சிறப்பு நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...g?t=1317535743
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
சிறப்பு நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...g?t=1317535743
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு பம்மலார் சார்,
நடிகர் திலகத்தின் 43வது பிறந்ததின விழா பொம்மை இதழ் சிறப்புப் பதிவை வெளியிட்டு ஒரு உலுக்கு உலுக்கி விட்டீர்கள். செம ரகளை. அவையெல்லாம் பொற்காலங்கள் அல்லவா...நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்ததின் மூலம் என் வருங்கால சந்ததிகள் பெருமையடைவார்கள் என்று திரு k.s.கோபாலகிருஷ்ணன் கூறியிருந்தது மெய் சிலிர்க்க வைத்தது.
சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் ஸ்டில்கள், சிறப்பு ஆல்பத்தின் அட்டகாசமான ஆரம்பப் பக்கங்கள், 84வது சிவாஜி ஜெயந்தி போஸ்டர்கள் அனைத்தும் அருமை. நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு பார்த்தசாரதி சார்,
கவிதை நடையில் நம் கடவுளுக்கு தங்களது பிறந்த நாள் பதிவு அழகான ஓவியமாய் இருந்தது. பாராட்டுக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு முரளி சார்,
பம்மலார் மற்றும் என் உடல்நலம் மீது தாங்கள் கொண்டுள்ள அக்கறையை நினைக்கும் போது என் கண்கள் பனிக்கின்றன. இப்படிப்பட்ட சகோதரர்களை எனக்களித்த நம் பெருமகனாரின் அருளை எண்ணி பூரிப்படைகிறேன். தவமிருந்தால் கூட இப்பேர்ப்பட்ட சொந்தங்கள் கிடைக்காது. தங்கள் அன்பிற்கும்,பாசத்திற்கும் என் உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஏன் சார் மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டு?.. நீங்கள் உத்தரவு போடுங்கள். நீங்கள் கூறியுள்ளது போலவும் செய்தாலும் அதுவும் பிரமாதமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு படமாக பிரித்து மேய்ந்து விடலாம்.
பாசத்துடன் நன்றி கலந்து
வாசுதேவன்.
பிறந்த நாளா - தெரியாது... நினைவு நாளா - தெரியாது... எந்த நாள் -யாருக்குத் தெரியும்...
எங்களுக்கு தெரிந்த தெல்லாம் நடிகர் திலகம் மட்டும் தான்...
எங்களுக்கு பிறந்த நாளுக்கு போலியாக மாலை போட்டு போஸ் கொடுத்து வேஷம் போட தெரியாது..
நினைவு நாளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி போஸ் கொடுக்கும் வேஷம் போடவும் தெரியாது ...
மற்ற நாட்களில் மறந்து போகும் நன்றி கெட்ட தன்மையும் தெரியாது...
எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று தான் --
நினைதது நினைத்து கண்ணீர் விடுவோம் ....
அது எந்த நாள் என்று கவலையில்லை..
நினைத்தாலே உணர்ச்சி வசப்பட வைத்து எங்களை ஆட்கொள்ளும் ஒரே தலைவர்..
நிஜ வாழ்வில் நடிக்க
அவருக்கு மட்டுமல்ல-
எங்களுக்கும் தெரியாது...
டியர் ராகவேந்தர் சார்,
உண்மையான, சத்தியமான வார்த்தைகள்...
டியர் முரளியண்ணா,
தங்கள் பதிவு வருத்தமடையச்செய்யவில்லை, மாறாக நான் விடுக்கவிருந்த வேண்டுகோளை சுலபமாக்கி விட்டது. சமீப காலமாக, குறிப்பாகச்சொன்னால் ஜூலை 3 'சவாலே சமாளி' வெளியீட்டிலிருந்து, அந்தந்த மாதம் வெளியான ஒவ்வொரு படத்துக்கும், அப்படங்களுக்கான ஆவணங்களைத்தருவதில் ஆர்வம் காட்டிய சகோதரர் பம்மலார் அவர்கள், பின்னர் படிப்படியாக தனது எல்லைகளை விரித்து, அத்திரைப்படங்கள் வெளியானபோது பல்வேறு பத்திரிகைகளில் வெளியான செய்திகள், புகைப்படங்கள், விமர்சனங்கள், சிறப்புக்கட்டுரைகள் என பல்வேறு ஆவணங்களையும் பதிப்பிக்கத்துவங்கினார், அதற்கு இணையாக சகோதரர் வாசுதேவன் அவர்களும் திரைப்படங்களின் காட்சிகளை நிழற்பட வடிவில் தரத்துவங்கினார். நாளடைவில் இவர்களின் இந்த அதிகப்படியான சேவை நம்மை மலைக்க வைத்ததோடு, இவற்றுக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்கிறார்களே என்ற வலியையும் நம்முடைய மனதில் தோற்றுவித்தது உண்மை. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று எண்ணிய நேரத்தில்தான் உங்கள் பதிவு பாதையைத் திறந்து விட்டது போல் ஆனது.
எனது தாழ்மையான எண்ணம் என்னவெனில், அதற்காகப் பதிவுகளை நிறுத்தாமல், மாறாக குறைத்துக்கொண்டு அவசியப்பட்ட ஆவனங்களை மட்டும் தரலாம் என்பதுதான். பம்மலாரின் சில பதிவுகளின் நேரங்களைப்பார்க்கும்போது, நள்ளிரவுகளில் எல்லாம் கூட பதிவுகளை இட்டிருக்கிறார் என்ற உண்மை அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. முதலில் அவரது உடல் நலமும், அவர் குடும்பத்திற்கு அவர் ஆற்ற வேண்டிய கடமைகளும் மிக முக்கியம். இதை ஏற்கெனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். நமது திரியும் பதிவுகளும் ஏதோ இன்றோடு முடிந்து விடப்போவதல்ல. காலத்துக்கும் தொடரப்போவது. அதைத்தொடர புதிய புதிய ரசிக நெஞ்சங்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
எனவே படங்கள் வெளியானபோது, பத்திரிகைகளில் அவைதொடர்பாக வந்த செய்திகளையெல்லாம் பதிப்பதற்கு மாறாக (ஒவ்வொரு ஆவணத்தையும் ஸ்கேன் செய்து இங்கே பதிப்பிப்பது என்பது எவ்வளவு பிரம்மப்பிரயத்தனம் என்பதை நம் அனைவராலும் உணர முடிகிறது), மிக முக்கிய ஆவணங்களான '100-வது நாள்' மற்றும் 'வெள்ளி விழா' விளம்பரங்களை மட்டும் பதிப்பித்தால் போதுமானது. நடிகர்திலகத்தின் திரைப்படங்களின் வெற்றிகளைப்பற்றிய பொய்ப்பிரச்சாரங்களை உடைத்து நொறுக்கும் ஆயுதங்கள் அவை மட்டுமே.
அந்த வகையில் பார்த்தால், நான் அளித்துள்ள பட்டியலில் இம்மாதம் (அக்டோபர்) மூன்று வெள்ளிவிழாப்படங்கள், மற்றும் எட்டு 100 நள் படங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன. ஆக, இந்த பதினோரு விளம்பரங்களை மட்டும் (அவற்றிலும் கைவசம் இருப்பவற்றை மட்டும்) பதிப்பித்தால் போதுமானது என்பது என் எண்ணம். இதுபற்றி உங்கள் எண்ணத்தை எழுதுங்கள்.
மற்றபடி, பல்வேறு படங்களின் சிறப்புக்கள் பற்றி பொம்மை, பிலிமாலயா, பேசும் படம் போன்ற இதழ்களில் வந்தவையெல்லாம் அப்படங்கள் வெளியாகும் முன்னர் அவற்றின் சிறப்புகளைப்பற்றி மக்களுக்கு எடுத்துச்சொல்லி மக்களின் எதிர்பார்ப்புக்களை அதிகரிப்பதற்காக வெளியானவை. ஆனால் இப்போது நாம் அப்படங்களைப் பார்த்து விட்டோம். எனவே இப்போது படிக்கும்போது அவ்வளவு சுவாரஸ்யங்களை ஏற்படுத்தவில்லை, மாறாக பார்த்த படங்களின் விமர்சனம் போல அசைபோட உதவுகின்றன என்பது உண்மை. அதே சமயம் ஏற்கெனவே நடந்த பல்வேறு விழா நிகழ்ச்சிகளின் பதிவுகளைக்காணூம்போது அவை நம்மைப் பரவசப்படுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது.
டியர் பம்மலார்,
மேலே எழுதிய விஷயங்கள் முரளியண்ணாவுக்குச் சொன்ன பதில் என்பதை விட, முக்கியமாக உங்களுக்குத்தான். புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். (இதுபோக நான் தனிப்பட்ட முறையில் உங்கள் தலையில் ஒரு சுமையை சுமத்தியிருக்கிறேன். அதை வசதியேற்படும்போது மட்டும் செய்யுங்கள். சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம்). உங்கள் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் இன்னும் வருங்காலத்தில் எவ்வளவோ வேலைகள் காத்திருக்கின்றன. எனவே முழு எனர்ஜியையும் இப்போதே செலவழித்து விடாதீர்கள்.
டியர் வாசுதேவன்,
சமீப காலமாக நீங்களும் அளவுக்கு அதிகமாகவே சிரமங்களை எடுத்துக்கொண்டு நிழற்படங்களைப் பதித்து வருகிறீர்கள். (பானை சோற்றுக்கு ஒரு சோறு: 'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்க்கலைஞர்' சேகரிப்புகள்). அதே சமயம், திரைப்படங்களின் நிழற்படக்காட்சித் தொகுப்புக்கள் அவசியம்தானா என்பது நமது எண்ணம். ஏனென்றால், அந்தத்திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம், பார்த்து வருகிறோம், மீண்டும் மீண்டும் பார்க்க இருக்கிறோம். முன்போல 'எபோது தியேட்டரில் போடுவார்கள் போய்ப்பார்ப்பதற்கு?' என்ற காலத்தில் நாம் இல்லை. வீட்டு அலமாரியில் இருக்கும் டி.வி.டி.க்களை நினைத்தபோது எடுத்துப்போட்டுப் பார்க்கும் காலத்தில் இருக்கிறோம். எனவே திரைப்படக்காட்சிகளை இவ்வளவு சிரமம் எடுத்து பதிப்பித்தல் அவசியமா என்பதே நமது ஆதங்கம் (உதாரணம் சமீபத்தில் நீங்கள் தந்த 'வசந்த மாளிகை' காட்சிகள்). உங்களை சிரமங்களைக்குறைக்கவே நானும் சரி, முரளியண்ணாவும் சரி வேண்டுகோள் வைக்கிறோம்.
Earlier during my school days, I have only relied upon newspapers and word of mouth for info. about NT films. for example, in 1979 Thrisoolam was main topic of discussion among students. I was in 4th standard that time. It celebrated 200 days in Central-Nellai. It rocked. Also heard, flowers were strewn in the theatre. Central was biggest cinema next to Madurai theater.
Now a days, i am happy we have this thread which gives opportunity to read and enjoy photos of NT's films published in various magazines from time to time.
But my salute to the stalwars of this thread, Murali, Saaratha, Pammalar, Vasu, and others who not only have good memory also they preserve various information
This is because of we love Sivaji the great and we also thank the software advancement which helps as stay united.
'சபாஷ் மீனா' திரைப்படத்தில் சத்திய வேந்தர். (3.10.1958)
http://74.208.147.65/ahtees/admin/mo...20%20Meena.jpg
http://bp3.blogger.com/_Hj1mom2H_lI/...bash+meena.JPG
http://i1087.photobucket.com/albums/...g?t=1317578025
சித்திரம் பேசுதடி......
http://www.youtube.com/watch?v=H7sAS...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
காணா இன்பம் கனிந்ததேனோ...அற்புதப் பாடல்.
http://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
இன்று மாலை காமராஜர் அரங்கில் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களால் நடத்தப்பெற்ற இசைவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்து வழிந்த நடந்த விழாவில் நடிகர் திலகத்தின் புகழ் பெற்ற பாடல்களையும் அவற்றோடு சில rare songs என்று இனத்தில் வருகின்ற பாடல்களும் பாடப்பெற்றன.
குறிப்பாக டி.எம்.எஸ். தவிர மற்ற பாடகர்கள் பாடிய பாடல்களை மேடையேற்றியது ஒரு புதுமையான முயற்சி.
நமது திரியில் பதிவிட்ட இசைக்கருவிகளுடன் நடிகர் திலகம் அங்கே அரங்கத்தில் வீடியோ வடிவில் சங்கீத சக்ரவர்த்தி சிவாஜி என்ற பெயரில் திரையிடப்பட்டது.
இயக்குனர் திலகம் கே.எஸ்.ஜிம் வியட்நாம் வீடு சுந்தரம் மற்றும் குட்டி பத்மினிக்கு சிவாஜி விருது வழங்கப்பட்டது. சீர்காழி நகரில் இயங்கி வரும் அன்பாலே என்ற மாற்று திறனாளிகளின் பள்ளி ஒன்றுக்கும் சிவாஜி மன்றத்தை சேர்ந்த இறந்து போன ஒருவரின் மனைவிக்கும் நிதி உதவி வழங்கப்பட்டன.
மெல்லிசை மன்னர் மேடையேற்றப்பட்டபோது standing ovation கொடுக்கப்பட்டது. ஒய்.ஜி.எம். குழுவில் தொடர்ந்து பாடுபவரும் தூர்தர்சன் இசை நிகழ்சிகளில் இடம் பிடிப்பவரும் அண்மையில் ஆசியாநெட் சானலில் ஐடியா ஸ்டார் சிங்கர் பரிசு பெற்றவருமான கல்பனாவிற்கு [நடிகர் இசையமைப்பாளர் ராகவேந்தர் மகள்] மெல்லிசை மன்னரின் கையால் பரிசளிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இளைய திலகம் பிரபு, இயக்குனர் சேரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தமிழகத்தில் அறியப்படுகிற ஒரு அரசியல்வாதியாக தான் இருப்பதே நடிகர் திலகத்தால்தான் என்றார் இளங்கோவன். விழாவின் ஹைலைட் சேரனின் உணர்ச்சி மிகுந்த பேச்சு. நடிகர் திலகம் வாழ்க என்று முழக்கமிட்டவாறே பேச்சை தொடங்கிய சேரன் தன்னை சிறு வயதில் வார்த்தெடுத்த சிவாஜி படங்களைப் பற்றி சொன்னார். தேசிய கீதம் படத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சி எடுத்ததைப் பற்றி, அவருக்கு கதை சொல்ல சென்றபோது நடந்த நிகழ்வுகளையெல்லாம் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார். நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தைப் பற்றி பேசும்போது கண் கலங்கிய சேரன் அவரை பற்றி ஒரு ஆவணப்படம் [டாகுமெண்டரி] எடுக்க இருப்பதை குறிப்பிட்டு இங்கே சிறப்பு விருந்தினராக தான் பெற்ற சிவாஜி விருது தேசிய விருதை விட மேலானது என்று சொல்லி விடை பெற்றார். இளைய திலகம் பிரபு, ரசிகர்களுக்கும் மகேந்திரனுக்கும் சேரனுக்கும் நன்றி தெரிவித்தார். இறுதியில் மகேந்திரன் நன்றி நவின்றார்.
அன்புடன்
http://i1094.photobucket.com/albums/...EDC4734a-1.jpg
2.10.2011 : அஹிம்சாமூர்த்தி, ஜீவகாருண்யசீலர், தேசப்பிதா, அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 143வது ஜெயந்தி.
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
உலகப்பெருந்தலைவருடன் உலகப்பெருநடிகர்
http://i1094.photobucket.com/albums/...arajar5a-1.jpg
2.10.2011 : முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம்.
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களுடன் நடிகர் திலகம்
http://i1094.photobucket.com/albums/...EDC4736a-1.jpg
1965-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் எல்லை யுத்தத்தின் போது நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் யுத்த நிதிக்கு தனது 200 பவுன் மதிப்புள்ள தங்கப்பேனாவை நமது நடிகர் திலகம் நன்கொடையாக பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் வழங்குகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்தத் தங்கப்பேனா தனது "ஸ்கூல் மாஸ்டர்(1958)" கன்னடப் படத்தில் கௌரவ நடிகராக நடித்ததற்காக பந்துலு அவர்கள் நடிகர் திலகத்திற்கு அன்புப்பரிசாக வழங்கிய பொருள்.
2.10.2011 : முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் 108வது பிறந்த தினம்.
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
கர்மவீரர் காமராஜர் அவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம். (2.10.2011)
http://i1087.photobucket.com/albums/...g?t=1317610076
சோகமே உருவாக நடிகர்திலகம்
http://2.bp.blogspot.com/-n-BKud2xS4...nedumaaran.jpg
சந்தோஷத்தின் விளிம்பில் நம் இதய தெய்வம்
http://2.bp.blogspot.com/-CjSzu_Lazl...seenivasan.jpg
ஏ.பி.என் மற்றும் கர்மவீரருடன் இதய வேந்தர்
http://www.webprapancham.com/news/ph...-kamarajar.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
பெருநடிகரும் பெருந்தலைவரும்
http://i1087.photobucket.com/albums/...g?t=1317611439
கல்விக்கண் திறந்த கர்மவீரர்
http://lh5.ggpht.com/-g8_CmCmJpV0/TI...QhAA-ks/17.jpg
http://www.thehindu.com/multimedia/d...ce_153657f.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 83வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் - இணைய தள செய்திகளின் தொகுப்பு
கீழ்க்காணும் இணைப்புகளில் பிறந்த நாள் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்தி/புகைப்படத் தொகுப்புகளைக் காணலாம்
http://3.bp.blogspot.com/-pqhWjR2WxK...25289%2529.jpg
http://movies.sulekha.com/prabhu_act...tion_picture_2
http://mimg.sulekha.com/prabhu/event...ictures056.jpg
http://www.tamilstar.org/photo-galle...lebration.html
http://www.zimbio.com/Tamil+Movies/a...bration+Stills
http://www.kalakkalcinema.com/tamil_...st.php?id=2813
அன்புடன்
டியர் வாசுதேவன்
பெருந்தலைவர் காமராஜ் நினைவு நிழற்படங்கள் அருமை. பாராட்டுக்கள்.
அன்புடன்
டியர் வாசுதேவன்,
03 அக்டோபர், சபாஷ் மீனா வெளியீட்டு நாளை நினைவு கூர்ந்து நிழற்படங்களை பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள்.
நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அன்புடன்
வசந்த மாளிகையில் அனைத்து உடைகளிலும் வண்ணத் தமிழ் நடிகர்
http://i1087.photobucket.com/albums/...n31355/1-2.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/2-1.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/3-1.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/4-1.jpg
Full padam partha mathiri irukku-nandri
Ithu super pammalar sir-nan parthathillai-perunthalaivarudan nam thalaivar-wow
சாரதா மேடம் அவர்களே! தங்களுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களுக்கும், உணர்வுப்பூர்வமான பாராட்டுக்கும் நன்றிகள் பல.
திரு.பம்மலார் அவ்ர்களே, கடந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் சிலை அமைந்தது போல, இந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் நடிகர்திலகத்திற்கு மணிமண்டபம் அமைந்தால், உங்களைப் போல நானும் மகிழ்ச்சியடைவேன்.
திரு.முரளி அவர்களே, திரு.வாசுதேவன் அவர்களே த்ங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.
---------------------------------------------------------------------------------------------------------------------
"06.10.2011 விஜயதசமி அன்று பூஜையுடன் நமது NTFANS - Nadigar Thilagam Film Analysis and Nostalgic Society - நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் கருத்தாய்வு மற்றும் நினைவூட்டல் அமைப்பு - தொடங்கப் படுகிறது
விரைவில் இதற்கான உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் மற்றும் சட்ட திட்டங்கள் நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் வெளியிடப் படும். ஏற்கெனவே நம் மய்ய நண்பர்கள் சிலர் உறுப்பினர் ஆக பெயர் தந்து விட்டனர். ஆர்வம் உள்ளோர் இந்த வாய்ப்பினைப் பயன் படுத்திக் கொள்ளலாம். "
----------------------------------------------------------------------------------------------------------------------
திரு. ராகவேந்திரன் அவர்களே. அருமையான செய்தி. என்னுடைய பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். அதற்கான கட்டணம், செலுத்தும் நடைமுறைகளை அறிய ஆவலாய் உள்ளேன். நன்றி.
Dear friends,
Our NT's 83rd birthday video http://www.tubetamil.com/view_video....1a985b3d16e57e.
Cheers,
Sathish
------------------------------------------------------------------------------------------------------------------
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 83வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் - இணைய தள செய்திகளின் தொகுப்பு - திரு.ராகவேந்திரன்
1.10.2011 : 84வது சிவாஜி ஜெயந்தி
- திரு.பம்மலார்
நடிகர் திலகத்தின் 83-வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக இன்று நடந்தேறியது
- திரு. முரளி சீனிவாஸ்
'சிவாஜி ஆண்டு 84' முதல் நாள். - சாரதா மேடம்
உலகத் தமிழர்களின் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடித்த யுகக் கலைஞனுக்கு இன்று 84-வது பிறந்த நாளாம். - திரு.பார்த்தசாரதி
ந்டிகர்திலகத்தின் 84-வது பிறந்தநாளை முன்னிட்டு. . . . . . . . . . . . . . . - k.சந்திரசேகரன்
"NT's 83rd birthday celebration
Cheers,
Sathish "
---------------------------------------------------------------------------------------------------------------------
இதில் எது சரியானது என்பதில் எனக்குள்ள குழப்பத்தை நமது சீனியர் ஹப்பர்கள் தீர்த்துவைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
நன்றி.
இதில் குழப்பத்திற்கு ஏதும் இல்லை. அவரவர் பாணியில் கணக்கிடுதல் தான் காரணம். ஆங்கிலேயர் குழந்தை பிறந்து ஓராண்டு முடிந்து அடுத்த ஆண்டு பிறக்கும் போது அதனை இரண்டாம் ஆண்டு துவக்கம் என்கின்றனர். நம் சம்பிரதாயத்தில் குழந்தை பிறந்து ஓராண்டு முடிந்து அடுத்த ஆண்டு துவங்கும் போது அதனை முதல் முறை பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடுகிறோம். அதனால் நம்மவர்களில் சிலர் அதனை முதலாம் ஆண்டு என்று கணக்கிடுகின்றனர். அதனை 1வது பிறந்த நாள் என்று கணக்கிட்டுக் கொண்டாடும் போது முடிவடையும் பிராயத்தையே பிறந்த நாள் ஆண்டுக் கணக்காக எடுத்துக் கொள்கின்றனர். இது அவரவர் கணக்கிடும் முறையினைப் பொறுத்து அமைவதாகும்.Quote:
இதில் எது சரியானது என்பதில் எனக்குள்ள குழப்பத்தை நமது சீனியர் ஹப்பர்கள் தீர்த்துவைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்
அன்புடன்
சரித்திர நாயகன் நினைவுகள்
நெடுந்தகடு மிகவும் அபூர்வமான பொக்கிஷமாக வந்துள்ளது. இயக்குநர்கள் ஏ.சி.திருலோக்சந்தர், மேஜர், விஜயன் மற்றும் பி.மாதவன் ஆகியோரிடம் கலந்துரையாடலும் மற்றும் நடிகர் திலகத்தின் பேட்டியும் ஒரு பக்கம் உள்ளத்தில் மகிழ்வூட்டுகிறது என்றால், மற்றொரு பக்கம் அவருடைய இறுதி யாத்திரை உள்ளத்தை உருக்குவதாக உள்ளது. அனைத்து சிவாஜி ரசிகர்களும் தவறாமல் வாங்கி பாதுகாக்க வேண்டிய கருவூலம் இந் நெடுந்தகடு. வெளியிட்ட நிறுவனத்திற்கு நமது பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள்.
தன்னுடைய பேட்டியில் நடிகர் திலகம் காஞ்சிப் பெரியவரைத் தான் எப்படி observe செய்தேன் என்பதைக் கூறும் போது வரும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...NTsnap01fw.jpg
இயக்குநர்கள் மேஜர், திருலோக்சந்தர், மாதவன் மற்றும் விஜயன் ஆகியோருடன் நடிகர் திலகம் உரையாடும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...irectorsfw.jpg
அன்புடன்
என்ன தான் புத்தகங்களைப் படித்தாலும் தன் வாழ்க்கை அனுபவங்களைத் தானே கூறும் போது ஏற்படும் உணர்வு வார்த்தைகளில் அடங்காது. தான் சீதாவாக நடித்தை மிகவும் சிலாகித்து சொல்கிறார் நடிகர் திலகம் இந் நெடுந்தகட்டில். முதலில் பெண் வேடமிட்டாலும் தான் முதலில் ஏற்ற குறிப்பிடத்தக்க முக்கிய கதாபாத்திரம் அகத்தியர் பாத்திரம் என்று கூறுகிறார். அகத்தியராக நடிக்கும் போது நீண்ட தாடி இருந்ததாகவும் நடக்கும் போது பல முறை கால் தடுக்கியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
நெடுந்தகட்டின் விவரங்கள் தொடரும்...
நன்றி ராகவேந்திரன் அவர்களே.
நம் நடிகர்திலகம் அவர்களைப் பொறுத்தவரை, அவர் உயிருடன் இருந்தபோதும், அவர் மறைந்து சில வருடங்கள் கொண்டாடப்பட்ட ஆவணங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆண்டு (2011) 84வது பிறந்தநாள் வருகிறது.
அதுபோல அரசாங்க சார்பில் அனுசரிக்கப்படும் எந்த பிறந்தநாள் விழாக்கள் ஆனாலும் (அகில இந்திய அளவில் காந்தி, நேரு தமிழகத்தில் பெரியார், அண்ணா உட்பட) இரண்டாம் ஆண்டு துவக்கம் என்ற் கணக்கின் அடிப்படையிலேயே ந்டத்தப்படுகின்ற்ன.
சரித்திர நாயகன் நினைவுகள் நெடுந்தகடு குறித்த விபரங்களுக்கு ந்ன்றி ராக்வேந்திர்ன் அவர்களே
hi shekar
i saw you function photographs it was too good work shekar congrats
regards
kumaresh
Thanks for your appreciation Kumaresh.
Nadigar Thillagam Sivaji Ganesan 83rd Birthday celebration - Video Part 1 and 2
http://www.youtube.com/watch?v=Umeec621CbM
http://www.youtube.com/watch?v=gtl_ug1kZo4