http://4.bp.blogspot.com/-mhm7E0fXA3...ous+photos.jpg
Printable View
வேதாவின் லிஸ்ட் இதுதான் முதல்தடவை என்று நினைக்கிறேன். சிரமப்பட்டு படங்களையும் பாடல்களையும் தொகுத்து திரியை மேலும் புகழடையச் செய்ததற்கு நன்றி கோ. நிஜமாகவே அசத்தல்.
கிருஷ்ணா சார்,
பதிவுகள் ஒவ்வொன்று அட்டகாசம். அதைவிட சந்தேகங்கள் அட்டகாசம். அதைவிட அதற்கான விளக்கங்கள் அட்டகாசம்.
டியர் கோபால் சார்,
வேதாவின் படங்களின் பட்டியல் உண்மையிலேயே அருமையான தொகுப்பு. சிரமப்பட்டு தொகுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வேதாவின் தனிச்சிறப்பு ஹிந்திப்பாடல் மெட்டுக்களை ஒரிஜினலை விட அழகாக தருபவர் என்பது.
அதுபோல 'இரவின் மடியில்' தொடரும் அருமை. பாதை தெரியுது பார் படத்தின் பாடல்கள் தொகுப்பு சூப்பர்.
அசத்துங்க சார்...
'சாமந்திப்பூ' திரைப்படத்தில் இன்னொரு பாடல்.
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையை தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று
ஷோபா நடிக்க பின்னணியில் ஒலிக்கும் ஜானகியின் குரல். நல்ல பாடல்.
https://www.youtube.com/watch?v=fdHd...yer_detailpage
'நினைவுச்சின்னம்' நல்ல படம். ஆனால் பழிவாங்கும் எண்ணம்கொண்டு அலைவதால் சுவாரஸ்யம் குறைந்தது. வயதான தோற்றத்தில் பிரபு அங்கங்கே நடிகர்திலகத்தை நினைவூட்டினார். பிரபு ராதிகா பேசிக்கொள்ளும் வசனங்களில் அங்கங்கே கொஞ்சம் பச்சை தலைகாட்டியது. தவிர்த்திருக்கலாம்.
பிரபு ரசிகர்மன்ற முன்னாள் செயலாளருக்கு வாழ்த்துக்கள்...
கிருஷ்ணா சார்,
எனக்கு மிக மிக பிடித்த 'மாலை வேலை... ரதி மாறன் பூஜை' பாடலுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். அசத்தல் சார். என்னா ஒரு ஒத்துமை டேஸ்ட்!