http://i57.tinypic.com/2z9mu82.jpg
Printable View
நடிகர் திரு. சரத்குமார் விழா மேடையில் பேசும்போது.
http://i59.tinypic.com/33aqp2h.jpg
வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் பேசும்போது அருகில் ஜெயா டி.வி Vice President , திரு.சுரேஷ்(ஆனந்தா பிக்சர்ஸ்) , திரு. பி.ஆர்.ரவிசங்கர் , திரு. எம்.ஏ.முத்து
http://i60.tinypic.com/10wv63c.jpg
குடும்பம் வேறு,,, கட்சிவேறு...... புரட்சித்தலைவரின் செயலாக்கம்.
================================================== ================================================== ================================================== ========
நாட்டின் தலைமைப் பதவியிலிருக்கும்போது தன் சுற்றங்களை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதற்கு பெருந்தலைவர் காமராஜர் ஒரு உத்தம உதாரணம் என்றால், அவரை தன் தலைவராகவே அறிவித்த புரட்சித் தலைவர் இன்னுமொரு சிறந்த உதாரணம்.
ஒரு கட்சியின் தலைமைத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்னுமொரு சிறந்த உதாரணம் அந்த தங்கத் தலைவன்.
இந்தக் கட்டுரையை எழுதியவர் மூத்த பத்திரிகையாளர் சோலை. புரட்சித்தலைவரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்தவர். தலைவருடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்தவர். அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி…
எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த சகோதரர் பெரியவர் சக்கரபாணி. தம்பியை கலைத் துறைக்குத் தயார் செய்தவர். அ.தி.மு.க. துவங்கிய காலத்தில் அவரும் பல பொதுக் கூட்டங்களுக்குச் சென்றார்.
அ.தி.மு.க.விற்கு அரசியல் திருப்புமுனை ஏற்படுத்தியது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல்தான். அதன் பிரச்சாரப் பணியிலும் பங்கு பெற்றார். மறைந்த பாலகுருவா ரெட்டியாரும், பரமனும்தான் அவரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது சென்னை லாயிட்ஸ் சாலையில் செயல்படும் அ.தி.மு.கழகத் தலைமைக் கட்டிடம் வி.என். ஜானகிக்குச் சொந்தம். அதனைக் கழகத்திற்காக எம்.ஜி.ஆர். எழுதி வாங்கினார்.
அந்தக் கட் டிடத்தின் பின்பகுதி யில்தான் ஆரம்பத்தில் அண்ணா நாளேட்டின் அலுவலகமும் அச்சகமும் செயல்பட்டன. அந்தக் கட்டிடத்திலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி எம்.ஜி. சக்கரபாணியின் இல்லம்.
ஒருநாள் அவருடைய பணியாளர் வந்தார். அய்யா அழைக்கிறார் என்றார். “அண்ணா’ அலுவலகத்திலிருந்து சென்றோம். தமது அருகிலிருந்தவர்களைப் பெரியவர் போகச் சொன்னார். எதிரே நாற்காலியில் அமரச் சொன்னார்.
“தம்பியிடம் நீங்கள் பேசவேண்டும்.”
தம்பி என்றால் எம்.ஜி.ஆர்.
“ஏன்? உங்கள் மீது உங்கள் தம்பி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நீங்களே பேசலாமே?” என்று சிரித்துக்கொண்டே சொன்னோம்.
“இந்த விஷயத்தை நான் பேச முடியாது. நீங்கள்தான் பேசவேண்டும்” என்றார்.
“சரி.”
சுற்றும் முற்றும் பார்த்தார். சற்று குரலை இறக்கி, “”என்னை கழகப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கச் சொல்லுங்கள்” என்றார். அப்போதைக்கு அவருடைய கோரிக்கை நியாயமானதாகத்தான் தெரிந்தது. தம்பியிடம் அண்ணன் இமாலய வரம் கேட்டு விட்டாரா?
விடைபெற்றோம். அறை வாசல்வரை வந்தார். “சோலை, தம்பி நல்ல மூடில் இருக்கும்போது பார்த்துப் பேசுங்கள்” என்றார். ஒரு வெண்கலச் சிரிப்பு.
கழகத்தில் அவர் மாநில அளவில் ஒரு பதவி கேட்கவில்லை. செயலாளர் பதவி கேட்கவில்லை. கழகத்தை மண்டலங்களாகப் பிரிக்கச் சொல்ல வில்லை. அதில் தன்னை ஒரு மண்டலத்திற்கு அதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை. ஐநூறுக்கு மேற்பட்டோர் இடம்பெறும் மாநிலப் பொதுக்குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமிக்கச் சொன்னார்.
அடுத்த சில தினங்களில் ஆற்காடு சாலை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்தோம். உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். உரையாட லுக்கு நடுவே, “பெரியவர் அழைத்தார்” என்றோம்.
“என்ன?”
“அவருக்கு ஒரு பெரிய ஆசை.”
“என்ன?”
சற்றுத் தயங்கினோம். துணிச்சலை வரவழைத்துக்கொண்டோம்.
“அவரும் கழகப் பணி செய்ய விரும்புகிறார். அதற்கு அங்கீகாரமாக பொதுக்குழு உறுப்பினர் பதவி மீது அவருக்கு ஆர்வம்” என்றோம்.
அவரது பொன்மேனியில் நூறு மைல் வேக ரத்த ஓட்டம். முகம் சிவந்தது.
“இல்லை. அதாவது… வந்து…” என்று இழுத்தோம். அதற்கு மேல் நா அசையவில்லை. சத்தியாக்கிரகம் செய்தது.
“சும்மா இருக்கமாட்டீர்களா?” -கோபத்தோடு கேட்டார். நமக்கு சப்தநாடியும் தந்தி அடித்து அடங்கிவிட்டது.
எம்.ஜி.ஆருக்கு இயற்கை அளித்தது கொடுத்துச் சிவந்த கரங்கள். உண்மை. ஆனால் உடன்பிறந்த அண்ணனை கழகப் பொதுக்குழுவில் ஒரு உறுப்பினராகக் கூட நியமிக்க மறுத்துவிட்டார். அண்ணனுக்குக் கனவில் பூத்த மலரும் கருகிப் போய்விட்டது.
“துரைக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறேன். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.”
நாம் விடைபெறும்போது எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னார்.
துரை அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய விசுவாசி.
துரையும் நாமும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்து கொண்டிருந்தோம்.
அடுத்த நாள் எம்மை துரையே அழைத்தார். “தலைவர் தங்களிடம் தனியாக ஒரு தகவல் சொல்லச் சொன்னார்” என்றார்.
ஏறிட்டுப் பார்த்தோம்.
“இனிமேல் பெரியவரை (எம்.ஜி.சக்கரபாணியை) யாரும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்தால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தலைவர் சொல்லச் சொன்னார். இது தங்களுக்கு மட்டும் தெரிந்த தகவலாக இருக்க வேண்டும் என்றும் தலைவர் சொல்லச் சொன்னார்” என்றார் துரை.
அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆர். அழைத்தார். நீண்ட கலந்துரையாடல். விடை பெறும்போது அவர் சொன்னார்.
“சோலை… நான் அரசியலில் இருக்கும்போது அவரும் (எம்.ஜி.சக்கரபாணியும்) இருக்க வேண்டுமா? உலகம் என்ன சொல்லும்? அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லமாட்டார்களா?” என்றார்.
மெய்சிலிர்த்துப் போனோம். அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.
அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒரு காய் நகர்த்தினால் எதிரி எப்படி காய் நகர்த்துவார் என்பதனை அவர் சிந்தித்தே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார்.
“அண்ணா விரும்பியிருந்தால் தனது வளர்ப்பு மகனை அரசியலில் அறிமுகம் செய்திருக்க முடியாதா? அந்தப் பையன்கள் உழைத்து முன்னேறுவது வேறு. திணிப்பது வேறு” என்று விளக்கம் தந்தார்.
அதே சமயத்தில் அண்ணனை மதிக்கத் தெரிந்த இன்னொரு எம்.ஜி.ஆரையும் பார்த்தோம். அவர் முதல்வராகப் பதவியேற்றார். அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அண்ணன் சக்கரபாணியிடம் ஆசிர்வாதம் வாங்க அனைத்து அமைச்சர்களுடன் வந்தார்!
http://i62.tinypic.com/6iy1pz.jpg
துயரச் செய்தி.
----------------------
http://i61.tinypic.com/295eakh.jpg
சென்னை புளியந்தோப்பில் வசித்து வந்த திரு.சாலமன்
(வயது 52 ) என்கிற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்
நேற்று இரவு சாலையில் மின்சாரம் தாக்கி (மேகலா திரை அரங்கு அருகில் -பலத்த மழை காரணமாக ) உயிரிழந்தார்.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த
ரசிகர்கள் / பக்தர்கள் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அன்னாரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
திரு. சாலமன் அவர்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படம் எந்த அரங்கினில் திரையிட்டாலும் , ஓடி வந்து
இரவு பகல் பாராமல் கொடிகள் , பேனர்கள் அமைப்பதில்
பேருதவி புரிந்தவர். அவரது இழப்பு குடும்பத்தினருக்கு
மட்டுமில்லாமல் , புரட்சி தலைவர் புகழ் பரப்பும் பணியில்
ஈடுபட்டுள்ள அவரது அமைப்பிற்கும் பேரிழப்பாகும் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய , புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அனைவரின் சார்பாகவும்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
ஆர். லோகநாதன்.
இணை -செயலாளர் ,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்.
துயரச் செய்தி.
-----------------------
திரு.சங்கர் (சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர் )
அவர்களின் தாயார், சென்னை முகப்பேரில் , நேற்று (05/09/2014), காலை இயற்கை எய்தினார்.
அன்னாருக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தாயை இழந்து வாடும் திரு. சங்கருக்கு ஆறுதல் கூறினர் .
சங்கரின் தாயார் ஆத்மா சாந்தி அடைய , அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
திரு. சங்கர் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் , திரைப்பட நிகழ்ச்சிகள் , கலை நிகழ்ச்சிகளில் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர் . பாராட்டுக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர். லோகநாதன் ,
இணை செயலாளர்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.
பள்ளியிலே பாடம்சொன்ன வாத்தியா ருண்டு - நீ
பாட்டுப்பாடி கத்துத்தந்த வாத்தியா ரய்யா!
அள்ளியமு தூட்டிசிறு பிள்ளை களுக்கே - பசி
அண்டாது காத்தாயுந்தன் அட்சயக் கையால்!
http://i60.tinypic.com/2czszeb.jpg
மதுரை சென்ட்ரலில் -மக்கள் திலகம் /புரட்சி நடிகர் இரு வேடங்களில் நடித்த , "சிரித்து வாழ வேண்டும் "
29/08/2014 முதல் தினசரி 4 காட்சிகள் நடைபெற்றது.
அதன் ஒரு வார வசூல் ரூ.83,000/-
கணிசமான மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் , ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழாவை , சென்னையில் காண வந்திருந்தும் மதுரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படம் விநியோகஸ்தர்களை வாழ வைத்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி :மதுரை திரு. எஸ்.குமார்.
நேற்றைய தமிழ் இந்து (05/09/14) தினசரி வெளியிட்ட செய்தி.
http://i62.tinypic.com/16k3mnp.jpg
http://i59.tinypic.com/2gubjwp.jpg
முதன் முதலில் இங்கு யாக்கு ரசிகர் மன்றங்கள் அமைந்திருக்கும் ? பாகவதர் அபிமானிகளும், சின்னப்பா அபிமானிகளும் இருந்தனர். ஆனால் மன்றங்கள் இருந்தனவா? ஒருவேளை எம்.ஜி.ஆருக்குத்தான் ஆரம்பித்திருப்பார்களோ !
அப்போது மன்றங்களை ரசிகர்களே அமைத்துக் கொண்டனர்.
நடிகர்கள் அதற்கு பைனான்ஸ் செய்ததில்லை . ரசிகர் மன்ற காட்சிகள் , டிக்கட் வாங்கி பிளாக்கில் விற்பது போன்ற வியாபாரங்கள் நுழைந்தவுடன், அரசியலும், தலைமை பீடமும் நுழைந்தன . மன்றங்கள் அரசியல் கட்சிகளின் அங்கங்கள் ஆகவும், ஒட்டு வங்கிகளாகவும் மாறின .
எம்.ஜி.ஆர். பக்தர்கள் இன்றும் அவரது பழைய படங்களுக்கு பேனர் வைத்தும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுகின்றனர்.
யோசித்து பார்க்கும்போது , எம்.ஜி.ஆர். ரசிகர்களாக இருந்தவர்கள் பின்னர் அவரது உதவியால் பெரும் பதவிகளையும் அனுபவித்தனர்.
நான் பார்த்த , கேள்விப்பட்ட ரசிகர்கள் பல வகை. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்த காட்சி இது.வெங்காய கடை ஒன்றில் சுவர் முழுவதும் எம்.ஜி.ஆர். படங்களின் தினத்தந்தி முழுபக்க விளம்பரங்கள் ஓட்டபட்டிருக்கும் .
http://tv.burrp.com/channel/jaya-tv/147/1410028200000
07/09/2014
11:00AM Special Programme : Ayirathil Oruvan Silver Jubilee Function
இன்றைய தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி.
----------------------------------------------------------------------------------------
http://i58.tinypic.com/11kxico.jpg
http://i57.tinypic.com/a5izqd.jpg
http://i57.tinypic.com/kew3ev.jpg
http://i58.tinypic.com/21buf48.jpg
http://i58.tinypic.com/vx20p.jpg
நடிக+நடிகைகள்:-மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா, சிவகுமார், நாகேஷ், எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர், பண்டரிபாய், வி.கே.ராமசாமி மற்றும் பலர்
இசை:-மெல்லிசைமன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள்.
தயாரிப்பு:-சத்யா மூவிஸ்
இயக்கம்:- ப.நீலகண்டன்
தேனினும் இனிய கானங்கள்
1. மெல்லப்போ! மெல்லப்போ! மெல்லிடையாளே மெல்லப்போ!
2. நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது.
3. அட ஙொப்பறாணாய் சத்தியமா நான் காவல்காரன்.
நீ ஒப்புகொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்.
4. கட்டழகுத் தங்கமகள் திருநாளோ-அவள்
கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ.
5. குவா!குவா!குவா!குவா!
காது கொடுத்துக் கேட்டேன்-ஆகா
குவா!குவா!சத்தம்-இனி
கணவனுக்குக் கிட்டாது அவள் குழந்தைக்குத்தான் முத்தம்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை
ஒட்டி கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரோடு
நகரை தலைநகராகக் கொண்டு புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர் ., பெரியார் மாவட்டம் உருவாக்கிய
தினம் இன்று
http://i60.tinypic.com/1zy7qsn.jpg
ஒரே நேரத்தில் – அவர்
ஒருவர்தான் –
நட்சத்திரமாகவும், நிலவாகவும் இருந்தவர்; ஏழை எளியவர் விழிகளுக்கு விருந்தவர்! ‘அவர் வாக்கு, வாக்கு வாங்கும் வாக்கு’ எனும்படி – ஆரம்ப நாள்களிலேயே – அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, இரண்டறக் கலந்திருந்த நாள்களிலேயே – எம்.ஜி.ஆருக்கு இருந்தது, எவராலும் எஞ்ஞான்றும் அசைக்க முடியாதபடி – அப்படியோர் Image; அப்படியொரு Charisma அது –
கதர்ச் சட்டைகளின் கண்களில் கரித்தது!
‘எம்.ஜி.ஆர். கேட்டாலும், கேட்கா விட்டாலும் – படத்துக்குப் படம், பாட்டுக்குப் பாட்டு – அவரைத் தூக்கு தூக்குன்னு தூக்கறவன் நீதான்யா! ஏன்யா உனக்கிந்த வேலெ?’ – என்று என்னைச் செல்லமாகக் கடிந்து கொண்டார், எங்க ஊர்ப்பக்கத்துக் காங்கிரஸ்காரர் ஒருவர்.இந்த இடத்தில் –
ஒரு தன்னிலை விளக்கம் தர வேண்டியவனாக இருக்கிறேன் நான்!
கண்ணதாசனுக்கு நேரே – நான் காலம் தள்ள வேண்டிய கட்டாயம்.கண்ணதாசனோ – சங்ககால இலக்கியத்திலிருந்து சமீபகால இலக்கியம் வரை – தனது பாடல்களில் எதையும் விட்டு வைக்கவில்லை.பத்ரகிரியாரும்; பட்டினத்தாரும்; குணங்குடி மஸ்தானும்; குதம்பைச் சித்தரும் – கண்ணதாசன் பாட்டில் கால் பரப்பி நின்றார்கள். கண்ணதாசன் ஓர் Voracious Reader!
அவ்வை; ஆண்டாள்; வெள்ளி வீதியார்; காக்கைபாடினியார் – என்று பெண்பாற் புலவர்களின் பாடல்களெல்லாம், அவர்தன் நாக்கு அலமாரியில் அடுக்கி வைத்திருந்தார்.அவற்றை எளிமைப்படுத்தி, எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தார்!
ஒரு முத்தொள்ளாயிரப் பாடல். அரண்மனை முற்றத்தில் – நிலா வெளிச்சத்தில் மன்னன் மதுவோடும் மாதரோடும் மகிழ்ந்து கிடக்கிறான்.மது மயக்கத்தில், தம் ஆடை அவிழ்ந்ததைக் கூட அறியாத பெண்டிர் – அதை அறியுங்கால், நிலத்தில் விழுந்து கிடந்த நிலா வெளிச்சத்தை ஆடையென எடுத்து அணிய முயல்கின்றனர்.இந்தக் கருத்தை –
சிவாஜி நடித்த ஒரு படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் – ‘இரவுக்கும் பகலுக்கும்
இனியென்ன வேலை?’ – எனத் தொடங்கும் பாடலின் சரணத்தில் – ‘ஆடை இதுவென நிலவினை எடுக்கும்
ஆனந்த மயக்கம்’ – என்று கண்ணதாசன் எளிமைப்படுத்தி எழுதியிருப்பார்!
இப்படி - எந்தப் பாடலிலும் கண்ணதாசனின் இலக்கிய ஆளுமை மேலோங்கியிருந்ததால் – நானென்ன புதிதாக எழுதிக் கிழித்திட முடியுமென்று – எம்.ஜி.ஆரின் சமூக, அரசியல் செல்வாக்கையும் – அவரது வண்மைக் குணத்தையும் மனதில் வைத்து – படப் பாடல்களை எழுதப் புகுந்தேன். அவை, எம்.ஜி.ஆரைத் தவிர, எவர்க்கும் பொருந்தாதபடியிருந்தன!
எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போம்.‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே;
இருட்டினில் நீதி மறையட்டுமே’ ‘உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக!’ ‘உன்னையறிந்தால் – நீ
உன்னையறிந்தால் – இந்த உலகத்தில் போராடலாம்’
– இப்படி எத்துணையோ பாடல்கள்; இவற்றை சிவாஜியும் பாடலாம்!
ஆனால் –
அடியேன் எழுதிய – ‘மூன்றெழுத்தில் – என்
மூச்சிருக்கும்!’ ‘நான் –
ஆணையிட்டால்!’ ‘கொடுத்ததெல்லாம்
கொடுத்தான்!’ ‘உதயசூரியன் பார்வையிலே –
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’ ‘நான்
செத்துப் பிழைச்சவண்டா!’ ‘ஏன் என்ற கேள்வி –
இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை’
– இந்தப் பாடல்களெல்லாம், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்! இவையெல்லாம் –
கதாநாயகனுக்கான பாட்டாகக் கருதப்படாமல், எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே கருதப்பட்டது.இந்தப் பாடல்களால் –
எம்.ஜி.ஆர். ஏழை எளிய உள்ளங்களில் போய் உட்கார்ந்து கொண்டார்.குப்பத்துக் குடிசைகள் – ‘வாத்யார்’ என அவரை வாஞ்சையுடன் கூப்பிட்டுக் குல தெய்வமாய்க்
குலவையெழுப்பின! ‘
--- கவிஞர் வாலியின் ' எனக்குள் எம்.ஜி.ஆர் தொடரிலிருந்து
ஆடாத மனமும் உண்டோ?
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.
கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.
‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.
கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).
கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.
அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.
அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.
இப்படி நுணுக்கமான நடிப்புக் கலையை வெளிப்படுத்தும் திறமை உள்ளவருக்கு மிகவும் தாமதமாக சிறந்த நடிகருக்கான பாரத் விருது 1971ம் ஆண்டில்தான் கிடைத்தது. அதற்கும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. 40,000 ரூபாய் கொடுத்து பட்டத்தை வாங்கியதாக விமர்சனம் எழுந்தது. பட்டம் பெற்றதற்காக சென்னை ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் இதற்கு அருமையாக பதிலளித்தார் தலைவர்.‘‘ 40,000 ரூபாய் கொடுத்து பட்டம் வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை . அப்படி வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தால் அதற்கான வசதி தமிழக மக்கள் எப்போதோ எனக்கு கொடுத்து விட்டார்கள்’’ என்று அற்புதமாக பதிலளித்து விமர்சனங்களை தகர்த்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ‘நான் சம்பாதித்து விட்டேன், எனக்கு வசதி வந்து விட்டது’’ என்று தலைவர் கூறவில்லை. மக்கள் எனக்கு வசதியை தந்து விட்டார்கள் என்றுதான் கூறுகிறார். இப்படி எங்கும் எதிலும் எப்போதும் மக்களை முன்னிறுத்தியே அவர் செயல்பட்டதால்தான் மக்களும் அவரை மறக்காமல் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
அந்தப் பேச்சு தலைவரின் மறைவுக்கு பின், 88ம் ஆண்டில்ஒலிநாடாவாக வெளியே வந்தது. அந்த உரையில் ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும்? எப்படி நடிக்கக் கூடாது? என்று நுணுக்கமாக பேசியிருப்பார். இயற்கையாக நடிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்று 43 ஆண்டுக்கு முன்பே தீர்க்க தரிசனத்துடன் கூறியிருப்பார். அந்த ஒலிநாடாவின் தலைப்பே ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’. அந்த உரையை ஒலிநாடாவாக வெளியிட்டு காசு பார்த்தவர் தலைவரை சீண்டியும் மறைமுகமாக தனது பத்திரிகையில் விமர்சித்தும் வந்தவருமான எதிர் முகாமைச் சேர்ந்த மதிஒளி சண்முகம். கல்வீசுவோருக்கே கனியைத் தரும் மரம் போல தலைவர் எப்படியெல்லாம், யாருக்கெல்லாம் பயன்படுகிறார் பாருங்கள். அந்த ஒலிநாடாவின் முகப்பில் தலைவர் குத்துவிளக்கேற்றும் படம் அச்சிடப்பட்டிருக்கும். அமெரிக்காவில் சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது அந்தப் படம் என்பதால் மெழுகுவர்த்தியை ஏந்தியிருக்கும் அவரது புறங்கை சற்று வீக்கமாக இருப்பதை பார்த்தாலே கண்களில் நீர் திரையிடும். என் துரதிர்ஷ்டம் அந்த ஒலிநாடா அறுந்து விட்டது. (பல முறை கேட்டபிறகுதான்).
அதன்பின், 3 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். திரைப்பட ஆல்பம் என்ற பெயரில் அருள்மொழி பதிப்பகத்தின் சார்பில் வெளியான புத்தகத்தில் அந்த உரையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்தது. அதை வெளியிட்டவர், இப்போதும் தலைவர் பெயரில் மாத இதழ் நடத்தி வருகிறார். ஒரு காலத்தில் ராஜபாளையத்தில் எதிர் முகாம் நடிகர் பெயரில் பத்திரிகை நடத்தியவர் என்பதாலோ என்னவோ அந்த பழைய பாசத்தில் எப்படி எல்லாம் நடிக்கக் கூடாது என்று தலைவர் பேசியிருந்த பகுதிகளை எடிட் செய்து வெளியிட்டிருந்தார்.
அது இருக்கட்டும்....சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.
எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?
மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்...
அன்புடன்: ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் படைத்து அவற்றில் எப்படி பரிமளிக்க வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டிச் சென்ற ஆண்டவராம் எங்கள் கலை வேந்தரை கரம் குவித்து சிரம் தாழ்த்தி வணக்கும்............கலைவேந்தன்.
சென்னை மகாலட்சுமியில் தற்போது வெற்றி நடை போடுகிறது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் , சத்யா மூவிசின்
"காவல்காரன் ".
48 வது ஆண்டு தினம். வெளியான தேதி(07/09/1967)http://i57.tinypic.com/34sii5e.jpg
ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளிவிழா - வெற்றி விழா
கொண்டாட்ட புகைப்படங்கள் தொடர்ச்சி.
பேராசிரியர் திரு.செல்வகுமார் நடிகர் திரு. சரத்குமார்
அவர்களிடமிருந்து நினைவு பரிசு பெறுகிறார்.அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக
அருகில் திரு. பி.எஸ். ராஜு, திரு. எம்.எஸ். மணியன்,
நடிகர் திரு. கே. ராஜன் , திரு. லஷ்மண் , திரு. எஸ். ராஜ்குமார். ஆகியோர்.
http://i60.tinypic.com/15q401d.jpg
திரு.நிகில் (மக்கள் தொடர்பாளர் ) திரு. ஆர்.கே. சண்முகத்துடன் உரையாடல் .
http://i58.tinypic.com/2v0y72d.jpg
திரு. எஸ். ராஜ்குமார் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக ,.நடிகர் திரு. சரத்குமாரிடமிருந்து
நினைவு பரிசு பெறுகிறார் . அருகில் நடிகர் திரு. கே. ராஜன் ,
திரு. பி. எஸ். ராஜு .
http://i60.tinypic.com/2r2n1qg.jpg
நடிகர் திரு கே. ராஜன் , திரு சரத்குமாருக்கு பொன்னாடை அணிவிக்கிறார் .
http://i62.tinypic.com/30a6eki.jpg
படகோட்டி யில் -கல்யாண பொண்ணு பாடலுக்கு லஷ்மண்
ஸ்ருதி இசைஅமைப்பில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
வேடமிட்டவர் நடனம் ஆடும் காட்சி.
http://i58.tinypic.com/qqu4bk.jpg
http://i61.tinypic.com/28sms9e.jpg
http://i57.tinypic.com/w2lrer.jpg
நமது புரட்சி கடவுள் எம்ஜிஆர் அவர்களின் ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா (மறுவெளியீடு ) நிகழ்ச்சிகள் மிகவும் சீரும் சிறப்புமாக கின்னஸ் சாதனை படைத்ததை நேரில் கண்டுகளிக்கும் பாக்கியம் கிடைத்தது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகபெரும் பேராக நினைக்கிறன். இதுபோன்ற சாதனைகளை மீண்டும் தலைவரின் படங்கள் படைக்க வேண்டும் என்பது எனது அவா
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா சாதனை பதிவுகள் அனைத்தும் பதிவு செய்த நண்பர்கள் திரு சைலேஷ் பாசு, திரு லோகநாதன் ,திரு இரவிச்சந்திரன் மற்றும் அனைத்து மக்கள்திலகம் பக்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
கின்னஸ் சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா சிறந்த முறையில் வெற்றி அடைய இரவு பகல் பாராமல் உழைத்த மக்கள்திலகத்தின் ரத்தத்தின்ரத்தங்கள் அனைவருக்கும் எனது கோடானகோடி நன்றிகள்.அதேபோல் விழாவிற்கு வந்து சிறப்பு சேர்த்த அத்தனை கலைஞ்சர்களுக்கும் நன்றிகள்
விழா மேடையில் சிறப்புரை ஆற்றிய அனைவரும் மக்கள்திலகம் ஒரு புரட்சி கடவுள் என்று மிக ஆணித்தரமாக சூளுரைத்தனர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/15rjbyt.jpg
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு , பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக நினைவு பரிசு பெறுகிறார்.
அருகில் திருவாளர்கள்:பாண்டியன் , பாண்டியராஜன் , சொக்கலிங்கம் ,லஷ்மண், லோகநாதன் , வேலூர் ராமமூர்த்தி மற்றும் பலர்.
திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கத்திற்கு பொன்னாடை அணிவிக்கபடுகிறது .அருகில் திருவாளர்கள்:பாண்டியன், பாண்டியராஜன் , லஷ்மண் , பி. எஸ். ராஜு , வேலூர் ராமமூர்த்தி, லோகநாதன்
மற்றும் பலர்.
http://i62.tinypic.com/2gw95za.jpg
திரு லஷ்மண் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தபடுகிறது . அருகில் திருவாளர்கள்:பாண்டியன், பாண்டியராஜன்,பி.எஸ். ராஜு, வேலூர் ராமமூர்த்தி, லோகநாதன் மற்றும் பலர்.
http://i58.tinypic.com/fpaznn.jpg
http://i58.tinypic.com/ei8boh.jpg
திரு லஷ்மணுடன் ஆர்.லோகநாதன்