http://i57.tinypic.com/2pqpci8.jpg
Sent from my HM NOTE 1LTEW using Tapatalk
Printable View
http://i57.tinypic.com/2pqpci8.jpg
Sent from my HM NOTE 1LTEW using Tapatalk
திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு,
பணி நெருக்கடியில் மறந்து விட்டேன். தங்களுக்கு என் உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். அடிக்கடி திரியில் பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கோருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஆதிக்கபுரியினரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றியவரும் ‘பச்சைத் தமிழர்’ என்று அய்யா பெரியாராலும், ‘குணாளா, குலக்கொழுந்தே’ என்று பேரறிஞர் அண்ணாவாலும், ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று புரட்சித் தலைவராலும் புகழப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில் அவரை தமிழர்கள் ஒவ்வொருவரும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பெருந்தலைவரின் புகழ் காக்க பொன்மனச் செம்மலாம் நம் புரட்சித் தலைவர் மேற்கொண்ட பணிகளை எடுத்துக் காட்டும் ஆவணங்களை பதிவிட்டுள்ள திரு.குமார் சாருக்கு நன்றிகள். மூத்த காங்கிரஸ் தலைவர்களாக விளங்கிய திரு.பா.ரா., பெரியவர் பக்தவச்சலம், அய்யா மூப்பனார், மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி, அய்யா ம.பொ.சி. ஆகியோரின் கருத்துக்கள் மனதை தொடுகின்றன.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Don't ask such silly questions addressing MGR FANS. Try to understand one basic concept that our beloved God M.G.R. stood on his own and at the cost of others he never attained success both in Tamil Cinema and in Politics. In fact, our beloved M.G.R.'s contribution was enormous towards the growth of D.M.K. next to the Great Leader PERARIGNAR ANNA.
If CMs can use their influence to get Awards, then numerous Padmashree, Padmabhushan awardees will be there in all the States in our country. I don't consider at this age and stage, to add something into your brain and make you to be aware of this fundamental truth.
If you write like this then people will have their own doubt about the Padmashree Award received by Nadigar Thilagam, with the influence of then Congress CM.
We know about you and your intention behind the question. Don't enter into our Thread by asking such meaningless question, at-least, henceforth.
அன்றைய கால கட்டத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் வயது என்ன மக்கள் திலகத்தின் அண்ணா திமுக வின் வயது என்ன கோவை சட்ட மன்ற தொகுதி மற்றும் மக்களவை தொகுதி வாக்குகள் சொன்ன நீங்கள் திண்டுக்கல் பாராளுமன்றத்தின் வாக்குகள் வித்தியாசத்தை ஏன் சொல்லவில்லை உங்கள் கட்சியின் சின்னம் ஏர் உழவன் சின்னம் புதிது என்றால் எண்களின் இரட்டை இல்லை சின்னம் பழைய சின்னம்மா ? இரட்டை இலை என்று சொல்லுவதற்கு கூட உங்களுக்கு எழுத மனம் வரவில்லை அந்த அளவுக்கு எதிரி முகாம் நடிகர் ஆட்சி பிடித்து விட்டார் என்ற பொறாமையே தெரிகிறது . தலைவர் 1977 மற்றும் 1980 களில் தன்னுடைய பெரும்பான்மையும் மக்களின் ஏகோபித்த ஆதரவினையும் பெற்றது உலகறிந்த உண்மை 1967-இல் தலைவர் திமுகவில் இருந்தார் 1971-இல் திமுகவில் இருந்தார் திமுக ஆட்சி பிடித்தது தலைவரை திமுக வெளியேற்றியது 1977 -1முதல் 1987 வரை திமுகவினால் ஆட்சி கைபற்றமுடியவில்லை
இரு காங்கிரஸ் வாக்குகள் சேர்த்தால் ஆட்சி பிடிக்கும் அளவுக்கு வரும் சொல்லும் நீங்கள் திமுக அண்ணா திமுக வாக்குகள் சேர்த்தால் உங்கள் நிலை ?
எதுவான போதிலும் எங்கள் புரட்சி தலைவர் ஆட்சி பிடித்தார் தொடர்ந்து மூன்று முறை முதல்வர் ஆன ஒரே நடிகர் என்ற பெருமை எங்களுக்கு எல்லாம் மேலும் அவர் தோற்றுவித்த கட்சி இன்றும் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது தேசிய அளவில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக இருபதற்கு மக்கள் மக்கள் திலகத்தின் மேல் வைத்து இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை தான் இதை காட்டுகிறது
Quote Originally Posted by Murali Srinivas View Post
நடிகர் திலகம் அவரின் கலைப்பயணம், அரசியல் ஈடுபாடு, பெருந்தலைவருடனான அரசியல் பயணம் போன்றவற்றை பற்றி திருச்சியை சேர்ந்த நண்பர் பாஸ்கர் அவர்களுடன் உரையாடுவது வழக்கம், அப்படி ஒரு முறை அண்மையில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலை ஒரு நிகழ்வை அவர் நினைவு கூர்ந்தார். அன்றைய நாளில் அதை நானும் கவனித்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் ஒருமுறை அந்த நிகழ்வை ஆராயும்போது கிடைக்கும் பரிமாணங்கள் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியது.
மற்றொர்ன்றுமில்லை. 1977 ஜூன் மாதம் தமிழக சட்டமன்றத்திற்கான பொது தேர்தல் நடந்தது. அதன் முடிவகள் இன்னும் சரியாக சொல்லப் போனால் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளையும் அதன் சதவீத கணக்கையும் உற்று நோக்கினால் கிடைக்கும் உணர்வுகளைதான் குறிப்பிட்டேன். நாம் குறிப்பிடும் தேர்தல் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தேர்தல். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தேர்தல் என்று எளிதாக சொல்லி விடலாம் என்றாலும் கூட பல்வேறு கட்சிகள் தங்கள் வலிமையை உரைத்துப் பார்க்கும் ஒரு களமாகவும் விளங்கியது.
அப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அன்றைக்கு நான்கு முனை போட்டி நடந்தது. காங்கிரஸ், ஜனதா, திமுக, அதிமுக ஆகிய நான்கு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. அதிமுக கூட்டணியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்வர்ட் ப்ளாக் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஒரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட சி.பா. ஆதித்தனாரை அதிமுக ஆதரித்தது..இந்திய கம்யூனிஸ்ட் [வலது] காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. ஜனதா கட்சியும் திமுகவும் தனியே போட்டியிட்டன.
ஜனதா என்பது பெயர் மாறிய ஸ்தாபன காங்கிரஸ் இயக்கம்தான் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் என்ற பெயரில் தமிழகத்தில் அன்று இயங்கிய கட்சியினரும் 95% ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வந்தவர்களே எனபதும் அனைவரும் அறிந்த விஷயம். பெருந்தலைவர் மறைவிற்கு பின் ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்திலிருந்து ஒரு பிரிவினர் விலகி இந்திரா காந்தி அம்மையார் தலைமையில் இயங்கிய கட்சிக்கு சென்றனர். 1969-ல் காங்கிரஸ் இயக்கம் பிளவுப்பட்டத்திலிருந்து 1975-ல் பெருந்தலைவர் மறைவு வரை தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு அனைவரும் அறிந்ததுதான், அந்த பிளவிற்கு பிறகு இந்திரா காங்கிரஸ் 1971 பொது தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 10 மக்களவை தொகுதியில் மட்டும் போட்டியிட்டது. அந்த வெற்றியை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அதன் பிறகு 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 11 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார் திரு கரு.சீமைச்சாமி. அதற்கு அடுத்த வருடம் 1974-ல் புதுவை சட்டமன்ற தேர்தலும் அதோடு சேர்ந்து கோவை மக்களவை தொகுதிக்கும், மேற்கு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்நேரம் தமிழக அரசியலில் ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. 5 வருடங்களாக பிரிந்து இருந்த காங்கிரஸ் இயக்கங்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தன.
பெருந்தலைவரும் அவர் தொண்டர்படையும் களத்தில் முழுமூச்சுடன் இறங்க, இந்திரா அம்மையார் மேல் தமிழகத்தில் நிலவிய நல்லெண்ணமும் ஒன்று சேர தேர்தல் முடிவுகள் அதேற்கேற்றார் போல் அமைந்ததன. கோவை சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் அரங்கநாயகம் வெறும் 531 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது.. கோவை மக்களவை தொகுதியில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமதி பார்வதி கிருஷ்ணன் 1,71,000 + சொச்சம் வாக்குளை பெற்றபோது ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் திரு எஸ்.வி. லட்சுமணன் [பின்னாட்களில் ஜனதா கட்சியின் தமிழக தலைவராகவும் செயல்பட்டவர்] 1,69,000 சொச்சம் வக்க்கள் பெற்று வெறும் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 30 இடங்களில் 12 இடங்களை அதிமுக கைப்பற்றியபோது காங்கிரஸ் இயக்கங்களும் அதே போல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவிற்கு ஆதரவு கொடுக்க சுயேச்சை உறுப்பினர் ஒருவரின் ஆதரவையும் பெற்று அங்கே அதிமுகவின் முதல் அமைச்சரவை பதவியேற்க அதிமுகவின் முதல் முதலமைச்சராக திருஎஸ். ராமசாமி பொறுப்பேற்றார், . ஆனால் பட்ஜெட் பேப்பர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்னரே வெளியாகிவிட சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அதிமுக அரசு தோல்வியை தழுவ 21 நாட்களில் அரசு கவிழ்ந்தது.
புதுவை சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்தபோதுதான் பெருந்தலைவரும் அன்னை இந்திராவும் இருபுறம் நிற்க நடுவில் நடிகர் திலகம் நிற்கும் அந்த famous புகைப்படம் எடுக்கப்பட்டது
நாம் குறிப்பிட வந்தது அதல்ல. காங்கிரஸ் இயக்கங்கள் இணைந்து செயல்படுவதால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய நன்மைகளையும் இந்த இணைப்பை மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக கோவை மற்றும் புதுவை வாக்காள பெருமக்கள் அளித்துள்ள ஆதரவையும் சுட்டிக்காட்டிய நல்லோர்கள் இரண்டு இயக்கங்களும் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். .
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பெருந்தலைவரின் கருத்து உறுதியாக இருந்தது. இணைவதில் எந்த பிரச்னையுமில்லை. ஆனால் அந்த இணைப்பு அகில இந்திய அளவில் இருக்க வேண்டும். ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தின் அகில இந்திய மற்றும் மாநில தலைவர்களின் ஒப்புதலோடு அது நடைபெறவேண்டும் என்பதுதான் அது.
ஆனால் இந்திரா காந்தி அம்மையாரோ அதற்கு தயாராக இல்லை. காரணம் மற்ற மாநிலங்களில் அவர் கட்சிக்கு செல்வாக்கு நிறைய இருந்தது. அங்கெல்லாம் ஸ்தாபன காங்கிரஸ் தயவு தேவையில்லை என்று அவர் நினைத்தார். மேலும் ஸ்தாபன காங்கிரஸ் அகில இந்திய தலைவர்களை மீண்டும் சேர்க்க அவர் விரும்பவில்லை. தமிழகத்தில் அவர் கட்சியால் வேரூன்ற முடியவில்லை என்பதனாலும் பெருந்தலைவர் மேல் இருந்த சின்ன கரிசனத்தினாலும் தமிழகத்தில் மட்டும் இணைப்பு அல்லது கூட்டணி எனபதற்கு இந்திரா தயாராக இருந்தார். தமிழகத்திற்கு மட்டும் என்ற நிபந்தனையை பெருந்தலைவர் ஏற்க தயாராக இல்லை. எனவே அந்த முயற்சி முழுமை பெறாமல் போனது. அதற்கு அடுத்த வருடம் [1975-ல்] இந்திரா கொண்டுவந்த அவசர நிலை சட்டம், எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் கைது என்ற நடவடிக்கைகள் பெருந்தலைவரை மனதளவில் பெரிதும் பாதித்து அந்த இணைப்பு முயற்சி அடியோடு கைவிடபப்ட்டது. .
அதன் தொடர்ச்சியாக பெருந்தலைவர் உடல்நிலை மோசமடைந்து அவர் காலமானதும் அவர் தலைமையில் இயங்கியவர்களில் ஒரு பிரிவினர் இந்திராவின் தலைமையை ஏற்று அங்கே பொய் சேர்ந்ததும் நாம் அனைவரும் அறிந்த பலமுறை இங்கே விவாதித்த விஷயங்கள்தான்
இப்போது நாம் முதலில் பேசிய 1977 தேர்தல் முடிவுகளுக்கு வருவோம். தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது காங்கிரஸ் 27 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 இடங்களையும், ஜனதா 10 இடங்களையும் கைப்பற்றியது. அதிமுக சின்னத்தில் 130 பேர் வெற்றி பெற்றிருக்க [அதில் அதிமுக மட்டும் 126 என்பது என் நினைவு] திமுக 48 இடங்களில் வெற்றி பெற்றது.
வாக்குகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் காங்கிரஸ் சுமார் 30 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது. [சரியாக சொல்ல வேண்டுமென்றால் 29,94,535 வாக்குகள், 17.5 சதவீதம்]. ஜனதா பெற்றிருந்த வாக்குகளோ 28,51,884. 16.7 சதவீதம். பெருந்தலைவரின் இரண்டு தொண்டர்படைகளும் இணைந்து பெற்ற வாக்குகள் 58,46,419. சதவீத கணக்கில் சொன்னால் 34.2%..அன்றைக்கு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த அதிமுக பெற்ற வாக்குகளே 51,94,876.தான். [30.4%].
ஒரே இயக்கமாக இருந்திருந்தால் யார் கண்டது? 1967-ல் பறி கொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் திலகத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் மக்களை ஈர்க்க கூடிய தலைவர்கள் என்று யாரும் இல்லை. [இந்திரா பிராச்சரதிற்கு வரவில்லை]
ஜனதா கட்சிக்கும் மக்கள் மத்தியில் அறிமுகமான தலைவர்கள் [பா.ரா., குமரி அனந்தன்] இருந்தார்களே தவிர கரிஸ்மாடிக் தலைவர்கள் கிடையாது.
1977 பாராளுமன்ற தேர்தலில் அகில இந்தியாவெங்கும் ஜனதா கட்சி வேட்பாளர்கள் ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிட்டபோது தமிழகத்தில் மட்டும் ஸ்தாபன காங்கிரஸின் ராட்டை சுற்றும் பெண் சின்னத்தை பயன்படுத்தினர். எனவே மூன்று மாதங்களில் வந்த சட்டமன்ற தேர்தலில் ஏர் உழவன் சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதே ஒரு சவாலாக இருந்தது.
முக்கியமான விஷயம் பெருந்தலைவர் உயிருடன் இல்லை. அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவர் இல்லாமல் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல்.
அவர் தேர்தல் களத்தில் இல்லாமலேயே இத்தனை லட்சம் ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன என்று சொன்னால் காலம் அவரை நம்மிடமிருந்து பிரிக்காமல் இருந்திருந்தால் அவர் தலைமையேற்று தேர்தலை சந்தித்திருந்தால் மீண்டும் அந்த பொற்கால் ஆட்சி மலர்ந்திருக்கலாம். நமக்கு கொடுத்து வைக்கவில்லை.
அவர் மறைந்து விட்டார் என்ற யதார்த்ததை மனதில் கொண்டால் கூட இத்தனை லட்சம் வாக்குகள் கிடைத்தது என்பது மெய்தானே. அவர் மறைவிற்கு பின்னால் யாரும் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறாமல் கட்டுக்கோப்பாக நடத்தி சென்றிருந்தால் 1977 மீண்டும் தேசிய ஆட்சியை கொண்டு வந்திருக்கும். இதைதான் பலமுறை நான் எண்ணி பார்ப்பது. நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது.
அவர் மறைவிற்கு பின் காங்கிரஸ்-ஐ தமிழகத்தில் வழி நடத்தி சென்றவர்கள் பல சமரசங்களை தொடர்ந்து செய்துக் கொண்டே வந்ததால்தான் இன்றைக்கு இந்த நிலைமை.
ஒப்பற்ற ஆட்சி வழங்கிய பெருந்தலைவரின் பிறந்தநாளான இன்று இதையெல்லாம் நினைத்து வேதனைதான் பட முடிகிறது. மீண்டும் அப்படி ஒரு மனிதனை காலம்தான் நமக்கு கொடையாய். தர வேண்டும்.
இந்த முடிவுகள் அடங்கிய விக்கி பக்கத்திற்கான சுட்டி
https://en.wikipedia.org/wiki/Tamil_...election,_1977.
அன்புடன்
அன்பர்களே மாற்று முகாம் நண்பர் முரளி ஸ்ரீநிவாஸ் பதிவுக்கு உங்கள் பதிலடி பதிவுகளை பதிவு செய்யுங்கள்
Yukesh Babu Sir,
Your one simple response "இரு காங்கிரஸ் வாக்குகள் சேர்த்தால் ஆட்சி பிடிக்கும் அளவுக்கு வரும் சொல்லும் நீங்கள் திமுக அண்ணா திமுக வாக்குகள் சேர்த்தால் உங்கள் நிலை?" is enough.
If I am going to compare then I would have compared the way you said AIADMK [ put together] and Congress [A to Z put together]. Then the question of "IF" does not arise. What has not happened in TN from 1967 [ Congress ruling party] is not possible in TN as of today.