ராஜேஷ், அது யூகம் மட்டுமல்ல உண்மையும் கூட.Quote:
Originally Posted by rajeshkrv
நடிகர்திலகம், மக்கள் திலகம் இருவருடைய படப்பட்டியலை ஒப்பிட்டால், இருவரில் நடிகர்திலகத்துடன்தான் நம்பியார் அதிகம் நடித்திருக்கிறார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.
திரு எம்.ஜி.ஆருக்கும், திரு நம்பியாருக்கும் இடையே கூட குடியிருந்த கோயில் படம் முடியும் தருவாயில் பிரச்சினை ஏற்பட்டு, அதன்பின பல படங்களில் நடிக்காமல் மறுத்து வந்தார். அதன்பின்னர் வந்த கண்ணன் என் காதலன், கணவன், ஒளிவிளக்கு, அடிமைப்பெண், நம்நாடு, மாட்டுக்கார வேலன் என வரிசையாக, நம்பியார் இல்லாமலே எம்.ஜி.ஆர். படங்கள் வந்தன. (அந்த நேரத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட்ட எங்கள் தங்கம், ரிக்ஷாக்காரன் படங்களிலும் நம்பியார் இல்லை). பின்னர் பலரது முயற்சியால் பிரச்சினை தீர்க்கப்பட்டு 'என் அண்ணன்' படத்திலிருந்து மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களில் இடம்பெறத்துவங்கினார்.