Quote:
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்’&இளையமகள் சௌந்தர்யா& அஸ்வின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்திருக்கும் ரஜினியை இப்படித்தான் வாழ்த் திக்கொண்டிருந்தார்கள், வந்திருந்த வி.ஐ.பி.க்கள்.
இடம் சென்னை ராணி மெய்யம்மை ஹால்.கல்யாண வீட்டில் இருந்து அட்சதை தூவலாக சில வரிகள் :
காலை 5.30மணிக்கு மண்டபத்திற்கு வந்த மணமக்கள் ஊஞ்சல் சடங்கில் கலந்துகொண்டனர். அப்போது மணமகன் அஸ்வினின்
பஞ்ச கச்சத்தைச் சரி செய்துவிட் டபடி, ‘சூப்பர்’ என்பதுபோல கையைக் காட்டி சிரித்தார் ரஜினி.
சடங்கு நடந்து கொண்டிருந்தபோதே பரபரப்புடன் ‘தனுஷ் வந்தாச்சா’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார், பாசமுள்ள மாமனாராக ரஜினி.
சௌந்தர்யாவை ரஜினி மடியில் உட்கார வைத்து நடந்த சடங்கில் புரோகிதர், ‘‘சட்டையைக் கழட்டிட்டு உட்காருங்கோ’’ என்று கூற, ‘‘இல்ல. இப்படியே இருக்கட்டும்’’என்று அவரை சமாதானம் செய்தபடி அமர்ந்துகொண்டார் சூப்பர் ஸ்டார்.மணமேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓதியபடி இருந்தனர்.
அம்மா,அப்பாவுடன் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் மண்டபத்தில் நுழைந்ததும் எழுந்து சென்று வரவேற்றுவிட்டு, சடங்கில் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டார்.
சௌந்தர்யாவை மடியில் அமர்த்தி தாலி கட்டும் நேரத்தில் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலிருந்தார் ரஜினி.லதா ரஜினி கண்கள் கலங்கிப்போய் நின்றிருந்தார்.
கமல் - கௌதமியுடன் மண்டபத்திற்கு வந்ததும் ஆவ லோடு போய் கமலை பாசத்துடன் கட்டி அணைத்துக்கொண்டார் ரஜினி. மணமக்களை காலில் விழுந்து ஆசி வாங்க வைத்துவிட்டு, கமலை விருந்து நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்த பிறகே மேடைக்குத் திரும்பினார்.
அண்ணன் சத்திய நாராயணன் உட்பட ரஜினியின் பெங்களூரு உறவுக்காரர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களுடன் அடித்துப் பேசி, சிரித்தபோது தன்னை மறந்து போனார் ரஜினி.
முதல்வர் கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின் தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள் எல் லோரும் வந்திருந்ததால் எப்போதும் சைரன் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது.
முதல்நாள் நிச்சயதார்த்தத்திற்கே வந்துவிட்டார் ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சனுடன்.அம்பரீஷ்-சுமலதா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலசந்தர் உட்பட எல்லா மொழி திரை யுலகினரும் கலந்துகொண்டது ரஜினியின் பாச உணர்வை பிரதிபலிப்பது போலிருந்தது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எஸ்.வெங்கட் ராகவன், ஸ்ரீகாந்த் ஆகியோர் நிச்சயதார்த்தத்தன்றே வந்து வாழ்த்தியது ரஜினிக்கு மகிழ்ச்சி.
மனைவி, மகனுடன் வந்த மத்திய அமைச்சர் அழகிரியை ரஜினி ஓடிப்போய் கைபிடித்து அழைத்து வந்தார்.
விஜயகாந்த், ஜி.கே.வாசன், பா.சிவந்திஆதித்தன், என்.ராம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, வைகோ, திருமாவளவன், எம்.ஏ.எம். ராமசாமி, சரத்குமார் என்று பாரப ட்சம் பார்க்காமல் அனைத்துத் தரப்பினரும் வந்து மணமக்களை வாழ்த்தியது ரஜினிக்குப் பெருமை. ஜெ. மட்டும் மிஸ்ஸிங்.
நிச்சயதார்த்தம், முகூர்த்தம், வரவேற்பு என்று எல்லாவற்றிலும் ஹைலைட் சாப்பாடுதான். கேரளப் பாயாசம், தஞ்சாவூர் வடை, ஹைதராபாத் பிரியாணி, வடநாட்டு இனிப்பு கள் என்று ஒரே அசத்தல். அதைவிட, அத்தனை பேரையும் பார்த்து ‘‘சாப்பிட்டாச்சா, சாப்பிட்டாச்சா’’ என்று ரஜினி கேட்டுக் கேட்டு உபசரித்தது பலரின் மனதைத் தொட்டது.
விருந்து பின்னணி
ரஜினி ரசிகர்கள் சந்தோஷ அலையில் மிதந்துகொண்டிருக்கிறார்கள். ரஜினி மகள் திருமணம் அத்தனை பேர் ஆசியுடன் நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டாலும், ரசிகர்களை திருமணத்திற்கு வரவேண்டாம் என்றது சூப்பர் ஸ்டாரையும் உறுத்தி யிருக்குமோ என்னவோ ‘மணமக்களை அறிமுகம் செய்து ரசிகர்களுக்கு விருந்து வைக்க திட்டம் உள்ளது’ என்ற அறிக்கை வந்திருக்கிறது. ஆனால், நடந்ததே வேறு என்கிறார்கள் விவரமறிந்த சிலர்.
இதற்காக ரஜினிக்கு இக்கட்டான நேரங்களிலெல்லாம் ஆலோசனை வழங்கும் வி.ஐ.பி.களும் ‘ரசிகர்களை சந்தியுங்கள்’என்று கூறி அதை எப்படியெல்லாம் நடத்தலாம் என்பது பற்றியும் ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.இதன்படி தான் விருந்து அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதைத்தொடர்ந்து, ரஜினி, அவரது நண்பர் முரளி, சுதாகர், சத்யநாராயணன் ஆகியோர் ரஜினி வீட்டில் கூட்டம் போட்டுப் பேசியிருக்கிறார்கள்.
தமிழகமெங்கும் திரண்டு வரும் ரசிகர்களைத் தாங்கும் அளவுக்கு இடவசதி,அடிப்படை வசதிகள் எல்லாம் செய்து தரஏற்ற பல இடங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித் திருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசல், ரசிகர்களின் பாதுகாப்பு இரண்டும் ரொம்பவும் முக்கியம் என்பதை திரும்பத் திரும்ப ரஜினி வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி சென்னை,மதுரை,கோவை என்று மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த ஊர்களிலிருந்து ரசிகர்களை வரவழைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இந்த ஐடியா ரஜினிக்குப் பிடித்திருப்பதாக கூறுகிறார்கள். விரைவில் அதற்கான நாள், இடம் பற்றிய தகவல் வரும் என்கிறார்கள். இப் போதே எல்லா மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் தயாராக இருக்கச் சொல்லியிருக் கிறார்கள்.
முதன்முதலாக தலைவனை பொதுமேடையில் பார்க்கப் போகும் ஆவலில் தீபாவளிக்குத் தயாராகும் உற்சாகக் குழந்தையாய் துள்ளிக் குதிக்கிறார்கள் ரசிகர்கள். விருந்தில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? கண்டிப்பாக பிரியாணி விருந்துதானாம்.முடிந்தால் ரசிகர்களுக்கு ருத்ராட்சம் தரும் ஐடியாவும் உண்டாம்.
வருகிற பன்னிரண்டாம் தேதி ‘எந்திரன்’படத்தின் விசேஷ ட்ரைலரை வெளியிடும் திட்டம் இருப்பதால் அதற்குப்பிறகே ரஜினி வீட்டின் விருந்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது..