Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் அவர்களே,
நடிகர்திலகத்தின் தனிப்பாடல்களில் என் மனதில் உயரிய இடம் கொடுக்கும் பாடலான 'நான் பிறந்த நாட்டுகெந்தநாடு பெரியது' பாடலை காணொளியாகத்தந்த்மைக்கு மிக்க நன்றி. மிகவும் பிடித்தபாடலாக இப்பாடல் அமைந்ததற்கு பல காரணங்கள்.
1. சமூகப்படங்களின் புதிய பறவைக்குப்பின் வண்ணப்படத்தில் அவரைக்காண ஏங்கிய நேரத்தில் வந்த படம் தங்கச்சுரங்கம். (இடையில் அவர் நடித்த வண்ணப்படங்கள் அனைத்தும் ஏ,பி.என்னின் புராணப்படங்களே)
2. தமிழ்நாட்டின் பெருமை பேசும் அழகிய பாடலாக அமைந்தது. நடிகர்திலகத்தின் தனிப்பாடல் என்றால் ஒன்று சோகப்பாடல், அல்லது ஆக்ரோஷப்பாடல்கள் மட்டுமே என்ற நிலையை மாற்றி, ஜாலியாக ரசிக்கும்படி அமைந்த பாடல்.
3. அவர் மகா ஒல்லியாக அழகிய தோற்றத்தில் இருந்த காலத்தில், ஸ்மார்ட்டாக ட்ரெஸ் அணிந்து, தலையில் ஸ்டைல் தொப்பி, கையில் ப்ரீஃப்கேஸ் சகிதம் ரசிகர்களை உற்சாகப்படுத்திய பாடல். (உண்மையைச்சொல்வதற்கென்ன.... மக்கள் திலகத்தின் 'புதியவானம்.. புதியபூமி' பாடலைப்பார்த்துவிட்டு, தலைவருக்கு இதுபோன்ற பாடல் ஒன்று வண்ணத்தில் அமையவில்லையே என்று ஏங்கிய ரசிகர்களின் வாட்டத்தைப்போக்க வந்த பாடல்).
4. தமிழ்நாட்டையே சிம்லா போல எடுத்துக்காட்டுகிறோம் என்று ஒளிப்பதிவாளர்கள் துரையும் அமிர்தமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக கிராமத்து அழகை எடுத்துக்காட்டிய பாடல்.
5. மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அழகாக மெட்டமைத்து, அதற்கு ராமண்ணா அழகிய வடிவம் கொடுத்த பாடல்.
6. எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத பாடல்.
இத்தனை சிறப்புக்கள் அமைந்த, நம் நாட்டு பெருமை பேசும் பாடலான இப்பாடலை அனைவரையும் காணச்செய்ததற்கு தங்களுக்கு அளவில்லா நன்றிகள்.
(தொலைக்காட்சி சேனல்களில் பாடல்களைத் தொகுத்து வழங்கும் காம்பியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கதாநாயகர்களின் தனிப்பாடல்கள் என்றதும் 'அந்தப்பக்கம்' நல்ல நல்ல பாடல்களாகத் தேர்ந்தெடுக்கும் அதே நேரத்தில், நடிகர்திலகத்தின் தனிப்பாடல்கள் என்றதும், அவர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் பாடல்களாகத்தேடாமல், இதுபோன்ற அற்புதமான பாடல்களை தயவு செய்து... தயவு செய்து... தேர்ந்தெடுத்து ஒளிபரபுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப்போகும்).