'ஹேய் மேரே பேட்டே'('ஆ கலே லக் ஜா') "கேளாய் மகனே கேளொரு வார்த்தை"
http://www.youtube.com/watch?feature...&v=XHtv6KWsT5M
Printable View
'ஹேய் மேரே பேட்டே'('ஆ கலே லக் ஜா') "கேளாய் மகனே கேளொரு வார்த்தை"
http://www.youtube.com/watch?feature...&v=XHtv6KWsT5M
அன்புள்ள முரளி சார், வாசுதேவன் சார், பம்மலார் சார், ராகவேந்தர் சார், கோபால் சார், சந்திரசேகர் சார், மற்றும் சதீஷ் சார், எனது வேண்டுகோளை ஏற்று "உத்தமன்" திரை காவியத்தைப் பற்றிய தங்களது மேலான பதிவுகளை வழங்கியமைக்கு மிக்க நன்றி.
அன்பு பம்மலார் சார்.
உண்மையில் எதிர்பார்க்கவில்லை, இப்படி வந்து அசத்துவீர்கள் என்று. நமது திரியில் 'உத்தமன்' விளம்பர ஆவணத்தை முதல் முறையாக பதிவிட்டு பெருமை சேர்த்துள்ளீர்கள். அதிகமதிகம் நன்றிகள். தினத்தந்தியின் முதல் பக்கத்தில் கால்பக்க விளம்பரமாக வந்த, மதுரை நியூ சினிமாவில் 100-வது நாள்' விளம்பரத்தையும் பதிவிட்டு அசத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். 'தொடரும்' என்ற தங்கள் வாசகம் நம்பிக்கையூட்டுகிறது.
அன்பு முரளி சார்,
மதுரையில் உத்தமன் அட்டகாசத்தை அருமையாக விவரித்துள்ளீர்கள். பாடல் வரிகளை சிறப்பாக விளக்கியுள்ள விதம் அருமை. வழக்கம்போல மதுரையில் ஏ.சி.அரங்குகள் தோன்றிய விதம், அதில் இந்திப்படம் பார்த்த அனுபவம், நியூ சினிமாவில் உத்தமனின் வெற்றிநடை. இலங்கையில் அதன் அசாதாரண சாதனை என அனைத்து விவரங்களும் சூப்பர். இவற்றுக்காகவே தங்களை அடிக்கடி அழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அன்பு கோபால் சார்,
சந்திரசேகர் அவர்களைப்போலவே நானும் தங்களின் உத்தமன் வெளியூர் அனுபவத்தை எதிர்நோக்கியிருக்கையில், சென்னை சாந்தியில் முதல் நாள் அனுபவங்களைத் தந்து அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி. (எனக்காக வாதாடியதற்காகவும் நன்றிகள்).
அன்பு ராகவேந்தர் சார்,
உத்தமன் வெளியீட்டின்போது, சாந்தியில் தங்கள் அனுபவங்களின் விவரிப்பு மிகவும் அருமை. அந்தப்படத்தை ஏழு முறையும் கிரௌன் திரையரங்கில்தான் பார்த்தேன் என்றாலும், சாந்தியின் அலங்காரங்களை வெளியில் நின்று ரசித்த அனுபவம் உண்டு. அப்போது எடுக்கப்பட்ட கருப்புவெள்ளை புகைப்படம் ஒன்று, அண்ணன் ஒரு கோயில் காலத்தில் சாந்தியில் நண்பர்கள் மத்தியில் வலம் வந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
அன்பு சந்திரசேகர் சார்,
நமது பம்மலார் அவர்கள் நம் அனைவர் மீதும் சமமாக அன்பு செலுத்துபவர். நம்மில் யார் அழைத்தாலும் வருகை தருவார். இம்முறை எனது அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நம் அனைவர் சார்பிலும் நன்றிகள்...
அன்புள்ள வாசுதேவன் சார்,
உத்தமன் படத்தின் முதல்நாள் கடலூர் அனுபவம் நன்றாக இருந்தது. சற்று தேக்க நிலையின்போது வெளியான படமாதலால் முதல் நாளன்று சென்னை, மதுரை, திருச்சி நகரங்கள் தவிர மற்ற ஊர்களில் துவக்கம் கொஞ்சம் மந்தமாக இருந்தது உண்மை. பின்னர் பிக்-அப் ஆனது. நீங்கள் குறிப்பிட்ட அந்தக்காட்சி குடும்பத்தோடு பார்க்கும் காட்சியல்ல என்பதால் நீங்கள் நெளிந்திருக்க வாய்ப்புண்டு.
படத்தின் ஸ்டில்கள் அனைத்தும் அருமை. நன்றிகள்...
தலைவரே,
என் பட அனுபவங்கள் 1964- 1966- நெய்வேலி(பெற்றோர் ),ஆத்தூர் (தாத்தா வேலை பார்த்த ஊர்)சார்ந்தும்,
1966-1968- நெய்வேலி,கடலூர் (தாத்தா மாற்றல்), 1968- 1975- நெய்வேலி,கும்பகோணம் சார்ந்தும் (ஒரே ஒரு மதுரை exception,கொஞ்சம் திருச்சி ),
1975-1993- நெய்வேலி,சென்னை (படிப்பு,மேற்படிப்பு,வேலை) சார்ந்துமே வரும். 1991-1994 நிறைய ஊர்கள் போனதால் சேலம்,ஈரோடு ,வேலூர்,பெங்களூர் ,கோவை நிறைய பார்த்துள்ளேன்.1994 லிருந்து இந்தியா டாடா காட்டியதால் விடுமுறையில் சென்னையில் அவ்வப்போது ஒன்றிரண்டு. மற்றதெல்லாம் சிங்கப்பூர் தான்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
தங்கள் பதிவுகள் அனைத்துக்கும் மிக்க நன்றி. மௌனம் கலைத்து திரிக்கு திரும்பியதற்கு வாழ்த்துக்கள். 'உத்தமன்' வெள்ளிவிழா விளம்பரத்துக்கு நன்றிகள்.
நடிகர்திலகம் நினைவு இல்லம் சம்மந்தமாக எனது பதிவுகளில் (நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல) நடிகர்திலகத்தின் குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியோ அல்லது குறை சொல்லியோ நான் எதையும் எழுதவில்லை. எனது பதிவுகள் நீக்கப்படாமல், திருத்தப்படாமல் அப்படியேதான் இருக்கின்றன. உங்கள் குற்றச்சாட்டுகளைப் படித்துவிட்டு யாரேனும் என் பதிவுகளைப் படித்தால், இதில் ஆட்சேபிக்க என்ன இருக்கிறது என்று வியப்படைவார்கள். சரி, அப்படியே நீங்கள் ஆட்சேபமாக நினைக்கும் பகுதியான, நடிகர்திலகத்தின் பழைய இல்லத்தை (தற்போது 'சிவாஜி பிலிம்ஸ்' இயங்கிவரும் இடத்தை) நினைவு இல்லமாக மாற்றும் யோசனை தவறென்றால் அதைக் கண்டித்திருக்கலாம். அதற்கு எல்லா உரிமையும் தங்களுக்கு இருக்கிறது.
ஆனால் அதற்காக, ஒரு யோசனையை வெளியிட்ட காரணத்துக்காக, நான் ஏதோ சிவாஜி குடும்பத்துக்கு எதிரானவன் போலவும், அவர்களைத் தூற்றுவதையெ தொழிலாகக் கொண்டு அலைபவன் போலவும், ராம்குமார், பிரபு ஆகியோரைப் பிடிக்காதவன் போலவும் சித்தரிப்பதும்,
என் நினைவு தெரிந்த நாளில் இருந்தே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகனாக இருந்து மன்றங்களில் இணைந்து செயல்பட்டு, அவரது புகழைப்பாடி வந்திருக்கும் ஒருவனை, இன்றைக்கும் யாரேனும் அவரைக் குறைசொல்லும் பட்சத்தில் அவர்களுக்கு சரியான தகுந்த பதிலடி கொடுத்துவிட்டு மறுவேலை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டவனை, நடிகர்திலகம் விரல் நீட்டிய திசையில் போராட்டங்களில் இறங்கி சிறைகளைக் கண்டவனை பார்த்து 'இவன் உண்மையான ரசிகன் அல்ல' , 'இவனை ரசிகர் பட்டியலில் சேர்க்க முடியாது' என்றெல்லாம் வரையறுக்கும் உரிமையை யார் வழங்கியது என்பது தெரியவில்லை. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் அது தங்கள் சுதந்திரமாகக் கூட இருக்கலாம்.
"எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் இப்போது செயல்படவில்லை. அதனால் அதை நினைவு இல்லமாக்கி விட்டனர். ஆனால் சிவாஜி பிலிம்ஸ் இப்போதும் அந்தக்கட்டிடத்தில் முனைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் கைவைக்க முடியாது" என்பது தங்கள் பதிலாக இருந்திருந்தால் முடிந்தது விஷயம். அதைவிட்டு என் ரசிகத்தன்மை, நடிகர்திலகத்தின் மேல் எனக்குள்ள அபிமானம், ஈர்ப்பு, பிடிப்பு இவற்றைஎல்லாம் சந்தேகத்துக்கு இடமாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ரசிகர்கள் உணர்ச்சி வசப்படுவது போல, நடிகர்திலகத்தின் குடும்ப உறுப்பினர்களும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட வேண்டாம். மெதுவாகவே நிறுத்தி, நிதானமாக செயல்படட்டும்.
என்ன இப்போ, 12 வருஷம்தானே ஆச்சு?..
தங்கள் கணக்கு சரிதான் கோபால். நான்கு தான் வரவேண்டும். நான்காவதை சொல்லாமல் விட்டு விட்டேன். அதை சொல்லும் நிர்ப்பந்த்தை தாங்களே உருவாக்கி விட்டீர்கள்.
நடிகர் திலகத்தின் புகழை பரப்புவதில் கோபால் சாரின் நடிப்புப் பள்ளி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது, அதனை அவர் முனைப்புடன் செயல்படுத்தி எழுதி முடிப்பார் என்பதை எதிர்பார்த்தது...
மற்றவர்களை எழுத வைக்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற பதிவுகளை இவர் எழுதி மன சஞ்சலத்தை உண்டாக்குவார் என்பதை எதிர்பார்க்காமல் விட்டோமே என்பதை நினைத்து....
இந்த மய்யம் தாண்டி நடிகர் திலகத்தின் ரசிகர்கள், அவருடன் உழைத்தவர்கள் ஏராளமாக இருப்பார்கள், அவர்களுக்கு இங்கு மிகச் சிறப்பாக நடிகர் திலகத்தின் புகழை பரப்பி வருவதை எடுத்துக் காட்ட வேண்டும் என்ற முயற்சியில், இங்கு எழுதுபவர்களின் புலமையை, திறமையை, ரசிப்புத் தன்மையை உரிய முறையில் மேலும் உலகெங்கும் பரப்ப வேண்டும் என்கிற ஆவலில் அதற்குரிய முயற்சி மேற்கொண்டது...
நடிகர் திலகத்தின் சிறப்பை நாம் எழுதும் போது, அவர் புகழைப் பரப்பும் நம்முடைய முயற்சியில் ஈடுபடும் போது, அதனை திசை திருப்பும் முயற்சிகள் நம் நண்பர்களாலேயே வரும் என்பதை எதிர்பாராமல் இருந்தது...
கோபால் என்கிற சிறந்த எழுத்தாளருக்குள் அவ்வப்போது மற்றவர்களைப் புண்படுத்துவதைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதக் கூடிய மனப்பான்மை அப்படியே இருக்கும், அது உடன் பிறந்தது, அது மறையாது என்பதை உணராமல் இருப்பது...
இவையெல்லாம் என் நான்காம் வருத்தத்தை தற்போது உண்டாக்கி விட்டன.
இந்த நான்காம் வருத்தத்திற்கு உள்ள பெருமை ...
இது மற்ற மூன்றை விட வலிமையானதாகும்.
ராகவேந்தர் சார்,
அடிக்கடி கோபிக்கிறீர்கள். நாங்கள் எல்லோருமே அவரின் பக்தர்களே. அவர்தான் எங்கள் உயிர்மூச்சு. ஆனால் சில விவாதங்கள் சீரியஸ் ஆக போகும் போது சுலபமாக்கவே முயல்கிறேன். என்னால் முடிந்த வரை. நான் திரியின் நண்பர்களின் மேல் கொண்ட நேசம் நிஜமானது. நீங்கள் புரிந்து கொண்டால்.
அவர் மறைந்த போது தமிழ்நாட்டின் கண்ணியே என்னை விட்டு அகன்றது போல நாலு நாள் சோறு தண்ணியில்லாமல் கதறி துடித்தவன். சிலையை பார்த்து வணங்கவென்றே ஒரு முறை இந்தியா வந்து போனவன். அவர் புகழுக்கோ, அவரை நேசிப்பவர்களுக்கோ என்னால் ஒரு குறையும் வராது சார். தங்களை மிகவும் மதிப்பவன் என்ற முறையில் இதை தெரிய படுத்துகிறேன்.
டியர் முரளி சார்
உத்தமன் பற்றிய தங்களின் நினைவலைகள் உன்னதம். உத்தமனைப் பற்றி மட்டும் விளக்காமல் மதுரை திரையரங்குகளின் குளிர்சாதன வசதி விவரங்களை மறக்காமல் ஞாபகம் வைத்து எழுதி ஆச்சரியப் பட வைத்து விட்டீர்கள். உத்தமன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிவந்தது என்ற விவரங்களும் அருமை. Aa Gale Lag Jaa பார்த்த விவரங்கள் அருமை. நான் உத்தமன் பார்த்து முடித்த பின்தான் அதே ரமேஷ் திரையரங்கில் Aa Gale Lag Jaa வைப் பார்த்து ரசித்தேன். சசிகபூர் என்றாலே அவ்வளவாக எனக்குப் பிடிக்காது. ஆனால் அந்தப் படத்திலிருந்து சசிகபூர் படங்களை விரும்பிப் பார்க்க ஆரம்பித்தேன். மிஸஸ் பட்டோடி நவாபும் அருமையாக செய்திருப்பார்கள்.
என் தம்பி படத்தின் மூலப்படமான தெலுங்கு படத்தை ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் வி.பி.ராஜேந்திர பிரசாத் எடுத்தார் என்பது எனக்குப் புது செய்தி. அந்தப் படத்தின் பெயரை தெரிந்தால் எனக்குத் தெரிவியுங்கள். அதே போல இன்னொரு சந்தேகம். நான் உத்தமன் ரிலீசில் பார்த்தபோது ஒருமுறை நமது ரசிகர்கள் நிறைய வேன்களிலும் லாரிகளிலும் சென்னை நோக்கிப் பயணப்பட்டதை (நாள் நினைவில்லை) பார்த்தேன். அனேகமாக அது நடிகர் திலகம் இந்திரா காங்கிரசில் இணைந்த விழாவாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு. அதைப் பற்றிய மேலதிக விவரங்களை விவரமாக அளிக்க தங்களால்தான் முடியும். நேரம் கிடைக்கும் போது அதுபற்றிப் பதிவிடுமாறு உரிமையுடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நான் அப்போது SSLC வரக்கால்பட்டு என்ற கிராமத்தில் (கடலூரிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தள்ளி) படித்துக் கொண்டிருந்தேன். படிப்பில் முழு கவனமும் செலுத்தவேண்டி அம்மா கண்டிப்புடன் இருந்ததால் தலைவர் சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் மிஸ்ஸிங். அதனால்தான்.
உத்தமனை ரிலீஸுக்கு மறுநாள் மாலைக்காட்சி பார்த்து ரசித்ததை அழகாக தங்களுக்கே உரிய பாணியில் அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் பதித்து இங்கே அனைவரையும் மகிழச் செய்து விட்டீர்கள். அதற்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்.
அதே போல மாஸ்டர் டிட்டோவாக வரும் சிறுவன் இப்போதைய இந்திப் பிரபலம் ஆமிர்கானோ என்று ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. கிட்டத்தட்ட முகம் அது மாதியே இருந்ததால் ஒரு குழப்பம். இன்று refer செய்து பார்த்ததில் இல்லை என்று தெரிந்தது. இந்திப் படத்திலும் அதே டிட்டோதான்.
சற்று இடைவெளிக்குப் பிறகு பதிவாகியிருக்கும் தங்களின் அருமையான பதிவை இன்று செகண்ட் ஷிப்ட் முடித்து விட்டு (2.00 pm to 10.00 pm) மீண்டும் இருமுறை படித்து விட்டு இந்த நன்றிப் பதிவை இடுகிறேன். தங்கள் பதிவை அசை போட்டவாறே உறங்கப் போகிறேன். நன்றிசார்.
டியர் பம்மலார் சார்!
கார்த்திக் என்ற இரும்பு ஈர்த்த காந்தமாகி விட்டீர்கள். அதனால் லாபம் எங்களுக்கு. உத்தமன் இன்றுமுதல் வெளியீட்டு விளம்பரம் அசத்தல். மனமார்ந்த என் நன்றிகள் தங்களுக்கு.