Welcome Pammalar saar! :)
Printable View
Welcome Pammalar saar! :)
திரு பம்மலார் அவர்களே,
நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களோடு ஐக்கியமாக வந்திருக்கும் தங்களை மகிழ்ச்சி ததும்ப,கண்கள் பனிக்க,உளமார வரவேற்கிறோம்.
பம்மல் சார்,
ஒவ்வொரு தடவை நீங்கள் இங்கே செய்தியை உள்ளிடும் போது 'New topic' -பதில் 'postreply' -ஐ தேர்ந்தெடுக்கவும் ..இல்லையென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புது திரியாக வெளிவரும்.
ஏற்கனவே உள்ள நடிகர் திலகம் திரியில் 'postreply' மூலமாக உங்கள் புதிய செய்திகளை உள்ளிடும் படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
எம்மை வரவேற்ற அனைவருக்கும் முதற்கண் எமது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திரியின் தொடக்கம் முதல் இன்று வரை பற்பல அழகிய பதிவுகளை புதுப்பொலிவோடும், மிகுந்த நேர்த்தியோடும் வழங்கி வரும் இத்திரியைச் சார்ந்த அனைவருக்கும் எமது பணிவான வணக்கங்களையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
Thanks to Mr. Joe & Mr. Thirumaran for guiding me rightly to click the POST REPLY button.
Regards,
Pammal R.Swaminathan.
பம்மலார் திரு. சுவாமிநாதன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்..
உங்களது கைவண்ணத்தில் இத்திரி மேலும் மெருகேறப்போகிறது என்பதும், உங்களது பங்களிப்பின்மூலம் நடிகர்திலகத்தைப்பற்றி எங்களுக்கு மேலும் பல அரிய விஷயங்கள் கிடைக்கப்போகிறது என்பதும் திண்ணம்.
ஆவலுடன் காத்திருக்கிறோம்...
நமது நடிகர் திலகம் அவர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கையை ஆறு கூறுகளாக (பிரிவுகளாக) மேலோட்டமாக பட்டியலிட்டு பிரிக்கலாம். அவையாவன :
# நாடக வாழ்க்கை
# திரைப்பட வாழ்க்கை
# அரசியல் வாழ்க்கை (கட்சி சார்ந்தது)
# பொது வாழ்க்கை (சமுதாயம் சார்ந்தது)
# குடும்ப வாழ்க்கை
# ஆன்மீக வாழ்க்கை
இத்தனை பிரிவுகளிலும், நிரைந்த தகவல்களை பற்பல புத்தகங்கள் எழுதுமளவுக்குப் பெற்றுத் திகழும் ஒரே பிரமுகர் நமது நடிகர் திலகம் ஒருவர் மட்டும் தான்.
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
Quote by Hamid
// Dear Pammalar...
Welcome to HUB.. Please share your experience with NT.. You are the editor of Vasantha Maaligai? great....My fav film of all times Would love to hear from you in the coming days.. //
டியர் Hamid,
பம்மலாரைப்பற்றி தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன்...
அவர் 'வசந்தமாளிகை' இதழின் ஆசிரியராக இருந்தவர்.
உங்கள் போஸ்ட்டில், அவர் வசந்தமாளிகை திரைப்படத்தின் 'படத்தொகுப்பாளர்' என்பதாகத் தொனிக்கிறது.
Dear Saradha,
Thanks for the information. Yes, I mistook him to be the editor of VM film.. :oops:
இன்று (15.9.2009) பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம்.
மேலும் அவரது நூற்றாண்டு இன்று நிறைவடைகின்றது.
இதையொட்டி கோலாகலமான விழாக்கள் கொண்டாடப்பட்டு
வருகின்றன. இந்த நேரத்தில் நமது நடிகர் திலகத்திற்கும், அவரை
முதன்முதலில் உலகப்பெருநடிகர் என்று புகழ்ந்துரைத்த
பேரறிஞருக்கும் இடையே இருந்த ஆத்மார்த்தமான நட்புணர்வை,
நேசமிகு நல்லுறவை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வது
சாலப்பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
அன்புடன்,
பம்மலார்.