https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...95&oe=5BCAF219
Printable View
ஆகஸ்ட் மாதம் வெளியான நடிகர் திலகத்தின் படங்கள்
1) குங்குமம் 02 1963
2) மன்னவன் வந்தானடி 02 1975
3) மர்ம வீரன் 03 1956
4) மக்கள ராஜ்ஜிய (கன்னடம்) 05 1960
5) ஸ்கூல் மாஸ்டர் ஹிந்தி 07 1959
6) நிறைகுடம் 08 1969
7) நான் வாழவைப்பேன் 10 1979
8) ஜீவன தீராலு 12 1977
9) சுமங்கலி 12 1983
10) மூன்று தெய்வங்கள் 14 1971
11) அக்னி புத்ருடு (தெலுங்கு) 14 1987
12) முதல் குரல் 14 1992
13) சாரங்கதாரா 15 1958
14) ராமன் எத்தனை ராமனடி 15 1970
15) எழுதாத சட்டங்கள் 15 1984
16) முதல் மரியாதை 15 1985
17) மகா கவி காளிதாஸ் 19 1966
18) ஒரு யாத்திரா மொழி (மலையாளம்) 19 1997
19) மரகதம் 21 1959
20) என் மகன் 21 1974
21) மாடி வீட்டு ஏழை 22 1984
22) மருதநாட்டு வீரன் 24 1961
23) சாணக்ய சந்திரகுப்தா 25, 1977
24) கூண்டுக்கிளி 26 1954
25) தூக்குத் தூக்கி 26 1954
26) மங்கையர் திலகம் 26 1955
27) தவப்புதல்வன் 26 1972
28) தாயே உனக்காக (கெளரவ தோற்றம்) 26 1966
29) ஜல்லிக்கட்டு 28 1987
30) கிருஷ்ணன் வந்தான் 28 1987
31) என் ஆசை ராசாவே 15 1998
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...e3&oe=5C120E4A
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...02&oe=5BD09FED
மூன்னூறுக்கும் மேற்பட்ட படங்கள் என்றாலும் அத்தனையிலுமே தன் முத்திரையைப் பதித்த முதல்வர் நடிகர் திலகத்தின் முத்துக்களில் ஆகஸ்ட் திங்கள் வெளியானவை பற்றிய ஓர் பார்வை
1) குங்குமம் 02 1963
2) மன்னவன் வந்தானடி 02 1975
ஆகஸ்ட் 2ம் தேதியன்று வெளியானவை 1963ம் ஆண்டு குங்குமம் மற்றும் 1975ல் மன்னவன் வந்தானடி. ஆகஸ்ட் திங்களைத் துவக்கி வைக்க இரண்டு அட்டகாசமான திரைப்படங்கள். குங்குமம் குடும்பம், அதில் ஓர் கொலை, அதைச் சுற்றிய மர்மம் இவற்றைப் பற்றிக் கூறும் கதை. தலைவரின் மற்றுமோர் உன்னதத் திரைச்சித்திரம். தலைவரின் அமெரிக்கப் பயணக் காட்சிகள் டைட்டிலை அலங்கரிக்க, அவரின் ஸ்டைலான நடை பூந்தோட்டக் காவல்காரன் பாடலை அலங்கரிக்க, ஓர் இசையாசிரியராக சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடலில் அவர் மேடையை அலங்கரிக்க, பெண் வேடத்தில் வந்து பெண்மையை அலங்கரிக்க, கண்ணாடியால் கண்களின் ஓரம் லேசாக தடவி விடும் காட்சியில் தூங்காத கண்ணின்று ஒன்று பாடலை அலங்கரிக்க, ரசிகர்களோ தங்கள் கரகோஷத்தால் திரையரங்கை அலங்கரித்த அற்புத காவியம்.
தர்மராஜா அ சந்திரமோகன் என்று 1940களில் வந்திருந்தால் இப்படத்திற்கு பெயர் இட்டிருப்பார்களோ. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடனும் அவர்களின் ஆவலைத் தீர்த்து வைக்கும் காட்சிகளுடனும் அமர்க்களமான வரவேற்பைப் பெற்ற படம் மன்னவன் வந்தானடி. ஆகஸ்ட் 2 என்றாலே மன்னவன் வந்தானடி தான் நினைவுக்கு வரும் என்கிற அளவிற்கு நம் மனதில் ஆழமாக பதிந்து விட்ட காதல் ராஜ்ஜியம், அந்த ராஜ்ஜியத்திற்குள்ளே நிலவும் பல்வேறு குழப்பங்கள் மர்மங்கள் என விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத காட்சியமைப்புடன் மாபெரும் வெற்றி நடை போட்டது மன்னவன் வந்தானடி. சென்னை சாந்தியில் தொடர்ந்து பல வாரங்கள் சனி ஞாயிறு சிறப்பு காலை காட்சிகளுடன் வசூலில் கொடி நாட்டிய படம் மன்னவன் வந்தானடி.
மீண்டும் டிஜிட்டலில் வசந்தமாளிகை.
ஒரே படம் இரண்டாவது முறையாக டிஜிட்டலில் மாற்றப்படுகிறது.இதுவும் சாதனை!
ஆனால் இந்த முறை டிஜிட்டல் மாற்றத்தில் துல்லியம் இருக்கும் என்று நம்பலாம்.
!
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...27&oe=5C022CDE
courtesy f b
nilla
நடிகர்திலகம் நடித்து ஆகஸ்ட் மாதத்தில் வெளியான திரைப்படங்களின் பட்டியலும் விளம்பரங்களும் உங்கள் பார்வைக்காக...
நடிகர்திலகம் நடித்து ஆகஸ்ட் மாதத்தில் வெளியான திரைப்படங்களின் பட்டியலும் விளம்பரங்களும் உங்கள் பார்வைக்காக...
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...43&oe=5BCD15D4
nilla
31:07:2018
திருவிளையாடல் காவியத்தின் 54 ஆம் ஆண்டு துவக்கநாள் இன்று...
ஐம்பத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன என்பது சாதாரணம்... இன்னும் ஒரு யுகம் கடந்தாலும் சைவத்தின் புகழ்ப்பரப்ப செல்லுலாய்டில் இனியொரு திரைப்படம் இதுபோல் செதுக்கப்படப் போவதுமில்லை. செதுக்கினாலும்...அது இதைப்போல இருக்கப் போவதுமில்லை.
தமிழகத்தில் நாத்திகமும், ஆங்கில,இந்திப் படங்களின் மோகமும் தலைத்தூக்கியிருந்த சமயத்தில், ஆன்மிக, புராண படங்களெல்லாம் இனி தேறாது என் ஆருடம் சொல்லிக் கொண்டிருந்த காலக்க...ட்டத்தில் வெளியாகி வரலாற்று வெற்றியைத் தந்த படம்.
1965 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் அதிக வசூல் சாதனைப் படைத்தத் திரைக்காவியம் திருவிளையாடல்..
தமிழகத்தில் 13 அரங்குககளில் நூறு நாட்களைக் கடந்த ஒரே புராணப் படம். சென்னையில் திரையிட்ட மூன்று அரங்குகளிலும் வெள்ளிவிழா ஓடிய முதலும் கடைசியுமான ஒரே புராணப் படமும் இதுவே.
' சிவலீலலு' என்னும் பெயரில் தெலுங்கிலும், 'சிவலீலவிலாசா' என்று கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
1965 முதல் 1983 வரைக்குள், இலங்கை வானொலியில், 224 முறை இப்படத்தின் கதை வசனம் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a5&oe=5BD638E8
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...d2&oe=5C031124
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e7&oe=5BCEF68A
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e7&oe=5C136BB8
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...43&oe=5C04D1EC
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...4f&oe=5BC6825E
.................................................. .................................................. ..
வசூலில் ஒரு கோடி ரூபாய்களை பெற்ற முதல் தமிழ்படம் திருவிளையாடல்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a6&oe=5BC90CA4
Sundar Rajan
30 July
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே....
பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை
மலருமாம் குறிஞ்சி மலர்...
இப்போது மதுரையிலும் பன்னிரண்டாண்டுகளுக்கு பிறகு, என்றும் வாடா குறிஞ்...சி மலராம்... நடிகர்திலகத்தின் சவாலே சமாளி திரைப்படம்
ஆகஸ்டு 17 முதல் மதுரை சென்டரல் திரையரங்கில் வெளிவருகிறது.
நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வருகிறது, சவாலே சமாளி.
ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை தீர்க்க வருகிறார் நடிகர்திலகம்.
தயாராகுங்கள். அன்பு இதயங்களே,
தொடர்ந்து சென்ட்ரல் திரையரங்கில் சாதனை படைத்து வரும் நடிகர்திலகத்தின் திரைக்காவியங்களை வெளியிட்டு வரும்
தியேட்டர் நிர்வாகத்திற்கு நமது நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
மதுரையை கலக்கப் போகும்
சவாலே சமாளியின்அட்டகாசமான போஸ்டர்
உங்கள் பார்வைக்கு....