-
என்னுடைய பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் அனைவருக்கும்
என் இதயங்கனிந்த நன்றி .
1960-1985 கால கட்டத்தில் பெங்களுர் நகரில் காலை காட்சிக்கு மட்டும் வரி விலக்குடன் குறைந்த கட்டணத்தில் படம் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்தது .
பழைய தமிழ் படங்கள் குறிப்பாக எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் காலைக்காட்சி யில்
வசூலை குவித்தது .
1966ல் லக்ஷ்மி அரங்கில் புதிய பறவை படம் தொடர்ந்து 50 நாட்கள் காலை காட்சியாக
ஓடியது . அதே போல் அஜந்தா அரங்கில் படகோட்டி படம் தொடர்ந்து 50 நாட்கள்
ஓடியது .
ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்ததால் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் பல வருடங்கள் காலை காட்சிகளில் சாதனைகள் புரிந்தது . அதே போல் ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் - ஸ்ரீதர் படங்களும் நன்கு ஓடியது .
அரசியல் மாற்றம் - கன்னட மொழி தீவிரம் - தமிழ் எதிர்ப்பு போன்ற காரணத்தால்
1985க்கு பிறகு குறைந்த கட்டண காட்சிகள் திரையிடுவது கைவிடப்பட்டது . ரசிகர்களுக்கு ஏமாற்றமே .
-
வினோத் சார்,
நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் மிக அரிய பத்திரிகை பிரசுரங்களின் நிழற்படங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிழற்படங்களும் ஆவணங்களும் காலத்தின் கண்ணாடி என்ப்தை இவை மேலும் ஆணித்தரமாக நிரூபிக்கின்றன. கண்ணை இமை காப்பது போல் இவற்றை பாதுகாத்து இங்கே பகிரந்து கொண்ட தங்களுக்கும், இந்த ஆவணங்களைத் தங்களுடன் பகிரந்து கொண்ட நண்பர்களுக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
-
வினோத் சார் , உங்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல் நன்றி - அருமையான ஆவணகளை இங்கு பதிப்பதால் மட்டும் அல்ல நன்றி , எங்கள் ராகவேந்திரா சாரை மீண்டும் இந்த திரிக்கு வரவழைத்தற்க்க்காகவும் , மற்றும் எங்கள் வாசு சாரையும் இங்கு சீக்கிரமே வர வழைக்க போவதற்க்காவும் , இப்படியே எங்கள் Sorry, நம்ம திரியில் தொடர்ந்து பதிவுகள் இடுவதர்க்காகவும் ------ இப்படி சொல்லிகொண்டே போகலாம் - !!!!
நன்றி என்ற ஒரு சின்ன வார்த்தைக்குள் எங்கள் உணர்ச்சிகளையும் , பேரானந்ததையும் அடக்க முடியாது சார்.
அன்புடன் ரவி
:):smokesmile::clap::2thumbsup::ty:
-
http://i1302.photobucket.com/albums/...psf0796ed4.jpg[/QUOTE]
என்ன look யா அது!!!..சிங்கம் சந்தேகமின்றி சிங்கம்
"என்னடா ஒங்கொப்பன போல பெரிய இசையமைப்பாளரா வருவீயா?"
என்று கண்ணாலேயே கேட்கிறாரே!
-
இனிய நண்பர் திரு ஆதிராம் சார்
நீங்கள் குறிப்பிட்ட அந்த சிலர் ''நான்தான் '' என்பது எல்லோரும் அறிந்ததே .எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை .மக்கள் திலகம் திரியில் நடிகர் திலகம் நண்பர்கள்
திரு ராகவேந்திரன் - திரு வாசுதேவன் - திரு பம்மலார் - திரு கார்த்திக் மற்றும் பல
நடிகர் திலகம் நண்பர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -2 [ துவக்கியவர் திரு ஜோ ]
திரியில் பல பதிவுகள் இட்டுள்ளார்கள் .
நடிகர் திலகம் திரியில் எம்ஜிஆர் நண்பர்கள் என்னை தவிர வேறு யாரும் பதிவிடவில்லை . நட்பு ரீதியாக இரண்டு திலகங்கள் திரியில் பதிவிட்டு வருவது
என்னுடைய விருப்பம் .
2006 - முதல் நடிகர் திலகம் திரியினை தொடர்ந்து பார்வையிட்டு வரும் பார்வையாளன் என்ற முறையில் தற்போது உண்டாகியுள்ள தேக்க நிலையில் என்னுடய பதிவுகள் மூலம் சற்று மாறுதல் உண்டாகும் என்று பதிவிட்டேன் .
எந்த உள்நோக்கமும் இல்லை . இன்றைய ஆளும் கட்சியின் தவறுகளுக்கு துணை போகவும் இல்லை . உங்களின் தவறான புரிதலுக்கு வருந்துகிறேன் .
என்னுடைய பதிவுகள் மூலம் நடிகர் திலகம் நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தால் அது
எனக்கு பெருமை தான் . உங்களின் ஆதங்கம் புரிகிறது . ஆனால் என்னுடைய பதிவிற்கும் உங்களின் பதிவிற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை .
கவலைப்பட வேண்டாம் . நல்லதே நடக்கும் .
-
WARNING: Do not attempt to stop discussions on this page based on your interests.
This page is for all fans to discuss everything under the sun, on Nadigar Thilagam. No individual has any right to stop discussions on any matter.
Action will be taken on anyone who persists in trying to stop healthy discussions, including banning.
No further discussions on this please.
-
என்னுடைய பதிவுகள் மூலம் நடிகர் திலகம் நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தால் அது
எனக்கு பெருமை தான் . உங்களின் ஆதங்கம் புரிகிறது . ஆனால் என்னுடைய பதிவிற்கும் உங்களின் பதிவிற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை .
கவலைப்பட வேண்டாம் . நல்லதே நடக்கும் .[/quote]
டியர் வினோத் சார்,
நடிகர்திலகத்தை பற்றிய அருமையான பதிவுகளை அளித்து வருகிறீர்கள். மிக்க நன்றி, தங்கள் பதிவின் மூலம் ராகவேந்தர் சார் மீண்டும் இங்கு பதிவு இட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
-
ஓ! இப்படி ஒரு காமெடி கூட இங்கே நடக்கிறதா ? சிலை விவகாரம் முடியும் வரை இங்கே திரியில் துக்கம் அனுஷ்டிப்பதால் என்ன நடந்து விடப்போகிறது ?
அதற்கும் இந்த திரியின் நடவடிக்கைகளை மாற்றுவதற்கும் எந்த சம்பந்தமும் இருக்கத் தேவையில்லை என்பது தான் என் நிலைப்பாடு.
நண்பர் வினோத் மிகவும் பெருந்தன்மையோடு நடந்து கொள்பவர் ..அவரையும் அவர் கருத்துகளையும் வரவேற்கிறேன்.
-
May be JJ is a silent reader of this thread and anything we say would be used against us regarding the court case of NT statue!:shhh:
-
நான் சுவாசிக்கும் சிவாஜி! (14) - ஒய்.ஜி. மகேந்திரன்
http://i1234.photobucket.com/albums/...sdd8a3a6d.jpeg
இசைஞானி இளை யராஜா என் நெருங்கிய நண்பர். அவரது, 'பாவலர் பிரதர்ஸ்' ஆர்கெஸ்ட்ராவில் பலமுறை, ட்ரம்ஸ் வாசித்திருக்கிறேன். அதனால், இளையராஜா என்னை, 'டிரம்மர்' என்று தான் கூப்பிடுவார். இளையராஜா என்னிடம் பகிர்ந்து கொண்ட சுவையான நிகழ்ச்சி இது:
கவரிமான் படத்தில், கச்சேரி பாணியில் அமைக்கப்பட்ட, 'ப்ரோவ பாரமா' என்ற பாடல் காட்சியில், சிவாஜி எப்படி நடிக்கிறார் என்று பார்க்க எனக்கு ஆசை. ரீ- ரிகார்டிங் செய்யும்போது, அந்த காட்சியை பார்த்தேன். ஸ்வரம், தாளம் ஒரு இடத்தில் கூட தப்பாமல், அனுபவம் வாய்ந்த சங்கீத வித்துவான் மாதிரி, பிரமாதமாக சிவாஜி நடித்திருந்தார், என்று, ஆச்சரியமாக கூறினார் இளையராஜா.
கடந்த, 1986ல் வெளிவந்த சாதனை படத்தில், சிவாஜிக்கு இயக்குனர் வேடம். இசை இளையராஜா. அப்படத்தில், 'நீ செய்யாத சாதனையா?' என்று, சிவாஜியைப் பார்த்து, இளையராஜா கேட்கும் வசனம் ஒன்று வரும். கவரிமான் படத்தின் பாடல் காட்சியில், சிவாஜி பிரமாதமாக நடித்ததை, இந்தப் படத்தில், இளையராஜா வசனமாக சொன்னாரோ என்று தோன்றும்.
கவரிமான் படத்தில், நெருடலான ஒரு காட்சி இடம் பெறும். சிவாஜி வீட்டிற்கு வருகிறார், அவர் மனைவி பிரமிளா, சிவாஜியின் நண்பரான ரவிச்சந்திரனுடன் படுக்கையில் இருக்கையில், சிவாஜி பார்த்துவிடுவார். 'இது தான் அண்ணே சீன், நீங்க பண்ணுங்க...' என்று, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூலாக கூறினார்.
'ஏய், முத்து, இங்கே வா...இதற்கு, என்ன ரியாக் ஷன் கொடுக்கச் சொல்றே... வாழ்க்கையில் எல்லா விதமான சூழ்நிலைகளையும் அனுபவச் சிருப்போம். அதையெல்லாம் நடிப்பாக கொண்டு வரமுடியும். இப்போ நீ சொல்கிற சீன் யாருக்கும் வரக்கூடாத சூழ்நிலை. இதற்கு என்ன ரியாக் ஷன் கொடுக்க முடியும்ன்னு நினைக்கறே...' என்று கேட்டார்.
எஸ்.பி.முத்துராமன் சிரித்துக் கொண்டே, 'அதுக்குத்தாண்ணே சிவாஜி! நீங்க செஞ்சிடுவீங்க...' என்று சமாதானம் சொன்னார்.
'சரி... என் கற்பனையில் வருவதை செய்யறேன், சரியாக இருந்தால், வைச்சுக்கோ...' என்று கூறி, நடிக்க ஆரம்பித்தார். உணர்ச்சிகளை அப்படியே கொட்டியிருப்பார். செட்டில் இருந்த அனைவரும், சிவாஜியின் நடிப்பில், மெய்மறந்து போயினர். டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், 'கட்' சொல்ல, மறந்து விட்டார்; கேமராமேன் பாபு அந்தக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா பொருத்தப் பட்டிருந்த டிராலியை, தள்ளிக் கொண்டு வரும் கேமரா உதவியாளர், சிவாஜியை மெய் மறந்து பார்த்துக் கொண்டே, டிராலியை அதிகமாக தள்ளி விட, தடம் புரண்டு, கேமரா கீழே விழ இருந்தது. சிவாஜி, அதைப்பார்த்து, உஷார்ப் படுத்த, கேமரா காப்பாற்றப்பட்டதாக ஒளிப்பதிவாளர் பாபு என்னிடம் கூறினார்.
சிவாஜி ஷூட்டிங் என்றால், அது, நடிப்பு ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு வகுப்பறை மாதிரி தான். தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு, அவர் தன்னை தயார் செய்து கொள்வதைப் பார்த்தாலே, வியப்பாக இருக்கும்.
என் தந்தை ஓய்.ஜி.பி.,நாடக மேடையில் சிறப்பாக நடித்த நான்கு பாத்திரங்களை, சிவாஜி, படங்களில் கையாண்டு இருப்பார்.
'பெண்படுத்தும் பாடு' நாடகத்தில், ஆளவந்தார் பாத்திரத்தை, அறிவாளி படத்திலும், 'பெற்றால் தான் பிள்ளையா' நாடகத்தில், ஜமீன்தார் சிவலிங்கம் பாத்திரத்தை, பார் மகளே பார் படத்திலும் சிவாஜி செய்தார். கண்ணன் வந்தான்' நாடகத்தில், ஒய்.ஜி.பி., செய்த பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரம், கவுரவம் படத்திலும், 'பரிட்சைக்கு நேரமாச்சு' நாடகத்தில் இடம் பெற்ற நரசிம்மாச்சாரி பாத்திரத்தை, படத்திலும் நடித்திருக் கிறார். என் தந்தை நடித்த பாத்திரங் களில், சிவாஜி, படங்களில் நடித்து, மேலும் சிறப்பாக செய்தது, என் தந்தைக்கும், எங்கள் நாடக குழுவிற்கும் கிடைத்த பெரிய பாக்கியம்.
சிவாஜிக்கு கிரிக்கெட் விளையாட்டில், மிகுந்த ஆர்வம் உண்டு. ரேடியோவில் கமென்ட்ரி கேட்பது, பின், நேரம் கிடைக்கும் போது, டெலிவிஷனில் கிரிக்கெட் மாட்சுகள் பார்ப்பது அவருக்கு பிடித்தமான பொழுது போக்கு. இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜி.ஆர்.விஸ்வநாத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும். மைசூரில் ஒரு முறை, நட்சத்திர கிரிக்கெட் மேட்ச் நடைபெற்றது. சிவாஜியும் அதில் விளையாடினார். இரண்டே பந்துகளில், 'அவுட்' ஆகிவிட்டார். ஆனாலும், பேட்டிங் செய்ய, அவர் நடந்து உள்ளே போகும்போதும், 'அவுட்' ஆகி, வெளியே நடந்து வந்த போதும், அவரது, 'ஸ்டைலிஷ்' நடைக்கு, அதிகமான கை தட்டல் கிடைத்தது.
— தொடரும்.
தொகுப்பு: எஸ்.ரஜத்