-
டியர் வாசுதேவன் சார்,
சுதந்திர திருநாள் ஸ்பெஷலாக தாங்கள் அள்ளி அளித்த அசத்தல் பதிவுகளுக்கு எனது அற்புதமான நன்றிகள்..!
'பகத் சிங்' படமும், 'சந்தனத் தேவர்' பாடலும் அருமை..!
1987-ம் ஆண்டு 'ஜெமினி சினிமா' சுதந்திர தின மலரில் வெளிவந்த, தந்தையார் பற்றி பிரபு அளித்த பேட்டி அற்புதம்..!
"கப்பலோட்டிய தமிழன்" காவிய விளம்பரம், படிக்காத மாமேதைகளின் புகைப்படம், காந்தி தாத்தா, நேரு மாமா புகைப்படங்கள் அட்டகாசம்..!
சுதந்திர தின சிறப்புக் கதாநாயகியாக, "கப்பலோட்டிய தமிழன்" ஜோடி குமாரி ருக்மணியை சிலாகித்த பதிவுகள் சிகரம்..!
மீண்டும் மீண்டும் எனது அன்பான பாராட்டுதல்களுடன் கூடிய நெஞ்சார்ந்த நன்றிகள்..!
தாங்கள் இந்த நன்னாளில் எனக்கு வழங்கிய புகழுரை நான் பெற்ற பெரும் பேறு..!
பாசத்துடன்,
பம்மலார்.
-
Dear murali sir
as you mentioned meenava nanban released on 14th aug 1977 & uzhaikkum karangal released on 23rd may 1976.
Thanks for the correction.
-
அன்புள்ள பம்மலார் சார்,
நம் நாட்டில் விடுதலைத்திருநாள் நேற்று ஒரே நாளில் முடிந்துவிட்டபோதிலும், நமது திரியில் இன்னும் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.
'தினத்தந்தி' சுதந்திர தின சிறப்பிதழில், தேசீயத்திலகம் அண்ணன் அவர்கள் தனது தந்தையாரின் விடுதலைப்போராட்ட பங்கு பற்றியும், அதன்விளைவாக அவரது தந்தைக்கு கிடைத்த ஏழு ஆண்டு சிறைத்தண்டனை (பின்னர் நாலரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது) பற்றியும், குடும்பத்தலைவனை சிறைக்கனுப்பி விட்டு அந்தக் குடும்பம் திசைதெரியாமல் தவித்ததைப்பற்றியும் கூறியுள்ளதைப் படித்தபோது, கண்கள் கலங்கின. எப்பேற்பட்ட தியாகக்குடும்பத்தில் பிறந்த நம் தலைவருக்கு, ரத்தத்திலேயே தேசீயம் ஊறியிருந்ததில் அதிசயமில்லை. அதனால்தான் இடையிலே ஏற்பட்ட திராவிட பந்தம் இடையிலேயே அறுந்துபோய், இறுதிவரையில் அவர் தேசீயவாதியாகவே திகழ்ந்தார். அவர் மூச்சுக்காற்று முழுக்க பெருந்தலைவர் கலந்திருந்ததில் ஆச்சரியமில்லை.
தலைவரின் தந்தையாரைப்போன்ற நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தால் கிடைத்த சுதந்திரத்தின் பலனை, சுதந்திர போராட்டத்துக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர்கள் எல்லாம் ஆண்டு அனுபவித்து, முடிந்தவரை கொள்ளையும் அடித்து வந்ததை / வருவதைக் காணும் ஒவ்வொரு தேசீய நெஞ்சமும் கனலாக எரியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தான் சார்ந்திருந்த கட்சியின் வளர்ச்சிக்காக, பாதயாத்திரை சென்ற தலைவரது உழைப்பை அவர் சார்ந்திருந்த காங்கிரஸும் கண்டுகொள்ளவில்லை. அவரது பாதயாத்திரையைப்பற்றி அன்றைய பிரபல பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் மாநிலங்களவை எம்.பி. பதவியை யாருக்குக் கொடுப்பது என்ற விவாதம் டெல்லியில் நடந்தபோது, "தியாகமா, அப்படீன்னா என்ன? அது எந்தக்கடையில் கிடைக்கும்?" என்று கேட்கக்கூடிய அமிதாப்புக்கு சிபாரிசு செய்திருக்கிறார் ராஜீவ்காந்தி. கட்சிக்காக நடிகர்திலகத்தின் உழைப்பை அறிந்திருந்த இந்திரா அம்மையார் மட்டும் இல்லாதிருந்தால், எத்தனையோ கௌரவங்கள் நடிகர்திலகத்துக்கு கிடைக்காமல் போனதுபோல, எம்.பி.பதவியும் கிடைக்காது போயிருக்கும்.
நடிகர்திலகத்தின் தேசீய உழைப்புக்கான பல்வேறு ஆவணங்களைத் திரட்டி இங்கே பதிவுகளாகத் தந்துகொண்டிருக்கும் தங்களுக்கு, அண்ணனின் உலகளாவிய ரசிகப்பெருமக்கள் அனைவரின் சார்பிலும் நன்றிகள் பல்லாயிரம்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
நம் நாடு விடுதலை பெற்ற செய்தியை அறிவிக்கும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' வின் நிழற்படத்தை அளித்து அனைவரது மனதிலும் தேசிய உணர்வைக் கொழுந்து விட்டு எரியச் செய்து விட்டீர்கள். அற்புதம். பதிவிட்ட face book இணைய தளத்தின் நண்பர் அவர்களுக்கும் நன்றிகள்.
டியர் வினோத் சார்,
அழகான கற்பனை. நிஜமாகவே ரசித்துப் படித்தேன். வெகு ஜாக்கிரதையாக கையாள வேண்டிய மேட்டர். சர்வ சாதாரணமாக கையாண்டு விட்டீர்கள். தங்கள் திறமைக்கு ஒரு சல்யூட். கற்பனை உரையாடலில் நடிகர் திலகம் வாயால் எங்கள் அனைவரின் பெயரையும் உச்சரிக்க வைத்ததற்கு தங்களுக்கு ஒரு கோடி நன்றிகள். அதுமட்டுமால்... கள்ளமில்லா வெள்ளை உள்ளத்துடன் ஒரு சிறு குழந்தை போல சிரிக்கும் எங்கள் இதய தெய்வத்துடன் மக்கள் திலகம் மகிழ்ந்து பேசி மகிழும் அந்த புகைப்படம் பட்டைகிளப்புகிறது. அதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
டியர் கல்நாயக் சார்,
தங்கள் அன்பான சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்களுக்கு நம் கடலூர் சார்பாக நன்றி!
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் பாராட்டிற்கு என் நெஞ்சு நெகிழ்ந்த நன்றிகள்.
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
சுதந்திரத் திருநாள் பதிவுகளைக் கண்டு களித்து பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
-
அன்பு பம்மலார் சார்,
கப்பலோட்டிய தமிழன் 'தினத்தந்தி' மறு வெளியீட்டு விளம்பரம் கன கச்சிதம். 'அடியேன் கைவசம் உள்ளவை ("கப்பலோட்டிய தமிழன்" மறுவெளியீட்டு ஆவணப் பொக்கிஷங்கள்)அனைத்தும் பதிக்கப்படும்' என்று நீங்கள் அறிவித்திருப்பது பதிவுகள் அளிப்பதில் நீங்கள் கொடை வள்ளல்
https://encrypted-tbn1.google.com/im...HWZrOEDsXsFm9b
என்பதைக் காட்டுகிறது
சிங்கத்தமிழன் குறித்த 'ராணி' வார இதழின் பக்கங்களைப் பதித்ததற்கு நன்றி. அந்த அட்டைப்படம் ஒன்று போதாதா! நடிகர் திலகத்தின் கொடைத்தன்மையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய ராணிக்கு நன்றிகள் என்றால் அந்த அருமையான பதிவை இங்கே மிகச் சரியான தருணத்தில் பதித்த தங்களுக்கு அதைவிட பல்லாயிரம் மடங்கு நன்றிகள்.
-
அன்பு கார்த்திக் சார்,
'நான் பிறந்த நாட்டுகெந்தநாடு பெரியது' பாடலைப் பற்றி அற்புதமாக ஒரு குறு ஆய்வையே செய்து விட்டீர்கள். மிக்க நன்றிகள் சார்! எந்த அளவிற்கு இந்தப் பாடல் தங்களை ஈர்த்துள்ளது என்பது புரிகிறது. இதே போல 'தர்மம் எங்கே' திரைப் படத்தில் வரும் "சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்" பாடல் ரொம்ப ரொம்ப என்னைக் கவர்ந்த பாடல். ம்... இணையத்தில் தேடிப் பார்ப்போம்... இல்லையென்றால் அப்லோட்தான்.
-
முத்தான முரளி சார்,
சுதந்திரத் திருநாள் பதிவுகளுக்காக தங்களின் மனமுவந்த பாரட்டுக்களுக்கு என் குளிர்ச்சியான நன்றிகள்.
தங்கள் அற்புதமான பதிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும்
-
நடிகர் திலகம் அவர்களுக்கு பல் மருத்துவம் பார்த்த பிரபல பல் மருத்துவ நிபுணர் திரு ஜானகிராமன் அவர்களின் நீங்காத நினைவுகள்.
நன்றி: denta-vista.com
http://denta-vista.com/blog/wp-conte...sivajinews.jpg
-
http://i47.tinypic.com/zsvbec.jpg
நவரசங்களின்
நாயகனே
நாடு போற்றும் வேந்தனே!
உலகம் போற்ற
தமிழ்சினிமாவை
உயர்த்திப் பிடித்துக் காத்தவனே!
நடிப்புக்கே நடிப்பு
கற்று கொடுத்த
எங்கள் நடிகர் திலகமே!
நீ பிறந்தாய்!தமிழ் சினிமா சிறந்தது!!
எங்கள் தமிழ் சினிமாவே பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
சுதந்திர திருநாள் சிறப்பு பதிவுகள் ஒவ்வொன்றும் உண்மையான சுதந்திர திருநாள் பற்றி கொண்டாடவேண்டிய தகவல்களை கொண்டவைகளாகும். இப்படிப்பட்ட பதிவுகளை பார்த்தாவது தொலைகாட்சி நடத்துவோர்கள் சுதந்திர தினத்தில் என்ன மாதிரியான சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கலாம், எந்த திரைப்படங்களை ஒளிபரப்பலாம் என்று கற்றுக்கொள்ளவேண்டும். அது நடக்காது. இருப்பினும் ஒரு ஆதங்கம்தான்.
பம்மலார் சார்,
நடிகர் திலகத்தின் சுதந்திர தின பேட்டிகள், ராணியில் வந்த 'விடுதலை போரில் சிவாஜி' கட்டுரை, விடுதலை போராட்ட வீரர்களின் (நடிகர் திலகத்தின் உருவில்) புகைப்படங்கள் நம்மிடம் இன்னும் அந்த போராட்டத்தின் சுவடுகளை நினைவில் வைத்திருக்கச்செய்யுமாறு அமைந்திருக்கின்றன.
வாசுதேவன் சார்,
சுதந்திர தினத்திற்கு ஏற்றவாறு 'நடிகர் திலகத்தின் நாயகிகள்' தொடரில் கப்பலோட்டிய தமிழன் நாயகி - திருமதி ருக்மணி அம்மாள் அவர்களை பதிவு செய்தது சிறப்பு. 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாடலைப் பற்றி எழுதி இதயம் கனக்கச் செய்துவிட்டீர்.
ருக்மணி அவர்களே நடிகர் திலகத்திற்கு மாமியாராய் நடித்ததை எழுதி, இப்படி பலர் நடிகர் திலகத்துடன் பல வேடங்களில் நடித்ததை நினைவு செய்யவும் வைத்துவிட்டீர். அவரது மகள் லக்ஷ்மி நடிகர் திலகத்துக்கு மகளாகவும், ஜோடியாகவும் நடித்திருக்கிறார். ஆமாம் வேறு எந்த நடிகராவது அம்மாவுடனும் ஜோடியாக நடித்து மகளுடனும் ஜோடியாக நடித்திருக்கிறாரா? நடிகர் திலகம் மட்டுமே இப்படி இரண்டு அம்மா-மகள்களுடன் (சந்தியா- ஜெ.ஜெயலலிதா மற்ற ஜோடி) ஜோடியாக நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். உங்கள் தொடரில் இது போன்ற விபரங்களை பதியும் போது சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்கிறது. நன்றி.