vasu,
Thanks for a great song. There is concurrence in our taste about our Ravi.
Printable View
vasu,
Thanks for a great song. There is concurrence in our taste about our Ravi.
thanks go
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. பாராட்டு ஆனால் திட்டாதே என்ற அறிவுரை. சிறுமை கண்டு பொங்கவில்லையெனில் ,பாராட்டுகளுக்கு என்ன மகிமை?
நீங்கள் ஒரு washing Machine /Fridge /TV வாங்கி அது உங்களின் தேவைகளை பூர்த்தி செய்யாவிட்டால் திட்டும் உரிமை/தட்டி கேட்கும் உரிமை/வெளியில் சொல்லும் உரிமை உண்டா இல்லையா? அப்போது உங்களுடன் வந்து ஒருவர், அந்த கம்பெனி முதலாளி நல்லவர் ,அவர் அநாதை இல்லத்திற்கு நன்கொடை கொடுத்தார், அவர் சம்பத்த பட்ட தொழிலை வாழ வைக்கிறார், அவர் வீட்டுக்கு நான் போயிருந்த போது காப்பி கொடுத்தார்,மற்றவர்களுக்கு பிடித்ததால் தானே கம்பெனி நன்றாக நடந்தது என்றெல்லாம் பாதிக்க பட்டவரிடம் சொன்னால் ,போடா வேலையை பார்த்து கொண்டு. என்று தொடர்வீர்களா மாட்டீர்களா?
சினிமா என்பது கொஞ்சம் சர்வாதிகாரமானது. உன்னத தரம் கொண்ட சிவந்த மண் போன்ற படங்களுக்கும் , குப்பை படங்களுக்கும் அதே டிக்கெட் விலை(மற்ற பொருள்கள் எல்லாமே தரம் மற்றும் model சார்ந்து விலை வேறு படும்.). நம் நேர விரயம் சமமானது. நம்மை இருட்டறையில் அடைத்து பேச்சுரிமை-செயலுரிமை தடுக்க படுகிறது. consumer court போக முடியாது.
இந்த நிலையில் பிடிக்காவிட்டால் பார்க்காதே என்ற லாஜிக். பார்த்த பிறகுதானே தெரியும் பிடித்தமா இல்லையா என்று. விமரிசனம் ஒவ்வொன்று ஒவ்வொரு விதம்.நம்ப முடியாது.
நம்மை விட கீழான ஆட்கள் திறமையும் இன்றி ,குப்பைகளை கொடுத்தால் ,அதனை வயிற்றெரிச்சல் தீர விமரிசிக்கும் உரிமை மட்டுமே நம்மிடம் மிஞ்சியுள்ளது.பொறுப்புணர்வு இன்றி,திறமைகளையும் வளர்த்து கொள்ளாமல்,அசிங்கமாக நம்மை படுத்திய ,creativity இல்லாமல் அரசு வேலை போல பார்த்து கொண்டிருந்தவர்களை ,தன்னுடைய சராசரி மனித நேய பண்புகளை பத்திரிகை மூலம் blow -up பண்ணி(ஒரு பொறியாளர்,டாக்டர், நிர்வாகி இதே பணியை செய்தால் இந்த வசதி உள்ளதா) காலத்தை ஒட்டிய பேர்வழிகளை விமர்சனம் கூடவா செய்ய உரிமை இல்லை?
நான் வீணாக்கிய பணம்,நேரம் இவைகளை என்னை தடுக்கும் நபர்கள் வட்டியோடு கணக்கு பார்த்து கொடுக்கட்டும்.
Not many are aware that the second 'film' of Ravichandran is 'Kali Kovil' (1964). He made a cameo appearance as a spectator in a confined crowd for the song 'Deiviyiar Iruvar Muruganukku' by Rajshri. His film which was produced by MS Viswanathan was also directed by Sreedhar and released after 'KathalikkaNeramillai'.
There were some unconfirmed press reports that Ravichandran got himself converted to Islam just to take Sheela as his second wife as a way to subvert the opposition from his legally married wife's side. To boost his sagging image he became involved with the DMK party which was ruling then. Perhaps he thought that he can be given the support like MGR when the latter left DMK to form the ADMK. But it never happened and he was already on the way out due to lack of new film projects.
The irony is that when he was first introduced he was given the nomenclature 'Malaysia Ravichandran' but subsequently he chose to ignore his country of origin, Malaysia. Although born in Tiruchi he was bred in Kuala Lumpur. This is in stark contrast to Malaysia Vasudevan who died with this nomenclature and who was also equally popular like him.
In 1968 he was a guest of honor at the now defunct Hindustan Theatre in Kuala Lumpur, Malaysia for the second evening show of his film 'Thanga Thambi'. He went on stage to say how proud he was to be a Malaysian etc. He even showed a scar in his body incurred during the fight scene of this very film, Thanga Thambi.
The second appearance was in the Dewan Bahasa Dan Pustaka Hall, Kuala Lumpur where he, along with his new wife Sheela, Gemini Ganesh, Rajshri, Suruli Rajan and a host of others appeared for a cultural and variety show. He even spoke Malay impromptu much to the delight of the Malaysian audience.
Malaysians were very proud of him but for reasons best known to himself he chose to be aloof from them. When his brother, Bairoji Narayanan died in the early 2000s Ravichandran was conspicuously absent for the funeral. Bairoji Narayanan was a veteran radio and television broadcaster and dramatist and was very popular in Malaysia.
Malaysians were touched when he reminisced about his you her days in Kuala Lumpur on the Koffee with Anu programme just before he died.
In this week's Kumudham, his wife Vimala recalled an interesting incident when shown a rare photograph of some film veterans sitting with her late husband. She was taken to the studio for the shooting of the film 'Andru Kanda Mugam' by her husband after their wedding. The heroine was Jayalalitha. A cameraman seeing the newly-married couple penned a short verse and showed it to Kaviarasar Kannadhasan. Without any ego Kannadhasan was delighted and said that he will complete it as a song for this film. That song is 'Kan Padaithaan Unnaipol Kaanbatharkku'.
She also recalled that at the wedding reception producers like TR Ramana gave cash advances as gift tokens for their new film projects like Kumari Penn, Andru Kanda Mugambigai etc. and booked her husband to play the leading roles. This is something unheard of!
Thanks Mr.Mahendra Raj for your nice contribution. It is not kali kovil but kalai kovil. Since Director Sridhar was his mentor,he made a cameo appearance. According to my knowledge,he never distanced himself from Malaysians.
There is no movie called andru kanda mugambigai. It is andru kanda mugam and it is not ramanna Film. Ramanna gave advance for Kumari pen.
இவருடைய மயிலாடும் பாறை என்ற படம் ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்ததாக நினைவு. ரிலீஸ் ஆனதா இலையா? இந்த படத்தை நான் பார்த்ததில்லை.
கோபால் சார்,
1970-ல் துவங்கப்பட்ட 'மயிலாடும் பாறை' திரைப்படம் பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு, ஒருவழியாக 1978-ல் 'மயிலாடும் பாறை மர்மம்' என்ற பெயர் தாங்கி வெளியானது. படத்தில் ரவி உள்பட அனைத்து நடிக நடிகையரின் தோற்றமும் காட்சிக்கு காட்சி வித்தியாசப்படும். வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த (என்னைபோன்ற) ஒருசிலர் மட்டுமே பார்த்தோம். படம் வந்த வேகத்தில் தியேட்டரைக் காலி செய்தது. படம் சுமாராக இருந்தது. அப்படம் பற்றிய சில குறிப்புகள் இத்திரியின் துவக்கப் பக்கங்களில் ராகவேந்தர், சாரதா ஆகியோரால் தரப்பட்டுள்ளது. தங்களின் அபார நினைவாற்றலுக்கு பாராட்டுக்கள்.
Gopal,
First and foremost I must thank you for pointing out the typo errors. Using the iPad was the cause as it self-assumes words which you never intended and if you are not careful enough to check the text it is carried. Of course, what I typed was Kalai Kovil and Andru Kanda Mugam and not as printed. Yes, TR Ramana gave the advance for Kumari Penn at Ravichandran's wedding reception.
Unlike Malaysia Vasudevan, Ravichandran was not seen in social functions in Malaysia since his foray into films. That was a sad fact. But that does not mean he distance himself from Malaysians. The opposite is true. Many Malaysians have taken the liberty to pay him courtesy calls in his residence in Chennai and they were full of praises of his hospitality. He even used to share the familiar locations in Kuala Lumpur with them.
I still remember an occasion when I met him in Kuala Lumpir way back in 1974 with the late actor Surilirajan. I invited Ravichandran along with Surulirjan for a drink at a nearby shop. He immediately turned to Suruli and proudly announced that such impromptu invitations are the Malaysian way of life. He was proud to be a Malaysian he told the bewildered Surulirajan. Need I say more about Ravichandran's allegiance to his country where he was bred? But the fact remained that he did away with the 'Malaysia' nomenclature prefixed to his name in 1965 itself.
Thank you Mr.Mahendra Raj. It depends on family tradition to carry the name of the native with their name. When I interracted with Ravi, he even mocked at attaching titles with the name. (Same Views as Ajith) This could be the reason. Keep contributing regularly to this thread. I have lot of Malaysian friends. I am comfortable with Bahasa Malay.
கலைக்கு சூரியன் உண்டு ,நட்சத்திரங்கள் ஏராளம்,
நிலவாக வந்தவன் நீ ஒருவனே,
தமிழர்கள் சராசரி வயதை நாற்பதிலிருந்து ஒரே நாளில்
இருபதாக்கிய விந்தை வாலிபனே,
உன்னுடன் சேர்ந்து எங்கள் மனமும் குதித்து பயிற்சி செய்து
இளமையாகி இளைத்து வண்ணமாக்கியது வாழ்வை.
கவலைகள் எங்கள் வீட்டு ஆணி சுவர்களில் , மகிழ்வு
மட்டுமே நீ வருகை தந்த கொட்டகையில்
எங்களுக்கு பாடம் சொல்ல ஆசிரியர்கள் மட்டுமே
இருந்த போது ,விடுமுறை நண்பன் நீ.
காதலிக்க நேரமில்லை என்ற முகவரி அட்டையுடன் வந்து,
நேரமிருந்த எங்களை காதலிக்க வைத்தாய்,
எங்கள் இதய கமலங்களில் குமரி பெண்கள்,அதே கண்கள்,
துள்ளி ஓடும் புள்ளி மான்களின் மீது,
நீ தண்ணீரை மட்டுமே குடித்திருந்தால், உன் நலத்தோடு,
எங்கள் நலமும் இன்னும் நீடித்திருக்குமே.
நீ தொலைத்தது உன் வாழ்வை மட்டுமா? எங்கள் இன்ப
நிலவு கண்டு மகிழ்ந்த மாலைகளையும்தான்.
Gopal,
It is indeed very heartening to note that you have fraternised with Ravichandran and that you have many friends in Malaysia motto forget the knowledge you have in Malay. Hope you too would share with us.
I still remember vividly the first show of 'Kaathalikka Neramillai' in Kuala Lumpur. As is the norm those days, the premier show will be a Saturday midnight screening for all new films. Kaathalikka Neramillai was shown likewise in the Coliseum theatre somewhere in the middle part of 1964. Ironically, the main cut-out of Ravichandran was not a still from this film. But an ordinary 'Kuala Lumpur Raman' look! Yes, it was a color cut-out of him wearing a turtle-necked pullover with spectacles (not sunglass) an natural hair. Underneath his cut-out were the boldly inscribed words 'A former student of St. Anthony's Secondary English School, Pudu Road, Kuala Lumpur'. He looked every inch like a Malaysian secondary school student in that cut-out. Perhaps it was a deliberate ploy by the local film distributors to relate him to the Malaysian audience.
Most of the patrons were youngsters from both sexes who were all eager to see their own kind on the big screen and that too in color which was a luxury then. Of course, the other curious feature was Director Sreedhar who had all along gave serious-type family melodramas and this is his first venture into a full-length comedy. The crowd cheered when Ravi's name appeared in the credits especially with the prefix 'Malaysia'. The crowd gave a thunderous clap when he made his first appearance. It went into a delirium when he mimed and danced for the song 'Viswanathan Velai Vendum'. When the film ended all the patrons came out laughing or smiling with full knowledge that their own kind from Malaysia has made it big in Kodambakkam. The scenario was similar when it was screened on normal days and it enjoyed a long run at this theatre. It was the same in other towns and in rural towns . Such long runs were mainly films of MGR and Shivaji prior to this.
Many male Indian babies born around the time of release of 'Kaathalikka Neramillai' were christened 'Ravichandran' or names having 'Ravi' or words to that effect. Such was the craze for Ravichandran at that point of time in Malaysia and Singapore.
Thanks Mr.Mahendra Raj for sharing your valuable experience on Ravichandran with Specific informations on reception to his Movies in his own den Malaysia and Singapore.
அன்று கண்ட முகம் (கல்கி கதை என்று நினைக்கிறேன்),நாலும் தெரிந்தவன் போன்றவை சற்றே மாறு பட்ட சுவாரஸ்யமான ரவி பாணியில் விலகிய படங்கள்.
பாலசந்தர் ,ரவியை வைத்து எடுப்பதாக அறிவிப்பு வெளிவந்த படத்தின் பெயர் மூன்று முடிச்சு. (வேறு கதை ).பிறகு என்ன காரணத்தாலோ கை விட பட்டது.
வாடா, மச்சான்.... வாடா....
http://youtu.be/lwgAxxfx2TI
கண் படைத்தான் உன்னைக் காண்பதற்கு ....
http://youtu.be/Lw5ES4nTNjI
ரோல்டு கோல்டு மேனி நீ
அல்வாப் பேச்சுக் காரி
கேலியென்ன கிண்டலென்ன
கேட்டுப் பாரு கேள்வி..
http://youtu.be/g2peaYaBFi0
பெட்டியிலே போட்டடைத்த
பெட்டைக் கோழி....
மூன்றெழுத்து...
டி.கே. ராமமூர்த்தி
டி.எம்.எஸ்., பி.சுசீலா
டி.ஆர். ராமண்ணா
http://youtu.be/0G3FInK3DtA
ராகவேந்தர் சார்,
சூப்பர் வீடியோ selection . ரொம்ப தேங்க்ஸ் தலைவா.
யாராவது தரவேற்றி உதவி செய்யுங்கள், ப்ளீஸ்.
1) வா இந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே...... (என் + வாசு விருப்பம்)
2)தங்க சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு (என்+சாரதி விருப்பம்)
ஓடும் நதியின் அத்தனை பாடல்களுமே என் விருப்பம்..
அப்ப add பண்ணிக்குங்க + ராகவேந்தர் சார்.
சும்மாவா பின்னே... இசை மெல்லிசை மன்னராச்சே...
Correct. I remembered to have seen the film. Ravi acted with senior heroines also. pennukku pennu ennadi intha padamthaane?
செல்வியின் செல்வன் திரைப்படத்தில் ரவிக்கு ஒரு சூப்பர் ஹிட் சோலோ உண்டு. நான் உங்களைக் கேட்கின்றேன். இப்படத்தின் பாடல்களை எழுதியவர் திருச்சி தியாகராஜன். இப்படத்திற்கும் குருதட்சணை படத்திற்குமாக இரு படங்களுக்கு தமிழில் புகழேந்தி இசையமைத்துள்ளார்.
நான் உங்களைக் கேட்கின்றேன் பாடலைக் கேட்பதற்கான இணைப்பு இதோ
http://www.raaga.com/player4/?id=205...20815407586142
செல்வியின் செல்வன் திரைப்படத்திலிருந்து மற்றொரு இனிமையான பாடல். பி.சுசீலா சோலோ. மிகப் பெரும்பாலானோர் கேட்டிருக்க மாட்டார்கள். படத்தில் இடம் பெற்றதோடு சரி. எப்போதாவது அத்தி பூத்தாற்போல இலங்கை வானொலியில் ஒலித்த பாடல். அதே போல் அபூர்வமாக ஆல் இந்தியா ரேடியோவிலும் ஒலித்த பாடல்.
வந்தால் இந்த நேரம் வா வா...
http://music.cooltoad.com/music/song.php?id=364290
நன்றி தலைவா. வந்தால் இந்த நேரம் நிறைய கேட்டிருக்கிறேன். ஓடும் நதி கிடைக்கவில்லையா? ஜீவ நாடி படத்தின் அருவி மகள் நல்ல பாட்டு.
அனைத்துலக 1960 களின் thriller பட வரிசையில் நமது அதே கண்கள், நடிகர்திலகத்தின் புதிய பறவை ஆகிய இரண்டு படங்களே இடம் பெற்று பெருமை படுத்த பட்டுள்ளது*
List of thriller films of the 1960s
3
The 3rd Voice
A
Adhey Kangal
Arabesque (film)
Assassin (1969 film)
Assassination in Rome
B
The Big Cube
The Black Fox
Blind Corner
Blood and Black Lace
Blowup
Les Bricoleurs
The Bride Wore Black
Bullitt
C
Cape Fear (1962 film)
Cash on Demand
The Chairman
Charade (1963 film)
Children of the Damned
The Collector (1965 film)
Color Me Dead
Countdown (1968 film)
Cul-de-sac (1966 film)
D
Dead Body on Broadway
Dead Ringer (1964 film)
Death and Diamonds (film)
Death in the Red Jaguar
The Defector (film)
Dementia 13
Diabolically Yours
Diamond Safari (1966 film)
Doppelgänger (1969 film)
Double Face
Duniya (1968 film)
E
Eve (1968 film)
Experiment in Terror
F
Faces in the Dark
Fail-Safe (1964 film)
Fanatic (1965 film)
Five Minutes to Live
Footsteps In the Snow
For Eyes Only
Funeral in Berlin (film)
The Fur Collar
G
Games (film)
Gibraltar (1964 film)
The Girl Who Knew Too Much (1963 film)
H
Hands of a Stranger
Hide and Seek (1964 film)
Homicidal
Hotel der toten Gäste
The House in Marsh Road
The Human Vapor
Hush… Hush, Sweet Charlotte
I
Intaquam
The Ipcress File (film)
L
La morte ha fatto l'uovo
Lady in a Cage
Lady in Cement
The Liquidator (1965 film)
M
Machine Gun McCain
Madigan
Man of Violence
The Man Who Finally Died
The Manchurian Candidate (1962 film)
Manhattan Night of Murder
The Maniac
Maroc 7
Matango
Midnight Lace
The Mind Benders (film)
Murderers Club of Brooklyn
My Love and I
N
The Nanny (1965 film)
Night Must Fall (1964 film)
Night of Violence
Night Tide
Night Train to Paris
Nightmare (1964 film)
O
Omicidio per appuntamento
Orgasmo
P
The Painted Smile
Paranoiac (film)
Passeport diplomatique agent K 8
Peeping Tom (film)
Pit of Darkness
Portrait in Black
Psycho (1960 film)
P cont.
Puthiya Paravai
Q
A Quiet Place in the Country
R
Die Rechnung – eiskalt serviert
Repulsion
Reserved for the Death
Return of a Stranger (1961 film)
Der rote Rausch
S
The Sadist (film)
The Scarlet Dove
Seconds (film)
The Secret of the Telegian
The Secret Partner
Seven Days in May
Shock Corridor
Shoot the Piano Player
The Sleeping Car Murders
Sperrbezirk
Strait-Jacket
A Study in Terror
Suspect (1960 film)
T
Taste of Fear
Ten Little Indians (1965 film)
The Third Alibi
This Man Must Die
Three Came to Kill
Tomorrow at Ten
Tony Rome
Torn Curtain
The Traitors (1962 film)
Tread Softly (1965 film)
Trunk to Cairo
Twisted Nerve
Two Living, One Dead
U
Um Null Uhr schnappt die Falle zu
Urge to Kill (film)
V
Vallavanukku Vallavan
The Vampire of Düsseldorf
Venus in Furs (1969 film)
Violenza al sole
W
Wait Until Dark (film)
What Ever Happened to Baby Jane? (1962 film)
Wise Guys (1961 film)
Z
Z (film)
Zärtliche Haie
வருடவாரியாக அவர் படங்களை எடுத்து சிறிய பதிவுகள் இட உத்தேசம்.
T.R. Pappa is the Music Director of Yaen
ஏன் படம் சுப்பு ஆறுமுகம் எழுதியது என்று ஞாபகம். இறைவன் என்றொரு கவிஞன், வருவாயோ வேல் முருகா என்ற நல்ல பாடல்கள் டி.ஆர்.பாப்பா எழுபதுகளிலும் ஏன் ,மறுபிறவி போன்ற படங்களில் தரமான இசையுடன் மறுபிறவி எடுத்தார்.
ரவி நடித்த படங்களிலிருந்து சில நிழற்படங்கள்
நான்கு சுவர்கள்
http://i1146.photobucket.com/albums/...4walls10fw.jpg
http://i1146.photobucket.com/albums/...4walls11fw.jpg
காதலிக்க நேரமில்லை
http://i1146.photobucket.com/albums/.../knillai02.jpg
குமரிப் பெண்
http://i1146.photobucket.com/albums/...umarippenn.jpg
நான்
http://i1146.photobucket.com/albums/...avijj3ltrs.jpg
http://i1146.photobucket.com/albums/.../ravi3ltrs.jpg
ஜெயா டி.வி.யில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சிக்குப் பேட்டி தந்த போது
http://i1146.photobucket.com/albums/...ps86d7527e.jpg
மீண்டும் வாழ்வேன் திரும்ப பார்த்தேன். நான் படத்திற்கு சற்றும் குறையாத entertainment value கொண்ட டி.என் .பாலுவின் மிக சிறந்த படம். படம் விறு விறுப்பு குறையாமல் express வேகத்தில் செல்லும். வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம் பாட்டுக்கு lead scene(Bikini யில் என் கன்னட பேரழகி) , police station இல் மனோகரை அறிந்த ரவியும், ரவியை தெரியாத மனோகரும் புன்னகைக்கும் சீன்,
ஒன்னை நெனைச்சா பாட்டில் பாரதி பொம்மையை போலவே இயங்குவது, குழந்தைகளை கடத்தும் காட்சியில் இருவரை சுட்டு விட்டு ,teacher ஒருவரை குறி வைத்த பிறகு விரல்களால் சரி போய் தொலை என்று மனோகர் பண்ணும் gesture .
ரவி கேட்க வேண்டுமா ,அழகுடன் தனி துவம் கொண்ட விசேஷ துள்ளலுடன் கொஞ்சம் கஷ்ட பட்டு கண்ணீரும் வடிப்பார்.
ஜாலி ரவி-பாலு திரு விழா இப்படம். மெல்லிசை மன்னர் கொஞ்சம் உழைத்து இன்னொரு முன்னாள் சகா வான மெல்லிசை மன்னர் நான் படத்தில் தந்த அளவு நல்ல out put கொடுத்திருந்தால் இந்த வண்ணபடத்தின் range எங்கேயோ போயிருக்கும். நடிகர்திலகத்தின் 150 அவது படத்தையே சொதப்பிய வல்லிசை மன்னருக்கு ,இந்த படம் எம்மாத்திரம்? ஆனாலும் வெள்ளி முத்துக்கள் பாட்டு superb .
கோபால்,
மீண்டும் வாழ்வேன் பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளலாம், ஒன்றைத் தவிர. இன்றைக்கும் மீண்டும் வாழ்வேன் படத்தை மக்களிடம் நினைவூட்டிக் கொண்டிருப்பது அப்படத்தின் பாடல்கள் தான். உன்னை நினைச்சா பாடலைப் பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தான் நினைக்க வேண்டும் போல உள்ளது. அந்தப் பாடலின் சூழ்நிலை, காரணம், எல்லாவற்றையும் அந்தப் பாட்டின் பின்னணி இசையில் தந்திருக்கிறார் மெல்லிசை மன்னர். அந்த பொம்மை ஒலிக்காகவே அவர் பட்ட கஷ்டங்கள் எழுதி மாளாது. சதன், முருகேசன் துணையுடன் மெல்லிசை மன்னர் அந்தக் காலத்தில் தந்திருந்த சிறப்பு சப்தங்களின் சிறப்பை, இன்றைக்கு எத்தனை sound effects கருவிகள் வந்தாலும் ஈடு செய்ய முடியாது. அதுவும் அந்த பொம்மை அந்த காலத்தில் மிக பிரபலமானது. காரணம் அந்த சப்தம் தான். இன்னும் சொல்லப் போனால், இந்த மீண்டும் வாழ்வேன் படம் ஹிட்டானதற்குப் பிறகு பல டீக்கடைகள் இரானி டீஸ்டால் என வரத் தொடங்கின. இன்றும் கூட சென்னையில் சில இடங்களில் அந்த இரானி டீ ஸ்டால் பெயர் இருப்பதைக் காணலாம்.
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் பாட்டுக்குப் பிறகு எஸ்.பி.பி.யின் புகழ் மேலும் உச்சத்தை அடைந்தது.
ஆனால் படத்தில் மற்றொரு அருமையான பாடல் எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது பாடலாகும். பி. வசந்தா ஹம்மிங் பறவை என்பதை மாற்றி, இதில் பாட்டைப் பாடியிருப்பார். அந்தப் பாட்டைப் பாருங்கள்.
http://youtu.be/IlMAIoT2S1A
வர போகும் கார்த்திக் சார்,வந்து விட்ட ராகவேந்தர் சார்,
மனசாட்சியில் கை வைத்து சொல்லுங்கள். ஒரு ராமமூர்த்தி நான்,மூன்றெழுத்து,மதராஸ் to பாண்டிச்சேரி யில் போட்ட இசைக்கு, ஒரு வேதா அதே கண்கள் படத்துக்கு தந்த இசைக்கு ,ஒரு சுதர்சனம் வாலிப விருந்து கொடுத்தது போல ,அவர்களை போல மூன்று மடங்கு சம்பளம் வாங்கி போட்ட பாக்தாத் பேரழகி,மீண்டும் வாழ்வேன் இசை ஈடாகுமா? டப்பா தட்டி விட்ட வல்லிசை மன்னருக்கு அந்த பணம் ஒட்டுமா? ஒரு பூக்காரிக்கு போட்ட அளவு கூடவா போட முடியவில்லை?
அன்புள்ள எஸ். கோபால் சார்,
மீண்டும் வாழ்வேன் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. கொடுத்திருந்த பாடல்கள் அவ்வளவு தரமானவை அல்ல என்ற உங்கள் கூற்றை ஒப்புக்கொள்கிறேன். இப்போதும் கூட தொலைக்காட்சிகளில் பாரதியின் நீச்சல் உடை கடற்கரைப்பாடல் பார்க்கும்போது அவ்வளவாக கவரவில்லை. பாரதியின் பொம்மை டான்ஸ் பாடலுக்கு மெல்லிசை மன்னர் ரொம்ப மெனக்கெட்டிருந்தார் என்பது உண்மை. ஆனால் படத்துக்கு வெளியே ஹிட் ஆகவில்லை. ஒரு 'சாந்தி நிலையம்' போல அமைந்திருக்க வேண்டிய பாடல்களை சொதப்பி விட்டார் என்பது உண்மை.
என்றாலும் அவர் ஆள் பார்த்து, இடம் பார்த்து இசையமைக்கிறார் என்ற தங்கள் முந்தைய குற்றச்சாட்டை மறுக்கிறேன். அவருக்கு அந்தந்த நேரங்களில் அமையவில்லை என்பதே உண்மை. இதற்கு ஒரு உதாரணம். 1971-ல் இறுதியில் வந்த இரண்டு படங்கள். இரண்டுமே ஒரே நாயகருடையது (எதற்கு மறைப்பு?. எம்.ஜி.ஆர். அவர்கள்தான்) .
சாதாரண கருப்புவெள்ளைப்படம் 'ஒருதாய் மக்களுக்கு' மணிமணியான பாடல்களை கம்போஸ் செய்தவர், அதே சமயம் வெளியான பிரம்மாண்ட, இரட்டைவேட, வண்ணப்படம் 'நீரும் நெருப்பும்' படத்தின் பாடல்களை எப்படிப்போட்டு சொதப்பியிருந்தார் என்பதை தங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டுமா?.
சவாலே சமாளி படத்தில் அவர் சொதப்பவில்லை. ஒரு கிராமப்படத்துக்கு இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. இருந்தும் இப்படத்தின் பாடலுக்காக பி.சுசீலா அவர்கள் தேசீய விருது பெற்றார். மற்ற கிராமப்படங்களான பட்டிக்காடா பட்டணமா, பொன்னூஞ்சல் படங்களுக்கு இதைவிட சிறப்பான பாடல்கள் கிடைத்தது உண்மை. அது அவ்வப்போது அமைவது.
நான் படப்பாடல்கள் அளவுக்கு மூன்றெழுத்துப் படப்பாடல்கள், படம் வந்த காலத்தில் அவ்வளவு பாப்புலர் இல்லை. கேட்க நன்றாயிருந்தன, ஆனால் வெளியில் பாப்புலராகவில்லை என்பதே உண்மை..