http://www.dinakaran.com/ws/vellimal...il.aspx?id=506
Printable View
Thanks to எம்கேஆர்சாந்தாராம்
"உயர்ந்த மனிதன் " படத்திற்கு சிவாஜிக்கு எவ்வளவு சம்பளம் ?
அந்த காலத்தில் சிவாஜியை வைத்து படம் எடுப்பது என்றால் அது " மெகா பட்ஜட் " படமாகும் ! சிவாஜியின் " கால் ஷீட் " கிடைத்து கேட்கும் சம்பளத்தைத் தந்து விட்டால்....... ஒரு நல்ல படம் " ரெடி " ஆகிவிடும் !
ஆனால் சம்பளத்தைப் பொருத்த வரை - அது சிவாஜியின் வேலை அன்று ! நடிகர் திலகம் " நடிப்பு " ஒன்றுதான் கருமமே கண்ணாக இருப்பார் !
பின்னர் யார் சம்பளம் பேசுவார்கள் ?
எல்லாம் சிவாஜியின் தம்பி வி. சி.சண்முகம் தான் !
வி. சி. சண்முகம்தான் சிவாஜியின் சம்பளம், கால்ஷீ, விவகாரம் போன்றவைகளை நிர்வாகித்து வந்தார். எம்ஜிஆர்க்கு , அவர் அண்ணன் சக்ரபாணி மாதிரி சிவாஜிக்கு , வி.சி. சண்முகம் !
அங்கே அண்ணன் - இங்கே தம்பி !
சம்பளத்தைப் பற்றி சிவாஜியிடமே நேரிடையாகக் கேட்டார் அப்பச்சி ! அதற்கு சிவாஜி சொன்னார் :
" சம்பள விஷயம் எல்லாம் என் தம்பி ஷண்முகத்திடம் பேசிக்கொள்ளவு ! "
சண்முகம் வந்தார், அவரிடம் சம்பள விஷயத்தை பேசினார்கள்.
ஷண்முகம் என்ன சொன்னார் தெரியுமா ?
(" அது தெரிந்தால் நீங்கள் எழுதுவதைப் படிப்போமா ? " என்கிறீர்களா ! )
சண்முகம் : " நீங்க எதைக் கொடுத்தாலும் வாங்கிக்க்
கொள்ளலாம் என்று அண்ணன் சொல்லிவிட்டார் ! "
செட்டியார் அவர்களுக்கு அவர் சொன்னது பிடிக்கவில்லை !
சிவாஜியின் முதல் படமான " பராசக்தி " யில் சிவாஜியின்
சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
மாதம் ரு. 250 !
அந்த சம்பளம் கூட சிவாஜி " வேண்டாம் " என்றும் இலவசமாக
நடிக்கிறேன்" என்றும் சொன்னவர் !
அப்போது கே.ஆர். ராமசாமியத்தான் " பராசக்தி " யில் போட
வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவர் செட்டியார் !
ஆனால் " உயர்ந்த மனிதன் " படம் எடுக்கும் போது சிவாஜி
ஒரு மாபெரும் நடிகர் ! அவருக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் ?
யோசித்தார் செட்டியார் !
" பளிச் " என்று ஓர் " ஐடியா " தோன்றியது செட்டியாருக்கு !
செட்டியார் , தன் மகனான சரவணனை இப்படி கேட்டார் :
" அவர் கடைசியாக நடித்த படத்தில் சிவாஜியின் சம்பளம்
எவ்வளவு ? "
அதாவது சிவாஜி அப்போது வாங்கும் சம்பளமே கொடுப்பது
என்று முடிவு செய்யப்பட்டது !
விசாரித்ததில் , சிவாஜி அவர்கள் ஏ.பி. நாகராஜன் படமான
" திருவருச்செல்வர் " படத்தில் நடித்தார் என்றும் அப்போது
ஏ.பி. என். சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் : இரண்டு லட்சம் ரூபாய் !
செட்டியார் " கணக்கு " போட்டார் :
என்ன கணக்கு ?
1. ஏ.பி. என். எடுத்தது வண்ணப் படம் - நாம் எடுப்பதோ கருப்பு -
வெள்ளைப் படம் !
2. ஏ.பி. என். படத்தில் " காஸ்ட்யூம் " கள் மிக அதிகம் !
கிலோ கணக்கில் " கில்ட் " நகைகளை சுமந்து சிங்க நடை
சிவாஜி நடக்க வேண்டும் !
" உயர்ந்த மனிதனுக்கு " - " கோட் - சூட் " போதுமே !
அதுவும் நடப்பதற்கு க் கூட " வாக்கிங் ஸ்டிக் " தருகிறோமே !
3. ஏ.பி. என் . படத்தில் நடிக்க நாட்கள் அதிகம் வேண்டும் !
" உ.ம " க்கு அதிக நாட்கள் தேவை இல்லை !
4.ஏ.பி. என் . படத்தில் சிவாஜிக்குப் பல வேடங்கள் !
" திருவருட்செல்வர் " படத்தில் சிவாஜி மன்னனாக, சுந்தர
மூர்த்தி நாயனராக, அப்பராக, சலவைத் தொழிலாளியாக- பல
வேடங்கள் !
" உ . ம " - க்கு சிவாஜிக்கு ஒரே வேடம் !
இதுதான் செட்டியாரின் கணக்கு !
இந்த மாதிரியான கணக்கு எல்லாம் ஒரு திறமையான
நிர்வாகிதான் போடமுடியும் !
ஏ வி எம் அவர்கள் ஒரு திறமையான நிர்வாகி என்று அடியேன்
சொன்னாள் ....... " சூரியனுக்கே " டார்ச் லைட் " அடித்த கதைதான்! "
( நன்றி : ஆர். பார்த்திபன் ! )
எனவே 2 லட்சம் வாங்கி நடித்த ஏ பி. என் படத்தை விட , ஏ வி எம்
படத்தில் வேலை கம்மி !
" எனவே 2 லட்சத்திற்குப் பதில் ஒன்றரை லட்சம் தரலாம் "
என்று முடிவு செய்தார் செட்டியார் !
என்ன செட்டியார் போட்ட கணக்கு சரிதான் என்று என்
மனது சொல்லியது !
உங்களுக்கு ?
" சம்பளம் ஒன்றரை லட்சம் " என்று சண்முகம் தரப்பில்
சொல்லப்படது ! சண்முகம் " ஓ. கே " என்றார் !
"ஆனால் ஒரு கண்டிஷன் ! " - என்றார் சண்முகம் !
" என்ன கண்டிஷண் ஸ்வாமி ? " என்கிறீர்களா ?
சண்முகம் சொன்னார் :
" இப்போது காலணா கூட தரக்கூடாது !
படம் மொத்தமாக முடிந்தவுடன் படம் " சென்சார் "
போய் வந்தவுடன் ஒரே " செட்டில் மெண்ட் " - ல் மொத்தமாக
கொடுத்து விடவேண்டும் ! "
கசக்குதா செட்டியாருக்கு ?
" சரி " என்றார் !
இத்தான் சிவாஜிக்கு சம்பளம் நிணயத்த கதை !
இப்போது எல்லாம் என்ன கதை என்று தெரியுமா ?
சிவாஜியின் " கலை உலக வாரிசு " கமல் நடிக்கும் " லேட்டஸ்ட் "
படமான " மன்மதன் அம்பு " படத்திற்கு கமல் சம்பளம் எவ்வளவு
தெரியுமா ?
23 கோடி !
அதுவும் எப்படி ?
பாதி தொகையை " அட்வான்ஸ் " ஆக கமலுக்கு -
கமல் ஒப்புக்கொண்ட அன்றே தரப்பட்டதாம் !
இது எப்படி இருக்கு ?
அதை விட கொடுமை என்ன தெரியுமா ?
பணப் பிரச்சனையை விட அந்த படத்தில் " திரிஷாவின் அம்மா நடிக்கிறாரா இல்லையா" என்பதே என்பதே பெரிய பிரச்சனையாம் !
எப்படி இருக்கிறது கதை !
பின்பு ஒரு வழியாக " உயர்ந்த மனிதன் " படப் பிடிப்பு தொடங்கியது
" உயர்ந்த மனிதன் " படத்தில் வாணிச்ரியை அசோகன் ஒரு தலையாக
காதலிப்பார் ! ஆனால் வாணியோ சிவாஜியைத்தான் காதலிப்பார் !
இருதியில் மனைவியைப் பிரிந்த சிவாஜி தன் மனைவி ஒரு குழந்தையைப்
பெற்றெடுத்தான் இறந்தாள் என்கிற உண்மை சிவாஜிக்குத் தெரியாது !
ஆனால் அசோகனுக்கு அந்த உண்மை தெரிய வரும் ! சிவாஜியின்
மகன் சிவகுமார்தான் என்கிற உண்மை சிவாஜிக்குத் தெரியாது ! ஆனால்
அசோகனுக்குத் தெரியும் ! டாக்டராக வரும் அசோகன் கதா பாத்திரம் ஓர்
இருதய நோயாளி ! அப்போது அசோனுக்கு கீழ் கண்டவைகளை தன் நடிப்பால்
செய்து பேர் வாங்கவேண்டும் !
அவைகள் :
1 .உண்மை தெரிந்த அன்று அசோகன் அதிக அளவில் குடித்து விட்டு
சிவாஜியிடம் சிவகுமார்தான் அவருடைய மகன் என்பதை சொல்ல
வேண்டும் !
2.அதே சமயத்தில் போதையில் பேச வேண்டும் !
3. சிவாஜியின் முண்ணாள் மனைவியைப் பற்றிப் பேசி அவரின்
கோபத்திற்கு ஆளாக நடிக்க வேண்டும் !
4. இறுதியில் " வலி " வந்தது போல் அவதிப் பட வேண்டும் !
5. அங்கே நின்று கொண்டிருக்கும் சிவகுமாரை போக வேண்டாம்
என்று சொல்லவேண்டும் !
6. இறுதியாக அசோகன் இறக்கும் தறுவாயில் " சத்யா..... சத்யா.... "
என்று சொல்லியபடி மடிய வேண்டும் !
இதனை வேலைகளை அசோகன் போன்ற ஒரு சாதாரண நடிகர்
செய்ய முடியுமா என்று சொல்லுங்கள் ! அதனால் அசோகனை நான்
குறைத்து எடை போடவில்லை ! அந்த படத்தின் கதா பாத்திரத்தை
அவரால் தாங்க முடியவில்லை என்று சொன்னேன் ! " இரட்டை
இயக்குனர்கள் " கிருஷ்ணன் - பஞ்ச்ய் வும் அவாறே நினைத்தனர்.
என்ன செய்வது என்று அவர்களுக்குப் புரியவில்லை ! நிலைமையைப்
புரிந்து கொண்ட நடிகர் திலகம் சுதாரித்துக் கொண்டார் ! அசோகன்
எப்படி அந்த முக்கியமான கட்டத்தில் அனைவரையும் கவரும்
வகையில் நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி அசோகனுக்கு சொல்லிக்
கொடுத்தார் !
( சுமாரான படம் தான் கிடைத்து !
பொறுத்துக்கொள்ளவும் ! )
அசோகனும் சிவாஜி சொல்லிக் கொடுத்த படியே நடித்தாராம் !
அந்தக் காட்சியிம் மிக சிறப்பாக வந்தது !
சிவாஜியிடம் உள்ள பல நற்பண்புகளில் ஒன்று :
" தன்னைப் போலவே மற்றவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் ! "
என்பதே !
ஒரு படத்தில் ஒரு கட்டத்தில் தான் " டம்மி " யாக இருந்தால் கூட
பரவாயில்லை, அந்த நடிகர் / நடிகை நன்றாக நடித்தார் படம் வெற்றி
அடைய வாய்ப்புக்கள் உண்டு என்று நினைப் பவர் ! இதற்கு நிறைய
எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம் !
இதோ சில :
1. பண்டரி பாய் , தன் கணவனாக வரும் சிவாஜியே நாட்டைக் காட்டிக்
கொடுக்கும் " துரோகி " என்று தெரிய வந்ததும் பண்டரி பாய் பேசும்
வசனங்கள் ! சிவாஜிக்கு அந்த இடத்தில் " டம்மி பீஸ் " தான் !
படம் : " அந்த நாள் "
2. தன் கணவனைப் பழித்துப் பேசும் , தன் தம்பியான எஸ் .எஸ். ஆரை
கனல் தெறிக்கும் வசனம் பேசி எஸ் எஸ் ஆரை சிவாஜி வைத்திருந்த
குடையால் விளாசும் காட்சியில் சிவாஜி " டம்மி பீஸ் " தான் !
படம் : " தெவப் பிறவி "
3. " பிரஸ்டிஜ் " பத்மனாப ஐயரை விட அவர் மனைவியாக வரும் பத்மினி
பல இடங்களில் சிவாஜியை " ஓவர் டேக் " பண்ணுவார் !
படம் : " வியட்நாம் வீடு "
4. சரோஜா தேவியின் வசனங்கள் - " இருவர் உள்ளம் " படத்தில் !
5. தன் மகள் களில் ஒருத்தி தனக்குப் பிறக்கவில்லை என்று உணர்ந்து
கொண்ட " பைலட் பிரேம் நாத் " ஐ , கடைசி கட்டத்தில் " மேஜர் "
சுந்தர்ராஜன் நீளமான வசனங்கள் பேசி உண்மையை உணர்த்தும் காட்சி !
6. " வீரபாண்டிய கட்டபொம்மன் " படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள்
உலகப் புகழ் பெற்றவை ! ஆனால் அதே படத்தில் அவருடைய மனைவியாக
வரும் எஸ். வரலட்சுமி , கட்டபொம்மனைப் போருக்கு வழி அனுப்பும் போது
பேசும் வசனங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா !
" நாமும் போருக்குப் போய்விடலாமா ! " என்று நினைக்கும் அளவுக்கு
இருக்கும் ! அப்போதும் சிவாஜி ஒரு " டம்மி பீஸ் " தான் ! இப்படி பல
படங்கள் ! சிவாஜி மற்ற நடிகர்களுக்கு வழி விட்டு அவர்களும் நன்றாக
நடிக்கட்டும் என்கிற தாராளமான மனப் பான்மை வேறு யாருக்கு வரும் ?
இதோ " உயர்ந்த மனிதன் " படத்திலும் இப்படித்தான் !
அசோகன் குடித்துக்கொண்டே பேசும் வசனங்களுக்கு நடுவே சிவாஜிக்கு
வேலை இல்லை ! எனினும் அசோகன் நடித்த அந்த இடங்கள் அனைவரும்
பாராட்டும் வகையில் அமைந்தது என்று நான் சொல்லித் தெரிய
வேண்டியதில்லை !
மேற்கண்ட படப் பிடிப்பு முடிந்தவுடன் சிவாஜி , சரவணனிடம்
இப்படி சொன்னாராம் :
" எனக்கு அவன் துரோகி !
அவனுக்கு நான் " ஆக்ஷன் " சொல்லிக் கொடுக்க வேண்டீருக்கு பார் !
படம் நல்லா வரணும்ங்கிறதற்காக அப்படி நான் சொல்லித் தர
வேண்டியுள்ளது ! " என்று முணுமுணுத்தாராம் !
நிலைமை இப்படி இருக்க ...........
அசோகன் , சரவவணன் இடம் அடித்த " கம்மெண்ட் "
என்ன தெரியுமா ?
" ஏண்ணே, இந்த ஆள் ( சிவாஜி ) நம்மளக் கவுத்திட வில்லையே ? "
இதைக் கேட்டு சரவணன் , அசோகனைக் கடிந்து கொண்டார் !
சரவணன் : ( அசோகனிடம் ):
" அடப் பாவி மனுஷா !, அவர் உனக்காக எவ்வளவு அக்கறையாகக் கற்றுக்
கொடுத்தார் ! ஏன் நீங்க அப்படி நினைக்கிறீங்க ? "
இந்த கட்டத்தில் ஒன்றை நான் சொல்லியே ஆக வேண்டும் !
அந்த காட்சியில் சிவாஜி , அசோகனுக்கு சொல்ல்க் கொடுத்தில்
ஒரு சதவிகிதம் தான் அசோகன் நடித்துக் காட்டினார் ! அசோகன்
சிவாஜி சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருந்தால் படம்
மிகப் பெரிய " இட் " ஆகிருக்கும் ! "
இதை சொன்னவர் :
அசோகனின் நெருங்கிய நண்பர் :
ஏ.வி. எம். சரவணன் !
Thanks to Sivaji rasikan,
டம்மி பீஸ் " வகையில் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாமே ? இதோ எனக்கு (?) தெரிந்த சில " டம்மி பீஸ் "
திருவிளையாடல் படத்தில் தருமி (நாகேஷ்) செய்யும் விவாதம்...
பார் மகளே பார் படத்தில் வி.கே.ராமசாமி நடிகர் திலகத்தின் கௌரத்தை குலைக்கும் விதமாக பேசும் அந்த காட்சி,
ராஜ ராஜ சோழன் -ல் லட்சுமியும் நடிகர் திலகமும் வாதிடும் "என்று சொல்லுங்கள் அண்னா" காட்சி
பாசமலர் படத்தில் ஜெமினி கணேசன் நடிகர் திலகத்திடம் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக மிரட்டும் காட்சி
மேலும் , தங்க பதக்கம் படத்தில் கே.ஆர்.விஜயா பல காட்சிகளில் நடிகர் திலகத்தையும் விஞ்சி நடித்திருப்பார்.
நடிப்பால் இவரை மிஞ்சி நடித்தவர்களில் சிலர்....
தேவிகா (நீலவானம்),
சாவித்திரி கணேஷ் (பாசமலர்,நவராத்திரி),
பத்மினி (பேசும் தெய்வம், தங்கபதுமை)
இன்றைய தினமணியில் லிருந்து...
.. எந்தக் காட்சி என்று தெரிகிறதா?Quote:
திரையுலகைப் பொறுத்தவரை கதையை முழுவதும் காப்பி அடிப்பது ஒரு ரகம். ஒரு சில சம்பவங்களை மட்டுமே காப்பி அடிப்பது மற்றொரு ரகம். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. சிவாஜி நடித்த "பாவமன்னிப்பு' படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி ஒன்றை "முதல் மரியாதை' படத்தில் அப்படியே அமைத்திருந்தார்கள்
http://dinamani.com/edition/Story.as...Name=Editorial Articles&artid=332449&SectionID=133&MainSectionID= 133&SEO=&Title=கதை திருட்டுக்குத் தேவை கடிவாளம்!
டியர் பாலா,
'உயர்ந்த மனிதன்' படத்தின் சிறப்புகள் பற்றிய நீண்ட கட்டுரை அபாரம். இதன்மூலமாக அப்படம் பற்றிய பல அரிய தகவல்களைத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள், நன்றிகள்.
நடிகர்திலகமும் அசோகனும் பங்குபெறும் குறிப்பிட்ட காட்சியில் நடந்தவற்றை திரு ஏ.வி.எம் சரவணன் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியிலும் கூறியிருந்தார். 'இருமலர்கள்' படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவத்துக்குப்பிறகு இருவரும் பேசிக்கொள்வதில்லை. இருப்பினும் இப்படத்துக்காக நடிகர்திலகம் சற்று விட்டுக்கொடுத்து நடித்தார். 'இவனெல்லாம் துரோகி, இவனுக்கெல்லாம் நடிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கு' என்று நடிகர்திலகம் சொன்னதையும், 'இந்த ஆள் என்னை அமுக்கப் பார்ர்கிறாரா?' என்று அசோகன் கேட்டதையும் சரவணன் நினைவுகூர்ந்தார்.
நடிகர்திலகத்தின் சகோதரர் வி.சி.சண்முகத்தைப்பொறுத்தவரை, அவர் பண விஷயத்தில் ரொம்ப கறார், கண்டிப்பானவர் என்றெல்லாம் அவரைப்பற்றித் தெரியாதவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நெருங்கிப் பார்த்தவர்களுக்குத்தான் அவருடைய மென்மையான அணுகுமுறை தெரியும்.
'ராஜபார்ட் ரங்கதுரை' படத்துக்காக நடிகர்திலகத்தை புக் பண்ணிய அப்படத்தின் தயாரிப்பாளர் வி.சி.குகநாதன், அவருக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக பல இடங்களில் பணம் ஏற்பாடு பண்ணி பேங்கில் போட்டுவிட்டு, ஒருலட்ச ரூபாய் செக்குடன் வி.சி.சண்முகத்தைப்போய்ப் பார்த்து, அட்வான்ஸாக ஒரு லட்சத்துக்கான செக்கை நீட்ட, (திரையுலகில் என்னென்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை 'அப்டுடேட்'டாக விரல் நுனியில் வைத்திருக்கும் சண்முகம், இப்பணத்தை ஏற்பாடு செய்ய குகநாதன் எவ்வளவு பிரயாசைப்பட்டார் என்று தெரிந்து கொண்டு) "முதல்ல செக்கை உங்க பாக்கெட்ல வைங்க. அட்வான்ஸுக்கெல்லாம் இப்போ அவசரமில்லை. முதல்ல இந்தப்பணத்தை வச்சிக்கிட்டு ஷூட்டிங் ஆரம்பிங்க. பாதிப்படத்துக்கு மேல் முடிந்து, ஏரியாக்கள் விநியோகம் ஆனபிறகு பணம் வாங்கிக்கிறேன். அதுமட்டுமில்லே, விநியோகஸ்தர்களிடம் ஏரியா விநியோகம் பற்றி நீங்க நேரடியாக பேசாதீங்க. உங்களை ஏமாத்திடுவாங்க. என்கிட்டே அவங்களை அழைச்சிக்கிட்டு வாங்க. நல்ல ரேட்டுக்கு உங்க படத்தை நான் பிஸினஸ் பண்ணித்தர்ரேன்" என்று சொல்லியனுப்பினாராம்.
சொன்ன மாதிரியே மிக நல்ல ரேட்டுக்கு படத்தை விற்பனை செய்ய உதவினாராம். தரத்திலும், பொருளாதாரத்திலும் தன்னை வெகுவாக உயர்த்திவிட்ட படம் ராஜபார்ட் ரங்கதுரை என்று இன்றுவரை வி.சி.குகநாதன் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
பிறிதொரு சமயம் தன் தம்பி பற்றி நடிகர்திலகம் சொல்லும்போது, "சண்முகம் மட்டும் இல்லேன்னா ரொம்பப்பேர் என்னை ஏமாத்தியிருப்பாங்க" என்று சொல்லியிருந்தார்.
"உயர்ந்த மனிதன்" வெற்றி விழா: அறிஞர் அண்ணா பாராட்டு
http://202.65.145.154/2010/01/29104142/sivaji.html
[quote="saradhaa_sn"]
நடிகர்திலகமும் அசோகனும் பங்குபெறும் குறிப்பிட்ட காட்சியில் நடந்தவற்றை திரு ஏ.வி.எம் சரவணன் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியிலும் கூறியிருந்தார். 'இருமலர்கள்' படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவத்துக்குப்பிறகு இருவரும் பேசிக்கொள்வதில்லை. இருப்பினும் இப்படத்துக்காக நடிகர்திலகம் சற்று விட்டுக்கொடுத்து நடித்தார். 'இவனெல்லாம் துரோகி, இவனுக்கெல்லாம் நடிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கு' என்று நடிகர்திலகம் சொன்னதையும், 'இந்த ஆள் என்னை அமுக்கப் பார்ர்கிறாரா?' என்று அசோகன் கேட்டதையும் சரவணன் நினைவுகூர்ந்தார்.
சாரதா மேடம்,
கர்ணன் படத்திலேயே NT அவர்களுக்கும் அசோகனுக்கும் கருத்துவேறுபாடு வந்து அதன் பின் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படியென்றால் இருமலர்கள் படத்தில் நடிக்க NTஅவர்கள் எப்படி ஒப்புக்கொண்டார்?
that brings out for an interesting discussion
Nambiar was the only person who worked in both the camp without any problem i guess
ஜேயார்,Quote:
Originally Posted by J.Radhakrishnan
கர்ணன் படத்தின்போது ஏற்பட்ட பிரச்சினை, அப்போதே பந்துலு, சித்ரா கிருஷ்ணசாமி போன்றவர்களால் தீர்த்து வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 'முரடன் முத்து' படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் இருவரும் சந்திக்கொள்ளவேயில்லை. பின்னர் இருமலர்கள் படத்தில் இயக்குனர் ஏ.சி.டி., தன் ஆப்த நண்பரான அசோகனை நடிக்க வைத்தார். அசோகனிடம் Loose Talking என்ற கெட்ட பழக்கம் உண்டு. அடுத்தவர்கள் பற்றி கமெண்ட் அடித்துக்கொண்டேயிருப்பார். அப்படி பேசிய ஒரு விஷயம் நடிகர்திலகத்தின் காதுக்கு எட்ட, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரச்சினை வர, நடிகர்திலகம் கோபம் கொண்டு ஏ.சி.டி.யிடம், 'இவன் சீன்களை எடுத்து முடிச்சிட்டு என்னைக்கூப்பிடு' என்று போய் விட்டார். அதன்பின்னர் இருவரும் வரும் சில காட்சிகள் மட்டும் தனித்தனி குளோசப்கள் எடுக்கப்பட்டு எடிட்டிங்கில் இணைக்கப்பட்டன. (தகவல்: இயக்குனர் திரு எஸ்.பி.முத்துராமன்)
இதன்பிறகும், உயர்ந்த மனிதன் படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டது ஏ.வி.எம்.சரவணனின் நட்புக்காகவே. முதலில் நடிகர்திலகம் டாக்டர் ரோலில் மேஜரையும், டிரைவர் ரோலில் முத்துராமனையும் சிபாரிசு செய்தாராம். ஆனால் அசோகனுக்கு டாக்டர் ரோல் தருவதாக உறுதியளித்து விட்டதாக சரவணன் சொல்ல நடிகர்திலகம் தன் கருத்தை வலியுறுத்தவில்லையாம் (தகவல் திரு ஏ.வி.எம்.சரவணன்).