Dear Mohan,Quote:
Originally Posted by rangan_08
Which channel did the telecast? At what time? Did you listen to it fully and carefully? Especially when he spoke about the Internet thing which I have Italicized?
Regards
Printable View
Dear Mohan,Quote:
Originally Posted by rangan_08
Which channel did the telecast? At what time? Did you listen to it fully and carefully? Especially when he spoke about the Internet thing which I have Italicized?
Regards
I think they telecasted TM on 21st. during the first week of the old movies program.Quote:
Originally Posted by crajkumar_be
Dear Murali Sir,Quote:
Originally Posted by Murali Srinivas
It's a new channel by the name AMN TV. It was during their news hour they showed this clipping i.e. on 30/03/08 by around 8 pm.
The news read that the meeting was attended by various members and also by Akila India Sivaji Rasigar Mandra Thalaivar - sorry, I'm not able to identify the person. Mr TV Narayanaswamy who brought out NT's " En Suyasaridhai" was also present.
Mr Ramkumar, with complete grey hair (first time I'm seeing him like this !!) was addressing the group. He said that as an extension of the autobigraphy, some research work on Nadigar Thilagam has begun, which is headed by Mr TVN. He said that the rasigar's support and encouragement was tremendous. ("Internet ல் ஒரு 40, 50 பேர் எப்பவும் பேசிக்கிட்டிருப்பாங்க , அதுவும் அவரைப் பத்தியே பேசிக்கிட்டிருப்பாங்க" ) He didn't mention any particular website.
He also said that they are planning to conduct NT's birthday in a grand manner. After this the topic was changed.
This news came in y'day's DINAKARAN also.
Dear Mohan,
Thanks for the details. Check your PM.
Regards
It was a great pleasure for me to know that a separate website is there for nadigar thilagam on seeing your quote. I went through that and i was so happy to see the abundant inforamtion. Great effort :thumbsup:Quote:
Originally Posted by RAGHAVENDRA
The articles and analysis in this forum are great and i am really amazed by the zeal shown by all. Nadigar Thilagam reverberates through the feeling of all of us.
Dear wrap07,Quote:
Originally Posted by wrap07
Thank you for the compliments. I am happy to read your comments. I shall be more happy if you can send your feedback to the email address given in the web site regarding any suggestion, point out any mistake/error, addition/ omission, etc. as you feel. This would help the site to be perfect in all aspects.
Looking forward to your continued co-operation,
Sincerely,
With regards,
Raghavendran.
www.nadigarthilagam.com
ராகவேந்திரா ஐயா ,முரளி சார்,
நடிகர் திலகத்தின் 80-வது பிறந்த நாளையொட்டி நடிகர் திலகம் சிறப்பு மலர் ஒன்றை வெளியிடும் செய்தியையும் அது குறித்த அறிவிப்பையும் www.nadigarthilagam.com தளத்தில் கண்டேன் .அதில் நடிகர் திலகம் ஆராய்ச்சி மையத்துக்கு நல்ல கட்டுரைகளை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நண்பர் பிரபுராம் அவர்களின் பெரிய தேவர் ஆராய்ச்சி தொடர் இதற்கு முற்றிலும் தகுதியான ஒன்றென நான் கருதுகிறேன் .எனவே அவரின் அனுமதியோடு நாம் அதை அனுப்பி வைக்கலாமே?
Y'day happen to see Virasat, remake of Devar Magan in a private channel (CCC). For those who have seen the extraordinary performances of NT & Kamal and above all, those who have read PR's article, will definitely hate this movie like anything.
It's a very very poor remake in all aspects and its far faaaaaaar below DM. I didn't had the patience to watch it for more than 10 minutes.
I dont mean to degrade anybody's talents, but the roles was not at all apt for the actors - esp. Amrish Puri, in the role of Periya Devar. Ofcourse, the roots are different, but still it doesnt look good. The scene where Periya Devar tells to cancel the train tickets was a joy to watch in DM, but here......jus couldn't compare it. It was like a joke.
Rangan SirQuote:
Originally Posted by rangan_08
NIs have diff. way of showing emotions. Dont underestimate AP. He was a very good actor. You may glorify Sivaji Sir but dont pull down others in the process.
Bill Sir,Quote:
Originally Posted by Billgates
I neither have the habit of glorifying others nor do I degrade them as some of them used to do by posing themselves as genuine fans and passing sarcastic comments. I simply appreciate talents - wherever it is and my comments are genuine.
You can check my previous posts where I would have praised NT's performances in certain films which, according to me was GREAT.
I have admired AP in films like Mr. India, DDLJ etc., But here, I have mentioned only about his perfomance in Virasat. Moreover, when a movie is re-made, comparisons becomes inevitable. In that particular scene which I have mentioned above, his perfomance was totally amateurish & funny according to me.
Unlike others who pass cheap comments on even some of NT' best performances, expressing my views about a "Not upto the mark" perfomance as " Amateurish" & "Funny" is not wrong.
Rangan Sir,
APТs performance was much mellowed. View it as an Agriculturist fm UP or Bihar instead of a Thevar fm Dharmapuri or Thoovalur. You will feel the difference now. IMO, AP did extremely well but we all expect a NT from AP thatТs impossible. Each one have their own style & ways of expression no ?
மோகன் & பில்கேட்ஸ்,
திரியின் பாதை மீண்டும் திசை மாறுவது போல் தெரிகிறது. வேண்டாம்.
அம்ரிஷ்பூரி ஒரு சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கும் நடிகர்திலகத்துக்கும் இங்கே ஒப்பீடு செய்வதைத் தவிர்க்கலாம் என்பது எனது பணிவான எண்ணம்.
роорпЗроЯроорпН роЙроЩрпНроХро│рпН роОрогрпНрогроорпН рооро┐роХ роЪро░ро┐ропро╛ройродрпБ. роиро╛роорпН роОро▓рпНро▓рпЛро░рпБроорпЗ роирпНроорпН роироЯро┐роХро░рпН родро┐ро▓роХродрпНродрпЛроЯрпБ роТрокрпНрокрпНроЯрпНроЯрпБ рооро▒рпНро▒ро╡ро░рпНроХро│рпИ роороЯрпНроЯроорпН родроЯрпНроЯрпБро╡родрпИ родро╛ройрпН роЕроЯро┐ропрпЗройрпН роХрпБро▒ро┐рокрпНрокро┐роЯрпБроХро┐ро▒рпЗройрпН. роЕроорпНро░рпЗро╖рпН рокрпВро░ро┐ роТро░рпБ рооро┐роХ роЪро┐ро▒роирпНрод роироЯро┐роХро░рпН. роЕро╡ро░рпИ роТро░рпБ роХрпЛрооро╛ро│ро┐ рокрпЛро▓ роЪро┐родрпНродро░ро┐рокрпНрокродрпБ родро╡ро▒рпБ.Quote:
Originally Posted by saradhaa_sn
роирогрпНро▒ро┐
டியர் ஜோ,Quote:
Originally Posted by joe
மிக அருமையான யோசனை, நல்ல முடிவு. இதற்கு நிச்சயம் பிரபுராம் சம்மதிப்பார் என்று நம்புகிறேன். பெரிய தேவர் பற்றி அவரே தீர்க்கமாக ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டார். அதை அப்படியே பிரசுரிக்க வேண்டியதுதான். இந்த ஆராய்ச்சிக்கட்டுரை, மலரில் இடம் பெற்றால் அது மலருக்கு மகுடம் சூட்டியது போலிருக்கும் என்பதில் ஐயமில்லை.
Thank You Joe for the suggestion.
This is easily the best film thread in the Hub in terms of content as well as judicious readership. The series was written with you folks in mind and it assumes a lot of context. It assumes that the people are aware of the scenes being discussed and are able to recall to a considerable level of detail what is being discussed. Without it, I realize it may not be as enjoyable. In fact, I am sure, the video links given by you and Sridhar were extremely valuable supplements for those who do not recall the instances so well, leave alone those who have only a vague recollection of the film itself.
This needs to be kept in mind when writing for a general audience.
While I would love to contribute this article to the Special Issue to be brought out in celebration of SivAji's 80th birthday, I have my doubts if it is likely to be suitable in its current form. (It runs to over 16 pages in MS Word !) It needs some editing/rewriting if it were to be suit the demands of the Special Issue. I will definitely do that.
Once again, thank you Joe and saradhaa_sn.
டியர் பிரபுராம்,Quote:
Originally Posted by Prabhu Ram
நீங்கள் சொல்வது ஒப்புக்கொள்ளக்க்குடிய விஷயமாயினும், நீங்கள் தயங்குவதுபோல அந்தப்படத்தின் காட்சிகளை ரசிகர்களின் மனக்கண்ணில் கொண்டு வரவேண்டும் என்பது போன்ற தயக்கங்கள் தேவையில்லை என்பது என் கருத்து. காரணம், இக்கட்டுரை சிவாஜி மலரில் இடம்பெறுகிறது எனும்போது, அம்மலரைப் படிக்கும் எழுபத்தைந்து விழுக்காட்டினர் 'தேவரமகனை' பலமுறை பார்த்து காட்சிவாரியாக கரைத்துக் குடித்தவர்களாகவே இருப்பார்கள். அதுமட்டுமன்றி, இன்றைய தலைமுறையினரிடத்தில் சிவாஜி படங்கள் என்றால் அவர்கள் மனதில் சட்டென தோன்றும் படங்களில் முதலிடம் பெறும் இருபடங்கள் முதல்மரியாதையும், தேவர்மகனும்தான். அந்த அளவுக்கு அவர்கள் அப்படங்களுடன் பரிச்சயமாயுள்ளனர். எனவே உங்களின் கட்டுரை 'மலரில்; இடம்பெறுவது பொருத்தமே என்பது என் கருத்து.
நீங்கள் சொல்லியிருப்பதுபோல மலரில் இடம்பெறத்தக்க அளவில் நீளம் சற்றுக் குறைக்கப்படலாமே தவிர, வெறெந்த தயக்கமும் தேவையில்லை.
I saw the add today ..In singapore ,TM will be on coming friday 11 pm. :DQuote:
Originally Posted by crajkumar_be
தெய்வ மகன் - என் மனதிற்கும் சிந்தைக்கும் மிக நெருக்கமான படம். மீண்டும் பார்த்த போது தோன்றிய சில எண்ணங்களை பதிகிறேன்.
சங்கர் - பணக்கார தந்தை. இயற்கையாகவே அமைந்த விகாரமான முக அமைப்பினால் தனக்கு நேர்ந்த அவமானங்கள்,புறக்கணிப்புகள் தன் மகனுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் ஒரு முடிவினால் கடைசிவரை மன துன்பம் அனுபவிக்கும் ஒரு மனிதன்.
முதல் காட்சி. முகம் தெரியவில்லை என்றாலும் கூட அந்த துடிப்பு, சந்தோஷம், துள்ளல் எல்லாம் தெரியும் அந்த நடையிலேயே. டாக்டரிடம் பேசும் போது உள்ள மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பு, அது ஏமாற்றமாக மாறும்போது தளர்ந்து போகும் அந்த நடை. இரண்டு நடைக்கும் எவ்வளவு வித்யாசம்? குழந்தையை கொல்ல மாட்டேன் என்று மறுக்கும் டாக்டரிடம் தன் தரப்பு நியாயத்தை சொல்வது.[ என்னை உண்மையிலே நேசிக்கறவங்க என் உயிர் நண்பனான நீயும் என் மனைவியும்தான். மத்தவங்க எல்லாம் என் பணத்துக்காக என்னை மதிக்கிறாங்க.]
நண்பன் தான் கொடுத்த பணத்தை தூக்கி எறிந்து விட்டு நட்பு முறிந்து விட்டது என சொன்னவுடன் மௌனமாக வெளியேறுவது, இப்படி முதல் காட்சியில் இளமையாக இருக்கும் போது இரு வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த பாத்திரம் 25 வருடங்களுக்கு பின் ஒரு கம்பீரமான ஆளுமையை வெளிப்படுத்தும்போது நடிகர் திலகம் அதை அழகாக கையாள்வர்.
தனக்கு முன்னால் வளைந்து நெளிந்து நின்று பணம் கேட்கும் மகனிடம் (Just a Lakh and Fifty thousand) கடுமை காட்ட முடியாமல் வரும் சிரிப்பை அடக்கி கொண்டு அவர் காட்டும் expressions ஓஹோ! இதில் இன்னொன்றும் சுட்டி காண்பிக்கப்பட வேண்டியது. நடிப்புதானே என்று சும்மா கிறுக்காமல் செக்-ஐ எழுதுவார். எழுத்தி முடிக்கும் போது மகன் நாற்காலிக்கு பின் பக்கமாக சுற்றி வர அவனை சைடு-ல் திரும்பி பார்த்து விட்டு செக்-ஐ கிராஸ் செய்வார். மகன் பக்கவாட்டில் வருவதும் அவர் திரும்பி பார்ப்பதும் ஒரே டைம்-ல் நடைபெறும். பார்ப்பவர்களுக்கு இரண்டும் வேறு வேறு ஆட்கள் என்றே தோன்றும். மிக சரியாக அந்த timing-ஐ அவரால் மட்டுமே செய்ய முடியும்.
அந்த நீளமான படிக்கட்டில் அந்த தாளக்கட்டு மாறாமல் அவர் இறங்கி வரும் அழகு. மனைவி கோவிலில் பார்த்தது தன் மூத்த மகனாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு டாக்டர் வீட்டிற்கு வருவார். டாக்டர், நண்பனாக பழகாமல் விலகி நின்று பேச, வாய் தவறி ஒருமையில் அழைத்து விட்டு உடனே "Sorry, Dr. ராஜு" என்று style-aga கூறுவது. இறுக்கம் தளர்ந்து விடை பெறும்போது மாடியிலிருந்து ஒலிக்கும் சிதார் இசையை கேட்டு விட்டு அவர் காட்டும் அந்த தவிப்பு, எதையோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தவிப்பது, அதை புரிந்து கொண்டு டாக்டர் " உன் மகனை பார்க்கணுமா?" என்று கேட்க முகமெல்லாம் பூரிப்பாக "ஆமாம்" என்று சொல்லிவிட்டு அதை கேட்க தனக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை உணர்ந்தவராக பேசாமல் வெளியேறுவது. திலக முத்திரைகள்.
இளைய மகனை காதலிக்கும் பெண்ணிடம் கடுமையாக பேசுவது போல பாவனை செய்வது, இளைய மகனின் கல்யாணத்தன்று தன் மனைவிக்கு ஒரு விலை மதிப்பில்லாத பரிசு கொடுக்க போவதாக சொல்வது, இதெல்லாம் அவருக்கு child's play.சுருக்கமாக ஒரு கம்பீர performance.
கண்ணன் மற்றும் விஜய் பற்றி -விரைவில்
அன்புடன்
Dear Murali Sir,
Congrats for having started the next analysis. Deiva Magan is not only your favourite movie, but it is liked and loved by many of us here. Who can forget the "Scarfaced" Shankar, Kannan & Vijai. I'd like to say a few words here, sorry to barge in :)
படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் வரை முகத்தைக் காட்டாமல் அவரின் அங்க அசைவுகள் மூலமே படம நகரும். ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே போகும்.
வீட்டு மாடிப்படிகளில் ஏறும் போது மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் செய்தி கிடைக்கும். சந்தோஷத்தில் பணத்தை வீசிவிட்டு வேகமாக மேலே ஏறிச் செல்வார். பிறகு மருத்துவமனையில் Doctor cum friend தடுத்தும் கேளாமல் ஆர்வத்துடன் குழந்தையை பார்க்கச் செல்வார். In the next shot, ஏமாந்து போய் தளர்ந்த நடையுடன காசுகளை கீழே போட்டபடி வருவார். ஆறுதல் கூற வரும் நண்பனை வெறுப்புடன் தோளை அசைத்து உதறி விடுவார். All this will happen without showing his face !!
குழந்தையை கொன்று விடும்படி டாக்டரிடம் சொல்ல, அவர் மறுத்து விடுவார். Now, for the first time, கேமராவுக்கு நேராக முகத்தைக் காட்டுவார். அடடா, மீண்டும் மீண்டும் பார்த்தாலும் புல்லரிக்கச்செய்யும் காட்சி. One of the best screen introductions for NT, I would say.
" என் முகத்த நல்லா பாரு" என்று சொல்லும் போது அவர் முகத்திலும் குரலிலும் உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும். கண்ணுக்குள் கண்ணீர் வெளியே வராமல் மாயாஜாலம் செய்து கொண்டிருக்கும் - and NT is an expert at doing that - amazing.
பிறகு, " உன்னாலயே என் முகத்த கொஞ்ச நேரத்துக்கு மேல பாக்க முடியலியே" என்று சொல்லும் போது கண்ணீர் முகத்தில் வழிந்தோட ஆரம்பிக்கும். Terrific scene.
Pls carry on Sir !!
மிகச்சரியாக சொன்னீர்கள் மோகன்...Quote:
Originally Posted by rangan_08
மற்ற படங்களில், அவர் எப்போ வருவார், எப்போ வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். ஆனால் இந்தப்படத்தில் வித்தியாசமாக, படத்தின் மிக முதல் காட்சியிலிருந்து அவர் நம் கண்முன்னேயே நடமாடிக்கொண்டு இருப்பார். ஆனால் முகத்தை மட்டும் காட்டாமல். (இத்தனைக்கும் நடுவே டைட்டில் கூட ஓடிமுடிந்துவிடும்). ரசிகர்களில்ன் பிரஷர் ஏறிக்கொண்டே போகும். எப்போது முகத்தைக்காட்டப்போகிறார் என்று. நான் முன்னொருமுறை சொன்னதுபோல, குழந்தையைப்பார்த்துவிட்டு வரும்போது, வாசற்படியில் ஒரு கால் நொடித்து, தங்கக்காசுகளை கீழே போட்டபடியே வரும்போதே கைதட்டல் பறக்க துவங்கி விடும்.
அதிலும், குழந்தையைக்கொன்றுவிடும்படி மேஜரை வற்புறுத்தும் காட்சியில், ஆள்காட்டி விரலை நீட்டி மூன்று முறை உதறும்போது கைதட்டலும் ஆரவாரமும் கரைபுரண்டதென்றால், அதையே மீண்டும் டாக்டர் மேஜரிடம், கண்ணன் செய்யும்போது, ரசிகர்களின் உற்சாகமும் கைதட்டலும் இருமடங்காகும் (கொஞ்சம்கூட எதிர்பாராத ஒற்றுமை அல்லவா?.
முரளி, அருமையானதோர் 'டாப்பிக்'கை துவக்கி விட்டீர்கள். இனி உற்சாக வெள்ளம்தான்
முரளி அய்யா சன் டிவிலெ பார்த்திருப்பாரோ ? தெய்வ மகன்.
பராசக்தி கூட காட்டுகிறார்களோ ?
நன்றி மோகன்- அந்த அழகான வர்ணனைக்கு.
நன்றி சாரதா - வழக்கம் போல் அந்த காட்சியின் ஜீவனை சுட்டி காட்டியதற்கு,
நீங்கள் குறிப்பிட்ட ஸ்டைல்-ஐ கண்ணனை பற்றி எழுதும் போது சொல்லலாம் என நினைத்தேன். அந்த கோபம், ஆள் காட்டி விரலை சுட்டி அந்த வலது காலை நிலத்தில் உதைத்து நெற்றியில் வந்து விழும் அந்த கற்றை முடி குலுங்க குலுங்க, அதிரும் சப்தத்தில் சங்கர் " ராஜு" என்று விளிப்பாரேயானால், மகன் கண்ணன் அதே செயலில் "டாக்டர்" என்று வார்த்தையை மட்டும் மாற்றுவார். சாரதா சொன்னது போல் தியேட்டரில் காத்திருப்பார்கள் கைதட்ட.
"கண்ணனோடு" வருகிறேன்.
அன்புடன்
தெய்வமகன் பற்றி பேசும் போது அப்பா மற்றும் கண்ணன் பாத்திரங்களைப்பற்றித்தான் நாம் எப்பொழுதும் பேசுகிறோம். இதே படத்தில் மற்ற கதாப்பத்திரமான இன்னொரு பிள்ளையைப் பற்றி நாம் அதிகம் பேசுவது இல்லை .. ஏனோ தெரியவில்லை. ஆனால் அந்த கதாப்பத்திரத்தின் நடை உடை பாவனையை கவனித்தால் நமக்கு நடிகர் திலகத்தின் சிறப்பு புரியும். இவன் அம்மா செல்லம் . பணக்காரப்பிள்ளை . எல்லா பணக்காரப்பிள்ளைகளும் திமிராகவும் பலசாலிகளாகவும் இருப்பதில்லை. அதேபோல் தான் இந்த பிள்ளையும். பணம் இருப்பதால் எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும் வேண்டியவற்றை செய்ய அம்மாவிடம் சொல்லி அப்பாவிற்கு தூது விடுதல், அடிப்படையிலேயே கொஞ்சம் மென்மையான சுபாவம் அதாவது நாசூக்காக இருப்பது . ( நகம் கடித்தல் கொஞ்சம் நளினம்) , நுனி நாக்கு ஆங்கிலம் என மேல்தட்டு குடும்பபிள்ளைகளை நம் கண்முன்னே கொண்டுவந்திருப்பார். இது என்னுடைய கருத்தே..
http://www.dailythanthi.com/article....sdate=4/3/2008
சிவாஜிகணேசனின் கடைசி நிமிடங்கள்
உடன் இருந்த தாணு உருக்கமான தகவல்கள்
Thanks R_R.
Tearful reading :(
படிக்கும்போதே கண்கள் கலங்கின. தாணுவின் உருக்கமான தகவல் மனதைப்பிசைந்தது.Quote:
Originally Posted by raaja_rasigan
ராஜா ரசிகன்....
தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி.
ராஜேஷ்,Quote:
Originally Posted by rajeshkrv
நீங்கள் நினைப்பது போல விஜய் பாத்திரம் எப்போதும், யாராலும் ஒதுக்கப்படவில்லை. இன்னும் சொல்லபோனால், மற்ற இரண்டு ரோல்களிலாவது அவரது வழக்கமான நடிப்பு பல இடங்களில் வெளிப்படும். ஆனால் விஜயன் ரோல் முழுக்க முழுக்க புதியதும் ரசிக்கத்தக்க சேஷ்டைகள் கொண்டதாகவும் இருக்கும். குறிப்பாக, 'காதல் மலர்க்கூட்டம் ஒன்று' பாடலில் இடுப்பை அசைத்து வித்தியாசமாக நடக்கும்போதும், அப்பாவிடம் பணம் கேட்குமிடத்திலும் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு கேட்க வேண்டாம்.
'விஜயன்' ரோல் பற்றி முரளி, விவரமாக எழுத இருக்கும்போது, நான் தேவையில்லாமல் இடையில் புகுந்து குட்டையை குழப்ப வேண்டாம் என்று நினைப்பதால், அவர் எழுதியபின்னர் தொடர்கிறேன்.
Joe & Saradha madam..... no need for Thanks!!!!
I will post all good articles about Nadigar Thilagam :)
message from Groucho...
Quote:
Originally Posted by Groucho
Real good news. Welcome back Groucho.. :)Quote:
Originally Posted by NOV
I too have read this in DT, R-R.....very touching. :cry:Quote:
Originally Posted by raaja_rasigan
அடுத்த வாரம் சன் தொலைக்காட்சி திரைப்பட வரிசையில்
ஏப்ரல் 8 - செவ்வாய் - உயர்ந்த மனிதன்
ஏப்ரல் 11 - வெள்ளி - ஊட்டி வரை உறவு
அன்புடன்
தெய்வ மகன் - கண்ணன்
கண்ணன் - பரிதாபத்திற்கு உரிய அதே சமயம் நம் மனதில் ஒரு பிடிப்பு அந்த பாத்திரத்தின் மேல் ஏற்படுத்தக்கூடிய திரைக்கதை அமைப்பு. சிறுவனாக இருக்கும் போதும் ஆரம்பிக்கும் அந்த கோபமும் ஆவேசமும் கடைசி வரை குறையாது வெளிப்படும். தான் அனாதை இல்லை என்று தெரிந்ததும் பாபா (நாகையா) கொடுத்த டைரி-ஐ புரட்டி பார்க்கும் ஆவேசம், மருத்துவமனையில் டாக்டர்-ஐ மிரட்டும் கோபம், தன் தாய் தந்தையரை தெரிந்து கொள்ள எந்த காரியத்தையும் செய்ய தயாராக இருப்பது இவை அந்த கதாபாத்திரத்தை வலுவாக நிலை நிறுத்தும் களங்கள். அவற்றை நடிகர் திலகம் தன் பாணியில் மெருகேற்றியிருப்பார்.
படத்தின் தலைப்பிற்கேற்ப கதாநாயகன் கண்ணன்தான். முதல் இரண்டு காட்சிகளில் சாதாரணமாக வரும் அவர், அனாதை இல்லத்திலிருந்து வெளியேறி கடைத்தெருவில் திருடனிடம் சண்டை இடும் காட்சியிலிருந்து அந்த Body Language அப்படியே மாறும். டாக்டர் வீட்டிற்கு வரும் அவரை பார்த்ததும் அவர் யார் என்று தெரிந்து கொள்ளும் டாக்டர், அவரை தவிர்க்க முயற்சிக்க,கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து ஒரு கட்டத்தில் டாக்டரின் கழுத்தை நெரிப்பார். [என் தாய் தந்தையார் யார்னு தெரிஞ்சுக்க நான் எதையும் செய்ய தயங்க மாட்டேன்]. அதற்கு முன் தான் அந்த காலை உதைத்து, முடிகற்றை முன்னால் வந்து விழ,ஆட்காட்டி விரலை சுட்டி " டாக்டர்" என்று கத்துவது.[ தியேட்டர் அலறும் என்பதை சொல்லவே வேண்டாம்].
பிறகு டாக்டர் வீட்டில் அடைக்கலம். அங்கே மாடியில் எப்போதும் சிதாரும் இசையுமாக இருப்பவர் ஒரு நாள் இரவு சொல்லாமல் கொள்ளாமல் தன் தாய் தந்தையரை பார்க்க வீட்டிற்கு போகிறார்.
முதலில் தாய். படுத்திருக்கும் தாயின் கால்களுக்கு பூக்களை அர்ச்சனை செய்து விட்டு கண்ணீர் துளியை காணிக்கையாய் சிந்தும்போது, தாயன்புக்கு ஏங்கும் ஒரு இளைஞனை கண் முன்னே நிறுத்துவார்.
அடுத்து தம்பி அறை. அதில் நுழைபவர் அங்கே மாட்டியிருக்கும் இளம் பெண்ணின் கவர்ச்சி படத்தை பார்த்து விட்டு ஒரு வெட்கம் கலந்த ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார் (இருட்டாக தெரியும் முகத்தில் அந்த இரண்டு கண்கள் மட்டும் வெளிச்சம் உமிழும்). அடுத்து தம்பியின் சுவரில் மாட்டியிருக்கும் புகைப்படத்தின் அழகை ரசிப்பார்,( மாசு மருவில்லாத கன்னத்தை தன் விரல்களால் தடவும் அழகு).
அடுத்து டேபிளின் மேல் இருக்கும் போட்டோ-வை எடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் அணிந்திருக்கும் முழுக்கை சட்டையின் வலது மணிக்கட்டு பாகத்தை வைத்து துடைக்கும் ஸ்டைல் இருக்கிறதே, சூப்பர். தீடீரென்று தம்பி வந்து விட தன்னை பார்த்து திருடன் என்று சத்தம் போட அவனை அணைத்துக்கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு, சத்தம் கேட்டு அனைவரும் வந்து விட தாய்,தந்தை மற்றும் தம்பியை ஒரு சேர பார்க்கும் அந்த நேரம், அந்த முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்.
அதை டாக்டரிடம் போய் பாட்டாக வெளிப்படுத்தும் விதம். பாடலின் நடுவே வேக வேகமாக படி ஏறிவிட்டு அதே வேகத்தில் இறங்குவார். ஆரவாரம் அலை மோதும் (இதையே 10 வருடம் கழித்து திரிசூலத்திலும் செய்திருப்பார்). ஒவ்வொருவரை பற்றியும் பாடலில் சொல்லும்போது அந்த முகத்தில் வந்து போகும் உணர்ச்சிகள். கை அசைப்புகள். "விதி எனு நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது" எனும்போது அந்த இடது கை மட்டுமே சைகை காட்டும். "தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே" என்ற வரியின்போது காமிரா லோ ஆங்கிளிலிருந்து அவரை பார்க்க இரண்டு கைகளையுமே தலைக்கு மேல் தூக்கி உள்ளங்கைகள் தரையை பார்க்க ஒரு போஸ் கொடுப்பார். கேட்க வேண்டுமா கைதட்டலுக்கு.
அடுத்து தாயை கோவிலில் வைத்து பார்க்கும் காட்சி. தூணுக்கு பின்னால் மறைந்து நின்று பார்க்கும் அந்த கண்கள் அதில் தெரியும் அந்த உணர்ச்சிகள் [ " என் வயிறெல்லாம் என்னவோ செய்யுதே" என்று பண்டரிபாய் சொல்லும் வசனம் படம் பார்க்கும் எல்லோருக்குமே பொருந்தும்).
இதற்கு நடுவில் டாக்டரின் பெண் தன் இசையால் ஈர்க்கப்பட்டு மாடிக்கு வந்து பேச அதுவரை வாழ்க்கையில் அனுபவித்திராத ஒரு உணர்வு - ஒரு பெண்ணின் சிநேகம். அது மனதுக்குள் திறக்கும் ஜன்னல். தன் முகத்தை எங்கே பார்த்துவிடுவாளோ என்று மறைத்து கொண்டு, அவள் சென்றவுடன் ஓடி சென்று அவள் நின்ற அந்த பால்கனி கைப்பிடியை பிடித்து முழங்காலிட்டு அவள் சென்ற திசையையே பார்த்து சிரிப்பாரே, கிளாஸ்.
தந்தை கொடுத்த பிளாங் செக்கை டாக்டர் கொண்டு கொடுக்கும் காட்சியிலும் அந்த பாத்திரத்தின் சிறப்பு தன்மை வெளிப்படும். எனக்கு தெரியாம வெளியே போறே என்று சொல்லும் டாக்டரிடம் " இந்த கிளியை யாரும் பிடிக்கவும் முடியாது! புரிஞ்சிக்கவும் முடியாது" என்பார். அதற்கு டாக்டர் " பிடிக்க முடியாது-னு சொல்லு ஒத்துகிறேன். ஆனால் புரிஞ்சுக்க முடியாது-னு சொல்லாதே! உங்கப்பா உன்னை புரிஞ்சிக்கிட்டார்" என்கிறபோது " என்ன சொல்றீங்க டாக்டர்"-னு கேட்டு விட்டு உடனே அதற்கான பதிலையும் சொல்வார்." கோவிலிலே எங்கம்மாவை பார்த்தேன். எதையுமே கணக்கு போட்டு பார்க்கிற எங்கப்பவோட வியாபார புத்தி இதையும் முடிச்சு போட்டு கண்டு பிடிச்சிருக்கும்" என்பார்.
டாக்டர் " என்ன கண்ணா இன்னிக்கு நல்ல டிரஸ் போட்டிருக்கே"
கண்ணன் " உடல் தான் வெள்ளையா இல்லை. உடையாவது வெள்ளையாக இருக்கட்டுமே-னு தான்" .
அழகா இல்லாத ஆண்களை பெண்கள் விரும்புவார்களா என்று கேட்கும் கண்ணனிடம் டாக்டர் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒதேல்லோ நாடகத்தை பற்றி சொல்ல, அவர் கையை பற்றி கொண்டிருக்கும் கண்ணன் இரும்பு பிடியாய் இறுக்க, வலி தாங்காமல் கையை உருவிக்கொண்டு " ஆமாம், இதெல்லாம் நீ ஏன் கேட்கிறே?" என்று வினவ, கண்ணன் " மண்ணை தோண்டி தங்கம் இருக்கா வைரம் இருக்கா-னு தேடற மாதிரி இதயங்களை தோண்டி அன்பு இருக்கா பாசம் இருக்கா-னு பார்க்க தோணுது டாக்டர்" என்று சொல்லிவிட்டு சிரிக்கும் அந்த சிரிப்பு!
தந்தையை போலவே வேறு ஒரு குணாதிசியமும் காட்டுவார். தன்னை சந்திக்க வரும் சங்கரிடம் "பையன்-னு தெரிஞ்சுமா சுட்டிங்க" ? என டாக்டர் கேட்க இல்லை என்பதை ஒரு முக சுளிவிலே காட்டுவார் தந்தை. அதே முகபாவத்தை தந்தையை பார்க்க வரும் கண்ணனும் வெளிப்படுத்துவார். முதல் குழந்தை ஆண் குழந்தைனா பெத்தவங்க ரொம்ப அன்பு செலுத்துவாங்களாமே என்று மகன் கேட்க, உண்மைதான் என்று தந்தை சொல்ல முன்பு தந்தை காண்பித்த அதே முகபாவத்தை காண்பித்து "இல்லை பொய்" என்பார்.
ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த ஸ்டைல், அந்த முக பாவம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. சுருக்கமாக சொன்னால் ஒரு அசாதாரண நடிப்பு, நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.
அடுத்து விஜய்
அன்புடன்
Dear Murali Sir, " Ullam kavarndha Kannan".. :)
When Kannan meets the doctor for the first time and comes to know about his parents and the reason why he was rejected, the following dialogues & performance will be simply superb.
" Doctor, enna pethavanga enna vendamnu sonnadukku vera eadho kaaranam irrukkumnu ninaichen, aana, Poohh.., Doctor, idhudhaana ???..."
Superb scene....pls continue sir.
டியர் முரளி,
தெய்வமகன் கண்ணனைப்பற்றிய ஆய்வு அருமை. மூன்றுமே ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்றாலும், தய் தந்தை இருந்தும் அனாதைபோல பாசத்துக்கு ஏங்கும் கண்ணன் பாத்திரம் நம்மை கொஞ்சம் அதிகமாகவே கலங்க வைக்கும்.
கண்ணனைப்பற்றி நீங்கள் எழுதும்போது, தந்தையிடம் செக்கை திருப்பிக்கொடுக்கச் செல்லுமிடத்தில் பேசும் ஆழமான வசனங்களைக் குறிப்பிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். குறிப்பாக அந்த இடத்தில் என்னைக்கவர்ந்த வசனம்....
"அப்பா, என்னுடைய இந்த அவலட்சணத்துக்கு காரணமே நீங்கதான்னு தெரிஞ்சும் ஏம்ப்பா என்னை வெறுத்தீங்க?. உங்க அப்பாவும் உங்களை அப்படித்தான் வெறுத்தாரா?... இல்லை.. சத்தியமா இல்லை. ஏன்னா, உங்க அப்பா ஏழை. அவருக்கு இதயம் இருந்தது, அதுல இரக்கம் இருந்தது. ஆனா எங்க அப்பா பணக்காரர். அவர்கிட்டே இரும்புபெட்டி மட்டும்தான் இருக்கு".
பலே ஆருர்தாஸ்...
Dear Mr.Murali
I have not seen Deiva Magan fully - only in bits and pieces. Am enjoying your posts nevertheless.
Thanks Prabhu.
Mohan, கண்ணன் கதாபாத்திரத்தின் சிறப்பை சொல்ல வேண்டுமென்றால் அவர் வரும் எல்லா காட்சிகளையும் வசனங்களையும் எழுத வேண்டும். அது கடினம். அதனால் தான் சில காட்சிகளை சுருக்க வேண்டியதாகிவிட்டது.
சாரதா,
சரியான கேள்வி. நீங்கள் கவனித்தால் சங்கர் பற்றி எழுதும்போதும் அந்த காட்சியை நான் குறிப்பிடவில்லை. அதை தவிர்த்துதான் எழுதினேன். விஜய் முடியட்டும்.
அன்புடன்
I dont want to miss this movie, one of my favorite. Somehow the movie name has the similarity to my physique :wink:Quote:
Originally Posted by Murali Srinivas
Btw Good going Murali sir...! :)
Y'day in Vijay TV, "Rasigan Express" programme, some of the fans of various actors were invited to the studio.
One Ms. Girija, an ardent and die-hard fan of NT was introduced. She is above 50 and has never been married. She watches only NT films and has never seen any other films, other TV programs etc. She has got a huge collection of NT posters, clippings, VCD's, DVD's and other info's related to NT. She used to vist NT regularly on his birthday and never once did she reveal to him about her collections and craze. Her daily routine work is to keep watching NT films!!!
Amazing lady.
I was shell shocked while seeing this :shock: :omg: I also spoke with Murli sir who was in chennai hubbers' meet and touched on this. As usual, Murli sir knew about Ms.Girija already and he started giving more information also. :D (eppadi sir ithellam :) )Quote:
Originally Posted by rangan_08
Ippadi ellam fans irukaangala :o Ms.Girija also says that she doesn't watch serials and any other films. :oops:
Die-Hard fan ! :)