ஊட்டி வரை உறவு பேசும்படம் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a.../OVUPPAdfw.jpg
Printable View
ஊட்டி வரை உறவு பேசும்படம் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a.../OVUPPAdfw.jpg
02.11.1975 அன்று வெளியாகி 02.11.2011 அன்று 37வது ஆண்டில் நுழையும் வைர நெஞ்சம் திரைப்படத்திலிருந்து மெல்லிசை மன்னரின் இசையில் இனிமையான பாடல்
http://youtu.be/WiQsVl5KkEc
01.11.2011 அன்று 45வது ஆண்டில் நுழையும் ஊட்டி வரை உறவு வெற்றித் திரைப்படத்திலிருந்து அங்கே மாலை மயக்கம் பாடல் காட்சி
http://youtu.be/Ku1Ek0yaex0
01.11.2011 அன்று 45வது ஆண்டில் நுழையும் இரு மலர்கள் வெற்றித் திரைப்படத்திலிருந்து மாதவிப் பொன் மயிலாள் பாடல் காட்சி
http://youtu.be/fs7KQQPEYuA
01.11.1986 அன்று வெளியாகி 26வது ஆண்டில் நுழையும் லட்சுமி வந்தாச்சு திரைப்படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல் சந்தன நிலவொளியோ காட்சியில் நடிகர் திலகம் தபேலா வாசிக்கும் நுட்பத்தைப் பாருங்கள்.
பாடலுக்கான இணைப்பு கீழே உள்ள படத்தில் தரப்பட்டுள்ளது.
http://goodtamilfilms.files.wordpres...pg?w=300&h=163
டியர் ஜோ,
நேற்று 31.10.2011 இரவு 11.00 மணிக்கு சன் டி.வி. சினிமா செய்திகள் நிகழ்ச்சியில் இடம் பெற்ற அக்காட்சியை நானும் பார்த்தேன். அதை உடனடியாக இங்கே தரவேற்றியமைக்கு உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
இசைஞானி இளையராஜா அவர்களின் துணைவியார் ஜீவா அவர்கள் மறைவிற்கு எங்களது கண்ணீர் அஞ்சலி.அம்மையாரின் ஆத்மா சாந்தி அடையவும்,இளையராஜா அவர்கள் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
http://www.hindu.com/2005/07/17/imag...1712300301.jpg
வாசுதேவன்.
டியர் ஜோ சார்,
"பா" வரிசை பொன்விழா சுட்டி அருமை. தந்தமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கு நன்றி!
நீதி வெளிப்புறப் படப்பிடிப்பின் போது நடிகர் திலகம் அவர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் அபூர்வ காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். அந்த ஸ்டில் நன்றாகவே பளிச்சென்றுதான் இருக்கிறது., மிக அபூர்வமான ஸ்டில்லை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்து விட்டீர்கள்.
டாக்டர் சிவா திரைப்படத்தைப் பற்றி பொம்மை மாத இதழில் வெளிவந்த செய்தித் தொகுப்பு அற்புதம். ஸ்டில்கள் தலைவரின் ஸ்டைலில் அசத்துகின்றன.
"வைர நெஞ்சம்", "ஊட்டிவரை உறவு", "டாக்டர் சிவா" வீடியோக் காட்சிகள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய 'தூள்' பதிவுகள்.
சிகரம் வைத்தாற்போன்று தாங்கள் அளித்துள்ள ஊட்டி வரை உறவு பேசும்படம் விளம்பரம் வண்ணமயமாக நெஞ்சைக் கொள்ளையடித்துக் கொண்டு போகிறது. சூப்பர் சார். அருமையான ஸ்டில்.
பெரிய விருந்தையே பரிமாறி விட்டீர்கள். நவம்பர் ஒண்ணாம் தேதியை மறக்க முடியாமால் செய்து விட்டீர்கள்.
அனைத்திற்கும் என் உளப்பூர்வமான நன்றிகளும், பாராட்டுக்களும்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள பம்மலார் சார்,
நேற்றிரவு தங்களின் கடும் உழைப்பில் உருவாகி, இன்று எங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தான...
ரங்கோன் ராதா பட விளம்பரங்கள்
பைலட் பிரேம்நாத் விளம்பரங்கள்
பாபு விளம்பரங்கள்
பாகப்பிரினை விளம்பரங்கள்
மற்றும் பதிவுகள் அனைத்தும் சூப்பரோ சூப்பர். மீண்டும், மீண்டும் அதே வியப்புத்தான். இவையெல்லாம் நம் வாழ்வில் காணக்கிடைக்குமா என்று எண்ணி ஏங்கியிருந்தவை. இத்தனை வருடங்களுக்குப்பிறகும் அதே பொலிவுடன் காண முடிகிறது. இதன் பின்னணியில் இருக்கும் தங்களின் கடும் உழைப்புக்கு ஈடு இணையேது. நன்றிகள் பல்லாயிரம்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
பொம்மையில் வெளிவந்த டாக்டர் சிவா படப்பிடிப்பு ஸ்டில்கள் வெகு அருமை. பாடல்களின் வீடியோக்களும் சூப்பர், ஒன்றைத்தவிர. அது வேறென்ன... 'மலரே குறிஞ்சி மலரே'தான். 1975-ம் ஆண்டின் மிகச்சிறந்த பாடல், அந்த ஆண்டின் மிக மோசமான படமாக்கம். சுருக்கமாகச்சொன்னால், மெல்லிசை மன்னர் செய்துகொடுத்த அருமையான பிரியாணி சாப்பாட்டை இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர் சாக்கடையில் கொட்டி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நடிகர்திலகம் பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டில்லுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.