tfm nga "சரோஜாதேவி நெற்றியில் Oriental Express சின் சின்ன சக்கரங்களை வைத்து இருக்கிறார்கள்" padithu vitu orey siripu enaku :noteeth: :noteeth:
Printable View
tfm nga "சரோஜாதேவி நெற்றியில் Oriental Express சின் சின்ன சக்கரங்களை வைத்து இருக்கிறார்கள்" padithu vitu orey siripu enaku :noteeth: :noteeth:
அன்புள்ள TFM LOVER அவர்களுக்கு
இந்தப் பேராசிரியரின் காலை வணக்கம் .
இன்று உங்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு சிறந்த, மாஸ்டர் வேணுவின் இசையமைப்பில் , காலம் மாறிப் போச்சு என்ற படத்தில் இடம் பெற்ற
'' இனிதாய் நாமே இணைந்திருப்போமே ''
என்ற திருச்சி லோகநாதன் , ஜிக்கி பாடிய
ஒரு பாடலின் ஒளிப் பதிவினை இங்கு வழங்குகிறேன் .
நான் ஆண்டாண்டு காலமாக ரசித்த, இன்றும் மெய் மறந்து கேட்கும் ஒரு பாடல் .
http://www.youtube.com/watch?v=LN4WnshRBYk
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
ப்ராப். அவர்களே,
நன்றிகள் பலப்பல இந்த எவர்க்ரீன் "காலம் மாறிப்போச்சு" படப்பாடலின் வீடியோ தந்ததிற்காக.
அன்புடன்
ராமஸ்வாமி
காலம் மாறிப் போச்சு (1956 May )
Rojulu Marayi (Telugu: రోజులు మారాయి)
தமிழ் தெலுங்கு இரண்டிலும் பிரபலமானது !
K L நாராயணா C V R பிரசாத் தாபி சாணக்யா கூட்டணியில்
ஜெமினி கணேசன் அஞ்சலி தேவி நடித்து 1956 இல்
அதிரடி வெற்றி பெற்ற தமிழ்திரைப்படம்
கிராமியப் பின்னணியில்
சமுதாயக் கருத்துக்களும் காதலும் சொல்லப்பட்ட குடும்ம்பச்சித்திரம்
அஞ்சலிதேவி ஆர் கணேஷ்
கூடவே எஸ் வி சுப்பையா டி எஸ் பாலைய்யா கே ஏ தங்கவேலு துரைராஜ்
எம் ஆர் சந்தானலஷ்மி நடிப்பில்
தமிழில் ,விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவரும்
பிரபல எழுத்தாளரும் கவிஞருமான முகவை ராஜமாணிக்கம் வசனம் பாடல்களில் வெளிவந்தது
மாஸ்டர் வேணுவின் இசையமைப்பில்
டி எம் எஸ் , திருச்சி லோகநாதன் ,எம் எல் வி , ஜிக்கி ,ராணி , S C கிருஷ்ணன்
பாடிய பாடல்கள் இருந்த போதும்
இனிதாய் நாமே இணைந்திருப்போமே வும்
ஏரு ஒட்டி போவாயே அண்ணே ...
இரண்டும் அபிமான ரசிகர்களால் இன்றும் நினைவு கூறப்படும் பாடல்கள்
காதல் மன்னன் பட்டம் சூட்டப்படுவதற்கு முன்னர்
மிக பொறுப்பான கதாபத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருந்த ஆர் கணேஷ்
( அப்படித்தான் டைட்டிலிலும் வரும்)
அதுவும் , ஜெமினி கணேசனுக்கு A M ராஜா பின்னணி வழங்க ஆரம்பித்த காலத்தில்
அவருக்காக திருச்சி லோகநாதனை பாட வைத்திருப்பதுவும் பொருத்தமான புதுமைத்தெரிவு
எழில் வரிசையிலே நிறை குணமதிலே முதலிடம் நீயே உணர்ந்து கொள்வாயே வாழ்வதனின் மேன்மை காட்டுவாய் ....
என்கிற போது அவருடைய முகபாவத்தை பாருங்கள்
அலட்டிக் கொள்ளாமலேயே ஹிட் தந்த மன்னன் அல்லவா !
கூடவே உச்சரிப்புத திலகம் திருச்சி லோகநாதனின் குரலைக் கேளுங்கள்
திருமணத்திற்கு பின்னரே நடிக்கத தொடங்கி
இவ்வளவு பிரபலமான நடிகை அஞ்சலி தேவி ஒருவராகத்தான் இருக்க முடியும்
அவருக்காக ஜிக்கி அதிகம் பாடிய காலம்
ஏரு ஒட்டி போவாயே அண்ணே .. - ஜிக்கி .
http://www.dailymotion.com/video/xeil5r_yeru-pootti_creation
http://www.raaga.com/player4/?id=154...72435106150806
இந்தப் பாடலுக்கு வஹீதா ரஹ்மான் மின்னலாகத்த் தோன்றி
ஒரு காட்சியிலே ஆடிவிட்டு இந்திக்கு பறந்து போனாலும்
அவர் கிள்ளி விட்டுப் போன அந்த இன்பரணம்
இன்னும் நெஞ்சங்களை விட்டு நீங்கவில்லை போலும்
டிவி யில் யூ டுப்பிலும் இன்றும் வலம் வருகின்ற
காமரா முன்வந்த முதல் படம்தானா ? என்று வியக்க வைக்கும்
அவர் கூடவே தட்டி தட்டிக் கொண்டு ஆடுகிற (பெயர் கூடத் தெரியவில்லை )
துணை நடிகர்களைப பாருங்கள்
அமோக கலைத்திறன் !
பாடல் மெட்டு மட்டுமென்ன சாதரணமா ??
மிகப் பிரபலமான கிராமிய மெட்டு என்று நம்புகிறேன்
மதுரை வீரனில்(1956 April ) சும்மா இருந்தா நஷ்டம் சோத்துக்கு
ஜி ராமநாதன் + உடுமலை நாராயண கவி பாடல்
http://www.raaga.com/player4/?id=155...38044566940516
மாஸ்டர் வேணுவின் இசையமைப்பில் வந்த எங்க வீட்டு மகாலட்சுமியில் (1957 ) வந்த
பட்டணம் தான் போகலாமடி
http://www.raaga.com/player4/?id=154...09604042489082
அத்தனையும் இதே மெட்டை அடிப்படையாக வைத்து வந்த பாடல்கள்
இன்னும் வேதாவின் இசையமைப்பில் கூட கேட்டிருக்கிறேன்
இத்தனையும் சொல்லிவிட்டு காலம் மாறிப் போச்சு முதன் முதலாக வெளிவந்தபோது வந்த விளம்பரத்தையும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்
இப்பொழுது நடை பெறுகிறது
சென்னை ஸ்ரீகிருஷ்ணா வெலிங்டன் உமா
தென்னாடெங்கும்
அமோக வெற்றியுடன்
நடை பெறுகிறது
சாரதியின்
காலம் மாறி போச்சு
புதுமை உதயத்தின் விடிவெள்ளி
ஸிடி ரிலீஸ்
ஸ்ரீ கிருஷ்ணா பிலிம்ஸ்
http://i871.photobucket.com/albums/a...7147977068.gif
நன்றி
அன்பு மிக்க tfmlover அவர்களுக்கு நம் அனைவரின் சார்பாக நன்றிகள். காலம் மாறிப் போச்சு பாடல்கள், காலம் மாறினாலும் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்கள். 78 கிராமபோன் ரிக்கார்டின் இருபக்கங்களிலும் இடம் பெற்ற பெரிய பாடல், ஏரு பூட்டிப் போவாயே பாடலாகும். படத்தில் அப்பாடலின் நீளம் சற்றுக் குறைவு. ரிக்கார்டு வடிவத்தில் டேப் ஒலி இன்னும் சற்று நேரம் கூட, தனியாக இசைக்கும். அந்த இசைத்தட்டு வடிவம் கிடைத்தால் நாம் அந்த வித்தியாசத்தை அறியலாம். குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்த பாடல் இனிதாய் நாமே இணைந்திருப்போமே என்கின்ற பாடலாகும்.
வாய்ப்புக்கும், விளம்பர பிரதிக்கும் நன்றி.
ராகவேந்திரன்
80களின் பிற்பகுதி மற்றும் 90களின் முற்பகுதியில் திரு முகவை ராசமாணிக்கம் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் அவர் 50களின் இசையமைப்பாளர்களை, பாடகர்களை, பாடலாசிரியர்களை, சிலாகித்து பாராட்டுவார். சுய விளம்பரம் செய்யாத மாமனிதர். அவ்வளவு பெரிய ஹிட் பாடலைக் கொடுத்தவரா இவர் என்னும் அளவுக்கு மிகவும் எளிமையாக இருப்பார். அதற்குப் பிறகு அவரைக் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை.
அட... சில நாட்கள் ஊருக்குப் போயிட்டு வர்ரதுக்குள்ளாற என்னென்னமோ ஆகிப் போச்சே !
எத்தனை பாட்டுகள் ? எத்த்னை படக்காட்சிகள் ?
யானைப்பாகன் முதல் காலம் மாறிப் போச்சு வரைக்கும்...
ஒவ்வொண்ணா ரசிக்க கொஞ்சம் அவகாசம் தேவை.
Tfml... கண்ணதாசன் திரைப் பாடல்களில் மருத நாட்டு வீரன் பாடல்களில், "எங்கே செல்கின்றாய்","பருவம் பார்த்து", "அரும்புதிர முத்துதிர" ஆகியவற்றுடன் "விழியலை மேலே" பாடலும் இருக்கிறது. ( என் நண்பர் ஒருவரிடம் அந்தப் புத்தகம் இருக்கிறது. அவர் சரிபார்த்து சொன்னாரு ) அதனால் அது அவர் இயற்றியது என்றே வைத்துக் கொள்ளலாமா ?
hi Thiru ராகவேந்திரன் !
இனிதாய் நாமே ஒரு பொக்கிஷப் பாடல்
வேணுவின் முத்திரையை இனிதாய் இலகுவாக உணர்ந்து கொள்ளலாம்
யூ டியூப் ஒலி அவ்வளவு தெளிவாக இல்லை
என்னிடம் இருப்பதும் அது போன்றுதான்
http://www.thiraipaadal.com/album.ph...D01052&lang=en
முகவை ராஜமாணிக்கம் அவர்கள் 2002 இல் மறைந்தார் என்றும் அறிந்தேன்
அவர் எழுதிய நூல்கள் பரவலாக இருக்கின்றன
இன்னும் சில திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்
விபரம் முற்றாக அறியப்படவில்லை
thanks !
Regards
hi மது !
பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா ?
என்னுடைய dvd யில் இணைக்கப்படவில்லை
இங்கேயும் யூடியூப்பிலும் போட்டதால் பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைத்தது
எம்மை வாட்டி வதைப்பதென்று வடிவமான கலைவண்ணம் !
விழியலை மேலே செம்மீனும் மருதகாசி எழுதியதாகவே அறிந்தேன்
ஆனாலும் can't say for sure !
அந்தக்காலத்தில் காதல் , தத்துவ பாடல்களுக்கிடையே
உணர்ச்சி பூர்வமான தாலாட்டுப் பாடல்கள் வேண்டுமானால்
அதற்கு அ .மருதகாசியைத்தான் அழைப்பார்களாம்
அந்த வகையில் அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது அவர் எழுதியது
பாடலைக் கண்டு மகிழ
http://www.dailymotion.com/video/xi8ada_arumbudhira-muththudhira_creation
Regards
Pangaaligal S Dhakshinamoorthy A Maruthakasi -Trichy Loganathan - P Susheela
அது போலவே மருதகாசியின் சின்ன அரும்பு மலரும் ...மிகவும் பிரபல்யமான ஒன்று
பங்காளிகள் திரைப்படத்தில் எஸ் தட்சிணாமூர்த்தி இசையில்
திருச்சி லோகநாதனின் குரல் அபூர்வமாக நடிகக்கவேள் M R ராதாவுக்காக
அற்புதமான நடிகர் இன்னும் நிறைய மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்க வேண்டும்
நெஞ்சை நெகிழ வைக்கும் கானமும் காட்சியும் !
http://www.youtube.com/watch?v=7dC-FnF_mXI
பி சுசீலா அஞ்சலி தேவிக்காக
http://www.dailymotion.com/video/xfc112_chinna-arumbu-malarum_school
Regards
tfml: There is a reason for that disorganized sequence. Threads with the latest posts move to the top to make it convenient to view the new posts(if the current hub has that feature). If there is no new post in a thread that thread will move to the bottom with time. If you are interested in a few key threads you can ask for a sticky in those threads to keep it at the top ( if sticky is available in the new hub.)
Hi tfml,
நன்றிகள் பலப்பல பங்காளிகள் படப்பாடல்கள் கொடுத்ததற்காக.
சுசீலா பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். லோகநாதனிடம் அந்தகுழைவு ஏனோ இல்லை என்று தோன்றுகிறது.
அன்புடன்
ராமஸ்வாமி
நன்றி நன்றி TFML பங்காளி :)
ramaswamy ji...
என்ன இருந்தாலும் அம்மா பாடும் தாலாட்டுக்கு குழைவு அதிகம்தானே ?
Hi TFML
thanks a lot for arumbudhira video.
thaalattu paatu enraal enga groupukku
( adhaanga. kutti paappas group)
eppodhume thani taste-thaan.
பல்லி மிட்டாய், சீப்பி, கோள்வடை ரேஞ்சுலே இதையும் சுவைத்து மகிழ்வோமே !
அன்பு மிகு tfm lover அவர்களுக்கு
எனது மாலை வணக்கம் .
நீங்கள் சொன்னபடியே இசை மேதை g.ராமனாதனின் இழையைக் கண்டு பிடித்து விட்டேன் .
அதில் இருந்து ராஜா தேசிங்கு படத்தில் புரட்சித் தலைவரின் ஆணைப் படி நீக்கப் பட்ட
இசைக் குயில் m.l.வசந்தகுமாரியின்
'' பாற்கடல் அலை மேலே ''
பாடலின் வீடியோ கிளிப்பை ( video clip ) எடுத்து விட்டேன் .
பத்மினியின் ஆடல் பிரமாதம் !
பரந்தாமனின் பத்து அவதாரங்களும் அழகாக சித்தரிக்கப் பட்டிருந்தன .
இந்தப் பாடலை நான் படம் பார்க்கும் போது கூடப் பார்க்கவில்லை .
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
அந்தப் பாடலில் நீங்கள் எழுதிய செய்திகள் எனக்குப் புதியவை !
அந்தப் பாடலில் இருந்து எனது cool edit pro மென்பொருள் ( soft ware ) மூலம் ஆடியோவை பிரித்தெடுக்க முடியவில்ல்லை !
ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் .
அன்புடன்
பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
Hi all,
ஏறு பூட்டி போவாயே என்ற மிகப்ப்ரபலமான பாட்டு முதல் தடவை வீடியோவில் பார்த்தேன். வஹீதா ரெஹ்மான் இளமையாக இருக்கிறார். இந்த படம் வந்த அடுத்த வருடமே அவர் ஹிந்தியில் இன்று வரை கல்ட் பிலிம் என்று சொல்லுகின்ற பியாசா என்ற படத்தில் தாசி வேடத்தில் அசத்தினார் குருதத் உடன் என்றால் நம்ப முடியவில்லை ஆனால் உண்மை. என்ன மாதிரி ஒரு படம் அது! கிளாச்சிக் என்பார்களே அதற்கு உண்மையான அர்த்தம் சொல்லுகின்ற செல்லுலோயது மாஸ்டர்பீஸ்.
அன்புடன்
ராமஸ்வாமி
wow..
I love sathe biscuits. But frock venaaaaam.. ( jumper suit is good :) )
Naan Anuppuvadhu Kaditham Alla !
:happydance: !
http://i871.photobucket.com/albums/a...gundumadhu.jpg
Regards
frock venaaaaam? ok
thaniyaa irukkEn
jumpsuitku engE pOvEn ! :(
என்னா பாக்கறீங்க
உங்க வீட்ல பொம்மை இருக்குதா
பாப்பாவுங்க இருக்குதா
நான் இங்க தனியா இருக்கேன்
உங்க பாப்பாவுங்க எல்லாரையும்
கூட்டிகிட்டு என்னெ பாக்க வரீங்களா
உங்க 'குழந்தைக்காக ' வாங்க
http://i871.photobucket.com/albums/a...gatfmlover.jpg
Regards
Gantasala with menmaiyana kural Balasaraswathy Devi ,
her soft voice with good control ,
both high and low
http://www.youtube.com/watch?gl=US&hl=iw&v=M3M399Ar6f0
Waheeda Rehman & NTR Jayasimhan
மலரோடு மதுரமேவும்
மனங்காணும் மோகன தாகம்....
புனித நாளின்று பொன்னான இளமை
விரகம் மிகும் வேளை கண்ணா உன் மனம்
மலரோடு மதுரமேவும்
மனங்காணும் மோகன தாகம்.
நினைந்து தவம் செய்து உன்னாலே மானே
வானின் மதியாக விழி பாய்ந்ததால்
மலரோடு மதுரமேவும்
மனங்காணும் மோகன தாகம்..
Regards
அன்புள்ள ராமசாமி அய்யா அவர்களுக்கு
எனது மாலை வணக்கம் .
தயவு செய்து உங்கள் கருத்துக்கு மாறுபடுவதை மன்னித்துக் கொள்ளுங்கள் .
பங்காளிகள் படத்தில் இடம் பெற்ற
'' சின்ன அரும்பு மலரும் ''
என்ற இரட்டைப் பாடல்களில்
P.சுசீலா அம்மையாரின் குரலில் இருந்ததை விட ஒரு சோகத் தொனி திருச்சி லோகநாதனின் குரலில் இருந்ததை நான் கண்டேன் .
அந்தத் தொனி எனக்கு மிகவும் மன நெகிழ்வைக் கொடுத்தது .
அன்புள்ள TFM LOVER அவர்களுக்கு
நீங்கள் நல்கிய இந்த இரண்டு பாடல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன் .
ஆனால் இன்று தான் பார்க்கும் பாக்கியம் பெற்றேன் .
நன்றி !
இதைப் போன்ற ஒரு இரட்டைப் பாடலை நண்பர்கள் அனைவருக்கும் வழங்க விழைகிறேன் .
N.T.ராமாராவ், பத்மினி நடித்த மருமகள் என்ற ஒரு பழைய படத்தில்
'' சின்னச் சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி ''
என்ற பாடலை இரு குழந்தைகள் இன்பமாகப் பாடுவதையும்
அவர்கள் பெரியவர்கள் ஆகிக் காதலர்கள் ஆகி துன்பமாகப் பாடுவதையும் கண்டு களியுங்கள் .
இன்பமான பாடல் :
'' சின்னச் சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி '' - ஜிக்கி, A.P.கோமளா - மருமகள்
http://www.youtube.com/watch?v=ELY8drmBaQY
துன்பமான பாடல் :
'' சின்னச் சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி '' - P.A.பெரியநாயகி, A.M.ராஜா - மருமகள்
http://www.youtube.com/watch?v=WAJbYouWHJY
அன்புடன்
பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
ஹய்யாங்... நான் குண்டா ?
இருந்தாலும் கைப்பணத்தில் மார்ட்டன் மிட்டாய், கே.சி.பி. கிருஷ்ணா மிட்டாய், ஜே.பி.மங்காராம் பிஸ்கோத்து எதுவானாலும் வாங்க நான் ரெடி..
ஹி ஹி... தண்டு... ! உன் கைப்பணத்தில். !!!!
வாவ்......
பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ
பாப்பாவைப் படைத்தவன் அவன் தானே
பாப்பாவைப் படைத்த கைகளினாலே
பால் போன்ற நிலவைப் படைத்தானே
-- குழந்தைக்காக
பேராசிரியர் ஐயா.
சின்னச் சின்ன வீடு கட்டி ஒலிஒளிக் காட்சி கொடுத்து மகிழ வைத்து விட்டீர்கள்.
நன்றி நன்றி
Hello Tfm nga....KS sir.....madhu avanga sonnaa maathri konja naal varalaina....there is so much feast for the eyes & ears.....in this thread......i have never heard or seen many of the videos songs / ads / write ups that I see here....just shows the brilliance behind every decision that was made in those days .....there was so much attention paid to lyrics /shots /costumes/ location etc.....apadiye... many voices that are new to me...like A.P. Komala / P.A. Periyanaayagi./ Bala saraswathy devi.......i love the ads...wonder who "gundu & thandu" were...:noteeth:
all that goes thru my mind is "WO(W) nderful"....thank you all for bringing in such pokishams from the past for all generations to enjoy...:-)
hi suvai
those ads from 50 60's
creative gundu thandu trigger emotions to taste mittai ,
enakum suvaikka aasaiyaa irukku suvai
regards
புரொபசர் ஐயா
சின்னசின்ன வீடுகட்டி பாடலில் இருக்கும் சின்னப் பெண்' சச்சு
அருமையான பாடல்கள்
நன்றி
Regards
tfm nga.....:noteeth:
ஜே.பி.மங்காராம் vEnumaa
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/jp-1.jpg
Regards
palli mittaai is sugar coated cumin seeds in different colors! :) Then there was kamarkat, hard candy made of jaggery. Of course kadalai mittaai and Parrys chocoloate for half anna! :lol: My elementary school days! pattaaNi kadalai(spiced and roasted peas) was my favorite! Now you have to take a trip to India! :)
அன்புடைய tfm lover அவர்களுக்கு
எனது காலை வணக்கம் .
ஜெயசிம்மனின்
'' மலரோடு மதுரம் மேவும் ''
பாடலின் வீடியோக் காட்சி கிடைக்கும் என இது வரை நான் கற்பனை கூடப் பண்ணிப் பார்க்கவில்லை !
பாடலை எழுதியது தஞ்சை ராமய்யா தாஸ் என்று நினைக்கிறேன் .
'' மலரோடு மதுரம் மேவும் மனம் காணும் மோகன தாகம் ''
இந்த சொற்களுக்கு உங்களுக்கு அர்த்தம் புரிகிறதா ? எனக்குப் புரியவில்லை !
பாடலில் ஓடிப் பிடித்து விளையாடும் மங்கை வகீதா ரஹ்மானா ?
அழகாக இருக்கிறார் !
இந்தப் பாடலின் ஆடியோவை நான் எட்டு மூலங்களில் ( sources ) இருந்து எடுத்து சேமித்து வைத்திருக்கிறேன் .
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும் !
சிவாஜி பாடுவாரே !
'' பறவைகள் பலவிதம் , ஒவ்வொன்றும் ஒரு விதம் , பாடல்கள் பலவிதம் , ஒவ்வொன்றும் ஒரு விதம் ''
என்பதைப் போல !
இன்று தான் வீடியோ கிடைத்தது , உங்கள் அருளால் !
இந்தப் படத்தின் மற்றப் பாடல்களின் வீடியோப் பதிவுகள் உங்களிடம் இருக்குமே !
அவைகளையும் சமயம் வாய்க்கும் போது கொடுங்களேன் .
அன்புடனும் நன்றியுடனும்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
ஹாய் நண்பர்களே,
ஜெயசிம்மன் பட பாடல் லிங்க் வொர்க் செய்யவில்லை. ஏன் என்று தெரியவில்லை.
பழைய பாடல்களின் வீடியோ கொடுக்கின்ற எல்லா நண்பர்களுக்கும் ஒரு விண்ணப்பம். "ஆண்கள் மனமே அப்படித்தானே அது அடிக்கடி மாறும் இப்படித்தான்" என்று ஒரு அருமையான ட்டிஎமெஸ் சுசீலா டூயட் இருக்கிறதே (எந்த படம் என்று நினைவில்லை) அதன் வீடியோ கிடைக்குமா இந்த இழையில்? கொடுக்க முடிந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
அன்புடன்
ராமஸ்வாமி
திரைப்பாடல்களில் மேவு என்பதை அதிகமாக மேவியது தஞ்சை ராமையாதாஸ் என்பதாலா அப்படி நினைத்தீர்கள் புரொபசர் ?
தெலுங்கிலிருந்து அப்படியே மொழி பெயர்த்தும்கூட இருக்கலாம்
மலரிலே மது குடியிருக்க
அதுபோல் மனதிலே (அதைக்கண்டு)
மோகன தாகம் என்று அர்த்தம் கொள்ளலாமா
ரைமிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக
மேவும் .
தாகம்
கானம் ..என்றெல்லாம் அடுக்கியும் இருக்கலாம்
தேவாரம் திருப்பதிகம் திருப்புகழ்
மற்றும் தமிழ் இலக்கியங்களிலே மேவும் என்று வருமல்லவா
இதற்கே இப்படியென்றால் விப்ர நாராயணா வில் வரும்
'மலரின் மதுவெல்லாம் இன்னிசைதானே 'என்பதற்கு என்ன சொல்வீர்கள் புரொபசர் ?
அதுவும் தெலுங்கிலிருந்து சமுத்ராள ராகவாச்சாரியா வின் பாடலை அப்படியே மாற்றியதுதான்
http://www.youtube.com/watch?v=8CiO6FbqATA
http://www.youtube.com/watch?v=xoiR0hELEKI
Regards
hi ராமஸ்வாமி
jayasimhan link work seigiradhu thaanE
try this if not
http://www.youtube.com/watch?v=M3M399Ar6f0
ஆண்கள் மனமே ...
முன்பு நான் அப்லோட் செய்தபோது பார்க்கவில்லையா ?
மைனாவதியும் பிரேம் நசீரும் நான் வளர்த்த தங்கையில்
டிஸ்கை தேடிப் பார்க்கிறேன்
Regards
Hi,
Thamizh-Telungu Anarkali had a nice no by Jikki and Ghantasala "Rajasekhara". Any video link available for this song?
Ramaswamy
2 songs i found
innum 5 padalgal irukkalaam
http://www.youtube.com/watch?v=RojTLgVR4T0
http://www.youtube.com/watch?v=ECVLO4jhYug
Regards
பி லீலா கண்டசாலாவுடன் பாடியது
பார்த்தேன் கேட்டேன்
இப்போது தேடுகிறேன்
ஏகாந்த நிலையாலே (நினைவாலே ?)இயல் இசை மேவும் கலைபோலே ..
அருமையான கானம்
நான் உள்ளம் மகிழ்ந்தேன் ..
(உள்ளன்போடு மகிழ்தேனே மதனா )
...தேன் உண்ணும் ஈ போலே...
என்றெல்லாம் வரும் பாட்டில்
வழக்கமாக தேன் உண்ணும் வண்டு என்றே சொல்லுவார்கள்
ஈ என்று வந்தது இந்தப்பாட்டில் மட்டும் தான்
மது புரொபசர் ராமசாமி சிவாஜி சார் இந்தப் பக்கம் வந்தால் விபரம் தாருங்கள்
நன்றி
Regards
தமிழ் பிலிம் லவர் அவர்களே, நீங்கள் வேண்டும் பாடல் என்னவென்று புரியவில்லை, மன்னிக்கவும். புரிந்தால் சொல்கிறேன்.
மிக்க நன்றி அனார்கலி பாடல் வீடியோ லிங்க் கொடுத்ததற்காக.
இன்னும் ஒரு வேண்டுகோள். டிங்கிரி டிங்காலே பாடலின் வீடியோ லிங்க் கொடுக்க முடியுமா? உங்களை சிரமப்படுதுகின்றேன் என்று தெரியும். மன்னிக்கவும்.
அன்புடன்
ராமஸ்வாமி