Originally Posted by
saileshbasu
மறுநாள் காலையில் எட்டு மணி இருக்கும் என்று நினைக்கிறன் அப்பாவுக்கு ஒரு கார் வந்தது ... நானும் பட்டு பாவாடை சட்டை எல்லாம் போட்டு அப்பாவிடம் புறப்பட்டேன் .. அப்பா என்னிடம் ஒரு வார்த்தை சொன்னார் அங்கே வந்தால் நீ என்னை விட்டு வெளியே போக கூடாது நான் எங்கே இருகிறேய்னோ அங்கே தான் நீ இருக்க வேண்டும் என்று அப்பா சொல்ல நான் சரி என்று தலை ஆடினேன் ... கார் வாஹினி ஸ்டுடியோவுக்குள் நுழைந்தது ... வாசலில் என்று வெள்ளை மாடு முடிகொண்டுவது போல் ஒரு சிலை இருந்தன .நான் அதை பார்த்தேன் .... வெளியே ஒரே கூட்டம்
ஏன் இவ்ளோ கூடம் என்று தெரியவில்லை ... அப்பா என் கையை பிடித்து ஸ்டுடியோ அறைக்கு சென்றார் ... உள்ளே பொய் பார்த்தல் எனக்கு ஒரே அதிசயம் ... மக்கள் திலகமும் .... மக்கள் கலைன்ஞரும் ( நடிகர் ஜெய்ஷங்கர் ) அவர்கள் இருவரும் பேசிகொண்டிருந்தார்கள் ... நான் முதலில் கூறியது போல் ,, பெரியவர் சாண்டோ சின்னப்ப தேவர் ஐயா அவர்கள் என்னை பார்த்தவுடன்
ஒரு சிரிப்பு சிரித்தார் பாருங்கள் எனக்கு என்ன வென்றே சொல்வது தெரியவில்லை .... தேவர் ஐயா என் கையை பிடித்து பாபா என்னுடன் வா என்று சொல்ல .... நேராக என்னை மக்கள் திலகம்
புரட்சித் தலைவர் ஐயாவை நோக்கி கூடிக்கொண்டு சென்றார் ,,,,, மக்கள் திலகம் என்னை பார்த்து சிரிக்க அப்பாவும் தேவர் ஐயா பின்னாடியே வந்தார் ... அப்பா மக்கள் திலகம் புரட்சித் தலைவர் ஐயாவை பார்த்து அண்ணா எப்படி இருகிறீர்கள் நலமா என்று சொல்ல உடனே மக்கள் திலகம் அப்பாவை கட்டி பிடித்து எனக்கு என்னடா நான் சௌக்கியமா இருக்கேன் ... உடனே நான் அப்பாவுடன்
இருந்த போது ஒஹ்ஹ்ஹ் வேணு இது உன் குழந்தைதானே ஆமாம் என்று அப்பா சொல்ல .... என்னை கன்னத்தில் தட்டி கொஞ்ச நேரம் அவர் மடியிலே அமர்ந்து .... அவருடன் மக்கள் கலைன்ஞர்
ஜெய்ஷங்கர் அவர்களுடன் நானும் சேர்ந்து அமர்திருந்தேன் .... அன்றைக்கு தான் முதல் நாள் ஷூட்டிங் நடந்த ஆரம்பமான நாள் அது ....... மக்கள் திலகம் கிளாப் அடிக்க .....முதல் நாள் ஷூட்டிங் என்பதால் கூடம் அலை மோதியது ..... உடனே மக்கள் திலகம் எல்லோருடன் பேசி முடிந்தவுடன் ...... அப்பாவிடம் கையை குலுக்கி அப்பா உடனே அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் செய்ய
உடனே என்னை பார்த்து குழந்தையை நல்ல பார்த்துகொள் என்று சொல்ல அவருடைய படபிடிப்புக்கு சென்று விட்டார் டாக்டர் புரட்சித் தலைவர் ஐயா அவர்கள் ... இது என்னால் மறக்க முடியாத நாள் என்று தான் சொல்லவேண்டும் நான் அவரை கண்டது பெரிய பாக்கியம் ...
........சகோதரி லதாங்கி, நீங்கள் ரெம்ப அதிர்ஷ்டசாலி.