அஞ்சல் பெட்டி-520 மலரும் நினைவுகளாக புகைப்படங்களை திரியில் அஞ்சல் செய்த திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி.
Printable View
அஞ்சல் பெட்டி-520 மலரும் நினைவுகளாக புகைப்படங்களை திரியில் அஞ்சல் செய்த திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி.
இன்று ஜூலை 1 - நடிகர் திலகத்தின் இரு பெறும் திரைக்காவியங்கள் வெளியான 50வது ஆண்டு நிறைவு -
எல்லாம் உனக்காக - 01.07.1961
ஸ்ரீ வள்ளி - 01.07.1961
ஸ்ரீ வள்ளி
நரசு ஸ்டூடியோஸ் தயாரித்து டி.ஆர் ராமண்ணா அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த திரைச் சித்திரம். சில திட்டமிட்ட பிரச்சாரங்களால் பெரும் விமர்சனத்தை சந்ததித்தது. என்ன இருந்தாலும் டி.ஆர். மகாலிங்கம் படம் போல் இல்லை என்ற மேம்போக்கான விமர்சனம் பரவலாக பரப்பப்பட்டதால் பாதிப்பு அடைந்தது. போதாக்குறைக்கு மிகப் பெரும் வெற்றி பெற்ற பாசமலரின் ஆரவார நடைக்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் போனது. அது மட்டுமன்றி போட்டிக்கு நடிகர் திலகத்தின் இன்னொரு படமும் அதே நாளில் வெளியானதும் இதனுடைய வெற்றிக்கு தடை போட்டது.
ஆனால் படத்தைப் பார்த்தால் இந்த விமர்சனங்கள் சற்று நியாயக் குறைவை நோக்கி செல்வதாக நமக்கு தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஜி.ராமநாதனின் அருமையான பாடல்களே இதற்கு கட்டியம் கூறும். தன் பங்கிற்கு சற்றும் குறை வைக்காமல் நடிகர் திலகம் உழைத்துள்ளது நன்கு தெரிகிறது. மேம்போக்கான விமர்சனமே இப்படத்தின் வெற்றியை தடை செய்தது என்பதே என் தாழ்மையான எண்ணம்.
இப்படத்தின் விளம்பரங்கள்
http://i872.photobucket.com/albums/a...iAd01forPB.jpg
http://i872.photobucket.com/albums/a...iAd02forPB.jpg
ஹிந்து நாளிதழில் வெளியான இப்படத்தைப் பற்றிய குறிப்புக் கட்டுரைக்கான இணைப்பு
இப்படத்தின் ஒளிக்காட்சியாக இணையத்தில் ஒரு பாடல் மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் கம்பீரமான குரலில் சிறந்த பாடல்
http://www.youtube.com/watch?v=_DKeeOQAoYk
இப்படத்தின் பாடல்களைக் கேட்டு மகிழ
http://www.jointscene.com/tamil-movi...li_-_1961.html
எல்லாம் உனக்காக
இதுவும் மிகப் பெரும் வெற்றியைக் கண்டிருக்க வேண்டிய படம். தொழிற் சங்க ஈடுபாட்டினால் சொந்த வாழ்க்கையில் சங்கடங்களை சந்திக்கும் ஒரு தொழிலாளியின் கதை. பாச மலர் திரைப் படத்தின் மாபெரும் வெற்றியினால் பாதிப்படைந்த படம். பாடல்கள் இசை நடிப்பு என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். எஸ்.வி.ரங்காராவ், சாவித்திரி இவர்களுடன் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனின் சிறந்த உழைப்பை வெளிப்படுத்திய படம். சென்டிமென்ட என்ற காரணத்தினால் திரைப்படங்கள் பாதிப்படையக் கூடும் என்ற கூற்றுக்கு உதாரணம் காட்ட வேண்டுமானால் இப்படத்தை சொல்லலாம்.
http://i872.photobucket.com/albums/a...Ads/EUAd01.jpg
http://i872.photobucket.com/albums/a...Ads/EUAd02.jpg
இப்படத்தின் பாடல் அல்லது காட்சி யாவும் கிடைக்க வில்லை. பாடல்களை கீழ்க்காணும் இணைய தளத்தில் கேட்கலாம்.
http://www.jointscene.com/movies/kol..._Unakkaga/4296
ராகவேந்தர் சார்,
அஞ்சல்பெட்டி 520 படத்தில் நான் குறிப்பிட்ட அந்தக்காட்சியை உடனுக்குடன் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. படங்கள் யாவும் மிக அருமையாக உள்ளன.
'எல்லாம் உனக்காக' மற்றும் 'ஸ்ரீ வள்ளி' படங்களின் பொன்விழா நாளையும் தவறாமல் நினைவுகூர்ந்துள்ளீர்கள். ஆகா ஓகோ என்று ஓடிய படங்களை மட்டுமல்லாது இப்படிப்பட்ட, நன்றாக அமைந்தும் வெற்றி வாய்ப்பினை இழந்த படங்களையும் நினைவுகூர்வதே நடிகர்திலகத்துக்கு செய்யும் சேவை.
இவற்றில் 'எல்லாம் உனக்காக' பார்த்திருக்கிறேன். 'மலரும் கொடியும் பெண்ணென்பார்' பாடல் மிகவும் பசுமையாக நினைவில் உள்ளது. டி.எம்.எஸ்.மிக அமைதியாகப்பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று.
ஸ்ரீ வள்ளி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது கலர்ப்படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் முழுநீள கலர்ப்படம் என்று நீங்கள் அளித்துள்ள விளம்பரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்ன வகை கலர்?. நான் இதைக்கேட்கக்காரணம், தமிழில் முதல் கேவா கலர்ப்படம் 'அலிபாபா' என்பதும், முதல் டெக்னிக் கலர் படம்' வீரபாண்டிய கட்டபொம்மன்' என்பதும் (இர்ண்டாவது டெக்னிக் கலர்ப்படம் 'கொஞ்சும் சலங்கை'), முதல் ஈஸ்ட்மென் கலர்ப்படம் 'கர்ணன்' என்பதும் நமக்குத்தெரியும். இவற்றுக்கு இடையே 1961-ல் வெளியான ஸ்ரீ வள்ளி கேவா கலரா அல்லது டெக்னிக் கலரா?. (இப்போது டி.வி.டி. வெளியாகியிருக்கிறது. வேறு மாநிலத்தில் இருப்பதால் இன்னும் பார்க்கவில்லை).
http://www.hindu.com/lf/2004/12/26/i...2610580201.jpg
இன்று 03.07.2011 அன்று பிறந்த நாள் காணும் அன்பு சகோதரர் ராம்குமார் கணேசன் அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்
http://www.youtube.com/watch?v=i7rJ_HATYZE
இப்பாடலை ராம்குமார் அவர்களுக்கு அன்புப் பரிசளிப்போம்
அன்புடன்
ராகவேந்திரன்
சவாலே சமாளி மாணிக்கத்திற்கு 41வது ஜெயந்தி[3.7.1971 - 3.7.2011]
சாதனைப் பொன்னேடுகள்
First Release Ad : The Hindu : 3.7.1971
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3796.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 3.7.1971
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3793.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 10.10.1971
http://i1094.photobucket.com/albums/.../GEDC3798a.jpg
அன்புடன்,
பம்மலார்.
இதயதெய்வம் நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர் தளபதி ராம்குமார் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் [ஜுலை 3] நல்வாழ்த்துக்கள் !
http://i1094.photobucket.com/albums/...ammalar/S9.jpg
பாசத்துடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
நான விரும்பிய காட்சி [தொடர்ச்சி]
நடாத்தூர் நரசிம்மாச்சாரி ஆச்சார அனுஷ்டானமான ஒரு அந்தணர். அவருடைய பார்யாள் வேதா என்ற வேதவல்லி. அவர்களுடைய ஒரே செல்லப் புத்திரன் வரதுக்குட்டி என்கிற வரதராஜன். மிகவும் அப்பாவியாக வளரும் வரதுக்குட்டி ஒரு தேர்வுக்கு செல்லும் போது விபத்தில் சிக்கி இறந்து விடுகிறான். இந்த செய்தி கேட்டு மூர்ச்சையான வேதா நினைவு தப்பிய நிலையிலேயே வாழ்கிறாள். நரசிம்மாச்சாரியின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. ஒரு பக்கம் மகனை இழந்த துயரம், மற்றொரு புறம் மனைவியின் நிலைமை.. இந்த நேரத்தில், எதேச்சையாக அவர்கள் வீட்டுக்கு வருகிறான் ஆனந்த் என்கிற ஒரு ரௌடி. அவன் அச்சு அசலாக வரதுக்குட்டியைப் போலவே இருக்க, அவனைப் பார்த்த வேதாவிற்கு நினைவு திரும்புகிறது. ஆனால் ஆனந்தை வரதுக்குட்டி என்றே நம்பி விடுகிறாள். நரசிம்மாச்சாரி-வேதா தம்பதியினரின் அன்பிற்கும் வேண்டுகோளுக்கும் பணிந்து ஆனந்த் அவர்கள் இல்லத்திலேயே தங்குகிறான். ஆனால் அவனுடைய குடிப்பழக்கம், அசைவ உணவில் நாட்டம் போன்றவற்றை அவனால் ஒதுக்க முடியவில்லை. தனக்காக தன் இல்லத்தில் தங்க இணங்கிய ஆனந்திற்காக நரசிம்மாச்சாரி, தன்னுடைய சுதர்மத்தை விட்டு அசைவ உணவை அவனுக்காக வாங்கி வருகிறார். அவருடைய அன்பிலும் பாசத்திலும் நெக்குருகும் ஆனந்த் நெகிழ்ந்து போய், அசைவ உணவை உதறித்தள்ளி விட்டு தொடர்ந்து அவருடைய புதல்வனாகவே மாறி விடுகிறான்.
வித்யா மூவீஸ் தயாரித்து வி.ஸ்ரீனிவாசன் இயக்கி 14.11.1982ம் தேதி வெளிவந்த பரீட்சைக்கு நேரமாச்சு திரைப்படம் நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் மிகவும் முக்கியமான படமாகும். இப்படம் தொலைக்காட்சிகளில் அதிகம் விவாதிக்கப் படாதது வருத்தமே. இருந்தாலும் நாம் விவாதிக்க தடையில்லையே. குறிப்பாக இக்காட்சி, அசைவ உணவை ஒரு அந்தணர் வாங்கும் போது எந்த சூழ்நிலையில் இருப்பாரோ, அதனை அப்படியே தத்ரூபமாக சித்தரித்துள்ளார் நடிகர் திலகம். அது மட்டுமன்றி அதுவே படத்திற்கு ஒரு முக்கியமான திருப்பமாகவும் அமைவது சிறப்பு. இக்காட்சியின் முடிவில் தான் அசைவ உணவை வாங்கி வந்ததற்காக தலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்வது, அதற்கு முன் அந்தக் குடையின் மேலும் தன் மேல் துண்டின் மேலும் மறக்காமல் தண்ணீர் ப்ரோக்க்ஷணம் செய்வது, தன் தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் போது மறக்காமல் மந்திரம் சொல்வது....
பிறவிக் கலைஞரய்யா நடிகர் திலகம்.
இப்படத்தில் திரு ஒய்.ஜி.மகேந்திராவின் நடிப்பைக் குறிப்பிடாவிட்டால் ஒரு நல்ல கலைஞனை நாம் இருட்டடிப்பு செய்யும் பாவத்திற்கு நாம் ஆளாவோம். நீங்கள் ஏன் சார் இதையெல்லாம் வாங்கி வர்றீங்க என்று கேட்கும் போது அவருடைய குரலில் மாடுலேஷன், மாறும் முகபாவம், இவையெல்லாம் அவர் நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதற்கும் மேலே போய் அவருக்குள் நடிகர் திலகம் ஜீவனாய் உள்ளார் என்பதைக் காட்டுகிறது என்றால் அது உண்மை.
இநத்க் காட்சி என்றென்றும் என் நெஞ்சை விட்டு அகலாது. உங்களுக்கும் கூடத் தான்...
இதோ நீங்களும் காணுங்கள்
http://www.youtube.com/watch?v=BPsRQnqMc64
அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
டியர் பம்மலார்,
மாணிக்கத்தின் வெளியீட்டு விவரங்களை மாணிக்கப் பதிவுகளாய் இட்டு அசத்திவிட்ட தங்களுக்கு அனைவரின் சார்பிலும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
பம்மலார் சார்,
'ஸ்ரீ வள்ளி' படம் பற்றிய விளக்கத்துக்கு நன்றி.
நடிகர்திலகத்தின் 150வது திரைக்காவியமான 'சவாலே சமாளி' மாணிக்கத்தின் 41-வது ஆண்டின் துவக்கத்தினையொட்டி, சாதனைச்செப்பேடுகளின் அணிவகுப்பு மிகப்ப்பிரமாதம். ஆங்கிலம், தமிழ், மற்றும் 100 வது நாள் விளம்பரங்கள் கண்களைக்கவர்ந்தன.
முதல் வெளியீட்டில் தமிழகத்தில் மட்டும் ஏழு அரங்குகளில் 100 நாடகளைக்கடந்து மகத்தான சாதனை புரிந்துள்ளது. அத்துடன் இலங்கையிலும் வெற்றிகரமாக ஓடியுள்ளது. விளம்பரத்தில் கோவை திரையரங்கைக் காணவில்லை. பாட்டாளியின் பெருமையை விளக்கும் இப்படம் கோவை நகரில் 100 நாட்களைக்கடக்காதது ஆச்சரியமாக உள்ளது. அதற்கு ஏதேனும் சிறப்புக்காரணம் இருக்கிறதா?.
நீங்களும் ராகவேந்தர் சாரும் அளித்துவரும் செய்தித்தாள் விளம்பர வரிசையைப் பார்க்கும்போது, பெரும்பாலான படங்களுக்கு உங்களிடம் சாதனை விளம்பரங்கள் உண்டெனத் தெரிகிறது. எனவே, 'தெய்வ மகன்' மற்றும் 'சிவந்த மண்' படங்களின் 100 வது நாள் விளம்பரங்களை இங்கே வெளியிட வேண்டுகிறேன்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 203
கே: தேசிய விருதுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? அங்காடித்தெரு, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற மிகச் சிறந்த படைப்புகளுக்கு அந்த விருதுகள் கொடுக்கப்படாதது ஏன்? (பி.வேல்முருகன், உடையாப்பட்டி)
ப: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படாதபோது, அந்த விருது பற்றி பெரும்பாலான தமிழ்க் கலைஞர்கள் கவலைப்படுவதில்லை!
(ஆதாரம் : தினத்தந்தி, 26.6.2011, "குருவியார் - சினிமா கேள்வி பதில்" பகுதி)
அன்புடன்,
பம்மலார்.
Thanks, Mr.Satish.
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுகளுக்கு பணிவான நன்றிகள் !
பாடல் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை !
காட்சிப்[Scene] பதிவுகள் ஒவ்வொன்றும் அற்புதம் !
எல்லாம் உனக்காக, ஸ்ரீ வள்ளி பொன்விழாப் பொக்கிஷங்கள் மற்றும் அஞ்சல் பெட்டி 520ன் அழகிய நிழற்படங்கள் அனைத்தும் அட்டகாசம் !
அருமையான, அற்புதமான, அட்டகாசமான பதிவுகளை அள்ளி அளித்து வரும் தங்களின் பதிவுகள் வரும் ஒவ்வொரு நாளும் நமது திரிக்கு திருநாளே !
அன்புடன்,
பம்மலார்.
ப: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படாதபோது, அந்த விருது பற்றி பெரும்பாலான தமிழ்க் கலைஞர்கள் கவலைப்படுவதில்லை!
(ஆதாரம் : தினத்தந்தி, 26.6.2011, "குருவியார் - சினிமா கேள்வி பதில்" பகுதி)
அன்புடன்,
பம்மலார்.
உண்மை திரு பம்மலார் அவர்களே,
இன்று தனுஷ் போன்றவர்கள் சிறந்த நடிகர் என தேசிய விருது வாங்கியதை நினைக்கும் போது????????
வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை..........
வேதனையுடன்,
ராதா
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 20
"காலம் மாறலாம் நம் காதல் மாறுமா"
http://www.youtube.com/watch?v=vfaaODkVxb4&feature=related
நடிப்பு : நடிகர் திலகம், நடிகை அம்பிகா
பின்னணிக் குரல்கள் : கந்தர்வக் குரலோன் எஸ்.பி.பி., இசைவாணி வாணிஜெயராம்
இசை : மேஸ்ட்ரோ இளையராஜா
படைப்பு : கவிப்பேரரசு வைரமுத்து
திரைக்காவியம் : வாழ்க்கை(1984)
அன்புடன்,
ராகவேந்திரன் &
பம்மலார்.
ராகவேந்தர் சார்,
கடந்த ஒரு வார காலமாக நீங்கள் அளித்துள்ள படக் காட்சிகள், பாடல் காட்சிகள் மற்றும் பத்திரிக்கை விளம்பரங்கள் அனைத்தும் சுவை. சுவை என்று சொன்னால் மனதிற்கு இன்பமளிக்கும் சுவை. ஸ்ரீவள்ளி பட விளம்பரத்தை இப்போதுதான் முதன் முறையாக பார்க்கிறேன். எல்லாம் உனக்காக ஒரிஜினல் பாட்டு புத்தகம் பார்த்த நினைவு இருக்கிறது.
நரசிம்மாச்சாரியை மட்டும் அந்த நாடக வாடை அடிக்கும் செட்டிலிருந்து மாற்றி ஒரு இயல்பான வீட்டின் சுற்றுசூழலில் செலவை பார்க்காமல் முக்தா ஸ்ரீனிவாசன் எடுத்திருப்பாரேயானால் மற்ற இருவர் [பிரிஸ்டிஜ்,பாரிஸ்டர்] ரேஞ்சுக்கு பேசப்பட்டிருப்பார்.
சுவாமி,
நான் நினைத்தேன், நீங்கள் சகுந்தலா கொண்ட மாணிக்கத்தோடு வருவீர்கள் என்று. என்னை நீங்கள் ஏமாற்றவில்லை. நேற்று பகல் பொழுதில் இந்த பட வெளியீட்டு நினைவுகள் என் மனதில் அலை மோதிக் கொண்டிருந்தன. இங்கே பலருக்கும் நினைவிருக்கும்.1971 ஜூலை 3 அன்று சவாலே சமாளி படத்தின் வெளியீட்டு நாள் மட்டுமல்ல, குலமா குணமா படத்தின் 100-வது நாளும் கூட. ஆம் 1971 மார்ச் 26 அன்று வெளியான குலமா குணமா ஜூலை 3-ந் தேதி தன் 100-வது நாளை நிறைவு செய்தது. எங்கள் மதுரையை பொறுத்தவரை ஒரு சின்ன சங்கடம் ஒன்றிருந்தது. குலமா குணமா வெளியான அதே ஸ்ரீதேவி திரையரங்கில்தான் சவாலே சமாளி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 99 நாட்கள் ஓடும் படத்தை 100 நாட்கள் நிறைவு செய்யாமல் எடுக்கக் கூடாது என்று ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று குலமா குணமா, சவாலே சமாளி விநியோகஸ்தர்கள் மற்றும் ஸ்ரீதேவி அரங்க உரிமையாளர்கள் மூவரும் கலந்து பேசி குலமா குணமா 100-வது நாள் சனிக்கிழமை காலைக்காட்சியாக திரையிடப்பட்டு சவாலே சமாளி அன்று மட்டும் 1,4,7 மற்றும் 10 மணிக் காட்சிகளாக திரையிடப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 1971 பொது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இனி நடிகர் திலகமும் சரி அவர் படங்களும் சரி அவ்வளவுதான் என ஒரு கூட்டம் கொக்கரித்து நிற்க தங்கைக்காக படம் 83 நாட்களையும், குலமா குணமா 100 நாட்களையும் சுமதி என் சுந்தரி 12 வாரங்களையும் கடந்து ஓட, இதற்கு நடுவில் இரு துருவமும் அருணோதயம் பிராப்தம் போன்ற படங்கள் 8 வாரங்களை கடந்து 9 வாரங்களை நெருங்கிய நிகழ்வுகள் இவையெல்லாம் நடிகர் திலகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதை பறை சாற்றி கொண்டிருக்கும் போதுதான் நடிகர் திலகத்தின் 150-வது படமான சவாலே சமாளி வெளியாகிறது. மக்கள் பெரு வெள்ளமென திரண்டனர் இப்படத்திற்கு.
எங்கள் மதுரையில் என் தனிப்பட்ட அனுபவத்தை சொல்ல வேண்டுமென்றால் என்னால் படத்தை முதல் வாரத்தில் பார்க்க முடியவில்லை. இரண்டாம் வாரம் ஆரம்பம், படம் வெளியான 8-வது நாள் ஜூலை 10-ந் தேதி சனிக்கிழமை மாலைக் காட்சிக்குதான் போக முடிந்தது. 5-30 மணிக்கே வாசல் கேட் வரை வரிசை. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் வந்திருக்கின்றனர். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? இருக்கிறது.
நடிகர் திலகம் 150 படங்களில் அதுவும் அனைத்திலும் கதாநாயகனாகவே நடித்து சாதனை புரிந்ததை பாராட்டி அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் சார்பில் ஜூலை 10 மற்றும் 11 சனி ஞாயிற்றுக் கிழமைகளில் திருச்சி நகரில் உள்ள பிஷப் ஹீபர் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒரு மாநாடு நடந்தது. முதல் நாள் சனிக்கிழமை காலை தெப்பக்குளத்திலிருந்து ஊர்வலம், மாலை அரசியல் தலைவர்கள் உரைகள், மறுநாள் ஞாயிறன்று கலை உலகத்தினரின் பாராட்டு உரைகள் என விழா நடந்த இரண்டு நாட்கள். முதல் நாள் ஊர்வலத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
மதுரைக்கு மிக அருகாமையில் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக பெரும்பான்மையான ரசிகர்கள் சென்றிருந்த நிலையிலும் அதே நாளில் மதுரை திரையரங்கில் கூடிய கூட்டம் அசாத்தியமானது. இது நடிகர் திலகத்தால் மட்டுமே செய்ய முடிந்த ஒரு சாதனை.
நினைவுகளை பின்னோக்கி புரட்டி போடும் சிந்தனையோட்டத்திற்கு தூண்டிலாய் இருந்த சுவாமிக்கு நன்றி.
அன்புடன்
இந்த திருச்சி விழா படமாக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு சவாலே சமாளி படத்தின் ஒவ்வொரு காட்சியின் இடைவேளையின் போதும் காண்பிக்கப்பட்டது.
டியர் ஜேயார் சார்,
உண்மை, நம் அனைவருக்குமே இந்த வேதனை உண்டு.
டியர் முரளி சார்,
தங்களது பாங்கான பாராட்டுக்கும், பசுமை நிறைந்த நினைவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
டியர் mr_karthik,
தங்களின் அன்பு கலந்த பாராட்டுக்கு எனது பணிவு கலந்த நன்றிகள் !
"சவாலே சமாளி" கோவையில் 'ராயல்' திரையரங்கில் 90 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. இங்கே 100 நாட்களை எட்டாதது என்ன காரணத்தினால் என்று தெரியவில்லை.
தாங்கள் பதிவிட்டது போல், நமது மாணிக்கத்திற்கு இலங்கை மிகப் பெரிய மகுடம் சூட்டி மகிழ்ந்தது. கொழும்பு 'சென்ட்ரல்' திரையரங்கில் 110 நாட்களும், யாழ்ப்பாணம் 'ராணி' திரையரங்கில் 100 நாட்களும் ஓடி, "சவாலே சமாளி" சிலோனில் மெகா வெற்றி பெற்றது.
தமிழகத்தில் 7 அரங்குகளிலும், இலங்கையில் 2 அரங்குகளிலும், ஆக மொத்தம் 9 அரங்குகளில் 100 நாள் விழாக் கொண்டாடிய 150வது காவியம் ஒரு மகாமெகாஹிட் காவியம் என்பதை அடித்துக் கூற முடியும்.
அன்புடன்,
பம்மலார்.
"சிவந்த மண்"ணின் சாதனைச் செப்பேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3804.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 16.2.1970
http://i1094.photobucket.com/albums/.../GEDC3801a.jpg
அன்புடன்,
பம்மலார்.
தெய்வமகன் : பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 5.9.1969
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3803.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 13.12.1969
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3802.jpg
அன்புடன்,
பம்மலார்.
கேட்டதும் கொடுப்பவரே பம்மலார் ஐயா
எங்கள் திரியின் நாயகரே பம்மலார் ஐயா
இந்த எளியோன் வேண்டுகோள் விடுத்ததும், சாதனைச் சித்திரங்களான 'சிவந்த மண்', 'தெய்வ மகன்' மற்றும் கேட்பதற்கு முன்னேயே அளித்த 'சவாலே சமாளி' திரைக்காவியங்களின் சாதனைப் பொன்னேடுகளை அழகுறப் பதித்து பெரும் சேவையாற்றிருக்கும் தங்களுக்கு......
மிக்க நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி நன்றி, நன்றி, நன்றி, நன்றி.... X 1,00,000
இவை வெறும் செய்தித்தாள் விளம்பரங்கள் அல்ல, நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள் கைகளில் நீங்கள் அளித்திருக்கும் 'ஏ.கே.47' ஆயுதங்கள்.
இனி சாதனைகளை மறைக்க நினைப்போர் முன் ஆயுதங்கள் பேசும்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் திரிக்கு வந்திருப்பதால், இங்கு பதிக்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்பான பதிவுகள் மனதைக்கவர்வதாக அமைந்துள்ளன. பதிவேற்றிய பலருக்கும் நன்றிகள்.
டியர் ராகவேந்தர்,
தங்களின் பாடல் வரிசைப் பதிவுகள் மிக்கச்சிறப்பாக அமைந்துள்ளன. அவற்றில் பல, அடிக்கடி காணக்கிடைக்காத அபூர்வப்பாடல்கள். அவற்றோடு நாம் அடிக்கடி கண்டுகளித்த பல பாடல்களையும், பலதரப்பட்ட தலைப்புகளோடு பதித்திருப்பதற்கு மிக்க் நன்றி.
ஸ்ரீ வள்ளி, மற்றும் எல்லாம் உனக்காக திரைப்பட பொன்விழா ஆண்டை நினைவு கூர்ந்தமைக்கும், அதனை சிற்ப்பிக்கும் வண்ணம் அபூர்வ விளம்பரங்களை வெளியிட்டு சிறப்பித்தமைக்கும் மேலும் மேலும் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
பம்மலார் - தமிழகத்தின் முன்னணி ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்கள் எல்லாவற்றிலிருந்தும் அறிய விளம்பரங்களைத் திரட்டி அளித்து வருகிறீர்கள் .
நடிகர் திலகத்தின் (கிட்டத்தட்ட) 50 ஆண்டு திரையுலகச் சாதனைகளை ஆதாரங்களுடன் எல்லோரும் அறியும்படி செய்யும் இந்த பெரும் பணிக்குப் பின்னாலிருக்கும் உங்களது உழைப்பு , பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு மகத்தானது. தொடரட்டும் இந்தப் பணி.
டியர் பம்மலார்,
சாதனைச்சித்திரமான சவாலே சமாளி படத்தின் நாற்பத்தோராவது உதயதினத்தை நினைவு கூர்ந்தமைக்கும், அதைச்சிறப்பிக்கும் வண்ணம் தந்துள்ள விளம்பரத் தொகுப்ப்புக்களும் மிக மிக அருமை. என்னுடைய கணினியில் இதற்கு முன்னர் இருந்த 100வது நாள் விளம்பரம் தெளிவில்லாமல், திரையரங்குகளின் பெயர்களை அடையாளம் காண முடியாமல் இருந்தது. இப்போது நீங்கள் தந்துள்ள விளம்பரம் மிகத்தெளிவாக உள்ளது. மிகுந்த நன்றி.
அத்துடன் இதுவரை காணக்கிடைக்காத தெய்வ மகன், சிவந்த மண் படங்களின் விளம்பரங்களின் தொகுப்பும் அட்டகாசம். கண்கொள்ளாக்காட்சி என்றால் அது மிகையல்ல. வெளியிட்ட தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள். (வெளியிடும்படி கேட்டுக்கொண்ட சகோதரர் கார்த்திக்கிற்கும் நன்றி).
சாதனைத்தொகுப்புகள் தொடரட்டும் என வாழ்த்துகிறேன், தொடர வேண்டும் என்று விரும்புகிறேன், தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.
சிவந்தமண்" மற்றும் "தெய்வமகன்" முதல் நாள் விளம்பரம் மற்றும் 100vadhu நாள் விளம்பரம் மிக அருமை.
நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன
நெல்லை சென்ட்ரல் திரைஅரங்கில் நம்மவரும் பார்வதி திரைஅரங்கில் நம்நாடு திரைப்படமும் வெளியானது இரண்டு நாட்கள் இடைவெளியில் தினசரி இரண்டு ரசிகர்களுக்கும் குடுமிபிடி சண்டைதான் சிவந்தமண் சுமார் 12 வாரங்கள் ஓடியதாக நினவு நம்நாடு 100 தினங்கள் ஓடியதாக நினவு
அதேபோல் தெய்வமகன் நெல்லை லக்ஷ்மியில் வெளியானது சுமார் ஆறு வாரங்கள் ஓடியதாக நினவு. நெல்லை லக்ஷ்மியில் எப்போதும் MGR திரைப்படம் தான் திரையிடுவார்கள் எல்லா ஊர்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய தெய்வமகன் நெல்லையில் மட்டும் குறைந்த தினங்கள் ஓடின
அதேபோல் "ஞானஒளி" திரைப்படமும் நெல்லை லக்ஷ்மியில் வெளியாகி 5 வாரங்கள் மட்டுமே ஓடியதாக நினவு
இதை பற்றி தகவல்கள் ஏதும் உண்டா
endrum anbudan
Gk
டியர் முரளி,
நடிகர்திலகத்தின் 150-வது திரைக்காவியமான 'சவாலே சமாளி' வண்ணப்படம் வெளியானபோது நடந்த சுவையான தகவல்களைபகிர்ந்தமைக்கு நன்றி. திருச்சியில் நடந்த 150-வது படவிழா படச்சுருளை நானும் பார்த்திருக்கிறேன். படத்தின் மறு வெளியீடுகளின்போதும் அந்த விழாவின் ரீல் சேர்த்துக் காண்பிக்கப்பட்டதாக நினைவு.
அதற்கு முந்தைய ஆண்டு அக்டோபர் 01 அன்று சென்னையில் முதன்முதலாக நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டபோது, அந்த விசேஷ படத்தொகுப்புக்கு வர்ணனை செய்திருந்த மேஜர் சுந்தர்ராஜன்தான் திருச்சி விழாத்தொகுப்புக்கும் வர்ணனை (காமென்ட்ரி) செய்திருந்தார். திருச்சி விழாவில் நடிகர்திலகத்தைப்பாராட்டி கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேசியிருந்த சிறப்புப்பேச்சு எல்லோராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. அதுபோல நடிகர்திலகத்தின் அருகில் அமர்ந்து நம்பியார் அவருக்கு இனிப்பு ஊட்டிவிடும் காட்சியும்.
அவ்விழாவின் முன்னதாக நடந்த பிரம்மாண்ட ஊர்வலத்தை நடிகர்திலகம் திருச்சி ஜூபிடர் தியேட்டர் அருகிலிருந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து பார்வையிட்டாராம். ஊர்வலம் முடிந்ததும் ஊர்வலம் நடந்த பாதை முழுவதும் பூக்களால் சாலையிட்டதுபோல இருந்ததாம். என் தந்தை இந்த விழாவில் கலந்துகொண்டு அந்த அனுபவங்களை நிறையச் சொல்லியிருக்கிறார்.
1970-ல் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெருநகரத்தில் விழா கொண்டாடுவது என்று தலைமை மன்றம் முடிவு செய்திருந்தபடி, 150 வது படவிழா திருச்சியிலும், அடுத்த ஆண்டு பிறந்த நாள் விழா கோவையிலும் நடைபெற்றது. (கோவையில் நடந்த விழா, இன்னொரு படத்துடன் காண்பிக்கப்பட்டது). கோவையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தி நடிகர் சஞ்சீவ்குமார் கலந்துகொண்டார். அவ்விழாவில் பெருந்தலைவர் காமராஜ் மேடையில் அமர்ந்திருக்க, நடிகர்திலகம் ஏற்புரையாற்றும்போது, பெருந்தலைவரைப் பார்த்துக்கொண்டே பேசுவதும், அதற்குப்பெருந்தலைவர் சிரித்துக்கொண்டே தலைய்சைப்பதும் ரசிகர்கள்/ தொண்டர்கள் மத்தியில் பலத்த கைதட்டலை அள்ளியது.
இதன் தொடர்ச்சியாக, 175-வது படமான 'அவன்தான் மனிதன்' வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துவதென்று தீர்மானித்து ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, எமர்ஜென்ஸியில் இந்தியா முழுவதும் ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், இந்நிலையில் விழா கொண்டாட வேண்டாமென்று பெருந்தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 1975-ல் நடக்கவிருந்த அவ்விழா கைவிடப்பட்டது. அதுமட்டும் குறிப்பிட்டபடி நடந்திருந்தால், இப்போது உங்களிடமிருந்து அவ்விழா பற்றிய மிகச்சிறந்த ஒரு நினைவுப்பதிவை நாங்கள் பெற்று ரசித்திருப்போம்.
நீங்கள் சொன்னதுபோல 1970 தீபாவளி வெளீடுகள் இரண்டும் இவ்வாண்டு துவக்கத்தில் வெற்றிவிழாக்களைக் கண்டபோதிலும், இருதுருவம் எதிர்பார்த்தபடி போகாததாலும், தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்ததாலும் நடிகர்திலகத்தின் திரையுலக வாழ்வு அவ்வளவுதான் என்று முடிவு செய்து ஏகடியம் பேசியோரின் வெற்றுச்'சவால்'களை நடிகர்திலகம் 'சமாளி'த்து வெற்றிகண்டது இப்படத்தில்தான்.
மதுரை ஸ்ரீதேவி தியேட்டருக்கு நிகழ்ந்த அதே நிலையை சேலம் ஜெயா அரங்கமும் சந்தித்தது என்று நினைக்கிறேன். அங்கும் குலமா குணமா 100வது நாளன்றுதான் சவாலே சமாளி ரிலீஸானது. அதுபற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும்.
டியர் பம்மலார் சார்,
சிவந்தமண் மற்றும் தெய்வமகன் 100வது நாள் விளம்பரங்கள் super,
தொடரட்டும் தங்கள் பணி.
அன்புச் சகோதரி சாரதா,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. எல்லாப் புகழும் திலகத்திற்கே.
நம் ஊனோடும் உயிரோடு்ம் இரண்டரக் கலந்து விட்ட நடிகர் திலகத்தின புகழ் பாடுவதேயல்லால் வேறொன்றறியேன் பராபரமே என்று தாயுமானவர் இன்றிருந்தால் பாடியிருப்பாரோ என்கின்ற அளவிற்கு நம் உள்ளத்தில் ஆழமாக குடிகொண்டவர் நடிகர் திலகம். சவாலே சமாளி படத்தைப் பற்றிய பல நினைவுகள் வலம் வருகின்றன. சென்னை சாந்தியில் நம் சகோதர மன்றத்தினர் தற்போது செதுக்கியிருக்கும் படப் பட்டியலின் மேலே மிகப் பெரிய பட்டியிட்டு அதில் 150 படங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு வண்ணம், அதில் ஒவ்வொன்றிலும் ஒரு படத்தின் பெயர், இன்னும் பசுமையாக நினைவுள்ளது. அப்போது சுவர் உயரமே இல்லை. தரையிலிருந்து சுமார் 3 அடி உயரம் சுவர், பின் அதன் மேல் சுமார் 2 அடி உயரத்திற்கு கம்பியினாலான தடுப்பு. அந்த தடுப்பிற்கு மேல் தான் அப்பட்டியல் வைக்கப் பட்டிருந்தது. முதல் நாள் மாலைக் காட்சிக்கு டிக்கெட் கிடைத்து விட்டது. ஆனால் அதற்கும் முன்னரே பார்க்க வேண்டுமே. நண்பனின் சகோதரி உதவியோடு பெண்களின் கியூ வரிசையில் நின்று பின் அங்கு நமக்கு நிற்க அனுமதியில்லை என்றனர். பின் அவரே சவாலை சமாளித்து எங்கள் இருவருக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கித் தந்தார். ஆஹா முதல் நாள் முதல் காட்சி .. கேட்க வேண்டுமா.. அட்டகாசமான ஆரவாரம். குறிப்பாக ஆனைக்கொரு காலம் வந்தா பாடல் அது வரை இசைத் தட்டில் வெளிவரவில்லை. படத்தில் தான் முதன் முதலில் கேட்கிறோம். அந்த வரிகள் அனைத்து ரசிகர்களையும் ஒரு சேர எங்கோ அழைத்து சென்று விட்டன. போதாக்குறைக்கு அப்போது தேர்தல் முடிவுகள் வந்த நேரம். எல்லா எதிர்பார்ப்புகளையும் வீணாக்கி விட்டு ஸ்தாபன காங்கிரஸ் சீட்டு எண்ணிக்கையில் தேர்தலில் தோல்வியைத் தழுவியுற்ற நேரம். அந்த நேரங்களிலெல்லாம் நடிகர் திலகத்தின் படங்களும் மன்றங்களும் மட்டுமே சுறுசுறுப்பாக செயல் பட்டு கட்சியை வளர்த்து வந்தன. அப்போது வந்த இப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதில் வியப்பேது. படம் போனதே தெரியவில்லை. பகல் காட்சி முடிந்து மாலைக் காட்சி ஆரம்பிக்கும் அந்த கணப் பொழுதில் சாப்பிடக் கூட நேரம் இல்லை. ஒரு தேநீர் அருந்தி வி்ட்டு மீண்டும் மாலைக் காட்சி... பகலை விட மாலையில் அதிகமான அளப்பரை.. ஒரு வழியாக இரவு 10.00 மணிக்கு மேல் வீட்டுக்கு சென்ற பின் அர்ச்சனை...
மறக்க முடியுமா..
அதன் நினைவாக
http://www.raaga.com/channels/tamil/...sp?clpId=12100
அன்புடன்
03.07.2011 அன்று மற்றொரு படம் 30 ஆண்டுகளைக் கடந்து 31வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல விமர்சனங்களைப் பெற்ற ஆனால் பொருளாதார ரீதியில் வெற்றி கண்ட லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படமே அது., நல்ல கதையம்சம் இருந்தும் சில தவிர்த்திருக்க வேண்டிய காட்சிகளின் காரணத்தால் சற்றே விமர்சனங்களை அதிகம் சந்தித்த படம். ஆனால் அதில் இடம் பெற்ற அண்ணன் தங்கை பாசப் பாடல் மெல்லிசை மன்னரின் புகழை காலந்தோறும் பரப்பிக் கொண்டிருக்கும். எஸ்.பி.பி. மற்றும் வாணி ஜெயராம் குரலில் என்னென்பதோ என்ற பாடல் என்றும் இனியதாகும். இதோ நம் பார்வைக்கு
http://www.youtube.com/watch?v=LXdyeWbebbg
அன்புடன்
04.07.2011 அன்று 53 ஆண்டுகளைக் கடந்து 54வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது அன்னையின் ஆணை வெற்றிக் காவியம். அதன் நினைவாக ஒய்யாரத்தோற்றத்தில் நடிகர் திலகம் ஸ்டைலில் தூள்கிளப்பும்
http://www.youtube.com/watch?v=e8SxEhroyHU
அன்புடன்
அதே போல் 04.07.2011 அன்று 14வது ஆண்டைக் கடந்து 15வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் படம் ஒன்ஸ் மோர். இதை அனைவரும் அறிந்திருப்பர். இதன் விளம்பரம் இதோ
http://www.nadigarthilagam.com/paper...s/oncemore.jpg
இப்படத்தில் நடிகர் திலகம் தன் 70வது வயதில் தூள் கிளப்பிய சின்ன சின்ன காதல் பாடல் ...
http://www.youtube.com/watch?v=iuYELOHxT2Y
அன்புடன்
ஹும்ம்ம்ம்... எத்தனை நாளாயிற்று இந்தத் திரிக்கு வந்து? பல்வேறு - அலுவலக மற்றும் சொந்த வேலைகள் நிமித்தமாக நீண்ட ஆய்வு எதையும் பதியாமல் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது! இருப்பினும், ஒரு நாள் கூட இந்தத்திரியைப் பார்க்காமல் இருக்கவில்லை. அதற்குள் தான் எத்தனை எத்தனை அற்புதமான பதிவுகள். நடிகர் திலகத்தின் படங்களின் வெளியீட்டு விளம்பரங்கள், அரிய பாடல்கள், பட விளம்பரங்கள், "பரீட்சைக்கு நேரமாச்சு" படத்தின் மிகச் சிறந்த காட்சி என்று பல அற்புதமான பதிவுகளைப் பதிந்த திரு. ராகவேந்தர், நடிகர் திலகத்தின் சாதனைச் சரித்திரங்களை, வழக்கம் போல புள்ளி விவரங்கள் மட்டுமல்லாது, அந்தந்த செய்தித்தாள் விளம்பரங்களையும் அரங்கேற்றி அத்தனை ரசிகர்களின் நெஞ்சிலும் பால் வார்த்து விட்ட திரு. பம்மலார், திரு. முரளி அவர்களின் மிகச் சிறப்பான பதிவு, திரு. ராகேஷ், திரு.நவ், திரு. ஜோ, திரு. பாலகிருஷ்ணன், திரு. கார்த்திக், சாரதா மேடம், திரு. மகேஷ், திரு. கிருஷ்ணாஜி, திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் பல நண்பர்களும் நிறைய விஷயங்களைப் பதிந்துவிட்டீர்கள். நன்றிகள் பல.
நேற்று, விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த வாரம் தெய்வீகப் பாடல்கள் சுற்று. வழக்கமான நடுவர்கள் போக, திரு. டி.எல்.மகராஜன், திரு. சீர்காழி. சிவசிதம்பரம் போன்றோரும், பிரத்தியேக நடுவர்களாக வந்திருந்தார்கள். முதல் பாடல், "தெய்வ மகன்" படத்தில் வரும் "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா..." பாடலை, சாய் பிரகாஷ் என்பவர் பாடி முடித்தவுடன், அதற்கு, திரு. டி.எல்.மகராஜன் விமர்சனம் செய்யத் துவங்கியவுடன் சொன்னது - " எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. தெய்வ மகன் 1969-இல் முதலில் வெளிவந்தபோது, முதல் மூன்று காட்சிகளையும் தொடர்ந்து சாந்தியில் பார்த்து, தந்தையிடம் திட்டு வாங்கியது (இதிலிருந்தே, இவரும் நடிகர் திலகத்தின் ரசிகர் என்று புரிந்து விடுகிறது.) (அவரது தந்தை திரு. திருச்சி லோகநாதன் அவர்கள்). இந்தப் பாடலில் சிவாஜியின் நடிப்பு இன்னும் கண்ணில் இருக்கிறது. அதிலும், குறிப்பாக கடைசியில் "எண்ணெய் இல்லாதொரு தீபம் எரிந்தது..." என்று பாடுவதற்கு முன் "கிருஷ்ணா...." என்று ஒரு நீண்ட சங்கதியுடன் துவங்கி மறுபடியும் "கிருஷ்ணா..." என்னும்போது, அவருடைய கழுத்தை ஒரு வெட்டு வெட்டி பாடுவார். அவ்வளவு நன்றாக இருக்கும். இந்தப் பாடலை நினைக்கும்போது, முதலில், சிவாஜியின் நடிப்புதான் நினைவில் வரும்" என்று கூறி நெகிழ்ந்தார். "தெய்வ மகன்" படத்தில், படம் நெடுகிலும் நடிகர் திலகம் கைத்தட்டலை வாங்கிக் கொண்டே இருப்பார். ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும், அத்தனை இடமும் மனப்பாடம். அவைகளில், டி.எல்.மகராஜன் அவர்கள் குறிப்பிட்ட நடிப்பும் ஒன்றல்லவா?
சிறிதும் தாமதிக்காமல், "தெய்வ மகன்" dvd-ஐ போட்டு அந்தப் பாடலையும், அதில், அந்தக் குறிப்பிட்ட முக பாவனையை மறுபடியும் ரசித்து, அதை என் மகள்களுக்கும் போட்டுக்காட்டி, அவர்களையும் ரசிக்க வைத்த பின்னர் தான், அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
சவாலே சமாளி நினைவுகள்....
முரளி சார், பம்மலார் சார், சாரதா மேடம், ராகவேந்தர் சார்... நால்வரும் சவாலே சமாளி வெளியானபோது நடந்த சம்பவங்களை அள்ளி வழங்கி, என் நினைவலைகளை பின்னோக்கி தட்டிவிட்டுவிட்டீர்கள். அன்று நடந்தவை அனைத்தும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.
ஜனவரியில் 'கோட்டம்' வெளியான பின்னர் பொதுத்தேர்தலுக்குப்பின் மே 29 அன்றுதான் சைக்கிள் ரிக்ஷா ஓடத்துவங்கியது. இந்தப்பக்கம் நடிகர்திலகத்துக்கு புற்றீசல்கள் போல நான்கு மாதத்தில் ஆறுபடங்கள் வெளியாகி, நடிகர்திலகத்தின் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன. திரும்பதிரும்ப பார்ப்பதென்றாலும் எந்தப்படத்தைப் பார்ப்பதென்பதில் திணறல். அதில் சுமதி என் சுந்தரி பெயரைத்தட்டிக்கொண்டு போனது. குடும்பக்கதையை விரும்பியவர்களுக்கு கே.எஸ்.ஜி.யின் படம் புகலிடமானது. ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட சாவித்திரியின் இயக்கத்தில் வந்த படம் பின் தங்கியது. 50 நாட்கள் கடந்த நிலையில் பிராப்தம் மாற்றப்பட்டு மிட்லண்டில் 'அவளுக்கென்று ஓர் மனம்' வெளியானது.
இந்நிலையில்தான் 150 வது படமாக ஜூலை 3 அன்று 'சவாலே சமாளி' வெளியானது. அண்ணாசாலையில் சைக்கிள் ரிக்ஷா ஓடிய 'தேவி சொர்க்க'த்துக்குப்பக்கத்திலேயே சாந்தியில் ரிலீஸானது. இருபக்கமும் ரசிகர்கள் கூட்டம் எதிரும் புதிருமாக, முறைப்புடன் இருந்தனர். தேர்தலின்போது கேலிபேசிய தறுக்கர்களின் கொட்டத்தை அண்ணனின் 150வது படம் போக்க வேண்டுமென்பதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு தணியாத தாகம்.
சவாலே சமாளி பட வெளியீட்டையொட்டி 'மதி ஒளி' பத்திரிக்கை சிறப்பு மலர் வெளியிட்டது. முன்பக்க அட்டையில் நடிகர்திலகம் தீப்பந்தத்தை கையில் ஏந்தி நிற்பது போன்ற தோற்றமும் (கிளைமாக்ஸ் காட்சியில் விஜயகுமாரியிடமிருந்து பறித்த தீப்பந்தம்) மறுபக்க அட்டையில் மல்லியம் ராஜகோபாலின் அடுத்த படமான 'கிழக்கும் மேற்கும்' படத்தின் இரட்டைவேட தோற்றமும் இடம்பெற்றிருந்தன. (அப்படம் தயாரிக்கப்படவில்லை).
இந்நிலையில் இன்னொரு வேடிக்கை, அந்தப்பக்கம் தலைவருக்கும் தலைவிக்கும் கொஞ்சம் லடாய். 'கோட்டம்' வரையில் தான் தொடர்ந்து ஜோடியாக நடித்திருக்க, இப்போது தலைவர் ரிக்ஷா ஓட்ட புதிதாக 'மஞ்சள்' நாயகியைப் போட்டதோடு, அப்படம் ஓட்டத்திலும் வெற்றிமுகமாக இருக்கவே, தான் நாயகியாக நடித்திருக்கும் நடிகர்திலகத்தின் 150வது படம் மாபெரும் வெற்றியடைந்து தலைவரின் முகத்தில் கரி பூச வேண்டும் என்பதும் தலைவியின் ஆசையாக இருந்ததுதான்.
அண்ணாசாலையில் மட்டுமல்ல பதட்டம். வடசென்னை தங்கசாலைப்பகுதியிலும் ஸ்ரீகிருஷ்ணாவில் ரிக்ஷா ஓட, அருகாமை தியேட்டரான கிரௌனில் சவாலே சமாளி ரிலீஸ். (புரசைவாக்கத்தில் மட்டும் சரவணாவுக்கும் புவனேஸ்வரிக்கும் சற்று தொலைவு). வடசென்னை ஏழுகிணறு பகுதி 'கர்ணன் கணேசன் கலை மன்ற'த்தினர்தான் கிரௌனில் வெளியாகும் நடிகர்திலகத்தின் படங்களுக்கு, தியேட்டர் அலங்காரம் மற்றும் மலர் வெளியீடு ஆகியவற்றை பிரதானமாக நின்று செய்வார்கள்.
இந்த நேரத்தில்தான் ஒரு பிரச்சினை தோன்றியது. அப்போது எதிர் அணியினரின் பிரதான பத்திரிகையாக இருந்த 'திரை உலகம்' பத்திரிகையின் முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக, (திருச்சி மாநாட்டை கிண்டல் செய்து) "சவாலே சமாளி படத்துக்கு சென்னையில் சமாதி, திருச்சியில் கருமாதி" என்று செய்தி வெளியிட்டு மிகவும் கேவலமாக எழுதியிருந்தனர். இதைப்பார்த்து கொதித்தெழுந்த வடசென்னை தங்க்சாலைப்பகுதி ரசிகர்கள், குறிப்பாக 'கர்ணன் கணேசன் கலை மன்றத்தினர்' ஸ்ரீ கிருஷ்ணா தியேட்டரில், அங்கிருந்த எதிர் அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அது வன்முறையாக மாறி பெரிய கலவரத்தில் முடிந்தது. அப்பகுதி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தங்கசாலை (மிண்ட்) பேருந்து நிலையம் வெறிச்சோடிப்போக காவல் துறையினர் வந்து இரு தரப்பிலும் சிலரைக் கைது செய்து அழைத்துச்சென்றனர். (இப்போது அரசியலில் கீரியும் பாம்புமாக இருக்கும் இரு அணியினரும் அப்போது (பெருந்தலைவர் சொன்னது போல) ஒரே குட்டையில் ஊறிக்கொண்டிருந்த நேரம். நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கெதிராக காவல்துறை நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும் என்பதைச்சொல்லத் தேவையில்லை).
நினைக்க நினைக்க நினைவலைகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ராசிகர்களின் எதிர்பார்ப்பின்படி 'சவாலே சமாளி' பெரும் வெற்றியடைந்து, 1972ன் ராஜ பாட்டைக்கு வித்திட்டது.
திரு. கார்த்திக் அவர்களே,
என்ன ஒரு வேகம் உங்களுடைய விவரணையில்! அற்புதம்!! நீங்கள் எவ்வளவு வேகத்தோடு எழுதினீர்களோ, அதை விட வேகமாகப் படித்து விட்டுதான் வேறு வேலையை பார்க்க முடிந்தது.
திரு. ராகவேந்தர், திரு. முரளி, திரு. பம்மலார், சாரதா மேடம் மற்றும் ஏனைய அன்பர்கள் எழுதுவது போல், உங்களுடைய எழுத்துகளும் ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பது மட்டுமல்லாது, அவர்களது நினைவலைகளையும் கிளறி விடுகின்றன.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
சதீஷ்,
1970 அக்டோபர் 1,2 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாள் விழா, 1971 ஜூலை 10,11 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற 150-வது படவிழா நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகள் இப்போதும் இருக்கிறதா என்பதையும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பதிவுகளை வெளிக் கொண்டுவரும் முயற்சி ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கிறது என தெரிய வருகிறது. அதே நேரத்தில் தற்காலிகமாக அவ்விழாக்களைப் பற்றிய பத்திரிக்கை செய்திகளை இங்கே கொடுக்க முயல்கிறோம். ராகவேந்தர் சார் அதை உங்கள் பார்வைக்கு வைப்பார்.
சதீஷ் உங்களுக்கு மேலும் ஒரு செய்தி. வரும் 15 அல்லது 22 அன்று நமது மதுரை சென்ட்ரலுக்கு நடிகர் திலகம் விஜயம் செய்ய இருக்கிறார். இரண்டு சாய்ஸ் இருக்கின்றன எனக் கேள்விப்படுகிறோம். ஒன்று நமது நண்பர் ராகேஷ் மற்றும் சாரதா போன்றவர்களுக்கு மிகவும் பிடித்த ஆக் ஷன் அவதாரம். அல்லது எனக்கு மிகவும் பிடித்த ஒரு குடும்ப நாயகன் பாத்திரம். இவ்விரண்டில் எதுவென்று இன்னும் சில நாட்களில் தெரியவரும். தகவல் உபயம் நண்பர் சுவாமி.
பதிவை பாராட்டியதற்கு நன்றி சுவாமி & சாரதி.
சாரதா,
நன்றி. 1971 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற 43-வது பிறந்த நாள் விழா படமாக்கப்பட்டு பாபு திரைப்படத்தின் இடைவேளையின் போது காண்பிக்கப்பட்டது.
அவன்தான் மனிதன் விழா அவசர நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது உண்மை. அது மதுரை ரசிகர்களை மிகுந்த ஏமாற்றதுக்குள்ளாக்கியது. அதன் காரணமாகவே பின்னாளில் சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு திரிசூலம் விழா மதுரையில் நடத்தப்பட்டது.
ராகவேந்தர் சார்,
என்னென்பதோ ஏதேன்பதோ அருமையான பாடல். மன்னர் அருமையாக போட்டிருப்பார். அதிலும் முதல் இரண்டு சரணங்களை எஸ்.பி.பி. அனுபவித்து பாட, வாணி ஜெயராம் பாடும் அந்த இறுதி சரணம் பிரமாதமாக இருக்கும். அந்தவரிகள்
என்றும் நீ எந்தன் அண்ணன் என்றால்
கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன்
நன்றி நான் சொல்ல வார்த்தையேது
நாளும் நீயின்றி வாழ்க்கையேது
அன்பில் அலைமோதும் நெஞ்சம்
அண்ணன் திருப்பாதம் தஞ்சம்
மதுரையில் படவெளியீட்டின் போது நோட்டிஸ் அடிக்கும் பழக்கும் மட்டுமே இருந்தது. அது போஸ்டர் கலாச்சாரமாக மாறியது 1982 மார்ச் ஏப்ரல் முதல்தான்.இந்த படம் வெளியான ஒரு 9,10 மாதங்களுக்கு பின்தான். அந்நேரத்தில் முதன்முதலாக அடித்த போஸ்டரில் மேற்சொன்ன வரிகளில் குருடாக என்ற வார்த்தையை மட்டும் எடுத்துவிட்டு ரசிகராக என்ற வார்த்தையை பதிலுக்கு பயன்படுத்தி ஒட்டியிருந்தது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.
அன்னையின் ஆணை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் கிளாசிக்.
ஒன்ஸ் மோர் படம் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நான் ஓபனிங் ஷோ பார்த்த கடைசி நடிகர் திலகத்தின் படம். மதுரைக்கு தற்செயலாக சென்றிருந்த நான் மதுரை சிவம் தியேட்டரில் ஜூலை 4 அன்று காலை ஓபனிங் ஷோ பார்த்தேன். அதற்கு முதல் நாள்தான் நடிகர் திலகத்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படும் அறிவிப்பு வெளியாகியிருந்ததால் படக் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் கரை புரண்டு ஓடியது. ஒன்ஸ் மோர் வெளியான 20 நாட்களுக்குள்ளாகவே நடிகர் திலகத்தின் மலையாள படமான ஒரு யாத்ரா மொழி வெளியானது. அதை கேரளாவில் பார்த்தேன்.
கார்த்திக்,
1971 ஜூலை மாத மோதல் நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். நான் ஒரு விஷயத்தை எப்போதும் குறிப்பீட்டு சொல்வது உண்டு. அது இப்போது சுவாமி வெளியிட்டிருக்கும் விளம்பரத்தை கவனித்தாலும் தெரியும். முரசொலி பத்திரிக்கைக்கு விளம்பரம் கொடுத்திருப்பதை எந்த தடையும் செய்யாமல் அனுமதித்திருக்கிறார். தனக்கு தீங்கு செய்தவர்களுக்கு கூட நடிகர் திலகம் நன்மையே செய்திருக்கிறார். ஒரு திருப்பதி பயணத்தை வைத்து தன்னை அரசியலிலிருந்து விலக்கி வைக்க முயற்சித்தவர்கள் புதையல் எடுக்கவும் குறவஞ்சி பாடி மகிழ்ச்சியடையவும் [இத்தனைக்கும் அவர்களின் லட்சிய குரல் குறவஞ்சி பாடியும் வாங்குவார் இல்லாமல் போனது] உதவியவர் நடிகர் திலகம். தன்னை பொறுத்தவரை நட்புக்கு இருவர் உள்ளம் என்றே உதவினார்.
1967-க்கு பிறகு அமைந்த அரசு மாற்றந்தாய் மனப்பான்மையோடு செயல்படுவதையும் தன்னுடைய படங்கள் சரியான விருதுகளுக்கு பரிசிலீக்கப்படாமல் போவதையும், ஆஸ்கார் விருதுக்கு போக இருந்த தெய்வ மகனை தடுத்து நிறுத்தியதையும், மன்ற பிள்ளைகள் போலீசாராலும் எதிர் அணியினராலும் தாக்கப்பட்டபோதும், அரசின் வெள்ள மற்றும் புயல் நிவாரண நிதிக்காக மற்றும் அரசின் மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காக தானே முன்னின்று நாடகம் நடத்தி உதவி செய்தவர் நடிகர் திலகம். சிவாஜிக்கு அரசியல் தெரியாது என்று கேலி பேசியவர்களுக்கு, அவரது ஆட்சி இயந்திரத்திற்கு அவரது கட்சி பொருளாளர்களே பொருள் உதவி செய்யாதபோது உதவி செய்தது நடிகர் திலகத்தின் கைகளே. திருப்பி கிடைத்ததோ ?
இதைதான் மார்ச் ஏப்ரல் மாதங்களில் வேறு ஒரு திரியில் குறிப்பிட்டு உங்களிடமும் சாரதவிடமும் நீங்கள் ஆதரிக்கலாமா என்று கேட்டேன். சரி விடுங்கள் எதற்கு நமக்கு அரசியல்?
மீண்டும் பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
சந்திரசேகர் சார்,
முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்-கள் சரியாகத்தான் வேலை செய்கிறது. மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.
Dear Mr.Satish,
My sincere thanks for your praise. With regard to the 1971 'Savale Samali' Trichy function, as of now, there is no Softcopy / DVD copy available in the Web / Market. If this treasure is found, it will definitely attain a DVD Status. As Murali Sir said, We will keep our hopes alive & kicking.
டியர் mr_karthik,
தங்களின் உயர்ந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் ! "சிவந்த மண்" மற்றும் "தெய்வமகன்" சாதனை விளம்பரங்களை அடியேன் அளிப்பதற்கு தூண்டுகோலாய் விளங்கிய தங்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகளும் உரித்தாகுக ! "சவாலே சமாளி" நினைவுகள் சூப்பர். பார்த்தசாரதி சார் கூறியது போல் தங்களது தெளிவான எழுத்துநடை பிரமிக்க வைக்கிறது. பாராட்டுக்கள் !
டியர் மகேஷ் சார்,
தங்களது மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் !
சகோதரி சாரதா,
தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் அளித்தமைக்கு பசுமையான நன்றிகள் ! சாதனைப் பொக்கிஷங்கள் செவ்வனே தொடரும் !
டியர் கிருஷ்ணாஜி,
பாராட்டுக்கு நன்றி !
டியர் ஜேயார் சார்,
பாராட்டுக்கு நன்றி !
டியர் ராகவேந்திரன் சார்,
பாடல் பதிவுகள் ஒவ்வொன்றும் பிரமாதம். "சவாலே சமாளி" வெளியான தினத்தன்று, தங்களுக்கு சென்னை சாந்தியில் ஏற்பட்ட அனுபவங்கள் சுவையானவை மட்டுமல்ல, சுவாரஸ்யமானவையும் கூட.
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களது பாராட்டுக்களை வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.