http://i58.tinypic.com/nv5li8.jpg
Printable View
VATHIYAR - MGR
சினிமா விரும்பிகளுக்கு இது பொற்காலம் என்று சொல்லலாமா? செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் பழையது முதல் புதியது வரை, பல்வேறு மொழிகளில் படங்களைப் பார்க்கிற வாய்ப்பு; பிறர் சொல்லக் கேட்டு, விசாரித்து வாங்கிவந்து வீட்டிலேயே டி.வி.டியில் பல படங்களைப் பார்க்கிற வசதி. இதுவும் போக, உபரி சவுகரியமாக, இருபது ரூபாய்க்கு திருட்டு டிவிடிக்கள் வேறு! அப்புறம் இருக்கவே இருக்கிறது இணையதளங்கள், டோரண்டுகள்!
ஆனால், இவற்றில் சரிபாதி வசதிகளும் இல்லாத காலத்தில் வெளிவந்த பல படங்களும், அந்தப் படங்கள் அந்தந்தக் காலகட்டத்தில் படைத்த வரலாறுகளும், அதன் நாயகர்களும் இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடாமல் நம்மோடு அவ்வப்போது உரசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் வியப்பிலும் வியப்பு. அதில் நமக்கு மிகவும் அன்னியோன்னியமானவர் ஒருவர் உண்டேன்றால், அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்று தைரியமாகச் சொல்லலாம்.
நேர்மறையான ஆற்றல் (Positive Energy) என்ற உந்துசக்தியை நமக்குள் உருவாக்க பலவழிகள் கூறப்பட்டுள்ளன:
தியானம் செய்; சகமனிதனை மதித்துவாழ்; தளைகளை அறுத்தெறி; நல்லதையே பார்; அமைதியை விரும்பு; கவலை தவிர்...இன்னும் எத்தனையோ? இது குறித்துத் தான் எத்தனை புத்தகங்கள்? எத்தனை கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்? என்னென்ன வியாக்கியானங்கள்? பலருக்கு இவை புரியாமல், கைக்கெட்டாமல் இருக்கலாம். ஆனால், இவற்றிற்கு எல்லாரும் அறிந்த ஒரு உதாரணத்தை சட்டென்று சொல்வதென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள் என்று துணிந்து அடித்துக் கூறிவிடலாம்.
"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்-இங்கு
ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!
உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை-அவர்
கண்ணீர்க்கடலிலே விழமாட்டார்."
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு புதிய அனுபவத்தினைப் பெறுவதற்காக, நண்பர்கள் சிலருடன் "எங்க வீட்டுப் பிள்ளை,’ திரைப்படத்தை அரங்கினில் சென்று பார்த்த நாளை மறக்க முடியவில்லை. படம் முடிந்துவந்த போது அரங்கினிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்.அபிமானிகளின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி? சற்றே சீர்தூக்கிப் பார்த்தால், ’நாடகத்தனமான வசனங்கள், அதிகப்படியான ஒப்பனை, செயற்கையான காட்சியமைப்புகள், பொருத்தமில்லாத உடையலங்காரங்கள்,’ என எத்தனையோ நெருடல்கள் இருந்தபோதிலும், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் இன்னும் பெரும்பாலானோர் மக்களின் மனதில் பசுமையாய் இருப்பதற்கு காரணம் என்ன? தொழில்நுட்பத்தின் அடிப்படை வசதிகள் கூட கால் ஊன்றியிராத அந்தப் படங்களில் தென்பட்ட அதே குறைகள் இன்றும், இந்த அதிநவீன யுவசினிமா காலத்திலும் தொடர்கிறது எனும்போது, அவை மட்டும் ஒரு சாராரால் எள்ளப்படுவது ஏன்?
அதன் பின்னர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல படங்களை மோஸர் பேயரின் புண்ணியத்தால் நேரம் கிடைத்தபோதெல்லாம் பார்க்க நேர்ந்தது. மதுரை வீரன், மன்னாதி மன்னன், குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி..இன்னும் பல.....!
திரைத்துறையில் பணிபுரியும் சிலரோடு எம்.ஜி.ஆர் படங்கள் குறித்து பலமுறை உரையாடியபோதெல்லாம், பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. மேற்கத்திய பாணியில் வசனங்களைக் குறைத்து, கேமிராவின் உபயோகத்தை அதிகமாக்கிப் படங்களை எடுத்த ஸ்ரீதர்; புராண இதிகாசங்களின் அடிப்படையில் பல படங்களைத் தயாரித்து இயக்கிய ஏ.பி.நாகராஜன்; பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன ஜெமினி எஸ்.எஸ்.வாசன்; அதிரடி படங்களைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ்...என்று பல்வேறு விதமான திரைப்படங்களை எடுத்தவர்களும் எம்.ஜி.ஆருடன் ஏதோ ஒரு கட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.
அண்மையில் புத்தகக்கண்காட்சியில் தமிழ்த்திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட பல புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோது, எம்.ஜி.ஆர் குறித்து பெரும்பாலான பக்கங்கள் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. இது தவிர, எம்.ஜி.ஆர் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்களையும் பார்வையிட நேரிட்டது.
’சின்ன எம்.ஜி.ஆர்,’ ’கருப்பு எம்.ஜி.ஆர்,’ என்றெல்லாம் எம்.ஜி.ஆரோடு தம்மைப் பலர் ஏன் அடையாளம் காண முயல்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் தேர்தல் ஜூரத்தில் பலருக்கு ஏன் எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை வார்த்தையைப் புலம்பாமல் இருக்க முடியவில்லை என்ற சூட்சுமமும் புரிந்தது.
எம்.ஜி.ஆர் பல விதங்களில் இன்று முன்னோடி! திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி - அவர் அடைந்த வெற்றி இன்றளவிலும் மலைப்புடன் வியந்து நோக்கப்படுகின்றது. பலருக்கு அவர் லட்சிய புருஷனாகவும், சிலருக்கு வியாபார தந்திரமாகவும், இன்னும் சிலருக்கு கேடயமாகவும் இன்னும் இருப்பது தான் காலங்கடந்தும் நிலைத்திருக்கிற அவரது புகழின் அடையாளங்கள்!
’அவரு ஒருத்தருக்குத்தான்யா படம் பார்க்க வர்றவங்களோட பல்ஸு தெரிஞ்சிருந்தது,’ என்று ஒற்றை வாக்கியத்தில் ஒரு திரைப்படத்துறையைச் சேர்ந்த நண்பர் கூறியபோது, அது சத்தியம் என்று விளங்கியது.
அவரது பாடல்களில் இழையோடிய கருத்துக்கள்; நேர்மறையான சிந்தனை; சமூக அக்கறை; கிஞ்சித்தும் தவறான முன்னோடிகளை உருவாக்கி விடாமலிருப்பதற்காக அவர் மேற்கொண்ட எச்சரிக்கை - இவற்றில் ஒரு குந்துமணியளவு இன்றைக்கு "நாளைய முதல்வர்" என்று சுவரொட்டி அடித்துக் கொள்கிற அல்பங்களுக்கு இருந்தால், இன்னேரம் தமிழகத்தின் திரையுலகமும், அரசியலும் ஒரு மிகப்பெரிய மாறுதலை சந்தித்திருக்கக் கூடும்.
எம்.ஜி.ஆரைப் பற்றி ஆய்வு செய்கிற பொறுமையோ, அவர் குறித்த தகவல்களைத் தொகுத்தளிக்கிற முயற்சியோ இல்லாதுபோனாலும், இன்றும் வரலாறாய், ஏழை எளிய மக்களின் மன அரியணையில் வீற்றிருக்கும் அந்த யுகபுருஷனை, வணங்குகிறேன்.
இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர்சொல்ல வேண்டும்!
இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்!
வாத்தியார் வாத்தியார் தான்!
REPRODUCED
உன்னை விட மாட்டேன்
https://www.youtube.com/watch?v=S_yhdwfg7MQ
உன்னை விட மாட்டேன்
https://www.youtube.com/watch?v=QZyZloWLQNY
Statues of Tamil personalities at home in Andhra Pradesh
There is a statue of M.G. Ramachandran in the old bus stand area of Puttur town......
http://www.thehindu.com/news/nationa...cle7320386.ece
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகத்தின் நவரத்தினம் -படத்தின் பெருமைகளை மிக அழகாக கூறிய திருகாளிமுத்து
அடிமைப்பெண் - இதயக்கனி - நீதிக்கு தலைவணங்கு - உழைக்கும் கரங்கள் படங்களின் நகரங்களின் வசூல்
மக்கள் திலகத்தை பற்றிய பிரபலங்களின் கருத்துக்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த ஆவணங்களை பார்க்கும் வாய்ப்பை தந்த உங்களுக்கு நன்றி .
Thanks vasudevan sir
[quote=vasudevan31355;1231962]எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-hrnjsna1-8...y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
8
'நீராழி மண்டபத்தில்'
http://padamhosting.me/out.php/i1333...aivancover.jpg
அடுத்த பாலாவின் தொடர் வரிசையில் வருவது 'தலைவன்' படத்தின் 'நீராழி மண்டபத்தில்' பாடல்.
பாலா இதுவரை பாடிய பாடல்களை நீங்கள் உணர்ந்து கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்தப் பாடலில் அவர் குரல் இன்னும் இளமையாக, பஞ்சு போல் மிருதுவாக ஒலிப்பதை கேட்பதை நீங்கள் நன்றாகவே உணரலாம். சற்றே பெண்மை கலந்த ஆணின் குரல்.
எம்.ஜி.ஆர் அவர்களும், வாணிஸ்ரீயும் நடித்த கனவு டூயட் பாடல்.
வாணிஸ்ரீ பத்திரிகையில் வந்த எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தைப் பார்த்து, பின் சுவற்றில் மாட்டியுள்ள நீராழி மண்டபத்தில் காதல் புரியும் ரதி மன்மதன் போன்ற காதலர்களின் புகைப்படத்தைப் பார்த்து கனவு காணுவார். புகைப்படத்தில் தெரியும் நீராழி மண்டபம் இப்போது நிஜ செட்டாகத் தெரிய, பாடல் ஆரம்பிக்கும்.
சிம்பிளான பாடல்தான். வரிகளில் தமிழ் கொஞ்சுகிறது. அதிக செட்கள், ஆடம்பரம் என்றில்லாமல் எளிமையாகவே பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது. (சற்று வறட்சி நிலைதான்)
முஸ்லீம் மங்கை போல கழுத்திலிருந்து கால்வரை முழு உடை தரித்து, கழுத்தில் தொங்கும் இரட்டை ஜடையுடன், 'பார்பி' டால் மாதிரி நெற்றியில் புரளும் முடியுடன் வாணிஸ்ரீ மிக அழகாக மும்தாஜ் போல ஜொலிக்கிறார். தலையில் முக்காடிட்டிருக்கும் மெல்லிய வெள்ளைத் துணி மேலும் அழகூட்டுகிறது. அதே போல கைகளில் கட்டியிருக்கும் கர்சிப் போன்ற கிளாத்தும்.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒயிட் அண்ட் ஒயிட் கோட்டில் 'எங்கே அவள்?...என்றே மனம்'...'குமரிக் கோட்டம்' தோற்றத்தை நினைவு படுத்துவார்.
மீன் தொட்டியின் உள் தோற்றத்தைப் போல செட். நீர்த்தாவரங்களும், அடியிலிருந்து கிளம்பும் நீர்க்குமிழ்களும், சுற்றித் திரியும் மீன்களும் இதுபோல நிறைய தடவை பார்த்தாயிற்றே என்று சலிப்படையத்தான் வைக்கும். பின் அடுத்த சரணம் விண்ணில் உலவுவது போல.
வழக்கமான காதல் உற்சாகம் எம்.ஜி.ஆர் அவர்களிடம் குறைந்தது போல இருக்கும். தாவல், துள்ளல், துவட்டல்கள் அதிகம் இருக்காது.
'போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க' எனும் போது எம்.ஜி.ஆர் அவர்களின் கைவிரல்கள் ஆட்டோமேடிக்காக இரட்டை இலைச் சின்னத்தை சுட்டிக் காட்டுவது போல இயற்கையாக அமைந்தது விந்தை.
[பாடல் முடிவடையும் தருவாயில் மீண்டும் பல்லவிக்கு வரும் போது எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ ஸ்டில்கள் 6 காட்டியே பாடலை முடிப்பது அட்ஜஸ்ட்மென்டா:) அல்லது புதுமையா என்று குழப்பம் வருகிறது. ஒருவேளை கால்ஷீட் கிடைக்காததால் இவ்வாறு ஒப்பேற்றி விட்டார்களோ!?
அருமயான பாடல். பாலா, சுசீலா நல்ல ஒத்துழைப்பு. கொஞ்சும் பாடல் வரிகள். இனிமையான இசை எல்லாம் அமைந்திருந்தும் பாடல் படமாக்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
'காதலிலே பெண்மை தலை குனியும்' என்று சுசீலா முடித்தவுடன் பாலா தரும் 'ஆ'....ஹம்மிங் அவருக்கே உரித்தான தனித்துவம் பெற்றது.
'பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய'
கவிஞரின் (வாலி) திறமைக்கு இருவரி எடுத்துக்காட்டு.
'காதலி வெட்கப்படும் போது நமக்கு இங்கே என்ன வேலை? மேகத்துக்குள் ஒளிந்து கொள்வோம்... வெளிச்சம்தானே தடை...இருட்டில் அவள் வெட்கம் கொள்ளாமளிருக்கட்டும்... காதலனும் ஜமாய்க்கட்டும்'...
என்று நிலவு மேகத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறதாம். நல்ல வளமான சுவைமிகுந்த கற்பனை நயம். எஸ்.எம்.எஸ். இசை வழக்கம் போல் வளமை! இனிமை!
இந்தப் படத்தில் வழக்கமான எம்.ஜி.ஆர் படங்களில் பணி புரியும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைவாகவே பணி புரிந்திருப்பார்கள். (ஆர்.கே.சண்முகம் போன்ற ஒரு சிலர் தவிர)
கிறித்துவர் தயாரிப்பு (பி.ஏ தாமஸ்) என்பதால் நிறைய கிறித்துவ உதவி தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பங்கு பெற்றிருப்பார்கள். உதவி இயக்கம், படத்தொகுப்பு உதவி இயக்கம் அலெக்சாண்டர் ரோச் என்ற நபர். இயக்கம் தாமஸ் மற்றும் சிங்கமுத்து
எஸ்.பி.பி பாடிய பழைய பாடல்களில் எல்லோரும் ஞாபகம் வைத்து சொல்லும் பாடல் என்பதிலேயே இப்பாடலின் வெற்றியை அனைவரும் உணரலாம். பாலா நிறைய சுசீலாவுடன் பாட ஆரம்பித்த கால கட்டமிது.
நீராழி மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும் போது தலை குனிந்தாள்
வாடையிலே வாழை இலை குனியும்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்
ஆ..........ஆ
காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்
பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
ஆ..........ஆ
பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேலை கண்டான்
அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்
நீராழி மண்டபத்தில்
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க
போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
வந்து வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க
பேர் அளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க
கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நமது இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம்
30.6.1977.
38 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் நம்மை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய வரலாற்று பெட்டகத்தை மக்கள் திலகம் திரியில் மலரும் நினைவுகளாக பதிவிடுகிறேன் . தமிழரசு இதழின் ஆவணங்கள் உங்கள் பார்வைக்கு .
http://i57.tinypic.com/hta0aw.jpg
ALL ROUNDER MAKKAL THILAGAM MGR - NAVARATAHNAM
https://youtu.be/fQHrFyltBCI
http://i125.photobucket.com/albums/p...ps70871ea5.jpg
THANKS ROOP SIR
Sir,
நடிகர் திலகத்தை வைத்து திரைப்படம் தயாரித்த அனைத்து தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து தெருவில் நிற்க அவர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் அவர்கள் தேடிபோய் லட்ச லட்சமாக பணம் கொடுத்து உதவி அவர்களை மீண்டும் செல்வந்தர் ஆக்கினார்....மேலும் இதனால் உடம்பு செரியில்லாமல் போன அனைத்து தயாரிப்பாளர்களை ஆசுபத்திரியில் சேர்த்ததோடு மட்டும் அல்லாமல் அவர்கள் வங்கிகளில் கணிசமான தொகையை FD இல் வரவு வைத்து அவர்கள் வாழ ஒளியேற்றினார் மக்கள் திலகம் !
இதில் திரு கண்ணதாசன், திரு அசோகன், திரு சந்திரபாபு, கோல்டன் ஸ்டுடியோ நாயுடு, குலதெய்வம் ராஜகோபால், BR பந்துலு, AP நாகராஜன் மற்றும் விடுபட்டுப்போன அனைவரும் அடங்கும் !
இப்படி ஒரே வரியில் " நச்ச்" என்று உங்களை பற்றி உயர்வாக எழுதிய பத்திரிகையாள ரசிகர் செய்தியை போடுங்கள் சார் அதை விடுத்து ஒவ்வொரு செய்தியாக எதற்கு ?
நாங்களே ஒத்துகொள்கிறோம் போதுமா ?
நீங்கள் இதற்க்கு பத்திரிகையில் வந்த செய்தியை தான் நான் போட்டேன் என்று கூறுவீர்கள் வழக்கம்போல !
இதுபோல செய்தி நான் போட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா என்று மட்டும் எனக்கு சொல்லுங்கள் !
நடக்கட்டும்...நடக்கட்டும்....பொய்கள் தற்காலிக வெற்றி அடைந்ததுபோல தெரியலாமே தவிர நிலைத்து நிர்ப்பது என்றும் உண்மைதான் !
RKS
Sir,
நடிகர் திலகத்தை வைத்து திரைப்படம் தயாரித்த அனைத்து தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து தெருவில் நிற்க அவர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் அவர்கள் தேடிபோய் லட்ச லட்சமாக பணம் கொடுத்து உதவி அவர்களை மீண்டும் செல்வந்தர் ஆக்கினார்....மேலும் இதனால் உடம்பு செரியில்லாமல் போன அனைத்து தயாரிப்பாளர்களை ஆசுபத்திரியில் சேர்த்ததோடு மட்டும் அல்லாமல் அவர்கள் வங்கிகளில் கணிசமான தொகையை FD இல் வரவு வைத்து அவர்கள் வாழ ஒளியேற்றினார் மக்கள் திலகம் !
இதில் திரு அசோகன், திரு சந்திரபாபு, கோல்டன் ஸ்டுடியோ நாயுடு, குலதெய்வம் ராஜகோபால், BR பந்துலு, AP நாகராஜன் மற்றும் விடுபட்டுப்போன அனைவரும் அடங்கும் !
இப்படி ஒரே வரியில் " நச்ச்" என்று உங்களை பற்றி உயர்வாக எழுதிய பத்திரிகையாள ரசிகர் செய்தியை போடுங்கள் சார் அதை விடுத்து ஒவ்வொரு செய்தியாக எதற்கு ?
நாங்களே ஒத்துகொள்கிறோம் போதுமா ?
நீங்கள் இதற்க்கு பத்திரிகையில் வந்த செய்தியை தான் நான் போட்டேன் என்று கூறுவீர்கள் வழக்கம்போல !
இதுபோல செய்தி நான் போட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா என்று மட்டும் எனக்கு சொல்லுங்கள் !
நடக்கட்டும்...நடக்கட்டும்....பொய்கள் தற்காலிக வெற்றி அடைந்ததுபோல தெரியலாமே தவிர நிலைத்து நிர்ப்பது என்றும் உண்மைதான் !
RKS
வரலாற்று விற்பன்னர் (????) திரு சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் அறிவது.
'தாலி பாக்கியம்', 'ஒருதாய் மக்கள்' வெற்றிப்படங்கள். ஆனால் 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு', 'கிருஷ்ணன் வந்தான்' தோல்விப்படங்களா?. எந்த வகையில்?.
'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' (உங்கள் வார்த்தைப்படி) படுதோல்வி என்றால் அந்த தயாரிப்பாளர் புஷ்பா ராஜன் மீண்டும் நடிகர்திலகத்தை வைத்து படம் எடுத்திருப்பாரா?.
கிருஷ்ணன் வந்தான் படத்துக்கு நடிகர்திலகம் பணம் வாங்கிக் கொள்ளாமல் நடித்துக்கொடுத்தார் (தேங்காய் எம்.ஜி.ஆர். ஆதரவாளர் என்று தெரிந்தும்). அப்படம் 50 நாட்களுக்கு மேல் ஓடி தேங்காய்க்கு நல்ல லாபம் கொடுத்தது என்பது தெரியுமா?. .
1974-ல் சிரித்து வாழவேண்டும் படம் வெளியான பின்புதான் எஸ்.எஸ்.பாலன் முத்துராமனை கதாநாயகனாக நடிக்க வைத்து எல்லோரும் நல்லவரே படம் தயாரித்து 1975-ல் வெளியிட்டார். அப்படியிருக்க, எல்லோரும் நல்லவரே தோல்வியடைந்தபின் எப்படி சிரித்து வாழவேண்டும் படத்தை இயக்க எம்.ஜி.ஆர் வாய்ப்பளித்தார்?. எல்லோரும் நல்லவரே படம் தயாரிக்க துவங்கும் முன்பே தோல்வி அடைந்தது எப்படி?
அனீஸ் அவர்களே, இதுபோன்ற தவறான தகவல்களை பத்திரிகைகளில் பரப்பாதீர்கள்.
உன்னை விட மாட்டேன்
https://www.youtube.com/watch?v=husjVNdKpvY
Generally, no public is responsible for the articles coming in the Newspapers. However, if they do happen to publish incorrect details they should have that much of courage to regret for whatever is incorrect [I do recall many newpapers and magazines like Ananda Vikatan's "regrets" for the incorrect details/articles.
Nevertheless, it is the responsibility of the column writer to ensure accuracy is maintained. In fact yesterday I did one "Copy and Paste http://mgrsongs.blogspot.ae/search/label/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E 0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE% B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" job in MSV Fans club. I did not bother notice that the name of the Music director is MSV instead of SMS/TIT for Nadoodi Mannan/AP and Mattukara Velan! I am happy that one individual pointed it out, there is nothing wrong in it.
Thanks.