rajesh சார் வாசு சார்
காலை வணக்கம்
சுசீலாவின் கானங்களை ரசித்து கொண்டு உள்ளீர்கள்
நேற்று இந்த பாட்டு கேட்டேன் சார்
கோயில் புறா படத்தில்
இளையராஜா இசை
http://www.youtube.com/watch?v=zX97xtTwtGY
ரசிகரஞ்சனி னு ஒரு ராகத்தின் அடிப்படையில் கிபோர்ட் இல் வாசிபதிற்கு எளிதானது என்று படித்த நினைவு
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
சரிக சரிக சரிசரி கபகரி சரிக
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
இந்த பாடலின் இசை நோட்ஸ் ரொம்ப சிம்பிள் சார்
- கீழே + மேல அக்டவேஸ்
அமுதே - தமிழே - அழகிய மொழியே
ச ரி1 க3 - ச ரி1 க3 - ச ரி1 க3 ப க3 ரி1 ச
எனதுயிரே
ச ரி1 ச த2- ச ...
சுகம் பல - தரும் தமிழ்ப் பா
ச ரி1 ச ரி1 - க3 ப ரி1 க3 ப ... ப
சுவையோடு - கவிதைகள் தா
ரி1 க ரி1 க - ப த2 க3 ப த2... த2
தமிழே - நாளும் - நீ பாடு
ப த2 ச+ ... - த2 ப - க3 ப ... க3 ரி1 ச
படத்தில் ராஜா பாதர் னு ஒரு நடிகர் வருவார்
பின்னாட்களில் ஒருவர் வாழும் ஆலயம் படத்திலும் வருவார்
p u சின்னப்பா புதல்வர்