ஸ்டாரில் 'ஆண்டவன் கட்டளை' புகைப்படத்துக்கு ராகவேந்திரன் சாருக்கும், நௌ சாருக்கும் நன்றி!
டியர் ஷிவ்ராம்,
தங்களின் பாராட்டுக்கு நன்றி! தங்களது பதிவுகள் மட்டும் சளைத்ததா என்ன?! தகவல்களை அள்ளி அள்ளித் தருகின்றனவே!
அன்புடன்,
பம்மலார்.
Printable View
ஸ்டாரில் 'ஆண்டவன் கட்டளை' புகைப்படத்துக்கு ராகவேந்திரன் சாருக்கும், நௌ சாருக்கும் நன்றி!
டியர் ஷிவ்ராம்,
தங்களின் பாராட்டுக்கு நன்றி! தங்களது பதிவுகள் மட்டும் சளைத்ததா என்ன?! தகவல்களை அள்ளி அள்ளித் தருகின்றனவே!
அன்புடன்,
பம்மலார்.
டியர் ஷிவராம்.Quote:
Originally Posted by SHIV
தங்கள் பாராட்டுக்கு நன்றி.
நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். இது பற்றிய விரிவான செய்தி நமது திரியின் ஆறாவது பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 122
கே: நடிகர் திலகம் நடிக்கும் படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, மற்ற நடிகர்கள் நடிக்கும் போது ஏற்படுவதில்லையே, ஏன்? (கே.எல்.கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)
ப: அவர் நடிகர்களுக்கெல்லாம் திலகம் போன்றவர் என்பதால் தான். அவர் நடிக்கப் பிறந்தவர். மற்ற பலர் நடிக்க வந்தவர்கள்.
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 123
கே: சிவாஜி கணேசன் தர்மம் செய்வதில்லை என்று கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (வ.மு.சுந்தரவதனம், மாயூரம்)
ப: அவருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்வதற்கு சமமாக.
(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1964)
அன்புடன்,
பம்மலார்.
"என்னுடைய இத்தனை வருட கலைப் பயணத்தில் எனக்கு மிகப் பெரிய முன்னோடியாக, என்னை பாதித்தவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஒளி கொடுக்கும் ஒரு சூரியன் மாதிரி அவர் இருந்தார்."
- 'சினிமா எக்ஸ்பிரஸ்' 16-31 ஆகஸ்ட் 2010 இதழில் கலைஞானி கமல்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார், பம்மலார், சகோதரி சாரதா மற்றும் நண்பர்கள்,
பாலும் பழமும் சாதனை புரிந்த விவரமும் அது புரிய விடாமல் செய்யப் பட்ட விவரமும் விவரமாக விவரமறிந்தவர்களால் விவரமறிய வேண்டியவர்களுக்கு தெரிவித்திருக்கிறீர்கள். தங்களுக்கு அனைத்து சிவாஜி ரசிகர்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
நடிகர் திலகத்தின் படங்களுக்கு அவர் படங்களே வில்லன் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதற்கு மற்றொரு உதாரணம் தங்க சுரங்கம்.
இதில் ஒரு சோகம் என்னவென்றால் ஒரு படத்தைத் தூக்கிவிட்டு வெளி வரும் அடுத்த படம் அதைவிட அருமையான படமாய் அமைவது தான். வளர் பிறை மிகச் சிறந்த படம். காட்சிக்கு காட்சி நடிகர் திலகத்தின் நடிப்பு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். கே.வி.மகாதேவனின் இசையில் பாடல்கள் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். குறிப்பாக சலசலக்குது காத்து பாடல். இதுவும் நன்கு ஓடியிருக்க வேண்டிய படமே. Method Acting, Subdued Acting என்று நடிப்பில் எத்தனை விதம் உண்டோ அத்தனையும் செய்து காட்டியிருப்பார்.
வாய்ப்புக்கு நன்றி
அன்புடன்
ராகவேந்திரன்
வசூல் சக்கரவர்த்தி - 5
'பாலும் பழமும்' முதல் வெளியீட்டில் (9.9.1961) சென்னை சாந்தி மற்றும் மதுரை சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் பெற்ற வசூல் விவரம்:
[ஊர் - அரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.- பை.)]
1. சென்னை - சாந்தி - 127 நாள் - 3,06,167-68
2. மதுரை - சென்ட்ரல் - 127 நாள் - 2,50,528-76
இந்த இரண்டு பிரிண்டுகள் மட்டுமன்றி, 'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் ஒவ்வொரு பிரிண்டுமே வசூல் பிரளையம் தான்!
அன்புடன்,
பம்மலார்.
The following is taken from a blog of one Mr.Ravichandran, who hails from Mannargudi. Thanks to Joe for pointing it out.
-------------------------------------------------------------------------------------
நான் பார்த்த திரைப்படஙகளிலேயே என்னை மிகவும் பாதித்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ”முதல் மரியாதை”.
நான் பள்ளியில் படித்த பதினேழு வயது வரை பார்த்த படங்களின் எண்ணிக்கை ஒரு பதினைந்து இருக்கும் அவ்வளவுதான். காரணம்.. அப்பா எங்களை படம் பார்க்க அனுமதிக்க மாட்டார். படம் பார்த்தால் படிப்பு கெட்டுவிடும் என்பது அவருடைய நம்பிக்கை. நானும் நல்ல பிள்ளையாக பள்ளியில் படித்து வந்ததால் அண்ணன் மாதிரி அப்பாவிற்கு தெரியாமலோ அல்லது பள்ளியை கட் அடித்து விட்டோ சினிமாவிற்கு சென்றது கிடையாது. பள்ளியில் படித்தபோது எல்லோரையும் போல் எனக்கு M.G.R மற்றும் ரஜினி படங்கள்தான் பிடிக்கும். காரணம்.. சண்டைக் காட்சிகள் மற்றும் மசாலா. குறிப்பாக சிவாஜி படங்கள் பிடிக்கவே பிடிக்காது. நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் சிவாஜி படம் “தெய்வ மகன்”... அந்த படத்தில் கோர முகத்துடன் நடித்த சிவாஜியை பார்த்து படம் பார்க்கும்போதே அழுதுவிட்டேன். இனிமேல் இந்த அழுமூஞ்சி சிவாஜி படம் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு பார்த்த படங்கள் உரிமைக்குரல், விவசாயி, முரட்டுக்காளை, பில்லா... போன்ற பெரும்பாலும் M.G.R, ரஜினி படங்கள்தான்.
1985-ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பிறகு நானும் என் நண்பன் ராஜாராமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏதோவொரு புகழ்பெற்ற புதிய ஆங்கிலப்படம் பார்க்கலாம் என்ற பிளானுடன் தேவி தியேட்டருக்கு மேட்னி ஷோ போனோம். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் பக்கத்திலிருந்த சாந்தி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த “முதல் மரியாதை” படத்திற்குச் சென்றோம்.
படம் ஆரம்பித்தவுடன் அப்படியே எங்கள் கிராமத்தில் நடக்கும் உண்மை சம்பவங்கள் போல் என் கண் முன்பே காட்சிகள் நடக்கின்றன. படத்தில் வரும் சிவாஜி மாதிரியேதான் என் அப்பாவின் தோற்றம் இருக்கும். படத்தில் சிவாஜி கொஞ்சம் பருமனாக இருப்பார். அப்பா சற்று மெலிந்த தேகம்...சிவாஜியின் உடல்மொழி அப்படியே அப்பாவின் உடல்மொழி! முதன் முறையாக ஒரு படத்தை அதன் கதைக்காவும், சிவாஜி என்ற நடிகரின் நடிப்புக்காவும், இயக்குநரின் திறமைக்காவும், இசைக்காவும், பாடல்களுக்காவும் ரசித்து பார்த்த படம். படம் முடிந்தவுடன் படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட்டு உடனே என்னால் எழ முடியவில்லை.
ராஜா என்னைப்பார்த்து “ஏன்டா... ஒரு மாதிரி இருக்கிறாய் என்றான்”. அவன் ஒரு சினிமா புலி. மன்னார்குடியில் செண்பகா தியேட்டருக்கு எதிரில்தான் அவன் வீடு. வாரத்திற்கு ஒரு படம் பார்த்தவன் அவன். ஆனால்... இந்த படம் என் முகத்தில் அறைந்து படம் என்பது சண்டை காட்சிகள் மற்றும் மாசாலாவிற்காக மட்டும் பார்ப்பது கிடையாது என்று உணர்த்திய படம். சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரையும், பாரதிராஜா என்ற கலைஞனையும், இளையராஜா என்ற இசை மேதையையும், வைரமுத்து என்ற கவிஞனையும் எனக்கு அறிமுகப் படுத்திய படம்.
படம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பி வந்ததிலிருந்து எந்நேரமும் படத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். படத்தின் காட்சிகள், பாடல்கள் என் மணக்கண்ணில் ஓடிக்கொண்டேயிருந்தன. இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் தைரியாமாக பஸ்ஸில் தனியாக சாந்தி தியேட்டர் சென்று இரண்டாவது முறையாகப் பார்த்தேன். நான் வாழ்க்கையில் இரண்டாவது தடவைப் பார்த்த முதல் படம்!
அப்பா இறந்தவுடன் அப்பா ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த படத்தைப் பார்ப்பேன். இதுவரை கிட்டத்தட்ட 25 தடவைக்கு மேல் இந்தப் படத்தைப் பார்த்திருப்பேன்.
- மிகையான நடிப்பு, செட் போட்டு ஸ்டியோக்களில் எடுக்கப்படும் படங்கள் என்றிருந்த தமிழ் சினிமாவிற்கு உண்மையான கிராமம், யதார்தமான நடிப்பு, நல்ல ஒளிப்பதிவு என்பதன் மூலம் புதிய சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிராஜா. சிவாஜி இறக்கும் தருவாயில் இருக்கும் காட்சியில் ஆரம்பித்து.. பிளாஸ்பேக்கில் கதை சொல்லி நம்மை படத்துடன் கட்டிப் போட்டு விட்டிருப்பார் பாரதிராஜா
- சிவாஜி கணேசன் என்ற கலைஞன் ஒரு “அட்சய பாத்திரம்” என்று சிவாஜியின் தீவிர ரசிகரான நண்பர் ஜோ கூறுவார். அது முற்றிலும் உண்மை. யதார்த்தமான நடிப்பு, மிகையான நடிப்பு என்று டைரக்டர் தனக்கு தேவைப்பட்டதை அந்த அட்சய பாத்திரத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த படத்தில் பாரதிராஜா எதிர்பார்த்த பெரிய மனிதர் மலைச்சாமி தேவர் என்ற கதாபாத்திரத்திற்கான யாதார்தமான நடிப்பை கொடுத்திருப்பார் நடிகர் திலகம். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இறுதி காட்சி, “உன் கை பக்குவத்தை சாப்பிடும்போது என் ஆத்தா ஞாபகம் வந்திடுச்சி” என்று கண்கலங்கி ராதா வீட்டில் மீன் குழம்பு சாப்பிடும் காட்சி. “பூங்காற்று திரும்புமா” என்ற பாடலுக்கு காட்டும் முகபாவணைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்....
உடையிலும், நடிப்பிலும் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து நடித்த ராதாவிற்கு இந்த படம் ஒரு மைல் கல்.
ஒரு கிராமத்து அடங்காப் பிடாரி பெண்மணியாக இந்த படத்தில் வாழ்ந்திருப்பார் வடிவுக்கரசி. இந்த மாதிரி வேடத்தில் காந்திமதியை விட என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்திருப்பார்.
- காமெடிக்கு ஜனகராஜ்... மக்கள் ஓட்டுவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஜனகராஜ் போன்ற இளிச்சவாயன் இருப்பார்
- இளையராஜா பாடல்கள் + பிண்ணனி இசை இரண்டிலும் ஒரு இசை வேள்வியே நடதியிருப்பார். குறிப்பாக “பூங்காற்று திரும்புமா” என்ற பாடல். இந்தப் பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பாடல். இந்தப் பாடலைப் கேட்கும் போதெல்லாம் மனம் என்னவோ செய்யும். கவிஞர் வைரமுத்துவிற்கு தேசிய விருது வாங்கித் தந்த பாடல். வைரமுத்து வார்த்தைகளில் புகுந்து விளையாடிருப்பார். ”அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்”, “வெட்டி வேரு வாசம்” பாடல்களும் அருமையான பாடல்கள். இளையராஜா, வைரமுத்து என்ற இரண்டு மகா கலைஞர்கள் தங்களின் ஈகோவால் ரசிகர்களாகிய நமக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றுதான் கூறுவேன்.
இப்படி இந்த படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்............
முதல் மரியாதை – ஒரு அருமையான கிராமத்து காவியம்!
-------------------------------------------------------------------------------------
Link to the blog - http://vssravi.blogspot.com/2010/09/10.html.
Regards
ராகவேந்தர் சார்,
நன்றி எதற்கு? இந்த பதிவுகள் இன்றைய மற்றும் நாளைய தலைமுறைகளுக்கு உண்மையை உணர்த்தவே!
இது நாள் வரை காண வாய்ப்பு கிடைக்காத வளர் பிறை படத்தைப் பற்றி ஆவலை தூண்டும் விதமாக எழுதியுள்ளீர்கள். பார்க்க வேண்டும்.
சுவாமி,
சென்னை மதுரை வசூல் விவரங்களை பாலும் பழமுமாக தந்ததற்கு நன்றி.
அன்புடன்
முரளி சார் மற்றும் பம்மலார் சார்,
தங்கள் பணி மேலும் மேலும் தொடர வேண்டும். மிக சிறப்பாக கருத்துக்களையும் சாதனை விவரங்களையும் சுட்டிக் காட்டி வருகிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி கூற அனைத்து சிவாஜி ரசிகர்களுமே கடமைப் பட்டுள்ளோம். பாலும் பழமும் வசூல் விவரங்கள் பிரமிக்க வைக்கின்றன ( பொதுவாக வசூல் சாதனைகளைப் பற்றி நான் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டாவிட்டாலு்ம் கூட, நாள் கணக்கிலும் விழா கணக்கிலும் நிச்சயம் ஆவலுண்டு).
அன்புடன்
ராகவேந்திரன்
அண்மையில் மெகா டி.வி.யில் நமது இதய வேந்தர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் ஒரு தகவலை சொன்னார் பலர் கேட்டிருக்கக் கூடும். சிவந்த மண் படத்தில் இடம் பெற்ற ஒரு நாளிலே பாடலைப் பற்றிய தகவல். அந்த் பாடலை பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் முதலில் பாடி பின்னர் டி.எம்.எஸ். பாடி பதிவு செய்யப் பட்ட செய்தியைப் பற்றியது. இது தொடர்பாக என் நினைவிலுள்ள சில செய்திகளை பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
இந்த செய்தி அந்தக் காலகட்டத்திலேயே ஒரு சினிமா இதழில் வெளிவந்தது, பொம்மை, பேசும்படம் போன்ற பிரபல இதழல்ல. அந்த இதழின் பெயர் நினைவில்லை என்றாலும் செய்தி நினைவிலுள்ளது. மெல்லிசை மன்னரிடமும் ஸ்ரீதரிடமும் நடிகர் திலகம் அவர்கள் இது பற்றி விவாதித்ததாக அந்த பத்திரிகையில் படித்த நினைவு. தமிழ் வார்த்தைகள் சிலவற்றின் பிரயோகத்தில் சில கருத்து வேறுபாடுகள் வந்ததாகவும், மேலும் டி.எம்.எஸ். அவர்களின் குரல் நடிகர் திலகத்தின் படங்களுக்கு பயன் படுத்தப் பட்டு வந்ததில் வினியோகஸ்தர்களின் பங்கு பெருமளவு இருந்ததாகவும் செய்தி. பாலமுரளி கிருஷ்ணா அவர்களைப் பற்றி நடிகர் திலகம் மிகமிக உயர்ந்த அளவில் மதிப்பு வைத்திருந்தார்கள். ஆனால் அந்தப் பாடல் பல தரப்பினரின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் டி.எம்.எஸ். அவர்களின் குரலில் மீண்டும் பதிவு செய்யப் பட்டது. இதை சொல்ல காரணம் நடிகர் திலகம் மட்டுமே பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் பாடல் வேண்டாம் என்று சொன்னது போல் ஒரு கருத்து நிலவிவிடக் கூடாதே என்கின்ற காரணத்தால் தான். அந்த தமிழில் இருந்த சில பிரயோகங்களைப் பற்றிய கருத்தையே கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சுட்டிக் காட்டியதாகவும் அதன் பின்னரே இருவரும் சேர்ந்து மீண்டும் டி.எம்.எஸ். அவர்களைப் பாடவைத்ததாகவு்ம் அந்த பத்திரிகையில் செய்தி வெளிவந்திருந்தது.
அந்தப் பத்திரிகையின் பிரதியோ அல்லது பெயரோ நினைவில் இல்லை. இருந்திருந்தால் அதனை இப்போது இங்கே நாம் பதித்திருக்கலாம்.
அன்புடன்
ராகவேந்திரன்
கலைச்சூரியனைப் பற்றி ரவிச்சந்திரன் எழுதிய "முதல் மரியாதை" படப் பதிவு அருமையிலும் அருமை. பகிர்ந்து கொண்ட ஜோ சாருக்கும், முரளி சாருக்கும் பற்பல நன்றிகள்!
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்களுக்கு பணிவான நன்றிகள்! "ஒரு நாளிலே உறவானதே" பாடல் பற்றிய சுவையான தகவல்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Navarthna Films "Ethiroli" (1970) was produced by G.Velumani and directed by K.Balachander.
KVM scored the music for this film.
டியர் ராகவேந்தர்,Quote:
Originally Posted by RAGHAVENDRA
உங்களின் கூற்றை நானும் ஆமோதிக்கிறேன்.
ஏனென்றால், அன்றைய மக்கள் தொகை, அன்றைய விலைவாசி, தியேட்டர்களில் அன்றைய டிக்கட் கட்டணம்... இவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து, அன்றைய மூன்று லட்சம் என்பது இன்றைக்கு எத்தனை லட்சம் (அல்லது கோடி) என்று புறிந்து கொளபவர்கள் மிகக்குறைவு.
உதாரணமாக சென்னை சாந்தி தியேட்டரில் 'பாலும் பழமும்' வந்தபோது டிக்கட் கட்டணம்:
பால்கனி : 2 ரூபாய் 50 பை,
முதல் வகுப்பு : 2 ரூபாய்
இரண்டாம் வகுப்பு : 1 ரூபாய் 66 பை
மூன்றாம் வகுப்பு : 1 ரூபாய் 25 பை.
ஆனால் இன்றைக்கு அதே சாந்தி தியேட்டரில் பாலக்னி டிக்கட் 80 ரூபாய் (32 மடங்கு).
இதே போலத்தான் எல்லா திரையரங்குகளிலும் டிக்கட் விலை எகிறிப்போய் இருக்கிறது. இந்நிலையில் அன்றைய வசூல் விவரங்களைக் காண்போர் "என்ன பெரிய வசூல்..? சிவாஜி படத்தின் 100 நாள் வசூலை எங்கள் அஜீத், விஜய் படங்கள் ஐந்து நாட்களில் முறியடிக்கின்றன" என்று பேசுவோரும் உண்டு, ஒரு சிலரைத்தவிர.
அன்றைக்கு காசுக்கு மதிப்பிருந்த காலம். மக்கள் பைசா, பைசாவாகப் பார்த்து செலவழித்த காலம். இவ்வளவு ஏன்?. ஒரு தியேட்டரில் 1 ரூ.25 காசு டிக்கட் ஃபுல் ஆகி விட்டால், அடுத்த டிக்கட்டான 1.75-க்குப்போக மனமின்றி (அல்லது வசதியின்றி), வீட்டுக்குப்போய்விட்டு அடுத்த காட்சிக்கு அதே 1.25 டிக்கட்டுக்கு மக்கள் வந்து நின்ற காலம். அத்தைகைய காலத்தில் படங்கள் புரிந்த சாதனைகள் நிச்சயம் மகத்தானவை.
அதே போல தயாரிப்பு செலவுகளும் மிகக்குறைவு. Rs.10 லட்சத்துக்குள் ஃபர்ஸ்ட் காப்பி ரெடியான காலம். இயக்குனர் விசு கூட 80-களில் தனது படங்களை 30 லட்சத்துக்குள் ஃபர்ஸ்ட் காப்பியை வெளிக்கொண்டு வந்ததாக சொல்லியிருக்கிறார். ஆனால் இன்றைக்கு 30 லட்சம் என்பது, படப்பிடிப்பின்போது அளிக்கப்படும் டீ, காஃபி செலவு.
எனவே 'அன்றும் - இன்றும்' என்று ஒப்பிட்டுப்பார்க்கும் மனநிலை மக்களுக்கு வராத வரையில் வசூல் கணக்கை வெளியிடத்தேவையில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
ஆனால் நீங்கள் சொன்னது போல, படங்கள் ஓடிய நாட்கள், கொண்டாடிய விழாக்கள், பெற்ற விருதுகள் என்பவையெல்லாம் மிகவும் தேவையான, அத்தியாவசியமான விவரங்களே.
அதோடு டி.எம்.எஸ். அவர்கள் மிக அமைதியாகப்பாடிய அருமையான தத்துவப்பாடல்...Quote:
Originally Posted by RAGHAVENDRA
"பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்".
'வளர்பிறை' போல பல படங்கள் மறு வெளியீடுகளில் எட்டிப்பார்க்கவில்லை. 'புனர் ஜென்மம்' கூட ரொம்ப நாட்களூக்குப்பின் இப்போதுதான் காணக்கிடைத்தது. அதுபோலவே 'எல்லாம் உனக்காக', 'செந்தாமரை' திரைப்படங்களும் மறு வெளியீடுகளிலோ, தொலைக்காட்சிகளிலோ வரவில்லை. 'நிச்சய தாம்பூலமும்' சமீப காலமாக ஒளிந்துகொண்டது.
அன்புச் சகோதரி சாரதா அவர்களுக்கு மிக்க நன்றி. ஒப்பீடு செய்து எல்லா புள்ளி விவரங்களையும் ஆராய்ந்து அதன் பின் செய்யப் படும் முடிவுகள் நிச்சயமாக நியாயமாக இருக்கும். அப்படி செய்யப் படும் பெரும்பாலான முடிவுகள் நடிகர் திலகத்தின் சாதனைகளை பறை சாற்றும். ஆனால் இன்று பெரும்பாலான பத்திரிகைகளும் மீடியாக்களும் முன்கூட்டியே இன்னார் தான் என்று தீர்மானித்து அதற்கேற்றார்போல் கருத்துக்களை வெளியிடுகின்றன. உதாரணத்திற்கு இம்மாதம் முழுதும் ராஜ் டி.வி.யில் நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப் படுகின்றன. அதைப் பற்றிக் கூறாத ஒரு பிரபல காலைப் பத்திரிகை, வேறொரு நடிகர் படத்தை மட்டும் கட்டம் கட்டி பிரசுரிக்கின்றது. இப்படிப்பட்ட தீர்மானிக்கப் பட்ட மனநிலையில் இருப்பவர்களிடம் எந்த விதமான நியாயத்தையோ அல்லது தர்மத்தையோ எதிர்பார்க்க முடியும்.
பொதுவாக ஒரு நடிகரின் வெற்றி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் எத்தனை படங்கள் கொடுத்திருக்கிறார், எத்தனை வசூலாகியுள்ளது, எத்தனை நாட்கள் எத்தனை ஊர்கள் ஓடியுள்ளது, திரையிட்ட அரங்குகளில் எத்தனை நூறு நாட்களை அல்லது வெள்ளி விழாக்களை எட்டியுள்ளன என்பன போன்ற அனைத்துப் புள்ளி விவரங்களையும் ஒரு சேர அலசி ஆய்ந்து இறுதியில் வரக்கூடிய வெற்றியின் சதவீதமே அவரின் சாதனையைப் பறை சாற்றும். நடிகர் திலகம் படங்கள் மற்றும் எம்.ஜி.ஆர். படங்கள் இருவரின் வெற்றியைக் கணக்கிட்டால் சதவீதக் கணக்கில் ஒரு புள்ளி, அல்லது இரண்டு புள்ளி, அல்லது 0.5 புள்ளி என்ற அளவில் தான் வெற்றி வித்தியாசம் வரும். ஒரு நேரத்தில் இவருக்கும் ஒரு நேரத்தில் அவருக்கும் என மாறி மாறி வித்தியாசம் இருக்கும், அந்த வித்தியாசம் மிகக் குறைந்த அளவில் தான் இருக்கும்.
இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இன்று காணப் படவில்லை என்பதே கசப்பான உண்மை. ஏனோ நடிகர் திலகத்தின் படங்களின் வெற்றியைப் பற்றி எழுதுவதே பாவம் என்கிற அளவில் இன்று போக்கு காணப் படுகிறது.
இதற்கு ஒரு முக்கியமான காரணமாக அரசியலைப் பற்றித் தான் கூற வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்கள் அரசியலில் ஈடுபடாமல் இருந்திருந்தாலோ அல்லது எந்தப் பதவியிலும் இல்லாதிருந்தாலோ அவருடைய படங்களின் வெற்றியைப் பற்றியும் இதே மனப்பான்மையும் போக்கும் தான் வெளிப் பட்டிருக்கும்.
மற்றொரு உதாரணமும் கூறலாம். இதே பத்திரிகைகளும் மீடியாக்களும் நாம் அரசியலில் இருந்தால் முக்கியமான பதவிகளில் இருந்தால் சிவாஜி தான் வசூல் சக்கரவர்த்தி என்று தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள்
இது தான் நிதர்சனமான உண்மை.
அன்புடன்
ராகவேந்திரன்
Pammalar sir,
Amazing records about 'Paalum Pazamum' in the begining of its Golden Jubilee year. Wonderful details... :clap:
Hats off.
Murali sir / Saradha mam
worthful informations about the selfishness of AVM concern for pulling out Paalum Pazamum from its silver success :2thumbsup: . Your posts bring several facts and happenings in the past. This might be because of lack of proper orgonisers...?.
This is for AVM... :hammer:
Raghavendar sir & saradha
I accept your views about non-mentioning of old days collections, which is not suitable for current years.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 124
கே: சிவாஜி கணேசன் ஒரு படத்தை டைரக்ட் செய்தால் என்ன? (இரா.பெரிய நாயகம், வீரபாண்டி)
ப: அதற்கான திறமை அவருக்கு நிறைய உண்டு. ஆனால் நேரம் தான் கிடையாது.
(ஆதாரம் : பொம்மை, செப்டம்பர் 1982)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 125
கே: சிவாஜியின் 'உயர்ந்த மனிதன்' எப்படியிருக்கிறது? (என்.சங்கரன், சென்னை - 52)
ப: சிவாஜியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
(ஆதாரம் : பேசும் படம், பிப்ரவரி 1969)
அன்புடன்,
பம்மலார்.
Welcome back Mr.Karthik. Thanks a lot for your whole-hearted appreciation.
Warm Wishes,
Pammalar.
அண்மையில் தவமாய் தவமிருந்து படம் பார்த்தேன். அதில் அப்பா வேடத்தில் வரும் ராஜ்கிரண் பாத்திர அமைப்பு நன்றாக இருந்தது.
இது போன்ற பாத்திரங்களில் நம் NT அவர்கள் வியட்நாம் வீடு, கெளரவம் படங்களில் நடித்திருந்தாலும் அது நகர வாழ்க்கையை ஒட்டி அமைத்திருந்தது, எனினும் எங்க ஊர் ராஜா படம் மனதுக்கு நிறைவளித்தது.
நம் தலைவர் ஒரு அட்சய பாத்திரம்.
ஆனால் அவரிடம் இது போன்ற யதார்த்தமான கதைகள் கூறாமல் அன்பே ஆருயிரே, லாரி டிரைவர் ராஜாகண்ணு போன்ற கதையை எடுத்து வீணடித்து விட்டனர்.
குறிப்பாக 1975-1976 ஆண்டு காலகட்டத்தில் இது போன்ற கதைகள் அமையவில்லை என்பது என் ஆதங்கம்.
Thanks Murali, Saradha sister, Raghavendra and Swamthinathan.
What a movie PP and what a collection. As Saradha pointed out there are few section in the media want to hide our god NT's success in box office. At any time our NT movie will beat any actor's box office.
When Murali said about PM, PasaMalar and PP, my first impression was that all these movies 25 weeks movies. But as always our NT movies are competition for NT movies.
Radhakrishnan, I can understand your worries. But for me any movies we can watch just for NT face. I won't mind to watch LDR for 100 times just for NT.
Cheers,
Sathish
Recently I have fortunated to watch 'SATHYAM' (1976) after a long time. Co-starred by Kamal, Jayachitra, Manjula. Fully njoyed the movie.
Another reason for my joy is, Devika paired with NT after long time, but proved she is his best pair. Good songs for Kamal by SPB (kalyAna kOyilin dheiveega kalasam, azagAm kodi siridhu). But I dont like TMs song 'pOttAnE oru pOdu' for NT. Better avoid such songs.
How this movie was received in first release, in Tamilnadu..?.
Dear Karthik,
Happy to read your post on Sathyam. My first surprise was how and where you saw that movie? Because it wasn't telecast in Tamil channels. Raj Video Vision released the VCD of that movie very long back and later on nowhere it is available. May be you might have had access to that old VCD. and it is really worth a watch.
Kamal in many scenes would look a little nervous or uncomfortable. NT had to give a lot of enthusiasm and encouragement for him to act at his will. Halfway SA Kannan made the screenplay to suit that uncomfort of Kamal and made the character that way, I heard.
As you said, KVM was a disappointment in this film. During late 70s I was very much disappointed by KVM in Tamil films. Reason, he used almost all his Telugu tunes in Tamil, whereas during the 60s the tunes of KVM for Tamil stood apart.
Accordingly Sathyam songs made you feel you were watching a Telugu movie. I thought the producers should have invited Mellisai Mannar for this film. Particularly the TMS song was utter disappointment.
Of course, other aspects of the film rose to the occasion. Devika was apt in this film with NT.
This film was also caught amidst the uncomfortable period for NT fans 1976. The only exception being Uthaman, all others suffered the political outcome during that period.
Anyhow, Sathyam was not a fast paced movie and even had it been released in other periods, it would not have made much of a difference.
Sathyam watchable for one and only NT and for a portion, the up and coming Kamal.
Raghavendran
Thanks Raghavendra for giving more details about Sathyam. But I beleive this movie is a 100 days movie. Murali sir and Saradha can give more details.
This movie VCD is available in Madurai still, I have seen VCD when was in Madurai in May 2010 and Raj TV used to show many times
I have watched this movie in Alankar theatre on a Sunday day and made lots of "Allapparai" in the theatre. Devika has acted with our god after long and she was very fatty and in my opinion she was not 100% mathched with NT in this movie.
As Karthik mentioned Kamal songs are very nice. NT song is not bad at all but not listened by viewers in the Radio.
Cheers,
Sathish
Dear Satish.
Murali, Rakesh & I had discused this film in Sept 2007. :D
see this and the next page:
http://forumhub.mayyam.com/hub/viewt...=asc&start=585
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 126
கே: எட்டையபுரம் பாரதி விழாவின் முழுச் செலவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடையதா? (அப்துல், சென்னை)
ப: ஆமாம்.
(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1958)
குறிப்பு:
52 ஆண்டுகளுக்கு முன்னர் 1958-ல், செப்டம்பர் 11, 12 தேதிகளில் (11.9.1958 & 12.9.1958), மகாகவி பாரதியாரின் பிறந்த ஊரான எட்டையபுரத்தில், பாரதியாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக. அவரது நினைவைப் போற்றும் வகையில், தேசிய கவிக்கு தனது சொந்த செலவில் மிக விமரிசையாக விழா எடுத்தார் தேசிய திலகம். பாரதிக்கு விழா எடுத்த முதல் நடிகர் சிவாஜி. தேசியம் அவரது இரத்தத்திலும், உயிர் மூச்சிலும் ஊறியிருக்கிறது என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்.
[இந்த பாரதி விழா பற்றிய விரிவான தொகுப்புக்கள் வெகு விரைவில்]
இன்று 11.9.2010 அமரகவி பாரதியின் 89வது ஆண்டு நினைவு தினம்.
அன்புடன்,
பம்மலார்.
Welcome back Satish! Thanks a lot!
Warm Wishes,
Pammalar.
Mr. Karthik,Quote:
Originally Posted by mr_karthik
"Sathyam" - NT's 183rd Film & 47th Color Picture
First released on 6.5.1976 (Thursday) [100 Day Film]
Ran for 100 Victorious days at Theatre Winsor, Jaffna.
Run in Chennai:
Wellington - 56 days
Crown - 50 days
Roxy - 43 days
Noorjehan - 29 days
Some other centres' run:
Madurai - Alankar - 44 days
Salem - 43 days
Tiruchy - 36 days
Kovai - Central - 23 days
Tirunelveli - Central - 36 days
Nagercoil - Rajesh - 29 days
Dindugal - NVGB - 22 days
Overall, "Sathyam" cannot be termed as a Flop or a Failure nor a Hit. It just did AVERAGE BUSINESS in the Box-Office.
Note:
1976 was not a fruitful year for NT. Accepted. But even die-hard fans of NT have a blind perception that all the films in 1976 of NT except "Uthaman" bombed at the Box-Office. This is unfair, false & absurd. After a thorough Box-Office analysis of the films of NT released in 1976, I came to a strong conclusion about the Box-Office status of the NT films of 1976, which can be seen in the list given below:
[In the format of FILM - RELEASE DATE - BOXOFFICE STATUS]
1. Unakkaagha Naan - 12.2.1976 - ABOVE AVERAGE [Ran for more than 50 Days]
2. Grahappravesam - 10.4.1976 - BIG COMMERCIAL HIT [100 Days in Sri Lanka]
3. Sathyam - 6.5.1976 - AVERAGE [100 Days in Sri Lanka]
4. Uthaman - 25.6.1976 - ONE OF THE BIGGEST HITS OF 1976 [100 Days at Madurai-Newcinema & 29 Weeks in Sri Lanka]
5. Chitra Pournami - 22.10.1976 - FLOP [I am unable to find a 50-Day print tilldate]
6. Rojavin Raja - 25.12.1976 - ABOVE AVERAGE [Ran for 10 Weeks]
Points to ponder:
1. 'Rojavin Raja' fared well at the Box-Office than 'Unakkaagha Naan'. In fact, 'Rojavin Raja' was cornered by 'Avan Oru Chariththiram' [14.1.1977] on one side & by 'Deepam' [26.1.1977] on the other. Yet, it came out trumps.
2. 'Grahappravesam' completed 100 victorious days at Colombo, Chellamahal.
3. 'Uthaman' in Ceylon:
Colombo - Central - 203 Days
Jaffna - Rani - 179 Days
Mattunagar - Vijaya - 101 Days
NT is always a Smart, Tough Guy.
TOUGH GUYS DON'T DANCE!
Warm Wishes,
Pammalar.
Dear Pammalar,Quote:
Originally Posted by RAGHAVENDRA
Wonderful. Your analysis and statistics of 1976 makes interesting reading. But what I meant was ... the political outcome had its impact on the running of the films in 1976 and though a few films fared above average the results would have been more success rate if not for the politics. That's what I meant. Because we practically witnessed this impact in the theatres during those days. Even the so called the previous gen die hard fans fell prey to the political propaganda and stopped coming to the theatres for NT movies. This was a fact and I had to convince many of my old friends requesting them to keep politics away. There was not any overwhelming crowd, or crowd enough to keep the theatre packed during the third week onwards for the other films except Uthaman. That was what I came to say. As you might have noticed even Madurai could not see the 50 days run of Sathyam. But that in noway is connected to the quality of the film.
Raghavendran
Pammalar Sir,
Many many thanks for your detailed 'Statistical Data' for the average run film 'SATHYAM' and overall analysis of the films released in 1976.
During first release I have watched it in Crown theatre at Mint area, in my small age (I am a die hard fan of Devika, next to our NT), and during the interval, 'coming soon Uththaman' slides were shown. I think even if sathyam did not caught by political crisis, it might not do much better, might be added 20 more days in all centres.
'Grahapravesam' being a family oriented subject, made an average run by the support of female audience. In Chennai it had released in good theatres ie Pilot, Agasthiya, Muralikrishna & Kamala.
Thanks to Srilankan fans for making 1976 a successful year for NT with one Silver Jubilee and two 100 days crossed films.
On going through, not only for NT, but generally 1976 is not a successful year for Tamil Cinema, except for Sivakumar (AnnakiLi, by the grace of IR).
MGR has released three films
Neethikku thalai vanangu
Uzaikkum karangaL
Oorukku uzaippavan
and out of them NTV only met 100 days in three centres.
Well expected, Kamal & KB allianced 'Manmadha Leelai' also ran for 70 days only.
In 1976, most of the die-hard NT fans were in old congress under leadership of P.Ramachandran, because of their affection with late Perundhalaivar Kamaraj. But when Old Congress leaders decided to join as Janatha Party, along with Bharathiya Jansangh (now BJP), an arch rival of congress, the woke up and returned to NT's camp from Deepam.
But in 1977 also two well expected movies 'ILaiya thalaimuRai', and 'Naam piRandha maN' not gone to a satisfactory level of the fans. (the first one was due to late release). We want to know about the running data of NPM also. Do you have any 50th day advertisement of 'naam piRandha maN'..?.
Sorry for disturbing you again. What to do?. 'thangam kidaikkiRa idaththaithAn manam thONda sollum..?'.
Raghavendhar Sir,Quote:
Originally Posted by RAGHAVENDRA
Thanks for your detailed explanations about ‘Sathyam’.
Here we have a neighbor Tamil family (their native is Lalgudi, Trichy Dist), whose brother is in Dubai. Every year when he is coming here for vacation, he will bring many quality DVDs for tamil films from Dubai, and I used to borrow from them to watch. Like that I saw this movie in their house and got it from them.
டியர் பம்மலார் / ராகவேந்தர் / கார்த்திக் / சதீஷ்...
'சத்யம்' படம் பற்றிய பதிவுகள் மகிழ்ச்சியளிக்கின்றன. பம்மலார் வழக்கம்போல புள்ளிவிவரப்பட்டியலை அள்ளித்தந்திருக்கிறார். மற்றவர்கள் அது தொடர்பான விஷயங்களையும், 1976 நடப்புகள் பற்றியும் தெளிவுற விளக்கியுள்ளனர். பாராட்டுக்கள். ஓகோவென்று ஓடி சாதனை புரிந்த படங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், இதுபோன்ற சராசரிப் படங்களைப்பற்றிய விவாதங்களும் நடைபெறுவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியளிப்பதாகும். கார்த்திக் துவக்கி வைக்க மற்றவர்கள் அதை அருமையாக தொடர்ந்திருக்கிறார்கள். நன்றி.
கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் 'ஓடி விளையாடு பாப்பா' என்ற சிறுவர் நடனப்போட்டியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் ஒரு குழுவினர், 'இந்திய நாடு என்வீடு' (பாரத விலாஸ்) பாடலுக்கு அபிநயம் செய்து ஆட, பாடல் முடிந்ததும் நடுவரான டான்ஸ் மாஸ்ட்டர் ரகுராம் கருத்துச்சொல்லும்போது, "இந்தப்பாடலில் நான் உதவி நடன இயக்குனராக இருந்தேன். நடிகர்திலகம் சிவாஜி சார் எப்போதுமே தேசப்பற்று மிக்கவர். அவர் படங்களில் எங்காவது ஒரு இடத்தில் தேசியத்தைப் புகுத்தியிருப்பார். அதுபோல இந்தப்பாடல் படமாக்கப்பட்டபோது நிஜமாகவே அவர் உணர்ச்சி வசப்பட்டதில், அவருக்கு பிளட்பிரஷர் அதிகமாகி விட்டது" என்றுகூறி பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.Quote:
Originally Posted by pammalar
Dear Raghavendran Sir,
My sincere thanks for your appreciation. My special thanks for your informative post.
Dear Mr. Karthik,
Thank you very much for your praise & info.
Again a slight correction. "Grahappravesam" did not have an Average run. It had a decent run and was a big commercial hit and was also a 100 day film, thanks to Lankan fans. The run of "Grahappravesam" in Chennai:
Pilot - 62 days
Agastiya - 62 days
Muralikrishna - 48 days
Kamala - 48 days
"Grahappravesam" ran successfully at Madurai-Chinthamani for 62 days and completed 50 days in all the other main centres Salem, Trichy, Coimbatore & Tirunelveli. As told already, it is a 100 day film at Ceylon [Colombo-Chellamahal]. In all the other centres it had a 4 week to 6 weeks successful run. So, on any account, "Grahappravesam" is a BIG COMMERCIAL HIT.
As you mentioned, 1976 was not even a fruitful year for Tamil Cinema as well. Even, Makkal Thilagam's films fared a bit less when compared to 1970-1975. As you said, "Neethikku Thalai Vananghu" [18.3.1976] was a 100 day grosser. The 100 day centres of NTV:
Chennai - Devikala
Chennai - Maharani
Salem - Sangam
Colombo - Samantha (Ceylon)
NTV ran for 86 days at Madurai - Central. It ran for more than 50 days at Chennai - Uma & Krishnaveni, Trichy - Jupiter, Kovai - Raja, Tirunelveli - Central. It also crossed 50 days at Erode, Nagercoil and did a fine business in many other centres. No doubt, NTV is one of the big BO hits of 1976.
Regarding "Uzhaikkum Karangal" [23.5.1976], the film ran for 75 days at Chennai - Santham(4 Shows). Other theatres also it fared well, crossing 50 days at Srikrishna & Uma & Kamala ( 47 days). It ran for 75 days at Madurai - Cinepriya & Salem - Alankar. It also crossed 50 days at Trichy, Coimbatore, Tirunelveli, Nagercoil etc and did good business in a handful of centres. It was also a commercial hit in Ceylon. Going by the high Box-Office value & enviable mass appeal of Makkal Thilagam, UK can be considered as an Above Averge to a Hit range film.
"Oorukku Uzhaippavan" [12.11.1976] ran for 50 days at Chennai - Abhirami & Maharani. It also completed 50 days at Madurai, Coimbatore, Salem, Tirunelveli, Nagercoil etc. It also did a fine business in Lanka. Again, going by the BO value of MGR,OU can get an Average level BO status.
As you said, "Manmadha Leelai" with its "A" appeal ran well in A centres.
If 1955 was the year of Kaadhal Maanan Gemini Ganesan due to the two himalayan hits, Missiamma [14.1.1955] & Kanavane Kankanda Deivam [6.5.1955], 1976 will go to Sivakumar for his two Stupendous Silver Jubilee Hits, Annakkili [14.5.1976] & Bhadrakaali [10.12.1976]. In fact, Annakkili is the Box-Office Record film of 1976, Sincere thanks to our debutant Maestro. [அன்னக்கிளி : ஹிந்தி பாடல்களுக்கு கிலி]
Coming back to our one & only Nadigar Thilagam and his films, "Naam Pirandha Mann" [7.10.1977] fared at a Below Average pace at the Box-Office. At Chennai : Chitra - 34 days, Maharani - 34 days, Muralikrishna - 28 days. It ran for 49 days at Madurai - Cinepriya ( I am seeing Murali Sir making his collars up!) and also completing 7 weeks at Salem. In many centres, it was changed for our Deepavali Release [10.11.1977], "Annan Oru Koil". So, in many areas NPM ran only for 4 to 5 weeks. A very good film, but a pathetic bad run. [நமது தமிழ் மக்களின் தேச பக்தியை நாம் தான் மெச்சிக் கொள்ள வேண்டும்! என்ன செய்வது!]
With regard to "Ilaiya Thalai Murai" [12.5.1977], the BO Status is Average. It ran for 7 scintillating weeks at Asia's biggest theatre, Madurai - Thangam [2593 Seats, Again collars up for Murali Sir!]. In Chennai, Chitra - 36 days, Crown - 35 days, Bhuvaneswari - 35 days, Pazhaniappa - 28 days. Other main centres, Salem (6 weeks), Trichy (5 weeks), Coimbatore (5 weeks). In B & C Centres, it didn't do well. Again a rich film in quality displaying a poor show in running.
But, "Deepam" & "Annan Oru Koil" turned the tables, went on to become mega block-busters, hence proving once again to the tinsel world that Our NT is the real BOX-OFFICE KING. [Last but not the least, "Avan Oru Chariththiram" was also a tremendous commercial hit.]
Warm Wishes & Regards,
Pammalar.
டியர் பம்மலார்,Quote:
Originally Posted by pammalar
வேதனையான உண்மை. 1961-ல் ஒரு 'கப்பலோட்டிய தமிழன்', 1977-ல் ஒரு 'நாம் பிறந்த மண்'.
உண்மையில் செங்கல்பட்டுக்கு அருகே வாழ்ந்த ஒரு சுதந்திரப்போராட்ட வீரனான 'சந்தனத் தேவன்' வரலாறுதான் நாம் பிறந்த மண் படமாக தயாரானது. (நடிகர்திலகமும் காதல் மன்னனும் இணைந்து நடித்த கடைசிப்படம்). கமல். கே.ஆர்.விஜயா, படாபட் ஜெயலட்சுமி எல்லோரும் நன்றாகவே பங்களிப்பைத் தந்திருந்தனர். நேச்சுரலாக இருக்க வேண்டுமென்பதற்காக வில்லன் ரோல்களுக்கு நிஜ வெள்ளையர்களையே நடிக்க வைத்திருந்தனர். ஒரு வெள்ளையன் படாபட்டை சீரழிக்கும் காட்சியில் நம் ரத்தம் கொதிக்கும், உடல் பதறும். இயக்குனர் வின்சென்ட் படத்தை நன்றாகவே கையாண்டிருந்தார். இருந்தும் மக்களிடையே சென்றடையவில்லையென்பது வருத்தமளிக்கும் விஷயம். ஒரு சித்ரா பௌர்ணமி வெற்றியடையவில்லை என்று நாம் வருத்தப்பட வழியில்லை. ஆனால் நாம் பிறந்த மண் அப்படியல்ல. நம் தேசப்பற்றை உரசிப்பார்க்கும் படம். (என்னவோ தெரியாத்தனமாக வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்து தொலைத்து விட்டனர் என்று தோன்றுகிறது).
கிட்டதட்ட இப்படம் வெளியான அதே நேரத்தில் தெலுங்கில் கிருஷ்ணா நடித்த இன்னொரு சுதந்திர போராட்ட வீரரின் வரலாறான "அல்லூரி சீத்தாராம ராஜு" ஆந்திரமெங்கும் படு பயங்கர வெற்றி.
இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை என்று நினைக்கிறேன்.
சத்யம் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படம் குறித்த கதை யாரேனும் கூறினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
சாரதா,Quote:
Originally Posted by saradhaa_sn
நாம் பிறந்த மண் படத்தை வின்சென்ட் சரியாக கையாண்டிருந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அந்த படம் சரியாக போகாததற்கு காரணமே வின்சென்ட்தான் என்று படத்தின் இன்னொரு இயக்குனரும் திரைக்கதை வசனகர்த்தாவுமான வியட்நாம் வீடு சுந்தரம் சொல்லியிருந்தார். கௌரவத்திற்கு பிறகு ஹிந்து ரங்கராஜன் தயாரித்த இந்தப் படத்தை முதலில் இயக்கியது சுந்தரம் மட்டும்தான். ஆனால் ஒளிப்பதிவாளராக இருந்த வின்சென்ட் திரைக்கதையில் தலையிட்டார் என்றும் அவர் ரங்கராஜனிடம் ஏதேதோ சொல்லி தன்னையும் இயக்குனராக இணைத்துக் கொண்டார் என்றும் நடிகர் திலகத்திற்கு இதில் உடன்பாடு இல்லையென்றாலும் கூட ரங்கராஜன் அவரது நெருங்கிய நண்பர் என்பதாலும் பெரிய பட்ஜெட் படமான இது இந்த பிரச்சனைகளினால் நின்று விடக் கூடாதே என்ற அக்கறையினாலும் அவர் ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துக் கொடுத்தார் என்றும் அப்போதே செய்திகள் வந்தன. ஆகவேதான் முதல் பகுதியில் நன்றாக அமைந்த படம் இரண்டாம் பகுதியில் தடுமாறியது. அது மட்டுமல்ல, படம் வெளியான நேரம் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பு. அதுவும் படத்திற்கு ஒரு சோதனையாக அமைந்தது. ஆனால் படத்தின் கதை நிச்சயமாக ஒரு வெற்றிப் படத்திற்கான கதை என்பதை நன்கு உணர்ந்த அன்றைய ஒரு இளைஞர் 19 வருடம் கழித்து, தான் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மாறிய பின், அதை கால மாற்றத்திற்கேற்ப சிறிதே மாற்றி படமாக்கி ஒரு "இந்தியன்" வெற்றியை தந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
சுவாமி,
நான் எப்போதும் மற்ற ஊர்களில் உள்ள ரசிகர்களை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இங்குள்ள மற்றவர்களை விட உங்களுக்கு மதுரை பற்றியும் மதுரை சிவாஜி ரசிகர்களைப் பற்றியும் நன்றாகவே தெரியும். அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் வேறு எந்த ஊர் மக்களும் கொடுத்ததில்லை. இங்கே நான்,tacinema மற்றும் சதீஷ் போன்றவர்கள் அதனால்தான் எப்போதும் அதை பெருமையாக சொல்லிக் கொள்வது வழக்கம்.
அன்புடன்
ராதா,
முன் பக்கத்தில் NOV அவர்கள் ஒரு லிங்க் கொடுத்திருக்கிறார். அதை சொடுக்கினால் முன்பு சத்யம் படத்தைப் பற்றிய விமர்சனமும் விவாதங்களையும் படிக்கலாம்.
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 10
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]
"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே!
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே!
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே!
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே!"
செட்டிநாட்டு கவிஞருக்கு வார்த்தைகள் எங்கிருந்து தான் வந்து விழுமோ?! கலைமகளின் கவிதை வடிவமே கண்ணதாசன்! இரு வேறு இதயங்கள் இணையும் இணையற்ற இணைவை எத்துணை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் கவியரசர். Unlike poles always attract. மெல்லிசை மன்னர்கள் பாடல் முழுமையும் வியாபிக்கிறார்கள். ட்யூனின் ஆரோகண அவரோகணங்களும் சரி, இணைப்பு இசையும் (Interludes) சரி, இசை நுணுக்கங்கள். அதனைப் பாமரனும் உணர்ந்து மெய் மறக்கிறான் பாருங்கள், அதில் தான் இருக்கிறது விஸ்ராமுக்கு விக்டரி. ஹேட்ஸ் ஆஃப் விஆர்!
சுசீலா பாடும் மைக்கைக் கவிழ்த்துப் பார்த்தால் தேன் சொட்டுமோ?! எத்துணை இனிமை! அதே சமயம் கணீரென்று குரல் ஒலிக்க வேண்டிய இடங்களில் எத்துணை இனிமை குறையாத கம்பீரம்! சுந்தரத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தென்னாட்டுக்குயில், தங்கத்தமிழை அக்ஷரபிசகு இல்லாமல் என்னமாய் உச்சரிக்கிறார். நடிகர் திலகத்திற்கு நடிப்பில் எப்படி எந்த தருணத்திலும் ஸ்லிப் வராதோ, அது போல், பாட்டில் TMSக்கும், சுசீலாவிற்கும், தமிழ் உச்சரிப்பில் எந்த இடத்திலும் ஸ்லிப் வராது. Legends are born, never made! [திரு.கேஆர்வி. ராஜேஷ், சுசீலா இசையரசி மாத்திரமல்ல, இசைவாணியும் தான்!]
பாடலைப் பாடிக் கொண்டே ஆடும் அபிநயசரஸ்வதி பாடல் முழுவதும் தனது பட்டப்பெயருக்கு கட்டியம் கூறுகிறார். ஆம்! அபிநயங்களை அள்ளி அள்ளி வீசுகிறார். மலைப்பிரதேச இயற்கைக் காட்சிகள் கண்களுக்கு குளுகுளு. [ஹவுஸ்ஃபுல் அரங்கில் ஏசியும் ஃபுல்லாக போடப்பட்டிருந்ததால் உடலும் குளுகுளு].
மனதை மயக்கும் மலைப்பிரதேச காட்சிகளையும், பாடலின் பலவான்களான கண்ணதாசன், விஸ்ராம், சுசீலா, சரோஜா ஆகியோரையும், ஒரு வார்த்தை கூட பாடாமலேயே, தனது நடிப்பாலும், நடையாலும், ஸ்டைலாலும், முகபாவங்களாலும், அங்க அசைவுகளாலும், தனது Screen Presence ஒன்றின் மூலம் மட்டுமே, தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுகிறார் பாருங்கள் ஒரு ஜாம்பவான், அவர் யார் என்று சொல்லவும் வேண்டுமோ! நடிப்பு பகாசுரன் சிவாஜி!
பாடலின் முதல் சரணத்தில், மஞ்சள்-வெள்ளை சல்வார் கம்மீஸ் நீலநிற துப்பட்டாவில் அபிநயம் அழகென்றால், கருநீல கோட்-சூட் ரெட் டையில் அண்ணல் அழகோ அழகு. "Made for each other Pair" என்றால் அது இந்த ஜோடியைத் தான் குறிக்குமோ!
பாடலின் பல்லவிக்கும், முதல் சரணத்திற்கும் சூடான பக்தர்களின் சூடாராதனை தொடர்கிறது. இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் interlude முழங்க, ஒரு மேட்டின் மீதேறி, தனது வலது கரத்தை நேராகவும், இடது கரத்தை சற்று மடக்கியும் விட்டு ஸ்டைலாக, ஒயிலாக Screen Full நிற்கிறார் அண்ணல், House Full அரங்கம் அதிருகிறது. இதற்காகவே காத்திருந்தது போல் பக்தர்கள் மெகாதீபாராதனை காட்டுகின்றனர்.
அடுத்து, சுசீலாவின் ஹம்மிங் ஹில்டாப்புக்குப் போக, அழைப்பை ஏற்று ஆண் வண்டு (அண்ணல்), பெண் மலரின் (அபிநயம்) மகரந்தத்தை சுவைத்து எழந்து லிப்பை சரி செய்ய விசிலும், அப்ளாசும் வீறு கொண்டு எழுகிறது. அண்ணலின் குளோசப்புக்கு தீபாராதனையும் தான்!
பாடல் இனிதே நிறைவடைய, "ஸ்டைல் மன்னன் சிவாஜி வாழ்க!", "ஸ்டைல் கிங்னா தலைவர் தான், வேற எவனும் கிடையாது" என்ற ஏகவசன கோஷங்கள் ஏகவேகத்தில் கேட்கின்றன. பாடல் முடிந்தும் பக்தர் கூட்டம் திரையருகில் தான்! அண்ணலின் அற்புதங்களை எத்தனை முறை பார்த்தாலும் பசி தீராதவர்கள், "பார்த்த ஞாபகம் இல்லையோ"விற்காக பரவசத்துடன் காத்திருக்கின்றனர்.
['சிட்டுக்குருவி' பாடல் போல், நாயகி மட்டும் ஸோலோவாகப் பாட, நாயகன் நடிகர் திலகம் பாடாமல், தன் நடிப்பால் மட்டுமே கலக்கும் பாடல்கள் தான் எத்தனை, எத்தனை. அதிலும் தான் எத்தனை விதம், எததனை ரகம். "புதிய பறவை"யிலேயே இன்னும் இரண்டு இருக்கிறதே, 'உன்னை ஒன்று கேட்பேன்', 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. ஆண்டவன் கட்டளையின் "அழகே வா, அருகே வா" என்ன, ஊட்டி வரை உறவின் "தேடினேன் வந்தது" என்ன, நவராத்திரியின் "சொல்லவா கதை சொல்லவா" என்ன, ஆலயமணியின் "மானாட்டம் தங்க மயிலாட்டம்" என்ன, பராசக்தியின் "புதுப்பெண்ணின் மனசைத் தொட்டு போறவறே" என்ன, உத்தமபுத்திரனின் "காத்திருப்பான் கமலக்கண்ணன்", "உன்னழகை கன்னியர்கள்" என்ன, கட்டபொம்மனின் "சிங்காரக் கண்ணே" என்ன, பாகப்பிரிவினையின் "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்" என்ன, படிக்காத மேதையின் "படித்ததினால் அறிவு பெற்றோர்" என்ன, என் தம்பியின் "தட்டட்டும் கை தழுவட்டும்" என்ன, உயர்ந்த மனிதனின் "நாளை இந்த வேளை" என்ன, ராமன் எத்தனை ராமனடியின் "சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்" என்ன, வசந்த மாளிகையின் "கலைமகள் கைப் பொருளே" என்ன, பாசமலரின் "பாட்டொன்று கேட்டேன்", "மயங்குகிறாள் ஒரு மாது" என்ன...................the list is endless.........எக்ஸ்பர்ட் சாரதா இது குறித்து அலசினால் நன்றாக இருக்கும்.]
(தொடரும்...)
பக்தியுடன்,
பம்மலார்.
Justice Gopinath (1978).
Wonder if Rajini would have pulled off Kannan if Gouvaram came late? Namakethukku vambu.
Anyway, nice little film. Harmless. Notable because of NT/Rajini as father and 'son'.
One scene made my wife and I laugh out loud.
It's late, Rajini is working, looking to take on a sensational case, mom, KR. Vijaya urges him to go to sleep, then NT comes along and encourages Rajini to take on the case, even offering to help in points. The dialogues (paraphrased, not exact)
NT: Sari, ippo nee poyee toonggu
Rajini: Amma enakkaaga kaatirukkaatha.
NT: Bloody fool :evil: Naan avalukkaaga kaatirukkanumdaaa :rotfl: (same time Rajini scoots off comically and KR. Vijaya giggles and pokes NT, looking mock-angry)
டியர் முரளி,Quote:
Originally Posted by Murali Srinivas
அந்த "மற்றவர்கள்" வரிசையில் என்னையும் சேர்த்துவிட மாட்டீர்கள் என்பது எனக்குத்தெரியும். காரணம், 'நான் பிறந்த மண்' சென்னையாக இருந்தபோதிலும் மதுரை ரசிகர்கள் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவள். சென்னையில் இத்தனை திரையரங்குகள் இருந்தும், சென்னை கைவிட்ட எத்தனையோ படங்களை சாதனைப்படங்களாக ஆக்கிய பெருமை மதுரை மண்ணுக்கு உண்டு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, ராமன் எத்தனை ராமனடி, வாணி ராணி, என்மகன், உத்தமன் என்று எத்தனை படங்கள்..!!.
அதுமட்டுமல்ல. 'சிலர்' தங்களது 100 நாட்களுக்குக்கூட கலரை நம்பியிருந்த காலத்தில், 1961-ல் தான் என்றில்லை 1972-லும் எங்களால் கருப்பு-வெள்ளையில் 'வெள்ளி விழா' காண முடியும் என்று கூறி, 'பட்டிக்காடா'க இருந்தாலும், 'பட்டணமா'க இருந்தாலும் அண்ணனே வெற்றியாளர் என்று முழங்கிய பெருமை மதுரை மண்ணுக்கு, மதுரை மக்களூக்கு உண்டு. அதுமட்டுமல்ல, ஆசியாவிலேயே பெரிய அரங்கில் மூன்று 100 நாட்களைக்கடந்த படங்கள், ஒரே ஆண்டில் இரண்டு வெள்ளி விழா என்று மூன்று முறை சாதித்த பெருமை என்று எத்தனை பொன்னேட்டு சாதனைகள். (எங்கள் சென்னையில் 1961-ல் மட்டுமே இது நிகந்தது).
(இருந்தபோதிலும் சில சின்ன திருஷ்டிப்பொட்டுக்களாக, 'தங்கப்பதக்கம்' வெள்ளிவிழாவை தவற விட்டதும் (திருச்சிக்கு நன்றி), வியட்நாம் வீடு 100 நாட்களைத் தொட இருந்த நேரத்தில், 'சச்சினுக்கு பந்து வீசிய ஷோயப் அக்தராக' நடிகர்திலகத்துக்கு வில்லனாக வந்த சேது பிலிம்ஸாரும்).
சாந்தி, கிரவுன், புவனேஸ்வரியில் தியாகம் ஓடிக்கொண்டிருந்தபோது, சாந்திக்கு முன்பாகவே கிரவுனில் தொடர்ந்து 210 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடைபோட, அதற்கேற்றாற்போல தியாகம் 100 நாட்களைக் கடந்ததும் அடுத்து வந்த 'ஜெனரல் சக்ரவர்த்தி' சாந்தி, மகாராணி, அபிராமியில் வெளியாக, 'சரி, அப்படீன்னா கிரவுனில் 'தியாகம்' வெள்ளிவிழாதான்' என்று ரசிகர்கள் மகிழ்ந்திருந்த வேளையில், அடுத்த ஒரு வாரத்தில் கிரவுனில் வேறு படம் திரையிடப்பட, ரசிகர்களின் எதிர்பார்ப்பு 'சிந்தி'ப்போனது.
ஆனால் அப்போதும் மதுரையில் தியாகத்தின் வெற்றியை 'சிந்தா(த)மணி'யாக அள்ளியெடுத்து வெள்ளிவிழாவாக்கிய பெருமையும் மதுரைக்கு உண்டு. மதுரை நடிகர்திலகத்தின் கோட்டை என்று நீங்கள் அடிக்கடி சொல்வது 101 சதவீத உண்மை. பம்மலார் சொன்னது போல நீங்கள் காலரை உயர்த்தி விட்டுக்கொள்ள முழுக்க முழுக்க உரிமை உண்டு.
இந்த சென்னைக்காரியின் சிறிய இதயத்தில் மதுரை ரசிகர்களுக்கு எப்போதுமே பெரிய இடம் உண்டு.