http://s10.postimg.org/e88vbm0gp/ccd.jpg
Printable View
அன்பு சகோதரர் ஹயாத் அவர்களது தாயாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் திருவடியில் அன்னாரது ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன்.
எனது பிறந்தநாளுக்கு திரியின் வாயிலாகவும் அலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். விரைவில் திரிக்கு வந்து தொடர்ச்சியாக எனது பங்களிப்பை அளிப்பேன் என உறுதி கூறுகிறேன்.
வரலாற்று உண்மை
அரசியல் வரலாற்றில் மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவாக்கிய சாதனை .
கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தல் / கோவை நாடாளுமன்ற இடைத்தேர்தல் களம் - 1974
மக்கள் திலகத்தின் அண்ணா திமுக முதல் முறையாக களம் கண்ட திண்டுக்கல் இடைதேர்தல் -1973 அரசியல் வரலாற்றில் மாபெரும் சரித்திரம் படைத்தது .மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கத்தின் வளர்ச்சி , புகழ் கண்டு அன்றைய மத்திய அரசும் , மாநில அரசும் மற்றும் தமிழக கட்சிகள் எல்லாம் மிரண்டு போய் எப்படியாவது எம்ஜிஆரை தோற்கடிக்க வேண்டும் கோவை ,புதுவை , தேர்தலை சந்தித்தார்கள் .
மத்திய அரசு - இ. காங் - அன்றைய பிரதமர் இந்திரா காந்தி .
மாநில அரசு - தி மு க - அன்றைய முதல்வர் கருணாநிதி
ஸ்தாபன காங்கிரஸ் - பெருந்தலைவர் காமராஜர்
இடது கம்யூனிஸ்ட்
பிரபல நடிகர்கள் நடிகர் திலகம் மற்றும் அவருடைய ஆதரவு நடிகர்கள்
பிரபல பத்திரிகை யாளர்கள் சோ - ஜெயகாந்தன் - கண்ணதாசன் .
தினத்தந்தி - மற்றும் பல பத்திரிகைகள் என்று எல்லோருமே புரட்சித்தலைவரை எதிர்த்து இரவு பகல் பாராது
கடுமையான வார்த்தைகளால் எம்ஜிஆரை அரசியல் ரீதியாகவும் , தனிப்பட்ட முறையிலும் தாக்கி பிரச்சாரம்
செய்தார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டும் தன்னுடைய இயக்கத்தின் தொண்டர்கள் , ரசிகர்கள் மற்றும் மக்களை நம்பி
இரவு பகலாக சூறாவளி பிரச்சாரம் செய்தார் . தன்னை எதிர்த்த அத்தனை இயக்கங்களை சேர்ந்த தலைவர்களின்
பிரச்சாரம் அனைத்தையும் தன்னுடைய நிதான போக்கினாலும் , மக்களை நம்பி ஒட்டு கேட்டதாலும்
100 சத வீத வெற்றி கிடைத்தது .
கோவை நாடாளுமன்ற வெற்றி
கோவை மேற்கு சட்ட மன்ற வெற்றி
புதுவை அதிமுக அரசு
என்று ஒரே நேரத்தில் முப்பெரும் வெற்றி பெற்றவர் மக்கள் திலகம் .
எம்ஜிஆரை வீழ்த்த முயன்ற அத்தனை அரசியல் மேதைகளுக்கும் மக்கள் தந்த பரிசு ''தோல்வி ''
531- 2000 வாக்குகள் வித்தியாசம் வெற்றி - ஒரு வரலாற்றையே உருவாக்கி விட்டது .
எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் வெற்றி - எல்லா தலைவர்களையும் , நடிகர்களையும் அவர்களின் ரசிகர்களையும் சிந்திக்க வைத்தது .ஒரு சிலர் மட்டும் எம்ஜிஆரின் வெற்றிகளை ஜீரணிக்க முடியாமல் பல கணக்குகளை கூட்டி
கழித்து நடக்க முடியாத ஒன்றை எண்ணி சமாதனம்,அடைவது இயற்கைதானே .
விநோத் சார்
தங்களுடைய பதிவில் வரிசையாக பட்டியலிட்டு எல்லோரும் கடுமையான வார்த்தைகளால் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தாக்கி பிரச்சாரம் செய்தார்கள் எனக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். பெருந்தலைவரோ நடிகர் திலகமோ கொள்கைகளை வைத்தும் தர்க்க ரீதியாகவும் தான் பேசியிருக்கிறார்களே தவிர தனிப்பட்ட முறையிலும் அதே போன்று கடுமைான வார்த்தைகளிலும் என்றுமே யாரையுமே தாக்கிப் பேசியதில்லை, எம்.ஜி.ஆர். அவர்கள் உட்பட. அது மட்டுமல்ல மற்றவர்களையும் அது போன்ற முறையில் பேச அனுமதித்ததில்லை என்பதை பணிவுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
படம் : தாயின் மடியில்
பாடல் காட்சி: என்னை பார்த்து
http://i57.tinypic.com/34ii6u9.jpg