-
Thanks
John Durai Asir Chelliah
கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான் அந்த மாணவன்.
கொஞ்சம் பெரிய படிப்புதான்.
எனவே அதற்கு பெரிய தொகை நன்கொடையாக தேவைப்பட்டது.
1000 ரூபாய் என்பது 1968 ல் பெரிய தொகைதானே !
யாரிடமும் போய் உதவி கேட்டுப் பழக்கமில்லை. என்ன செய்வது?
ஒரே ஒருவர் நினைவுதான் அவனுக்கு உடனே வந்தது.
தயக்கத்துடன் போனான். தடுமாற்றத்துடன் தன் நிலையை எடுத்துச் சொன்னான்.
அமைதியாக அமர்ந்து அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர் அடுத்த நாள் அவனை வரச் சொன்னார். பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஓரளவு அவனுக்கு வந்தது. நிம்மதியுடன் புறப்பட்டு வீடு சென்றான்.
மறு நாள்.
பணத்தை எதிர்பார்த்து சென்ற
அந்த மாணவன் கையில் ஒரு காகிதத்தை கொடுத்தார் அந்த மனிதர். புரியாமல் அந்த காகிதத்தை புரட்டிப் பார்த்தான்.
அது ஒரு ரசீது.
1000 ரூபாயை அந்த கல்லூரியில் தன் பெயரிலேயே செலுத்தி, அதற்கு ரசீது வாங்கி வைத்திருந்தார் அந்த மனிதர்.
ஆனந்தக் கண்ணீர் ஆறாக பொங்கி வழிய நன்றி சொல்ல வார்த்தை எதுவும் இன்றி தவித்தான் அந்த மாணவன்.
கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.
சரி. அந்த கட்டண ரசீது என்ன ஆனது ? புத்தகங்களுக்கு நடுவே புகுந்து கொண்டதா ?
அல்லது பூஜை அறை சாமி பக்கத்தில் சயனம் கொண்டதா ?
இல்லை. அப்படி எல்லாம் அந்த மாணவன் செய்யவில்லை. அந்த ரசீதை அழகாக லாமினேட் செய்து பத்திரமாக தன்னுடனே வைத்துக் கொண்டான் அந்த மாணவன்.
காலத்தாற் உதவி செய்த அந்த மனிதர், சில ஆண்டுகளுக்குப் பின் காலமாகி விட்டார்.
அந்த மாணவன் படித்து முடித்து, உத்தியோகத்திலும் அமர்ந்து ஓய்வும் பெற்று விட்டார்.
ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பணத்தை எடுக்க, பக்கத்திலுள்ள ATM போகிறார். அங்கே மெஷினிலுள்ள பட்டன்களை அழுத்துகிறார்.
கட கடவென்ற ஓசைக்குப் பின்...
பணத்தை கொடுப்பது எல்லோரின் கண்களுக்கும் எந்திரமாக தெரிகிறது.
சம்பந்தப்பட்ட இந்த மனிதருக்கு மட்டும் அது எம்ஜிஆராக தெரிகிறது.
ஆம். 1967-68 ல் இவர் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டபோது உடனடியாக நிதி உதவி செய்த அந்த மாமனிதர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் தன் பெயரில் பணம் செலுத்தி படிக்க வைத்த அந்த மாணவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகன் Nallathambi Nsk.
இதோ, நல்ல தம்பி சொல்லும் அந்த நன்றிக் கதை..
"1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் Engineering படிக்க சேர்ந்தபோது, மக்கள் திலகம் எனக்காக கட்டிய Capitation Fees Receipt.
அதை Laminate செய்து வைத்துள்ளேன்.
கல்லூரியில் சேரும்போது தலைவர் என்னை கூப்பிட்டு "கலைவாணர் பல கோடிகள் சம்பாதித்தார். ஆனால் அதையெல்லம் தர்மம் செய்துவிட்டு அழியாத புகழை விட்டு சென்றுள்ளார்.
எனவே செல்வம் அழிந்து போகும். ஆனால் நான் உனக்கு கொடுக்கப்போகும் கல்வி அழியாது. நன்றாக படி"என்று ஊக்கமும் கொடுத்தார் எம்ஜிஆர்.
உண்மை. படித்து வேலை செய்து ஓய்வு பெற்று விட்டேன். இன்றும் ATM சென்று ஓய்வூதியம் பெறும்போது "தலைவர் " எனக்கு கொடுப்பதாக நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்."
நன்றி நல்லதம்பி அவர்களே !
நீண்ட கால ஃபேஸ்புக் நண்பராக நீங்கள் என்னுடன் இருப்பதில், ஜான் ஆகிய நான் நிறைவான பெருமிதம் கொள்கிறேன்.
உங்கள்
நல்ல மனம் வாழ்க !
நன்றி மறவாத
அந்த தெய்வ குணம்
வாழ்க !
"நன்றி மறவாத
நல்ல மனம் போதும்
என்றும் அதுவே
என் மூலதனம் ஆகும்"
எனப் பாடிய அந்த எம்ஜிஆர் புகழ்...
அது என்றென்றும்
வாழ்க வாழ்க !
அண்ணன் நல்லதம்பி கல்லூரியில் சேர்ந்துவிட்டு, ம.கோ.ரா அவர்களை சந்தித்து செய்தி சொல்கிறார். கல்லூரியில் சேர்ந்துவிட்டாய் மாத செலவுக்கு என்ன செய்வாய் என்று கேட்கிறார். அதை எதிர்பார்த்து செல்லாத அண்ணன் நல்லதம்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ம.கோ.ரா சொன்னார் 'மாதா மாதம் செலவுக்கு இங்கு வந்து பணம் பெற்றுக் கொள்' என்கிறார்.
அடுத்த மாதம் தோட்டத்திற்கு செல்கிறார். அப்போது ம.கோ.ரா வெளியே புறப்பட்டுக் கொண்டிருகிறார். என்ன செய்வது என்று அண்ணன் எண்ண, இவரை பார்த்த ம.கோ.ரா, சானகி அம்மையாரை காணச் சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுகிறார். சானகி அம்மையாரை சந்தித்தால், அந்த மாத செலவுக்கு பணம் கொடுத்து, ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்ள சொல்கிறார். அண்ணன் நல்லதம்பி தன் கல்லூரி படிப்பு முடியும் வரை அந்த தொகையை பெற்றுக் கொண்டார்.
John Durai Asir Chelliah.......... Thanks.........
-
படங்களில் தந்த நம்பிக்கை !
மாலை போடும்போது எடுக்கும் படங்களில் பெரும்பாலும் ஒருவர் முகம் தெளிவாக தெரியும். இன்னொருவர் முகம் மாலை அல்லது கை இடையே வந்து முகம் தெரியாமல்
மறைத்துவிடும், பல பேர் எடுத்த படங்களிலும் நான் இந்த குறையைக் கண்டிருக்கிறேன். ஆனால், நான் எம்.ஜி.ஆர். யாருக்காவது மாலை அணிவித்தாலோ அல்லது எம்.ஜி.ஆருக்கு யார் மாலை அணிவித்தாலோ இருவரது முகம் மறைக்காமல் தெளிவாகத் தெரியும்படி பார்த்துக்கொள்வார்.
தனக்கு யாராவது மாலை அணிவித்தால், போட்டோ எடுக்க வசதியாக கழுத்தில் மாலை இருந்தபடியே, போட்டவரது இரு கைகளையும் லாவகமாக எம்.ஜி.ஆர். இறுக்கிப் பிடித்துக் கொள்வார். அதனால் இருவர் முகமும் நன்றாக தெரியும், அருமையான போஸ் கிடைக்கும்”. எம்.ஜி.ஆர். புகைப்பட தொழில் நுட்பம் தெரிந்தவர் என்பதற்கு இந்த வாக்குமூலம் ஒரு சான்று என்கிறார் புகைப்பட நிரூபர் எஸ்.எஸ்.ராமகிருஷ்¬ணன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு செயலிலும் கவனம் செலுத்தியவர். ஆனால், எம்.ஜி.ஆருக்கு பின் வந்த சினிமா படங்களின் பெயர்கள் மக்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல இருக்கின்றன. படப்பெயர்களில் வன்முறை, இரட்டை அர்த்தம், ஆங்கிலம் பிறமொழி கலவையில் இருக்கும். இன்னும் சில பெயர்கள் படத்துக்கும், கதைக்கும் துளியும் சம்பந்தமில்லாமல் இருக்கும்.
ஆனால், புரட்சித் தலைவர் படங்களுக்கு பெயர் வைப்பதிலும் தனிக்கவனம் செலுத்தினார். அவரது திரைப்பட பெயர்கள் எளிமையாக எல்லோரும் படிப்பறிவு குறைந்த பாமரனும் உச்சரிக்கக் கூடியதாக, பொருள் புரியும் படியாக இருக்கும், அது மட்டுமல்ல படப் பெயர்களிலும் ஒரு நல்ல செய்தியிருக்கும், ஒரு தத்துவம் பொதிந்திருக்கும்.
நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத் தட்டாதே, குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தாலி பாக்கியம், புதிய பூமி, எங்க வீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், நம் நாடு, எங்கள் தங்கம், ஒரு தாய் மக்கள், அன்னமிட்ட கை, சிரித்து வாழ வேண்டும், நீதிக்குத் தலை வணங்கு, பல்லாண்டு வாழ்க, இன்று போல என்றும் வாழ்க, நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், நான் ஏன் பிறந்தேன்?, உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன் இப்படி அவரது படங்களின் பெயர்களில் உள்ள எளிமையும், கருத்தாழமும், அழகும் படிக்காத பாமரர்களும் புரிந்து உச்சரித்து மகிழும் வகையில் இருக்கும்.
படத்திற்குப் பெயர் வைக்கும்போது அவர் எத்தனை கவனமாக இருந்தார். அதில் கருத்தாக இருந்தார் என்பதற்கு பிரபல பேச்சாளர், தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை சொன்ன ஒரு நிகழ்ச்சி.
நல்ல பெயர் சொன்னால் 500 ரூபாய் :
“பாக்கெட் மார்” என்ற இந்திப் படக்கதையை தமிழில் எடுப்பதற்கென்று நாங்கள் முடிவு செய்து… படத்திற்கு என்ன தலைப்பு வைப்பதென்று சிந்தித்த போது எம்.ஜி.ஆர். சொன்னார்.
“எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம், அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்கவேண்டும்.
அதேபோல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும், பணம் செலவு செய்து போஸ்டர் ஒட்டுகிறோம், பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம், ஏதாவது நல்ல கருத்தைச் சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கான பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரை படத்திற்கு வைக்க வேண்டும்”, என்று கூறிய எம்.ஜி.ஆர். தொடர்ந்து, “அப்படி யார் இந்த படத்திற்கு நல்ல பெயரைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு ரூபாய் 500 பரிசு அளிப்பதாகவும்” கூறினார்.
படத்திற்கு ‘திருடாதே’ என பெயர் வைக்கலாம் என்று மா.லெட்சுமணன் சொன்னதும் அது அவருக்கும் பிடித்துப் போனதும் உடனே ரூபாய் 500 கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆக படத்திற்கான பெயரும் எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்தவர் மக்கள் திலகம்.
நன்றி : திரு. விஜயபாஸ்கர் - தினமலர்......... Thanks.........
-
வாலி சினி*மா*விற்கு பாட்*டெ*ழு*தத் துவங்*கி*ய*தும், எம்.ஜி.ஆருக்*கும் அவ*ருக்*கு*மி*டையே நெருக்*கம் ஏற்*பட்*டது. எம்.ஜி.ஆர்., மக்*க*ளால் ஏற்*றுக்*கொள்*ளப்*பட்ட ஒரு பெரிய நடி*கர். மேலும், தன் படங்*க*ளின் மூல*மாக பல சமூக கருத்*துக்*களை சொல்ல ஆசைப்*பட்*ட*வர் எம்.ஜி.ஆர்.
வாலி அதற்கு துணை நின்*றார். எம். ஜி. ஆரின் சமூக கோட்*பா*டு*க*ளுக்கு திரைப்*பா*டல் மூல*மாக முத*லில் துணை நின்*ற*வர் பட்*டுக்*கோட்டை கல்*யா*ண* சுந்*த*ரம். அவர் ஆரம்ப காலங்*க*ளில் எம்.ஜி.ஆர்., படங்*க*ளில் தத்*துவ பாடல்*களை எழு*தி*னார்.
‘சின்*னப் பயலே சின்*னப் பயலே
சேதி கேளடா
நான் சொல்*லப் போகும் – வார்த்*தையை
நல்லா எண்*ணிப் பாரடா
வேப்*ப*மர உச்*சி*யில் நின்னு
பேய் ஒண்ணு ஆடு*துன்னு
விளை*யா*டப் போகும்*போது
சொல்லி வைப்*பாங்க
வேலை*யற்ற வீணர்*க*ளின்
தேவை*யற்ற வார்த்*தை*களை
வேடிக்*கை*யா*கக் கூட நீ நம்*பி*வி*டாதே’
என்ற பாட*லும்
‘தூங்*காதே தம்பி தூங்*காதே
சோம்*பேறி என்ற பெயர் வாங்*காதே.
என்ற பாடலை ‘நாடோடி மன்*னன்’ படத்*தி*லும் எழு*தி*ய*வர் பட்*டுக்*கோட்டை. அதற்*குப் பிறகு கண்*ண*தா*சன் எம்.ஜி.ஆரின் தர்ம சிந்*தனை குறித்து ‘தர்*மம் தலை*காக்*கும்’ படத்*தில்
‘தர்*மம் தலை*காக்*கும் – தக்க
சம*யத்*தில் உயிர்*காக்*கும் – கூட
இருந்தே குழி பறித்*தா*லும் – கொடுத்*தது
காத்து நிற்*கும்’
போன்ற பாடல்*களை எழு*தி*னார்.
பிறகு வாலி எம்.ஜி.ஆரோடு இணைந்*தார். அப்*போது எம்.ஜி.ஆர்., திமு*க*வில் இருந்த நேரம். கட்*சி*யும் மூன்*றெ*ழுத்து. எம்.ஜி. ஆரும் மூன்*றெ*ழுத்து. அத*னால்.
‘மூன்*றெ*ழுத்*தில் என் மூச்*சி*ருக்*கும்
அது முடிந்த பின்*னா*லும் பேச்*சி*ருக்*கும்’ என்று ‘தெய்*வத்*தாய்’ படத்*தில் ‘எழு*தி*னார் வாலி’
நான் ஆணை*யிட்*டால் அது நடந்*து*விட்*டால்
இங்கு ஏழை*கள் வேதனை பட*மாட்*டார்
உயிர் உள்*ள*வரை ஒரு துன்*ப*மில்லை
அவர் கண்*ணீர் கட*லிலே விழ*மாட்*டார்.
இந்த பாடலை ‘எங்க வீட்*டுப் பிள்ளை’ படத்*தின் வெற்*றிக்கே வழி*வ*குத்*தது. அது எம்.ஜி.ஆரை மக்*கள் மன*தில் ஆழ*மாக கொண்டு போய் உட்*கார வைத்*தது.
நல்ல நல்ல பிள்*ளை*களை நம்பி – இந்த
நாடே இருக்*குது தம்பி
சின்*னஞ்*சிறு கைகளை நம்பி – ஒரு
சரித்*தி*ரம் இருக்*குது தம்பி’
இந்த பாடலை ‘பெற்*றால் தான் பிள்*ளையா’ படத்*திற்*காக எழு*தி*னார் வாலி. இந்*தப் பாட*லின் சர*ணத்*தில்
‘அறி*வுக்கு இணங்கு வள்*ளு*வ*ரைப் போல்
அன்*புக்கு வணங்கு வள்*ள*லா*ரைப் போல்
கவி*தை*கள் வழங்கு பார*தி*யைப் போல்
மேடை*யில் முழங்கு அறி*ஞர் அண்ணா போல்
என்று எழு*தி*யி*ருந்*தார். அப்*போது காங்*கி*ரஸ் ஆட்சி. சென்*சார் அறி*ஞர் அண்ணா ‘என்*கிற வார்த்*தை’யை அனு*ம*திக்க மறுத்*து*விட்*டார்*கள். அத*னால் படத்*தில் இந்த வரி*கள், மேடை*யில் முழங்கு திரு விக போல் என்*று*தான் வரும். அதே போல் ‘அன்பே வா’ படத்*தில்
புதிய வானம், ‘புதிய பூமி
எங்*கும் பனி*மழை பொழி*கி*றது.
நான் வரு*கை*யிலே என்னை வர*வேற்க
வண்*ணப் பூ மழை பொழி*கி*றது
உத*ய*சூ*ரி*ய*னின் பார்*வை*யிலே
உல*கம் விழித்*துக் கொண்ட வேளை*யிலே
என்று எழு*தி*யி*ருந்*தார். ‘அன்பே வா’ படம் 1965ல் வெளி*யா*னது. ‘உத*ய*சூ*ரி*யன்’ என்ற வார்த்*தையை சென்*சார் அனு*ம*திக்*க*வில்லை. அத*னால் படத்*தில் இந்த வரி*கள் ‘புதி*ய*சூ*ரி*ய*னின் பார்*வை*யிலே’ என்*று*தான் வந்*தது.
அதே போல் `பட*கோட்டி’ படத்*தில் வாலி எழு*திய பாடல்*கள் எல்*லாமே எம்.ஜி.ஆரை மீனவ மக்*கள் மன*தில் கொண்டு போய் நிறுத்*தி*யது. மீன*வர்*க*ளுக்*காக இப்*ப*டி*யொரு பாடல் அமைந்*த*தில்லை என்று சொல்*கிற மாதிரி அரு*மை*யாக வாலி எழு*தி*யி*ருந்*தார்.
‘தரை*மேல் பிறக்க வைத்*தான் – எங்*களை
தண்*ணீ*ரில் பிழைக்க வைத்*தான்
கரை*மேல் இருக்க வைத்*தான் – பெண்*களை
கண்*ணீ*ரில் குளிக்க வைத்*தான்’
இந்த பாட*லில் சர*ணத்*தில்
‘ஒரு*நாள் போவார் ஒரு நாள் வரு*வார்
ஒவ்*வொரு நாளும் துய*ரம்
ஒரு சாண் வயிறை வளர்ப்*ப*வர் உயிரை
ஊரார் நினைப்*பது சுல*பம்’
இந்த வரி*க*ளெல்*லாம் ஒவ்*வொரு மீனவ குடும்*பங்*க*ளி*லும் ‘தேசிய கீதம்’ ஆனது. அவர்*க*ளுக்கு இந்*தப் பாடலை திரை*யில் பாடிய எம்.ஜி.ஆர் ஒரு ‘மீனவ மகா*னா’*கவே தெரிந்*தார். அதே போல் அதே ‘பட*கோட்டி’ படத்*தில்
‘கொடுத்*த*தெல்*லாம் கொடுத்*தான் – அவன்
யாருக்*காக கொடுத்*தான்
ஒருத்*த*ருக்கா கொடுத்*தான் – இல்லை
ஊருக்*காக கொடுத்*தான்
மண்*கு*டிசை வாச*லென்*றால்
தென்*றல் வர வெறுத்*தி*டுமா
மாலை நிலா ஏழை*யென்*றால்
வெளிச்*சம் தர மறுத்*தி*டுமா
உனக்*காக ஒன்று எனக்*காக ஒன்று
ஒரு*போ*தும் தெய்*வம் கொடுத்*த*தில்லை’
என்று எழு*திய இந்த வரி*க*ளி*னால் பல பொது*வு*டைமை சிந்*த*னை*யா*ளர்*கள் கூட எம்.ஜி.ஆரை நேசிக்*கத் தொடங்*கி*னார்*கள். வாலி, எம்.ஜி.ஆருக்*காக எழு*திய வரி*கள், எல்*லாமே ` கவி*ஞன் வாய்க்கு பொய்க்*காது’ என்*ப*தைப் போல பலித்*தது.
அவர் எழு*திய ஒரு பாடல் மட்*டும் எம்.ஜி.ஆருக்கு பலிக்*க*வில்லை.
‘பணம் படைத்*த*வன்’ படத்*தில்
‘எனக்*கொரு மகன் பிறப்*பான் – அவன்
என்*னைப் போலவே இருப்*பான்
தனக்*கொரு பாதையை வகுக்*கா*மல் என்
தலை*வன் வழி*யிலே நடப்*பான்’
என்ற இந்த வரி*கள் மட்*டும் எம்.ஜி.ஆருக்கு பலிக்*க*வில்லை.
ஒரு முறை எம்.ஜி.ஆர்., முதல்*வர் ஆன பிறகு அவ*ரு*டைய ஆற்*காடு சாலை இல்*லத்*தில் எம்.ஜி.ஆரும் – வாலி*யும் பேசிக்*கொண்*டி*ருந்* தார்*கள். அப்*போது அங்கே வந்த மதுரை முத்து வாலி*யைப் பார்த்து ` நீங்*கள் இவ*ருக்கு எழு*தின எல்*லாப் பாடல்*க*ளுமே பலித்*தது. ஆனால் ‘எனக்*கொரு மகன் பிறப்*பான்’ பாடல் மட்*டும் பலிக்*கலை’ என்*றார். எம்.ஜி.ஆர்., – வாலி இரு*வ*ருக்*குமே தர்*ம*சங்*க*ட*மா*கிப் போனது.
`அவர் சத்*து*ணவு போட*ற*த*னால, தமிழ்*நாட்டு குழந்*தை*கள் எல்*லாமே அவர் குழந்*தை*கள்* தானே’ என்று சொல்லி சமா*ளித்*தார் வாலி.
அதே போல் எம்.ஜி.ஆர்., திமு*க*வி*லி*ருந்து வெளியே வந்*தி*ருந்த நேரம். அப்*போது அவர் நடித்த ‘நேற்று இன்று நாளை’ படத்*தில் ஒரு பாட*லில் அப்*போது ஆட்*சி*யில் இருந்த திமு*கவை சாடு*கிற மாதிரி ஒரு பாடல் வேண்*டும் என்று எம்.ஜி.ஆர்., வாலியை கேட்*டுக்*கொண்*டார். அது*வ*ரை*யில் வாலி தானா*க*வே*தான் எம்.ஜி.ஆரின் இமேஜை புரிந்து கொண்டு எழு*தி*னார்.
முதல் முறை*யாக எம்.ஜி.ஆர் கேட்*டுக் கொண்*ட*தால் அந்த படத்*தில்
‘தம்பி நான் படித்*தேன்
காஞ்*சி*யிலே நேற்று – அதை
நான் உனக்கு சொல்*லட்*டுமா இன்று’ என்று எழு*தி*னார். இந்த பாட*லின் சர*ணத்*தில்-–
‘தெரு தெரு*வாய் கூட்*டு*வது
பொது*ந*லத் தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள
படம் பிடித்*தால் சுய*ந*லம் உண்டு’
என்று திமுக தலை*வர்*களை கிண்*டல் செய்து எழு*தி*னார்.......... Thanks.........
-
நான் பார்த்த MGR...
MGR அவர்கள் முதல் சட்டமன்ற தேர்தல்
சேலம் அயோத்தியாப்பட்டினம் வருகிறார்.
MGR 10-மணிக்கு வருவதாக இருந்தது. ஆனால் மிக தாமதமாக
விடியற்காலை 3.30-க்கு வந்து சேர்ந்தார்.
தங்க நிறத்தில் மிக ஜொலிப்பாக MGR
அசந்துவிட்டேன்.மறுநாள் பள்ளி சென்று நாள் முழுதும் தலைவர் புராணம்தான்.
பனமரத்துப்பட்டி தொகுதிக்கு உட்பட்டது
எங்கள் பகுதி.
என் தந்தை O.K.Ramasamy
சுப்புராயன் MLA க்கு நெருங்கிய நண்பர்.
2 வருடங்களிலேயே MLA புற்று நோயால் பாதிக்கப்பட்டார்
MGR அவர்கள் எவ்வளவோ மருத்துவ உதவி செய்தும் காப்பாற்ற இயலவில்லை.
MLA மறைந்து சில நாட்கள் கழித்து
மங்களபுரம் ( சேலம்)
MGR அவர்கள் ஆறுதல் சொல்ல வந்தார்.
MGR யை பார்க்க பயங்கர கூட்டம்.
நாங்கள் தலைவரை பார்த்துவிட்டு அவர் கார் ஏறுவதை பார்க்க முதல் மாடிக்கு சென்றோம்.
வீட்டிற்கு வெளியில் மனுக்களோடு ஏகப்பட்ட மக்கள்.
MGR வெளியே வந்தவுடன் சூழ்ந்து கொண்டனர்.
ஒரு கை ஊனமுற்றோரை கண்டுவிட்ட MGR
அவரை அருகில் வர சொன்னார்.
தலைவரிடம் மனு கொடுத்த அவர்
ஒரு கையால் தலைவர் தோள்பட்டை பிடித்து கொண்டு தன் ஊனமுற்ற பாதி கையால் MGR கழுத்தின் அருகே வைத்து
பிடித்து இரு கன்னங்களிலிலும் மாறி மாறி முத்தம் கொடுத்தார்.
இவையெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடக்க ஆரம்பித்துவிட்டது.
சுதாரித்த காவலர்கள் அவரை பிடித்து இழுக்க வந்தனர்.
MGR காவலர்களை சைகையால் தடுத்து
ஊனமுற்றோரை தட்டி கொடுத்து கவலை வேண்டாம் உதவி செய்கிறேன் என உறுதிகூறினார்.
நிச்சயமாக சொல்வேன் இதுபோல தொண்டரின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து சிறு முகசுழிப்பு இன்றி ,
கன்னத்தில் எச்சில் பட்டுவிட்டதே என கருதாமல் கர்ச்சிப் கொண்டு துடைக்ககூட இல்லை.
இப்படிப்பட்ட மக்களை நேசித்தார் நம் தலைவர்
(அன்று எனக்கு வயது 13 இன்று 52)
வாழ்க பொன்மனச் செம்மல் புகழ்!!!........... Thanks...
-
எம்.ஜி.ஆரின் விளக்கம்!
---------------------------------------
வி.பி.ராமன்!!
அந்த நாளைய பிரபல வழக்கறிஞர்!!
தம் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த எம்.ஜி.ஆருக்கே அந்த வீட்டை உடைமை ஆக்க முடிவு செய்து,,எம்.ஜி.ஆர் கொடுத்த வாடகையையே மாதா மாதம் கணக்கில் வரவு வைத்து அந்த வீட்டை அன்புடன் எம்.ஜி.ஆருக்குக் கிரயம் செய்து கொடுக்கிறார்!!
காலத்தின் கட்டாயத்தில் எம்.ஜி.ஆர் ,,ராமாவரம் தோட்டத்தை பின்னாட்களில் வாங்குகிறார்!1
அப்போதும்,,வி.பி.ராமனுடனான தொடர்பு நீடித்தது!!
தன் தோட்டத்து வீட்டின் மைய அறையின் கீழே ஒரு நிலவறையைக் கட்டி அதில் சில பொக்கிஷங்களை பதுக்கி வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்??
ஒரு முறை வி.பி.ஆர்,,எம்.ஜி.ஆரின் தோட்டத்துக்கு வந்தபோது,,அவருக்கு அந்த நிலவறையைக் காட்ட--
சுற்றிலும் அலமாரிகளில் பல நூறு அறிவு நூல்கள்!! சொத்தைப் பதுக்கியிருக்கிறார் என்ற எதிரிகளின் பற்கள் சொத்தையாகிப் போனது தான் மிச்சம்??
இவ்வளவு புத்தகங்களா?? என்று ஆச்சரியத்துடன் கேட்ட வி.பி.ஆரிடம்,,எம்.ஜி.ஆர்--
உங்களைப் பார்க்க வரும்போதெல்லாம் நீங்களும் புத்தகங்கள் மத்தியில் தானே முகம் பதித்து இருப்பீர்கள்?? ஆனால் அவை சட்ட புத்தகங்கள்!! அடியேன் சேகரித்து வைத்திருப்பது அபூர்வமான காவியம்--தத்துவம்-கவிதைகள்-சிறந்த பல அற நெறிக் கதைகள் கலந்த கதம்பம்!!!
ஒரு முறை தமிழ் அறிஞரும்,,புத்தகப் பிரியரும் ஆன ம.பொ.சி இந்த நிலவறையைப் பார்த்து பிரமித்து-எம்.ஜி.ஆரிடம் கேட்கிறார்? இவ்வளவு அருமையான நூலகத்தை கீழே ஏன் வைத்திருக்கிறீர்கள்??
அமைதியாக எம்.ஜி.ஆர் சொன்ன பதில்??
அறிவு என்பது நீர் போன்று குளுமையானது!! நீர் எப்போதும் தரையில் தான் தேங்கும்??
ஆணவம் என்பது நெருப்பு போன்றது!! அது மேலே தானே பற்றிக் கொண்டு எரியும்???
நூலகம் போல் அகம் அறிவு என்னும் அரு மனத்தால்
வானகம் போன்று விரிந்தாலே--
தான் அகம் என்னும் கர்வம் விலகாதோ???
அந்தப் பெரிய அரு நூலகம் சில வருடங்களுக்கு முன் செம்பரம் பாக்கம் ஏரி திறப்பால் சிதறுண்டு போனது மிகக் கொடுமையான விஷயம்!!
இறுதி வரை எம்.ஜி.ஆரின் அந்தரங்கத் தோழனாகக் குலவியும் நிலவியும் வந்தது அந்த நூலகம் தான்!!!!!......... Thanks...
-
அண்ணா குறிப்பிட்ட 'கவிதை'!
M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள்.
ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.
தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.
1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’
எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.
பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.
அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.
உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.
பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,
‘அறிந்ததனை அறிந்தோர்க்கு
அறிவிக்கும் போதினிலே
அறிந்ததுதான் என்றாலும்
எத்துணை அழகம்மா? என்று
அறிந்தோரையும் வியக்க வைக்கும்
அருங்கலையே கவிதையாகும்’
... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.
தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.
மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!........ Thanks...
-
1967. ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.க முதல் முதலாக புரட்சித் தலைவர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது என்பது எல்லோரும் அறிந்தது
அண்ணா ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் முதன்மையான திட்டம் சிறு சேமிப்பு திட்டம்
இத்திட்டம் கொண்டுவந்தபோது பல்வேறு தலைவர்கள் ஆதரவு தந்தனர் அண்ணாவை புகழ்ந்தனர் அவரவர் கருத்துக்கள் கூறினர்
புரட்சித்தலைவர் வெளிபுறப்படப்பிடிப்பில் இருந்ததால் அவர் கருத்தை அறிய பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்
படப்பிடிப்பு முடிந்து விமான நிலையம் வந்த புரட்சித்தலைவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக்கொண்டு சிறு சேமிப்பு திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன அதன் விளக்கம் என்ன என்று??? கேட்டனர்?
கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைப்பார்த்து புரட்சித்தலைவர் கேட்டார்
உங்களில் யாருக்காவது எதாவது தீய பழக்கம் உண்டா என்று கேட்டார்?
ஒருபத்திரிக்கையாளர் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு என்றார்
உடனே புரட்சித்தலைவர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பிர்கள் என்றார்.?
பத்திரிகையாளர் ....ஒரு பாக்கெட் அல்லது 12 சிகரெட் என்றார்
அதற்கு புரட்சித் தலைவர் கூறினார் அதிலே பாதி பாக்கெட் பயன்படுத்துங்கள்
மீதி பாதி பாக்கெட் சிகரெட் பணத்தை சிறுசேமிப்பில் சேர்த்து வையுங்கள்
இதனால் உங்களுக்கு இரண்டு வகையில் நன்மை
ஒன்று சிகரெட் பழக்கம் குறையும் சேமிப்பு சேரும்
மற்றொன்று உடல் ஆரோக்கியம் ஆகும் சேமிப்பு பணம் பிறர்க்கு தருமம் செய்யலாம் நீங்கள் இதைசெய்தால் உங்களை.பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள் என்று கேள்வி கேட்ட பத்திரிக்கையார் மூலம் பதிலளித்தார்.
இதை கேட்டவுடன் சுற்றியிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் கைத்தட்டினர் இதைவிட சிறுசேமிப்புக்கு தெளிவாக விளக்கம் சொல்லமுடியாது என்று கூறி பாரட்டினர்
இதுவே மறுநாள் பல பத்திரிகையில் சிறுசேமிப்புக்கு எம். ஜி. ஆர் தந்த.விளக்கம்
என்று தலைப்பு செய்தியாக வந்தது
சட்டசபையில் இதே விளக்கத்தை அண்ணா கூறி புரட்சித்தலைவரைப்பாரட்டினார்
எல்லோரும் என்னை புகழ்ந்தார்கள் சிறுசேமிப்பு திட்டத்தை வரவேற்றார்கள் தவிர
யாரும் அதற்கு தெளிவாக விளக்கம் கூறவில்லை ஆனால் நேற்று எம். ஜி. ஆர் அவர்கள் தந்த விளக்கம் பத்திரிகையாளர்களையே மெய் சிலிக்க. வைத்தது இதை விட தெளிவான விளக்கம் தேவையில்லை என்று கூறி பாரட்டினார்.......... Thanks........
..
-
நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.
நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.
எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.
அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.
அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.
அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.
தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.
தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தார் . பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார்.
அண்ணா அவர்கள் லட்சோப லட்சம் தி.மு.க தொண்டர்களை, தோழர்களை தன் தம்பிமார்களாக ஏற்றுக்கொண்டார். 1967-ல் விருகம்பாக்கம் மாநாட்டில், "அன்புத் தம்பிமார்களே நாம் அத்தனை பேரும் ஒரே வயிற்றில் பிறப்பது சாத்தியம் இல்லை என்பதால் வெவ்வேறு தாய்மார்கள் வயிற்றில் பிறந்தாலும் நாம் அத்தனைபேரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்பதை மறக்கக்கூடாது' என்றார். தி.மு.கழக தோழர்கள் ஒரு குடும்பம் என்றார். அதனால் அண்ணாவின் புகழ் வளர்ந்தது.
தன்னலம் சார்ந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். பொதுநலம் பேணுகிற மனிதர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் வாழவைத்து, தாங்கள் மறைந்த பின்னாலும் மறையாமல் வாழ்கிறார்கள்.''
- புலவர் புலமைப்பித்தன்........... Thanks.........
-
எம்ஜிஆரின் அரசியல் வரலாறு..
.அமரர் எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.
ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.
1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (M.L..C.) ஆனார்.
1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.
எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -54106. காங்கிரஸ் -26,432
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -65405 காங்கிரஸ் -40777
எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை -43065 தி.மு.க. -5415
எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு -57019 தி.மு.க. -35959
எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி -60510 தி.மு.க. -28016
24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்.
(இந்த பதிவில் ஏதாவது தவறு இருப்பின் கமெண்ட் பண்ணினால் சரி செய்யப்படும்)....... Thanks Bai...
-
இதில் விடுபட்டது ...
1950 வரை காந்தியக் கொள்கைகள்
காரைக்குடி பொதுக்கூட்டத்தில் காந்திஜியை சந்தித்து குவெட்டா பூகம்ப நிதி வழங்கினார்.
1953 பிப்ரவரியில் சென்னை நகர் தமிழருக்கே சொந்தம் என்ற பெரியாரின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்
1953ஏப்ரலில் லால்குடியில் நடந்த
தி மு க மாநாட்டில் கலந்து கொண்டார்
, சட்ட மேலவை உறுப்பினர் 1963 என்று நினைக்கிறேன்
1967 ஜூலையில் தி மு க பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....... Thanks...
-
1973-To-1974,ல் திண்டுக்கல்
நாடாளுமன்ற தேர்தலில்
மாயத்தேவர் வெற்றிப்
பெற்றப்பின்னால்தான்...
மத்திய,மாநில,அரசு மற்றும்
தொண்டர்கள் மத்தியில்
கவனயீர்ப்பு ஏற்ப்பட்டதை
குறிப்பிட்டிருக்கலாமேத்
தலைவா.?........ Thanks...
-
#நாடோடிமன்னன் #வந்தபோது
(07-09-1958) #விகடனில் #வந்த
#விமர்சனம்.
நன்றி, விகடன்!
முனுசாமி : மாணிக்கம்
மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!
முனு: எதுக்கடா?
மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.
முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?
மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!
முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?
மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.
முனு: ரொம்பப் பெரிய படமாமே?
மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!
முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?
மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!
முனு : வில்லன் யாரு ?
மாணி : ராஜகுருவாக வரும் வீரப்பா...
நல்லவன் போல நடிக்கும் வில்லன்... தனக்கென்று சிலரை வைத்துக்கொண்டு அட்டூழியம் புரிவார்! கன்னித்தீவுல தன் வளர்ப்புமகளை சிறைப்பூட்டி அந்த மகளையே தாரமாக்கிக் கொள்ள நினைக்கும் கொடூரவில்லனாக நடிச்சிருப்பாரு..
... அப்புறம் தளபதியாக நம்பியார்...தன்னோட வேலையை சிறப்பா செஞ்சிருப்பாரு..
முனு: கத்திச் சண்டை உண்டா?
மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!
முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?
மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.
முனு: காமிக் இருக்குதா?
மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!
முனு: என்ன தம்பி சொல்றே?
மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!
மார்க் : 7.5 / 10 - A Grade
நன்றி! விகடன்......... Thanks...
-
தலைவருடன் ஏற்பட்ட நடிகர் சிவகுமாரின் அனுபவம் !
1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் தலைவரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, தலைவர் தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
சிவகுமாரும் தன் தாயார் பற்றி தலைவரிடம் கூறினார்.
இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-
"என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.
ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.
இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.
எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.
எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார்.
குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.
அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.
எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.
எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.
7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.
நன்றி : மாலை மலர்........ Thanks...
-
1973-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோவியத் யூனியனுக்குப் போய்விட்டுத் திரும்பிய புரட்சித்தலைவர்,
ரஷ்யாப் புரட்சிக்கு வித்திட்ட கம்யூனிசக் கொள்கையைப் பற்றி மிகவும் தீவிரமாய்ச் சிந்தித்தார்.
'அண்ணாவின் பெயரால் தாம் இயக்கம் தொடங்கியிருப்பது போல கட்சியின் கொள்கைக்கும் ஒரு பெயர் சூட்டவேண்டும்; அதிலும் அண்ணாவின் நாமம் பொதிந்திருக்கவேண்டும்'
-என்று புரட்சித் தலைவர் எண்ணினார். இரவும் பகலும் அதைப்பற்றிச் சிந்தித்து ஒரு பெயரை உருவாக்கினார்.
அதுதான் ‘அண்ணாயிஸம்’!
தம் கட்சிக் கொள்கைக்கு இரத்தின சுருக்கமான #அண்ணாயிஸம் என்னும் பெயரைச் சூட்டிய புரட்சித்தலைவர், அதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க விரும்பினார்.
1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று, இரவு, எம்.ஜி.ஆர், யு.என்.ஐ மற்றும் பி.டி.ஐ. என்னும் இரண்டு செய்தி நிறுவனங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு..ஶ்ரீ
”ஒரு நிருபரை அனுப்பிவையுங்கள்” என்று கூறினார்.
அப்பொழுது இரவு 8 மணிக்கு மேல் இருக்கும். என்றாலும் புரட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று செய்தி நிறுவனங்களும் த்ததமது நிருபர்களை அனுப்பிவைத்தன.
நிருபர்கள் வந்ததும் புரட்சித் தலைவர், "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை ‘அண்ணாயிஸம்’ ஆகும். இதை நாட்டு மக்களுக்குத் தெரிவியுங்கள்" என்றார்.
'திடீரென்று அழைத்து, ஒரு வரியில் செய்தி சொல்கிறாரே' என்று, அந்த நிருபர்கள் இருவரும் திகைத்தார்கள்.
அவர்கள் திகைப்பைக் கண்ட புரட்சித் தலைவர்,
”ஏன் திகைக்கிறீர்கள்? காந்தியிசம், கம்யூனிசம், மாவோயிசம், மார்க்ஸிசம் என்றெல்லாம் கொள்கைகள் இல்லையா? அவற்றைப் போன்றதுதான் அண்ணாயிஸமும்!” என்றார். .
மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் அந்தச் செய்தி இடம் பெற்றது.
உடனே பத்திரிகையாளர்கள் பலர் புரட்சித் தலைவரின் தியாகராயநகர் அலுவலகத்துக்குப் படையெடுத்துச் சென்றனர்.
”அண்ணா தி.மு.க-வின் கொள்கை அண்ணாயிஸம் என்று கூறியிருக்கிறீர்களே, அண்ணாயிஸம் என்றால் என்ன?" என்று கேட்டனர்.
அதற்கு புரட்சித் தலைவர் அளித்த பதிலும் சுருக்கமானதுதான்.
”காந்தியிஸம், கம்யூனிஸம், கேப்பிட்டலிஸம் எனப்படும் முதாலாளித்துவம் ஆகிய மூன்று கொள்கைத் த்த்துவங்களிலும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் திரட்டினால் என்ன கிட்டுமோ அதுதான் அண்ணாயிஸம்!” என்றார் புரட்சித் தலைவர்.......... Thanks.........
-
எம்.ஜி.ஆர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.
ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட் கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோ வில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.
சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக்காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!
ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத்தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப்புடன் கண்கலங்கியபடியே கும்பிட்ட வாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.
‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றினார் எம்.ஜி.ஆர்.!......... Thanks.........
-
எம்.ஜி.ஆரால் மழையா??
--------------------------------------------
மேற்கண்ட கேள்விக்கு--
ஆம்! என்று பதில் சொல்வது அடியேனில்லை! திருவள்ளுவன்??
நல்லார் ஒருவர் உளரேல்-அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!!!
ஆம்!! அது 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரம்!
லஞ்சம் லாவண்யம் அதிகார துஷ்பிரயோகத்தால்
இயற்கை--
வஞ்சம் கொண்டு தன் சினத்தைக் காட்டிய வேளை--
மக்கள்---
தஞ்சம் என எம்.ஜி.ஆரைத் தலைவனாக ஏற்ற்தால்
பஞ்சம் இன்றிக் கொட்டித் தீர்த்த மழையின் மகிழ்வு??
நீர் நிலைகள் எல்லாக் குளங்களிலும் ஏரிகளிலும் நிரம்பி வழிந்த நிலையில் புழல் ஏரி உடையக் கூடிய அபாயத்தில் நீரை உள் வாங்கியிருக்கிறது??
அமைச்சர்,,காளிமுத்து,,முதல்வர் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்டு,,நிலைமையை விளக்க--
அந்த இரவில் சில அதிகாரிகளுடன் புழல் அணைக்கு விரையுமாறு காளிமுத்துவைப் பணிக்கிறார் எம்.ஜி.ஆர்!!
நள்ளிரவில்,,கொட்டும் மழையில்,,சில அதிகாரிகளுடன் காளிமுத்து அங்கே விரைகிறார்??
மழையின் தீவிரத்தால்,,தன் செயல்பட்டை நிறுத்திக் கொள்கிறது மின்சாரம்??
சுற்றிலும் சூழ்ந்து கொண்ட இருளில்--அதிகாரிகளுடன் டார்ச் லைட் சகிதம்,,,அமைச்சர் காளிமுத்து,,நிலைமையை ஆராய்ந்து கொண்டிருக்க--சக்தி வாய்ந்த டார்ச் லைட் சகிதம்,,ஒரு கும்பல் எதிர் திசையிலிருந்து அந்த இடத்துக்கு வருகிறது??
பொது மக்கள்,,,தங்கள் பணிக்கு இடையூறாக அங்கே கும்பல் சேருகிறார்களே என்ற எரிச்சலில் காளிமுத்து ஏறிட்டு நோக்க--
அந்த கும்பலின் தலைவனாக முதல்வர் எம்.ஜி.ஆர்???
உங்களைப் போகச் சொல்லிட்டேனே தவிர,,பிறகு தான் சிந்தித்துப் பார்த்தேன்! உங்கள் குழுவுக்கு,,வெள்ள அபாயத்தால் ஏதேனும் துன்பம் நேரிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் நான் சில அதிகாரிகளுடன் வந்தேன்???
முதல்வரே இந்த இருட்டில் இப்படி வருகை புரிந்ததும்,,அதற்கு அவர் சொன்ன விளக்கமும்,,அங்கே இருந்த அதிகாரிகளை நெகிழ்ச்சியுடன் கூடிய இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது!!
அங்கே நடைபெற வேண்டிய வேலைகளும் தடை இன்றியும் துரிதமாகவும் நடந்தேறுகிறது!!!
இருள் சூழ்ந்த அந்த இக்கட்டான சூழலில்
அருள் சூழ்ந்த இந்த முதவனின் செயலைப் போல் வேறு எங்கேனும் நாம் கண்டதுண்டா????... Thanks...
-
"அன்னமிட்டக்கை", படத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்களுடன் பதிவை தொடர்கிறேன் ...
1.வெள்ளத்துக்கு அணை போடலாம் ஆனால் உள்ளத்தோடு பாசத்துக்கு அணை போட முடியாது ...
2 .ஊதுபத்திக்குப் பக்கத்தில் சிகரெட் இருக்க கூடாது. பாத்ரூம் பக்கத்தில் பூஜை அறை இருக்க கூடாது.
3. நல்லதைச் சொல்றவன்தான் நண்பனாக இருக்க முடியும்.
4. வீட்டுப் பாதுகாப்புக்கு பூட்டு போடற மாதிரி ஒமுக்கத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கனும்.
5. அவமானம் படுத்துவது வேறு அறிவுரை கூறுவது வேறு. இரண்டையும் ஒன்றாக நினைக்க கூடாது.
6. உடையை மட்டும் மாற்றினால் போதாது. உள்ளத்தையும் மாற்றியாகனும். அதற்கு அன்பு காட்டனும் அடுத்தங்களை மதிக்கனும்.
7..ஆடம்பரமாக அவியலும் பொறியலும் போட வேண்டாம். பாசத்தோடு பழைய சோறு போட்டா போதும் ..
8. .ஏமாற்ற நினைக்கறவங்கத்தான் அடிக்கடி இடத்தை மாற்றுவாங்க.
9. மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்றால் அன்பு காட்டனும் அதிகாரம் காட்டக் கூடாது.
10. வீட்டைக் பாதுக்காத்தான் நாயை வளர்க்கறாங்க அது வெறி பிடித்து அலைந்தா நாயை குறை கூற மாட்டாங்க வளர்த்தவங்கத்தான் குறை சொல்வாங்க.
11. சமுதாயத்தில் ஜாதி மதம் பார்க்காமல் எல்லோருடையை கையே தொட்டுப் பார்த்து நோயை தீர்ப்பவங்க டாக்டர்தான் ..
12 இதயத்தை சத்திரமாக வைத்தால் எல்லோரும் தங்குவாங்க அதே நேரத்தில் பத்திரமாகவும் இருக்கனும்.
13. ரத்த வெறிக்கொண்ட புலிக்கிட்ட தற்புகழ்ச்சி பற்றி பேசினால் அது கேட்காது. அழிவில்தான் நியாயம் என்று பேசினவங்க கிட்ட அன்பைப் பற்றி பேசினால் கேட்க மாட்டாங்க.
14 ஒரு முறை கேட்டு நியாயம் கிடைக்கலைன்னா மறு முறை வேறு வழியில் முயற்சி பண்ணனும்.
15 மரத்திலே ஏறி தவறி விழுந்துட்டாங்கன்னா அதற்காக மரத்தை வெட்ட மாட்டாங்க ஏறின விதம் தவறு என்றுத்தான் நினைப்பாங்க.
16. இன்னார்கிட்ட இன்னார் பற்றித்தான் பேசனும் என்கிற விதிமுறை இருக்கிறது.
17. டாக்டர் எக்ஸ்ரே எடுத்தா இதயத்தைத்தான் பார்ப்பாங்க அதில் உள்ள எண்ணங்களை பார்க்க முடியாது.
18. செடிக்கிட்ட மலர் கைமாறு எதிர்ப்பார்க்காது பிள்ளைக்கிட்ட தந்தை கைமாறு எதிர்ப்பார்க்கக்கூடாது.
19. எதிரியை யாராலும் கண்டுபிடிக்கப் முடியாது. உண்மையே யாராலும் அழிக்கவும் முடியாது.
20 அனாதைகள் மேல் யாராவது அக்கறைப்பட்டுத்தான் ஆகனும். உண்மையே பலமாக பேசும் போது மிரட்டுகிற மாதிரித்தான் இருக்கும்.
21.எந்த தாய்மீதும் யாரும் பாசம் காட்டலாம் தவறைக் மன்னிக்கிற ஒரே தெய்வம் பெற்றத்தாய்தான்
பின்குறிப்பு ..15-09-1972 ஆண்டு அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு வெளியிட.பட்டது. படத்திற்கு வசனம் எழுதியவர் .A .L. நாரயணன்
அடுத்த பதிவு வள்ளல் புகழ் தொடரும் ......... Thanks.............
-
1987 டிசம்பர் மாதம் தன் மகள் திருமண உதவி கேட்டு கழக தொண்டர் கணபதி என்பவர் தன் மகள் திருமண உதவி கேட்டு தலைவரிடம் அவர் இல்லத்தில் மனு ஒன்றை கொடுக்க.
தலைவர் அதை படித்து பரிசீலித்து அவரை மீண்டும் அழைத்து உன் மகள் திருமணத்தை 1988 ஜனவரி மாதம் பொங்கல் முடிந்து 18 ஆம் தேதி வைத்துக்கொள்...நானே வந்து நடத்தி வைக்கிறேன் என்று சொல்ல...
கணபதியின் கெட்ட நேரம் தலைவர் அந்த மாத இறுதியில் நம்மை விட்டு மறைய கணபதி நொறுங்கி போகிறார் மனதளவில். தலைவர் மறைவு ஒரு புறம் தன் மகள் நிலை குறித்து மறுபுறம்.
அடுத்த சிலநாட்கள் செல்ல முதல்வர் அன்னை ஜானகி எம்ஜியார் அவர்களிடம் இருந்து தொண்டன் கணபதிக்கு அழைப்பு வர.
அங்கே வீட்டுக்கு போன கணபதிக்கு.....நீங்கள் குறித்த படி உங்கள் மகள் திருமணம் ஜனவரி 18 இல் நடக்கட்டும் நான் அல்லது நம் குடும்பத்தில் ஒருவர் வந்து நடத்தி வைக்கிறோம் என்று சொல்ல.
தன் மகன் ராஜ ராஜன் உடன் தோட்டத்துக்கு வந்த கணபதிக்கு நடப்பது கனவா அல்லது நிஜமா என்று புரியாமல் அம்மா நீங்கள் எப்படி வர முடியும் தலைவர் இறந்து நாட்கள் ஆக வில்லையே என்று கேட்க...
அதை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் உங்கள் ஏற்பாடுகள் நடக்கட்டும்.....அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அவர் தன் கைப்பட எழுதிய ப்ரோக்ராம் டைரியில் .
ஜனவரி 1988....18 அன்று கணபதி வீட்டு திருமணம்....அவருக்கு செய்யவேண்டிய உதவிகள் பணம்..பட்டு புடவை..நகைகள் எல்லாம் பற்றியும் எழுதி வைத்து இருக்கிறார்...அதன் படி உங்கள் மகள் திருமணம் நடக்கும் என்று சொல்ல.
அதன் படி அவர் மகள் திருமணம் அருமையாக தலைவர் கொடுத்த சீதனங்கள் உடன் நடந்து முடிந்தது.
அன்னை ஜானகி அம்மா அவர்கள் கலந்து கொள்ள இயலாமல் தலைவர் குடும்பத்தில் ஒருவர் முன் நின்று அந்த திருமணம் நடந்து முடிந்தது.
இருக்கும் போது தொண்டனுக்கு உதவாத அரசியல்வாதிகள் கொட்டி கிடக்கும் இந்த நாட்டில் இறந்தும் அவருக்கு உதவ உயில் போல எழுதி வைத்து விட்டு சென்ற தலைவரை நினைத்து மகிழ்வதா....அதை மறைக்காமல் மறுக்காமல் அந்த சோக சூழலில் கூட அந்த தொண்டனுக்கு உதவிய அன்னை ஜானகி அவர்களை நினைத்து மகிழ்வதா. முடிவை உங்கள் வசமே விட்டு விடும்....
வாழ்க எம்ஜியார் புகழ்
நன்றி...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி......... Thanks.........
-
'அண்ணா ஒரு தேசியவாதி' - #புரட்சித்தலைவர் பார்வையில் அண்ணா
"என்னைப் பொறுத்தவரை பேரறிஞர் அமரர் அண்ணா அவர்களை முதன் முதலில் சந்தித்துத் தொடர்பு கொள்ளத் தொடங்கியது..
நாட்டின் தலை சிறந்த அந்தத் தலைமகனோடு உறவு அரும்பியது..
என்னுடைய வாழ்க்கைப் பாதையில் தன்னுடைய தீர்க்கமான பிடிப்பை, முத்திரையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பித்தது...
இவையெல்லாம் 1944-ம் ஆண்டு நடைபெற்றவை.
அந்த ஆண்டில்தான் நடிகமணி டி.வி.என். அவர்கள் என்னை அழைத்துச் சென்று, பேரறிஞர் அண்ணா அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
அந்த வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் வயது இன்று 75 என்றால், அவருடைய வாழ்வின் சரிபாதி பகுதிக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நான் அண்ணா அவர்களுடன் தொடர்பு கொண்டவன்.
அதாவது அண்ணா அவர்களோடு பழகியவன், அன்பு செலுத்தியவன், கவரப்பட்டவன், பின்பற்றியவன், அவருடைய இலட்சியப் பாதையில் பயணம் செய்து வருபவன் என்ற வகையில் எனக்கு அண்ணா எனும் நிறுவனத்தோடு 40 ஆண்டு தொடர்பு உண்டு.
அவரே பலமுறை கூறியதுபோல அண்ணா அவர்களுடைய இதயத்தில் தனியானதோர் இடம் பெறுகிற அளவு நாளுக்கு நாள் தகுதிகளைப் பெற்றிடுவதே வாழ்வின் குறிக்கோள் என்று கருதியவன் என்பதை இந்நேரத்தில் நினைவுகூருவது பெருமிதத்தையும், ஓரளவு கர்வத்தையும் என்னிடம் ஏற்படுத்துகின்றன.
அண்ணா அமைத்த கழகத்திலிருந்து நான் 1972 அக்டோபரில் தூக்கி எறியப்பட்ட பிறகு, நமது அமைப்பின் பெயரிலும், கொடியிலும், கொள்கையிலும், செயல் திட்டங்களிலும் அண்ணா அவர்களே எங்கும் நீக்கமற நிறைந்திருப்பார் என்பதனை அண்ணாவின் பகைவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அதன் காரணமாக நான் மிகக்
கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டேன். ஆனால் பிற்கால வரலாறு என்னை விமர்சித்தவர்களை எங்கே வைத்தது, என்னை எங்கே அமர்த்தியிருக்கிறது என்பதை இன்று கண்கூடாகக் காணலாம்.
இந்த அற்புதமான மாற்றத்திற்கு என்ன காரணம்?
தனிப்பட்ட என் பலம், சாமர்த்தியம், அரசியல் என்று என்பால் அன்பு கொண்டோர் கூறினாலும், நான் அவர்கள் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்வது
''என்னை வழிநடத்தும் தெய்வமான அமரர் பேரறிஞர் அண்ணா எனும் சக்தியின் வெற்றியே இந்த மாற்றத்திற்குக் காரணம்" என்பதைத்தான்."........... Thanks.........
-
பொன் மனம் அது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கே உரியதாகும்
வள்ளல் குணம் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களிடம் மட்டுமே தான் உண்டு
கருணை உள்ளம் அது பொன் மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களிடம் மட்டுமே தான் உண்டு
புரட்சித் தலைவா
வெற்றி தேவதை
வீர தேவதை
கருணை தேவதை
தர்ம தேவதை
மொத்தத்தில் அனைத்து தேவதைகளும்
தங்களின் பக்கம் தான்
எங்களின் அன்புக்குரிய ஒரேத் தலைவரான நீங்கள் என்றுமே எங்கள் பக்கம் தான்
உங்களின் அன்புக்குரிய ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளான நாங்கள் அனைவரும் என்றென்றும் உங்கள் பக்கம் தான்
அன்பு பண்பு பாசம் நேசம் கருணை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவைகள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற என் உயிர் மூச்சான புரட்சித் தலைவா தங்களை நான் வணங்குகிறேன் இறைவா
என்றும் என்றென்றும்
பொன் மனம் கொண்ட வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசி களுடன்
அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்துடன்
இனிதான நல் அழகிய இளம் காலை பொழுது வணக்கம் அன்பர்களே
✌️ நன்றியுடன் ............ Thanks.........
-
871-R-54
மனித மன வள மேம்பாடு
நம்பிக்கை
Never give up HOPE
இதற்கு
திருவாளர்
எம்ஜிஆர் ஒரு சிறந்த உதாரணம்
1967ல்
குண்டடிபட்டு
ஆஸ்பத்திரியில் இருந்தபடி
தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தார்
மக்களின் அபரிமிதமான அன்பால்
தேர்தலில் வென்றார்
கட்டுமரத்தின் பேயாட்டத்தை
தட்டிக்கேட்கிறார்
தனிக்கட்சி துவங்குகிறார்
பின்
மூன்று முறை
முதல்வர் ஆகிறார்
இருபது ஆண்டுகள்
அரசனாக ஆண்டார்
இறந்தபின்பும்
இறவாப்புகழ் பெற்றார்
இன்றும்
தேர்தலில் வெற்றி பெற
இவரது
பாட்டு
கட்டவுட் போதும்
உலகில்
சத்தியா பெற்ற
பிள்ளையைப் போல்
ஓர் சத்திய பிள்ளையை கண்டதுண்டோ
வெற்றியின் சொந்தக்காரன்
ஏழைகளின் உறவுக்காரன்
நமது வாத்தியார்......... Thanks.........
-
ராமாவரம் வீட்டில் வெகு இயல்பாக எம்.ஜி.ஆர்!
https://www.thaaii.com/?p=35053
‘நாடோடி மன்னன்’ பட வெற்றிக்குப் பிறகு போரூர் சாலையோரத்தில் வாங்கப்பட்டது ராமாவரம் தோட்டம்.
தமிழக முதல்வரான பிறகும் இந்த வீட்டிற்கு மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாமல் கிணற்று நீர், சமையலுக்குச் சாண எரிவாயு என்று எளிமையான வாழ்க்கை.
வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், பனியன், லுங்கிக்கு மாறுகிற எம்.ஜி.ஆருக்குத் தரையில் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிடுவது தான் பிடித்தமானது.
ராமாவரம் தோட்டத்தில் தான் வளர்த்த நாயுடன் கேஷூவலான உடையில் எம்.ஜி.ஆர்.
#ராமாவரம்_தோட்டம் #எம்ஜிஆர் #நாடோடி_மன்னன் #Nadodi_Mannan #MGR #Ramapuram_Garden #TamilNadu #Chief_Minister #Makkal_Thilagam #PonmanaChemmal... Thanks...
-
நீ வருவாய் என---
------------------------------------
அ.தி.மு.க கட்சி நலனுக்கான பதிவு இது!!
காலங்களாலே காரியம் நடக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்!!
உலகின் எந்தவொரு மூலையில் எது நடந்தாலும்,,அதற்கான காரணம் முன்னோ பின்னோ முழங்கியே தீரும் என்ற கண்ணதாசனின் வார்த்தைகள் நம்மைப் பொறுத்தவரை சத்தியம் கலந்த ஒன்றே!!
கேட்ட கணக்கைக் கொடுத்திருந்தால் கலைஞரின்
கெட்ட கணக்கு வெளி வந்திருக்குமா?
கொரானா விஷயம் கூட--
ஆட்சியாளர்களின் நிர்வாகத்தைப் பரீட்சை செய்யவும்-
மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு இன்னமும் வளரவும் காலம் தந்த வினாப் பேப்பர் தானே?
அடுத்த வருடம் அக்னி நட்சத்திரத்தோடு தேர்தல் அக்னியும் சேர்ந்தே நாட்டை தகிக்கும்!!
எம்.ஜி.ஆர் பேனர்கள் கரிசனத்தோடு தூசி தட்டப்படும்?
இவ்வளவு இடங்கள் வாங்கி தி.மு.க ஜெயிக்கும் என்ற வழக்கமான நக்கீரப் புளுகலை ஊடகங்கள் ஆதரிக்கும்?
பூங்குன்றன் சங்கரலிங்கம்!!
புலவர் சங்கரலிங்கம் பற்றியும்,,அவரது எம்.ஜி.ஆர் பக்தி பற்றியும் நாம் தனியாகவே பதிவிட இருப்பதால்-
பூங்குன்றன் மட்டுமே இன்றையப் பதிவில்!
ஜெ வால் மிகப் பாசத்தோடு பேணப்பட்டவர்!
இளைய தலைமுறையின் இனிய வாரிசாம் இவரது எளிமையைப் பார்த்து நாம் வியந்திருக்கிறோம்!
ஒரு சமயம் இவர் போயஸ் தோட்டத்தில் அலுவலில் இருந்த போது--
சிவகாசியைச் சேர்ந்த சில எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தோட்டத்துக்கு வருகை தர--
அவர்களிடமிருந்து ,, எம்.ஜி.ஆர் பற்றிய விபரங்களை தம்மை மறந்து பூங்குன்றன் கேட்டுக் கொண்டே இருந்தவர் பலமாக அதிர்ந்திருக்கிறார்?
இவரைத் தொந்தரவு செய்யாமல்,,அதே சமயம் இவரிடம் ஒரு முக்கிய அலுவலுக்காக ஓ.பி.எஸ் காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்??
மனிதரை விட்டால் ஒரு கௌபீணத்தோடு இமயமலைப் போய் விடுவார் போல?
அவ்வளவு ஆன்மிகப் பற்று!!
இளைஞரான இவர்,,தம்மிலும் மூத்தவர்களைக் கண்டால் உரிய மரியாதை அளித்தல்--
சராசரி மனிதனாகவே மற்றவர்களுடன் பழகுதல்-
எம்.ஜி.ஆர் பற்றி இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள விழைதல்--
எதையுமேக் கூர்மையாக கவனித்தல்--
கவனித்தவற்றை ஆழமாக மனதில் பதித்துக் கொள்ளுதல்--
இப்படிப் பல குணாதிசயங்களை இவரிடம் கண்டிருப்பதால்--
இளைய சமுதாயத்திலிருந்து இவரைப் போன்றவர்கள் கட்சியில் இணைந்து,,கட்சியையும்,,கட்சி மூலம் ஆட்சியையும் சிறப்பாக்க தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பது நமது அவா!
ஒன்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாயிருக்கும்?
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் முக நூலில் அலசிய ஒரு விஷயம் இன்னமும் பூங்குன்றன் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது?
எம்.ஜி.ஆர் டி.வி!
நம்மைப் பார்க்கும்போதெல்லாம் எந்த விஷயங்களை நாங்கள் பேசினாலும்,,கடைசியில் எம்.ஜி.ஆர் டி.வி விஷயத்தைப் பூங்குன்றன் தொடாமலேயே இருக்க மாட்டார்?
போயஸ் தோட்டப் பூங்குன்றனை அடியேன் அறிந்ததில்லை?
தமிழ்ப் புலவர்,,எம்.ஜி.ஆர் விசுவாசி திரு சங்கரலிங்கம் சந்ததியாகவே இவரைத் தெரியும்.
போயஸ் தோட்டத்தில் இவர் கற்றுக் கொண்ட பாடங்களில்?? இருந்து இவர் இன்றைய தேதியில் பல படிப்பினைகளைக் கொண்டிருப்பார்!!
முக நூலிலும்--
சுஜீத்,,ரமேஷ்கோபால்,,சக்தி rdb,,ஸ்ரீ நாத்,,சுபாஷ்--இப்படிப் பல இளைஞர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றி கலக்கி வருகிறார்கள்!1
அவர்கள் வழியில் பூங்குன்றன் போன்றவர்கள் சிந்தித்தால் நல்லது!1
வழக்கம் போல் நல்ல விஷயங்களில் மௌனம் காக்கும் அந்தக் கட்சியின் தலைமை இதிலாவது வேகம் காட்டும் என்றே நம்புகிறோம்!!
ஊதுவது நம் கடமை!
விழித்தெழுவது அவர்கள் உரிமை???....... Thanks...
-
#மக்கள்_திலகம்_எம்ஜிஆர்_அவர்கள் #பெற்ற_பட்டங்கள்.
சாதாரண நடிகராக இருந்த எம்ஜிஆரை புரட்சி நடிகர் என்று முதன் முதலில் அழைத்தவர் முன்னாள் முதல்வரும் எம்ஜிஆர் அவர்களின் உற்ற நண்பருமான கலைஞர் மு கருணாநிதி அவர்கள் தான்.
அன்று முதல் அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் எம்ஜிஆரை புரட்சி நடிகர் என்றே அழைத்து வந்தனர் .
புரட்சி நடிகர் எம் ஜி ஆருக்கு இலங்கை ரசிகர்கள் நிருத்திய சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் ,
சிங்கப்பூர் ரசிகர்கள் கலைவேந்தன் என்ற பட்டத்தையும் வழங்கினார்கள்.
மக்கள் நடிகர் என்ற பட்டத்தை நாகர்கோவில் ரசிகர்களும் ,
மக்கள் கலைஞன் என்ற பட்டத்தை காரைக்குடி ரசிகர்களும் வழங்கினார்கள்.
மறைந்த தமிழ் எழுத்தாளர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் அவர்கள் எம்ஜிஆரை மக்கள் திலகம் என்று குறிப்பிட்டும் எழுதியும் வந்தார்.
திருமுருக கிருபானந்த வாரியார் கரூரில் எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கி வாழ்த்தினார்.
1983 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் எம்ஜிஆருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
இந்தப் பட்டங்கள் எல்லாவற்றை காட்டிலும் தமிழ்நாட்டு தாய்குலமும் அவரது ரசிகர்களும் அன்போடு எம்ஜிஆரை எங்கவிட்டுபிள்ளை என்று தாய்ப்பாசத்துடன் அழைப்பதையே பெரிதாக மதித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை முதல்வர் எம் ஜி ஆருக்கு அவர் மறைவுக்குப் பின் மத்திய அரசு வழங்கி அந்த விருதுக்கு புதிய கௌரவத்தை கொடுத்தது .
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர் மூச்சு உள்ளவரை பாடுபட்டவர் என்பதற்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது .
இதற்கு முன் தமிழகத்தை சேர்ந்த மூதறிஞர் ராஜாஜி கர்மவீரர் காமராஜர் ஆகிய இருவருக்கும் மட்டும்தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு இருந்தது.
அன்றைய தினத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை பாரத ரத்னா விருது அலங்கரிக்கப்படும் மூன்றாவது தலைவர் எம்ஜிஆர் .
அகில இந்திய அளவில் இந்த விருதை அணிந்துகொள்ளும் இரண்டாவது தலைவர் மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் .
ஜவஹர்லால் நேரு ராஜேந்திரப் பிரசாத் ஜாகீர்உசேன் லால் பகதூர் சாஸ்திரி இந்திரா காந்தி அன்னை தெரசா எல்லைக் காந்தி கான் அப்துல் கபார்கான் , வாஜ்பாய் போன்ற தலைவர்களுக்கும் மற்றும் ஒரு சிலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
தமிழக திரைப்பட வானில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
பின்னாளில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கு சித்திரங்களாக கருதப்படாமல் சமுதாயத்தில் நிலவும் உண்மைகளை பிரதிபலிக்கும் கருத்துக் கருவூலங்கள் ஆக கருதப்பட்டன .
அப்படி கருதப்பட்ட படங்கள் இவருக்குப் பெற்றுத் தந்த பரிசுகள் விபரம்
படம் மலைக்கள்ளன் இந்திய அரசின் வெள்ளிப்பதக்கம் 1954 .
படம் அலிபாபாவும் 40 திருடர்களும் சினிமா ரசிகர் சங்கப் பரிசு 1956.
படம் நாடோடி மன்னன் சினிமா கதிர் சிறந்த இயக்குனர் பரிசு 1958 .
படம் எங்க வீட்டுப் பிள்ளை சினிமா ரசிகர் சங்கம் பரிசு 1965 .
படம் காவல்காரன் தமிழக அரசின் பரிசு 1967 .
படம் குடியிருந்த கோயில் தமிழக அரசின் பரிசு 1968 .
படம் நம் நாடு சினிமா ரசிகர் சங்கம் பரிசு 1969 .
படம் அடிமைப்பெண் பிலிம்பேர் பரிசும் தமிழக அரசின் பரிசும் 1969 .
படம் எங்கள் தங்கம் சிறந்த இரண்டாவது படத்திற்கான தமிழக அரசின் பரிசு 1970
படம் ரிக்ஷாக்காரன் பாரத் விருது 1971.
படம் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் தமிழக அரசின் பரிசு 1978. அதற்கப்புறம் சர்வதேச - உலகளவில் " நோபல்" பரிசு விருது கமிட்டிக்கு 1986ம் வருடம் புரட்சி தலைவர் பெயர் தேர்வு செய்யும் குழுவினருக்கு சிபாரிசு செய்துள்ளது மிக முக்கியமான பெருமையான செய்திகள்............. Thanks.........
-
புரட்சித் தலைவரின்
ரசிகன் பக்தன்
என்ற
பெருமிதத்துடன்
இந்த பதிவு
த*மிழ*க முத*ல்வ*ர் எம்.ஜி.ஆர் செய்த* ந*லத்திட்ட*ங்க*ளில் சில...
---------------------------------------------------------------
குறு விவசாயிகளுக்கு
--------------------------------------
இலவச மின்சாரம்--
விவசாயக் கடன் தள்ளுபடி--
பயிர் பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் திட்டம்--
கரும்பு கொள்முதலை அரசே ஏற்றுக் கொண்டது.
பெரு விவசாயிகளுக்கு
குந்தா மின் நிலையம்--
TAMIN--கிரானைட் தொழிற்சாலை--மணலியில்--
பாதிக் கடன் சலுகையில் விவசாய உற்பத்திக்கு பணம் வழங்கியது--
காற்றாலை மின்சாரம்
ஏழைகளுக்கு
------------------------
குடிசை தோறும் ஒரு இலவச மின் விளக்கு-
TNPL--காகித உற்பத்தி தொழிற்சாலை தொடங்கியது--
நியாய விலைக் கடைகளில் பாமாயில் 10லி வழங்கியது--
சரளைச் சாலைகளுக்கு கிராமம் முழுவதும் ஒரே சீராக தார் சாலை போட்டது--
6300 க்கும் மேலாக அரசு பேருந்து வழித்தட போக்குவரத்து தொடங்கப்பட்டது.
பள்ளிக்கு செல்லும் பாலக*ர்க*ளுக்கு மட்டுமின்றி அனைத்து ஏழைக் குழ*ந்தைக*ளுக்கும் தினன் ஒருவேளை ச*த்துணவு சாப்பிட உறுதி செய்த*து.
அத*ன்மூலம் எண்ணற்ற ஆத*ர*வ*ற்ற, வித*வை தாய்மார்க*ளுக்கு வேலை கொடுத்த*து.
விலைவாசியை தான் ஆண்ட 11 ஆண்டுக*ளிலும் பெரிதாக உய*ராமல் க*ட்டுக்குள் வைத்த*து. நியாயவிலைக் க*டைக*ளில் சீரான விநியோகம்.
அப்போத*ய எஸ்.எஸ்.எல்.சி மாணவ*ர்க*ள் பெரும்பாலோனோர் அத்துட*ன் ப*டிப்பை நிறுத்தி க*ல்லூரி ப*டிப்பை தொட*ராமல் (குறிப்பாக கிராம*ப்புற பிள்ளைக*ள்) இருந்த* நிலையை மாற்ற ப*ள்ளியிலேயே +2 என்ற மேற்ப*டிப்பை தொட*ர*ச்செய்த*து.
இலவ*ச* ஆம்புலன்ஸ் சேவையை இந்தியாவிலேயே முத*ன்முத*லில் அறிமுக*ப்ப*டுத்தி செய*ல்ப*டுத்திய*து.
வ*ச*தி குறைந்த* வ*குப்பின*ர் இலவ*ச*மாக*வும்,மற்ற*வ*ர்க*ள் குறைந்த தொகையில் அர*சு மருத்துவ*ம*ணையில் ட*யாலிசிஸ் செய்துகிள்வ*து.
இர*ண்டுபேர் சைக்கிளில் செல்ல அனும*தி
காவ*ல*ர்க*ள் அனைவ*ரும் முழுக்கால் ச*ட்டை ம*ற்றும் கூம்பு வ*டிவிலான தொப்பியை மாற்றிய*து.
காவ*ல*ர்க*ள் அனைவ*ருக்கும் ரெயின்கோட் அளித்தது.
ம*க*ளிர்க்காவ*ல் நிலைய*ம் அமைத்த*து.
புதிய க*ல்லூரிக*ள், புதிய ப*ல்க*லைக்க*ழ*க*ங்க*ள், பொறியிய*ல் க*ல்லூரிக*ள் நிறுவி அத*னால் க*ல்விப்புர*ட்சியை ஏற்ப*டுத்தியது.
உலகத்த*மிழ் மாநாட்டை சிற*ப்பாக ந*ட*த்திய*து.
த*மிழுக்கென த*னிப*ல்க*லைக்க*ழ*க*ம் க*ண்டது.
எழுத்துச்சீர்திருத்த*ம் கொண்டுவ*ந்த*து.
15 ஆண்டுக*ளாக ந*டைபெறாமலிருந்த* உள்ளாட்சி, ந*க*ராட்சி தேர்த*லை ந*ட*த்திய*து.
ப*ர*ம்ப*ரை க*ர்ணம் முறையை ஒழித்து கிராம நிர்வாக அலுவ*ல*ர்க*ளை தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கச் செய்தது.
முல்லைப்பெரியாறு அணையை ப*லகோடி செலவில் செப்ப*னிட்டு இன்றைக்கும் 142 அடி உய*ர*த்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு ப*லப்ப*டுத்தி த*ந்தது.
ப*ராமரிப்பில்லாத* கோவில்க*ளுக்கும் ஒருவிளக்கு பூஜைக்கு உறுதி செய்த*து.
ந*க்ச*ல்பாறி, ஜாதிச்ச*ண்டைக*ள், வன்முறைக்க*லாச்சார*ம் அதிக*ம் நிக*ழாவ*ண்ணம் பார்த்துக்கொண்ட*து.
இவைகள் எல்லாம் யார் ஆட்சியில் என்றால்---
நடிகன் நாடு ஆண்டதால் தான் நாடு நாசமானது என்று நா கூசாமல் நவில்கின்றவர்களுக்கு---
சினிமா கவர்ச்சியால் சீரழிந்தது செந்தமிழ் நாடு என்னும் செம்மொழித் தலைவருக்கும்???
தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிக்கும் திசையில்லா ஏனைய உதிரிக் கட்சிக்காரர்களுக்கும்--
நினைவூட்ட விரும்புகிறோம்??
எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் இத்தகைய ஏற்றங்கள் நடந்தேறின!!!!!
இன்னும்,,,,தறியாளர்களுக்கு,,தொழிலாளர்களுக்கு--நடுத்தர வர்க்கத்தினருக்கு என்று--
எம்.ஜி.ஆர் ஆட்சியின் இன்ன பிற சாதனைகள் தொடர்ந்து பதிப்பிக்கப்படும்!! காத்திருக்கவும்!
இனிய மதிய வ*ணக்கத்துட*ன்.......... Thanks...
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 46.
தங்கமும் தகரமும் தரையிலே கிடைத்தாலும் தகுதியிலே மலையும் மடுவும் போல. வாழ்க்கையை ஒரு போர்களம் அதிலே கோழைக்கு இடம் இல்லை. .
உயிருக்கு உயிரான நண்பனாக இருந்தாலும் எந்த நேரத்திலும் விரோதியாக மாறலாம் என்று எச்சரிக்கையாக பழகக்கூடிய காலம் இது. ..
இன்பமும் துன்பமும் எந்த தொழிலுக்கும் பொருந்தும். கடலில் மூழ்கி மூச்சடக்கி முத்து எடுப்பவன் நீண்ட நாள் ஆயுளுடன் இருக்கிறான். பணப்பெட்டியே பக்கத்தில் வைத்து எண்ணிக்கொண்டிருப்பவன் சீக்கிரமே மரணத்தைத் சந்திக்கிறான் ஆதலால் வாழ்க்கையில் மரணம் என்பது ஒரு விபத்து போல அது முடிவு அல்ல...
நன்றி என்பது மனுசனை பொருத்தவரைக்கும் உணரக்கூடிய காலம் வரைக்கும் தான்.
ஒடி ஒடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். என்ற பாடல் காட்சி எடுக்கும் முன்பு சில கழைக்கூத்தாடிகள் அழைத்து அவர்கள் காட்டும் வித்தைகளை சிலவற்றை கற்றார். .அதில் என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்.
இப்பாடலை பார்க்காதவர்கள் இல்லை என்பது நான் அறிவேன். ஆனால் இப்பதிவு படித்தபிறகு மீண்டும் ஒரு முறை பாருங்கள் நான் சொல்வது உண்மை என்பது புரியும்.வாத்தியார் இரண்டு கைகளையும் கீழே ஊன்று கர்ணம் போடுவார்..
இரண்டு கைகளையும் கீழே படியாமல் கர்ணம் போட முடியாது. .ஆனால் வாத்தியார் கைகள் இரண்டும் பூமியில் படமாள் தத்ரூபமாக கர்ணம் போட்டுகாண்பித்தார் .படபிடிப்பில் இருந்த ஆயிரக்கணக்கான பேர்களுக்கும் மத்தியில் இக்காட்சி எடுக்கப்பட்டது வாத்தியாரின் அசத்தலான திறமைக்கண்டு கைத்தட்டல் அடங்க வெகு நேரம் ஆனது. கற்றுத்தந்தவர்களே செய்யமுடியாததை வாத்தியார் செய்தார் அதிலும் 55 வயதில் இதை செய்வது ஆச்சரியமான விஷயம் ஆகும். கற்று தந்தவர்கள் சொல்படி செய்தால் அது கற்று தந்தவர்களுக்கு பெருமை. அதை விட நன்றாக செய்தால் அது கற்றுக் கொண்டதுக்கு பெருமையாகும். .இது தான் வாத்தியார் கொள்கையாகும். .பாடல் வரிகள் ஏற்றபடி வாத்தியார் மிகவும் சுறுசுறுப்பாக நடித்து இருப்பார். .ஒவ்வொரு வரிகள் அர்த்ததுக்கும் வாத்தியார் தனது நடிப்பால் நிருப்பித்திருப்பார். வாத்தியாரின் புன்னகையும் சுறுசுறுப்புக்கும் உழைப்பும் புலமைப்பித்தன் வாழ்க்கை வரிகள் ..
T. M, செளந்தரராஜன் குரலில் கணீரும். கே வி மகாதேவன் இசையில் பாடல் சூப்பர் ஹிட் மெகா ஹிட் ஆனது. .பட்டித்தொட்டி எங்கும் இப்பாடல்தான் பேசப்பட்டது இப்பாடலை கேட்டுத்தான் நடிகர் சிவாஜி கணேசன் கூறியுள்ளார். .அண்ணனுக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட பாடல்கள் அமைந்திருக்கு
எனக்கு இது போன்ற பாடல் எழுத மாட்டாயா என புலமைப்பித்தன் பார்த்து கேட்டு உள்ளார். .அதுமட்டுமல்ல பாடலின் கருத்துக்கள் கூறி பாராட்டினார். .முரசொலி மாறனிடம் ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கேட்டதற்கு அவர் கூறுகையில் எம்ஜிஆர் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான் இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக ஒரு பாடல் குறிபிடுகிறேன் ஒடி ஒடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும் என்ற பாடல்தான் என் மனதில் அடிக்கடி ரீங்காரம் இடும் என்று, கூறினார் . . ஒவ்வொரு மே தினம் அன்று இந்த பாடல்தான் அனைத்து தொலைக்காட்சி வானொலில் ஒளிபரப்பாகும். உழைப்பை பற்றி அதிகமாக பாடல்கள் வாத்தியார் படத்தில் தான் காண முடியும். ........
இன்னும் முடியலங்க... மேலும் சாதனைகள்... தொடரும் ...தொடரும் ...தொடரும்... Thanks...
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 47.
சந்தேகம் என்பது பேயை விடப்பயங்கரமானது நோயை விடக் கொடுமையாது
கண்ணு குருடாகலாம் கருத்து குருடாகக் கூடாது. .
உத்தமர்களின் தியாகத்தை அவங்க இறந்த பிறகு தான் இந்த உலகம் ஏற்றுக் கொள்கிறது,
நல்ல நேரம் படத்தில் முமு பாடல்களும் ஆரம்பத்தில் கவியரசு கண்ணதாசன்தான் எழுதினார். ஏற்கனவே உழைப்பு பற்றி தனிபிறவி படத்தில் கண்ணதாசன் எழுதி இருந்தார். அதனால் வேறு ஒரு கவிஞரிடம் ஒப்படையுங்கள் என்றார். அதன் பிறகு ஆலங்குடி சோமு தேர்ந்தெடுத்தார் அதற்கும் வாத்தியார் ஒப்புதல் கொடுக்கவில்லை. .ஏற்கனவே அவரும் உழைப்பு பற்றி தொழிலாளி படத்தில் எழுதி இருந்ததால். அதற்கு காரணம் ஆகும். .பிறகு வாத்தியாரே புலவர் புலமைப்பித்தன் அழைத்து வந்து. சின்னப்பர் தேவரிடம் இவர் உங்கள் படத்தில் பாடல் எழுத வில்லை. சிறுவயதிலேயே திறமையான கவிஞர் அதனால் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.என்றார். சின்னப்பர் தேவருக்கு கண்ணதாசன் பாடல் எழுதினால் தான் விருப்பம். இருந்தாலும் வாத்தியாரே நேரில் அழைத்து கூறும் போது. அவரால் மறுப்பு சொல்ல முடியல.
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி பிறர்
வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி
இந்த வரிகள்தான் முதலில் எழுதி வாத்தியாரிடம் காட்டினார் அதற்கு வாத்தியார் கூறினார் உன்னுடைய திறமையை நான் அறிவேன். முதலாளியிடம் காட்டு என்றார். புலமைப்பித்தன் அவர்கள் சின்னப்பர் தேவரிடம் இந்த பாடல் வரிகள் காட்டியதும். சின்னப்பர் தேவரால் ஒன்று பேச முடியல மகிழ்ச்சியில் பூரிப்படைந்தார்
ஆண்டவன் ஆண்டவன்தான். .புரட்சியில் நீ புலவன்தான் என்று பாராட்டினார். .
வாத்தியாரால் அறிமுகம் படுத்த பட்ட எந்த கவிஞரும் சோடை போனதில்லை..என்பதற்கு இப்பாடல் ஒர் சமர்ப்பணம் உதாரணம் ஆகும். .
அதிலும் குறிப்பாக ஒரு வரி கூறனும் என்றால்...
அடுத்தவன் சொன்னா கசக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தால் இனிக்கும். ...இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லிப்போடு.
இந்த வரியைத்தான் பல இடங்களில் பல நிகழ்ச்சிகளில் உதாரணமாக கூறுவார்கள் ஏன் ஒவ்வொரு குடும்பத்திலும் மனித வாழ்க்கையிலும் இந்த வரிகள் தான் உதாரணமாக திகழ்கிறது. . இன்னும் சொல்லனும் என்றால் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் இந்த பாடல் வரிகள்தான் குறிப்பிட்டு கூறுவார்கள். .அந்தளவுக்கு இப்பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் மனித சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது. . அவ்வளவு கருத்தாழமிக்க பாடல் ஆகும் மேலும் எனது அடுத்த பதிவில்
தாய்க்கு பின் தாரம் படத்தின் வெற்றியும் சாதனையும் தொடரும் தொடரும் தொடரும் ... Thanks...
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 48. .
முகம்நக நட்பது நட்பன்று. .நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு. .
சாண்டோ சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் கொண்ட நட்பு எத்தகையது என்பதற்கு இந்த குறள் உதாரணமாக கூறலாம். .1945. ம் ஆண்டு வெளிவந்த சாலிவாஹனன் என்ற திரைப்படம் தான் வாத்தியாருடன் சின்னப்பர் தேவர் நட்பு ஏற்பட்டது. . வாத்தியார்க்கு இது 12 . வது திரைப்படம். .சின்னப்பர் தேவர்க்கு இது தான் முதல் அறிமுகமான படம். .முதல் படம் முதல் சந்திப்பு இருவரும் நட்பு இரும்பும் காந்தகம் போல் இனைந்து கொண்டனர்.
கதாநாயகன் ரஞ்சன் சாலிவாஹனாகவும் எம்ஜிஆர் விக்ரமாதித்தனாகவும் அவரது மந்திரி பட்டியாக சாண்டோ சின்னப்பர் தேவரும் நடித்தார்கள். .படத்தில் ஒரு காட்சியில் ரஞ்சனும் எம்ஜிஆரும் ராஜபுத்திர வாள்களுடன் மோதுவது படமானது. கதையில் ரஞ்சனின் கை ஒங்கியிருக்க வேண்டும். ஆனால் கேமரா ஒடிக்கொண்டிருக்கும் போது ரஞ்சனை விட எம்ஜிஆரின் வாள் வீச்சு வேகமாக இருந்தது. ரஞ்சனால் எம்ஜிஆருக்கு ஈடு கொடுக்க முடிய வில்லை. அதனால் கேமிராவை கட் சொல்லி நிறுத்திய ரஞ்சன் டைரக்டர் பி என் ராவிடம் எம்ஜிஆர் வேண்டுமென்றே என்னை அடிக்கிறார். என்று புகார் செய்தார். டைரக்டர் எம்ஜிஆரை அழைத்து விசாரிக்க எம்ஜிஆர் தான் செய்தது சரி என்று விளக்கினார்
அதன் பிறகு ரஞ்சனை விட குறைவான வேகத்தில் வாள் வீசும் படி எம்ஜிஆருக்கு டைரக்டர் யோசனை கூறினார். .எம்ஜிஆர் மனம் நொந்து போனார். தமது உண்மையான திறமையை எப்படித்தான் வெளிபடுத்துவது. .என்று சின்னப்பர் தேவரிடம் கூறி வேதனைப்பட்டார். .அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார் உண்மையான திறமைக்கு என்றுமே மதிப்பு உண்டு. உங்களிடம் உள்ள ஒரு நாள் உலகுக்கு தெரியத்தான் போகிறது என்று சமாதானம் கூறினார். .
அன்று தொடங்கிய நட்பு சின்னப்பர் தேவர் இறுதி ஊர்வலம் வரை நீடித்தது..வாத்தியாரின் அழகும் இளமையும் சின்னப்பர் தேவரை கவர்ந்தது அதேப்போல் சின்னப்பர் தேவரின் கம்பீரமான தோற்றமும் கட்டுமஸ்தான உடலும் வாத்தியாரை கவர்ந்தது. . இருவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உடற்பயிற்சி செய்வார்கள். வாத்தியார்க்கு தெரிந்த வித்தைகள் எல்லாம் சின்னப்பர் தேவர்க்கு கற்றுக் கொடுத்தார். .சின்னப்பர் தேவர்க்கு தெரிந்த வித்தைகள் எல்லாம் வாத்தியாருக்கு கற்றுக் கொடுத்தார். . இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலித்தவர்கள் அல்ல இரண்டு மலைகளும் மோதுவது போல் இருவரது பயிற்சி இருந்தது. நட்பும் நகமும் சதையும் போல் இருந்தார்கள். .
இந்த சூழ்நிலையில் தான் வாத்தியாருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. .அந்த படம்தான் ராஜகுமாரி. படமும் வேகமாக வளர்ந்தது படத்தில் வாத்தியாருடன் மோதுவதுக்கு வட இந்திய நடிகர் ஒருவரை அழைத்து வந்தார்கள் ஆனால் அதிலே சிறிது கூட சம்பந்தம் இல்லை. படத்தின் இயக்குனர் A S சாமியிடம் சென்று தமிழ் நடிகர்களில் பல பேர் திறமையானவர்கள் இருக்கும் போது வேறு மாநிலங்களில் இருந்து ஏன் அழைத்து வந்தீர்கள் என்றார். எனக்கு தெரிந்து திறமையான நடிகர் ஒருவர் இருக்கிறார் அவரை போடுங்கள் என்றார். உடனே இயக்குநர் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம் நீங்கள் இன்னொருவர்க்கு வாய்ப்பு கேட்கீர்கள் என்று கூறி வாத்தியாரை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பிறகு வட இந்திய நடிகர் சரியாக படப்பிடிப்புக்கு வராது அப்படியே வந்தால் போதையில் வருவது. இதனால் படபிடிப்பில் சரியாக நடத்த முடியல. பிறகு வாத்தியாரே கூப்பிட்டு நீங்கள் கூறிய நடிகரை அழைத்து வாருங்கள் என்றார் சின்னப்பர் தேவரை அழைத்து வந்து படத்தில் நடிக்க வாய்ப்பு அமைத்து கொடுத்தார். .தொடரும் தொடரும் தொடரும்.......... Thanks...
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 49. .
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம். ...இதை ஆரம்பம் முதல் தனது கடைசி மூச்சு வரை கடைப்பிடித்தார். .
அதனால் தான் அவர் புரட்சி நடிகராக இருந்து புரட்சித்தலைவராக உயர்ந்தார். .
அன்று முதல் இன்று வரை அனைத்து நடிகர்களும். எம்ஜிஆர் போல் புகழ் பெற வேண்டும். எம் ஜி ஆரை போற்றுவது போல் நம்மையும் போற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள் தவிர எம்ஜிஆர் போல் வாழ வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. அதனால் தான் அவர்கள் வாழ்க்கை கனவு போல் களவு போகிறது. வாத்தியார்க்கு வந்த எதிர்ப்பு வதந்தி விமர்சனம் போல் எந்த நடிகர்களுக்கும் இல்லை அப்படி இருந்தால் விலாசம் இல்லாமல் போயிருப்பார்கள் மக்கள் செல்வாக்கு வள்ளல்தனம் உழைப்பு ஒழுக்கம் இது தான் அவர் புகழுக்கு புகழ் சேர்த்தது. ...தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் மத்தியில் தனது நண்பர் சாண்டோ சின்னப்பர் தேவர்க்கு பல படங்கள் வாய்ப்பு தேடி தந்தார். .ராஜகுமாரி. .மருதநாட்டு இளவரசி. ..மோகினி. .
சர்வாதிகாரி. .நாம் குலேபகாவலி மதுரை வீரன் அரசிளங்குமரி போன்ற படங்கள் வாத்தியார் சிபாரிசு செய்து சின்னப்பர் தேவர்க்கு கிடைத்த வாய்ப்புகள் ஆகும். .
சாதாரண நடிகராக சில காட்சிகளில் மட்டும் நடித்து வந்த சின்னப்பர் தேவரை மிக பெரிய தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை வாத்தியாரே சேரும். .அன்றைய காலகட்டத்தில் லட்சக்கணக்கான பணம் செலவு செய்து படம் எடுத்து ஆயிரக்கணக்கான பணம் வருமானம் கூட வராமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டு படுத்தோல்வி அடைந்து கடன்காரனாக மாறிய பல தயாரிப்பாளர்கள் மத்தியில் வெரும் 45 , ஆயிரம் ரூபாய் செலவில் படம் எடுத்து லட்சக்கணக்கான பணம் வருமானம் பார்த்த ஒரே தயாரிப்பாளர். சின்னப்பர் தேவர் தான். .அதற்கு
மூல காரணம் முதல் காரணம் வாத்தியார்தான். .இத்தனைக்கும் வாத்தியார் கால்ஷீட் தர முடியாத அளவுக்கு அதிகமாக படங்கள் ஒப்பந்தம் செய்து இருந்தார். மலைக்கள்ளன் குலேபகாவலி மதுரை வீரன் அலிபாபாவும் 40 திருடர்களும் என தொடர்ந்து வெற்றி படங்கள் தந்து வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். . அவருக்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் பல பேர். .இருந்தாலும் நட்புக்கும் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற நடித்து கொடுத்தார். .
படத்தின் தயாரிப்பாளர் சின்னப்பர் தேவர் கதாநாயகியாக நடிக்க யாரை போடலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் அப்போது வாத்தியார் வெற்றி ஜோடியாக திகழ்ந்த பானுமதி அணுகினார். பானுமதியும் மிகவும் பிசியாக இருந்தார். சம்பளம் அதிகமாக கேட்டார். உடனே வாத்தியார் தலையிட்டு பானுமதியிடம் பேசி கால்ஷீட் வாங்கி கொடுத்தார். ..படபிடிப்பும் குறுகிய காலத்தில் நடத்தி 21 -09- 1956 ம் ஆண்டு "தாய்க்கு பின் தாரம்", படம் வெளிவந்தது. .பலவிதமான சாதனையை படைத்து மாபெரும் வெற்றி பெற்று சின்னப்பர் தேவர் வாழ்வில் மிக பெரிய அந்தஸ்து பெற்று உயர்வுக்கு வழி காட்டியது........
தாய்க்கு பின் தாரம் படத்தின் வெற்றியும் சாதனையும் அடுத்த பதிவில் காண்போம் தொடரும் தொடரும் தொடரும்... Thanks...
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 50.
திறமையுள்ளவர் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. திறமைக்கான தகுதி இருக்க வேண்டும். எல்லோரும் திறமைசாலிகள்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளோ ஒவ்வொரு திறமை இருக்கிறது. ஆனால் அதை அவன் பயன்படுத்தும் விதமும் அதை செயல்படுத்தும் முறையும் சரியாக இருந்தால் அவன் வாழ்க்கையும் சரியாக இருக்கும். அதற்க்கான தகுதியும் பேரும் புகழும் அவனை தேடிவரும். அதேப்போல் தான் நம்ம வாத்தியார். அவருக்குள் உள்ள திறமையை எங்கே எப்போ எப்படி பயன்படுத்தனுமோ செயல்படுத்தனுமோ அதை அந்தந்த நேரத்தில் முறையா செய்ததால்தான் இன்று வரை அவரது பேரும் புகழும் அழியாத தங்கமா ஜொலிக்கிறது .அதைக்கண்டு பல தகர டப்பாக்கள் பொறாமை கொள்கிறது. அதனால் தான் அவை துரும்பு பிடித்து உள்ளது. .
சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் ஒளிவிளக்கா வந்த படம் தான் 21. 9. 1956 ம் ஆண்டு வெளிவந்த தாய்க்கு பின் தாரம். வெரும் 45 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 45 லட்சம் ரூபாய் வசூல் சாதனை படைத்தது. சென்னையில் சித்ரா கிருஷ்ணா உமா மூன்று தியேட்டரிலும் 100 நாட்கள் மேல் ஒடியது. மதுரையில் முதல் முதலாக இரண்டு தியேட்டரில் வெளியிடப்பட்ட முதல் படம். .தேவி சந்திரா இரண்டிலும் 100 நாட்கள் மேல் ஒடியது. .படத்தில் வாத்தியார் காளையே அடக்குவார். மிகவும் தத்ரூபமாக ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடுக்கப்பட்டது. வாத்தியார் அதற்க்கான பயிற்சியில் ஈடுபட்டு பிறகு எடுக்கப்பட்டது.1957 .ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சின்னம் காளையாக இருந்தது. .திமுகவில் தேர்தல் பிரசாரத்துக்கு தாய்க்கு பின் தாரம் ஒரு விளம்பரமாக அமைந்தது. காளைகளை அடக்க வந்த புரட்சி நடிகர் என்றும். .காளைகளை அடக்க வந்த காங்கேயம் புரட்சி நடிகர் என்றும். பிரச்சாரம் செய்து ஓட்டுகள் அள்ளினார்கள். .
படத்தில் A . மருதகாசி எமுதிய மனுசனை மனுசன் சாப்பிடறான்டா தம்பி பயலே என்ற பாடல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர் நகரங்களிலும் மெகா ஹிட் சூப்பர் ஹிட் இன்னும் சொல்லனும் என்றால் இந்த பாடல் முனுமுனுக்காத உதடுகள் இல்லை. அன்று முதல் இன்று வரை இனிவரும் தலைமுறைக்கு ஒர் உதாரணம் வாழ்க்கை பாடமாகும். பள்ளி பாடத்திலும் இப்பாடல் இடம் பெற்றுள்ளது
ஒவ்வொரு வரிகளும் மனிதனின் குற்றத்தை உணர்த்தும் உண்ணதகாவிய பாடல் ஆகும். குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்த வரி அறிவுள்ளது அடங்கிடக்கிறது வீட்டிலே எதற்கும் ஆகாது சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே. தவறான பாதையில் போறவங்களை பார்க்கும் போதும் தவறு செய்பவர்களை காணும் போதும் இந்த பாடல் வரிகள்தான் ஞாபகம் வரும். பாடலில் வரும் ஒவ்வொரு அடி வரிகளுக்கும் ஒவ்வொரு பக்கம் கருத்துக்கள் எமுத வேண்டியிருக்கும் அந்தளவுக்கு கருத்தாழமிக்க ஒர் அற்புதமான பகுத்தறிவு மிக்க கொள்கை பாடல் ஆகும். .
படத்தில் சாண்டோ சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் மோதுவது போல் எடுக்கப்பட்ட சிலம்பாட்டம் சண்டைக்காட்சிகள் மிகவும் பிரபளமாக பேசப்பட்டது கேமரா ஓடவிட்டு இருவரும் மோதும் காட்சி சிங்கமும் சிங்கமும் மோதுவது போல் இருக்கும். மலையும் மலையும் மோதுவது போல் இருக்கும். இரண்டு மதயானைகள் மோதுவது போல் இருக்கும் அவ்வளவு சூப்பர் சிலம்பாட்டம்.
படத்தில் ஒன்பது பாடல்களும் சூப்பர் ஹிட் பாட்டுக்காக பைட்டுக்காக காளையே அடக்கும் காட்சிக்காக வாத்தியார் அழகுக்காக இப்படி இதற்காகத்தான் படம் சூப்பர் ஹிட் வசூல் மழை பொழிந்தது என்று குறிப்பிட்டு கூறமுடியாது. .
பொதுவாக தாய்பற்றித்தான் பாடல்கள் நிறைய உண்டு ஆனால் முதல் முதலாக தந்தையைப் பற்றி வந்த முதல் படம் பாடல் இடம் பெற்றது இதுதான். அதிலும் சுடுகாட்டில் தந்தை பிணத்தை பார்த்து அழும் காட்சி படம் பார்க்கும் அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும். . இந்த காட்சியினை பற்றி அடுத்த பதிவில் விரிவாக கூறுகிறேன். .தொடரும் தொடரும் தொடரும்... Thanks...
-
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 51
இரண்டு கண்கள் இல்லாதவனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைத்திருப்பார்
தர்மராஜா என்று பெயர் இருக்கும் ஆனால் எடுப்பதோ பிச்சை. .சிறுவயதிலேயே இறந்துள்ளார் பெயர் கேட்டா சிரஞ்சீவி என்பார்கள். .ஏழ்மையும் வறுமையும் உள்ளவனிடம் பெயர் கேட்டால் கோட்டீஸ்வரன் என்பான். இப்படி பெயருக்கும் அவன் வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்காது. பலபேர்க்கு கிடைக்கும் பட்டங்களும் அப்படித்தான் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். .நேற்று இன்று நாளை படத்தில் வாத்தியார் கூறுவார். மற்றவர்களா பார்த்து கொடுப்பதுதான் பட்டம் நாமே வைத்துக் கொண்டால் அதற்கு பெயர் தம்பட்டம். .பலபேர் வைத்திருக்கும் பட்டமும் தம்பட்டம்தான். .வாத்தியார் தனது ஒவ்வொரு படத்திலும் கொள்கையை கடைபிடிப்பதால் அவரது நடிப்பு திறமை பல பேர் அறிவதில்லை. அதற்கு காரணம். அரசியல். பொதுசேவை சினிமா மூன்று விதமான வாழ்க்கைக்கும் பதில் சொல்லனும். அரசியலுக்காகவும் கொள்கைக்காகவும் பொழுதுபோக்குக்காவும் ஒவ்வொரு திரைப்படமும் தரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. .வெறும் சினிமா மட்டுமே வாழ்க்கையா இருந்தால் அவர் ஆயிரக்கணக்கான படங்கள் நடித்திருப்பார் உலகிலேயே சிறந்த நடிகராக திகழ்ந்திருப்பார். ஆனால் சுயநலத்திற்காக சினிமாவில் நடிக்க வில்லை என்பதுதான். 100. /சதவீதம் உண்மையாகும். அப்படி இருந்தும் தனது நடிப்பு திறமையை பல படங்களில் நிருப்பித்துள்ளார். பல பேரை ஆச்சரியபடுத்தியுள்ளார். .அதிலே ஒரு திரைப்படம் தான் தாய்க்கு பின் தாரம் ....
சசுடுகாட்டில் தனது தந்தையின் உடல் எரிவதைக்கண்டு அழும் காட்சி பார்ப்பவர்கள் கண்கள் குளமாக்கி விடும். உண்மையில் உணர்ச்சிவசப்பட்டு தத்ரூபமாக நடித்துள்ளார். .இக்காட்சி எடுக்கும் போது படபிடிப்பில் இருந்த அனைவருக்கும் நெஞ்சு உருகியது. அதற்கு காரணம் என்னவென்றால். .இக்காட்சி எடுக்கப்படுவதற்கு முன் சின்னப்பர் தேவர் வாத்தியாரிடம் ஏற்கனவே வந்த சில படங்களில் காட்சிகள் கூறி நடிக்க சொன்னார் ஆனால் வாத்தியார்க்கு அதில் உடன்பாடு இல்லை. .சிறிது யோசனைக்கு பிறகு சின்னப்பர் தேவர் வாத்தியாரிடம் அவரது முதல் மனைவி தங்கமணி இறப்பு நினைவு படுத்தினார். அதை கேட்டவுடன் வாத்தியார் முகம் வாடியது. பிறகு அந்த நினைவே அக்காட்சியில் நடிக்க தத்ரூபமாக அமைந்தது . (( வாத்தியார் முதல் மனைவி தங்கமணி பிரிவு பற்றி அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் நான் ஏன் பிறந்தேன் சுயசரிதையில் எழுதியுள்ளார் ) ) படத்தில் இக்காட்சி பற்றி பல பத்திரிகைகளில் பாராட்டி எழுதினார்கள். ..இக்காட்சி பார்த்து தான் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் அரண்மனைகிளி படத்தில் நடித்திருப்பார். அப்படத்தின் 100 வது நாள் விழாவில் ராஜ்கிரண் கூறியது. படத்தில் என்தாய் இறந்த செய்தி அறிந்து எப்படி நடிக்க போகிறேன் என்று தவித்தேன் உடனே இளையராஜா அவர்கள் கூறினார். தாய்க்கு பின் தாரம் படத்தில் வாத்தியார் நடிப்பை பார்த்து நடிக்க கற்றுக்கொள் என்றார். அதன்படி வாத்தியார் படத்தின் நடிப்பு பார்த்துதான் நடித்தேன். ஆனால் இந்த காட்சி இந்தளவுக்கு பேர் வாங்கும் என்று பாராட்டு பெறும் என்றும் நினைத்துக்கூட பார்க்க வில்லை. .இந்த பேர் புகழுக்கு வாத்தியார் தான் காரணம் என்று புகழாரம் சூட்டினார். .வாத்தியார் நடிப்புக்கு இப்படம் கலங்கரைக்விளக்கம் ஆகும். .
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நான் எழுதிய 51 பாகம் தொடர்ந்து படித்து அதற்கு லைக் கமெண்ட்ஸ் சேர் தந்து மேலும் உற்சாகம் தந்து ஆதரவு தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். .இத்தொடர் இத்துடன் முடிகிறது. .மீண்டும் சந்திப்போம். ...
மீண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....... Thanks...
-
அறிந்த தகவல் ... அறியாத செய்தி ......
புதிய தொடர் எழுவதற்கு முன் சில தகவல்கள் பகிர்ந்து கொள்கிறேன். பாசம் படத்தில் வரும் ஒரு வசனம் இந்த உலகத்தில் நாம் எதை விரும்புகிறமோ. அது நமக்கு கிடைப்பதில்லை. .எதை ஒதுக்கிறமோ. அது நமது காலடியில் இருக்கும். .இது எந்தளவுக்கு உண்மை என்று, நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரவர் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள். .வட இந்திய பின்னனி பாடகி லதா மங்கேஷ்கர் அகில இந்தியா அறிந்த சிறந்த பின்னனி பாடகி பல விருதுகளை குவித்தவர் இது யாவரும் அறிந்ததே. ஆனால் அறியாதது. . வட இந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களும் நடிகைகளும் .பல தலைவர்கள் லதா மங்கேஷ்கர் தான் அகில இந்தியாவிலேயே சிறந்த பாடகியாக கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். ஏன் தமிழ் நாட்டில் உள்ள சில நடிகர்கள் நடிகைகள் மற்றும் தலைவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் .ஆனால் வாத்தியார் மட்டும் அதற்கு ஒப்புதல் தரவில்லை காரணம். தமிழகத்தில் உள்ள P. சுசீலா தான் என்னைப் பொருத்தவரைக்கும் சிறந்த பாடகி. தமிழ் நாட்டில் உள்ள சிறந்த பாடகர் இருக்கும் போது வடமாநிலத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எனக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் நான் எப்பவும் சுசீலா ரசிகர் லதா மங்கேஷ்கர் நல்ல பாடகிதான் அதற்காக சுசீலா விட சிறந்தவர் என்பது ஏற்றுக் கொள்ள வில்லை என்றார், வாத்தியாரின் கருத்துக்கள் அறிந்த பின் தமிழ் நாட்டில் கருத்து தெரிவித்தார்கள் தலை குனிந்தனர். .....
அதேப்போல் P. சுசீலா அவர்கள் தனது 70 வது வயதில் அறக்கட்டளை நிறுவனம் தொடங்கினார். . அந்த அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழாவும் சுசீலாவின் 75 . ம் ஆண்டு பவள விழா சேர்ந்து ஜெயா டிவி சிறப்பாக நடத்தியது. அதில் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் பல தலைவர்களும் சுசீலாவை வாழ்த்தி புகழாரம் சூட்டியுள்ளார்கள் அப்போது தந்த தகவல்தான் நான் மேலே குறிப்பிட்டது.
அனைவரும் சுசீலாவை வாழ்த்தினர் பாராட்டினர் புகழ்ந்தனர் போற்றினார்கள் இந்நிகழ்ச்சியின் கடைசி நாளன்று P. சுசீலா அவர்கள் கூறினார்கள். ...
இன்று நான் அறக்கட்டளை மூலம் பல உதவிகள் செய்கிறேன் என்றால், அந்த எண்ணம் செயலும் நமக்கு வசதி வாய்ப்பு வாழ்க்கை அமைந்த பிறகு நமக்கு தேவையானது சேர்த்த பிறகு நமது தேவைக்கு அதிகமாக சேர்ந்த பிறகுதான் இந்த எண்ணம் நமக்குள் எழுந்துள்ளது என எண்ணி வருத்தம் அடைகிறேன். .காரணம்
பிறருக்காக வாழும் போதும் பிறர்க்கு உதவி செய்யும் போதும். அதன் மூலம் பிறர் அடையும் பலனும். சந்தோஷம் மகிழ்ச்சியும் அவர்கள் நம்மை மனதார வாழ்த்தும் போதும். மனம் அமைதி பெறுகிறது சாந்தம் அடைகிறது. இதை ஆரம்பத்தில் செய்யாதை எண்ணி வருத்தம் அளிக்கிறது. . இப்போது தான் எனக்கு புரிகிறது அண்ணன் எம்ஜிஆர் அவர்கள் பேர் புகழுக்காக தர்மம் செய்ய வில்லை. அதிலே கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. பிறர்க்கு உதவிசெய்யும் போது மனம் மகிழ்ந்து செய்கிறார். கொடுப்பதில் சந்தோஷம் கண்டவர். இருக்கும் போது வசதி வந்த பிறகு செய்வது வள்ளல்தனம் அல்ல அது பிறவிலே வரணும். . அண்ணன் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே அந்த குணம் இருந்தது. அதனால் தான் அவர்க்குகொடைவள்ளல் பொன்மனச்செம்மல் என்ற பட்டம் பொருந்தியது.
இன்று வரை அவர் பேர் புகழும் அழியாத தங்கமா ஜொலிக்கிறது காரணம் அவரது வள்ளல் குணம் தான். .நீங்களும் உங்கள் தேவைக்கு அதிகமாக இருந்ததால் பிறர்க்கு உதவி மகிழ்ச்சி கொள்ளுங்கள். .என்றார். ....... Thanks to GS.,
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2. பாகம் 52 . பேரறிஞர் அண்ணா
பெயரிலேயே மரியாதை உள்ள பெயர் அண்ணா. எல்லோரும் அன்புடன் அழைக்கப்படும் பெயர் அண்ணா. .உறவு இல்லாதவர்களுக்கு உறவோடு அழைக்கும் பெயர் அண்ணா. .ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்கிற வார்த்தையை கண்டறிந்தவர் அண்ணா. ....எதையும் தாங்கும் இதயம் உள்ளவர் அண்ணா. ..பேச்சிலே கனிவு. .செயலிலே தெளிவு. .முயற்சியிலே முடிவு. .சொல்லிலே சொல்மிக்கவர் அண்ணா. ..கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்டவர் அண்ணா. ..எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தென்னாட்டு காந்தி அண்ணா. ...மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அண்ணா. ..திராவிட இயக்கத்தின் தலைவர் அண்ணா. ..தமிழகத்தில் விடிவெள்ளி அண்ணா...அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா..அடுக்கு மொழி பேசுவதில் அண்ணாவுக்கு இனை அண்ணாதான். .பொன்மனச்செம்மலை கண்டெடுத்த அண்ணா. ..பார்வேந்தரும் பார்கவிஞர்கள் போற்றும் அண்ணா. .தமிழுக்கு பெருமை சேர்த்த பெருமைமிக்க அண்ணா ..காஞ்சி மாநகரில் அவதரித்த எங்கள் மன்னவன் அண்ணா. .இப்படி அண்ணாவைப்பற்றி எத்தனையோ புகழ் மாலைகள் சூடிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட அண்ணா அவர்கள் அதிகமாக புகழ்ந்தது நமது பொன்மனச்செம்மலை த்தான். அப்படி அண்ணாவால் புகழப்பட்ட வார்த்தைகள் என்ன வரலாறு என்ன என்பதுதான் இத்தொடரின் முதல் அத்தியாயமாக தொடங்கிறேன். .இத்தொடர் விளக்கம் அண்ணா புரட்சித்தலைவர் பற்றி என்னன்ன சொன்னார். என்பதைப்பற்றி முதலில் பார்ப்போம். .??
ஒரு முறை அண்ணாவிடம் மா பொ. சிவஞானம். .நாவலர் நெடுஞ்செழியன். .
ஈ வி கே சம்பத். போன்றோர் ஒரு நிகழ்ச்சிக்கு நிதி வசூல் செய்ய வேண்டும் அதற்கு தாங்கள் வரவேண்டும். என்று கேட்டனர். அதற்கு அண்ணா கூறினார் தம்பி ரராமச்சந்திரனை அழைத்து செல்லுங்கள் என்றார். .அதற்கு அவர்கள் அண்ணாவிடம் சொன்னது. .ஐயா எம்ஜிஆரை நீங்கள் நிதி வசூல் செய்வதற்கும் .
தேர்தல் வேலை பார்ப்பதற்கும். .மாநாட்டில் கூட்டம் சேர்ப்பதற்கும்...இப்படி முக்கியமான நிகழ்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துகீறிர்களே மற்ற நேரங்களில் அவரை முக்கியமானவராக நினைப்பதில்லை யே. .என்று சிலர் உங்களை குறை கூறுகின்றனர். . அதனால் தாங்களே வரவேண்டும் என்றனர். .
அதற்கு பேரறிஞர் அண்ணா கூறியது என்ன வென்றால். .சிறிது காத்திருங்கள். அடுத்த பதிவில் பதில் வரும் தொடரும் தொடரும் தொடரும் ........ Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2. பாகம் 53. பேரறிஞர் அண்ணா. ..
அன்னை உலகில் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி..
இதன் பொருள் பலபேர் அறியாதது. . யாரெல்லாம் தாயைக் நேசிக்கிறார்களோ தாயைப் மதிக்கிறார்களோ .தாயைக் வணங்குகிறார்களோ அவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் தான். அவர்களை நானும் நேசிப்பேன் மதிக்கிறேன் வணங்குகிறேன். என்பதே இதன் அர்த்தம் ஆகும். . இதயதெய்வம் அண்ணாவை இதயத்தில் வைத்து பூஜித்தார். நமது வள்ளல் எம்ஜிஆர் ...அதேப்போல் பேரரறிஞரும் வள்ளலை தனது சகோதராக நினைத்துத்தான் ஒருநாளும் விட்டு கொடுத்தது இல்லை. ஈ. வி. கே மா பொ. சி. நாவலர். மூவரும் கேள்விக்கும். இதோ அண்ணா தந்த விளக்கம். ..
அண்ணா சிரித்துக்கொண்டே சொன்னார். .வெள்ளி சரிகைப்போட்ட விலை உயர்ந்த பட்டு புடவை போன்றவர் எம்ஜிஆர். . அவரை எல்லா நேரமும் பயன்படுத்தி அசிங்கம் படுத்தக்கூடாது. .திருமணம் திருவிழா போன்ற வைபவங்களுக்கு மட்டுமே உடுத்தி அழுகு பார்க்க வேண்டும். .மிக பெரிய துணிக்கடையில் கூட பட்டுப்புடவைகளை தனியாக வைத்துத்தான் அழுகு பார்ப்பார்கள். .மற்ற துணிகளுடன் சேர்த்துக்வைக்கமாட்டார்கள். .ஏன் என்றால் வாங்குபவர்களின் தரம் தெரியாமல் போய் விடும். .அதுபோன்றுதான் எம்ஜிஆர் மதிப்பு என்னவென்று என்போன்றோர்களுக்குத்த்ன் தெரியும். .அதுமட்டுமல்ல. உங்கள் நிகழ்ச்சிக்கு நான் வந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் வசூல் கிடைக்காது. .எம் ஜி ஆர் வந்தால் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும். .நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடக்கும்.
நான் எம்ஜிஆர் பற்றி என்ன நினைக்கிறேன் என்று எம் ஜி ஆர் ஒருவருக்குத்தான் தெரியும். .அதனால் மற்றவர்கள் நினைவைப்பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். .அதேப்போல் என்னைப் பற்றி தவறான தகவல் யார் எம்ஜிஆரிடம் போய் கூறினாலும். அவர் கூறும் காரணம், காது கேட்கல மீண்டும் கூறுங்கள் என்பார் மீண்டும் மீண்டும் கூறினாலும் அதே வார்த்தைகள்தான் வரும். என்னைப்பற்றி தவறான தகவல் யார் தந்தாலும் அதேநேரத்தில் மட்டும் காது கேளாத மனிதராக இருப்பார் அதுதான் அவர் என்மீது வைத்திருக்கும் உண்மையான பாசம். அப்படி இருக்கையில் நாம் மட்டும் இதுபோன்ற தவறான தகவல்களை காது கொடுத்து கேட்கலாமா. ?என்று கூறினார். .இதைக்கேட்டதும் மூவரும் பிரமித்துப் போய் விட்டார்கள் ..
பின்னே அண்ணாவின் இதயக்கனி அல்லவா நமது பொன்மனச்செம்மல் இப்படி பொன்மனச்செம்மலுக்கும் அண்ணாவுக்கும் உள்ள அன்பின் பரிமாற்றமே இத்தொடரின் குறிக்கோள் ஆகும். . இது போன்ற பல நிகழ்வுகளை காண்போம். .
தொடரும் தொடரும் தொடரும்...... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் . 2 பாகம் 54. பேரரறிஞர் அண்ணா. ..
புரட்சித்தலைவர் தன் தாய் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாரோ. அதே அளவு அன்பு பாசமும் அண்ணா மீதும் வைத்திருந்தார். .எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பு கொண்டிருந்தார். .அதேப்போல் அண்ணாவும் எம்ஜிஆர் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டியிருந்தார். .என் இதயக்கனி என்று எம் ஜி ஆரை கொண்டாடினார்..ஒரு குடும்பத்தில் பல குழைந்தைகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட குழந்தை மட்டும் செல்ல குழந்தையாக எல்லோருடைய அன்புக்கு உரியதாக இருப்பதைப்போல கழகத்தில் புரட்சித்தலைவர் இருந்தார். . என் தாயிடம் காணப்படும் மன்னிக்கும் மனப்பான்மை அறிஞர் அண்ணாவிடம் காண்கிறேன்.அதனால்தான் நான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டேன்.என்று சொன்னவர் நமது புரட்சித்தலைவர். .
1967 ம் ஆண்டு சிறந்த படமாக காவல் காரன் படம் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட து. பரிசு தொகையாக 50. 000. ரூபாய் கிடைக்கும். .பரிசுக்கான தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்த வெங்கட்ராமன் என்பவர்.அண்ணாவிடம் இந்த பட்டியலை காட்டிய போது எதற்கும் எம் ஜி ஆரிடம் காட்டி விடுங்கள் அவருடைய கருத்தையும் தெரிந்துக்கொண்டு வாருங்கள். என்றார் அண்ணா. . வெங்கட்ராமன் அவர்கள் பட்டியலை புரட்சித்தலைவர் விடம் காண்பிக்க புரட்சித்தலைவர் முதல் படமாக விவசாயி படத்தை தேர்ந்தெடுத்தார். .ஆனால் அண்ணா இல்லை காவல்காரன் படத்துக்கு தருவதுதான் சரியானது என்று நான் சொன்னதாக எம் ஜி ஆரிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை கேள்வி பட்ட எம் ஜி ஆர் அப்படியா ரொம்ப மகிழ்ச்சி என்று ஏற்றுக் கொண்டார். காவல்காரன் படத்தை நான் பரிந்துரை செய்யாதற்கு ஒரு காரணம் உண்டு என்று கூறினார். வீரப்பன் என்னிடம் வேலை செய்பவர் சத்யாமூவிஸ் என்னுடைய சொந்த நிறுவனம் போல இந்த நிலையில் நான் காவல்காரன் பரிந்துரை செய்திருந்தால். மற்றவர்கள் தவறாக நினைக்ககூடும். அதனால்தான் விவசாயி படத்திற்கு பரிந்துரை செய்தேன். மற்றபடி காவல்காரன் படத்திற்குதான் தரவேண்டும் என்று முதல்வர் பேரரறிஞர் அண்ணாவே சொல்லிவிட்டதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார்..
1967. ம் ஆண்டு தமிழக அரசால் முதல் முதலாக தேசியவிருது பெற்ற முதல் படம் காவல்காரன் முதல் நடிகர் புரட்சித்தலைவர். .நாடோடிமன்னன் படத்திற்கு பிறகு வெள்ளிவிழா கொண்டாடிய ஒரே கருப்பு வெள்ளை படம் காவல்காரன். ..பேரரறிஞர் அண்ணா அவர்கள் தியேட்டர் சென்று பார்த்த ஒரே திரைப்படம் காவல்காரன் ..
இப்படி அண்ணா எம் ஜி ஆர் இருவரும் ஒருவருக்குள் ஒருவராக இருந்த அன்புக்கு இலக்கணமாக வேறு ஒருவரை உதாரணமாக கூற முடியாது. ........ Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 55. பேரரறிஞர் அண்ணா. .
30. 11. 1958. ஞாயிற்றுக்கிழமை. இந்திய திரையுலகமே எதிர்பார்க்காத மாபெரும் வெற்றி படமான நாடோடிமன்னன்.மதுரை தமுக்கம் மைதானத்தில் மாபெரும் வெற்றிவிழா நடைபெற்றது. 10. லட்சம் பொதுமக்கள் ரசிகர்கள் கலந்துக்கொண்ட ஒரே வெற்றிவிழா திரைப்படம் இதுதான். உலகிலேயே வேறு எந்த ஒரு திரைப்பட வெற்றிவிழாக்கும் இவ்வளவு லட்சம் மக்கள் கலந்துக்கொண்டதில்லை. மதுரையில் நடைபெற்றது போல் அதற்கு ஈடு இணையாக அதே பத்து லட்சம் மக்கள் கலந்துக்கொண்ட நாடோடிமன்னன் வெற்றிவிழா பேரரறிஞர் அண்ணா சார்பில் சென்னையில் எஸ். ஐ. ஏ. ஏ. திடல், மைதானத்தில். அண்ணாவின் தலைமையில் நடைபெற்றது. நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள்.அனைவருக்கும் கேடயங்கள் வழங்கி கெளரவித்தார்.பேரரறிஞர் அண்ணா அவர்கள். ...
நடனகுழு . ஸ்டண்ட் மாஸ்டர் நடிகர்கள் , ஒப்பனையாளர்கள் ஒளிப்பதிவாளர்கள்.எடிட்டிங் செய்பவர்கள். இப்படி தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும். அரை சவனில் மோதிரம் வழங்கப்பட்டது. அந்த மோதிரத்தில் எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்துக்கள் ஆங்கிலத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக பொறிக்கப்பட்டியிருந்தது. அனைவரது விரல்களிலும் மோதிரத்தை அணிவித்தார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். ..விழாவில் கலந்துக்கொண்டு புரட்சித்தலைவர் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள். .நாவலர் நெடுஞ்செழியன், என் வி நடராஜன், சத்தியவாணி முத்து. மு. கருணாநிதி, மற்றும் பல தலைவர்கள் மற்ற கலைஞர்கள் அனைவரும் புரட்சித்தலைவரைப் பாராட்டி பேசினார்கள். ..
பேரரறிஞர் அண்ணா அவர்கள் எழுந்து பேசிய பொன்வார்த்தைகள் சில இதோ
மாமரத்தில் எத்தனையோ பழங்கள் இருக்கின்றன. அதில் ஒரு பழம் மட்டும் தங்கம் போல் ஜொலித்தது. இந்த பழம் எங்கள் மடியில் விழாதோ என்று பலரும் மடியை விரித்தனர். காமராஜரும் மடியை விரித்தார் நானும் மடியை விரித்தேன். .அந்த பழம் என் மடியில் விழுந்தது. அதை எடுத்து நான் என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். அந்த பழம்தான் இதோ இங்கே வீற்றிருக்கும் புரட்சிநடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் என் இதயக்கனி என்று எம் ஜி ஆரை புகழ்ந்து பேசினார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். .அண்ணா அவர்கள் அப்படி கூறியதும் அவரின் பேச்சு கேட்டு மக்களின் கரவோலி அடங்க அரைமணி நேரம் ஆனது. பல பேர் புரட்சித்தலைவரைப் புகழந்து பேசினாலும் அங்கே அண்ணாவின் பேச்சுக்குத்தான் கரவோலி அதிகமாக கேட்டது. பேரரறிஞர் அண்ணா அவர்கள் ஒருவரை மனம் குளிர பாராட்டுகிறார் என்றால் அது புரட்சித்தலைவர் ஒருவரை மட்டும் தான் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று ஆகும். அதேப்போல் அண்ணாவின் பேச்சு கூடியிருந்த அனைவரையும் காந்தம் போல் இழுத்தது. புரட்சித்தலைவரும் அதேப்போல் அஅண்ணாவின் பேச்சைக் கேட்டு மயங்கியது உண்டு என்பதற்கு மற்றொரு நிகழ்வில் பார்ப்போம் ...... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 56. பேரரறிஞர் அண்ணா. .
புரட்சித்தலைவர் நடித்த பெற்றால் தான் பிள்ளையா படத்தின் படபிடிப்பு வாகினி ஸ்டியோவில் நடைபெற்றது. அப்போது பேரரறிஞர் அண்ணாவுக்கு உடல் நலம் குறைவு என்பதை கேள்வி பட்டு நுங்கம்பாக்கம் வில்லேஜ் ரோட்டில் உள்ள அண்ணாவின் வீட்டுக்கு சென்றார் புரட்சித்தலைவர். . எம்ஜிஆரை வரவேற்று சகஜமாக
உற்சாகமாக பேசினார் அண்ணா அவர்கள். .அப்போது அண்ணாவின் வளர்ப்பு மகன்கள் டாக்டர் பரிமளம் .இளங்கோ .மற்றும் சத்யாஸ்டியோ மானேஜர் பத்மநாபன். .புத்தூர் நடராஜன். ..அண்ணாவின் துணைவியார் ராணியம்மையார். .அனைவரும் அங்கு இருந்தனர். . அப்போது தேர்தல் பற்றி பேச்சு வந்தது. அப்போது அண்ணா அவர்கள் ஏற்கனவே நடந்த நிகழ்வு ஒன்றை நினைவூட்டினார். .அவை என்னவென்றால். .
அண்ணாவின் தலைமையில் 1967 ம் ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக திமுக ஆட்சியில் அமர்ந்தது. அப்போது நடந்த தேர்தலில். தேர்தல் பிரசாரத்திற்காக. ஒரு காரில் அண்ணாதுரை. .மாயாவரம் தொகுதியில் திமுக வேட்பாளராக தேர்தலில் நின்ற.
கிட்டப்பா அவர்கள் மற்றும் இராம அரங்ண்ணல். .மதியழகன், .. என் வி நடராஜன்...
ஆகியோர் விழுப்புரம் வழியாக திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தற்காக சென்று கொண்டியிருந்தார். . விழுப்புரம் அருகே தீடிரென்று வண்டிநின்று விட்டது. என்னப்பா
மணி ((டிரைவர் பெயர் ))வண்டி ஏன் நின்று விட்டது என்று கேட்டார் அண்ணா அவர்கள். பெட்ரோல் தீர்ந்து விட்டது. கொஞ்சமா இருந்தது அடுத்த டவுனில் போய் போட்டுக்கலாம். என்று நினைத்து இருந்தேன் அதுக்குள்ளே டாங்க் காலியாகி விட்டது. என்றார். கொஞ்சம் பொறுங்கய்யா எதாவது வண்டி வந்தா பெட்ரோல் வாங்கி வருகிறேன் என்றார். டிரைவர். .அப்போதெல்லாம் கட்சி மூத்த தலைவர்கள் கூட புடைசூழ செல்லாமல் தனி காரிலே சென்றனர். .கார் நின்று போன இடத்தில் இருபக்கமும் வயல்கள். .நிறைய பேர் விவசாய வயல்களில் வேலைச்செய்துக் கொண்டியிருந்தார்கள் ஆண்களும் பெண்களும் காரை சூழ்ந்துக்கொண்டனர். .காரின் பேனட்டின் மீது பறந்துக்கொண்டிருந்த திமுக கொடியை பார்த்து காரை சுற்றி சுற்றி வந்தனர். . எம்ஜிஆர் கொடி பறக்குது எம் ஜி ஆர் இருக்காரு பாரு என்று ஆரவாரம் செய்தனர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். .காரை விட்டு இறங்கி அவர்களை சந்தித்தார் அண்ணா. . இது அவர் வண்டிதான் எம் ஜி ஆர் எங்களுடன் இல்லை. .திருச்சி வரை உள்ள கூட்டத்திற்கு போக சொல்லி எம் ஜி ஆர் தான் எங்களை அனுப்பினார் என்றார். .அது உண்மை இஇல்லையென்றாலும் எம் ஜி ஆரை நன்கு அறிந்திருந்த கிராம மக்கள் தன்னை திருச்சி சென்று, வர எம்ஜிஆர் பணிந்தார் என்று அண்ணா கூறியது. .அவரது பெருதன்மைய காட்டியது.. எம்ஜிஆர் காரில் பெட்ரோல் தீர்ந்து போச்சா இதோ ஒரு நிமிடத்தில் பெட்ரோல் கொண்டு வருகிறோம். .என்று கூறி சில இளைஞர்கள் தங்களுக்குள் கொஞ்சம் பணம் போட்டு சைக்கிளில் வேகமாக சென்று ஒரு டின்னில் பெட்ரோல் வாங்கி கொண்டு வந்து கொடுத்தனர். அண்ணாவும் மற்றவர்களும் அதற்கான பணம் கொடுக்க முன் வந்த போது பணத்தை வாங்க மறுத்து விட்டார்கள் .அந்தளவுக்கு எம் ஜி ஆர் மீது ரசிகர்கள் உயிரை வைத்திருந்தார்கள். .இந்த நிகழ்வு அண்ணா கூறி முடித்தார். என்னை அவங்களுக்கு தெரியல உங்கள் பெயர்தான். தெரிகிறது என்றார் அண்ணாஅவர்கள்? ...இதற்கு புரட்சித்தலைவர் சொன்ன பதில் அடுத்த பதிவில் பார்ப்போம். ....... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 57. பேரரறிஞர் அண்ணா
அண்ணா அவர்கள் அப்படி பெருந்தன்மையுடன் கூறினாலும் எம் ஜி ஆர் அதை ஏற்க வில்லை. . அப்படி சொல்லாதீங்க அண்ணா உங்களை தெரியாமல் உங்கள் பேச்சைக் ரசிக்காமல் தமிழகத்தில் யாராவது இருக்க முடியுமா.?.என்றார். .எம்ஜிஆர் எந்த கூட்டத்தில் பேசினாலும் அவர் பேசியதும் கூட்டம் கலைந்து விடும். எனவே தேர்தல் பொதுக்கூட்டத்தற்காக தமிழகத்தில் எங்கு பேசினாலும் மற்ற எல்லா பேச்சாளர்களையும் பேசி முடித்தபின்னரே எம் ஜி ஆரை பேச அழைப்பார்கள். ஆனால் அண்ணா பேசும் கூட்டங்களில் எம் ஜி ஆர் பேசி முடித்த பின்னும் கூட்டம் கலைந்து போகாது. கூட்டம் தொடர்ந்து அப்படியேஇருக்கும். பேரரறிஞர் அண்ணா பேசி முடித்த பின்னர்தான் கூட்டம் கலையும். .தமிழக அரசியலில் வேறு எந்த தலைவருக்கும் இல்லாத பெருமை அண்ணாவுக்கு எம்ஜிஆருக்கு உண்டு. இருவருக்கும் உள்ள
ஈடுபாடு அலாதியானது.
முதலில் காங்கிரஸ் கட்சியில் எம்ஜிஆர் இருந்தார். நெற்றியில் விபூதி கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிவார். காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டியிருந்தார்..திமுக கட்சியில் நீங்கள் எப்படி சேர்ந்தீர்கள் என்று ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு எம்ஜிஆர் தந்த பதில். பேரரறிஞர் அண்ணா எழுதிய சந்திரோதயம். .பணத்தோட்டம் ஆகிய இரு புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பால் ஈர்க்கப்பட்டேன். பிறகு அண்ணாவின் பேச்சைக் கேட்டேன் காந்தம் மாதிரி அவர் பேச்சு என்னை இழுத்தது அப்படித்தான் நான் திமுகவில் சேர்ந்தேன். என்று விளக்கம் அளித்துள்ளார். பிற்காலத்தில் அண்ணாவின் இதயத்தில் எம்ஜிஆர் காந்தம் போல் பதிந்தார்.
1962 ம் ஆண்டு சென்னை எஸ் ஐ. ஏ. ஏ. திடலில் நிதி திரட்டும் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. மக்கள் திலகம் எம் ஜி ஆர் கீழே நின்றுக்கொண்டு நிதி வழங்குபவர்களை வரிசையாக நிற்க வைத்து மேடைக்கு அனுப்பிக்கொண்டியிருந்தார் மேலே ஒலிபெருக்கின் முன்பே கருணாநிதி நின்று கொண்டியிருந்தார் நிதி வழங்குபவர்கள் தங்கள் பெயரை சொல்லி பணத்தை தந்தனர். அவர்கள் பெயரை ஒலிபெருக்கியில் அறிவித்தார் கருணாநிதி. . அறிஞர் அண்ணா அந்த காணிக்கையை
பெற்றுக்கொண்டார் பேராசிரியர் அன்பழகன் கணக்கு புத்தகத்தோடு அமர்ந்து விபரத்தை எழுதிக்கொண்டார். .இதைத் தவிர ஐம்பது பேர் உண்டியலோடு மக்கள் மத்தியில் நிதி சேகரித்துக்கொண்டிருந்தனர். மாலை 6. 30. மணிக்கு தொடங்கி இரவு
9. 30. மணிக்கு நிதிவசூல் முடித்துக் கொள்ளப்பட்டது..அதன் பிறகு மக்கள் திலகம்
எம் ஜி ஆர் தனக்கு மதுரையில் மக்கள் தந்த 110. சவரன் தங்க வாளை பேரரறிஞர் அண்ணாவிடம் பாதுகாப்பு நிதிக்காக வழங்கினார்.
வரலாறு இனிமேல் தான் ஆரம்பம் அவசர படாதீங்க அடுத்த பதிவில் சந்திப்போம். ..... Thanks..........
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 58. பேரரறிஞர் அண்ணா
ஒவ்வொரு முறையும் வாத்தியாரின் வள்ளல்தனமும் மனிதநேயமும் இயற்கையானது பிறவியிலேயே ஏற்பட்டது என்பதற்கு பல உதாரணங்கள் ஆதாரங்கள் அவரிடம் உதவிபெற்றவர்களால் மட்டுமே அறிய முடியும், பாதுகாப்பு நிதிக்காக 110. சவரன் தங்க வாளை பேரரறிஞர் அண்ணாவிடம் கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட அண்ணா அவர்கள் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தங்கவாளை ஏலமிட்டார். பார்த்தால் பசி தீர்க்கும் பளப்பளப்போ கண்ணை பறிக்கும். தங்கத்தால் செய்யப்பட்ட வாள் இதிலே வெள்ளி இருக்கிறது. வேலைப்பாடுகள் நிறைந்திருக்கிறது. எம்ஜிஆர் வள்ளல் குணமும் வாங்குபவர்கள் மனமும் பார்ப்பவர்கள் இதயத்தில் மகிழ்வு உண்டாகும். முதல் முறையாக பதினோன்யிரம் அண்ணாவின் சொற்கள் கேட்டு எழுந்த ஆரவாரம் எல்லோருடைய இதயத்திலும் ஒலித்தது முடிவில் தங்கவாளை பதிமூன்றாயிரம் ரூபாய்க்கு வி. எஸ் இ. படநிறுவனத்தினர் ஏலத்தில் வாங்கினார்.பாதுகாப்பு நிதியாக எல்லாம் சேர்த்து 35. ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. இது தவிர தங்க நகைகள் பல ஆயிரக்கணக்கான மதிப்பு இருக்கும். .ஏலத்தில் எடுக்கப்பட்ட தங்கவாளை மீண்டும் விலைக்கொடுத்து மக்கள் திலகம் வாங்கினார். .அதனை கொல்லுரில் கோவில் கொண்ட மூகாம்பிகை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி விட்டார். தாயின் கையனைப்பில் தனயன் இருப்பது போல். தங்க வாள் மூகாம்பிகை அம்மன் கையில் இன்றும் உள்ளது. வாத்தியார் வள்ளல் தனத்துக்கு ஆதாரம் கேட்கும் சில மூடர்களுக்கு இதுவே ஆதாரம். செல்லுங்கள் மைசூர் மூகாம்பிகை ஆலயத்திற்கு இன்றும் அம்மன் கையில் இருக்கும் வாள் எங்கள் தெய்வம் பொன்மனச்செம்மல் தந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள் மனிதர்கள் இறக்கலாம் அவன் உடல் அழியலாம் ஆனால் அவன் செய்த தர்மமும் வள்ளல் தனமும் ஒரு நாளும் அழியாது அது இறைவனின் சன்னதியில் போய் சேரும் என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும் ஆதாரம் ஆகும் .
இந்தியா சீனா போர் நிதிக்காக மக்கள் திலகம் அப்போதைய பிரதமர் நேருவிடம் உடனே பாதுகாப்பு நிதி என்று 75. ஆயிரம் வழங்கினார். பணம் எம்ஜிஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ஜவஹர்லால் நேரு. . நேருவின் உயர்ந்த உள்ளத்தை அது காட்டியது. . அதற்கு பதிலளித்துப் மக்கள் திலகம் பேசிய வைர வரிகள் சில. நேருவின் பேச்சைக் கேட்டு நான் உருகினேன் என்றால் அது யார் தந்த மனப்பண்பு அறிஞர் அண்ணாவின் வழியில் நடப்பதால் பெற்ற சிறப்பல்லவா. ரூபாய் 75 ஆயிரம் தந்தது எனக்கு பெருமையல்ல. . என் தாய் தந்தை குடும்பத்தினருக்கும் பெருமையல்ல. பேரரறிஞர் அண்ணா அவர்களுக்கு உரிய பெருமையிது. வாழ்க்கையை சுகமாக கழிக்க வளமிருக்கிறது என்றாலும். நான் மக்கள் மன்றத்தில் வருவதும் மக்களுக்குக்காக போராட நினைப்பதும், மக்கள் கருத்தை எடுத்து சொல்ல விரும்புவதும் அறிஞர் அண்ணாவின் தொண்டன் என்பதற்காகவும். அவரது கொள்கை வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பத்திற்குக்காவும். கொடுத்தேன். என்றார் மக்கள் திலகம் இதைக்கேட்டு அண்ணாவும். திமுக சேர்ந்த அனைவரும் பூரிப்பு அடைந்தனர். இப்படி அண்ணாவும் எம்ஜிஆரும் ஒருவர் மீது ஒருவர் பற்று வைத்திருந்தார்கள்
மேலும் தொடரும். தொடரும்.... Thanks...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 59. பேரரறிஞர் அண்ணா
எம்ஜிஆருக்கும் எனக்கு இருக்கிற தொடர்பை நாடு அறியும். எம்ஜிஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வதாக கருதப்படும். உண்மைதானே எம்ஜிஆர் என்றால் அவர் தாங்கியுள்ள கொள்கை எது என்பதை நாடறியும். .முல்லைக்கு மணம் உண்டு. என்பதை கூறவா வேண்டும். . இந்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர் பார்த்தனர். ஆனால் அது என் மடியில் வந்து விழுந்தது, என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன். ( 1958. ம் ஆண்டு நாடோடிமன்னன் வெற்றிவிழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை ) ..
நமது எம்ஜிஆர் அவர்கள் பேசும் போது அழுகும் உள்ள உணர்ச்சியும் உள்ளதுதான் கவிதை என்று சொன்னார். இதை சொல்லும் போது நீங்கள் எல்லாம் கைத்தட்டி மகிழ்ந்தீர்கள். எதற்காக கைதட்டீர்கள் என்று எண்ணி பார்த்தேன். அப்போது தான் அவர் தன்னைப் பற்றி பேசினார் என்று புரிந்தது. அது அவர்க்கு மட்டுமே பொருந்தும் ( இரண்டாம் உலக தமிழ் மாநாடு 1968. ல் நடந்தபோது அண்ணாவின் புன்னகை உரை ) )
தமிழர் பண்பாடு அவதாரம் எடுத்து நா. மணக்க நடமாடிய நாவுக்கரசர் அறிஞர் அண்ணா அவர்கள். .நாடு இருந்தும் அதற்கு பெயரில்லாமல் தவிர்த்த ஒரு இனத்தின் மானத்தை காக்க தமிழ் நாடு என்று தான் பிறந்த மண்ணுக்கு பெயர் சூட்டிய தமிழ் தாயின் பண்பாட்டு தலைமகன் அறிஞர் அண்ணா ( அண்ணாவைப்பற்றி எம்ஜிஆர் கூறியது. )
புயல் மழையில் சேதம் வரும் இடங்களில் எல்லாம் எங்கள் புரட்சி நடிகர் உதவினை காணலாம். தன்னை தேடி வருகிறவன் கண்ணீரை துடைப்பவன் வள்ளல். .தன்னை தேடி வருகிறவனின் துன்பத்தை போக்குபவன் வள்ளல். . ஆனால் புரட்சிநடிகர் எம்ஜிஆர் அப்படி அல்ல சமுதாயத்தில் துன்பபடுகிறவன் எங்கே என்று தேடிபோய் அவன் கண்ணீரை துடைத்து கைக்கொடுக்கிற எம்ஜிஆர் வள்ளலுக்கெலாலாம் வள்ளல் ஆவார். ( 1961 . ம் ஆண்டு ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக் கோட்டு வழங்கும் போது அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள். )
பேரரறிஞர் அண்ணா மறைந்த போது மக்கள் திலகம் பேசிய மணிமொழிகள். .நெஞ்சு பெட்டகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டுள்ளனர் ..அண்ணா அவர்கள் புறத்தில் வேண்டுமானால் நம்மை விட்டு அகன்று இருக்கலாம். அகத்தில் நாம் சாகும் வரை இருந்துக்கொண்டுத்தான் இருப்பார். இருள் விலக அகல்விளக்காக இருந்ததாவது பயன் பட வேண்டும். என்பது பேரரறிஞர் அண்ணா எனக்கு கற்றுக் தந்த பாடம். எதையும் தாங்கும் இதயம் நம்மை விட்டு போகாமல் நமது இதயத்தில் தங்கி விட்டார்........ Thanks...