சீமானுக்கு எதிராக களமிறங்கும் நடிகர் சங்கம்!!!
சமீபத்தில் நடிகை ஒருவர் இலங்கையில் கலை நிகழ்ச்சி நடத்தப் போனார். அவருக்கு போன் செய்த சீமான், 'இலங்கைக்குப் போகக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார். இது குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் அந்நடிகை புலம்ப, கடுப்பான சரத், சங்க நிர்வாகிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். நடிகர், நடிகைகள் தொடர்பான பிரச்னை என்றால் சங்கத்தில்தான் முறையிடவேண்டும். இப்படி நேராக போன் செய்து சீமான் மிரட்டியிருக்கக்கூடாது என்று சங்கத்தினர் கருத்து தெரிவித்தார்களாம். இதைத் தொடர்ந்து மொத்த நடிகர்களும் சீமானுக்கு கண்டனம் தெரிவிக்க தயாராகிறார்களாம்.