கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் வைத்திருந்த பேனர்.
http://i61.tinypic.com/28k8080.jpg
Printable View
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் வைத்திருந்த பேனர்.
http://i61.tinypic.com/28k8080.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் அமைத்த பேனர் அருகில் பேண்ட்
வாத்திய குழுவினர் இன்னிசை.
http://i61.tinypic.com/wlvcw6.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தின் சுவரொட்டி
http://i57.tinypic.com/15ebuck.jpg
பொன்மனச்செம்மல் .எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்.
http://i62.tinypic.com/xpdnpe.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் அமைத்த பேனர்
http://i62.tinypic.com/33esfox.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''நினைத்ததை முடிப்பவன் '' இன்று 39 வது ஆண்டு நிறைவு ஆண்டு .
நம்நாடு படத்தில் மக்கள் திலகம் அவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் .. நான் என்று பாடினார் . அந்த பாடலின் தலைப்பிலே ''நினைத்ததை முடிப்பவன் '' என்ற படம் 9.5.1975 அன்று தென்னகமெங்கும் வெளியாகியது .
மக்கள் திலகத்தின் இரட்டை வேடம் - மாறு பட்ட வித்தியாசமான நடிப்பு - இனிய பாடல்கள் என்று பொழுது போக்கு
அம்சங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த படம் .
மதுரை - மீனாக்ஷி அரங்கில் மட்டும் 100 நாட்கள் ஓடியது .பல இடங்களில் 12 வாரங்கள் மேல் ஓடியது . சென்னை நகரில் தேவி பாரடைஸ் அரங்கில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .
அண்ணாவின் ''இதயக்கனி '' அரசியலில் மக்கள் திலகம் ''நினைத்ததை முடிப்பவன் '' . அவரின் எதிர்காலம் ''நாளை நமதே '' என்ற முழக்கம் வெற்றி பெறவும் மக்களால '' பல்லாண்டு வாழ்க '' என்ற வாழ்த்துக்கள் பெறவும் அமைந்த
பொன்னான ஆண்டு 1975ல் வந்த மக்கள் திலகத்தின் 4 படங்களும் என்றால் அது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியான ஆண்டாகும் .
MAKKAL THILAGAM MGR - SUPERB ACTION- EYE FEAST.
http://youtu.be/gCa8b4YrZZw
விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள்.
இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?
வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.
லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.
பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!
நிறைவான பொழுதுபோக்கு.
'' நினைத்ததை முடிப்பவன் '' - எம்ஜியார்
மக்கள் திலகம் நடித்த படங்களின் பாடல்கள் - பெயர்கள் உண்மையிலே அவரது நிஜ வாழ்வில் சாதித்த அவரது திரை உலக சாதனைகள் - அரசியல் வெற்றிகள் பிரதிபலிக்கிறது .
நாடோடி மன்னன் ;-1958
காடு விளைஞ்சென்ன மச்சான் .... பாடலில் மக்கள் திலகம் பாடிய வரிகள் ...நானே போட போகிறேன் சட்டம் .
.[ 1977 உண்மையானது]
எங்க வீட்டு பிள்ளை ;- 1965 - நான் ஆணையிட்டால் ...........
1977 - பாடல் வரிகள் நிஜமானது .
தெய்வத்தாய் -1964
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......
பாடல் வரிகள் .. சத்தியமான வைர வரிகள்
அன்றும் - இன்றும் என்றும் பொருத்தமான பாடல் .
பணக்கார குடும்பம் -1964.
பாடல் - என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே
2013 - இப்போதும நம் மன்னவரின் ஆட்சிதானே .
அடிமைப்பெண் -1969.
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ ... வெற்றித்திருமகன் நீ ....
நிதர்சனமான உண்மை .
உலகம் சுற்றும்வாலிபன் -1973
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் .....
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .
மக்கள் திலகம் உண்மையிலே ஒரு தீர்க்கதர்சி .
மக்கள் திலகம் ஒரு அதிசயமல்ல
மக்கள் திலகம் ஒரு உலகம் போற்றும் உன்னத நாயகன் .
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் பெயர்களில்
ஒன்று எம்ஜியார் என்ற மூன்றெழுத்து .
இது ஒன்று போதுமே .-எம்
மன்னவனின் புகழ்
அகிலமெங்குமே
முரசு கொட்டுமே