What an article, thousands of thanks to Raghavendra Sir for linking it here and our "Ashtanga Nmaskarangal" to Dr.A.V.ASHOK.
Subramaniam Ramajayam Sir, You are 100% correct, this article is a befitting reply to any critic of NT of any nature.
ANM
Printable View
நேற்றைய பதிவுகள் குறித்து அருமைச் சகோதரர் வாசுதேவன் அவர்களுடைய கருத்துரை:
அன்பு சகோதரரே!
நேற்று இரவுப்பணி முடித்துவிட்டு இன்று காலை வந்து நமது திரியைப் பார்த்தால் பேரின்ப அதிர்ச்சி. நேற்று ஆவண மழை என்றால் இன்று சுழன்றடிக்கும் சுனாமியாய் தங்கள் ஆவணப் பதிவுகள். பணிக்கு சென்று வந்த களைப்பு தங்கள் பதிவுகளைப் பார்த்ததும் பனி போல் நீங்கி விட்டது.
'சம்பூர்ண ராமாயணம்' தொட்டு 'தர்மராஜா' வரை ஆவணப் பதிவுகள் தர தங்களால் மட்டுமே முடியும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் காட்ட முடியாது. எக்காலத்து ஆவணங்களையும் நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தங்களால் மட்டுமே தந்து மகிழ வைக்க முடியும்.
'சம்பூர்ண ராமாயணம்' சுதேசமித்ரன் விளம்பரம் சூப்பர்.
'கூட்டம் அலைமோதும்' சுதேசமித்ரன் விளம்பரம் கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு தலைவர் என்றுமே சொந்தக்காரர் என்று பறைசாற்றுகிறது. தயாரிப்பாளர் திரு.m.a.வேணு அவர்களின் சந்தோஷக் கடித மடல் நமக்கு இன்பமூட்டுகிறது.
கபடமற்ற பரதனின் சகோதர பக்தியுடன் உலா வரும் விளம்பரம் கலக்கல்.
படித்தால் மட்டும் போதுமா விளம்பரங்கள் பக்கா. 75-ஆவது நாள், 14 ஆவது வாரம், நூறாவது நாள் விளம்பரங்கள் ஆணித்தரமான ஆவணங்கள். சாதனைச் செப்பேடுகள். பிரமிப்பான வெற்றியை கொண்டாடச் செய்யும் அற்புத ஆதாரங்கள்.
'வாழ்க்கை' விளம்பரங்கள் 'வாழ்க!' என்று தங்களை வாழ்த்தச் செய்யும் விளம்பரங்கள். பேயோட்டம் ஓடிய படமாச்சே!
'பசும்பொன்' விளம்பரங்கள் பசும்பொன்.
'புனர்ஜென்மம்' விளம்பரங்கள் எத்தனை ஜென்மமும் போற்றத்தக்கவை. தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை... பம்மலாருக்கு மிஞ்சிய ஆவணக் காப்பரும் இல்லை.
'தினத்தந்தி' 'இன்று முதல்' விளம்பரத்தில் தலைவர் நிற்கும் ஸ்டைல் அதி அருமை.
'அமரகாவியம்', 'தர்மராஜா' விளம்பரங்களும் நன்று.
உழைப்பவர் திருநாளில் மாணிக்கவாசகம் உழைப்பவர் பெருமையை உலகிற்கு பறைசாற்றி உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார்.
தெய்வீகத் தம்பதியர் புகைப்படம் கோவிலில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது. உணர்வுகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
இனம் புரியாத சோகத்துடன், அதே அளவு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தங்கள் பதிவுகளில் மனம் புதைந்து கிடக்கும்
தங்கள் சகோதரன்,
வாசுதேவன்.
தங்களின் பாராட்டு மழைக்கு எனது மனமார்ந்த நன்றிகள், வாசு சார்....!
எங்கே....?!
சூப்பர்ஹிட் காவியமான "சம்பூர்ண ராமாயணம்(1958)" முதல் வெளியீட்டில், ஷிஃப்டிங் செய்யப்படாமல் நேரடியாக, அதிகபட்சமாக மதுரை 'ஸ்ரீதேவி' திரையரங்கில் 165 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. பின் 'ஸ்ரீதேவி'யிலிருந்து 'சிட்டிசினிமா'விற்கு ஷிஃப்ட் செய்யபட்டு, அங்கே வெள்ளிவிழாவையும், 200 நாட்களையும் பூர்த்தி செய்தது. நேரடியாக நூலிழையில் மதுரை 'ஸ்ரீதேவி'யில் வெள்ளிவிழாவைத் தவறவிட்டது "சம்பூர்ண ராமாயணம்". இதே போன்று கோயில் மாநகரில் நேரடி ஓட்டத்தில் நூலிழையில் வெள்ளி விழாவைத் தவறவிட்ட காவியங்கள் இன்னும் மூன்று உள்ளன. அவை:
மனோகரா(1954) : ஸ்ரீதேவி : 156 நாட்கள்
பாசமலர்(1961) : சிந்தாமணி : 164 நாட்கள்
["பாசமலர்", சென்னை 'சித்ரா'வில் வெள்ளிவிழா கண்டது]
திருவிளையாடல்(1965) : ஸ்ரீதேவி : 167 நாட்கள்
["திருவிளையாடல்", சென்னை 'சாந்தி', 'கிரௌன்', 'புவனேஸ்வரி' ஆகிய மூன்று அரங்குகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது]
"பலே பாண்டியா(வெளியான தேதி : 26.5.1962)"வும், "படித்தால் மட்டும் போதுமா(வெளியான தேதி : 14.4.1962)" போலவே நடிகர் திலகம், உலக வெற்றி உலாவில் இருந்தபோது வெளியான திரைக்காவியம். உலக உலா முடித்து அவர் தாயகம் திரும்பிய பின்னர் வெளியான முதல் திரைக்காவியம் வடிவுக்கு வளைகாப்பு(வெளியான தேதி : 7.7.1962).
"வாழ்க்கை" திரைக்காவியம், சென்னை 'அலங்கார்' திரையரங்கில், 14.4.1984 முதல் 13.7.1984 வரை 91 நாட்கள் தினசரி 3 காட்சிகளில் ஓடியது. 14.7.1984 அன்று "புதுமைப் பெண்" திரைப்படம் அலங்காரில் தினசரி 3 காட்சிகளில் வெளியானது. இதனால் 14.7.1984 லிருந்து 22.7.1984 வரை ஒன்பது நாட்கள் மட்டும் "வாழ்க்கை" ,காலை 9:15 மணிக் காட்சியில் ஓடி 100 நாட்களைத் தொட்டது. 'ஸ்ரீகிருஷ்ணா'விலும், 'வசந்தி'யிலும் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களைக் கடந்தது.
Sivaji made transcendent art of popular experience and and everyday "show":dinasari moondru katchigal, Sani-Gnayiru naangu katchigal"
(Daily 3 shows, Saturday-Sunday 4 shows). From the mid-1950s to the mid 1970s, Sivaji transformed the theatre in Tamil Nadu into a "house full" of
applause and rapture of countless men and women dazzled by their dear and revered Nadigar Thilagam.
This proves again who is real Vasool King and who pulled the people to the theater. Thank you Dr. A.V. Ashok sir for your affection to our NT and Tamil.
Cheers,
Sathish
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
காவல் தெய்வம்
[1.5.1969 - 1.5.2012] : 44வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 1.5.1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5734-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
கல்தூண்
[1.5.1981 - 1.5.2012] : 32வது துவக்கதினம்
பொக்கிஷப் புதையல்
கிடைத்தற்கரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/...althoon1-1.jpg
உயரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
Dear Mr.Plum,
The dates that were intended for Sivaji Productions Film with Balu Mahendra was allotted(wasted??) to Needhiyin Nizhal to give a boost for sagging Prabhu's career.
It is Mr.Shanmugam to be held responsible for most of the later years mis-adventures .
Dear Mr.Raghavender,
My whole -hearted thanks to Dr.Ashok article which is extensive ,well-researched with chosen words and comprehensive.do you need Translation in Tamil?
I can help you.
Warm Regards
Gopal
Pammalaar Sir,
My sincere thanks for enriching my contributions.Chamundi Gramaniar was fabulous.It was done for S.V.subbiah for gratis .S.V.subbiah mentioned that he wants to be born as Dog in his next birth in the house of acting God. S.V .Subbiah started Ponnonjal but in the mid-way K.S.Kutralingam took it over.(Avan oru charitram,Oorukku oru oillai).Jayakanthan-Sivaji combo was to materialise in 1965 but Yarukkaga azhuthan intended to be with Sivaji-savithri in the direction of bhimsingh was dropped.
Nagesh acted in the movie later as the protogonist.
jayakanthan mentioned in a meeting that All Tamils would be sivaji fans atleast for a minute in their life and he would be proud if sivaji were his fan too.He attended 150th Movie function.
In what way this is connected to discussion on NT? What is the ulterior motive in dragging the members of Sivaji family for such a kind of happening? His family members are the most appropriate persons to look after his career and it is their will and right. I humbly beg the members to stop this nonsense of blaming Sivaji Family members.
சுமதி என் சுந்தரி-1971
எழுபதுகளில் என் மீசை அரும்பும் பருவத்தில் ,என் சக வயது தோழர்களுடன் திரும்ப திரும்ப பார்த்து ,அதை பற்றி உரையாடி(எதை பற்றி என்று பிறகு)மகிழ்ந்து ,லயித்த நகைச்சுவை தெளித்த காதல் காவியம்(ஆங்கிலத்தில் ரொமாண்டிக்-காமெடி).ரோமன் ஹாலிடே என்ற படத்தை தழுவிய வங்காள மூலத்தில்(பிரசாந்த்)இருந்து கோபு-சி.வீ.ராஜேந்திரன் இணைப்பில் உருவான ரசிக்கத்தக்க படம்.(அசல் பெயர் விட்டில் பூச்சி??)
நடிகர் திலகம் ,நடிப்பில் முன் மாதிரியாய் இருந்தது போல் உடையில்,சிகை அலங்காரத்தில் ,ஸ்டைலில், அனைத்து வயதினருக்கும் (முக்கியமாய் கல்லூரி இளைஞர்கள்) முன் ரோல் மாடல் அண்ட் டிரென்ட் செட்டர்.ஏன் இந்தியாவுக்கே எனலாம்(ஐம்பதுகளில் வட இந்திய பத்திரிகைகள் அவரை நன்கு உடையணிந்த இந்திய ஆண் நடிகராய் தேர்வு செய்து மகிழ்ந்தன. இந்த படத்தில் மிக மிக அழகாய் (படத்தில் ஜோசிய காரன் சொல்வது போல்)
அழகான சிகை அலங்காரம்,உடைகள் என அதகளம் புரிவார்.ஜெயலலிதா மிக அழகாய் தோன்றி பொருத்தமான ஜோடியாய் காதல் காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பார். நடிகர் திலகம் சற்றே தூக்கி சடாரென்று நெற்றிக்கு இறங்கும் நிறை குடம் பாணி ஹார் ஸ்டைல்.வெளுறிய காவி நிற சட்டை ,சிவப்பு தொப்பி,பிரவுன் சட்டை ,கட்டம் போட்ட ஹாட்,ஜெர்கின்,லெதர் ஜாக்கெட்,கிரே சட்டை,கட்டம் போட்ட பிரவுன்,மஸ்டர்ட் சட்டை,லவேண்டேர் டி ஷர்ட்,காகி ஷார்ட்ஸ்,அருமையான கூலிங் கிளாஸ், வைட் அண்ட் வைட் (சிவப்பு காலர்),அருமையான இரவு உடைகள்,கிரே பான்ட்,என்று பொருத்தமான ஸ்டைல் ஆன உடைகளில் தோன்றி இள மனசுகளை அள்ளோ அள் என்று அள்ளுவார்.ஜெயாவும் பாந்தமான மித வர்ண புடவைகளில் ஜொலிப்பார்.
ஒரு ஸ்டாம்ப் சைஸ் கதை.மிதமான ,இதமான வசனங்கள்.ஆரம்பமே களை கட்டும்.டைட்டில் ஓடும் போதே ஹாலிவுட் நடிகை புகைப்படங்களை பட கதையமைப்புக்கு பொருத்தமாய் ஓட விடுவார்.ஒரு காதல் பாடல் சம்பந்தமே இல்லாத நபருடன் எடுத்த எடுப்பிலேயே நாயகி பாடி ரசிகர்களை அதிர வைப்பார்.சாரி சொல்லி கதா நாயகி பாடல் இடையில் திரும்பும் போது ரசிகர்கள் மூச்சு விடுவார்கள்.அதிலிருந்து கதை பயணிக்கும் பாணி தமிழ் ரசிகர்களுக்கு புதிது.சி.வீ.ஆர் உடை நிறத்திலேயே கலர் சைகாலஜி உபயோகித்து காட்சியின் தரத்தையே மாற்றுவார்.(உடை-ராமகிருஷ்ணன்)
பாஸ்கர் ராவ்-தம்பு காம்போ இதமாய் ஒளிப்பதிவை குளுமையாய் தரும்.
நடிகர் திலகம் நடிக்காமல் ரெஸ்ட் எடுப்பார்.அதுதான் இந்த படத்தையே தூக்கி நிறுத்தும்.சினிமா பற்றியே தெரியாமல் டீ எஸ்டேட் டையே உலகமாய் கொண்டிருக்கும் மது என்ற இளைஞனாய் ....ஆரம்ப காட்சியில் இருந்து ஜாலியாய் நடிப்பார். தங்க வேலு தவறாய் அர்த்தம் செய்து வீட்டில் குளிக்க சொல்லி மிரட்டும் இடத்தில்(மூன்று முறை டவல் உடன் திரும்பும் காட்சி),முதலிரவு காட்சியில் மிரளும் போது,பொட்டு வைத்த முகமோ (எஸ்.பீ.பாலு முதல் NT பாடல்) மிதமான இளமை கொஞ்சும் ஸ்டைல்(தரையோடு வானம்-புகழ் பெற்ற ஸ்டில்),ஏய் புள்ளே பாடலில் ஆட தெரியாதவன் போல் ஆடுவது,தொடர்ந்த இளைஞர்களை பைத்தியமாக்கிய பலூன் காட்சி, பூவின் ஒரு இதழை சுவைத்து காமத்தை அழகாய் வெளிப்படுத்தும் காட்சி,(வசந்த மாளிகை ப்ளம் ஞாபகம் வருமே!!),சட்டென்று ஜெயலலிதா அழும் போது எல்லா திசைகளிலும் அப்பாவியாய் பார்ப்பது,கிளி-ஜோசிய காட்சி, என்னுடைய பேவரிட் ஒருதரம் (காலை ஸ்டைல் ஆக தூக்கி நிற்பது,பௌலிங் ஆக்க்ஷன்) என்று இந்த பாணி படத்திலும் தான் தான் கிங் என்று நிரூபிப்பார்.ஒருதரம் பாடல் கலாட்டா கல்யாணம் படத்திற்காக உருவானது.ஆனால் மழை வந்து படமாக்க முடியாமல் இந்த படத்தில் உபயோகித்தனர்.
விஸ்வநாதன் இசையில் இளமையை கொட்டுவார்.ல ல லா ஹம்மிங் ,ஹும் ஹம்மிங் என்று கலக்குவார்.எனக்கு மிக மிக பிடித்த நடிகர் திலகத்தின்
லைட் movie .(மற்றவை ராஜா,என்னை போல் ஒருவன்,எங்கள் தங்க ராஜா)
இந்த படம் இளைஞர்களை குறி வைத்து எடுக்க பட்டதால்,நடுத்தர வயதினர்,முதியவர் என மற்றோருக்கு அதிக நாட்டம் வரவில்லை.இளைஞர்கள் இக்காலம் போல் பணப்புழக்கம் கொள்ளாத காலம்.அதனால் மிதமான வெற்றியை அடைந்த இளமை திருவிழா இப்படம்.
Dear Mr.Raghavender,
Yes.I stand corrected and accept that it has no relevance.No need to drag the other members of the family.
Gopal
டியர் பம்மலார்,
'சம்பூர்ண ராமாயணம்' , 'வாழ்க்கை' ,'பசும்பொன்' , 'புனர்ஜென்மம்' . 'அமரகாவியம்', 'தர்மராஜா'
ஆவணங்கள் மற்றும் விளம்பரங்கள் என்று அணிவரிசைகள் கலக்கல். நன்றி.
தொலைக் காட்சியில் நடிகர் திலகத்தின் படங்கள்
இந்த வாரம்
சத்யசுந்தரம் – மே 2 – மாலை 6.30 மணி – மெகா 24
நல்லதொரு குடும்பம் – மே 5 – மாலை 6.30 மணி மெகா 24
மன்னவன் வந்தானடி – ஜெ.மூவீஸ் – -03.05.2012 காலை 10.00 மணி
பாலாடை – ஜெ.மூவீஸ் – 05.05.2012 – காலை 10.00 மணி
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு – ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் – 03.05.2012 பிற்பகல் 1.00 மணி
Dear Pammalar sir,
Kalthoon still Arumai
Great design Balaa.Superb.
Pottu vaitha Mugamo
http://youtu.be/op4GivMzxNY
இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகம் அணிந்த சட்டையின் டிசைன் மிகவும் பாப்புலர். அந்தக் காலத்தில் சுமதி என் சுந்தரி சட்டை என்றே துணிக் கடைகளில் வைத்திருப்பார்கள். விலை அதிகம். அப்போதைய சூழ்நிலையில் வாங்க முடியாமல் நண்பர்கள் போடும் போது ஆசையுடன் பார்த்ததுண்டு.
எப்படியெல்லாம் தலைவர் நம்மையெல்லாம் படுத்தியிருக்கிறாரய்யா...
Watch Nadigar Thilagam bowling in the middle of the song... superb cinematography.
http://youtu.be/-ZaHoXyLkpI
இந்தப் பாடல் காட்சியின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை என்றால் கொஞ்ச நஞ்சமல்ல.. சித்ரா தியேட்டரில் இந்த பாடல் காட்சியின் போது திரையைப் பார்க்காமல் ஆடியன்ஸைப் பார்ப்போம் ... அத்தனை முகமும் பளிச்சென்று, அதுவும் முகத்தில் நடிகர் திலகத்தின் ஸ்டைலை ரசிக்கும் சந்தோஷம் கொப்பளிக்க அவர்கள் தம்மை மறந்து பார்ப்பதைப் பார்ப்பதற்காகவே பல முறை பார்ப்போம்....
அதுவும் அந்த பந்து வீசும் ஸ்டைல்.... கொன்னுட்டார்யா.,.. சித்ரா தியேட்டரில் ஓடிய நாட்கள் அத்தனையும் கிட்டத் தட்ட பார்த்த நிறைவு .... கொஞ்ச நாட்களைத் தவிர... இனிமேல் வருமா அந்தக் காலம்.
நடிகர் திலகம் நடித்து என்னுடைய பட்டியலில் டாப் டென்னில் முதல் இடத்தைப் பிடித்த படம்...
இதுக்கப்புறம் தான்யா மத்ததெல்லாம்....
என்ன ரொமான்ஸ்... என்ன டிரெஸ் ... என்ன கலர்.... என்ன ஸ்டைல் .... என்ன இளமை .... இதற்காகவே இப்படத்தை 100க்கும் மேல் பல தடவை பார்த்திருப்பேன்...
தேங்க் யூ ... கோபால் ....
தேயிலைத் தோட்டத்தில் துள்ளி ஆடும் ஜெயலலிதா, முணுமுணுத்துக் கொண்டே கோப நடை நடக்கும் நடிகர் திலகம், பின்னணியில் பிரம்மாண்ட தேயிலைத் தோட்டங்கள், தேயிலை பறிக்கும் பெண்கள், நிர்மலமான வானம், பளிச்சென்ற வெளிச்சம், சூழ்நிலையைக் கண்முன்னே நிறுத்தும் மெல்லிசை மன்னரின் இசை, சுசீலாவின் குரலில் வரிகளை மிஞ்சும் ஹம்மிங்கின் சிறப்பு, அதுவும் குறிப்பாக பாடல் முடியும் போது அப்படியே லாங் ஷாட்டில் கேமிரா பின்னோக்கிப் போவதும், அந்த ஹம்மிங் அப்படியே fade ஆகிக் கொண்டே வருவதும், மக்கள் மாலை ஆனதும் வீடு நோக்கிப் போகும் வேகமும்,,, நாமே தேயிலைத் தோட்டத்திலிருந்து மனமில்லாமல் வீடு போவது போல் நமக்குள் ஏக்கத்தை உண்டாக்கும் காட்சி .....
பாடல் ஆரம்பிக்கும் முன் மெல்லிய அளவில் ஜீப்பின் ஓசை, தொடர்ந்து ஹம்மிங் மட்டும் ஒலிப்பது, பின் vibrafone / santhoor கருவிகளின் துணையுடன் சுசீலாவின் ஹம்மிங்கில் பாடல் ஆரம்பிப்பதும் ....
ஓராயிரம் நாடகம் ஆடினாள் ... இந்தப் பாடலுக்காக தனியாக 100 முறை கூட பார்க்கலாம்...
http://youtu.be/hPLTZHgQxWQ
தலீவா,
நானும் சு.சுந்தரி,சிவகாமியின் செல்வன் படங்களை நினைச்சா அரை டௌசெர் போட்ட காலத்துக்கு ஓடி விடுவேன்.நீ சொன்னா மாறி ஓராயிரம் ஹம்மிங் அலம்பல். அடுத்த தபா வர சொல்ல ,இந்த படம் போடு தலீவா nt fans சார்பா. பசங்களோடு பேஜார் ஆய்கிடுவேன் பலூன் சீன் பாக்க சொல்லா.நம்ம சாமி சொம்மா மம்மூத ராசா கணக்கா இருக்கும்லே.
அன்பு கோபால்
[QUOTE=RAGHAVENDRA;853683]Pottu vaitha Mugamo
http://youtu.be/op4GivMzxNY
இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகம் அணிந்த சட்டையின் டிசைன் மிகவும் பாப்புலர். அந்தக் காலத்தில் சுமதி என் சுந்தரி சட்டை என்றே துணிக் கடைகளில் வைத்திருப்பார்கள். விலை அதிகம். அப்போதைய சூழ்நிலையில் வாங்க முடியாமல் நண்பர்கள் போடும் போது ஆசையுடன் பார்த்ததுண்டு.
Ragavendra Sir,
I was lucky at that time to buy this design and worn. We used to be crazy at those young age for this kind of things. Thanks for the lovely message and everyone loves your articles.
ANM
திருவாளர் கோபால் அடிகளே, நன்றி..!
நமது திரியின் எட்டாம் பாகத்தில், கடந்த 2011 ஜூலை முதல் வாரத்தில், நமது நடிகர் திலகத்தின் 150வது படவிழா பற்றிய அருமையான பதிவுகள் அம்சமாக அளிக்கப்பட்டுள்ளன.
தங்களின் ஆசைக்கிளியை ["சுமதி என் சுந்தரி "தான்] - அசடு வழியாமல் - மிக அழகாகக் கொஞ்சி இருக்கிறீர்கள்....!
எமது நேற்றைய பதிவுகளுக்கு நமது வாசு சார் வழங்கியுள்ள ரெஸ்பான்ஸ்:
நமது திரியின் காவலர் அளித்த 'காவல் தெய்வம்' சாமுண்டி விளம்பரம் கன கம்பீரம். அதே போல திரியின் கல்தூண் வழங்கிய திரையுலக கல்தூண் வேலுடன் நிற்கும் நிழற்படம் நிஜமாகவே நிலை குலைய வைக்கிறது. அடடா! என்ன ஒரு கம்பீரம்!
அற்புத இரண்டு பதிவுகளும் இமாலய சிகரங்கள். நன்றி! நன்றி! நன்றி!
என்னுடைய ஈ மெயில் பதிவுகளை நடிகர் திலகம் திரியில் மறக்காமல் பதித்து வரும் அன்பு பம்மலார் சாருக்கு நன்றி!
vasudevan.
தங்களுக்கு எனது ஆனந்தக்கண்ணீர்ப்பெருக்குடன் கூடிய அன்பான நன்றிகள், வாசு சார்....!
The amazing article authored by Dr.A.V.Ashok is simply outstanding ! His devotion towards Nadigar Thilagam - which is wholly proven in this write-up - is second to none. His analysis about the greatest actor of the universe is grand and his command over the colonial language demands respect.
Hats Off & A Standing Ovation to Dr.A.V.Ashok for this piece....!
Thanks, Raghavendran Sir for sharing....!
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
கல்தூண்
[1.5.1981 - 1.5.2012] : 32வது துவக்கதினம்
பொக்கிஷப் புதையல்
75வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 14.7.1981
http://i1110.photobucket.com/albums/...GEDC5735-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.8.1981
http://i1110.photobucket.com/albums/...thoon100-1.jpg
குறிப்பு:
"கல்தூண்", 1981-ம் ஆண்டின் ஒரு சூப்பர்ஹிட் காவியம்.
பக்தியுடன்,
பம்மலார்.
நன்றி
post edited
திரு ராகவேந்தர் அவர்களே,
நீங்கள் என்னை குறிப்பிட்டிருந்தால் ,அதற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு உண்டு.பொறுப்பற்று,அவருடைய குடும்ப உறுப்பினர்களை நான் விமர்சிப்பது போல் குறித்துள்ளீர்கள்.மிக வருந்ததக்கது. எனக்கு எந்த நோக்கமும் இல்லை.நான் ஒரு சாதாரண n r i . நடிகர்திலகம் நடிப்பை வெறி தனமாய் நேசிக்கும் சாதா ரசிகன். காந்தி உட்பட எல்லா பொது வாழ்வு சம்பத்த பட்ட எல்லோரும் பலவித விமர்சனங்களுக்கு உட்படுவது தவிர்க்க முடியாதது. குடும்பத்தினர் வீட்டிற்குள் இருந்தால் அவர்களை இழுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.ஆனால் அவர்கள் ,சம்பந்த பட்ட பிரபலங்களின் பொது வாழ்வில் பங்கு வகித்தால் ,அவர்களும் சேர்ந்தே விமர்சனத்திற்கு ஆளாவார்கள். இது தவிர்க்க முடியாதது.பண்பு குறைவான எந்த விமர்சனங்களும் இது வரை நமது திரியில் இல்லை. எந்த விதமான படங்களில் நடிப்பது என்பது சம்பந்த பட்டவர் உரிமை என்றால் ,அது பொது பார்வைக்கு வணிக நோக்கில் வரும் போது, அதை விமர்சிக்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு.அதன் தயாரிப்பை குறை சொல்லும் போது ,சம்பத்த பட்டவர்களின் தார்மிக பொறுப்புகள் ,கேள்விக்கு உள்ளாகும்.நமது திரியின் சிறப்பே ,அதன் பொதுமை குணங்களும்,பன்மை தன்மையும்,மிக மிக உண்மையாய் சீர்தூக்கி நடிகர்திலகம் சிறப்பை ,உலகுக்கு உணர்த்துவதுதான்.
இது வரை,அதிக பட்சம் தங்களால் தனிப்பட்ட முறையில் தாக்க பட்டு காயமடைந்தவன் நான்.ஆனாலும்.பொது நன்மை கருதி,மற்றவர் சுட்டும் போது,மன்னிப்பு கேட்க தவறியதில்லை. ஆனால் ,வாசுதேவன் முதல் தாங்கள் வரை மிக மிக தொட்டார்ச்சுருங்கி தனமாக எதிர்-வினை புரிவதால்,
எனது எந்த பதிவையும் நீக்கும் உரிமையை மாடரட்டர் களுக்கு அளித்து நான் நிஜமாகவே ஒதுங்கி நிற்கிறேன்.இது வரை அவ்வப்பொழுது என்னை அறிந்து பாராட்டிய நடிகர் திலகம் பக்தர்களுக்கு நன்றி.
விடை பெறுகிறேன்
கோபால்
நடிகர் திலகத்தின் படங்களே அவருடைய படங்களக்கு எதிரி போல், நடிகர் திலகத்தின் ரசிகர்களே ரசிகர்களுக்கு எதிரியாக இருப்பது வேதனை தருகிறது. மற்ற எந்த நடிகர் ரசிகர்களிடம் இந்த எதிரி மனத்தத்துவம் இருப்பதில்லை. நாம் எல்லாம் ஒரு குடும்பம் போல. செய்த தவறுகளை மறந்து , மன்னித்து மீண்டும் உங்கள் படைப்புகளை / எழுத்துகளை காண தினமும் காத்திருக்கும் ..........................................
WE DON'T WANT TO MISS YOU ANY ONE FROM THIS THREAD
My sincere request to EVeryone, Please Come back
அ. பாலகிருஷ்ணன்
what is happening here?
What thread you guys referring to ? Pls come to the point directly.
joe, probably this is being referred but there are 0 replies thus far..
திரு.ராகவேந்திரன் அவர்களிடம் தொலைபேசியில் பேசியபிறகு
The negative influence of his family on Sivaji Ganesan's career as a supreme actor - என்ற பெயரில் புதிய திரி தொடங்கப்பட்டிருப்பது அறிந்தேன். இது தேவையற்ற ஒன்று. உடனே இத்திரியை நீக்கிட வேண்டுகிறேன்.