http://i64.tinypic.com/fmnds5.jpg
Printable View
ஒரு குடும்ப கதையை தொடர்ச்சியாக ஸ்டில் போடுவது கொஞ்சம் சிரமம்...எனக்கு இது புது பயிற்சியாக இருந்தது..நிச்சயம் உங்களுக்கு இந்த பதிவுகள் திருப்தியாக இருக்கும் என்று நம்புகிறேன்..எனக்கு இந்த படத்தின் பதிவு ஒரு சவால்தான்..சாமாளித்து விட்டேன்..
http://i68.tinypic.com/6yfvyg.jpg
தரிசனம்-1. இரு மலர்கள்.
----------------------------
தொடர்கிறது...
-----------------
மிக உயர்ந்ததைப் பரிசாகத்
தந்தாலும், அதனினும் மேலான
ஒன்றை விரும்புவதுதான் பெண் மனமோ?
சுந்தர் ஆசை ஆசையாய் வாங்கி வந்திருந்த இதய
வடிவிலான கண்ணாடியை
வாங்கி மகிழ்ந்தாலும், உமா
சுந்தரிடமிருந்து வேறொன்றை
விரும்புகிறாள்.
"இதுக்குப் பதிலா ஒரு முழம்
பூ வாங்கிட்டு முன்னாடியே
இங்க வந்திருக்கக் கூடாதா?"
உமா இப்படிக் கேட்டதும்
சுந்தர் ஏதோ செய்யக் கூடாத
பாவத்தைச் செய்து விட்டது
போல் துடிக்கிறான்.
பாவத்துக்கான பரிகாரம்
தேடுவது போல, உமா 'வேண்டாம்' என மறுக்க,மறுக்க அவளுக்காக பூ வாங்க
ஓடுகிறான்.
இரயில் கிளம்பும் நேரத்தில்
போக வேண்டாம் என்று உமா
சொல்லியும் கேட்காமல் ஓடிய
சுந்தரை, ஏமாற்றம் விரைந்து
எதிர்கொண்டது.
ஆம். அன்புக் காதலிக்கான
மலர்ப் பந்துடன் அவள் முகம் காண ஓடோடி வந்த சுந்தருக்கு
அவள் ஏறிப் போன இரயில்
முதுகு காட்டிற்று.
காலம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. மேலும்,
ஒரு நல்ல உயிரை, அந்த
உயிரை மிக விரும்பும் நெஞ்சங்களை விட்டு இரக்கமின்றி பிரிப்பது குறித்து
அது கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.
அப்படி கவலைப்பட்டிருப்பின்...
நாம் நெஞ்சக் கோயிலில்
வைத்துப் பூஜித்த நடிகர் திலகத்தை, நாம் கதறக்
கதற நம்மை விட்டுப் பிரித்திருக்குமா..என்ன?
( ஏனோ..இதை எழுதுகையில்
என் கண்கள் கலங்குகின்றன.)
----------------
சாந்தி, துவைத்த துணிகளைக்
கொடியில் உலர்த்திக்
கொண்டிருக்கிறாள். சுந்தர்
அங்கே வருகிறான். அவன்
கையில் உமாவுக்கென வாங்கிய பூ.
மெல்ல சாந்தியை நெருங்கி
தயக்கத்துடன் அவளுக்குத்
தன் மீது கோபமா எனக்
கேட்கிறான். முதல் நாள்
நடந்த சம்பவத்தை தான் அப்போதே மறந்து விட்டதாக
சாந்தி சொல்கிறாள்.
தமக்குச் சாதகமான பதில்களை
எதிர்நோக்கியே சில கேள்விகள்
கேட்கப்படுவதுண்டு.
அந்த ரீதியிலான ஒரு கேள்வி,
சுந்தரிடமிருந்து, சாந்தியை
நோக்கிப் போகிறது.
"சாந்தி.. உண்மையைச் சொல்லு.. நீ என்னை விரும்புறியா?"
சுந்தர் சாந்தியிடமிருந்து எதிர்பார்த்த பதில் .. "இல்லை"
என்பது.
சூசகமாய்க் கேட்கப்படும்
கேள்விகளுக்கு, கேள்வி கேட்டவர் எந்த பதிலை எதிர்பார்க்கவில்லையோ.. அந்த பதிலே சில சமயங்களில்
அதிரடியாய் சொல்லப்படுவதுண்டு.
அந்த ரீதியில்..சுந்தருக்கு,
சாந்தி சொன்ன பதில்.. "ஆமா
அத்தான்.நான் உங்களை
விரும்புறேன்".
எதிர்பாராத இந்த பதில்,
சுந்தர் பேச யத்தனிக்கும்
அத்தனை வார்த்தைகளையும்
தடுத்து விடுகிறது.
"விருப்பம்னா.." என்கிற ஒரு
வார்த்தைக்குப் பிறகு சரியான
வார்த்தை கிடைக்காமல்
தவித்துத் திரிகிற
நிமிடங்களில்...
நமக்கு முகம் காட்டி தவித்துக்
கொண்டிருப்பவரின் பின்னால்
வந்து, "நீங்க என் மாமா பையன்ங்கிறதுனால, நீங்க
என்னைத்தான் கல்யாணம்
பண்ணிக்கணும்னு ஏதாவது
சட்டமிருக்கா என்ன?" என்று
புன்னகை அரசி கேட்டதும்,
தவிப்பு முகம் புன்னகையாய்
மாற்றி, குழப்பங்களின் கிடுக்கிப்
பிடியிலிருந்து சட்டென்று
விடுதலையான பெருமகிழ்வோடு சிரிக்கும்
சிரிப்பில்...
நூறு படங்களைத் தாண்டி வந்து
விட்ட "இமேஜ்" மதர்ப்பெல்லாம் காட்டாமல்,
சுந்தர் என்கிற பாத்திரமாகவே
மாறி நிற்கிற நடிகர் திலகம்...
காலம் எழுதிய வியப்பு
வரலாறு.
(... தொடரும்...)
http://i1065.photobucket.com/albums/...psogzlw9xz.jpg
Originaly posted by muthaiyan ammuhttp://i1065.photobucket.com/albums/...sijdo8max.jpeg