-
சின்னக் கண்ணன் சார்!,
ஹோம் வொர்க் கொடுத்துட்டீங்க. ஆனா சந்தோஷமான ஹோம் வொர்க். கடலை மிட்டாய் சாப்பிட கசக்குமா?
அதுவும் நடிப்பின் தெய்வம் நடித்த பாடல் வேறு. போதாக் குறைக்கு என் அழகு மஞ்சுளா மைனா வேறு.
தலைவர் என்னா ஒரு பியூட்டி! வெரி ஸ்மார்ட். வெறி பிடிக்க வைக்கும் ஸ்மார்ட். மஞ்சுளா கண்ணுக்கு நிறைவாக கவர்ச்சிக் கன்னி. பாவாடை தாவணி இந்தப் பச்சைக் கிளிக்கென்றே பிறந்ததோ.
நடிப்புச் சரித்திரம் காதல் சரசம் புரிந்த அவன் ஒரு சரித்திரம்.
http://i1.ytimg.com/vi/Dcjg3f6aEhA/maxresdefault.jpg
இணையத்திலும் சரி, வெளி இடங்களிலும் சரி, மிகச் சிறந்த நடிகர் திலகத்தின் முதல் 10 காதல் பாடல்களில் இப்பாடல் இடம் பிடித்துள்ளது.
இப்பாடலைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. படத்தைக் கேட்டால் மறந்திருப்பார்கள். ஆனால் பாடலின் முதல் வரியைக் கேட்டதும் பச்சக்'கென்று பிடித்துக் கொள்வார்கள்.
ரொம்ப நாகரீகமான பாடல். தமிழின் அருமை பெருமையை உணர்த்தும் பாடல். முழுவதும் தூய தமிழிலேயே! வாணி, பாடகர் திலகம் அருமையான காம்பினேஷன். மெல்லிசை மன்னர் தன் பட்டப் பெயரை மீண்டும் தக்க வைத்துக் கொள்வார்.
அதிலும் பெண்மணிகளுக்கு மிகவும் பிடித்த பாட்டு. வாசலில் கூட்டிக் கொண்டிருந்த எங்காத்து அம்மா இப்பாடலைக் கேட்டதும் அப்படியே ஓடி வந்து கேட்டுவிட்டுதான் போனார்கள்.
இந்தாங்க புல் மீல்ஸ்.
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
(அப்பாடி! எத்தனை 'னை')
(அழகான கண்களைக் கொண்ட பெண்மான் அவளுடைய பெருமானைத் தேடி வருகிறாளாம். நட்சத்திரம் நம்பியிருப்பது வானைத்தானே! மண்ணும் விண்ணும் மாறிவிடலாம். உன்னை நேசிக்கும் இந்தப் பெண்ணின் மனம் மாறிவிடக் கூடுமோ!)
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
நம்பிய பெண் ஒரு தாரகை
அவள் நாடிய நீ ஒரு வானகம்
விண்ணகம் மாறிய போதிலும்
இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே
விண்ணகம் மாறிய போதிலும்
இந்தப் பெண்ணகம் மாறுவதில்லையே
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
காதலன் சிலாகிக்கிறான் .
(பாலில் சுவை மறைந்துள்ளது கண்ணே! அதே மாதிரி என் விழியில் நீ ம(நி)றைந்திருக்கிறாய். ஆழியில் மணி மறைந்திருக்கிறது. அதுபோல நீ என்மேல் கொண்ட ஆசையில் என் மனம் மறைந்திருக்கிறது. )
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்
பாலினுள் மறைந்துள்ள சுவையென
விழி பளிங்கினுள் மறைந்தது உன் முகம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில்
மறைந்துளதென் மனம்
ஆழியில் மறைந்துள்ள மணியென
உன் ஆசையில்
மறைந்துளதென் மனம்
(இந்தக் கன்னிக்கு அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு குணங்கள் உண்டு. நான் பா(ப)த்திரமாக உன் வசம் இருக்கிறேன். அதில் தேன் மழையாய் உன் முகம் மட்டுமே இருக்கிறது.)
கன்னியின் நால்வகை சாத்திரம்
தன் காதலன் கண்களில் மாத்திரம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்
உன்னிடம் நான் ஒரு பாத்திரம்
அதில் ஊற்றிய தேன்மழை உன் முகம்
(தலைவர் பேண்ட்டை மடித்து விட்டு தண்ணீரை கால்களால் உதைத்தபடி நடக்கும் அழகும் தனிதான்)
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
பொன்னிற வண்டுகள் பாடின
அவை பூவெனும் மெத்தையில் கூடின
என்னிரு கண்களும் தேடின
அவை ஏக்கத்தில் உன்னிடம் ஓடின
மங்கலச் சங்குகள் அழைத்தன
இரு மந்திர முல்லைகள் இழுத்தன
உன்னுடன் உடல் உயிர் கலந்தன
(நடிகர் திலகத்துடன் எங்கள் உயிர் கலந்தது போல)
இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென
(எல்லாம் நீயே! பிறகென்ன கவலை?!)
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
https://www.youtube.com/watch?v=ZEQk...yer_detailpage
-
அழகான ஜெய்கணேஷ் அதைவிட அழகான சுமித்ரா. ஏரியில் குளிக்கச்செல்லும் சுமியைப் பார்த்து ரசித்தபடி ஜெய்கணேஷ் பாடும் பாட்டு "ஒரே முத்தம்" படத்தில். இளையராஜாவின் இசை.
ஜாக்கெட்டோடு குளிக்கும் அதிசயப்பெண். (அதான் குளிக்கும் காட்சிகளில் மார்பளவு சேலை அல்லது பாவாடை கட்டியபடி குளிக்கலாம் என்று எப்பவோ சென்சார் போர்டு அனுமதித்து விட்டதே அப்புறம் என்ன?. ஒருவேளை சுமி மறுத்தாரோ. சரி, டீப்பா இறங்க வேண்டாம்.
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
புது ஆனந்த நாட்டியம் ஆடடி - நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ஜெயச்சந்திரனின் இனிய குரலில் அழகான பாடல். ஏனோ இந்தப்பாடல் என மனதைக்கவர்ந்த அளவுக்கு இதே ஜெயச்சந்திரன் பாடி, இளையராஜாவின் இசையில் வந்த 'ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு' ,மனதைக்கவரவில்லை.
இந்தப்பாடல் படத்தில் இரண்டாவது முறையும் வரும். அப்போது நைட் எபெக்ட். இரண்டாவது முறை ஜெய்கணேஷ் இந்தப்பாடல் பாடும்போது விதவையாக இருக்கும் சுமித்ரா காதல் வேகத்தால் உந்தப்பட்டு வீட்டை விட்டு ஓடிப்போய் ஜெய்கணேஷிடம் பெண்மையை இழந்து விடுவார்...
-
//(இந்தக் கன்னிக்கு அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு குணங்கள் உண்டு. நான் பா(ப)த்திரமாக உன் வசம் இருக்கிறேன். அதில் தேன் மழையாய் உன் முகம் மட்டுமே இருக்கிறது.)//// கலக்கல் வாசு சார்... நிஜம்மாவே ரொம்ப தாங்க்ஸ்.. எனக்கு மிகப் பிடித்த பாடல் அண்ட் பிக்சரைசேஷன் உள்ள படம்.. வயசான வணக்கம் பலமுறை சொன்னேன் காஞ்சனா முன்னால மஞ்ச்சு ஒரு ரிலீஃப் ந.திக்கும் நமக்கும் :)
-
பாட்டுக் கேட்டதில்லை கார்த்திக் சார்..ம்ம் கேட்டுப் பார்க்கறேன் :)
-
ore mutham
ராஜா பொண்ணு அடி வாடியம்மா
புது ஆனந்த நாட்டியம் ஆடடி - நதியினில் ஆடடி
குலுங்க குலுங்க ஆடடியோ
ஜெயச்சந்திரனின் இனிய குரலில் அழகான பாடல்
கார்த்திக் சார்
இந்த பாடல் 80கலில் சிலோன் ரேடியோ ஹிட் சார்
இந்த படத்தில் இன்னொரு பாடல் வரும் சார்
பாலாவின் கவ்வாலி டைப்
ஸ்டார்டிங் beautiful ஹர்மொனிஉம் அக்கார்டியன் தபேல
"பாவையர்கள் மான் போலே காவிரியின் மீன் போலே "
வாழும் வகை வாழ்ந்தாலே "
அதிலும் "povai சூடுங்கள் " என்று ஒரு வரி வரும்
பாலாவின் ஆலாபனை
இரண்டாவது சரணத்தில் தீபம் படத்தில் NT நடந்து வரும் போது உள்ள
சாக்ஸ் இசை மற்றும் என்னடி மீனாட்சி கிடார் இசை கலந்து வரும்
பின்னர் ஜானகி வந்து சேர்ந்து கொள்வார்
-
அம்மானை
அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை
தேடிவரும் பெருமானை
தேடிவரும் பெருமானை
வாசு சார்
நான் 20 போஸ்ட் எழுதினாலும் வராத ஒரு நடை உங்கள் ஒரு போஸ்ட் மனதை கொள்ளை கொண்டு விடுகிறது
இந்த பாடல் பாடகர் திலகம் ஒருவித பேஸ் வாய்ஸ் இல் பாடி இருப்பார்
வாணியின் மென்மையான அழகான தமிழ்
half சாரீ மஞ்சுளா பக்கத்தில் கார்த்திக்கின் ஓமர் ஷெரிப் ஸ்ரீகாந்த்
நெஞ்சை பிசையுதே சார்
-
டியர் வாசு சார்,
அவன் ஒரு சரித்திரமாக வாழ்ந்த படத்தில் இடம்பெற்ற 'அம்மானை அழகு மிகும் கண்மானை' பாடலைப்பற்றிய விவரிப்பு அருமையோ அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.
வரிகள், சொற்கள், மெட்டமைப்பு, பாடியவிதம், பாடகர்கள், நடித்தவர்கள், வெளிப்புறப் படப்பிடிப்பு, உடையலங்காரம் என எல்லா விதத்திலும் ஒரு முழுமை பெற்ற பாடல். ('உன் மனது ஒன்றுதான்' பாடல் இருந்திருந்தால் இந்த அளவு சிறப்பாக அமைந்திருக்குமா என்பது சந்தேகமே)
சின்னக்கண்ணன் கேட்டதுமே, உங்கள் அடுத்த அஸைன்மென்ட் இந்தப்பாடலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே தந்து அசத்திட்டீங்க. நமக்குள் இருக்கும் வைப்ரேஷனே காரணம்.
ஒரு முழுமையான காதல் டூயட்.
-
கார்த்திக் சார்,
'ராஜாப் பொண்ணு... அடி வாடியம்மா' வை ஞாபகப்படுத்தி ரிவர்ஸ் கியரில் என்னை பின்னோக்கி தள்ளி விட்டு விட்டீர்கள். ஆனந்தமாக விழுந்துவிட்டேன்.
நாங்கள் அப்போது செம்மங்குப்பம் என்ற ஊரில் (கடலூரில் இருந்து சிதம்பரம் போகும் வழி... சரியாக பன்னிரண்டு கிலோமீட்டர்கள் இருக்கும்) இருந்தோம்.
திடீரென்று ஊர் ஜனங்கள் கூட்டம் கூட்டமாக அருகில் இருந்த பூண்டியாங்குப்பம் என்ற ஊருக்கு ஓடினார்கள். என்னவென்று விசாரித்தால் 'சினிமா ஷூட்டிங் எடுக்குறாங்களாம்' என்றார்கள்.
பின் விடுவோமா! நாங்களும் அவதியோ புவதியோ என்று கிடைத்ததை மென்றுவிட்டு ஓட்டம் பிடித்தோம். நல்ல அழகான ஆற்றுப் பகுதி. பச்சைப் பசேலென்ற செழிப்பான வளம் மிக்க இடம்.
(இந்தப் பகுதியில்தான் நடிகர் திலகத்தின் 'பாதுகாப்பு' ஷூட்டிங்கும் 'தர்மம் எங்கே?' ஷூட்டிங்கும் நடந்தது)
ஆற்றோரமாக ஒரு சேரில் சுமித்ராவும், இன்னொரு சேரில் ஜெய்கணேஷும் அமர்ந்திருக்க நடன மாஸ்டர் (தெரியவில்லை) நடனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
'ஆத்தங்கரையில் ஒரு ரோஜா
சின்ன ரோஜா'
என்று தொடங்கும் பாடலுக்கான நடன ஒத்திகை நடந்து, பின் படம் பிடித்தார்கள். சுமித்ராவும், ஜெய்கணேஷும் கவனமாக ஸ்டெப்ஸ்களை கவனித்துக் கொண்டிருந்தனர்.
துணை நடன நடிகைகளை சுற்றி ஒரே இளைஞர்கள் கூட்டம்.
எங்கள் கவனம் அங்கிருந்த சுருளிராஜன், ஆச்சி மனோரமா மீது திரும்பியது. மனோரமாவிடம் நைஸாக பேச்சு தந்தேன். அவரும் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தார். பின் 'டிராக்டர் பொன்னம்மா' பற்றி கூற அவர் மிகவும் மகிழ்ந்து போய் 'இதையெல்லாம் ஞாபகம் வச்சுறிக்கியே' என்று இன்னும் சகஜமாக பேச ஆரம்பித்தார். ஆச்சி ஆற்றங்கரையில் நடந்துவர, நானும் என் நண்பன் வேல்முருகனும் அவருடன் நடிகர் திலகத்துடன் ஆச்சி நடித்த படங்களை ஒன்று விடாமல் பேசிக்கொண்டே வந்தோம். ஆச்சி நடிகர் திலகத்தைப் பற்றி மிகப் பெருமையாக பேசிக் கொண்டு வந்தார். நாங்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்று சொன்னவுடன் ஆச்சியின் முகத்தில் அத்தனை உண்மையான சந்தோஷம்.
'ஆத்தங்கரையில் ஒரு ரோஜா'
என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டது. (அதிக ஹிட் இல்லாவிட்டாலும்)
அதுமட்டுமல்ல. ஷூட்டிங் முடிந்து ஒருசில நாட்களிலேயே நான் திரும்பவும் ஆச்சியை சந்திக்க நேரிட்டது. நான் ரோட்டில் நடந்து செல்கையில் ஒரு கார் தனியாக ஒதுங்கி நிற்க, பார்த்தால் அங்கே ஆச்சி நின்று கொண்டிருந்தார். அக்கம் பக்கம் யாரும் இல்லை. நான் அருகில் சென்று பார்த்தால் நம் ஆச்சி. ஆச்சர்யமான ஆச்சர்யம் எனக்கு.
நான் 'மேடம்' என்று கூப்பிட்டதும் ஆச்சி என்னை உடனே அடையாளம் கண்டு 'அட நீயா!'என்று நலம் விசாரித்தார். எனக்கு இன்னும் வியப்பாகி விட்டது.
பின் 'ஏன் இங்கு நிற்கிறீர்கள்?' என்று நான் வினவ,
'என் சொந்தக் காரர்களின் வீட்டுக்கு மாயவரம் வரை போய்விட்டு வருகிறேன். வழியில் தலைவலி வந்துவிட்டது அதுதான் டீ குடிக்கலாமே என்று வண்டியை நிறுத்தச் சொன்னேன். அனால் இங்கு டீக்கடையே இல்லையே தம்பி' என்றார்கள். நான் உடனே 'ஆச்சி! இங்கே டீக்கடைஎல்லாம் கிடையாது .ஊருக்குள் சென்றால்தான் டீ கிடைக்கும்' என்றேன். பின் ஆச்சி கார் டிரைவரை என் கூட அனுப்பி வைத்தார்கள். பின் டீ வாங்கி வந்து ஆச்சியிடம் தந்தோம். ரசித்து குடித்தார்கள். பின் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.
எனவே 'ஒரே முத்தம்' படத்தை என்னால் மறக்க முடியாது.
உங்களுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் அருமையான நினைவலைகளை மீண்டும் எழுப்பி பேருவகை கொள்ளச் செய்ததற்கு.
-
கார்த்திக் சார்,
பாட்டை விஷுவலாக பார்க்க இயலாவிட்டாலும் கேட்டு மகிழலாம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S7g_IRaccpM
-
வணக்கத்துக்குரிய காதலியே...
Extra Sensory Perception ... ESP ... வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வைக்கும் ஒரு விசேஷ சக்தி... இந்த சக்தியின் மகிமையால் ஒரு மனிதனுக்கு ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட EYES என்கிற ஜான் கார்பெண்டரின் கதை,
EYES OF LARA MARS
http://interiorator.com/wp-content/u...ra-Mars-02.jpg
என்கிற பெயரில் வெளியானது. இந்த கதை புத்தகமாக வெளிவந்த போதே உலகெங்கும் பரபரப்பாகப் பேசப் பட்டது. அதே நேரத்தில் இந்த அபூர்வ சக்தி நம் தமிழ்நாட்டிலும் பரவலாக அறியப் பட்டது. அப்போது இந்த சக்தி இருப்பதாக அறியப்பட்ட திரு நாராயணன் அவர்கள் தாய் வார இதழில் ஜோதிடம் எழுதத் துவங்கினார். இதன் மூலம் அவர் நம்புங்கள் நாராயணன் என பிரபலமானார்.
அப்படிப்பட்ட ஒரு சக்தியினை அடிப்படையாக வைத்து 'ஙே' ராஜேந்திர குமார் எழுதிய நாவல் தான் வணக்கத்துக்குரிய காதலியே திரைப்படம்