Fine, thanks! :D
Printable View
Fine, thanks! :D
இல்லா இடத்தில் இருக்காது இருக்கும்
இடத்தில் இல்லை இருக்காது.
:D
old
இருக்கிறது என்றிருந்து ஏமாறும் இன்னலினும்
இல்லை என்றிருத்தல் நலமாம்.
இல்லா இடுக்கண் இருப்பதாய் நினைந்தால்
இருக்கும் இன்பம் இல்லாதாகும்.
-
கிறுக்கன்
இனிமையாய் இருக்கிறது. இரு கருத்துக்கு இடமில்லை!
ppavalamani.blogspot.com
மிரட்டலுடன் மின்னலாய் ஒரு வலை பதிவு...
எங்களை போன்றோர்க்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள் வாசித்து போக.திடுக்கிடும் உண்மை போல.
-
கிறுக்கன்
:lol:
சபை வேண்டி சண்டைகாரர் ஆயினும்
சுமக்கும் சிரிப்பு புன்சிரிப்பு.
-
கிறுக்கன்
மெத்த சரியாக சொன்னீர்கள்! வலைப்பூவில் மேலும் கொஞ்சம் பூக்கள் மலர்ந்துள்ளன! :)
புரியாபோதும் பிறர் சிரிக்க நாம்
சிரித்தல் கட்டாயச் சிரிப்பு.
-
கிறுக்கன்
பலவிதமான சிரிப்பு!
k :-)
awesome awesome....thank u for writing about siripu ;-)
tell me ...are you keeping a record of all your writings???? I sincerly hope...as all these are treasures...
இல்லாதோர் இயலாமையை இருப்போர் இகழ்ந்து
எள்ளல் ஏளனச் சிரிப்பு.
-
கிறுக்கன்
Quote:
Originally Posted by kirukan
another one for siripu... :thumbsup: :thumbsup: thank u K
வாழ்வில் வெற்றி விடியலின் விடை
உழைப்பில்லா சோம்பலின் விடை.
-
கிறுக்கன்
வந்ததே நெட் வந்ததே ஜீபோம்பா யார் போட்டதோ!!!!!
:thumbsup: nga k!
குழந்தையின் குறைகண்டு குரையாது நிறையை
தட்டிக்கொடின் குறை குறையும்.
-
கிறுக்கன்
:yes:
Quote:
Originally Posted by kirukan
true nga K..... :clap:
எதிரியை அறிதல் எளிது நல்
நண்பனை அறிதல் அரிது.
-
கிறுக்கன்
சிறு பிழைக்கண்டு பகை போற்றாது
பிழை பொறுத்தல் பண்பு.
-
கிறுக்கன்
aamaam!
இளமை திமிரில்
இச்சை கொண்டு
இல்லம் மறந்து
இசைந்து செல்ல
இரயில் ஆனாலும்
என்னவன் விரும்ப
என்னை முழுதாய்
விருந்தாய் படைக்க
விழித்து பார்த்தால்
வீதியில் நான்
நாயகனும் இல்லை
நகையும் இல்லை
எச்சில் இலையாய்
விழுந்த என்னில்
மிச்சம் பார்த்து
எச்சிலை நாய்கள்
நித்தம் நித்தம்
என்னை சுகிக்க
உயிர் வேண்டி
நானும் சகிக்க
வாடிய பின்னும்
தான் இன்புற
என்னை இம்சித்து
ரசித்த சுற்றம்
உணவின்றி
உயிர் மறித்து
உடல் எரித்த
பின் தான் விட்டது
என்னை....
நாட்டில் எண்ணிக்கை
கூடியதால் தான்
காட்டில் விலங்குகளின்
எண்ணிக்கை குறைந்தனவோ...
(காதலால் கற்பிழந்து தன்னிலை இழந்து கல்லறை செல்லும் வரை மனித மிருகங்களால் களங்கபட்ட மஹாவிறுக்கு...
நேசித்த பாவத்தால்
வேசி ஆனவள்
)
பாதித்ததால் பதித்தேன்
இப்பதிவு
உங்களை பாதித்தால்
என்னை மன்னிக்கவும்...
-
கிறுக்கன்
:cry:
விரும்பி முகம் அரும்பி விருந்தோம்பின்
வயிறொடு நிறையும் மனம் .
-
கிறுக்கன்
பரிவுடன் பாலூட்டினால் வளர்ப்பவன் பந்தங்களையும்
பாதுகாக்கும் பைரவனின் பாசம்.
-
கிறுக்கன்
நல்ல நன்றி நவிலல் நாய்க்கு!
சண்டை சமாதானத்துடன் சகிப்பும் சேர்ந்து
சுரக்கும் சகோதர சிநேகம்.
-
கிறுக்கன்
:D
கண்டிப்பு இல்லாது கரிசனம் காட்டும்
ஆணிடம் அன்னையின் அன்பு.
-
கிறுக்கன்
கண்டிப்பு தண்டிப்புடன் பண்பை போதிக்கும்
பெண்ணிடம் பெற்றவளின் பாசம்.
-
கிறுக்கன்
so true K.... :thumbsup:Quote:
Originally Posted by kirukan
Quote:
Originally Posted by kirukan
True two liners....K...... :clap: :clap:
Thanks k..;-)
முதுகில் சுமந்தாய்
முழுதாய் பணிந்தாய்
என்னை காக்க
உன்னை நொந்தாய்
தேய்ந்து போனாலும்
ஓய்ந்து போகாது
வேதனை மறைத்து
வேகம் சென்றாய்
வெய்யில் மழையில்
வெளியில் நின்றாலும்
வார்த்தை பேசாது
பயணம் தொடர்ந்தாய்
என்னையும் உன்னையும்
பிரித்தவன் என்றாலும்
வஞ்சம் மறந்து
நெஞ்சம் தருவாய்
என்னருமை பைக்கே...
Dedicated to lost bike
TN-07
M-8141
Hero honda splender
-
கிறுக்கன்
:(
ohhh no.....sorry to hear it K.....antha thukathilum nalla manasilirunthu varum vaarthaigaley
"vanjam maranthu nenjam tharuvaai""... :clap:
மும்மையெண்ணி முடங்காது மறுமையெண்ணி மருளாது
இம்மையை ஏற்றலே நன்மை.
-
கிறுக்கன்
very true !!! :thumbsup:
பெற்ற பிறந்த பெற பிணைந்த
உறவில் மட்டுமே உரிமை.
-
கிறுக்கன்
எதிலும் எதிர்பார்த்து ஏங்கும் உறவு
என்றும் இணையா பிளவு.
-
கிறுக்கன்
:yes:
hello nga K.......... :thumbsup: :thumbsup: