத்து விளம்பரத்தில் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் "தங்கப்பதக்கம்" 50 நாள் கூட ஓட முடியாமல் 41 நாள்தான் ஓடியது. அப்படிப்பட்ட ஊரில் "சிவந்த மண்ணை" 100 நாள் ஓட்டியது உலக அதிசயங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.
இது போல சிவந்த மண் 50 நாள் விளம்பரத்திலும் நிறைய செகண்ட் ரிலீஸ் தியேட்டரும் கேரளாவில் சொல்லியிருக்கும் தியேட்டர் 50 நாட்கள் ஓடாத தியேட்டரையும் இணைத்து விளம்பரம் தரப்பட்டிருக்கிறது.
பொதுவாக எம்ஜிஆர் படங்களுக்கு 50 நாள் விளம்பரம் சென்னை தியேட்டரும் மற்றும் தென்னகமெங்கும் என்ற விளம்பரம் தான் வரும். எம்ஜிஆர் படங்கள் பொதுவாக திரையிட்ட அத்தனையிலும் 50 நாட்கள் ஓடுவதால் இது போன்ற சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது கிடையாது. மதுரை வீரன் 100 நாட்களே 33 திரையரங்குகளிலும், உலகம் சுற்றும் வாலிபன் 100 நாட்கள் 20 தியேட்டர்களிலும், எங்க வீட்டு பிள்ளை 18 தியேட்டர்களிலும் ஓடியதால் நாங்கள் 50 நாட்களை பற்றி கவலை கொள்வது கிடையாது.
இது ஒரு படு தோல்வி படம்தான். வெற்றி படம் என்றாலே போட்ட முதல் கைக்கு வந்து அதற்கு மேலும் வசூல் வந்தால்தான் வெற்றிப்
படம். எம்ஜிஆருக்கு "தாய் சொல்லை தட்டாதே" "தாயை காத்த தனயன்" "பணக்கார குடும்பம்" "திருடாதே" போன்ற படங்களின் அளவே ஓடியிருக்கிறது.ஆனால் எம்ஜிஆர் படங்கள் எல்லாம் வெற்றிப் படங்கள்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நிறைவான வசூலை பெற்ற படம்.
1972 ல் வெளி வந்து வசூல் சாதனை என்று பேப்பரில் விளம்பரம் வந்த
"பட்டிக்காடா பட்டணமா" 6 வாரத்தில் பெற்ற மொத்த வசூல் 30 லட்சம்தான். மீதமுள்ள காலங்களையும் சேர்த்தால் மொத்தம் 40 லட்சம் தான் வருகிறது. வரி நீக்கி பார்த்தால் நெட் கலெக்ஷன் அதிக பட்சம் 23 லட்சம் வரலாம். இதில் தியேட்டர்காரங்க பங்கு சுமார் 8 லட்சத்தை கழித்து பார்த்தால் மிஞ்சுவது 15 லட்சம் மட்டும்தான்.
"பட்டிக்காடா பட்டணமா" தயாரிப்பு செலவு 7 லட்சம் என்று வைத்துக் கொண்டால் லாபம் சுமார் 8 லட்சம் இருக்கலாம். "சிவந்த மண்ணை" விட அதிகம் வசூல் செய்த "பட்டிக்காடா பட்டணமா" படத்துக்கே மொத்த வரவு இவ்வளவுதான். அப்படியானால் "சிவந்த மண்ணை" தயாரித்த ஸ்ரீதருக்கு 15 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் மீதம் உள்ள 70 லட்சத்தை யார் தருவார்கள்.
பாதிதான் எங்களுடைய செலவு என்றாலும் 42 லட்சத்தில் 15 லட்சத்தை கழித்து பார்த்தால் நிகர நஷ்டம் 27 லட்சம் தமிழில் மட்டும்.
"சிவந்த மண்" தயாரிப்பு செலவு 42 லட்சம் என்று வைத்துக் கொண்டால்
₹ 1 கோடி வசூல் ஆனால்தான் போட்ட காசு கைக்கு வரும். எம்ஜிஆருக்கு இந்த விவரங்கள் நல்ல அத்துபடி. அதனால் படத்தின் பட்ஜெட்டுக்கு தகுந்த படிதான் செலவு பண்ண வைப்பார். அதனால்தான் எம்ஜிஆரின் எந்த
ஒரு படமும் தோல்வியை தழுவிபது கிடையாது. "நவரத்தினத்தை" தோல்வி படம் என்பவர்கள் வாயை அடைக்க திருa p நாகராஜன் அவர்கள் அவர் வாயாலே சொன்னதை இதில் பதிவு செய்திருக்கிறேன். பார்த்து புரிந்து கொள்ளவும்.
அப்பாவி தயாரிப்பாளர்கள் தலையில் கல்லை தூக்கி போடமாட்டார். ஒரு பொருளை₹10 க்கு வாங்கினால் குறைந்த பட்சம்₹11க்காவது விற்றால்தான் லாபம் ₹1 கிடைக்கும். ₹ 42 க்கு வாங்கிய பொருளை₹15 க்கு விற்று விட்டு, போன பொருளை விட அதிகம் விற்று விட்டோம் என்று வாதிடும் அறிவுக் கொழுந்துகளை நாம் எப்படி பார்ப்பது.
அதைத் தெரிந்து கொண்ட சிவாஜி தன்னுடைய ரசிகர்களை பிள்ளைகள் (ஒன்றும் தெரியாததால்)
என்று அழைத்திருக்கலாம். அதனால் தான் அப்பாவி கணேசனின் பிள்ளைகள் சிவாஜியை ஐயன் என்று அழைக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது.
நன்றி* திரு.சங்கர்*
-
குமுதம் வார இதழ் -15/07/20
------------------------------------------------
செருப்பும் பொறுப்பும்*
------------------------------------
தட்சயக்ஞம் ,மாயா மசீந்திரா* படங்களின் தயாரிப்பு பணிகள் கல்கத்தாவில் நடந்தன .**
ஒருநாள் வெளிப்புற படப்பிடிப்பு நடிகர்களும் ,தொழில்நுட்ப கலைஞர்களும் ,*சென்றனர் .* வழியில் தண்ணீரில் இறங்கி செல்ல வேண்டிய இடத்தில , ஆறு அடி அகலமுள்ள வாய்க்காலை எம்.ஜி.ஆர். ஒரே தாண்டாக தாண்டிக் குதித்தார் .தாண்டிய வேகத்தில் அவரது செருப்பு ஒன்றின் வார் அறுந்துவிட்டது . குனிந்து பார்த்து, காலைத் தூக்கி வேகமாக உதறி , அந்த செருப்பை தூர* விழ**செய்தார் .இன்னொரு செருப்பையும் உதறி எறிந்தார் .* செருப்பில்லாமலேயே நடந்து சென்றார் ,
பிற்பகலில் தங்கியிருந்த வீட்டிற்கு எல்லோரும் திரும்பி வந்தனர் .* புதிதாக செருப்பு வாங்க வேண்டும் . கடைக்குப் போகலாம் வாங்க என்று கலைவாணரை* அழைத்தார் .எம்.ஜி.ஆர்.* அதற்கு கலைவாணர் , நாளைக்கு ஷூட்டிங் இருக்காது . அதனால் நாளைக்கு போகலாம் என்றார் .
மறுநாள் காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர். வந்தார் .கலைவாணரிடம் வாங்க கடைக்கு போகலாம் என்றார் . போகலாமா, பணம் எடுத்துகிட்டியா , இரு,சட்டையை மாட்டிகிட்டு வருகிறேன் என்று கூறிய கலைவாணர் உள்ளே போய் ராமச்சந்திரா என்று குரல் கொடுத்தார் .* எம்.ஜி.ஆர். உள்ளே போனார் .அந்த நாற்காலியில் உட்கார் என்று சொல்லிய கலைவாணர் , கீழே கிடந்த ஒரு பொட்டலத்தை காட்டி,இந்த செருப்பு உன் காலுக்கு சரியா இருக்கா பாரு என்றார் .பொட்டலத்தை பிரிந்ததும் எம்.ஜி.ஆர். திகைத்தார் .
உன்னுடைய பழைய செருப்புதான், நீ வீசி எறிந்து விட்டு போனதை , பின்னால் வந்து கொண்டிருந்த நான் பார்த்தேன் . அப்பொழுதே பத்திரமாக எடுத்து வந்துவிட்டேன் .* ஆணி அடித்து, தைத்து சரி பண்ணிவிட்டேன் .இப்போது இதற்கு என்ன குறை . இன்னும் ஆறுமாத காலம் பயன்படுத்தலாம் .முடிஞ்ச வரை எதையும் முழுசா பயன்படுத்தி பழகணும் என்று அறிவுரை சொன்னார் கலைவாணர் .
தமிழ் சினிமாவின் கதை,அறந்தை நாராயணன் .
-
பாட்டாலே* புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில் வின் டிவியில்*21/06/20 அன்று திரு.துரை பாரதி அளித்த தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
பல்வேறு துறையில் உள்ள அறிஞர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், கல்வி வள்ளல்கள், கல்வி தந்தைகள் ஆகியோரை வரலாறு குறித்து வைத்திருக்கிறது .இவர்களெல்லாம், எம்.ஜி.ஆர். என்கிற பெருமழை, மாமழையின் ஈகை தன்மையால் விளைந்த பயிர்கள் என்பதை இன்றைக்கும் தமிழகம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது .அந்த மாமழையின் துளிகள் பற்றி சிலவற்றை இந்த நாளில்*அறிந்து கொள்வோமாக .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் பத்திரிகையாளருக்கும் உள்ள நட்பு உள்ளதே*அது மிகவும் சுவாரசியமானது . நான் சுதேசமித்திரன் பத்திரிகையில்* நிருபராக*பணியில்*சேர்ந்தேன் . முதல் நாளே, முதல் பணியாக**அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்* அவர்களை சந்தித்து*பேட்டி* காண சென்றேன் .அன்று பிரபல*பேச்சாளர், முன்னாள் அமைச்சர் பி.டி.சரஸ்வதி மற்றும் சிலர்* அ.தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர் .தலைமை அலுவலகமே விழா கோலம்*பூண்டிருந்தது*. கட்சி*பிரமுகர்கள்*கூட்டம்*அதிக அளவில் இருந்தது .அலுவலக*நுழைவு வாயிலில்*ஒரு வரவேற்பு அறை இருந்தது*.எம்.ஜி.ஆரின் இருக்கை*யை* சுற்றி சில*நாற்காலிகள் போடப்பட்டன . அதில்*சுமார்* நிருபர்கள் 10 பேர் மட்டும் அமர்ந்திருந்தனர் . நான் தாமதமாக வந்திருந்ததால் உட்கார இடமில்லாமல் எம்.ஜி.ஆருக்கு*மிக அருகில் நின்று கொண்டிருந்தேன் .உடனே எம்.ஜி.ஆர். அருகில் உள்ள ஸ்டூலின் மீது இருந்த*பொருட்களை*தன் மேஜை மீது வைத்துவிட்டு*அந்த ஸ்டூலில் என்னை அமர்த்தினார் . கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரின் தோளை* உரசியபடி அமர்ந்து இருந்தேன் . மேஜையின்*மீது இருந்த* பிஸ்கட்டுகளை* அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார் .சிறிது*நேர மௌனத்திற்கு பிறகு* மேஜையின் மீது உள்ள சில*பத்திரிகைகளை புரட்டி பார்த்த பின்பு நிருபர்கள் கேட்ட*கேள்விகளுக்கு மிக சாதுர்யமாக*பதிலளித்தார் .**
எம்.ஜி.ஆருக்கும், பட தயாரிப்பாளர் மணியன்*அவர்களுக்கும் இருந்த*நட்பு*மிகவும் நெருக்கமானது .எம்.ஜி.ஆர். எழுதிய*நான் ஏன் பிறந்தேன்*என்கிற*தொடர் உருவான*சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக மணியன்* இருந்து , ஆனந்த*விகடன்*வார இதழில்*வெளிவர செய்தார் . தி.நகரில்*ஒரு வாடகை வீட்டில்* *மணியன்* குடியிருந்தார் .*. அதை பார்வையிட*எம்.ஜி.ஆர். ஒருமுறை விஜயம் செய்தார்*ஒருநாள்*மாலையில்*சூரியனை*போல*எம்.ஜி. ஆர். காட்சியளித்து வருகிறார் . அவரின் தோற்றத்தை*,மணியனும், அந்த வீட்டில்*உள்ளவர்களும் பார்த்து, பரவசமும், அதிர்ச்சியும், பதற்றமும்*அடைகின்றனர் .வீட்டில்*நுழைந்த*எம்.ஜி.ஆர். உட்காரும்*முன்பு*இந்த வீட்டில் எந்த பக்கம் கிழக்கு*என*கேட்டு அந்த பக்கம் நாற்காலியை போட்டு உட்காருகிறார் .* மணியனிடம் நீங்கள் ஒரு படம்* எடுங்கள் .குறுகிய காலத்தில் நான் நடித்து தருகிறேன் என்கிறார் எம்.ஜி.ஆர். நீங்கள் வித்வான் லட்சுமணனுடன் இணைந்து*செயல்படுங்கள்* என்றவுடன், மணியனுக்கு ஆச்சர்யம்*. தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர். முடிசூடா மன்னன் எம்.ஜி.ஆர்.*அவரது*கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கும்*காலமாயிற்றே . நம்மிடம்*வலிய வந்து படம் தயாரிக்க சொல்லி கேட்டுக் கொள்கிறாரே* என்று*விந்தையுடன்*யோசிக்கும்போது , என்ன சிந்தனை,என்று சொல்லியவாறு, அருகில் உள்ள லெட்டர்*பேடை*எடுத்து, தாயே துணை என்று பிள்ளையார் சுழி போட்டு ,தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உதயம் புரொடக்ஷன்ஸ் ,படத்தின் பெயர் இதய வீணை என்று எழுதி தருகிறார் . மணியன் சில வினாடிகள்* இன்ப**அதிர்ச்சியில் உறைந்து*போகிறார் .மணியனை*மிக பெரிய இடத்திற்கு உயர்த்தியது எம்.ஜி.ஆருக்கு இருந்த*பண்பு . மணியன்*எம்.ஜி.ஆருக்கு*சிறு உதவிகள்*செய்து வந்தார் . ஒருமுறை பாரத பிரதமர் இந்திரா*காந்திக்கு*ஒரு காரியத்திற்காக எம்.ஜி.ஆர். நன்றி தெரிவிக்க இருந்தார் . எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக*மணியன்*எம்.ஜி.ஆர். அளித்த*பூங்கொத்து*, நன்றி கடிதம் இரண்டையும்*இந்திரா காந்திக்கு*அளித்துவிட்டு வந்தார்*. அந்தநன்றி*விசுவாசத்தின் அடிப்படையில் எம்.ஜி.ஆர். மணியனுக்கும், வித்வான் லட்சுமணனுக்கும்* உதயம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் இதய வீணை படத்தை*எடுக்கும்படி வலிய சென்று*யோசனை தெரிவித்து குறுகிய காலத்தில் நடித்து , வெளியிட்டு ,வெற்றி படமாக்கினார்*
எம்.ஜி.ஆர். பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தபின், அவர்கள் கேட்ட கேள்விகள் ,அதற்கு*இவர் அளித்த பதில்கள்*எல்லாம் பத்திரிகையில் பிரசுரம்* ஆகுவதற்கு முன்பு ஒரு பிரதியை* எம்.ஜி.ஆரிடம்*காட்டிய*பின்புதான்*பிரசுரம் ஆகவேண்டும் என்பதில்*எம்.ஜி.ஆர். மிகவும் உறுதியாக இருந்தார் .காரணம் அவர் சார்ந்திருந்த கட்சிக்கோ, தனக்கோ* இந்த பேட்டிகளினால் எந்த கருத்து மாறுபாடுகளும், இடையூறும்* வந்துவிடக் கூடாது* என்பதில் கவனமாக இருப்பார் . அப்படிதான்* யார் பேட்டி எடுத்திருந்தாலும் , விமர்சனங்கள் எழுதி இருந்தாலும் ,அவற்றை படித்துப்பார்த்துதான்* பிரசுரம் ஆக அனுமதிப்பார் .எம்.ஜி.ஆர்* சமநீதி*என்ற* பத்திரிகையில் பொறுப்பு ஆசிரியராகவும், அண்ணா*பத்திரிகையின் நிறுவனராகவும், நடிகன் குரல் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர் . தலை சிறந்த பத்திரிகையாளராக தானே*விளங்கியதோடு , சந்திரோதயம் திரைப்படத்தில்*தேர்ந்த பத்திரிகையாளராக திறம்பட நடித்து* மிளிர்ந்தவர் .*.*
பொதுவாக எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிகளில், விழாக்களில்*கலந்து கொள்ளும்போது, தனக்கு*மாலையிட வருபவர்களின் இரு கைகளை*இறுக பற்றிக்*கொள்வார்*. காரணம்* புகைப்படம் எடுக்கும்போது, மாலையிடுபவர் முகமும், மாலையை*பெறும்* தனது முகமும் தெளிவாக புகைப்படத்தில் தெரிய வேண்டும் என்பது* எம்.ஜி.ஆரின் கணக்கு* . அந்த புகைப்படத்தை*, மாலையிடுபவர் வாங்கி பார்க்கும்போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைவார்*என்பது எம்.ஜி.ஆருக்கும்*தெரியும். அதுவும் ஒரு காரணம் . மேலும் தனக்கு*எத்தனை பேர் மாலை அணிவித்தாலும், ஆளுயர*மாலை அணிவித்தாலும் , அவர்கள் முகமெல்லாம் புகைப்படத்தில் தெள்ள தெளிவாக தெரியும்படியும்,அவர்கள் தன்னுடன் இருக்கிறார்கள்* என்ற வகையில்*அனைவரையும் அரவணைத்தபடி*போஸ் கொடுப்பது எம்.ஜி.ஆரின்*வழக்கம் .*
எம்.ஜி.ஆர். ,சினிமா, அரசியல், மனிதநேயம் ,பொது தொண்டு, கொடை*உள்ளம் ஆகிய* துறைகளில்* அனுபவம் வாய்ந்த ஒரு பல்கலை கழகம் .அவரை பற்றிய வியப்புக்குரிய சம்பவங்கள், வியப்புரிய செய்திகள் ,தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது . அவற்றை*இந்த நிகழ்ச்சியின் மூலம் அள்ளி* *அள்ளி வழங்கி கொண்டே இருக்கிறோம் . அதில்*எம்.ஜி.ஆர். என்கிற*மகோன்னதமான ஒளிவிளக்கு சுடர்விட்டு பிரகாசித்து கொண்டே இருக்கும்*.நன்றி ,வணக்கம்*
தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.பாடும்போது*நான் தென்றல் காற்று*- நேற்று இன்று நாளை*
2.எம்.ஜி.ஆர். - எம்.ஆர். ராதா*உரையாடல் - சந்திரோதயம்*
3.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். -சங்கே முழங்கு*
4.ஒரே முறைதான்*உன்னோடு*பேசி பார்ப்பேன்*- தனிப்பிறவி*
5.ஆனந்தம் இன்று ஆரம்பம் - இதய வீணை*
6. நான் ஏன் பிறந்தேன்*- நான் ஏன் பிறந்தேன்*
7. ஒரு வாலுமில்லே* நாலு காலுமில்லே - இதய வீணை*
8.வாங்கய்யா*, வாத்தியாரய்யா* - நம் நாடு*
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- சகாப்தம் நிகழ்ச்சியில்*வின்*டிவியில்*திரு.துரை பாரதி*22/06/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சொந்தமாக தயாரித்து, நடித்து, இயக்கிய அடிமைப்பெண்* திரைப்படம்* 1966ல் ஆரம்பிக்கப்பட்டது . அப்போது இரண்டு கதாநாயாகிகளாக சரோஜாதேவியும், கே.ஆர். விஜயாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர் . 1967ல் எம்.ஜி.ஆர். எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு , குணமாகி வந்த பிறகு ,கதாநாயகிகள் மாற்றப்பட்டு, ஜெயலலிதாவுக்கு இரட்டை வேடம் தரப்பட்டது .ஒன்று ஜீவா, இன்னொன்று பவளவல்லி ராணி . இந்த படத்தில் ஜெயலலிதாவுக்கு பிரத்யேக உடைகள், அணிகலன்கள் அளிக்கப்பட்டன .பவளவல்லி வேடத்தில் அறிமுகம் ஆகும் காட்சியில் எம்.ஜி.ஆர். அவருக்கு*எதிராக* கைதியை போல் இரு கைகளை கட்டி, இரு பக்கமும் இரண்டு வீரர்கள் அவரை சித்திரவதை செய்யும் காட்சி .அந்த காட்சியில் எம்.ஜி.ஆர். கட்டு குலையாத தன் உடல் தோற்றத்தை , வலிமையை , காட்டும் விதத்தில் ,தன் இரு பக்கமும் உள்ள வீரர்களை நிலை குலைய* செய்து , ராணியே* அவரது உடல் வலிமையை கண்டு வியந்து, தனது மெய்காப்பாளராக அறிவிக்கும் அளவிற்கு*அற்புதமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார் .* அந்த காட்சியில் அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல்களும், விசில் சத்தமும் இருந்தது .தமிழ் திரையுலகில் , எந்த நடிகரும் தன் உடல் வலிமையை, தோற்றத்தை இப்படி வெளிப்படுத்தி நடித்தது இல்லை .படத்தின் விமர்சனம் விவரிக்கும்போது பத்திரிகைகள் இந்த காட்சியை வெகுவாக பாராட்டின .* அடிமைப்பெண் படம் சிறந்த படத்திற்கான*பிலிம்பேர்* விருது பெறும்போது , மும்பையில் உள்ள ஒரு பத்திரிகை எம்.ஜி.ஆரின் உடல் வலிமை, தோற்றம் பொருந்திய இந்த காட்சியை பிரசுரம் செய்து* பிரமாதப்படுத்தியது .* எம்.ஜி.ஆர். வெகு சுலபமாக இந்த உடல் வலிமையை, தோற்றத்தை பெறவில்லை .நாள்தோறும்** அதிகாலை 4 மணியளவில் எழுந்து சுமார் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்து இந்த உடல் பொலிவை, தோற்றத்தை, வலிமையை பெற்றார் . இந்த உடல் வலிமை, தோற்றம் ஆகியதுதான் அவர் தொடர்ந்து படங்களில் சண்டைக்காட்சிகளில் மிடுக்காகவும், சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் , நடித்து, பேரும் , புகழும் பெற காரணமாக இருந்தது .
உடற்பயிற்சி செய்வது என்பது எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் ஆரம்ப காலத்தில்*இருந்தே தொன்று தொட்டு வந்த பழக்கம் . இதற்கு பக்க பலமாக தயாரிப்பாளர் சின்னப்பா தேவரும் உறுதுணையாக இருந்தார் .* திரையுலகில் எம்.ஜி.ஆர்.*நுழைந்த காலத்தில் பட வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காத நேரம் . ஆகவே, ஒருவேளை சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் , ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது .ராணுவத்தில் சேருவதற்கும் , உடல் வலிமை, பொலிவான தோற்றம், ஆகியவை அவசியம் என்பதால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ,தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டார் . அத்துடன், குதிரை ஏற்றம், சவாரி, சிலம்பம், கம்பு சண்டை, வாள், சண்டை ஆகியற்றிலும் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தார் .
சினிமா வாய்ப்புகள் தேடி வந்த நிலையில், ராணுவத்தில் இணைந்து , நாட்டிற்கும், தேசத்திற்கும் சேவை செய்ய வேண்டும்* என்ற எண்ணமும்*அவர் மனதில் உதித்தது .அந்த வேளையில் தான் சாயா என்ற படத்தில் கதாநாயகன் வாய்ப்பு கிட்டியது .
மேஜர் சுந்தரராஜன் ஒருமுறை எம்.ஜி.ஆரை சந்திக்க வீட்டுக்கு செல்கிறார் .அப்போது காலையில் உடற்பயிற்சி முடித்துவிட்டு,எம்.ஜி.ஆர். சிற்றுண்டி சாப்பிடும் நேரம் . மேஜரையும் அழைத்து சாப்பிட சொல்கிறார் . அப்போது எம்.ஜி.ஆர். மிளகாய் பொடியில் ,நிறைய நெய் ஊற்றி, இட்லீ , தோசை போன்றவற்றை உண்கிறார் .மேஜர் சுந்தரராஜன் இவ்வளவு நெய் ஊற்றி சாப்பிட்டால்* உடம்புக்கு கெடுதல் வராதா என்று கேட்க , எம்.ஜி.ஆர்.*உடல் களைப்படையும் வரையில்,, நல்ல பலத்தை பெறும் வகையில்**கடின உடற்பயிற்சி* செய்தால், எவ்வளவு நெய் வேண்டுமானாலும் ஊற்றிக் கொள்ளலாம் ,சில சமயம் அளவுக்கு அதிகமாக எந்த உணவையும் சாப்பிடலாம்*அந்த அளவிற்கு உடல் பக்குவம் அடைந்துவிடும் .நீங்கள் உங்கள் இஷ்டம் போல சாப்பிடுவதற்கு* கொஞ்சம்**கஷ்டப்பட்டு* உடற்பயிற்சி செய்து , உடலை வருத்திக் கொண்டால்தான் இவையெல்லாம் சாத்தியம் என்று எம்.ஜி.ஆர்.*கூறியதாக மேஜர் சுந்தரராஜன் பேட்டி அளித்திருக்கிறார் .
சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்ஷாக்காரன் படத்தில் நடிப்பதற்காக, சத்யா ஸ்டுடியோவில் சைக்கிள் ரிக்ஷா ஒன்றில் ஓட்டி பயிற்சி மேற்கொண்டார் .*சில நாட்கள், தினமும் சில மணி நேரம் ஒட்டி வந்தார் .அப்போது ஒருநாள்,படத்தின் இயக்குனர் . எம்.கிருஷ்ணனையும், ஒப்பனையாளர் பீதாம்பரத்தையும்*ரிக்ஷாவில்* அமர்த்தி* வலம் வந்தார் . இப்போது படப்பிடிப்பு நடக்கவில்லை*ஆனாலும் உங்களை வைத்து ஓட்ட முடியுமா என்று பார்க்கிறேன் . ஒரு ரவுண்டு வந்த பிறகு , நான் ரிக்ஷா ஒட்டியதற்கு நீங்கள் பணம் தர வேண்டும் என்று கூறி*இருவரிடமும் தலா ரூ.1/- பெற்றுக் கொண்டார் . பிறகு சிரித்துக் கொண்டே திருப்பி தந்து விடுகிறார் . நான் ஆட்டோகிராஃபில் உழைப்பவரே உயர்ந்தவர் என்று எழுதுவது வெறும் வார்த்தையல்ல .நீங்கள் கொடுத்தது ரூ.1/-தான் என்றாலும்* அந்த உழைப்பை மதித்துக் கொடுத்தது .*ஆகவே அனைவரும்*உழைப்பின் உயர்வை மதித்து நடத்தல் நல்லது .என்று கூறினார் எம்.ஜி.ஆர்.*உழைப்பை மதிக்க தெரிந்தவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் ,நாடோடி மன்னன் படத்தில் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா என்ற பாடலை பாடினார் .
அடிமைப்பெண் படத்திற்காக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பு நடந்த சமயம் எம்.ஜி.ஆருக்கு, சண்டை காட்சிகள், நீச்சல் காட்சிகள் , டைவ் அடிக்கும் காட்சிகள் போன்றவற்றில் எம்.ஜி.ஆருக்கு உதவியாகவும், உறுதுணையாகவும்*ஒருவர் இருந்தார் . எம்.ஜி.ஆர். முதல்வரானதும், அவரை தேடி கண்டுபிடித்து ,ஒகேனக்கல் பகுதியில், சுற்றுலா துறை வளர்ச்சி அடைய ,அவரை முக்கிய பதவியில் அமர்த்தினார் .*
ஒருநாள் ராமாவரம் தோட்டத்தில் இருந்து எம்.ஜி.ஆர். தன் காரில் புறப்படும்போது ,உதவியாளர் ரவீந்திரனிடம் ,நமது வீட்டை ஒருமுறை நன்றாக பார்த்து கொள். நாம் மாலையில் திரும்பி வரும்போது, நம் கையில் வீடு இருக்காது .ஏனென்றால் ஜப்தி யாளர்கள் கையில் இருக்கும் என்று சொல்கிறார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த* ரவீந்திரன் ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் வீடு வாங்கி தருகிறீர்கள், வீடு வாங்க பணம் உதவி செய்கிறீர்கள்**, உங்கள் வீடு ஜப்தி ஆகிவிடுமா,எனக்கு ஒன்றும் புரியவில்லை என்கிறார் . அப்போது எம்.ஜி.ஆர்.*நமது வீட்டின் பெயரில் ஜப்தி நோட்டிஸ் வந்துள்ளது . ஒருவேளை மாலை ஜப்தி ஆகிவிட்டால் நாம் சத்யா ஸ்டுடியோவில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .நான் வாடகை வீட்டில் இருந்துள்ளேன் . இரண்டு அணாவில் வாழ்ந்துள்ளேன் .இப்போதைக்கு இரண்டு ருபாய் இருந்தால் கூட போதும், என்னால் சமாளிக்க முடியும் என்று கூறினாராம் . ஆனால் நல்ல வேளையாக , மாலையில்* நீதிமன்ற தீர்ப்பு எம்.ஜி.ஆருக்கு சாதகமாக வந்ததால் வீடு தப்பித்தது .
எம்.ஜி.ஆர். வீடு ஜப்தி ஆகும் என்ற செய்தியை பத்திரிகையில் படித்த, திண்டிவனம் பகுதியை சார்ந்த ஒரு இஸ்லாமிய தாய், தன் மகனிடம் தன்*வீட்டு பத்திரத்தை கொடுத்து, உடனடியாக எம்.ஜி.ஆரை சந்தித்து , எங்களுக்கு வேறு சொத்து, நிலம் உள்ளது, எனக்கு ஒரே மகன்தான்*. இப்போதைக்கு இந்த பத்திரத்தின் மூலம் உங்கள் வீட்டை மீட்டெடுத்து, கொள்ளுங்கள் என்று சொல்ல வைத்தார் . அந்த நபர் விரைந்து வந்து* எம்.ஜி.ஆரை சந்தித்து* தன் தாயின் விருப்பத்தை சொன்னார் . உடனே எம்.ஜி.ஆர். வீடு ஜப்தி ஆகவில்லை . நல்லவேளையாக தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துவிட்டது . உங்கள் உதவும் மனப்பான்மைக்கு என் கனிவான நன்றி என்று சொல்லி அனுப்பி வைத்தார் .பின்னர் ஒருநாள் திண்டிவனம்* வழியே செல்லும்போது, அந்த தாயாரை எம்.ஜி.ஆர்.சந்தித்து, உங்களுக்கு ஏன் இந்த வீண் சிரமம் என்றார் .அந்த தாயார், நீ எனக்கு ஒரு பிள்ளை மாதிரி .என் பிள்ளைக்கு நான் செய்யும் கடமைதான்* இது .என்றாராம் .உடனே எம்.ஜி.ஆர். அந்த தாயின் இரு கரங்களை பற்றி ,என்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்களே , நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்று கண்களில் கண்ணீருடன்* ஒற்றிக் கொண்டாராம் . பின்பு* எம்.ஜி.ஆர்.*அந்த தாய்க்கு சிறிது பணம் செலவிற்காக தந்தபோது ,வாங்க மறுத்துவிட்டார் .அந்த தாய் அளித்த பாலை பருகிவிட்டு எம்.ஜி.ஆர். விடை பெற்றார் .சென்னை திரும்பிய பிறகு சில மாதங்கள் கழித்து, அந்த தாய் இறந்து போன செய்தி எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததும், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, அந்த தாயின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு நடந்தே சென்றாராம் ,
மேலும் செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர். உடல் வலிமையை காட்டும் காட்சி -அடிமைப்பெண்*
2.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா- மேஜர் சுந்தரராஜன் உரையாடல் -ரிக்ஷாக்காரன்*
3பெண் வேடத்தில் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். -காதல் வாகனம்*
4.எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உரையாடல் -ஆயிரத்தில் ஒருவன்*
5.எம்.ஜி.ஆர். -மஞ்சுளா உரையாடல் - ரிக்ஷாக்காரன்*
6.உழைக்கும் கைகளே - தனிப்பிறவி*
7.எம்.ஜி.ஆர்.* ஜெயலலிதா சண்டை பயிற்சி -அடிமைப்பெண்*
8.எம்.ஜி.ஆர். பத்திரம் படிக்க வரும் காட்சி -எங்க வீட்டு பிள்ளை*
9.நாலு பேருக்கு நன்றி - சங்கே முழங்கு*
-
பாட்டாலே* புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில்* 23/06/20 அன்று வின்*டிவியில்*திரு.துரை பாரதி சொன்ன*செய்திகள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு பாடலையோ, படத்தின் தலைப்பையோ தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார் . திருடாதே என்கிற படத்திற்கு*எதிர்மறையான, நெகடிவ் தலைப்புகள் முதலில் பரிந்துரைக்கப்பட்டன ,ஆனால் எம்.ஜி.ஆர். நாம் பல லட்சம் செலவு செய்து படத்தை தயாரிக்கிறோம். அதை கண்டுகளிக்கும் மக்களுக்கு பாசிட்டிவ் ஆன கருத்துக்கள், செய்திகள் அளித்தால்தான் மக்கள் மனதில் பதியும் . படத்தை மீண்டும் பார்க்க ஆவலை தூண்டும் . எனவே நல்ல தலைப்பை தேர்ந்தெடுப்பவர்களுக்கு உடனடி பரிசு உண்டு என்று அறிவித்ததன் பலனாக உருவான தலைப்பு தான் திருடாதே . இந்த தலைப்பை ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்தார் . அந்த போட்டியில் நல்லதுக்கு காலமில்லை என்ற தலைப்பும் அறிமுகம் செய்யப்பட்டது . அதை எம்.ஜி.ஆர். நிராகரித்துவிட்டார் . நல்லது என்பதற்கு இணையாக பாசிட்டிவ் வார்த்தைதான் வரவேண்டும் ,நெகட்டிவ் வார்த்தைகள் இணைத்தால் நாம் சொல்லுகிற கருத்துக்கள், செய்திகள் மக்களை சென்றடையாமல் போய்விடும்*என்பதே காரணம் .
இயல்பாகவே , எம்.ஜி.ஆர். அவர்கள் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ , கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ ஆகியவற்றில் படப்பிடிப்பு நடைபெறும் காலங்களில் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதுண்டு . அவருடன் சாண்டோ, சின்னப்பா தேவரும் இணைந்து செல்வார் .*அப்போது எம்.ஜி.ஆர். பயிற்சியாளராக, பயிற்சி கொடுப்பவராக இருந்ததுண்டு .யாரிடமும் பயிற்சி பெற்றதில்லை .ஏனென்றால் அவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பே, நாடக துறையில் இருக்கும்போதே, சிலம்பம், கம்பு சண்டை, குத்து சண்டை, வாள் சண்டை போன்றவற்றில் நல்ல பயிற்சி பெற்றவர் மேலும் ராணுவத்தில் சேரக்கூடிய வாய்ப்பு வந்தால் அதற்கு உடல் வலிமை, தோற்றப்பொலிவு* ஆகியன அவசியம் என்பதும் ஒரு காரணம் .அதனால்தான் ஆரம்பத்தில் இருந்தே எம்.ஜி.ஆரை பலர் வாத்தியார் என்று அழைக்க ஆரம்பித்தனர் ..இந்தியில் வாத்தியார் என்பதற்கு உஸ்தாத் என்று ஒரு பெயர் உண்டு . சிரித்து வாழ வேண்டும் படத்தில் அப்துல் ரஹ்மான் பாத்திரம் ஏற்று நடிக்கும்போது , இன்ஸ்பெக்டர் வேடத்தில் ராமுவாக வரும் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே நீங்கள் உஸ்தாத் க்கி* உஸ்தாத் என்று சுட்டி காட்டும் காட்சி உண்டு . அதற்கு அர்த்தம் வாத்தியாருக்கெல்லாம்* வாத்தியார் என்பதுதான்*திரையுலகில் பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்ற ஒரு நல்ல வாத்தியாராக தான் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர் .*
எம்.ஜி.ஆர். தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து நடித்தார் . அந்த பாணியை யாரும் காப்பி அடிக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார் பொதுவாக*எம்.ஜி.ஆர். தனியாக நடித்தாலும், இரட்டை வேடம் ஏற்று நடித்தாலும் தனக்கென ஒரு பார்முலாவை வைத்து , பிரதான பாத்திரங்களை தன் கைவசம் கொண்டு நடிப்பது வழக்கம் ,அந்த பார்முலாவை மற்ற நடிகர்கள் சில படங்களில் பயன்படுத்தினாலும், எம்.ஜி.ஆர். அளவிற்கு முழு வெற்றியை பெறமுடியவில்லை பெரும்பாலான படங்களில் அந்த ஒரே பார்முலாவில் நடித்து பல வெற்றிப்படங்களை அளித்தவர் எம்.ஜி.ஆர். ஒருவரே .. அந்த காலத்தில் சிவாஜியுடன், ஜெமினி, எஸ்.எஸ்.ஆர், முத்துராமன் ,ஜெய்சங்கர் , ஏ.வி.எம்.ராஜன் ,சிவகுமார் என்று பலர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் .எம்.ஜி.ஆருடன், ஜெமினி, முகராசியிலும் ,எஸ்.எஸ்.ஆர். ராஜா தேசிங்கு, காஞ்சி தலைவன் போன்ற படங்களிலும் ,முத்துராமன், அரசிளங்குமரி* என் அண்ணன், ஒரு தாய் மக்கள் தேர்த்திருவிழா, கண்ணன் என் காதலன்* ஆகிய படங்களிலும் , ஏ.வி.எம்.ராஜன், எங்கள் தங்கத்திலும் ,சிவகுமார் காவல்காரன், இதயவீணை படங்களிலும் நடித்துள்ளனர் .ஜெமினி மற்ற நடிகர்களுடன் நடிக்கும்போது , உங்கள் தனித்தன்மை தெரியாது .ஆகவே கூடுமானவரை இணைந்து நடிப்பதை தவிர்த்து விடுங்கள் என்று ஒரு கட்டத்தில் ஜெமினிக்கு , எம்.ஜி.ஆர். அறிவுரை கூறியிருந்தார் .
முகராசி படத்தில்*எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன் நடிக்க ஒப்பந்தம் ஆனார் .அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியிடம் இந்த படத்தின்*கதையை*தயாரிப்பாளர் தேவரிடம்*கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .உங்களுக்கு கதை*பிடித்தபின்* நடிக்க*சம்மதம்* என்று சொல்லுங்கள்* என்று கூறியிருந்தார் . அதன்படி இருவரும் இணைந்து*நடித்து* மிக குறுகிய நாட்களில்*(14 நாட்கள்*) தேவர் படத்தை முடித்து 1966 பிப்ரவரி*மாதம் 18ம் தேதி**வெளியிட்டார் . அப்போது* 1966 பொங்கல் திருநாளில் வெளிவந்து அன்பே*வா வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த நேரம் . இடையில் சத்யா மூவிஸின் நான் ஆணையிட்டால்* அதே*பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியாகி இருந்தது . இந்த சூழலில் முகராசி கெயிட்டி அரங்கில்*வெற்றிகரமாக* 100 நாட்களை கடந்தது*.100 வது*நாள் விழாவின்போது*ஜெமினிகணேசன், இந்த படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் ஒற்றைக்காலில் நடந்தேன்,**நடித்தேன் என்று பேசினார் .விழா முடிவில்*ஜெமினியின் இரண்டு கால்களும்*தரையில்*படாதவாறு, எம்.ஜி.ஆர். அவரை*தூக்கி வந்து காரில் அமர்த்தினார் .
எம்.ஜி.ஆர்., படகோட்டி*,மீனவ*நண்பன் ஆகிய படங்களில் நடித்தவர் . மீனவர்கள் பிரச்னையை*நன்கு அறிந்தவர் . இரண்டு படங்களிலும் மீனவ சமுதாயத்தில் நிகழும் பிரச்னைகள், துன்பங்கள் ஆகியவற்றை* தனக்கே உரிய பாணியில்*அற்புதமாக*நடித்து வெளிப்படுத்தினார் .* படகோட்டி*படம் கேரளாவில் படமாக்கப்பட்டது . திருக்கைமீன் குப்பம், சுறா*மீன் குழப்பம் ஆகிய இரண்டு குப்பங்களுக்கு நடுவே நிகழும் மோதல்கள், சண்டைகள், திருப்பங்கள் ஆகியவை*முடிந்து இறுதியில் இரண்டு குப்பங்களும் சமாதானமாக இணைவதுதான் கதை .இந்த படத்தில்*படகோட்டியாகவே வாழ்ந்திருப்பார் எம்.ஜி.ஆர். .
மேலும் செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள் / காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.திருடாதே*பாப்பா திருடாதே* - திருடாதே*
2.ஒரு தாய் வயிற்றில்*வந்த உடன்பிறப்பில்*- உரிமைக்குரல்*
3.ராமு*- அப்துல்*ரஹ்மான்*சந்திப்பு*- சிரித்து வாழ வேண்டும்*
4.எம்.ஜி.ஆர். -லட்சுமி உரையாடல் - சங்கே முழங்கு*
5.எம்.ஜி.ஆர். - ஜெமினி*உரையாடல்* - முகராசி*
6.எம்.ஜி.ஆர். சிலம்ப*சண்டை காட்சி*- படகோட்டி*
-
ஒரு சிவாஜி ரசிகர் குள்ளநரி தந்திரத்துடன் சிவனடியார் போர்வையில் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டார். . சிவாஜி உங்க சாப்பாட்டில மண் அள்ளி போட்டாரா? ஏன் அவரின் நடிப்பை சாடுகிறீர்கள் என்று கேட்டார். மேலும் நான் mgr, சிவாஜி ரசிகன் அவர்களை பற்றி யார் குறை சொன்னாலும் நான் பாய்ந்து தடுப்பேன் என்றும் கதைத்தது.
அவருக்காகதான் இந்த பதில். "திருவிளையாடல்" படத்தில் தருமி தவறான பாடல் எழுதிக்கொண்டு வந்து மன்னனின் பரிசுக்காக நிற்கும் போது அதை தடுப்பாரே!
நக்கீரர், அப்போது சொல்வதை கவனிக்க வேண்டும்.
மன்னன் தவறான பாடலுக்கு பரிசினை கொடுத்தால் முதலில் வருத்தப்படுவது நான்தான்! என்பார்.
அதை போலதான், தவறான, மிகையான நடிப்புக்கு ஏமாந்து மக்கள் அங்கீகாரம் கொடுத்தால் முதலில் வருத்தப்படுவது கலா ரசிகர்களான நாங்கள்தான்..
அதனால்தான் அவருடைய மிகை நடிப்பை பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். அதற்கு மற்றொரு உதாரணமாக ஒன்றை
குறிப்பிடுகிறேன்.
"பழநி" என்றொரு பீம்சிங்கின் திரைப்படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ப" வரிசை படம்.
வெள்ளி விழா காணும் என எதிர்பார்ப்போடு வந்த திரைப்படம்.
தோற்றுப் போனது எதனாலே?
மிகை நடிப்பின் உச்சக்கட்டமே பழநி திரைப்படம். முதல் பாடல் "ஆறோடும் மண்ணில்" என்று தொடங்கும் பாடலில் அண்ணன் தம்பி மூவரும் விவசாயம் செய்யும் போது பாடுவது
போன்ற காட்சியமைப்பு.
அதில் s.s r ம், முத்துராமனும் பாடும் போது இயற்கையான விவசாயிகள் பாடுவது போல இருக்கும். அண்ணன் விவசாயியாக வரும் சிவாஜியின் நடிப்பை பாருங்கள். இவர் விவசாயியா,இல்லை, கொத்தடிமை விவசாயியா என்பது போல தோன்றும். எண்சாண் உடம்பையும் குழைவுடன் ஒரு சாணாக்கி, இரு கைகளையும்
தோளில் வைத்துக் கொண்டு அவர் குழைந்து கூழை கும்பிடு போட்டு நடிப்பதை பாருங்கள், என்ன தெரிகிறது?
S s r ம் , முத்துராமனும்
நடித்ததை விட தன் நடிப்பு எல்லோரையும் கவரவேண்டும் என்பதற்காகவே மிகை நடிப்பை அங்கே திணிக்கிறார். இதனால் இயற்கையான நடிப்பை வழங்குபவர்களும் தங்களை நிலை தடுமாற வைக்கிறாரே என்ற அங்கலாய்ப்பு அவர்களை ஆட்கொள்கிறது. எங்கெல்லாம் அவருக்கு நடிப்பில் தடுமாற்றம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் மிகை நடிப்பை தொடங்கி விடுவார்.
ஏனென்றால் அவர்களின் இயல்பான நடிப்புக்கு போட்டி போட இயலாமையால் அவர் கையாண்டது மிகை நடிப்பு. படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டுகின்ற மிகை நடிப்பு படத்தின்
வேகத்தை கட்டுப்படுத்தி பீம்சிங்கை புதைகுழியில் தள்ளியது. அந்த படத்தின் மிகப் பெரிய தோல்விக்கு காரணம் அதோடு சேர்ந்து திரைக்கு வந்த "எங்க வீட்டு பிள்ளை"யும் ஒரு காரணம் என்று சொன்னால் அதுவும் மிகையாகாது.
சிவாஜியின் மிகை நடிப்பை கண்டு மனம் வெறுத்த சினிமா ரசிகர்கள் எம்ஜிஆரின் இயல்பான நடிப்பில் மனம் மயங்கி திரும்ப திரும்ப பார்த்து நடிப்பென்றால் எம்ஜிஆர்தான் என்பதை புரிந்து கொண்டு, படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய கதை நாம் அறிந்த ஒன்றுதான். இதே விவசாயி வேடத்தில் மக்கள் திலகமும் வருவார் "பெரிய இடத்துப் பெண்" படத்தில்.
"வள்ளி மனம் நீராட! தில்லை மனம் போராட!. ரெண்டு பக்கம் நானாட! சொந்தமே நீ ஆடு!" என்ற பாடலில்
உழவு மாடுகளை குளிப்பாட்ட தலையில் தலைப்பாகையோட வரும் போது எத்தனை மகிழ்ச்சி அந்த காட்சியில்தான் எத்தனை குளிர்ச்சி. அதை பார்க்கும் போது நமக்கும் எத்தனை எழுச்சி. மக்கள் நன்றாக புரிந்ததால்தான் "பழநி"க்கு படுதோல்வியையும், இயல்பான விவசாயியாக தோன்றிய எம்ஜிஆரின் "பெரிய இடத்து பெண்ணு"க்கு மாபெரும் வெற்றியையும் பரிசாக கொடுத்தார்கள்.
விளையாட்டு போட்டிகளிலும், ஒலிம்பிக்கிலும்
மேலும் பல போட்டிகளில் பங்கெடுப்போர் ஊக்க மருந்து சாப்பிட்டால் போட்டியில் பங்கு கொள்ள முடியாமல் தகுதி இழப்பு செய்யப்படுவர்.. ஆனால் சிவாஜியின் கண்களை உற்று நோக்கினால் அவர் இயல்பான நிலையிலேயே நடித்த மாதிரி தெரியவில்லையே. நடிப்புக்கே ஊக்க மருந்து பயன்படுத்தும் அவருக்கு எங்ஙனம் இயல்பு நடிப்பு வரும்?.
இயல்பான நடிப்புக்கு இது ஒரு நல்ல உதாரணம். காசுக்காக நடிப்பவரை கலைக்காக நடித்தது போல பில்ட்அப் கொடுக்கும் சிவாஜி ரசிகர்களே! அவர் முதல் படமான "பராசக்தி" யிலேயே ஆரியக்கூத்தாடி, நானும் தாண்டவக்கோனே! காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!
என்று கருணாநிதியும் கணேசனும்
தங்கள் காசு கொள்கையை முதல் படத்திலேயே சொல்லி விட்டார்கள்.
சிவாஜியின் இந்த கொள்கையை கருத்தில் கொண்டுதான் ஸ்ரீதர் தன்னுடைய "காதலிக்க நேரமில்லை" படத்தில் ஒரு வசனத்தை வைத்திருப்பார். சச்சுவை பார்த்து ஏம்மா? அடுத்த படத்தில் நடிப்பதற்கு காசு ரோம்ப கேப்பியா?
என்றவுடன் காசு கிடக்கட்டும்! சார், காசு!, நான் கலைக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன் என்பார்.
உடனே நாகேஷ் இது உன்னை வச்சு படம் எடுத்து நொந்து போய் அடுத்த படத்துக்கு வரும் போது இதை சொல்! என்பார். சிவாஜியிடம் பெற்ற அனுபவத்தில் இதை வசனமாக வைத்தாரா? இல்லை இந்த அனுபவத்தை இறுதியில் சிவாஜியிடம் பெற்றாரா? என்பது அவருக்கே வெளிச்சம். வருஷத்துக்கு 9 படங்கள் என்று எண்ணி நடித்து, காசை வாங்கி கல்லாவை நிறைக்கும் கணேசனை ஏதோ கலைக்கு சேவை செய்ததை போல சிவாஜி ரசிகர்கள் கூடி கும்மி அடிப்பது விந்தையிலும் விந்தை.
நான் சிறுவனாக இருந்த போது ஒருநாள் என் நண்பனின் தாயார் "படிக்காத மேதை" படத்தில் வரும் ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்தார். "ஒரே ஒரு ஊரிலே" பாடல். அதில் வரும் ஒரு வரியை திரும்பத்திரும்ப பாடிக்கொண்டிருந்தார். "ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை". அம்மா இதையே ஏன் திரும்ப திரும்ப பாடுகிறீர்கள் உங்கள் பிள்ளைகளை நினைத்தா? என்று கேட்டதும் என் பிள்ளைகளுக்கு என்ன எல்லாம் ராசாகுட்டிகள். நான் நம்ம
சிவாசியை மனசில வைச்சுக்சிட்டுதான் பாடறேன்! என்றார்.
அப்போது பக்கத்தில் இருந்த அடுத்த வீட்டுக்காரர் சிவாஜிக்கு அவ்வளவு பிள்ளைகள் கிடையாதே! இரண்டோ மூணோன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். என்றதும் அந்தம்மா உடனே ஐயோ! அவரு பிள்ளையை பத்தியெல்லாம் இல்லை, அவரு நடிக்கிற படத்தை பத்திதான்சொல்றேன். வருஷத்துக்கு 8,9 படம் வருதில்ல! எல்லாம் ஒண்ணு,இரண்டு வாரத்தில நாம பாக்கிறதுக்குள்ள ஓடிப்போயிருதில்ல! அத நினைச்சுதான் சும்மா பாடிக்கிட்டிருந்தேன்.
மத்தபடி ஒண்ணுமில்லப்பா? னு சொன்னதும்தான் தெரிந்தது அந்தம்மா சிவாஜி படத்தை விரும்பி பாப்பாங்க. ஆனால் காசு சேருவதற்குள்ளே படத்தை தூக்கிட்டு வேற படத்தை போடாறாங்களேங்கிற ஆதங்கத்தில் அந்தம்மா பாடிச்சின்னு அப்பதான் எனக்கு புரிஞ்சுது.
மீதி அடுத்த பதிவில்.
நன்றி : திரு.கிருஷ்ணமூர்த்தி*
-
எம்ஜிஆர் போல் பட்டம் கௌருவம் பெற்ற எவரும் இல்லை
தமிழில் முதல் தேசியவிருது எம்ஜஆரின் படத்திற்க்கு
தென் இந்தியாவின் முதல் பாரத் பட்டம் பெற்றவர் எம்ஜிஆர்
பத்மஸ்ரீ பட்டம் கொடுத்த போது வாங்க எம்ஜிஆர் மறுப்பு
இந்தியாவின் மிக உயர்ந்த பட்டம் பாரத்ரத்னா எம்ஜிஆருக்கு
எந்த முதல்வருக்கும் செய்யாத மரியாதை எம்ஜிஆர் மறைவிற்க்கு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விட்டு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்க பட்டது
அமேரிக்கா கனடா நாடுகளில் எம்ஜிஆருக்காக மரியாதை செலுத்த பட்டது பாரளுமன்றங்களில் ஒரு சரித்திரம்
மத்தியரசு இரு முறை எம்ஜிஆர் ஸ்டாம்பு வெளியிட்டது
எம்ஜிஆர் நாணயம் இந்தியா வெளியிட்டது
இந்திய பாராளுமன்றத்தில் எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டது
எம்ஜிஆர் ரயில் நிலயைம் அமைத்தது இந்திய அரசு
மத்திய சாரணர் வெள்ளி யானை பரிசு பெற்ற ஒரே முதல்வர் எம்ஜிஆர்
எம்ஜிஆர் சிகிட்சைக்காக இந்தியா தனி விமானத்தையே ஆஸ்பத்திரி ஆக்கி எம்ஜிஆரை அமேரிக்கா அனுப்பிவைத்தது
ப்ரூக்கிளின் மருத்துவனையில் எம்ஜிஆருக்காக பிராத்தனை செய்து அனுப்பிய பொருட்களை வைக்க தனி பிளாக் கட்டப்பட்டது ஒரு சரித்திரம் அது சுற்றுலா பயணிகளிடம் எடுத்து உரைக்கிறது அமேரிக்கா சுற்றுலா துறை தகவல் ராதாரவி அனுபவம்
எம் ஜிஆர் சாதனை எவராலும் அடைய முடியாத சாதனைகள்
வாழ்க எம்ஜிஆர் புகழ்
-
ஒளிவிளக்கு
இதழ் ஆசிரியரும் -
மூத்த பத்திரிக்கையாளரும் -
எனது அன்பு நண்பருமான -
திரு மேஜர் தாசன் அவர்களின் மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- எஸ் ரவிச்சந்திரன்
-
தனியார் தொலைக்காட்சிகளில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான விவரம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
08/07/20* சன் லைப் - காலை 11 மணி - எங்க வீட்டு பிள்ளை*
* * * * * * * ராஜ் டிவி* - பிற்பகல் 1.30 மணி - பறக்கும் பாவை*
09/07/20 - வேந்தர் டிவி - காலை 10* மணி - வேட்டைக்காரன்*
* * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - தேர் திருவிழா*
* * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - காலிபாபாவும்* 40* திருடர்களும்*
* * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தாய்க்கு தலைமகன்*
* * * * முரசு டிவி - பிற்பகல் 3.30 மணி - மருத நாட்டு இளவரசி*
10/07/20 - சன்* லைப்- காலை 11 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி - அரச கட்டளை*
* * * * * எம்.எம்.டிவி* - இரவு 8 மணி - குடியிருந்த கோயில்*
11/07/20- சன் லைப் - காலை 11 மணி* - ஆசைமுகம்*
* * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி -குடியிருந்த கோயில்*
* * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - நீதிக்கு பின் பாசம்*
* * * * * *எம்.எம்..டிவி - பிற்பகல் 2 மணி - மாட்டுக்கார வேலன்*
12/07/20-தமிழ் மீடியா டிவி - காலை 9 மணி - தர்மம் தலைகாக்கும்*
* * * * * * * * -வேந்தர் டிவி - பிற்பகல் 1.30 மணி /இரவு* 10.30 மணி**அவசர போலீஸ் 100
* * * * * * * * வெளிச்சம் டிவி - பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*
புதுயுகம் டிவி*- இரவு 10 மணி - காதல் வாகனம்*
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின் டிவியில்* 24/06/20 அன்று**திரு.துரை பாரதி*சொன்ன*செய்திகள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் சகாப்தம், சாதனை, சரித்திரம் எட்டு திக்கிலும் வெற்றிகரமாக* எதிரொலியை உருவாக்கி வருகிறது . எங்கே, எந்த பக்கம் பார்த்தாலும், புன்முறுவலோடு, எம்.ஜி.ஆரின் சகாப்த செய்திகளை பகிர்ந்து கொள்கிற ஒரு நேசம் பிறந்திருக்கிறது .அந்த கொடை வள்ளலின் ஈகை தன்மைக்கு வெளிப்பாடாகத்தான் இன்றைக்கு, இத்தனை தூரம் இவ்வளவு மக்களிடையே, முகம் தெரியாத பலர் , உருகி, உருகி, தொலைபேசியில் பேசும்போது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது .அந்த சாதனையாளரின் சரித்திர பக்கங்கள் சிலவற்றை இன்று புரட்டுவோம் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். குறிப்பாக ,நடை, உடை, பாவனை போன்றவற்றில்*எப்படியெல்லாம் மாற்றங்கள் கொண்டு வருவார் என்பது குறித்து எனது அன்பு நண்பர், என் வகுப்பு தோழர்* திரு.நெல்லை வசந்தன்,* விலாவாரியாக பேசுவார் .ஏன் இந்த படங்களில் இந்த வேடம் ஏற்றார் , அந்த படங்களில் முக பாவனைகளை மாற்றினார் .என்று . இரட்டை வேடங்களில் இரண்டு விதமாக தோன்றுவது மட்டுமல்ல .இரண்டு வேடங்களிலும்* எப்படி**உணர்ச்சி ,முக பாவங்கள் காட்டுவது ,எப்படி வெளிப்படுத்துவது என்பதற்கு பல உதாரணங்கள் காட்டுவார் .* எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் இந்தியில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்பதன் தழுவல் .இந்தியில் திலீப்குமார் கதாநாயகனாக நடித்தார் .படத்தில் வில்லனை கதாநாயகன் சவுக்கால் அடிக்கும் காட்சியானது இந்தியில் திலீப்குமார் காட்டிய உணர்ச்சிகள், நடிப்பில் முக பாவனைகள், வேகம், சுறுசுறுப்பு, லாவகம்**அனைத்தையும் பன்மடங்கு* வித்தியாசமாக , மிக சிறப்பாக எம்.ஜி.ஆர். எங்க வீட்டு பிள்ளையில் காட்டியிருப்பார் . நம்பியார் , எம்.ஜி.ஆரை ஆரம்பத்தில் சவுக்கால் அடிக்கும் காட்சியில் நம்பியாரை தீட்டாத, வசை பாடாத ரசிகர்களே இல்லை .ஆனால், எம்.ஜி.ஆர். நம்பியாரை அடிக்கும்போது, அரங்கத்தில் ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினார்கள் . திரை அரங்குகள் அதிர்ந்தன . எங்க வீட்டு பிள்ளை வெளியான பிறகு பல இடங்களில் நம்பியாரை வழி மறித்து, எங்கள் அண்ணனை, எப்படி அடிக்கலாம் என்று கேள்வி கேட்டு துளைத்துவிட்டனர் ரசிகர்கள் .அதற்கு சாமர்த்தியமாக பதில் சொல்லி தப்பித்துவிடுவார் நம்பியார் என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் .*
மன்னர்கள் அந்த காலத்தில் , புலவர்கள், கவிஞர்களை ,தங்களை பாராட்டி பாடல் எழுதிவைத்து,மகிழ்ந்து பரிசளித்தார்கள். ஆனால் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு, அவர் சொல்லாமலேயே, போற்றி* பாடல்கள் எழுதிய கவிஞர்கள் ஏராளம் .உண்டு . அவரை போற்றி புகழ்ந்து, காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ , வேதனை தீர்த்தவன் , விழிகளில் நிறைந்தவன், வெற்றி திருமகன் நீ என்றும், என்னை பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் ,ஒரு குற்றமில்லாத மனிதன், அவன் கோயில் இல்லாத இறைவன் என்றும், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ,அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்* *என்று பல பாடல்களை கவிஞர்கள் போட்டி போட்டு எழுதினார்கள் . இன்னும் ஏராளமான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம் .
எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு நவீன தொழில்நுட்ப விஷயங்களில் ஒரு தொலை நோக்கு பார்வை எப்போதும் உண்டு . அதனால்தான் 1958ல் வெளியான நாடோடி மன்னன் படத்தை ,இடைவேளைக்கு பிறகு,பரீட்சார்த்தமாக* வண்ணத்தில் , கோவா கலரில் உருவாக்கினார் .1972ல் திரையுலகம் பற்றி ஒரு பேட்டி அளிக்கும்போது , காலப்போக்கில்* தொலைகாட்சி கருவி என்று ஒன்று எதிர்காலத்தில் உருவாகும் இதன் வருகை ,சினிமா உலகை மிக பெரிய அளவில் பாதிக்கும் என்று சொன்னார் .நம் நாடு மட்டுமல்ல, இன்று உலகமே கொரோனா நோய் பாதிப்பால் தலைகீழாக புரண்டு கிடக்கிறது . பொது இடங்களில் மக்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் . உலகம் முழுவதும், மால்கள், திரை அரங்குகள், பல மாதங்களாக*மூடப்பட்டுள்ளன . படப்பிடிப்புகள் நடைபெறவில்லை . இந்த சூழலில் அரங்குகள் நாளடைவில் திறக்கப்பட்டாலும், மக்கள் முன்பு போல்*எளிதாக வருகை தரமுடியுமா, சினிமா உலகம் புத்துயிர் பெறுமா என்பது மிக பெரிய கேள்விக்குறி. காலம்தான் இவற்றிற்கு பதில் சொல்ல வேண்டும் .இனிமேல் ஓ.டி.பி.யில்தான் படம் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை .இதை 1972லேயே* ஒரு தீர்க்கதரிசியாக சிந்தித்து சொன்னவர் எம்.ஜி.ஆர்.*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1959ல் நாடகத்தில் நடிக்கும்போது, நடிகர் குண்டுமணியை தூக்கும்போது கை நழுவி அவரது காலிலேயே விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்து குணமானார் .அப்போது அவரது சகாப்தம் முடிந்தது. இனி எம்.ஜி.ஆர். நடிக்க முடியாது என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது . இந்த சரிவில் இருந்து எம்.ஜி.ஆர். மீண்டார் .1967ல்*எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டதும் , எம்.ஜி.ஆர். கதை முடிந்துவிட்டது. இனி,படங்களில் நடிப்பதோ, பழையபடி பேசுவதோ முடியாத காரியம் என்று* அவரது சரிவை எதிர்பார்த்தவர்கள் பேசிக் கொண்டிருந்தனர் .* இந்த பிரச்னையில் இருந்தும் மீண்டு, வெகுண்டு எழுந்தார் எம்.ஜி.ஆர். குரல் மட்டும் சற்று பாதிப்பு அடைந்தது .பின்னணி குரல் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னவர்கள் கருத்தை ஏற்காமல் ,சொந்த குரலில் பேசுவேன், நடிப்பேன், மக்கள் விரும்பாவிட்டால் நடிப்பதை விட்டுவிடுகிறேன் என்று பேசினார் . பாதிப்படைந்த குரலை வைத்து ,படங்களில் நடித்து இதிகாசம் படைத்தார் . பல சாதனை படங்களை உருவாக்கினார் .வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார் . அவரது உயர்வை கண்டு எதிரிகள் ஏமாந்து போனார்கள் .**
1984ல்* மீண்டும் உயிர் போராட்டம் . மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்று, வெற்றிகரமாக மீண்டும் முதல்வராக திரும்பினார் .எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தன . எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று .தி.மு.க. தலைவர் கருணாநிதி,, எம்.ஜி.ஆர்* எனது 40 ஆண்டுகால நண்பர் . ஒருவேளை எம்.ஜி.ஆர். உயிருடன் திரும்பி வந்தால் அவர் முதல்வர் பதவியில் அமரட்டும் . அதுவரையில் நான் முதல்வராக இருக்கிறேன்* எனக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தார் . அ .தி.மு.க.வினரும், அமைச்சர்களும் இணைந்து எம்.ஜி.ஆர். உயிருடன் இருப்பது, உணவருந்துவது , முக்கிய நபர்களை சந்திப்பது , மருத்துவர்களுடன் சில வார்த்தைகள் பேசுவது போன்ற வீடியோக்கள் தமிழகம் முழுவதும் பொதுமக்கள்* காணும் வகையில் ஏற்பாடு செய்தார்கள் .அதில் வெற்றி கண்டார்கள் . கருணாநிதியின் பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது .அமெரிக்காவில் இருந்து 1985* பிப்ரவரி மாதம் எம்.ஜி.ஆர். திரும்பியபோது,*பரங்கிமலை ராணுவ மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெரும் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .விமான நிலையத்தில் இருந்து வரும் எம்.ஜி.ஆரின் கார் மேடை அருகில் வந்து நிற்பது போலவும் , சக்கர நாற்காலியில் அவரை மேடைக்கு அழைத்து வருவது போல ஏற்பாடுகள் தயார் .ஆனால் மேடை அருகில் காரில் இருந்து இறங்கி, மேடைக்கு நடந்து சென்று ,லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கையசைத்து ,நான்கு புறமும் இருகரம் கூப்பி தனது வணக்கத்தையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார் .அதைக் கண்ட மக்கள் எழுப்பிய குரல், கைதட்டல்கள், விசில் சத்தம் விண்ணை பிளந்தவாறு இருந்தது .முப்பிறவி கண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள் .
எம்.ஜி.ஆர். தங்க பஸ்பம் சாப்பிடுவதாக சிலர் பிரச்சாரம் செய்ததுண்டு. பொது கூட்டங்களில் எதிர் கட்சியினர் பேசியதுண்டு . அவர் ஆசிரியராக இருந்த நடிகன் குரல் பத்திரிகையில் கூட கேள்விகள் எழுப்பியதுண்டு .* அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர். நான் சாப்பிடுவதாக பலர் சொல்வதுண்டு . ஆனால் அரசர்கள் காலத்தில் இந்த நடைமுறை இருந்ததாக பேசப்பட்டது அது ஒரு பக்குவப்பட்ட ,நல்ல தேர்ந்த சித்தர்களுடைய ஆலோசனைப்படி ஒரு குண்டூசி* நுனி அளவுதான் சாப்பிட முடியும் .அப்போதுதான் உயிர் வாழ முடியும் அது ரத்தத்தில் கலந்து உடல் நிறம் கூடும்* அந்த அள்வு தவறி கொஞ்சம் அதிகமானால்* கூட**உயிர் போய்விடும் அபாயம் உள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது . இப்படி இருக்கும்போது எதற்கு இந்த விஷ பரீட்சையில் நான் இறங்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். பதில் அளித்திருக்கிறார் .**
1972ல் எம்.ஜி.ஆர். மன்ற சிறப்பு மாநாடு ஒன்றை சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஏற்பாடு செய்திருந்தார் . அந்த மாநாட்டில் கலந்து கொள்ள அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது .அனால் கருணாநிதி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை .அதற்கு சில வாரங்களுக்கு பின்னர் எம்.ஜி.ஆர். தி.மு.க. கட்சியில் பொருளாளராக இருந்ததால் அனைவரையும் கணக்கு கேட்பேன், கட்சியில் ஊழல் மலிந்துவிட்டது* என்று தனது நியாய கோரிக்கைகளை முதன் முதலாக திருக்கழுக்குன்றம் பொது கூட்டத்தில் மக்கள் முன் வைத்து பேசினார் .தி.மு.க.கட்சியின் பொதுக்குழு கூடி எம்.ஜி.ஆரை தி.மு.க.வில் இருந்து நீக்கம்*செய்கின்றனர் . தொண்டர்கள் பேராதரவு, சில முக்கிய நபர்களின் ஆலோசனைப்படி அண்ணா தி.மு.க.வை அக்டொபர்* 17ல் எம்.ஜி.ஆர். துவக்குகிறார் . 29ந்தேதி சென்னை கடற்கரையில் நடைபெறும் மாபெரும் பொது கூட்டத்தில் புரட்சி நடிகர் இன்று முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்று*அழைக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் திரு.கே.ஏ.கிருஷ்ணசாமி மேடையில் அறிவித்தார் . திரையுலகில் புரட்சி நடிகராக உதயமாகி சாதனைகள் படைத்த எம்.ஜி.ஆர். அரசியல் உலகிலும் பல புரட்சிகள், சாதனைகள் படைத்து*மறைந்தும் மறையாமல் புரட்சி தலைவராக மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------
1.முதல்வர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்*
2.எம்.ஜி.ஆர். பண்டரிபாய்* உரையாடல் - எங்க வீட்டு பிள்ளை*
3.உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் -வேட்டைக்காரன்*
4.கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - நாடோடி மன்னன்*
5.கட்டித்தங்கம் வெட்டியெடுத்து -தாயை காத்த தனயன்*
6. மெல்லப்போ மெல்லப்போ* - காவல்காரன்*
7.கடவுள் இருக்கின்றார்* - ஆனந்த ஜோதி*
8.கட்டண கட்டழகு கண்ணா - குடும்ப தலைவன்*
9.எம்.ஜி.ஆர். அசோகன், திருப்பதிசாமி* உரையாடல் - நம் நாடு*
10.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து - நேற்று இன்று நாளை*
-
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில்*வின் டிவியில்*25/06/20 அன்று திரு.துரை பாரதி*சொன்ன*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வீடு ஜப்தியாக போகிறது என்று உதவியாளர் ரவீந்திரனிடம் கூறும்போது, ரவீந்திரன் இதற்கு மாற்று வழியே இல்லையா என்று கேட்கிறார் . அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர். யாராயிருந்தாலும், தவறு செய்திருந்தால் நீதிக்கு தலைவணங்கியே ஆகவேண்டும் என்றார் . ஆனால் மாலையில் வந்த* நீதிமன்ற**தீர்ப்பு சாதகமாக வந்ததால் வீடு ஜப்தியாகவில்லை .எனவே எம்.ஜி.ஆர். மகிழ்ச்சி அடைந்து , ரவீந்திரனிடம் நீதிக்கு தலைவணங்கு*என்கிற தலைப்பு பிரமாதமாக உள்ளது .அந்த தலைப்பில் ஒரு படத்தில் நடிக்கலாம் என்று இருக்கிறேன் . அதாவது எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் எப்போதும் தொழில் சிந்தனையுடன் இருப்பார் . பின்னாளில் அவர் நடித்த நீதிக்கு தலை வணங்கு மார்ச் 1976ல் வெளியாகி , வெற்றிகரமாக 100 நாட்களை கடந்தது .
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தர்மசிந்தனை* இருந்தது என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வை சொல்லலாம் .* ராமாவரம் தோட்டத்தில் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட எம்.ஜி.ஆர். கழுத்தில் குண்டு பாய்ந்து ரத்தம் வழியும் நிலையில், அவரை அவசரமாக காரில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற சமயம் ,அண்ணன் ராதாவையும் கவனியுங்கள், அவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்றார் . தான் சுடப்பட்டிருந்த அந்த சூழலிலும் அடுத்தவருக்கும் உதவ வேண்டும் என்ற தர்மசிந்தனை எம்.ஜி.ஆருக்கு இருந்தது . அதனால்தான்* அந்த தர்ம சிந்தனை அவர் தலையை காப்பாற்றியது என்று பேசப்பட்டது அதற்கு* 4 ஆண்டுகள் முன்பே, 1963ல்* வெளியான தர்மம் தலை காக்கும் என்ற* கண்ணதாசன் எழுதிய*பாடலை எம்.ஜி.ஆர். பாடி நடித்திருந்தார் .
1977ல் ஜூன் மாதம் இறுதியில் எம்.ஜி.ஆர். முதல்வராகிறார் . 1980ல் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வுடன் இ .காங்கிரஸ் கூட்டணி அமைத்து*37 இடங்களை வென்றது . இதனால்* தி.மு.க. தலைவர் கருணாநிதி , பிரதமர் இந்திரா காந்தியிடம் , எம்.ஜி.ஆர். இரு தொகுதிகளில் மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் வென்றதால் மக்கள் ஆதரவை இழந்துவிட்டார் . ஆகவே எம்.ஜி.ஆர்.*ஆட்சி கலைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் .அதன்படி 1980ல்*எம்.ஜி.ஆர். கட்சி கலைக்கப்பட்டது . விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் அதுபற்றி கவலை கொள்ளாமல் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை முதலில் இனிப்பு சாப்பிடுங்கள் என்று சொல்லி , பின்னர் அவர்களை*அனுப்பிவிட்டு , சிவகவி திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் . பின்னாளில் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும்போது*இது குறித்து என் கோரிக்கைகளை மக்களிடம் முன்வைப்பேன் .அவர்கள் முடிவு செய்யட்டும் என்றார் .வெகு விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வருகிறது .தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது உள்மனதில் இருந்து வெளியாகும் நியாயமான கேள்விகள், கோரிக்கைகளை மக்கள் முன்வைத்து பேசுகிறார் .*நான் யாருக்கேனும்* வேண்டாதவர்களுக்கு***உதவினேனா , எனக்கு விருப்பமானவர்களுக்கு உதவிகள், பதவிகள்* அளித்தேனா , எந்தவிதமான அராஜகம் செய்தேன், எப்படிப்பட்ட துஷ்பிரயோகம் செய்தேன் ,என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்தவகையிலாவது உதவினேனா , அ.தி.மு.க. ஆட்சியில்*ஊழல் பிரச்னை ஏதாவது இருக்கிறதா , எதற்காக எங்களை 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆள விடாமல் ஆட்சியை கலைத்தார்கள் .என்ன குற்றம் கண்டார்கள் சொல்ல முடியுமா என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் .இந்த கேள்விகளுக்கு விடைதரும் வகையில், நான் குற்றமற்றவன், ஆட்சியில் குற்றங்கள் அறவே இல்லை* என்று நீங்கள் எண்ணினால் , தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்றார் . அதன்படி மக்கள் அமோக ஆதரவு அளித்தனர் .மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார் . கருணாநிதியின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது .
சட்ட பேரவையில் , எதிர்க்கட்சியான தி.மு.க.வின்* உறுப்பினர் துரை முருகன்* அரசின் சத்துணவு திட்டத்தை குறை கூறி பேசினார் .* குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் உணவுத்தட்டிலே ஒரு நடிகையின் படம் உள்ளது என்று சில குறைகளை மிக ஆவேசமாக சில நிமிடங்கள்* பேசிவிட்டு , தன இருக்கைக்கு திரும்பி அமரும் நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே சரிந்தார் . அதை கவனித்த முதல்வர் எம்.ஜி.ஆர். உடனே விரைந்து வந்து அவரை தாங்கி பிடித்து,தன் மடியிலே கிடத்தி, பணியாட்களை கொஞ்சம் தண்ணீர் கொண்டுவர சொல்லி,*அவர் முகத்திலே தெளித்து, கண்களை வருடி, கன்னத்தில் லேசாக தட்டி ,துரை*கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் என்று எழுப்பினாராம் .சட்டமன்றத்தில் அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல இருக்க , எம்.ஜி.ஆர். தான் முதலில் வந்து அவரை ஆசுவாசப்படுத்தினார் . இத்தனைக்கும் துரை முருகன்*எம்.ஜி.ஆர். ஆட்சியையும், சத்துணவு திட்டத்தையும் குறைகூறி பேசி வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் .* துரை முருகனுக்கு எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் படிப்பதற்கு உதவினார் . அவரது திருமணத்திற்கு மும்பையில் இருந்து தனி விமானத்தில் வந்து* தங்க சங்கிலி திருமண பரிசாக* அளித்தார் .துரை முருகன்மீது எப்போதும்* எம்.ஜி.ஆருக்கு தனி அன்பு, அக்கறை இருந்ததுண்டு .இந்த நேரத்தில் அவரது* தாய்மை பண்பை* வெளிப்படுத்தும் விதத்தில் உதவியது* அனைவரையும் வியப்பு கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு வாத்தியார் என்கிற பட்டம் அவ்வளவு சுலபமாக*வந்துவிடவில்லை . கவிஞர்கள் எழுதிய பாடலை உரிய திருத்தங்கள் செய்வதில், பாடல்களில் எந்த இடங்களில் எந்த இசைக்கருவிகள் பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்கும் ,என்பதில், காமிரா கோணங்கள்*அமைப்பதில், படத்தொகுப்பில் எந்த காட்சிகள் எப்படி அமைக்க வேண்டும் என்பதில்* பின்னணி இசை சேர்ப்பு விஷயங்களில்* லைட்டிங் அளவு தேர்வு செய்வதில், சண்டை காட்சிகளை அமைப்பதில் ,கலைஅரங்கங்கள் அமைப்பதில் யோசனைகள் *இப்படி சினிமா துறையில் அனைத்து விஷயங்களையும் கற்று அறிந்தவர் என்பதனால் வாத்தியார் என்று அழைக்கப்பட்டார் என்று பேசப்பட்டது* மேலும் அவரது படங்கள் ,மக்களுக்கு பாடங்களாக அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் . ஒவ்வொரு பாடலிலும், பாடலின் ஓசை நயத்தை விட ,மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துக்கள் எளிதாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவார் .பாடலில் எந்த வார்த்தைக்கு பக்கத்தில்* *எந்த**இசைக்கருவி இருந்தால் *வார்த்தைகள்* அழுத்தாமல் இருக்கும் ,**தெளிவாக பதிவாகும் என்ற நுட்பம் அறிந்தவர் . இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக செயல்பட்டதால்தான் இன்றைக்கும் அவரது பாடல்கள் மக்களுக்கு புத்துணர்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் பெறுகிற*உணர்வை விதைக்கிறது .* அதனால்தான் கவிஞர் கண்ணதாசனே ,என் பாடல்களை கூட திருத்தம் செய்கிற வாத்தியார் என்று குறிப்பிட்டதுண்டு .தெய்வத்தாய் படத்திற்கு முதன் முதலாக வசனம் எழுதிய கே.பாலச்சந்தரின்*வசன வரிகளையே எம்.ஜி. ஆர். திருத்தியுள்ளார் என்று பாலசந்தரே ஒரு* பேட்டியில்**தெரிவித்து இருந்தார் .* இப்படித்தான் எம்.ஜி.ஆர். வாத்தியாரானார்*
திரைப்படங்களில் எந்த இடத்தில பாடல்கள் அமைய வேண்டும், எந்த இடத்தில அழுத்தமான வசனங்கள் இடம் பெற வேண்டும், திரைக்கதை எப்படி அமைக்க வேண்டும் , எந்த இடங்களில் சண்டை காட்சிகள் அமைய வேண்டும், கலை* அரங்கங்கள் எப்படி இருக்க வேண்டும்* போன்ற பல விஷயங்களில் அத்துப்படியான ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். மட்டுமே என்று கவிஞர் கண்ணதாசன்*எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசியுள்ளார் .**
கவிஞர் புலமைப்பித்தன் குடியிருந்த கோயில் படத்தில் நான் யார், நான் யார்*நீ யார் என்கிற பாடலை எழுதி எம்.ஜி.ஆரிடம் ஒப்புதல் வாங்கிவிட்டு சற்று சிந்தனையில் இருந்தார் . அப்போது எம்.ஜி.ஆர். என்ன விஷயம் , ஒரே சிந்தனையில் உள்ளீர்கள் என்று கேட்க , உங்களிடம் மனம் விட்டு சொல்கிறேன்.என் வீடு அடமானத்தில் இருக்கிறது . நீங்கள் கொஞ்சம் கூடுதல் பாடல்கள் எழுத வாய்ப்பு அளித்தால் , அதன் மூலம் எனது வீட்டை மீட்பதற்கு உதவியாக இருக்கும் என்று கவலை தோய்ந்த முகத்துடன் தெரிவித்தார் . அதை கேட்டதும் ,கவலைப்படாதீர்கள். உங்களுக்கு போதிய வாய்ப்பும் கிடைக்கும் .வீட்டை மீட்பதற்கு பணமும் தருகிறேன் என்றார் . புலமைப்பித்தன் அதன்பின் எம்.ஜி.ஆருக்கு பல பாடல்கள் எழுதினார் . எம்.ஜி.ஆரின் உதவியால் வீட்டையும் மீட்டெடுத்தார் .எம்.ஜி.ஆரின் உதவியை பல பேட்டிகளில் புலமைப்பித்தன் நன்றி பெருக்குடன் கூறியுள்ளார் . பின்னாளில் எம்.ஜி.ஆரால் அரசவை கவிஞர் ஆக்கப்பட்டார் .**அரசவை கவிஞரானதும், குழந்தையின் பல்பட்ட இடத்தில,*பால் மட்டுமே சுரக்கும் அன்னை இதயம் எம்.ஜி.ஆருக்கு என்று புகழுரைத்தார் .
ஒருமுறை ,எம்.ஜி.ஆர். புதுடெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்ய புறப்படுகிறார் .காரில் ஏறும் முன்பு ,தன்* தாயாரின்* சமாதி அருகே சென்று ஒரு நிமிடம் கும்பிட்டுவிட்டு புறப்படும் சமயம் காலில் ஏதோ துண்டு ஒன்று* தட்டுப்படுகிறது . உடனே ,ஜானகி அம்மையார் குடிக்க தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் .* தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு, சில நிமிடங்கள் நின்று யோசிக்கிறார் இன்று விமான பயணத்தை ரத்து செய்துவிடலாம் என்று திடீர் முடிவு எடுத்து தன்* அறைக்கு திரும்புகிறார் . சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு தகவல் வருகிறது ..அதாவது எம்.ஜி.ஆர். புதுடெல்லிக்கு பயணம் செய்ய இருந்த விமானம் விபத்துக்குள்ளாகி சுமார் 60 நபர்கள் இறந்துவிடுகிறார்கள் . அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.மோகன் குமாரமங்கலமும் ஒருவர் . இந்த செய்தி அறிந்து எம்.ஜி.ஆர். மட்டுமல்ல ,அவர் உடனிருந்தவர்களும் அதிர்ந்து போனார்கள் .எம்.ஜி.ஆரின் தான, தருமங்களும் , தர்ம சிந்தனைகளும்தான்*அவர் உயிரை காப்பாற்றியது என்று* அப்போது பேசப்பட்டது .
நாடக துறையிலும் சரி, திரை துறையிலும் சரி, எம்.ஜி.ஆருக்கு உதவியாக ,ஆதரவாக*இருந்தவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதாவின்*தந்தை .*எம்.ஜி.ஆர். முதல்வரானதும், எம்.கே. ராதாவின் வீடு தேடி சென்று*அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் .* அதே போல பொது மேடையில், எம்.ஜி.ஆர். பாரத் விருது பெற்றபோது , திரையுலகை சார்ந்த நடிகர் நடிகைகள்*பாராட்டுவிழா*நடத்தியபோது , அனைவரின் முன்னிலையில் மீண்டும் நடிகர் எம்.கே. ராதா அவர்களது காலில் விழுந்து நன்றியை தெரிவித்துக் கொண்டார் .அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அனைத்து பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகியது*.ஆகவே , வாழ்க்கையில் தன் உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் காரணமாக திகழ்ந்தவர்கள், தன்னை*ஏணியில்*ஏற்றி விட்டவர்களுக்கு* ஒரு காலத்திலும் நன்றி மறக்காதவர் எம்.ஜி.ஆர். என்பதற்கு அந்த புகைப்படமே சான்று .
மேலும் செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் / காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------
1.1.கனவுகளே ஆயிரம் கனவுகளே - நீதிக்கு*தலைவணங்கு*
2.தர்மம் தலை காக்கும்*பாடல் - தர்மம் தலை காக்கும்*
3.முதல்வர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்*
4.அன்புக்கு நான் அடிமை - இன்றுபோல் என்றும் வாழ்க .
5.ஏமாற்றாதே ஏமாற்றாதே - அடிமைப்பெண்*
6.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். - ரிக்ஷாக்காரன்*
7.எம்.ஜி.ஆர்.-மேஜர் சுந்தரராஜன் உரையாடல் -குடியிருந்த கோயில்*
8.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
9.ஏன் என்ற கேள்வி - ஆயிரத்தில் ஒருவன்*
10.என்னம்மா ராணி* - குமரிக்கோட்டம்*
-
செடிக்குச்சி, கோபுடா, சிலம்பு... எம்.ஜி.ஆரின் இந்தச் சாகசங்களைக் கண்டிருக்கிறீர்களா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர்...
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்
’நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் இறைவன் அவதாரம் எடுப்பான்’ என்கிற கருத்து காலங்காலமாக தெய்வ நம்பிக்கை உள்ளவர்களிடமிருந்து வருகிறது. ஆனால், எம்.ஜி.ஆர் படங்களில் அதைவிட ஒரு படி மேலான மனித நேயத்துடன் தீயவன் அழிக்கப்படாமல் அவனது தீய பண்புகள் மட்டும் அழிக்கப்பட்டு அவன் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு நல்லவன் ஆவான். தீயவன் திருத்தப்படுவான், மனமாற்றம் அடைவான், இந்நோக்கில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது.
வாத்தியார்
ஆங்கிலேயர் வந்து பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு, வாத்தியார் என்ற சொல் குஸ்தி வாத்தியார், சிலம்பு வாத்தியார் என்று வீர விளையாட்டுகளைக் கற்றுத் தரும் வாத்தியாரையே குறித்தது. இதற்கென்று ஊர்தோறும் திடல்கள் இருந்தன. இங்கு வந்து ஊர் இளைஞர்கள் வீரப் பயிற்சி பெறுவர். எம்.ஜி.ஆரும் இது போன்ற பயிற்சிகளைக் கோவையிலும் சென்னையிலும் பெற்றிருக்கிறார். கோவையில் சாண்டோ சின்னப்பா தேவர் நம்பியார் ஆகியோருடன் எம்.ஜி.ஆர் இந்த வீர பயிற்சிகளில் ஈடுபடும்போது பெரும்பாலும் எம்.ஜி.ஆரே முதலிடத்தில் இருப்பார். அங்கு சின்னப்பா தேவர் மாருதி தேகப் பயிற்சி சாலை என்று ஓர் உடற்பயிற்சி கூடம் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் பெரிய நடிகர் ஆனதும் சென்னையில் வட பழனியில் ஓர் இடம் வாங்கி அதில் ஸ்டண்ட் நடிகர்களைப் பயிற்சி பெறும்படி ஊக்கமளித்தார். இன்று அந்த இடம் ஜானகி ராமச்சந்திரா கலாலயம் என்ற பெயரில் ஜே.ஆர்.கே பள்ளிக்கூடமாக உள்ளது.
உளவியல் கருத்து
ஏழை ரசிகர் தன் கொடுமைக்கார முதலாளியை அடித்து உதைக்க வேண்டும் என்ற உள்மன ஆசை எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை காண்பதன் மூலம் நிறைவேறுகிறது. உளவியல் அணுகுமுறையில் ஆராய்ந்தால் ஒருவர் கனவில் எலி, பூனையைத் துரத்தினால் அவர் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறார். அதிலிருந்து விடுபட அவர் உள்மனம் விரும்புகிறது. எனவே, அவர் கனவில் வலிமை குறைந்த எலி, வலிமையான பூனையைத் துரத்துகிறது. இது அவரது ஒடுக்கப்பட்ட ஆசையின் [oppressed wishes] வெளிப்பாடு ஆகும். இதுபோன்ற ஆசை இருப்பவர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது மன அமைதி பெறுகிறார். ஒடுக்குதலிலிருந்து விடுபட்ட உணர்வைப் பெறுகிறார். இதை [vicarious suffering] என்பர். அதாவது படம் பார்ப்பவர் தன் துக்கத்தையும் ஆற்றாமையையும் படத்தில் வரும் நடிகர்களின் இன்ப துன்பங்களோடு இணைத்து பார்த்து இன்பமோ துன்பமோ அடைவதாகும்.
ரசிகர் வகைகள்
சண்டைக் காட்சிகளை ரசிப்பவரில் இரண்டு வகையினர் உண்டு. ஒருவர் நேரடியாக மனதளவில் சண்டைப் போட்டு மகிழ்வார். இன்னொருவர் அவ்வாறு சண்டையிடாமல் முதல் பிரிவினரை வேடிக்கை பார்த்து மகிழ்வார். முதல் பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஏழை தொழிலாளி ஒருவர் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆருக்குள் மனதளவில் கூடு விட்டு கூடு பாய்கிறார். அவரே கெட்டவனை அடித்து உதைக்கும் உணர்வைப் பெற்று அமைதியடைகிறார். இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள், நமக்காகவே எம்.ஜி.ஆர் கெட்டவனை அடித்துத் திருத்துகிறார் என்று நம்பி அமைதி பெறுகின்றனர். இவர்கள் எந்தச் சமூக மாற்றத்துக்கும் ஒத்துழைக்க மாட்டார்கள். எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு யாராவது ஒருவர் தானாக வந்து நல்லது செய்ய வேண்டும். அதன் பலனை மட்டும் இவர்கள் அடைய வேண்டும். எம்.ஜி.ஆர் படம் பார்த்துவிட்டு வரும் கூட்டத்தினரில் முதல் வகையினர் வழியில் இருக்கும் தட்டி போர்டுகளை உதைத்து கீழே தட்டிவிட்டு அழிச்சாட்டியம் செய்த படி வருவர். இந்த இரண்டாவது பிரிவினர் அவர்களை ஊக்கப்படுத்தி ரசித்துச் சிரித்தபடி நடந்துவருவர்.
சண்டையின் பாரம்பர்யம்
ராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் என நம் பாரம்பர்ய நூல்கள் அனைத்தும் இறுதியில் பெரிய சண்டையின் மூலமாகவே நீதியை, நன்மையை நிலைநாட்டுகின்றன. அதன் வழியில் திரைப்படத்திலும் பெண், நிலம், பொருள் எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கடைசியில் ஒரு க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் இடையில் சிறு சிறு சண்டைக் காட்சிகளும் இடம்பெறுகின்றன. வெளிநாட்டு இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் இது போன்ற சண்டைகள் இடம்பெறுகின்றன. ஆக மனித சமுதாயம் தோன்றிய காலம் தொட்டு தன் தேவை அதிகரிக்கும்போது போட்டிகளும் பொறாமையும் பேராசையும் உருவாகி சண்டைகள் வருகின்றன. இது நபர் அளவில் வந்தால் வாய்ச்சண்டை என்றால் தகராறு என்றும் கைகலப்பு ஏற்பட்டால் சண்டை என்றும் நாடு அல்லது சமூகம் என்றளவில் ஏற்படும்போது அதைப் போர் என்றும் அழைக்கிறோம்.
எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சி அமைப்பு
தர்ம யுத்த முறைகளின் அடிப்படையில் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள் அமைக்கப்படும்.
1.எம்.ஜி.ஆர் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போவதோ தன் பலத்தைக் காட்டுவதற்காக யாரையும் முதலில் அடிப்பதோ கிடையாது.
2. கெட்டவனின் தீய செயலைத் தடுக்கவே அவர் அவனைத் தாக்குகிறார்.
3. கெட்டவன் தன்னைத் தாக்க வரும்போது தற்காப்புக்காக அவனை அவர் எதிர்க்கிறார்.
4. ஏழை, மூதியவர் பெண்கள் குழந்தைகள் என உடல் பலமற்றவர் , கெட்டவனை எதிர்க்க வலுவற்றவர் அவனின் பிடியில் சிக்கித் தவிக்கும்போது அவர்களை அவனிடமிருந்து மீட்க அவனுடன் சண்டைப் போடுகிறார்.
சண்டைப் போடும்போது
எம்.ஜி.ஆர் சண்டையிடும் போது வில்லனை முதுகில் குத்துவதோ அல்லது அவன் ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கும்போது தாக்குவதோ கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியார் எம்.ஜி.ஆரின் குத்துவாளை அவர் இடுப்பிலிருந்து பிடுங்கிக்கொண்டு சண்டை செய்யும் போது எம்.ஜி.ஆர் அதை நம்பியாரிடமிருந்து தன் நீண்ட வாளால் தட்டிப் பறித்துவிட்டு ‘நீ உன் குத்துவாளை எடுத்துக்கொள் இது என்னுடையது’ என்பார். அதன் பின்பு அச்சண்டை ஒரு பெரிய வாள் ஒரு குத்து வாள் எனச் சம பலத்துடன் தொடரும். படகில் மனோகருடன் எம்.ஜி.ஆர் சண்டையிடும்போது நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை மனோகரின் முதுகில் விடுவார். அப்போது முதுகில் தாக்குகிறாயே நீயெல்லாம் ஓர் ஆண்மகனா என்று நம்பியாரைக் கண்டிப்பார்.
வில்லிகளுடன் சண்டை
எம்.ஜி.ஆர் படங்களில் பெண்கள் வில்லன் கூட்டத்திலிருந்து தொல்லை கொடுத்தாலும் அவர்களுடன் அவர் நேரடியாக மோதுவது இல்லை. மகாபாரதத்தில் சிகண்டி பீஷ்மர் கதையின் சாராம்சமே இதுதானே. பெண்ணை அடிப்பது தவறு என்பதால் நவரத்தினம் படத்தில் குமாரி பத்மினி எம்.ஜி.ஆருடன் மோதும் போது அவர் விலகிக் கொள்வார் குமாரி பத்மினி பொத் பொத்தென்று கீழே விழுந்து அடிபட்டு சோர்வடைவார். பிறகு எம்.ஜி.ஆர் அவரைக் கட்டிப்போட்டுவிடுவார். அது போல இதயக்கனியில் மெயின் வில்லி ராஜசுலோசனாவிடம் இருந்து உண்மைகளை வரவழைக்க பெண் போலீஸ்களைப் பயன்படுத்துவார். எம்.ஜி.ஆர் வில்லியின் அடியாட்களுடன் நேருக்கு நேர் மோத சிதம்பரம் அருகே உள்ள ஒரு மண் திட்டையில் கப்பல் போல செட் அமைத்து சண்டைக் காட்சிகளை எடுத்தார். அந்த மேடு இன்றும் எம்.ஜி.ஆர் மேடு என்று அழைக்கப்படுகிறது.
சண்டைக்குப் பின்
எம்.ஜி.ஆர் தன் படங்களில் வில்லன் நடிகருடன் சண்டை முடிந்த பிறகு ஓரிரு படங்கள் தவிர மற்றவற்றில் அவர் அவனைக் கொல்வது கிடையாது. அவனை ஊனப்படுத்துவதும் இல்லை. அவன் செயல்பாட்டை மட்டும் முடக்குவார். பல படங்களில் கட்டிப்போட்டு விட்டு போலீஸுக்குத் தகவல் கொடுப்பார் அல்லது அந்த நேரத்தில் போலீஸே வந்துவிடும். புத்திமதி கூறுவதாகவும் வில்லன் திருந்தி மன்னிப்புக் கேட்பதாகவும் சண்டையின் முடிவு அமையும். பல படங்களில் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொல்லுக்கேற்ப வில்லன் அவன் செய்த தீய செயல்களுக்கு அவனே பலியாகிவிடுவான்.
வில்லனும் இதர ஸ்டண்ட் நடிகர்களும்
எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் [88] வில்லனாக நடித்தவர் அசோகன். ஆனால், எம்.ஜி.ஆர் என்றாலே அவரது பரம விரோதி என்று கருதுவது நம்பியாரை மட்டுமே. பி. எஸ் வீரப்பா மஹாதேவி சக்கரவர்த்தி திருமகள் ஆனந்த ஜோதி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். இவர்களுடன் துணை வில்லனாக ஆர்.எஸ். மனோகர் நடிப்பதுண்டு. இந்த வில்லன்களின் அடியாட்களாக எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட் குழுவைச் சேர்ந்த ஜஸ்டின் , ராமகிருஷ்ணன், நடராஜன், காமாட்சி, தர்மலிங்கம் போன்றோர் இடம்பெறுவர். இதயக்கனி, அடிமைப்பெண் போன்ற படங்களில் ஜஸ்டினுடன் தனிச் சண்டையும் இருந்தது. ஆனால், அவர் முக்கிய வில்லன் கிடையாது. புத்தூர் நடராஜன் சியாம் சுந்தர் ஆர்.என்.நம்பியார் சங்கர் போன்றோர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பர்.
வாள் சண்டை
வாள் சண்டையில் எம்.ஜி.ஆர் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் அந்த வாள் வித்தையை மேடை நாடகங்களில் கூட நடித்துக்காட்டினார். பி.யு.சின்னப்பாவைப் போல வாள் சுழற்றத் தெரிந்திருக்க வேண்டும் என்று அசுரப் பயிற்சி பெற்றார். அவர் நாடக மன்றத்தின் முதல் நாடகமான இடிந்த கோபுரம் நாடக மேடையில் குண்டுக் கருப்பையாவுடன் சண்டைக் காட்சியில் நடித்தபோது எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது. வாள் மட்டும் அல்லாது குறுவாள் அல்லது குத்துவாள். பிச்சுவா போன்றவற்றையும் வைத்து சண்டைப் போடுவதையும் நாம் வாள் சண்டை என்ற பிரிவிலேயே சேர்த்துவிடுவோம்
எம்.ஜி.ஆருக்குச் சமமாக வாள் சண்டைப் போடுவதில் நம்பியார் கெட்டிக்காரர். அரச கட்டளையில் சரோஜா தேவியின் காதல் பரிசுக்காக இவர்களின் சண்டை சுவாரஸ்யமாக இருக்கும். வசனமும் இடம்பெறும். முதலில் எம்.ஜி.ஆர் சிரித்தபடி சண்டைப் போடுவார். தன் கையில் இருந்த மாலையை நம்பியார் பறித்துவிடவும் அதைத் திரும்பப் பெறுவதற்காக பின்பு கோபமாகச் சண்டை போடுவார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா என்று நம்பியார் கேட்க சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்று எம்.ஜி.ஆர் பதிலளிக்க ஒரு விவாதத்துடன் தொடங்கிய பிரச்னை இறுதியில் வாள் சண்டையில் முடியும். அதன் பின்பு கடற்கரையில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் ’’இரு பூங்கொடி சற்று விளையாடி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்பியாருடன் சரிவுப் பாறையிலும் கடல் தண்ணீரிலும் வாள் சண்டை இடுவது இன்றும் ரசிக்கப்படுகின்றது. அதனால்தான் இன்றும் இப்படம் கோவாவில் நடைபெறும் சர்வதேச விழாவில் இடம்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர் மகாதேவி, அரசக் கட்டளை போன்ற படங்களில் பி.எஸ். வீரப்பாவுடன் போடும் வாள் சண்டைகளும் சிறப்பாக இருக்கும்.
எம்.ஜி.ஆர் இரண்டு கையாலும் வாள் சுழற்றத் தெரிந்தவர். மாயா மச்சீந்திரா படத்தில் இரண்டு கையாலும் வாள் சுழற்றி சண்டைப் போட்டார். மருத நாட்டு இளவரசி முதலான சில படங்களில் எம்.ஜி.ஆர் பத்துப் பேர் வந்து சுற்றி நின்று சண்டைப் போட்டாலும் தன் கை வாளை கொண்டு சுழன்று சுழன்று உட்கார்ந்து எழுந்து குதித்து தாவிச் சண்டைப் போடும் காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். இதைப் போல கம்புச் சண்டையும் பல பேருடன் மோதுவதாக அமையும்
எம்.ஜி.ஆர் மணிமாறன், கரிகாலன் என இரண்டு வேடங்களில் நடித்த நீரும் நெருப்பும் படத்தில் வாள் சண்டையில் ஒருவர் வலது கை பயிற்சி உள்ளவர்; அடுத்தவர் இடது கை பயிற்சி உள்ளவர். இருவரும் மோதும் காட்சியில் டூப் போட்டு எடுத்திருந்தாலும் எம்.ஜி.ஆர் முகம் தெரியும் காட்சிகளில் கதாபாத்திரத்துக்கு ஏற்ப இரண்டு கைகளிலும் வாளை மாற்றி அனாயசமாக சண்டையிடுவார். இதே படத்தில் பிச்சுவா சண்டை ஷூட்டிங் நடக்கும்போது வந்த தர்மேந்திராவும் ஹேமாமாலினியும் இவர் நிஜ பிச்சுவா வைத்து சண்டைப் போடுவதை பார்த்து வியந்தனர்.
ஒரு படத்தில் நம்பியார் வீசிய கத்தி எம்.ஜி.ஆரின் கண் புருவத்தை வெட்டிவிட்டது. அதன் தழும்பு கடைசி வரை மாறவில்லை. புருவம் வரையப்படாத அவர் படங்களில் இந்தத் தழும்பைக் காணலாம். எம்.ஜி.ஆர் வால் வீசிய வேகத்தில் எதிரே சண்டையிட்ட ஸ்டன்ட் நடிகரின் வாள் நுனி உடைந்து பறந்தது. அதை எம்.ஜி.ஆர் தன் கையால் லாகவமாகப் பிடித்து ‘இந்தா இதை என் நினைவாக வைத்துக்கொள்’ என்றார்.
மீனவநண்பன் படத்தில் வாள் சண்டையில் வெற்றி பெற்றவருக்கே தன் மகள் லதா சொந்தம் என்று வி.ஆர்.ராமசாமி சொன்னதால் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைப் போடுவார்கள். இது காலத்துக்கும் கதைக்கும் பொருந்தவில்லை என்றாலும் சண்டை ரசிக்கும்படியாக இருந்ததால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இச்சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆர் பெல்பாட்டம்ஸ் போட்டு நடித்திருப்பார். மற்ற காட்சிகளில் கட்டம் போட்ட சங்கு மார்க் லுங்கி கட்டி வருவார். இந்தப் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கு மூச்சு வாங்குவதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதறகாக அவர் ஒரு பக்கமாகப் போய் சில நிமிடங்கள் யாருடனும் பேசாமல் நிற்பார் என்று ஸ்ரீதர் தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒரு கையில் பெரிய வாள் மறு கையில் சிறு குத்துவாள் வைத்து சண்டைப் போடுவதாகவும் காட்சிகள் உண்டு. அடிமைப்பெண் படத்தில் அப்பா எம்.ஜி.ஆர் சூரக்காட்டின் தலைவனான அசோகனுடன் வலை கட்டி அதில் சண்டையிடும் காட்சியில் அசோகனுக்கு ஒரு காள் ஊனம் என்பதால் எம்.ஜி.ஆரும் ஒரு காலை மடித்துக்கட்டி அவருடன் மோதுவார். இது ஒரு புதுமையான சண்டைக் காட்சி. எதிரி தனக்குச் சம பலம் உள்ளவனாக இருக்க வேண்டுமே தவிர நம்மை விட குறைந்த பலம் உள்ளவனுடன் மோதுவது ஆண்மை ஆகாது அது வீரம் எனப் போற்றப்பட மாட்டாது என்பதால் சவால் விட்டு ஒற்றைக் காலுடன் மோதினார். இதில் அசோகனுக்கு டூப் போட்டவர் சங்கர்.
எம்.ஜி.ஆர் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் நாள் நெருங்கிவிட்டதால் அவசரம் அவசரமாக மைசூரில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு நடந்தது. அதில் எம்.ஜி.ஆருடன் சண்டைக் காட்சியில் நடித்த கடைசி ஆள் இந்த சங்கர். இவர் நம்பியாருக்கு டூப் போட்டு இருந்தார்.
சண்டைக் கருவிகள்
வாள் சண்டை என்பது அரச குடும்பம் மற்றும் படை வீரர்களுக்கு உரியது. அது தவிர சாமன்ய மக்களுக்குத் தெரிந்த கிராமங்களில் அதிகமாகப் புழங்குகின்ற சிலம்பம், சுருள் வாள், செடிக் குச்சி, மான் கொம்பு போன்ற கருவிகளைக் கொண்டும் சண்டைக் காட்சிகளை எம்.ஜி.ஆர் தன் படங்களில் வைத்தார்.
சிலம்பு
சிலம்பாட்டம் பல படங்களில் இடம்பெற்றாலும் பெரிய இடத்துப் பெண் படத்தில் வரும் சிலம்புச் சண்டை மறக்க முடியாதது. மயக்க மருந்து கலந்த சோடாவைக் குடித்ததால் எம்.ஜி.ஆர் போட்டியில் தோற்றுப் போய் ஊரை விட்டே வெளியேறிவிடுவார். தான் கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட பெண்ணையும் இப்போட்டியின் தோல்வியால் இழந்துவிடுவார். ஆனால், ரிக்*ஷாக்காரன் படத்தில் சுற்றி நின்று தன்னைத் தாக்கும் மூன்று பேருடன் ரிக்*ஷா சீட்டில் உட்கார்ந்தபடியே கையில் சிலம்பு வைத்து எம்.ஜி.ஆர் சண்டைப் போட்டு மஞ்சுளாவைக் காப்பற்றுவார். இக்காட்சியில் சர்க்கஸில் வருவது போல ரிக்*ஷாவை வட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வரும்படி அமைத்திருந்தனர். தாயைக் காத்த தனயன் படத்தில் எம்.ஜி.ஆர் கம்பு சுற்றி வெற்றி பெற்றதைப் பாராட்டும் எம்.ஆர்.ராதா தன் கந்த விலாஸ் டீக்கடையில் வந்து ஒரு கப் டீ குடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்வார்.
எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டல் பாட்டில் எம்.ஜி.ஆர் சவுக்கை சுழற்றியபடி படிக்கட்டுகளில் ஓடி ஆடிப் பாடும் காட்சிகளில் அவர் சிலம்பு சுற்றுவதில் பின்பற்றும் காலடி வைப்பு முறைகளையே பயன்படுத்தியிருப்பார்.
செடிக்குச்சி
செடிக்குச்சி என்பது சிலம்புக் குச்சியைப் போலவே அளவில் சிறியது. எம்.ஜி.ஆர் ஒருவருக்கே திரையுலகில் இந்தச் செடிக்குச்சி சுற்றத் தெரியும். மாட்டுக்கார வேலன் படத்தில் எம்.ஜி.ஆர் சிறிய பைப்புகளை வைத்து செடிக்குச்சி விளையாட்டை நிகழ்த்துவார். திரையரங்கில் இந்தக் காட்சியை நம் ரசிகர்கள் ரசித்தது போல அமெரிக்க மாணவர்களும் ரசித்தனர்.
கோபுடா
கோபுடா என்பது கையில் மாட்டும் ஒரு முள் கவசம் அகும். அரசிளங்குமரி ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையில் அதில் க்ளைமாக்ஸ் சண்டையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர கருதிய எம்.ஜி.ஆர் இந்தக் கோபுடா சண்டையை வைத்தார். இதில் கெட்டிக்காரரான சின்னப்பா தேவரை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து அரை மணி நேரத்தில் சமாதானமாகி செட்டுக்கு அழைத்து வந்தார். ஆக்ரோஷமான இந்தக் கோபுடா சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மான் கொம்பு
மான் கொம்பு சண்டையை உழைக்கும் கரங்கள் படத்தில் சங்கர் அருமையாக வடிவமைத்திருப்பார். கால் சவடு [ஸ்டெப்] வைத்து எம்.ஜி.ஆர் இந்தச் சண்டையைப் போடும்போது ஒரு நேர்த்தியான கலை வடிவத்தைக் காணலாம்.
மல்யுத்தம்
எம்.ஜி.ஆர் பளு தூக்கும் போட்டியில் நம்பியார் சின்னப்பா தேவர் தோற்கடித்து விடுவார். மல் யுத்தம் குஸ்தி போன்றவற்றையும் முறைப்படி கற்றிருந்தார். காஞ்சித் தலைவன் படத்தில் அவர் மல்யுத்தத்தில் வல்லவனான மாமல்லன் நரசிம்ம பல்லவன் வேடத்தில் நடித்ததால் ஒரு தனி மல்யுத்தக் காட்சி வைக்க திட்டமிட்டனர். அப்போது ஆந்திராவில் காவல் துறையில் பணியாற்றிய பஜ்ஜையா என்பவர் மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தார். நல்ல உயரமும் கம்பீரமான தோற்றமும் கொண்டிருந்தார். அவரை அழைத்து காட்சியை விளக்கி நடிக்கவைத்தனர். எம்.ஜி.ஆரை அவர் சரியாக மதிப்பிடாததால் சொன்ன படி கேட்காமல் நடித்துவந்தார். மறுநாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் அவரை தலைக்கு மேலே தூக்கிக் கீழே போட்டார். பஜ்ஜையா எழுந்து வந்து எம்.ஜி.ஆர் காலைப் பிடித்து அழுதுவிட்டார். இதுவரை யாரும் அவரை அப்படித் தூக்கி எறிந்ததில்லை அது ஒரு மல்யுத்த வீரனுக்குப் பெருத்த அவமானம். எம்.ஜி.ஆருக்கு மல்யுத்தம் தெரியும் என்பதை நம்பாமல் அலட்சியமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டார்.
காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஆர்.எஸ்.மனோகரும் மல்யுத்தம் செய்வர். ஆர்.எஸ்.மனோகர் மல்யுத்தம் கற்றவர். பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும் மல்யுத்தக் காட்சிகள் இடம்பெறும். அன்பே வா படத்தில் வரும் சிட்டிங் புல் கர்நாடகக் காவல் துறையில் பணியாற்றி வந்தார். அவருக்கு எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது ஃபைட் சீனில் நடிக்க ஆசை. இவர் அன்பே வா படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆருடன் மோதினார். அவரையும் எம்.ஜி.ஆர் அப்படத்தில் தோளுக்கு மேலே தூக்கி வைத்திருந்து கீழே போடுவார்..........
-
வள்ளலே ..
எங்கள் வாழ்வின் ...
இதயக்கனி ..
--------------------------------
காமராஜர்-
தன் உதவியாளர் வைரவனுடன் .. வாழ்ந்து கொண்டிருந்த காலம்!!
ஒரு நாள் ....
ஒரு நண்பர் ...
காமராஜ் அவர்களளை
சந்திக்க வந்திருந்தார்....
பெருந்தலைவரும் ..
அவருடன் உரையாடி விட்டு அவரைத் தம்முடன் உணவருந்துமாறு அழைக்க அந்த நண்பரும் ஒப்புக் கொள்கிறார்!!
வைரவனோ தனக்கும் ... காமராஜருக்கும் மட்டுமே உணவு தயாரிப்பது வழக்கம்!!
அமைதியாக இருவருக்கும் --தான் சமைத்ததை பரிமாறி விட்டு--தான்-வெறும் வயிற்றோடு அந்த இரவைக் கழிக்கிறார்!!
இது காமராஜருக்குத் தெரிய வருகிறது!!
வருத்தத்தையும் கொடுக்கிறது!!
சரி!!
இனி தம் இருவருக்கும் மேல் உபரியாக ஒருவருக்கு உணவு தயாரிக்க சொல்லலாம் என்றால்--
யாரும் வராத நிலையில் அந்த உணவு வீணாகி விடும்!!
குளிர்ப் பெட்டி போன்ற உணவு பாதுகாப்பு வசதிகளும் இல்லை??
எப்போதாவது தான் நண்பர்கள் வருவார்கள்!!
அதுவும் இரவு உணவு உண்ணும் நேரத்தில் அனேகமாக யாரும் வரமாட்டார்கள்!!-
-இத்தகைய காரணங்களால்--
வரும் விருந்தினர்களை உணவு அருந்தச் சொல்லும் பழக்கத்தையே அடியோடு விட்டுவிட்டார் பெருந்தலைவர் ...
ஒரு நாள்_-
காமராஜரை சந்திக்க வருகிறார்
ராம ராஜர் எம்.ஜி.ஆர் ...
காமராஜர் --எம்.ஜி.ஆரிடம் அன்று அதிசயமாக
உணவருந்தச் சொல்லி வற்புறுத்துகிறார்??
எம்.ஜி.ஆரோ நாகரீகமாக மறுத்து விட்டு விடை பெறுகிறார்!!
திரு வைரவனும் ஆச்சர்யம் கொண்டு அது பற்றி காமராஜரிடம் கேட்கிறார்??
யாரையும் சாப்பிட--கூப்பிட பழக்கம் இல்லாத உங்களுக்கு எம்.ஜி.ஆர் மட்டும் அதுவும் வற்புறுத்தி--
என்ன விலக்கு??
சற்றே விளக்கு ..
அமைதியாக பதில் சொன்னாராம் அந்த படிக்காத மேதை!!
ஊருக்கே உணவிடும் ... எம்.ஜி.ஆருக்கு ...
ஒரு வேளை உணவிட்ட புண்ணியம் எனக்குக் கிடைக்கட்டுமே ...
என்பது தான் காரணம்..............
-
"ஆயிரத்தில் ஒருவனி"ன் மகத்தான வெற்றிக்கு பின்னர் வந்த பத்மினி பிக்சர்ஸின் குறுகிய கால தயாரிப்பில் வெளியான கலர் படம்தான் "ரகசிய போலீஸ் 115"
புதுமையான கவர்ச்சிகரமான
தலைப்பு. தலைப்பே ரசிகர்கள் மனதில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியது. அதுவும் 1968 ம் ஆண்டு பொங்கலையொட்டி வெளியானது மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. வால்போஸ்டரை பார்க்கவே கூட்டம் அலைமோதியது.
எனக்கு தெரிந்து தூத்துக்குடியில் ஒரு டிக்கெட்டின் பிளாக் மார்க்கெட் விலை 1ரு44 பைசா டிக்கெட் 20 ரூக்கு விலைக்கு போனது இந்த படத்துக்கு மட்டும்தான். தூத்துக்குடியில் முதன்முறையாக 30 நாட்களை கடந்து 33 நாட்கள் மேட்னி ஷோ நடைபெற்று 53 நாட்கள் ஓடி புதிய சாதனையை தொடங்கி வைத்தது. மேலும் ஒரு அதிசயம் இந்த படத்துக்கு நிகழ்ந்தது. சென்னையில் 10 நாட்களில் ரூ 2,37,000 வசூலாக பெற்றது யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று. "ரிக்ஷாக்காரன்" படம்
கூட இந்த வசூலை முறியடிக்க முடியவில்லை என்பதே உண்மை.
இவ்வளவுக்கும் பெரிய வசூல் கொடுக்கும் ஏர்கண்டிஷன் தியேட்டர் கிடையாது. சாதாரண தியேட்டர்கள்தான். 5 தியேட்டர் ரிலீஸ் அதனால்தான் என்பார்கள் எதிர்முகாம் அணியினர். நீங்களும் திரையிட்டு பாருங்கள். மூன்று தியேட்டருக்கே ஆட்களை தேடிப்பிடிக்கும் அவலநிலை. இதில் 5 தியேட்டருக்கு ஆள் பிடிக்க வேண்டுமென்றால் நினைத்தே பார்க்க முடியாது கணேசன் ரசிகர்களுக்கு. பந்துலுவின் தயாரிப்பில் வெளியான வேறு எந்த படமும் இந்த சாதனையை செய்யவில்லை.
இத்தனைக்கும் பிரம்மாண்ட செட்டிங்ஸ் கிடையாது. நிறைய ஆட்களை திரட்டி நடிக்க வேண்டிய காட்சி அமைப்பு கிடையாது.நட்சத்திர பட்டாளங்கள் கிடையாது வெற்றியை பங்கு போடுவதற்கு. ஆனாலும் பாண்டவர்கள் வெற்றிக்கு துணை நின்ற பரந்தாமன் போல படத்தின்
வெற்றிக்கு வித்திட்ட ஒரே நட்சத்திரம் புரட்சி நடிகர் மட்டுமே.
படத்தில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து இருந்தால் போதும் வெற்றி என்ற மூன்றெழுத்து தன்னால் வந்து சேரும் என்பதை மீண்டும் நிரூபித்த வெற்றி காவியம்தான் "ரகசிய போலீஸ் 115."
படம் சென்னையில் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் வெள்ளிவிழா ஓடிய கணேசன் படங்கள் கூட பெற முடியாத வசூலை "ரகசிய போலீஸ்115" பெற்றது. ஓடி முடிய
சுமார் ரூ 9,23,000 ஐ வசூலாக பெற்றது.."கட்டபொம்மனோ","கப்பலோட்டிய தமிழனோ", பல லட்சம் செலவு செய்து பந்துலுவை கடனாளி ஆக்கிய "கர்ணனோ" போன்ற
பந்துலுவின் பிரமாண்ட படங்கள் பெற முடியாத வசூலை எம்ஜிஆரின்
சாதாரண ஒரு கலர் படம் பெறுகிறது என்றால் அந்த மூன்றெழுத்தின் மகிமையை நினைத்து பலருக்கு அடிவயிறு ஏன் கலங்குகிறது என்பதற்கான காரணம் புரிகிறதா?
நெல்லையில் இரண்டு தியேட்டர்களில் வெளியாகி 52 நாட்கள் ஓடி சுமார் ரு89000 வசூலாக பெற்றது. 100 நாட்கள் திருச்சி மற்றும் சேலத்தில் ஓடியது. மதுரையில் பிரமாண்ட தியேட்டர் தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய "கர்ணன்" பட வசூல் ரூ 186000ஐ ஆர்ப்பாட்டம் இல்லாமலே 100 நாட்கள் ஓடாமலே 92 நாட்களில் ரூ228000 வசூலாக பெற்று அசுர சாதனை படைத்தது பந்துலுக்கு ஆச்சர்யத்தை மூட்டியதுடன் முன்பே வந்திருந்தால் அனாவசியமாக பணத்தையும்,வீணான உழைப்பையும் இழக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்குமே! என்று மனத்தெளிவு பெற்றதாக சொல்வார்கள்.
பொறாமை பட்டது கணேசன் ரசிகர்கள் மட்டுமல்ல அநேக தினசரி, வார பத்திரிக்கைகளும்தான். "ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை" என்ற பாடலின் பொருள் விளங்கியிருக்கும் அவர்களுக்கு. ஓய்வில்லாமல் பத்திரிக்கையில் விமர்சனம் என்ற பெயரில் மிகை நடிப்பை போற்றியும்,
புரட்சி நடிகரின் திறமைகளை மறைத்து எழுதியும் மக்கள் மனம் மயங்காமல் வெற்றியை
மக்கள் திலகத்தின் படங்களுக்கு தாரை வார்த்தது விந்தையிலும் விந்தை.
அன்று வெளியான படம் இன்று வரை ரீ மாஸ்டர் பண்ணியும் ஓடுகிறது என்றால் அந்த வெற்றியின் மகிமையை அறிய முடிகிறதா?.
அந்த வெற்றியை முறியடிக்க சில நடிகர்கள் கத்திப்பேசி, விசித்திரமான ஒலிகளை எழுப்பி,
விதவிதமான நடை நடந்து, உடை பல அணிந்து, புதுமையான முறையில் அழுது, ரத்த வாந்தி எடுத்து, துணைக்கு பல நட்சத்திரங்களை சேர்த்தாலும் மக்கள் திலகத்தை வெற்றி கொள்ள முடியவில்லை என்பதே எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை............
-
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*திரு.துரை பாரதி அவர்கள் 27/06/20 அன்று சொன்ன*செய்திகள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படகோட்டி படத்தில் இரண்டு குப்பங்களுக்கு இடையே நடைபெறும் மோதல்களை தடுப்பது, பிரச்னைகளை சமாளிப்பது, குப்பங்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை முதலாளிகள் சுரண்டுவதை எதிர்ப்பது , படகு போட்டியில் மாறு வேடத்தில்* தன் குப்பத்திற்காக தலைவர் பொறுப்பில் இருந்து வெற்றி பெறுவது ,இறுதியில் வில்லனின் சதி திட்டங்களை முறியடித்து இரு குப்பங்களின் ஒற்றுமையை நிலைநாட்டி, அரசு உதவிகள் பெறுவது என்கிற கதையமைப்பில் மீனவர்கள் நண்பனாக நடித்து , அந்த படம் சென்னையில் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது . இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ,உரிமைக்குரலுக்கு பிறகு* மீனவ நண்பன் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார் இந்த படத்திலும் மீனவ சமுதாயத்திற்கு உதவும் வேடம் .ஆனால் சற்று வித்தியாசமான கதை .*.படம் முடிவடைவதற்கு முன்பு முதல்வராகிவிட்டார் . அதனால் பதவி ஏற்பதற்கு முன்பு சில நாட்கள் நடித்து முடித்தபின் படம் 14/08/1977ல்* வெளியானது . எம்.ஜி.ஆர். முதல்வராகுவதற்கு முன்பு வெளியான இன்று போல் என்றும் வாழ்க , முதல்வரான பின்* 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது . முதல்வரான பின் வெளியான மீனவ நண்பன் சென்னை, மதுரை,சேலம் ஆகிய நகரங்களில் 100 நாட்கள் மேல் ஓடியது .ஒரு நடிகர் முதல்வராக பதவியில் இருக்கும்போது இரண்டு படங்கள் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டன* அந்த வகையில் , எம்.ஜி.ஆர். புரிந்த இந்த அரிய சாதனை சினிமா உலகில் வேறு எவரும் செய்ததில்லை .
ஒரு அரசு அதிகாரி மீது தொடர்ந்து புகார் வருகிறது . எம்.ஜி.ஆர். ஒரு நாள் அவரை பதவி இடைநீக்கம் செய்து உத்தரவிடுகிறார் .விவரம் அறிந்த அதிகாரி, ராமாவரம் தோட்டத்திற்கு வந்து எம்.ஜி.ஆரை பார்க்கிறார் . தகுந்த விளக்கம் அளிக்கத்தான் வந்திருக்கிறார் என்று எம்.ஜி.ஆர். கருதி, முதலில் சாப்பிட்டு வாருங்கள் என்கிறார் .உணவருந்தி முடித்ததும் எம்.ஜி.ஆர். பதவி இடைநீக்க உத்தரவு கடிதம் அளிக்கிறார் .நீங்கள் எந்த விளக்கம் சொன்னாலும் ஏற்க கூடிய நிலையில் நானில்லை . நான் பலமுறை உங்களை மறைமுகமாக எச்சரிக்கை செய்தும் நீங்கள் திருந்தவில்லை ,எனக்கு தயக்கமாகத்தான் இருக்கிறது .இருந்தாலும் வேறு வழியில்லை என்கிறார் . அதிகாரி, சோகத்துடன் வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற* வேதனையுடன் செல்கிறார் .வீடு போய் சேர்ந்ததும் அவருக்கு இன்ப அதிர்ச்சி. அதாவது மூன்று மாதங்களுக்கு தேவையான மளிகை சாமான்கள்,,துணிமணிகள் இதர பொருட்கள்* அவர் வீட்டில் குவிந்து கிடக்கின்றன .அத்துடன் வீட்டு செலவிற்கு ரூ.10,000/-* கொடுத்து அனுப்பியிருந்தார் .அதுதான் எம்.ஜி.ஆரின் குணாதிசயம் . தண்டனையும் உண்டு. அதே நேரத்தில் நிவாரணமும் உண்டு .ஒரு முதல்வராக இருந்து எம்.ஜி.ஆர். தவறு செய்த அதிகாரிக்கு தண்டனை அளிக்கிறார்.அதிகாரி செய்த தவறுக்கு குடும்பம் பாதிக்க கூடாது என்று கருதி*.அதே நேரத்தில் ஒரு குடும்பஸ்தனாக , மனிதாபிமானியாக*
அந்த குடும்பத்திற்கு பல உதவிகளை செய்தார் .
எம்.ஜி.ஆருக்கு மருத்துவர்கள் மீது* தனி மரியாதை உண்டு.* **தர்மம் தலை காக்கும் , புதிய பூமி* போன்ற ப*டங்களில் எம்.ஜி.ஆர். மருத்துவராக நடித்திருந்தார் தர்மம் தலை காக்கும் படத்தில் இருப்பவர்களிடம் இருந்து பணம் வாங்கி , ஏழைகள், வசதியற்றவர்களுக்கு**இலவச வைத்தியம் செய்வார் . புதிய பூமி படத்தில்**கொரோனா நோய், போன்று பல கொடிய,தொற்று நோய்**வந்தாலும் அதற்கான ஆராய்ச்சிகள் செய்து மருந்துகள் தயார் செய்து வைத்தியம் செய்வார் .கொடிய நச்சு பாம்புகள் கடித்தாலும்,அந்த விஷக்கடியில் இருந்து,மாற்று மருந்துகள் கண்டுபிடித்து நோயாளிகளை**காப்பாற்றும் வகையில், பச்சிலை, மூலிகை பொருட்கள்* கொண்டு குணமாக்கும் வைத்தியராக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருப்பார் .ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இறுதியில் அனைவரும் எம்.ஜி.ஆரை தலைவன் பதவி ஏற்று கொள்ளும்படி வற்புறுத்துவார்கள் . அவர் அதை மறுத்து ,நம்மில் மனமாற்றம் ஏற்பட்ட பிறகு யார் தலைவனாக இருந்தால் என்ன, என்னை வற்புறுத்தாதீர்கள் .பலகாலம் கற்றறிந்து நோய் பிணியை நீக்க மருத்துவ தொழிலை நடத்தி வருகிறேன் .இந்த தொழில் மூலம் மக்களுக்கு தொண்டாற்றவே விரும்புகிறேன் என்று கூறி மருந்து பெட்டியுடன் புறப்பட்டுவிடுவார் .மக்களின் நல்வாழ்வு, சுகாதாரம் ஆகியவற்றில் எம்.ஜி.ஆருக்கு தனி அக்கறை உண்டு . அதனால்தான்*தி.மு.க. ஆட்சியில் சுகாதார அமைச்சர் பதவி கேட்டார் என்று சொல்லப்படுவதுண்டு .
எம்.ஜி.ஆர்.முதல்வரான பின்பு 1978 ஏப்ரலில்* உன்னைவிட மாட்டேன் என்கிற படத்திற்கு பூஜை போடப்பட்டு தான் மீண்டும்*, நடிக்க போவதாக அறிவித்தார் அதற்கான* விளம்பரங்கள், ஏற்பாடுகள் எல்லாம் செய்தார் .. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயிடம் கேட்டதற்கு*,* முதல்வர் பதவிக்கு எந்த பங்கமும் வராமல் நடந்து கொள்வதாக இருந்தால் ,எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதற்கு எந்த ஆட்செபனையும் இல்லை என்று அறிவித்தார் இதுதான் எம்.ஜி.ஆர்.எதிர்பார்த்த* பதில் /அறிவிப்பு . அதில் வெற்றி பெற்று ,நிரூபித்தும் காட்டினார் .*.பூஜைக்கு ஆளுனர் வருவதாக இருந்தது .இறுதி கட்டத்தில் ஆளுனர் வரவில்லை .* *முதல்வர் பதவிக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று உத்தரவாதம் தரும் வகையில் அவரது செயல்பாடு இருந்தது . ஆனால் என்ன காரணமோ, தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக படம் தொடங்க படவில்லை . எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிக்க முடியாமல் போனது .
சிவந்த மண் படத்திற்கு கதை வசனம் எழுத , முதலில் கருணாநிதியிடம் எம்.ஜி.ஆர். மூலம் ஆலோசனை கேட்கபட்டது* .சட்டத்தில் அதற்கு இடம் உண்டா தெரியவில்லை .யோசித்து சொல்கிறேன் என்று கருணாநிதி சொன்னார் பின்னர் மறுத்துவிட்டார் .ஸ்ரீதரும் அவரிடம் கேட்கவில்லை .அதன்பிறகு கருணாநிதி முதல்வராகிவிட்டார் ..காலம் கடந்ததால் , இயக்குனர் ஸ்ரீதர் , நடிகர் சிவாஜி கணேசனை வைத்து படத்தை முடித்து வெளியிட்டு விட்டார் . ஸ்ரீதர் நேரடியாக என்னிடம் கேட்காமல் படத்தை எடுத்து வெளியிட்டுவிட்டார் என்றுசுட்டிக்காட்டி* அவர் மனம் புண்படும்படி கருணாநிதி பேசினார் .என்று சொல்லப்பட்டது .
எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்திருந்த காலத்தில், ஸ்டுடியோக்களில் பொதுவாக நாங்கள் சாப்பிடுகிற சாப்பாடு எம்.ஜி.ஆர். சாப்பாடு என்று திரையுலகில் பெருமையாக சொல்லுகிற அளவிற்கு* மிக* பிரபலம் .ஏனென்றா ல்***எம்.ஜி.ஆர். உணவருந்தும் போது , தன்னை சுற்றியுள்ள நடிகர் , நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், பலரையும் வைத்துதான் சாப்பிடுவார் .அவருடைய சாப்பாட்டில் உள்ள வகை வகையான உணவு பொருட்களை பற்றி புகழ்ந்து பேசாத நடிகர், நடிகைகள், திரைப்பட கலைஞர்களே இல்லை எனலாம் . எம்.ஜி.ஆர். பற்றி பேசுகிறவர்கள், அவரை அறிந்தவர்கள் ,அவர் வீட்டிலோ, அல்லது ஸ்டுடியோவிலோ* சாப்பிட்டு*மகிழ்ந்ததை சொல்லாமல் இருந்த வரலாறில்லை .ஏனென்றால் தன்* சிறுவயதில் இருந்தே பசி கொடுமையை எம்.ஜி.ஆர். அறிந்து இருந்தவர் .எனவே மற்றவர் பசிப்பிணியை நீக்கினார் .பலருக்கு பசியாறுதல் செய்த, பசி அறிந்த* வள்ளல் .
தொடர்ந்து பல செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர். -வில்லன் கண்ணன் உரையாடல் -மீனவ நண்பன்*
2.எம்.ஜி.ஆர்.-நாகேஷ் உரையாடல் - நம் நாடு*
3.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*
4.மருத்துவராக எம்.ஜி.ஆர். -புதிய பூமி*
5.எம்.ஜி.ஆர்.-நாகேஷ* உரையாடல்* -ஆயிரத்தில் ஒருவன்*
6.எம்.ஜி.ஆர். ஜெயலலிதா - ஆயிரத்தில் ஒருவன்*
7.ஹலோ ஹலோ சுகமா -தாமிரம் தலை காக்கும்*
8.எத்தனை பெரிய மனிதனுக்கு - ஆசைமுகம்*
9.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு*
10.சித்திர சோலைகள்,- நான் ஏன் பிறந்தேன்*
11.கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்*
-
புரட்சிதலைவர் நடித்து ஒப்பந்தம் போட்டு நாம் காண கிடைக்காத படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா எம்ஜிஆர் நெஞ்சங்களே..
57 தவிர. இன்னும் 6 படங்கள்...நம்ம முடியவில்லையா... ஆம்.
இதோ.. இதுவரை வெளிவராத முழு பட்டியல்...
1...சாயா..( தலைவர் கதாநாயகன் ஆக நடித்த முதல் படம்...பக்ஷிராஜா நிறுவனம்...கதாநாயகி குமுதினி)..
2....அதி ரூப அமராவதி.
(தலைவர்..பானுமதி)
3....குமாரதேவன்...
(ஜமுனா கதாநாயகி)
4 ...பவானி....
(பானுமதி...ஸ்வஸ்திக் வெளியீட்டில்..வசனம் கண்ண தாசன்..)
5...வெள்ளிக்கிழமை.
(தீயசக்திப்படம்)
6....இணைந்த கைகள்.
(எம்ஜிஆர் நிறுவனம்)
7.....தபால்காரன் தங்கை...
(தேவிகா உடன்)
8....மாடி வீட்டு ஏழை.
(சாவித்திரி. )
9....கேரள கன்னி.
( பால சூரியா நிறுவனம்)
10...கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.
11...முசிறி அவர்களின் மக்கள் என் பக்கம்.
12....தாமஸ் இயக்கத்தில். மர்ம பெண்களிடம்..c.i.d..
13..... ராஜ சுலோச்சனா உடன்...மலை நாட்டு இளவரசன்..
14 ....கங்கை முதல் க்ரமளின் வரை...1974 இல்...தலைவர் இயக்கத்தில்.
15...பரமபிதா.
16....தலைவர் தயாரிப்பில் நாடோடியின் மகன்..
17...நானும் ஒரு தொழிலாளி...ஸ்ரீதர்..
18...கண்ண தாசனின்
ஊமையன் கோட்டை.
19...பாகன் மகள்..
20...தலைவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்..
21 ....ரிகஷாரங்கன்.
22....அஞ்சலிதேவி உடன்...சிலம்பு குகை.
23....ஸ்ரீதர் இயக்கத்தில்... பானுமதி உடன்..சிரிக்கும் சிலை.
24......தந்தையும் மகனும்...தேவர் பிலிம்ஸ்.
25......தேனாற்றங்கரை..
26...உடன்பிறப்பு.
27...புரட்சி பித்தன்.
28....வேலுத்தேவன்..
29...ஏசுநாதர்..
30....மண்ணில் தெரியுது வானம்.
31...சமூகமே நான் உனக்கே சொந்தம்.
32..உன்னை விட மாட்டேன்.
33...எல்லை காவலன்.
35...கேப்டன் ராஜு.
36....தியாகத்தின் வெற்றி..
37...இதுதான் பதில்.
38.....வேலு தம்பி...
39.. ஊரே என் உறவு.
40..உதயம் நிறுவனம் .
போட்டோகிராபர்..
41..கே.பாலச்சந்தர் வசனம்...பெயர் மெழுகு வர்த்தி...
43...இன்ப நிலா.
44.. வாழ்வே வா..
45...காணிக்கை.
46....அண்ணா பிறந்தநாடு.
47....அண்ணா நீ என் தெய்வம்..
48...நல்லதை நாடு கேட்கும்..
49....நம்மை பிரிக்க முடியாது.. அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன்.
50....மரகத சிலை.
51..லதா மஞ்சுளா தலைவர் இயக்கத்தில் வாழு.. வாழவிடு..
52....ஆண்டவன் கட்டிய ஆலயம்..
53...லதா மஞ்சுளா உடன்..கொடை வள்ளல்..
54....உங்களுக்காக நான்...
55...வீனஸ் நிறுவனம்.
எங்கள் வாத்தியார்.
56...எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் தயாரிப்பில்.
ஆளப்பிறந்தவன்..
57.....இமயத்தின் உச்சியிலே..
வாழ்க எம்ஜிஆர் புகழ்.
நன்றி..உங்களில் ஒருவன்.......தொடரும்.
பின் குறிப்பு.
வெளிவராத படங்களில் ஸ்டில்கள்... நாளை வெளியிடப்படும்............
-
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
ஆஹா...
தலைவன் என்றால் இவரல்லவா??
புரட்சித்தலைவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பூமியிலிருந்து வானத்துக்கு விடைபெற்று முப்பது வருடங்கள் ஆகியும் இன்றும் .....
"ஜவ்வாது மலை" வாழ் மகாஜனங்களைப் பொறுத்தவரை அவர்தான் ஒரே ஹூரோ...
வணங்குகிறேன்
சரித்திரம் படைத்த
சகாப்த நாயகனை!!!
அன்றும்
இன்றும்
என்றும்
ஒரே புரட்சித்தலைவர்!!!
அவர் ஒரு சித்தர் !
கலையுலக சித்தர்!!
தான் செய்யப் போவதையும்
வாழப் போவதையம்
முன்கூட்டியே பாடலாக முன்மொழிந்த
கலை ஞானி!!!!
"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்""
சொல்கிறார்களே!!!!
சொல்கிறோமே!!!
"டைம்ஸ் ஆஃப் இந்தியா"வின் பதிவில் இருந்து ஜவ்வாதுமலையில் வாழும் மக்களுக்கு இன்றும் ஒரே ஹூரோ புரட்சித்தலைவர்தான் என்ற செய்தியை படித்து....
மீண்டும் ஒரு முறை...
என் மானசீக குருவை வியந்து வணங்குகிறேன்!!!
வாழ்க்கைக்கான மானசீக குரு! "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பதிவிற்கு நன்றி.........
-
#ஆல் #இன் #ஆல்
தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார்.
இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.
வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை.
உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.
திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்
தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். #அவரது #பாதிப்பு #இல்லாத #ஹீரோ #தமிழ்சினிமாவில் #இல்லை. #ஏன் #சிவாஜி #கூட #அவரது #பாணியில் #நடிக்க #முயன்றிருக்கிறார்.
நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா “#சரிதான்! #நாட்டில் #பணக்காரர்களே #இருக்கக்கூடாது #போலிருக்கிறது” என்பார்... அதற்கு #எம்ஜிஆரின் #பதில் : “#இல்லை #ஏழைகளே #இருக்கக்கூடாது”.........
-
வாலி’ ஞாபகம்! - இன்று கவிஞரின் நினைவு நாள்.
’நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்’ பாடலைக் கேட்கும் போதே ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளுமே... அது யார் எழுதிய பாடல் தெரியுமா என்று கேட்டால் கண்ணதாசன் என்பீர்கள்....
‘என்ன ஆண்டவரே...’ என்று எம்.ஜி.ஆர். வாலியை அழைப்பார். அதேபோல, ‘வாங்க வாத்தியாரே...’ என்று வாலியை சிவாஜி கூப்பிடுவார். அந்த அளவுக்கு வாலிக்கு மரியாதை தந்தார்கள். அந்த அளவுக்கு வாலியின் எழுத்துகள், அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன....
எம்.ஜி.ஆரின் படகோட்டிக்கு வாலிதான் எல்லாப்பாடல்களும்! தொட்டால் பூ மலரும் பாடல், ஆகச்சிறந்த காதல் பாடலாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது; பாடப்படுகிறது.மேலும், எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் பலவும், எம்.ஜி.ஆரின் அரசியல் எதிர்காலத்துக்கு விதைகளாகவும் உரங்களாகவும் இருந்தன. இந்தப் பாடல்களைக் கொண்டே பின்னாளில் நல்ல அறுவடையென மக்கள் ஆதரவு எனும் மகசூல் கிடைத்தது எம்.ஜி.ஆருக்கு
தெய்வத்தாய் படம்தான் எம்ஜிஆருக்காக வாலி எல்லாப்பாடல்களும் எழுதிய முதல் படம். இந்தப் படத்தில் மற்ற பாடல்களும் பெரிதாக ஹிட் ஆனவைதாம் என்றபோதிலும் ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்ற பாடல்தான் எம்ஜிஆர் பிராண்ட் பாடலாக பெரிதும் விரும்பப்பட்டு ரசிக்கப்பட்டு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியது. அதற்கு முன்னரேகூட எம்ஜிஆருக்காக அவருடைய பிராண்ட் பாடலை வாலி எழுதியிருந்தபோதும் மிக மிக அதிகமாக சிலாகிக்கப்பட்ட பாடலாக இதைத்தான் சொல்லவேண்டும். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றால் அந்த மூன்றெழுத்து என்ன என்ற விவாதம் சாமான்ய மக்களிடையே எல்லாம் நடந்தது. ‘கடமை அது கடமை’ என்றே பாடல் பதில் சொன்னபோதும், கொள்கை என்று சிலர் அர்த்தம் கற்பித்தனர். இல்லை, திமுக என்பதைத்தான் எம்ஜிஆர் இப்படிப் பாடியிருக்கிறார் என்றனர் சிலர். எம்ஜிஆர் அண்ணாவைத்தான் சொல்கிறார் என்றனர் சிலர். ‘தமிழ்’ என்றனர் சிலர். எம்ஜிஆரைக் கொண்டாடிய ரசிகர்கள் அந்த மூன்றெழுத்து எம்ஜிஆர் என்றனர். இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க அந்த மூன்றெழுத்து என்ன என்பதற்குத் தன்னுடைய பாணியில் விளக்கம் சொன்னார் சோ.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாடுகிறாரே எம்ஜிஆர் அந்த மூன்றெழுத்து என்ன? என்பது சோவிடம் கேட்கப்பட்ட கேள்வி.
‘அந்த மூன்றெழுத்து மூக்கு’- என்பது சோ சொன்ன பதில்....
ரசிகர்களின் மனதில் என்றென்றும் வாழ்பவர் எம்ஜிஆர்
அந்த மூன்றெழூத்து. அர்த்தம்புரிந்து
m.g.r. .மூன்றெழூத்து...✌
மூச்சி... மூன்றெழூத்து..
அண்ணா...மூன்றெழூத்து..
அர்த்தம் ....
கடமை..கண்ணியம்...கட்டுப்பாடு
இதுதான்..தலைவரின்.கொள்கை............
-
சத்துணவு திட்டம் கவர்ச்சிகர திட்டம் அல்ல தமிழக குழந்தைகளின் மீது எம்ஜிஆர் வைத்திருந்த பாசத்தின் அடையாளம்.
#மதிய உணவு திட்டத்தில் போடப்படும் உணவை குழந்தைகள் சாப்பிட முடியாமல் #குப்பையில் கொட்டுகிறார்கள் என்று கல்வி அமைச்சர் #அரங்கநாயகம் எம்ஜிஆரிடம் சொல்ல #அய்யய்யோ சாப்பாட நிருத்திடாதீங்க என பதட்டத்துடன். #சாப்பாட்டை பள்ளிகளிலேயே சுடச்சுட சமைத்துபோட்டால் என்ன என்று கேட்க்கிறார்.. #நம்மகிட்ட சமையல் தெரிந்த ஆட்கள் அதிகம் இல்லை,நிதியும் நம்மிடம் இல்லை திட்டம்
சாத்தியமில்லை என்கிறார்கள்.
அதிகாரிகள்..
#எம்ஜிஆர் விடுவதாக இல்லை. ஒருதிட்டத்தை தயார் பண்ணுங்க என்று #திரு.அரங்கநாயகத்திடம் உத்தரவிட ஏற்கனவே கோவையை சேர்ந்த #பேராசிரியை ஒருவர்கொடுத்த குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய நியூட்ரிஷியன் புஃட் என்கிற பைல் இருக்கு என்கிற செய்தி சொல்லப்பட, எம்ஜிஆர் அந்த பைலை கேட்டு அதை படித்தபிறகு
#அந்த அம்மாவை கூப்பிடுங்க என உத்தவிட
#கோவையை சேர்ந்த #ராஜம்மாள் தேவதாஸ் #மனையியல் கல்லாரியில் வேலை பார்த்தவங்களை அழைத்து நீங்க இருந்து திட்டத்தை நடைமுறை படுத்துங்க என்று அவரை திட்டத்தில் இணையச்செய்தார்கள்.
#அவங்க கொடுத்த ப்ராஜக்டின் தலைப்பான ""நியூட்ரிஷியன் புஃட் " ஐ #சத்துணவாக மொழிமாற்றம் செய்தவர் எம்ஜிஆர்.
தமிழக #குழந்தைகளின் மீது எம்ஜிஆருக்கு இருந்த #பாசத்தாலும், #பசியின் கொடுமையை அனுபவித்தவர் வேகமாக நடைமுறைப்படுத்தினார்.
#சத்துணவு திட்டத்திற்கு இந்திராகாந்தியின் #மத்தியஅரசு பணம் ஒதுக்க மறுத்தது. அத்துடன்
#ஆர்.பி.ஐ தமிழ்நாட்டு அரசு வங்கிகளில் வாங்கிய #ஓ.டி யின் தொகைக்கு கட்டுப்பாடு விதித்தது. அதை செய்தது #பிரனாப் முகர்ஜி.
#ஏழைக்குழந்தைகளின் வயிறு நிரம்பி மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு போவதை கொச்சை படுத்தின
#தமிழகத்தின் எதிர்கட்சிகள் ..
யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை குழந்தைகளின் மகிழ்ச்சி முக்கியம் என தனது திரையுலக #நட்ப்பை பயன்படுத்தி தமிழகத்தில் பல இடங்களில் #நட்சத்திர இரவுகளை நடத்தி #சத்துணவிற்காக நிதி திரட்டி வெற்றிகரமாக குழந்தைகளின் நலன் முக்கியம் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
#நடிகராக இருந்த காலங்களில் மற்றவர்களுக்கு #கொடுத்து பழக்கப்பட்ட அவர் தமிழக குழந்தைகளுக்காக தன்னை சந்தித்தவர்களிடமெல்லாம் சத்துணவு திட்டத்தை சிறப்பாக செய்ய உதவி செய்யுங்கள் என மகிழ்ச்சியாக
#கையேந்த தொடங்கினார் என்பதுதான் சத்துணவின் வரலாறு..
#சத்துணவு என்பது கவர்ச்சி திட்டமல்ல அது அவரது #ஆன்மா சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் இடம்.
#சத்துணவை சாப்பிட்ட குழந்தைகளின் வளர்ச்சி இந்தியாவில் மற்ற மாநில #குழந்தைகளைவிட ஒரு மடங்கு கூடுதலாக இருந்த தால் 3 வருடங்களுக்குப்பிறகு #சத்துணவு திட்டத்தை இந்திய அரசு ஒரு திட்டமாக ஒத்துக்கொண்டது.
#சத்துணவு திட்டத்தால் ஒரு லட்சம் பேர் வேலைவாய்பின் மூலம்...........
-
மக்கள் திலகத்தின் படங்களை பார்க்கும்போது கிடைக்கும் பேரின்பம் .
படத்தின் தலைப்பு -எளிமையாக , இனிமையாக இருக்கும் .
கதா பாத்திரங்களின் பெயர்கள் தூய தமிழில் இருக்கும் .
மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் பெரும்பாலும் '' வெற்றி'' என்ற வார்த்தையுடன்
தோன்றுவார் .
படத்தில் மிகவும் கண்ணியமாக பேசி நடிப்பார் .
எதிரிகளிடமும் முதலில் மரியாதை தந்து திருந்த வாய்ப்பு தருவார் .
வன்முறை காட்சிகள் அறவே இருக்காது .
தத்துவ பாடல்கள்
கொள்கை பாடல்கள்
காதல் பாடல்கள்
ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்திருப்பார் .
சண்டை காட்சிகள் கேட்கவே வேண்டாம் .
காதல் - வீரம் - கொள்கை பிடிப்பு - சமுதாய சீர்திருத்தம் - என்றெல்லாம் சம விகித்ததில் கலந்து
ஒரு ரசிகனை சிந்திக்க வைத்து , சிரித்த முகத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்
விதத்தில் படங்களை மக்களுக்கு தந்தவர் மக்கள் திலகம் .
மொத்தத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்
நல்ல பொழுது போக்கு சித்திரம்
இனியமையான பாடல்கள்
சீர் திருத்த கருத்துக்கள்
புதுமையான காட்சிகள்
மக்களின் மனதில் நிரந்தர கதாநாயகனாக என்றென்றும் குடியிருக்கும்
''புரட்சி தலைவர் எம்ஜிஆர் ''.படங்கள் என்றால் அது மிகையல்ல...........
-
#அதான் #எம்ஜிஆர்
பட்டுக்கோட்டை குமாரவேல் என்பவர் சென்னை வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வானொலிக்காக நாடகக் கதை வசனத்தை எழுதுபவர்...இவர் எழுதிய 1000 க்கும் மேற்பட்ட நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.
ஒரு முறை அவருக்கு போன் கால் வந்தது...அதில்...
"நான் எம்ஜிஆர் பேசறேன்" ன்னு சொல்ல, யாரோ தமாஷ் பண்றாங்கன்னு நினைத்து, 'சாரி, நான் இப்ப ரெகார்டிங்ல இருக்கேன், அப்புறமா பேசுங்கனன்னு" சொன்னதும், "சரி, நீங்க ஃப்ரீயானதும் என் செக்ரட்டரி கிட்டப் பேசுங்க" என்று சொல்லி போனை வைத்தார் முதல்வர் எம்ஜிஆர்...
உடனே குமாரவேலுவுக்கு டவுட். உடனே ராமாவரத்துக்கு போன் பண்ணினதும், நிஜமாகவே எம்ஜிஆர் தான் பேசியிருக்கார்னு தெரிஞ்சுது. மனுஷன் பதறிட்டார்.
அடுத்த நாள் நேரில் சென்றார் குமாரவேல்...
எம்ஜிஆர் அவரை வரவேற்று, "ஒண்ணுமில்லே...! நேத்து ரேடியோவுல உங்க நாடகம் கேட்டேன்...
"ஒரு நல்ல ஆட்சி எப்படி இருக்கணுங்கிற கருத்துள்ள நாடகம் அது. என்னை க்ராஸ் செக் பண்ணிக்க ரொம்ப உபயோகமாக இருந்தது. அதான் உங்களைப் பாராட்டிடலாம்னு கூப்பிட்டேன்..." என்றாராம் எம்ஜிஆர்.
ஆச்சரியத்தில் வாயடைத்து சிலையா நின்னுட்டார் குமாரவேல்...
இந்த கண்ணியமும் பெருந்தன்மையும் வேறு யாருக்கு வரும்...???...
-
மக்கள் திலகத்தை கௌரவித்த உலகின் முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனம்!
https://www.thaaii.com/?p=43329
ரோட்டரி ஃபால் ஹாரிஸ் அங்கீகாரம் (PAUL HARRIS FELLOW)
உலகில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ரோட்டரி அமைப்பு.
1905 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் அமெரிக்காவில் சிக்காகோ நகரில் பால் ஹாரிஸ் மற்றும் அவருடைய மூன்று நண்பர்களும் இணைந்து இந்த அமைப்பைத் தொடங்கினர்.
கிராமச் சூழ்நிலையில் வளர்ந்த பால் அவர்களுக்கு சிக்காகோ நகரத்தின் நெரிசல், பரபரப்பான வாழ்க்கை சலிப்படைய செய்தது.
நல்ல நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி நட்புறவாடலை பெருக்கிக்கொள்ள இவ்வமைப்பைத் தொடங்கினார்.
காலப்போக்கில் ரோட்டரி பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
இன்றைக்கு உலகம் முழுக்க 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 34 ஆயிரம் ரோட்டரி சங்கங்கள், 12 இலட்சம் ரொட்டேரியன்கள் என ஒரு பெரிய குடும்பமாக தங்கள் பகுதியில் மற்றும் உலகின் பிற பகுதியில் உள்ள சமூகத்தினர் மேம்பாட்டிற்காக திட்ட பணிகளைச் செய்து வருகிறார்கள்.
உலக வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளாக பல வகையான சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி இருந்தாலும் ரோட்டரி அமைப்பின் இரு மாபெரும் சாதனைகள் என்று சொன்னால் இரண்டாம் உலகப்போரின் இறுதியில் அய்க்கிய நாட்டு சபை அமைப்பதற்கு தங்கள் பங்கினை அளித்தது மற்றும் உலகத்தில் போலியோ என்ற கொடிய நோயை அழிப்பதற்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டதும் ஆகும்.
ரோட்டரி அமைப்பு தொடங்கி 12 ஆண்டுகள் கழித்துதான் ரோட்டரி அறக்கட்டளை நிறுவப்பட்டது.
இன்றைக்கு உலக அரங்கில் நம்பகத் தன்மையும் நலப்பணிகள் செயல்படுத்துவதில் முன்னணியிலும் உள்ள அறக்கட்டளைகளில்* ரோட்டரி பன்னாட்டு அறக்கட்டளை உன்னத இடத்தில் உள்ளது.
உலகிலுள்ள பல இலட்சக்கணக்கான ரோட்டரி உறுப்பினர்களும், சமூக நலப் பணிகளில் ரோட்டரியோடு இணைந்து செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் பெரும் நிறுவனங்களும் இந்த அறக்கட்டளைக்கு நிதி வழங்கி வருகின்றன.
எண்ணற்ற அத்தகைய நிறுவனங்களில் இரண்டு உதாரணங்கள், பில்கேட்ஸ் அவர்களின் மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் பிர்லா நிறுவனம். (இதற்கு மிக முக்கிய காரணம் குழுமத்தைச் சார்ந்த ராஜேஸ்வரி பிர்லா ஆவார்கள்).
ரோட்டரி உறுப்பினர்கள் மட்டுமின்றி* இவ்வமைப்பபில் இல்லாதவர்களும், ஆயிரம் அமெரிக்க டாலர்களை அறக்கட்டளைக்கு அளிக்கும்போது அவர்களை “பால் ஹாரிஸ் தகையாளர்” என்று அங்கீகரித்து கௌரவிக்கிறது. சான்றிதழும், பதக்கமும் அளிக்கப்படுகிறது.
கொடையாளிகள் யார் பெயரை குறிப்பிடுகிறார்களோ அவர்கள் பெயரில் அங்கீகாரத்தை பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை அளிக்கிறது.
கொடையாளிகள் தனி நபராகவோ, ரோட்டரி சங்கமாகவோ அல்லது ரோட்டரி மாவட்டமாகவோ இருக்கலாம். அவர்கள் தக்கார் பெயர்களைப் பரிந்துரைக்கலாம்.
ரோட்டரியைச் சார்ந்த கொடையாளர்கள், பல நேரங்களில், அத்தகைய அங்கீகாரத்தை சமூகத்தில் பல அரும் பணிகளை செய்துவரும் மாமனிதர்கள், தங்கள் மனம் கவர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகள் என அலங்கரித்து அழகுப் பார்த்துள்ளனர்.
உலக அளவில் ‘பால் ஹாரிஸ் தகையாளர்’ விருது வழங்கப்பட்ட சில முக்கிய நபர்கள் மேனாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி காட்டர், மேனாள் ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின், அமெரிக்க விண்வெளி வீரர் ஜேம்ஸ் லோவல், பன்னாட்டு ஐக்கிய நாட்டுக் கூட்டுச் சபையின் மேனாள் பொதுச் செயலாளர் ஜாவீர் பெரேஸ் தே க்யூலர் மற்றும் போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்த ஜோன்ஸ் ஸ்டாக் என பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எண்பதுகளின் தொடக்கத்தில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார்.
படிக்கும் மாணவர்கள் பசி காரணமாக பள்ளிக்கு வராமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு வேளையாவது அவர்களுக்கு நல்ல உணவு கிடைக்கட்டும் என்கின்ற உன்னத எண்ணத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டத்தை கொண்டுவந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் உள்ள பாரம்பரியமிக்க ரோட்டரி சங்கம் அவருக்கு ‘பால் ஹாரிஸ் தகையாளர்’ என்கிற அங்கீகாரம் அளித்து கௌரவித்தது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வழங்கப்பட்ட அதற்கான சான்றிதழை அவருடைய வாரிசுதாரரான பெயரன் குமார் ராஜேந்திரன் அவர்கள் அதனை பத்திரமாக வைத்துள்ளார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் அருங்காட்சியகத்தில் இச்சான்றிதழ் பொது மக்கள் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.
குமார் அவர்கள் என் இனிய நண்பரும் அன்புத் தம்பியும் ஆவார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவரை நன்கு அறிவேன். அவர்கள் குடும்பம் முழுவதுமே ரோட்டரி அமைப்பிலே தங்களை இணைத்துக் கொண்டுள்ளது.
குமாரும் அவரது அன்புச் சகோதரி செல்வியும் எங்கள் சென்னை வடக்கு ரோட்டரி சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
கோ.*ஒளிவண்ணன்
மேனாள்* ஆளுநர்
ரோட்டரி மாவட்டம் 3232...
-
படங்களில் தந்த நம்பிக்கை !
எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் போய் வாழ்வதாகக் காட்சிகள் இருக்கும், அவர் ரிக்க்ஷா ஓட்டுவார். கைவண்டி இழுப்பார், ஆனாலும் உழைப்பால் பிறகு படிப்படியாக உயர்வது போலவே காட்டுவார், அது ஏழை மக்களுக்கு ‘நம்மாலும் வாழ்வில் உயர முடியும்’ என்கிற நம்பிக்கையை விதைப்பதாக அமையும்.
அதுமட்டுமல்ல, கறுப்பு நிற மனிதன் எவ்விதத் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துவது போன்ற பாடல்களைப் பாடுவார் அவர்.
''உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன
உடல் மட்டுமே கறுப்பு - அவர்
உதிரம் என்றும் சிவப்பு''
என்று பாடும்போது, கறுப்பு மனிதனின் இதயத்தில் நிச்சயம் ஒரு துணிவு பிறக்கும்.
''ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தெவன் என்று போற்றுவோம்''
''ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே''
என்றெல்லாம் பரந்துபட்ட கருத்துக்களை
முழக்கமிடுவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதினாலும் சரி.
கண்ணதாசன் எழுதினாலும் சரி.
மருதகாசி எழுதினாலும், வாலி எழுதினாலும் சரி.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அவருடைய கொள்கையைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகளாகவே அது அமையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
''கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று எம்.ஜி.ஆர். பாடும் அந்த காட்சியில் மகாத்மா காந்தி படம் காட்டப்படும், பொழுதுபோக்குச் சினிமா தானே மக்களை மகிழ்விக்கத்தானே பாடல்கள் என்று எண்ணாமல், அதிலும் ஒரு வாழ்வியல் நெறியை வகுத்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
சமுதாய ஒற்றுமை, பொதுவுடைமைக் கொள்கை, கூட்டுறவே நாட்டுயர்வு, போன்ற கருத்துக்களை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சொல்லியது போல், வேறு யாரும் எளிமையாகவும், அழுத்தம் திருத்த-மாகவும் கூறியதில்லை என்றே சொல்லலாம்.
(வெரித்தாஸ் வானொலியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் ‘தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து... )
எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம் :
''காதல், வீரம், பண்பு, மனிதநேயம் போன்றவற்றை எம்.ஜி.ஆர். கையாண்டவிதம் தனிச்சிறப்பு உடையது, இயல்பான குணங்களாக அவருக்கு இவை பொருந்தி நின்றன. நடிக்கிறார் என்கிற உணர்வை ஏற்படுத்தாமல், அந்த பாத்திரமாகவே அவரை எண்ண வைத்தன. மக்கள் அவர்மீது ஒரு வித மோகம் கொண்டு நேசித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை'' என்கிறார் எழுத்தாளர் கவுதம் நீலாம்பரன்.
......... Thanks...
நன்றி : தினமலர்] .........
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள்*ஒளிபரப்பான விவரம்*
---------------------------------------------------------------------------------------------------------------------
13/07/20 -தமிழ் மீடியா டிவி - காலை 10 மணி - என் அண்ணன்*
* * * * * * * *எம்.எம்.டிவி* *-* பிற்பகல் 2 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * *சன் லைஃப் - மாலை 4 மணி* - தனிப்பிறவி*
* * * * * * * *ஜெயாமூவிஸ் - இரவு 10 மணி - குலேபகாவலி*
* * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி -விவசாயி*
14/07/20 - சன் லைஃப் - காலை 11 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -தாயின் மடியில்*
* * * * * * * தமிழ் மீடியா டிவி - காலை 10 மணி - அடிமைப்பெண்*
* * * * * * *கிங் டிவி* * * *-பிற்பகல் 2 மணி* - அடிமைப்பெண்*
* * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி -ராமன் தேடிய சீதை*
15/07/20- மெகா 24 டிவி - காலை 9 மணி - தர்மம் தலை காக்கும்*
* * * * * * * *மூன் டிவி* - இரவு 8 மணி - கன்னித்தாய்*
* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -* பாசம்*
16/07/20* பூட்டோ டிவி - காலை 9 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*
* * * * * * * தமிழ் மீடியா டிவி - பிற்பகல் 2 மணி -* மகாதேவி*
* * * * * * * சித்திரம் டிவி* - பிற்பகல் 3 மணி - அபிமன்யு*
* * * * * * *ஜெயா டிவி* - இரவு 9 மணி - சிரித்து வாழ வேண்டும்*
* * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - இதய வீணை*
* * * * * * பாலிமர் டிவி - இரவு 11 மணி - வேட்டைக்காரன்*
17/07/20* *சன் லைஃப்* -காலை 11 மணி -நான் ஏன் பிறந்தேன்**
* * * * * * * * மெகா 24 டிவி* - பிற்பகல் 2.30 மணி - ராஜராஜன்*
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின்*டிவியில்*திரு.துர ை பாரதி*30/06/20 அன்று சொன்ன*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களை அன்றைக்கு பார்த்திருந்த ரசிகர்களாக இருந்தவர்கள் சத்திய சாட்சியாக* இன்றைக்கும் பார்க்கும் ரசிகர்கள்** இந்த கொரோனா என்கிற கொடிய நோய் அச்சுறுத்தும் காலத்தில் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் படங்களில் 100க்கு 60% எம்.ஜி.ஆர். படங்களாகத்தான் இருக்கிறது .போட்டி போட்டுக் கொண்டு, ஒவ்வொரு சேனலும் தேடி தேடி கண்டுபிடித்து எம்.ஜி.ஆர். படங்களை* ஒளிபரப்பும் நிலைதான் இருக்கிறது . அத்தனை படங்களையும் அவரது ரசிகர்கள் /பக்தர்கள் பார்த்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .என்பது அவரது கடின உழைப்பு, திறமை, மக்கள் அவர்மீது வைத்திருந்த அன்பு ஆகியவற்றிற்கு சாட்சியாக இருக்கிறது ..
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான் வாழும் காலத்தில் வள்ளலாக மட்டும் இருந்ததில்லை .ஈகை, பிறர் மீது உள்ள அக்கறை கொண்ட சமூக நல ஈடுபாடு*சமூக ஈடுபாடு என்பது என்ன பிறர் மீதுள்ள அக்கறைதான் . பிறர் மீது எப்போதும் அக்கறை கொண்டிருந்தார் என்பது மிக முக்கியத்துவம்* வாய்ந்த ஒரு குணம் .*அந்த குணம்தான் இவ்வளவு பேரை அவரது அன்பின்பால்** ஈர்க்க செய்தது .அந்த ஈர்ப்பு என்பது எல்லோரும் செய்யமுடியும் . எல்லோராலும் செய்து காட்ட முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக திகழ்ந்தார் .
மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் தங்கள்மீது பிறர் அக்கறை கொள்ள வேண்டும் என்பது .சக மனிதன் மீது அக்கறை இல்லாதவர்கள்தான் அலட்சியம் காட்டுவார்கள் ஆணவம், அகந்தை காட்டுவார்கள் . தங்களுடைய சாதாரண அந்த அதிகபட்ச ஆறடி உயரத்திற்கு விஸ்வரூபம் எடுத்து***வியப்பு காட்டுவார்கள்* இப்படிப்பட்ட மனிதர்கள் இடையே , ஒரு மகோன்னதமான மனிதராக எம்.ஜி.ஆர். திகழ காரணம் அவர் பிற உயிர்கள் மீதும், மனிதர்கள் மீதும் காட்டிய அளவில்லா அன்பு, அக்கறை ஆகியவைதான் .
வேட்டைக்காரன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பள்ளத்தில் 10க்கு மேற்பட்ட பாம்புகள் நெளிய, மேலே உள்ள* ஒரு சிறிய குன்றின்மீது இருந்து வில்லனுக்கு டூப்பாக நடிக்கும் ஸ்டண்ட் நடிகர் குதிக்க வேண்டும் . கீழே பள்ளத்தில் வாய்கள் தைக்கப்பட்டு உள்ள நிலையில் பாம்புகள் நெளிய வேண்டும் .அதன்மீது குன்றில் இருந்து விழுந்து அவர் புரள வேண்டும். இதுதான் காட்சி .அந்த காட்சிக்கு தயாராகும்படி ஸ்டண்ட் நடிகரை தயாரிப்பாளர் தேவர் கேட்டுக் கொள்கிறார் . ஆனால் அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். அந்த ஸ்டண்ட் நடிகரை அழைத்து நீங்கள் குதிக்கும்போது* கவனமாக குதிக்க வேண்டும் . கால்கள் பிசகிவிடக் கூடாது* அதே சமயத்தில் நீங்கள் விழும்போது அந்த பாம்புகள் மீது தவறி விழுந்து அவை செத்துவிடக் கூடாது ஆகவே கவனமாக இருங்கள்.வேண்டுமானால் கீழே மெத்தை போட சொல்லட்டுமா என்று கேட்டார் .அதெல்லாம் வேண்டாம். படப்பிடிப்பு மிகவும் தாமதமாகிவிட்டது . சீக்கிரம் காட்சியை படமாக்க வேண்டும் என்று தேவர் அவசரப்படுத்துகிறார் .தேவரின் அவசரத்தை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தாமல் ,எந்த அசம்பாதவிதமும் நடைபெற்று விடக் கூடாது, அந்த வாயற்ற ஜீவன்களுக்கு எந்த ஆபத்தும் நிகழக்கூடாது என்று மீண்டும் மீண்டும் எச்சரித்து ,கூடவே இருந்து அந்த காட்சியை மிக கவனமாக, பாதுகாப்பாக படமாக்கும் வரை கண்காணித்தார் .முதலில் காட்சியை படமாக்க* அவசரப்படுத்திய தேவர் , எம்.ஜி.ஆரின் பொறுமை,கவனிப்பு, பாம்புகள், ஸ்டண்ட் நடிகர் மீது செலுத்திய தனிப்பட்ட அக்கறை அவர்களின் பாதுகாப்பு ஆகியன குறித்து ,படமாக்கிய பின்பு*எம்.ஜி.ஆரை பெரிதும் பாராட்டினார் .
1980பொது தேர்தலில் பிரச்சாரம் செய்ய எம்.ஜி.ஆர். சுற்றுப்பயணம் செல்கிறார் .எப்போதும் அவருக்கு பாதுகாப்பாக செல்லும் பாதுகாவலர்கள், உதவியாளர்கள்*கூட செல்கிறார்கள். அவர்களுக்குத்தான் தெரியும் . எந்த இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் . எம்.ஜி.ஆரின் திறந்த வெளி வேன் செல்லும்போது,தொப்பியை தட்டிவிடாமல், மேலே கட்டியுள்ள கட்சி தோரணங்களை தூக்கி விடவேண்டும்*எந்த இடத்தில மக்கள் கூட்டமாக வரும்போது அவர்களை எப்படி தடுத்து நிறுத்த வேண்டும் . பிறகு அவர்களை விலக்க வேண்டும் யாரை தலைவரிடம் நெருங்க அனுமதிக்க வேண்டும் என்பதெல்லாம் போய் கொண்டிருக்கும்போது ,திருச்சியில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு விடுதியில் தங்குகிறார் . மறுநாள் காலையில் மதுரைக்கு புறப்பட வேண்டும் .அப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக* இருந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பாக இருந்த காவல்துறை அதிகாரிகளும்,மாவட்ட ஆட்சியரோ, அரசு அதிகாரிகளும் ,அவரது பாதுகாவலர்கள், உதவியாளர்களை சட்டை செய்யவில்லை .அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில வேறு சில நபர்களை தங்க வைத்து விட்டு , சற்று தூரத்தில் உள்ள வேறு விடுதியில் அவர்களை தங்க வைத்தனர் .மறுநாள் காலையில் எம்.ஜி.ஆர். எழுந்து குளித்துவிட்டு பிரச்சாரத்திற்கு புறப்பட தயாராகி விடுகிறார் .* வேன்* புறப்பட்டுவிட்டது . ஆனால் உதவியாளர்கள் வேறு காரில்*பயணிக்கிறார்கள் .அவர்கள் எம்.ஜி.ஆர். காரை நெருங்கமுடியவில்லை** வேன்* சுமார் 20கி.மீ. சென்றதும் உதவியாளர்கள் உடன் வரவில்லை என்று அறிந்ததும்*என்ன செய்வது என்று யோசித்தார் .காரணம் அதிகாரிகள் செய்த குளறுபடியால் ஏற்பட்ட குழப்பம் . எம்.ஜி.ஆர். அவர்களை தன் அருகிலேயே தங்க வைக்க வேண்டும் என்பது திட்டம். அதிகாரிகளின் குளறுபடியால் அவர்கள் பின்தங்கி விட்டு தாமதமாக வந்து கொண்டிருக்கிறார்கள் .
*உதவியாளர்களை காணவில்லை .அவர்கள் எங்கே போனார்கள் என்று காவல்துறை அதிகாரிகளிடம் எம்.ஜி.ஆர். கேட்கிறார் .அவர்கள் சற்று அயர்ந்து தூங்கிவிட்டார்கள் . சற்று தாமதமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று பதில் அளித்தனர் .அப்படி இருக்காது* சரி பரவாயில்லை ,* அவர்கள் வரட்டும் என்று சொல்லி ,வேனை சாலையில் ஒரு மரத்தடியில்* நிறுத்த வைத்து ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து இளைப்பாறினார் . அவர்கள் வந்தபிறகு நாம் பயணத்தை தொடரலாம் என்று அதிகாரிகளிடம் கூறுகிறார் எம்.ஜி.ஆர். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வந்து விடுகிறார்கள் .உதவியாளர்கள் வந்ததும் வேனில் ஏற சொல்லி ,பயணித்து பிரச்சாரத்தை முடிக்கிறார் . பிரச்சாரத்தை முடித்தபிறகு தங்கும் விடுதிக்கு வந்த பிறகு ,அவர்களிடம் ஏன் காலையில் தாமதமாக புறப்பட்டு வந்தீர்கள் என்று கேட்கிறார் .* அதிகாரிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு பதிலாக வேறு சிலருக்கு கொடுத்துவிட்டு சற்று தொலைவில் உள்ள விடுதியில் எங்களை தங்க வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் .அதனால்தான் தாமதமாகிவிட்டது என்றனர்* விவரங்கள் அறிந்த எம்.ஜி.ஆர். உடனே,மாவட்ட ஆட்சியரை அழைத்து ,உதவியாளர்களை பற்றி உங்களுக்கு தெரியாது .இவர்கள் என்னுடைய நிழலாக எத்தனையோ ஆண்டுகள்*பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் .என் தேவை என்ன .எனக்கு என்ன பாதுகாப்பு கொடுக்க வேண்டும்* எந்த வகையில் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் இவர்களுக்குத்தான் தெரியும்.* இவையெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை . ஆகவே அவர்கள் எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும் என்பது போல கூடுதல் சலுகைகள் அளித்து உதவ வேண்டும்*இது எனது வேண்டுகோள் என்று சொன்னார் .பின்பு உதவியாளர்களிடம் தனியாக நீங்கள் எப்போதும் உங்களுடைய மிடுக்கையோ,கோபத்தையோ அதிகாரிகளிடம் காண்பிக்க கூடாது .நாம் இருக்க போவது இந்த ஆட்சியில் 5 ஆண்டுகள்தான் .ஆனால் அவர்களோ அரசு பணியில் 58 வயது வரை நீடிப்பார்கள் .அவர்களை நாம் மரியாதை குறைவாகவோ,கவன குறைவாகவோ நடத்தக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுரை சொன்னார் .
தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர். ஒருபுறம், சிவாஜி கணேசன் ஒரு புறமாக*சென்று கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர் .வாடிப்பட்டி அருகில் ஒரு வளைவில் திரும்பும்போது பொதுமக்கள் எம்.ஜி.ஆரின் காரை வழி மறித்து , அழுது கொண்டு நிற்கிறார்கள் . எம்.ஜி.ஆர். என்ன விஷயம் .என்ன நடந்தது என்று விசாரிக்க, சற்று நேரத்திற்கு முன்பு ,நடிகர் சிவாஜி கணேசன் காரும்* அவருடன் சில கார்களும் சென்றன . அதில்* ஒரு கார் சிறுவன் ஒருவன் மீது மோதி அவன் இறந்துவிட்டான் .ஆனால் ஒருவரும் அதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்கள் என்று புலம்புகிறார்கள் .எம்.ஜி.ஆர்.*காரில் இருந்து இறங்கி, அந்த சிறுவனின் பெற்றோர்களை அழைத்து, ஏதோ கவனக்குறைவாக விபத்து நடந்துள்ளது தயவுசெய்து இதை பெரிதுபடுத்தவேண்டாம்* அவர்களை தகுந்தவகையில் சந்தித்து எச்சரிக்கிறேன் என்று சமாதானம் சொல்லி தன்* கையில் இருந்து ரூ.25,000/- அந்த பெற்றோர்களுக்கு கொடுத்து உதவினார் .உங்கள் மகன் இழப்பிற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் .அதை ஈடு செய்ய முடியாது .அவர்களை சந்தித்து,இனிமேல் இந்த மாதிரி சம்பவம் நடக்காமல் இருக்கும்படி* மிகவும் கவனமாக பயணிக்கும்படி எச்சரிக்கிறேன் என்று கூறி விடைபெற்றார்.
அன்று இரவு தங்கும் இடத்திற்கு சென்றபிறகு ,சிவாஜி கணேசன் தங்கும் விடுதிக்கு போன் செய்து நடந்த விவரங்களை எம்.ஜி.ஆர். சோகத்துடன் சொல்கிறார் .நான் எப்படியோ ஒருவழியாக அவர்களிடம் பேசி, சமாதானம் சொல்லி, நிதி அளித்து* சமாளித்துவிட்டேன் .ஆகவே நீங்களும் சரி, உங்களுடன் வருபவர்களும் சரி , பயணிக்கும்போது, மிகவும், கவனமாக, எச்சரிக்கையாக*இருக்கவேண்டும் . பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் நாம் விளைவிக்காமல்**பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறினார் .பிறர் மீது அவர் கொண்ட*அக்கறைதான் இன்றும் அவரை இந்த உன்னதமான, உயரமான இடத்தில நிலை*நிறுத்தி வைத்துள்ளது .அதுதான் எம்.ஜி.ஆர்.*
இனி மற்ற தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலிபரப்பான* பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------------------
1.மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றது -தாயை காத்த தனயன்*
2.காலத்தை வென்றவன் நீ. காவியமானவன் நீ - அடிமைப்பெண்*
3.எம்.ஜி.ஆர்.- நம்பியார் உரையாடல் - தொழிலாளி*
4.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க*
5.நான் யார் தெரியுமா* - கொடுத்து வைத்தவள்*
6.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*
7.நம்நாடு படத்தில் எம்.ஜி.ஆர்.*
8.செல்லக்கிளியே மெல்ல பேசு -பெற்றால்தான் பிள்ளையா*
9.எம்.ஜி.ஆர்.-சிவாஜி கணேசன் உரையாடல் -கூண்டுக்கிளி*
-
இந்திய சினிமாவின் கலை*களஞ்சியம்*
-------------------------------------------------------------
உலக புகழ் பெற்ற* ஆக்ஸ்போர்டு* யுனிவர்சிட்டி பிரஸ் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டுடன்* இணைந்து வெளியிட்டுள்ள இந்திய* சினிமாவின்* *கலைக்களஞ்சியம்* என்ற நூலின் அட்டை முகப்பில் சத்யஜித்ரே , நர்கீஸ் , அமிதாப் பச்சன் , தேவ் ஆனந்த் ,ஷபனா* ஆஸ்மி , ஆகியோரோடு தென்னக கலைஞர்களில்*எம்.ஜி.ஆரின் படம் மட்டுமே பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஆயிரம் ருபாய்
-
மக்கள் திலகம் ஒருவருக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு
அவர் நடித்த படங்கள் எல்லாமே
"எம் ஜி ஆர் படம்"
என்பதே.
இந்தச் சிறப்பு உலகில் வேறு எந்த நடிகருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
மற்றய நடிகர்கள் யார் நடித்தாலும் சில படங்கள் நடிகர் பெயரையும் சில படங்கள் நடிகையின் பெயரையும் சில படங்கள் இயக்குனர் பெயரையும் சில படங்கள் தயாரிப்பு நிறுவனம் பெயரையும் தான் சொல்லும் மக்களும் அப்படித்தான் சொல்வார்கள்.
ஆனால் மக்கள் திலகம் எந்த நிறுவனத் தயாரிப்பில் நடித்தாலும் யார் அதை இயக்கினாலும் யார் அவருடன் நடித்தாலும் அது
"எம் ஜி ஆர் படம்தான்".........